Follow by Email

Friday, 16 October 2015

காணாத காட்சியெல்லாம் ?! :))


மிஸ்டர் மரமண்டை20 July 2015 at 09:49:00 GMT+5:30

கேள்வி-1: ஆண்டில் 1 slot – 2 slot என்ற ரீதியில் பல தொடர்கள் கையாளப்படுவது உங்களுக்கு ஓ.கே. தானா?

காட்சி-1: காலம் - இன்றிலிருந்து சரியாக இருப்பத்தைந்து வருங்கள் கடந்த 19.7.2040 ஞாயிற்றுக் கிழமை. blog / மேஜிக் விண்ட் புக் ஹாட்லைன் (இரண்டுமே ஒன்றான பரிணாமம்) 

நண்பர்களே,

வணக்கம். இப்போதெல்லாம் என் ஞாபகச் சக்தி சரியாக இருக்குமேயானால், இந்தத் தொடரை நாம் ஆரம்பித்தது சரியாக 2014 ஆம் வருடம் என்று நினைக்கிறேன். வருடம் 1 slot – 2 slot என்ற நம் வழக்கமான நடைமுறையில், இந்த வருடம் நாம், மேஜிக் விண்ட்/ன் 27 ஆவது புத்தகத்தைப் படிக்கப் போகிறோம். ரொம்பவே சுவாரசியமான இந்தக் கதைத் தொடர் நிச்சயம் உங்களை ஏமாற்றாது. இதை மொழிபெயர்க்கும் போது ஒரு நாள் முழுக்க நான் வேறு உலகத்தில் சஞ்சரித்த அனுபவம், சமீப காலங்களில் எனக்கு ரொம்பவே புதுமையானது. பகலில் மட்டுமல்ல, இரவிலும் கனவுலகத்தில், அவ்வுலகத்திலேயே வாழ்ந்து மீண்டதான அனுபவம் - இந்தக் கதைத் தொடரின் வல்லமைக்கு ஒரு சான்றன்றோ ?!

சென்ற வருடம் இந்த வரிசையில் 26 ஆம் கதை வெளியான சமயத்தில், இங்கேயும், என் தனிப்பட்ட மின் அஞ்சலிலும், கடிதக் கணைகளாலும் என்னை நீங்கள் வறுத்தெடுத்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அதில் பெரும்பான்மையான வாசகர்கள் எழுப்பியிருந்த ஒரு கேள்வி, மேஜிக் விண்ட் என்பவர் யார்? அவர் வெள்ளையர் தானே? அவருக்கு செவ்விந்திய கிராமத்தில் என்ன வேலை? - நண்பர்களே, இதற்கு நான் என்ன பதில் தான் சொல்ல முடியும்? ஏற்கனவே, மேஜிக் விண்ட்/ன், ரிஷிமூலம் நதிமூலம் பற்றி நாம் பலவருடம் ஹாட்லைனில் எழுதி விட்டோம் ; முதல் இரண்டு புத்தகங்களில் அவரின் வரலாறு முழுமையாக இருக்கிறது என்றும் கூறி விட்டோம் - இதற்கு மேல் நம்மால் செய்யக் கூடியது தான் என்னவாக இருக்க முடியும் ?!

இதில், சில தீவிர காமிக்ஸ் வாசகர்களின் வினவல் சற்றே வித்தியாசமானது தான் - தாங்கள் பாதுகாத்து வைத்திருந்த பழைய புத்தங்களைக் கரப்பான் பூச்சியும், வெட்டுக்கிளியும் பாதிக்கு மேல் சாப்பிட்டு விட்டதால், மேஜிக் விண்ட்/ன் 1-15 வரையிலான கதை வரிசையை மறுபதிப்பு செய்ய கோரிக்கை வைத்துள்ளார்கள் என்பதே ஹைலைட் ! பார்ப்போமே !

நம்முடைய மறு பிரவேசத்திற்குப் பிறகு, 2012லிருந்து ஒவ்வொரு வருடமும், ஒரு சில புது தொடர்களையாவது நாம் அறிமுகப்படுத்தியே தான் வந்துள்ளோம் ; தற்சமயமாய் நாம் active ஆகக் கையாண்டு வரும் தொடர்களின் எண்ணிக்கை மட்டுமே 505 இருக்கும் ; இது போக சற்றே சுமார் இரகத்தில் 1 slot – 2 slot ற்காக காத்திருக்கும் கதைத் தொடர் மட்டும் ஆயிரத்தை தாண்டும் !

ஆண்டில் 1 slot – 2 slot என்ற ரீதியில் பல தொடர்களையும் நம்மால் முடிந்த அளவு கையாண்டுதானே வருகிறோம்?! மொத்தமாக வெறும் 129 கதைகளே உள்ள இந்தத் தொடரை கூடிய சீக்கிரம், அடுத்து வரும் பல வருடங்களில் முடித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் காத்திருப்போமே !

Bye for now all...see you around soon ! 

பி.கு : எல்லா கதைத் தொடர்களுக்கும் இது பொருந்தும் :))


மிஸ்டர் மரமண்டை17 July 2015 at 09:30:00 GMT+5:30 காணாத காட்சியெல்லாம் ?! காட்சி-1

இடம் : மிகக் கடுமையான குற்றங்களை, மிகவும் ரகசியமாக விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், சென்னை பூந்தமல்லி. பார்வையாளர்கள் தரப்பு வெளியே அலைமோதினாலும், மொத்தமாக 30 தீவிர காமிக்ஸ் காதலர்களுக்கு மட்டுமே சிறப்பு அனுமதி அளித்திருந்தது இந்தச் சிறப்பு நீதிமன்றம். இரண்டு மணிநேரம் முன்னதாகவே வந்து, அமர்ந்திருந்த காமிக்ஸ் காதலர்கள், தங்களுக்குள்ளே சிரித்துக் கொண்டும், கலாய்த்துக் கொண்டும் இருந்தார்கள். இன்னும் நீதிபதி வரவில்லை என்பதால், பேச்சும் சிரிப்புமாக அரங்கமெங்கும், சலசலவென்ற சத்தம் சங்கீதமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.... 

பார்வையாளர்கள் தரப்பில், வழக்கைத் தொடுத்த, காமிக்ஸ் காதலர் அழகன் பாண்டியன் மட்டுமே தற்போது எதிர்தரப்பில் நமட்டுச் சிரிப்புடன் அமர்ந்திருக்கிறார். வாதி, அழகன் பாண்டியன் தரப்பு வக்கீலாக, பப்ளிக் பிராசிகியூட்டர் ஸ்டீல்பாடி ஷெர்லாக்ஹோம் வாதாட தயாராக, கையில் காமிக்ஸ் கட்டுடன், படபடப்பு அதிகமாக, இரண்டு பிபி மாத்திரையை வாயில் போட்டுக் கொண்டு தண்ணீர் குடித்துக் கொண்டிருகிறார்...மிஸ்டர் மரமண்டை17 July 2015 at 09:56:00 GMT+5:30 contd.. காட்சி-2:

நீதிபதி சரியான நேரத்திற்கு வந்து ஆஜரானதால், கோர்ட் நடவடிக்கை ஆரம்பமாகிறது...

டவாலி : )))...))) மரமண்டை.... மரமண்டை... மரமண்டை (((...((( 

(உடனே, வாதி, அழகன் பாண்டியனும், ஸ்டீல்பாடியும் தம்மை மறந்து எழுந்து நிற்க, பார்வையாளர்கள் தரப்பில் கட்டுக்கடங்காத குபீர் சிரிப்புச் சத்தம் காதைப் பிளக்கிறது )

நீதிபதி: ஆர்டர்.. ஆர்டர்.. ஆர்டர்.. டவாலி குறிப்பிட்டது பெயரை மட்டுமே.. நீங்கள் இருவரும் அமரலாம் ;))

மி.ம : வணக்கம் நண்பர்களே...

ப.பி. ஸ்டீல்பாடி : யுவர் ஹானர், வணக்கம் எஜமானே என்று கூறாமல் நண்பர்களே என்று கூறி, எங்கள் வாட்ஸ்அப் க்ருப்பை பிரிக்கப் பார்க்கிறார். எஜமானே என்று மட்டுமே கூற உத்தரவிட வேண்டும்...

மி.ம : வணக்கம் எஜமானே...

ப.பி : யுவர் ஹானர், தான் படித்தவர் என்பதை இங்கே குத்திக் கட்டுகிறார். எசமானே என்றே அழைக்க வேண்டும்...

மி.ம : வணக்கம் எசமானே...

ப.பி : ஆங்.. மரமண்டைங்கறது உங்கள் பெயர்... மிஸ்டர் என்பது நீங்கள் படித்து வாங்கியப் பட்டமா ?!

மி.ம : உங்களின் காரணப் பெயர் ஸ்டீல்பாடி எப்படியோ, அப்படித்தான் இதுவும் !

ப.பி : அழகன் பாண்டியனை, உங்களுக்குத் தெரியுமா ?!

ம.மி : அவரையும் தெரியும், அவரின் காரணப் பெயர் ஆறுமுகம் என்பதும் தெரியும் ! 

ப.பி : செலாது..செலாது... திரும்பவும் முதலிலிருந்து ஆரம்பிப்போம்....மிஸ்டர் மரமண்டை17 July 2015 at 10:10:00 GMT+5:30 contd.. காட்சி-3 : 

கோர்ட், ரகசிய விசாரணையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே, தாரை தப்பட்டை முழங்க, லோக்கல் MLA தலைவர் தங்கதொர, இதாண்டா என் தீர்ப்பு என்று கூறியவாறே ஆர்ப்பாட்டமாக வந்து பார்வையாளர்கள் இருக்கையில் அமர்கிறார். 

நீதிபதி : உங்களுக்கு யாரவது வக்கீல் இருக்கிறார்களா ?

மி.ம : இல்லை யுவர் ஹானர், நானே என் கருத்தை எடுத்துக் கூறலாம் என்று நினைக்கிறேன் !


(பார்வையாளர்கள் தரப்பில் மீண்டும் பலத்த சலசலப்பு...)

மைனர் காட்டுப்பூச்சி: நா.. அப்பவே சொல்லல... இவர் கண்டிப்பா ஒரு லாயராகத் தான் இருப்பார்னு ?! 

மாடஸ்டி மாதவன் : ஆ..ஆனா அவர் பார் கவுன்ஸில் உறுப்பினர் இல்லையே... சந்தாதாரர் மட்டும் தானே !?

வெள்ளாவி வேந்தர் : ஹா.. ஹா.. ஹா... அவர் படித்தவர் ஆனால், லாயர் அல்ல :-)))


மிஸ்டர் மரமண்டை18 July 2015 at 15:16:00 GMT+5:30 contd.. காட்சி-4 

நீதிபதி : இந்த வழக்கைத் தொடுத்த 'அழகன் பாண்டியன்' என்ற Sundar Raj, தற்போது ஒரு மனுவை என்னிடம் அளித்துள்ளார். அதில், தான் நினைத்தது இவ்வளவு சீக்கிரம் நடந்தேறும் என்று நினைக்கவேயில்லை, இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பு எனக்கு இரண்டாம் பட்சமே, எனவே இந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். எனவே, இந்த நீதிமன்றம் இந்த வழக்கை மறுபரிசீலனை இன்றி, உடனடியாக dismiss செய்து உத்தரவிடுகிறது...

மேலும், பப்ளிக் பிராசிகியூட்டர் என்ற பொறுப்பான பதவியில் இருந்து கொண்டே, மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளையும், தரமற்ற தனது எண்ணங்களையும், பின்னூட்டமாகப் பதிவு செய்து, தனக்குத் தானே அபச்சாரம் தேடிக் கொண்ட ''கமெண்டு கைப்புள்ள'' (எ) ஸ்டீல்பாடியை, இந்த நீதிமன்றம் கடுமையாக எச்சரிக்கிறது. இத்துடன் கோர்ட் கலைகிறது !


எடிட்டர் வலைதளத்தில் நான் மிகவும் ரசித்த ஒரு பின்னூட்டம்.... Anonymous Comics Blogger அவர்களுக்கு என் நன்றிகள் !!Posted by Anonymous Comics Blogger to Lion-Muthu Comics at 20 July 2015 at 13:02:00 GMT+5:30

Arnab Goswami interview in TIMES-NOW

For the last 3+ years , comics world is boiling with speculations. No one knows who Mr.Maramandai is. The country has the right to know the truth. It has now became the burning issue of this country. We at Time Now, have the moral obligations to act, to crack open any scam, no matter how tough it is. To be the first channel, to let this country know, the truth, that’s lurking behind the darkest places of this universe, rope it, fasten it, drag it to the day light, gentle man!

In the News Hour tonight, Arnab Goswami grills Meeran, Erode Vijay and Vijayan. In the mean time, Times Now team is tracking viciously, with the information from undisclosed underworld network, for the first time in the world, we bring him to you, The Comics Dark Lord, He who should not be named, Mr.Maramandai is taking on questions Live here tonight gentleman. He will be joining us shortly through his encrypted, GPS guided BVR-hypersonic cruise link from an undisclosed anonymous location.

We remained you, Times now is the first channel to break the ice, to disclose, the infamous and secretive longest-surviving online crypto market for selling Antique comics books, called Dark-web.

Arnab: Good Evening to our viewers. Tonight on the NewsHour we have on our panel, The u-pee-pedia, He-who-knows-all, Mr.Meeran; The Freddie of the Flintstones, Mr. Erode Vijay; and The master of Ro-Sham-Bo Mr. Vijayan to discuss the latest developments happening around Mr.Maramandai.

My first question is to Meeran. I am holding a piece of paper that represents the comments you made in the comics blog site, handed over to me this morning. (Arnab adjusting his glasses while reading the paper), who do you think you are meeran, who gave you right to pass judgments on other people whom you know very little,(Arnab rises his voice), this nation wants to know the truth tonight, you accuse vijay's group, as if you know "utthama villan","naveena valluvan" are among them, who told you? how do you know that? Can I accuse you, you are also an insider of that group, just like how you accuse them that they all know "maramandai" and still they keep silent? 

meeran turned red, so red and in fact spectacularly furious red that his colour jumped from visible red spectrum to invisible infra red spectrum, arnab jerked and turned towards vijay and keeps going on...

and now to Vijay from Erode, you think you are the Freddie of your Flintstones group, huh? No matter how serious the situation is, you always divert the issue to some humorous note, there by denying to give due seriousness to the matter that deserves it, there by hampering the development, hiding the truth, giving a chance and bailing out the comics terrorists of your group? I accuse you, you are aggressive and deny others their fundamental right to express their views, you know why...?you know why....? i have solid proof here, 

arnab waves some bunch of papers 

because...when ever you comment , it tricks others, mesmerizes others, it robs their thinking ability, who gave you right to do that? Do you think you are special? above others? I remained you that You are answerable to every tax payer of this nation, erode vijay!

Erode vijay thinking "ippo yaaru illannu sonnaa!" went so small in his chair ,while his cat angrily purred at arnab

Anonymous Comics Blogger to Lion-Muthu Comics at 20 July 2015 at 13:41:00 GMT+5:30 contd.. 

because...when ever you comment , it tricks others, mesmerizes others, it robs their thinking ability, who gave you right to do that? Do you think you are special? above others? I remained you that You are 
answerable to every tax payer of this nation, erode vijay!

Erode vijay thinking "ippo yaaru illannu sonnaa!" went so small in his chair ,while his cat angrily purred at arnab

When Arnab turned to face vijayan, found he was hiding behind his chair,

...and to the great vijayan,

he calms down his voice,

You know in the past, Times Now have exposed, from corrupt politicians, sportsperson, corporate to big honchos because we are passionate and fearless about what we do. 

Vijayan shivering internally " Athu naan illeenga!" and battles his life out, to keep his eyes on arnab.

look vijayan, I'm asking you a very direct question, whenever you play "rock-paper-sissor" you always win, i'm asking you quietly tonight, how is that ever time you publish a book its always getting praised by your readers, even though if you remove the cover, all tex stories are the same.No matter how many times your hero Tex willer shoots, he never reloads his gun. Don’t you think your readers deserve some fundamental sense of worldly logic? and in the studio we believe that if a person comments with a commonly used name , he is a genuine user, we can also trust him to sign in our rupee note, and if a person uses a pseudo/proxy name for commenting he must be handed over to FBI for forgery. In spite of that you encourage many proxy name commenters there by giving chance for anonymous users to pass secret messages to ISIS. why should not you be held responsible for international treachery?

arnab suddenly raises his voice, I demand answers from you vijayan, this nation is looking at you for answers 

at that very precise moment, all transmission from the times now studio experiences a jerk and resumes normalcy.

Arnab jumps and shouts here we have, here we have, first time in the television history, Maramandai , speaking through his hypersonic cruise link from an undisclosed location, 

welcome to our show maramandai!

Sunday, 20 September 2015

வரலாற்றின் மறுபக்கம் !


மிஸ்டர் மரமண்டை28 June 2015 at 17:57:00 GMT+5:30 நெருடல் ! (நெருடல் இல்லாமல் இருப்பதே சிறந்தது )

டியர் விஜயன் சார்,

இன்றையப் பதிவில், பௌன்சரின் கறுப்பு விதவை பற்றிய தங்களின் சஞ்சலங்கள் என் மனதில் கலக்கத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. என்னைப் பொறுத்தவரை நான் வாங்கி வாங்கிப் பாதுகாத்து வைக்கும் காமிக் புத்தகங்கள் என்னோடு முடிவடையப் போவதில்லை. வாரிசு உரிமை கோரும் விதமாகவும், இவையனைத்தும் இன்னாருக்கு மட்டுமே பாத்தியமானது என்று உயில் எழுதி வைக்கும் அளவிற்கு பொக்கிஷமானதாகவும் கருதுகிறேன் :) ஆத்மதிருப்தி என்பது ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு சிலதில் மட்டுமே லயித்து வாழ்கிறது. அதன் மதிப்போ ; அதன் தேவையோ - அங்கு அடிபட்டு போகும் ஒன்றாகிறது !

பொதுவாகவே நாம் பார்க்கும், கேட்கும், படிக்கும் எந்த ஒரு விஷயமும் நம் ஆழ் மனதை விட்டு அகலுவதே இல்லை. ஆழப்பதிந்து, அதற்கான சமயச் சந்தர்ப்பம் சூழ்நிலையாக அமையும் போது - நம் எண்ணத்தின் வலிமையைப் பொருத்து, அது ஆசையாகவோ ; பாதிப்பாகவோ ; செயல் ஊக்கியாகவோ வெளிப்படுகிறது. அவ்வாறு சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அமையாத வரை - குழப்பமான கனவுகளின் வழியாக நம் வாழ்க்கையின் பெரும்பாலான இரவுகளில், பயத்தையும், வேதனையையும், அருவருப்பையும், சோகத்தையும், துன்பத்தையும் அள்ளித் தந்து, ஒவ்வொரு விடியலையும் வேதனைக்குள்ளாக்கியப் பொழுதுகளாக மாற்றிச் செல்கிறது :(

சாதாராண நிகழ்வுகளுக்கே இத்தனை வலிமை எனில், நாம் நேசிக்கும் காமிக்ஸில், சமூகத்திற்கு ஒவ்வாத அருவருப்பான படத்துடனோ ; அதற்கேற்ற வசனங்களுடனோ பரிணமிக்கும் போது - அவையனைத்தும் நம் மனதில் பட்டா போட்டு குடியேறி விட்டால், அவ்வப்போது மனதில் நிழலாடிச் செல்லும் அருவருப்பு சொல்லி மாளாது :( அதற்காக முத்தக் காட்சிகளோ ; அரைகுறை ஆடைகளின் தரிசனமோ கூட வேண்டாம் என்று சொல்லவில்லை. ஏனெனில், இவையெல்லாம் நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத டிவி விளம்பரங்களாகவே இன்று பரிணமித்து விட்டது. இந்த ஆக்கிரமிப்பில் இருந்து மீள்வது இயலாத காரியம் என்பதால் இதில் (காமிக்ஸில்) அளவுக்கு மீறிய சென்சார் என்பது எந்த விதத்திலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால்,


மிஸ்டர் மரமண்டை28 June 2015 at 18:30:00 GMT+5:30 contd.. 

எத்தனையோ விதமான நெருடல்கள் இருக்கலாம், அதே சமயம் ஒவ்வொருவருக்கும் அதில் ஏதோ ஒரு விஷயம் நெருடலின்றி தோன்றலாம். ஆனால் இன்றும் நாம் வாழும் நம் சமுதாயத்திற்கு ஏற்பு இல்லாத, அதனாலென்ன என்று வசியப்படாத மனப்பக்குவத்திற்கு எதிரான விஷயங்களை தயவு செய்து சென்சார் செய்து விடவும். கதையின் போக்கு சிறிது மாறினாலும் கூட எடிட் செய்வது நலம் பயப்பதாகவே அமையும். ஏனெனில், இன்னும் கூட காமிக்ஸ் வாசகர்களில் 90 சதவிகிதம் நபர்கள், கிராபிக் நாவலுக்கு அடிமையாவாதவர்கள் தான் அல்லவா :-)

ப்ளுகோட் (த.தே.சி) கதை விமர்சனத்தில் கூட இதைத்தான் நான் கோடிட்டு காட்டியிருந்தேன். உதாரணமாக, இயற்கை வகுத்துள்ள விதிக்கு மாறான பாலியியல் உறவுகளைச் சித்தரிக்காமல் விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்பதே என் வேண்டுகோள். எங்கோ நடந்தால் நடந்து விட்டுப் போகட்டும், அதுவே அங்கு நடைமுறையாக இருந்தாலும் தொலைந்து போகட்டும். நாம் நாமாக இருக்கலாமே ?!

ஊர் உலகத்தில் நடக்காததையா நாம் படிக்கப் போகிறோம் என்ற கேள்வி எழாமலிருக்கப் போவதில்லை தான்.. அதற்காக நாம், நமக்கு ஒவ்வாத சில விஷயங்களை விலாவரியாக நம் மண்டைக்குள் திணித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதே என் இறுதிக் கருத்து. நன்றி சார் !!
மிஸ்டர் மரமண்டை29 July 2015 at 08:30:00 GMT+5:30 வரலாற்றின் மறுபக்கம் ! 

கர்ணன் படத்தைப் பார்க்கும் போதெல்லாம் உங்களுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் - நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் அற்புதமான நடிப்பு உங்கள் கண்முன்னே வந்து நின்றால், அது கர்ணன் திரைப்படத்தின் தோல்வியாகவே கருத வேண்டும் அல்லது சிவாஜி கணேசனின் மிகப்பெரிய தோல்வியாக கூட அது இருக்கலாம் :) 

கர்ணன் திரைப்படத்தில், மஹாபாரதத்தின் சாரத்தை உங்களால் உணரமுடியாமல், சிவாஜியின் நடிப்பு மட்டுமே உங்களை கவர்ந்திழுக்குமானால், கர்ணன் என்ற திரைப்படம் - சினிமா என்ற ரசனையைப் பொறுத்தவரை ஒரு தோல்விப் படமாகவே கருத வேண்டும் அல்லவா ?!

அது போலவே, ஓக்லஹோமா அல்லது வேறு எந்தக் காமிக்ஸாக இருந்தாலும், அதன் பின்னணித் தகவல்கள், வரலாற்று உண்மைகள், உண்மைச் சம்பவங்கள் - என அலசி ஆராயும் போது, காமிக்ஸின் உண்மையான சுவையை நாம் இழந்து விடுகிறோம் அல்லவா ?!

ஓக்லஹோமா உண்மை ; கதைக் களம் உண்மை ; கதையின் கால கட்டம் உண்மை ; land rush உண்மை என்று உங்களின் மூளை தீர்க்கமாக நம்பும் போது, டெக்ஸ் வில்லர் மற்றும் கார்சன் இருவரும் ஜோடிக்கப்பட்ட கதாப்பாத்திரங்கள் என்றே உங்களின் ஆழ்மனம், ஆழமாக நம்பத் தொடங்கும். இந்தக் கதையில் சுவாரசியம் குறையாமல் இருக்கலாம் ஆனால், உங்களின் ஆழமான நம்பிக்கை, வரப்போகும் டெக்ஸ் வில்லரின் ஒவ்வொரு கதையிலும், உண்மையையும் கற்பனையையும் பிரித்துப் பார்க்க ஆரம்பித்தால், நீங்கள் காமிக்ஸ் வாசிப்பு என்ற அற்புதமான சுவையை இழந்து விடுவீர்களே ?!


மிஸ்டர் மரமண்டை29 July 2015 at 08:31:00 GMT+5:30 contd.. 

அநேகமாக, நாம் அனைவருமே மெத்த படித்தவர்கள்.. பூகோளம், சரித்திரம், கணிதம், நிதி, சட்டம், திட்டம், இயற்பியல், வேதியல், உயிரியல், அறிவியல், அரசியல், விஞ்ஞானம், மருத்துவம் என்று அனைத்தையும் சிறுவயதில் கொஞ்சமாகப் படித்து, மேற்படிப்பில் ஏதோ ஒன்றில் வல்லமைப் பெற்று விட்டோம். அதனால் தான் இன்று நாம் ஒரு வக்கீலாகவோ ; டாக்டராகவோ ; ஆலோசகராகவோ ; ஆசிரியராகவோ ; ஐ டி ஆபிசராகவோ ; போலீசாகவோ ; வியாபாரியாகவோ ; அதிகாரியாகவோ ; தொழிலாளியாகவோ ; தொழில் முனைவோராகவோ ; இன்னும் ஏதோவாகவோ வாழ்க்கையில் சாதித்து வருகிறோம் ! 

பொழுது விடிந்து பொழுது போனால் ஏதோ ஒரு பிரச்சனை ; காலையில் சீக்கிரம் விழித்தெழ பிரச்சனை : பிள்ளைகள் பள்ளிக்குக் கிளம்பிச் செல்வதற்குள் ஆயிரம் பிரச்சனைகள் ; ஆபிஸ் போவதற்கும் பிரச்சனை ; அங்கு போனப் பின்பும் பிரச்சனை ; அலுவல் முடித்து வீடு வந்து சேருவதற்குள் போதும் போதும் என்று சொல்லுமளவிற்குப் பிரச்சனைகள் ; தாக்குப் பிடித்து வீடுச் சேர்ந்தால், குழந்தைகளின் வீட்டுபாடப் பிரச்சனை ; இத்தனைப் பிரச்சனையில் எங்கோ தவறி ஒரு முறை வாயை விட்டால், வாழ்க்கைத் துணைவியிடம் ஓராயிரம் பிரச்சனைகள் :)

இதற்கு இடையில் இளைப்பாறவே காமிக்ஸ் எனும் ஆலமரத்தடியில் சற்றே ஓய்வெடுக்கிறோம். தன்னை மறந்து, தத்தம் கவலைகள் மறந்து, சுற்றுபுறம் மறந்து, சுற்றுச் சூழல் மறந்து, சிந்தனையின்றி வேறோர் உலகத்தில் சஞ்சரிக்கவே காமிக்ஸ் வாசிப்பு நமக்கு உதவுகிறது அல்லவா ?! இதிலும் P.hd செய்ய வேண்டிய அவசியம் தான் என்ன? கடைசியில், சிறுகச் சிறுக காமிக்ஸ் ரசனைய இழப்பதில் தான் இது போன்ற பாதைகளின் முடிவு இருக்கும். வரலாறு நமக்கு அவசியம் என்றால் சரித்திரத்தைத் தனியாகப் படிப்போமே, அதற்காக காமிக்ஸ் என்ற உன்னதமான ரசனையைப் பாழ்படுத்திக் கொள்வதில் பயனேதும் இருக்கப் போவதில்லை !

சூப்பர் மேன், ஸ்மர்ஃப் போன்ற சிலவகையான காமிக்ஸ் தவிர, எல்லா காமிக்ஸும் ஏதோ ஒரு வகையில் வரலாற்றுப் பின்னணியைக் கொண்டதாகத் தான் இருக்கப் போகிறது ; அதன் பின்னணியில் ஏதோ ஒரு உண்மைச் சம்பவத்தைக் கருபொருளாக கொண்டே கதை அமைக்கப் படுகிறது - இதையெல்லாம் ஆராய்ந்து கொண்டே இருந்தால், நம்மால் மீண்டும் ஒரு முறை - ஒரு தங்கக் கல்லறை, ஒரு மின்னும் மரணம், ஒரு இரத்தப் படலம் போன்ற வாசிப்பு அனுபவத்தை பெற தான் முடியுமா நண்பர்களே ?! 

காமிக்ஸை காமிக்ஸாக மட்டும் படிப்போமே ! காமிக்ஸை காமிக்ஸாக மட்டும் ரசிப்போமே !!
மிஸ்டர் மரமண்டை26 July 2015 at 10:23:00 GMT+5:30 comic sunday ! Reply / Delete / ignore !? 

நண்பர்களே, வணக்கம் ! நம்முடைய மிகச் சிறு வயதில், நம் வீட்டிற்கு வருகைத் தரும் சொந்தங்களில் ஒரு சிலராவது, நம்மிடம் இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பார்கள், அனேகமாக தாய்வழிப் பாட்டி நிச்சயம் அதில் இடம் பிடித்திருப்பார் - உனக்கு அம்மாவை ரொம்பப் பிடிக்குமா? அப்பாவை ரொம்பப் பிடிக்குமா? என்ற கேள்வி தான் அது. உடனே நாம், எனக்கு ரெண்டுப் பேரையும் ரொம்பப் பிடிக்கும் ஆயா.. என்று கூறியிருப்போம். உடனே நம் பாட்டி, யாராவது ஒருத்தரை மட்டும் சொல் என்றவுடன், எனக்கு அம்மாவை மட்டும் தான் ரொம்ப ரொம்பப் பிடிக்கும் ஆயா... என்று உணர்ச்சி மேலிடக் கூறி, அவரை சந்தோஷத்தில் திளைக்கச் செய்திருப்போம். ஏனெனில்,

ஜனிக்கும் முன்பே தாயின் கருவறையில் உண்டு, உறங்கி, சுவாசித்து, யாசித்து - ஜனித்தப் பின்பும் ஒட்டி உறவாடி, தொட்டுத் தழுவி, உச்சிமோந்து, அவளுடனே அழுது, சிரித்து, துடித்து, துவண்டு வளர்ந்த அந்த சிறுவயதுப் பிராயத்தில், தாயை விட சிறந்த உலகம் வேறு எதுவுமே இருந்திருக்காது அல்லவா ?! போலவே, இந்தக் காமிக்ஸ் வலைதளமா அல்லது என்னுடைய மிஸ்டர் மரமண்டை என்ற பெயரா என்ற கேள்வி எழுந்தால், எனக்கு இரண்டுமே அவசியம் வேண்டும் என்றே கூறுவேன். இல்லையில்லை ஏதாவது ஒன்று மட்டுமே சாத்தியம் என்றால், மிஸ்டர் மரமண்டை என்ற அடையாளத்தை மட்டுமே தேர்ந்தெடுப்பேன் :-)

தெரிந்தோ, தெரியாமலோ மரமண்டை என்ற பெயரில் மட்டுமே அறிமுகம் ஆனேன் ; மரமண்டை என்ற ஒரு ஐடியில் மட்டுமே பதிவிட்டு வந்தேன், வருகிறேன் ; இரண்டு ஐடியில் பதிவிட நான் கோழையும் அல்ல, மரமண்டை என்ற புனைபெயரில் இருப்பதால் நான் குற்றவாளியும் அல்ல - ஆனால், அனைவரையும் போன்றே நானும் ஒரு சராசரி காமிக்ஸ் வாசகன் மட்டுமே !

இதுவரை எந்தப் புத்தகக் கண்காட்சிக்கும் சென்றதுமில்லை, இனி, செல்லப் போவதும் இல்லை. இதுவரை ஆசிரியரை சந்தித்ததும் இல்லை, இனிமேல் சந்திப்பேனா என்பதற்கு, தற்போது என்னிடம் விடையே இல்லை ! இதுபோன்ற என் விளக்கப் பதிவுக்கு என்னை ஆளாக்கிய நண்பர்கள் பெரியதாக சந்தோஷப்பட்டுக் கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே, சென்ற டிசம்பரில் இருந்து, ஜூன் வரை, 6 மாதங்கள் முழுமையாக இங்கிருந்து நான் ஒதுங்கியே தான் இருந்தேன் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். ஏனெனில், என் மீதான, Palani kumar, Vinoth kannan அவர்களின் கீழ்த்தரமான / தரங்கெட்ட பதிவும், அதை ஆசிரியர் அவர்கள் Delete செய்யாமல் அப்படியே விட்டு வைத்திருந்த காரணமும் தான் என்பதில் என்னிடம் மாற்றுக் கருத்து இல்லை. அவ்வளவு ஏன், இதோ இப்போதும் கூட, ''கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்'' அவர்களின், ''மாமா, உங்கள் சேவை நாட்டுக்கு தேவை, கழிசடை'' போன்ற வார்த்தைகள் அடங்கியத் தரம் தாழ்ந்த பதிவுகள், அப்படியேத் தானே இருக்கிறது ? ஏனென்றால், அவர் உண்மை பெயரில் பதிவிடுவது மட்டுமே காரணமாக இருக்க முடியும் :)

//ஒரு மைல்கல் இதழ் வெளியான 3 வாரங்களுக்குள்ளாகவே ; இன்னுமொரு மைல்கல் ஒரே வாரத்தில் காத்திருக்கும் வேளைதனில் - இங்கே ஓடும் நமது பின்னூட்டங்களின் பெரும்பகுதி தேவையற்ற திசைநோக்கிப் பயணம் போகும் போதே - நாம் செல்லும் பாதை சரியில்லை என்பது புரிவதில் சிரமம் தானேது ?// 

அப்படியில்லை விஜயன் சார், இந்த வலைதளத்தில் முன்பிருந்த காமிக்ஸ் மீதான ஈர்ப்பும் / அது சம்பந்தமான பதிவுகளும் தன்னுடைய வலிமையை இழந்து விட்டதே காரணம். ''மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள்'' என்ற காலத்தை கடந்து, தற்போது ''தேவைக்கு மட்டுமே காமிக்ஸ் வாசிப்பு'' என்ற நிலைக்கு வந்து விட்டோமா என்ற சிறுச் சிந்தனை கூட ஒரு விதத்தில் உங்களுக்கு நன்மை பயக்கும் எ.எ.தா.கருத்து. மேலும், இன்னும் வரப்போகும் நாட்களில், புத்தகக் கண்காட்சியில் உங்களைச் சந்திக்க வரும் வாசகர் வட்டமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தே போகும் என்பதிலும் சந்தேகம் ஏது? டெக்ஸ் வில்லர் கதைகள் மீதான  ஆர்வங்கள் கூட ஒரு விதத்தில் தீபாவளியை எதிர்நோக்கும் சிறுவர்களின் மனோநிலையை ஒத்திருப்பதாக தங்களால் யூகிக்க முடியவில்லையா ? தினம் தினம் தீபாவளி என்றால் தித்திக்குமா? திகட்டுமா? என்பதை காலம் தான் தீர்மானிக்கும். நன்றி !
மிஸ்டர் மரமண்டை29 July 2015 at 08:56:00 GMT+5:30 பொன் முட்டையிடும் வாத்து ! 

டெக்ஸ் வில்லர் கதைகள் பொன் முட்டையிடும் வாத்து தான் என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது :)

1.ஸ்மர்ஃப் !
2.லியனார்டோ !
3.கர்னல் க்ளிப்டன் !
4.சிக்பில் !

ஆகிய கதைகளைத் தாங்கி, தமிழ் காமிக்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக gift / box செட்டாக வரும் CCC - முத்து 350 சிறப்பிதழ் என்ற மைல்கல் சாதனைக்கு - கேட்பாரே இல்லாமல் போய் விட்டதே ?! கார்ட்டூன் கதைகள் என்பதால் வரவேற்பு இல்லாமல் போய் விட்டதா? அல்லது டைகர் மற்றும் டெக்ஸ் வில்லர் கதைகளைத் தவிர, மைல்கல் சிறப்பிதழுக்கு என்று வேறு எதற்கும் நம்மிடம் எதிர்பார்ப்போ ; ஆர்வமோ இல்லை என்பது தான் இதற்கு அர்த்தமாகிடுமோ ?! 

விஜயன் சார் சற்று யோசிக்க வேண்டிய விஷயம்... அதுமட்டுமல்ல பொன்முட்டையிடும் வாத்தைப் பொரியல் போடும் முயற்சியாய் எதையும் செய்யும் முன்பே சற்றே நிதானித்தல் நலமாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து !மிஸ்டர் மரமண்டை20 September 2015 at 08:52:00 GMT+5:30 comic sunday - Tex vs Vex ?! 

தற்போதெல்லாம் மனதில் தோன்றுவதை அப்படியே எழுத தயக்கமாக இருப்பதால் தான் அதிகமாக பதிவிடுவதில்லை. ஏற்கனவே 6 டெக்ஸ் இதழ்கள் என்பதே அதிகமாகவும் கொஞ்சம் அயர்ச்சியாகவும் தெரிகிறது. அதற்கு காரணம், கதைக்களம் மாறினாலும், இடமும் பின்னணியும் மாறினாலும் கூட - டெக்ஸ் கார்சனை கலாய்ப்பார் ; டெக்ஸ் எதிரிகளின் முகரையில் முஷ்டியை இறக்குவார் ; டெக்ஸ் எதிரிகளை வெல்லுவார் என்ற ரீதியிலான, ஒரே வகையான டெம்ப்ளேட் வகைக் கதைகள் - படிப்பற்கு கொஞ்சம் சுவாரசியம் குறைவு தான் :-)

இங்கு எழும் இவ்வளவு எதிர்பார்ப்பும், ஆர்வமும் - டெக்ஸ் தனிச் சந்தா கிடைக்கும் வரை நீடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் எழப்போவதில்லை. அதுவே வருடக்கணக்கில் தொடருமா என்பதில் தான் சற்று சஞ்சலம் எழுகிறது. இதற்கு இன்று பதிலளிப்பது மிகவும் எளிதானது தான், ஆனால் காலம் அளிக்கும் பதிலுக்கு முன்னால் பல கேள்விகள் தலைகுனிந்து தான் நிற்கின்றன.யோசித்து செய்யவும் சார்.

மறுபதிப்புகள் பற்றிய சிந்தனை மிகவும் சிறப்பான ஒன்று. வருடத்திற்கு 5 என்பதும் கூட வரவேற்க கூடிய ஒன்றாக இருக்கும். அதாவது மும்மூர்த்திகள் 12 + 5 டெக்ஸ் மறுபதிப்பு இதழ்கள் - வெற்றிக்கான கூட்டணியாக அடுத்த 3 வருடங்கள் வெற்றிவாகைச் சூடும் என்பது என் கருத்து. யோசித்து முடிவு எடுக்கவும் சார் !Friday, 19 June 2015

நான்... எனது... 2016..!

நண்பர்களே, 

வணக்கம். சென்ற வருடத்தின் நான்... எனது... 2015..! படிக்க இங்கே கிளிக்கவும் !
1.மிஸ்டர் மரமண்டை14 June 2015 at 20:06:00 GMT+5:30

வணக்கம் நண்பர்களே.. சென்ற வருடம் போலவே மிகவும் தாமதமான பதிவு ! காரணம் பெரிதாக எதுவுமே இல்லை தயக்கத்தை தவிர ! ஒரு வாசகனாய் எழுதுவதும் ; யோசனை கூறுவதும் மிகவும் எளிதான விஷயமாக இருந்தாலும் - பதிப்பகத்தாரின் கஷ்ட நஷ்டங்களோ ; வியாபார நிர்பந்தங்களோ நமக்குப் புரிவதில்லை. ஆனால், இதுபோன்ற நம் சிந்தனைகள் பல சமயம், பயணத்தின் வழிக்காட்டியாக இல்லா விட்டாலும் - சில சமயம் திசைக்காட்டும் கைகாட்டியாக, ஒரு ஓரத்தில் கைகட்டி நிற்கும் வாய்ப்பாவது கிடைக்கும் என்ற நப்பாசையால் மீண்டும் ஒரு முறை தொடர எண்ணுகிறேன் !

சென்னை போன்ற பெரு நகரங்களில், தற்போதெல்லாம் தோட்டத்துடன் கூடியப் புதிய வீடுகளைப் பார்ப்பதே அரிதாகி விட்டது. அப்படியே இருந்தாலும், நிச்சயமாக கிணறு என்று ஒன்று இருப்பது குதிரைக் கொம்பு தான். காலமும், வாழ்க்கை முறையும், தட்பவெப்ப நிலையும் , விலைவாசியும் வெகுவாக மாறிவிட்டதே இதற்கான காரணம். முன்பெல்லாம் 1/2 கிரவுண்ட் இடமாவது, மரங்கள் நடுவதற்கும், பூச்செடிகள் பயிருடுவதற்கும் ஒதுக்கி, அதில் நீர் வற்றாத ஒரு கிணறும் அமைந்து இருக்கும். சுற்றிலும் தென்னை மரங்களும், வகைக்கு ஒன்றாக அரச மரம், புங்கை மரம், வேப்பமரம் என்று போக, இலவம்பஞ்சு மரங்களும், மாமரங்களும், முருங்கை மரங்களும், அசோக மரங்களும் ; அவரை, பாவக்காய், கோவக்காய் கொடிகளும் ; பசலைக் கீரையும், இலந்தை செடிகளும் ; செம்பருத்தி, அரளி, ரோஜா பூச்செடிகள் என காலி இடம் முழுவதும் தோட்டமாக, சொர்க்கம் நிறைந்திருக்கும் !

அவற்றிற்கு, முறைவைத்து வாளியில் தண்ணீர் இறைத்து வரும் அவ்வீட்டு வாரிசுகளின் உடலும், உள்ளமும் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும். காலம் ஓடியதே தெரியாமல் திடிரென்று மரம், செடி, கொடி என்று எல்லா தாவரங்களும் வளர்ந்து நின்று பயன் தர ஆரம்பித்திருக்கும். இளநீராகட்டும் ; மா, பலா, காய்கறி, கீரையாகட்டும் ; மல்லி, செம்பருத்தி, ரோஜா, மருதாணி என எதுவாகட்டும் - நம் குடும்பத் தேவைக்கும் பல மடங்கு அதிகமாக, தினம் தினம் கைமேல் பலனாக கிடைத்து, நம்மைத் திணறடித்து விடும். 'கொடுக்குற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுவதுப் போல்' வரும் அபரிதமான வரவை, அனுபவத்தால் மட்டுமே உணர்வுப் பூர்வமாக புரிந்து கொள்ள முடியும் !2.மிஸ்டர் மரமண்டை14 June 2015 at 20:31:00 GMT+5:30

அதுபோலத் தான் நாம் செய்து வரும் தொழிலும், வியாபாரமும் ! தொடக்கத்தில் மிகவும் சிரமத்தையும், வருமான நெருக்கடிகளையும் தந்து, நமக்கு அனுபவத்தை அளவுக்கு மேல் அள்ளித் தெளித்து - திடிரென்று ஒருநாள், பணம் கொட்ட ஆரம்பிக்கும். அப்போது தான் நமக்கே தெரியும் - எத்தனை உயரத்தில் நாம் வந்து சேர்ந்திருக்கிறோம் என்று ! இந்நிலைக்கு தான் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்ற சொற்றொடர் வந்திருக்குமோ என்னவோ ?!

இதை ஏன் சொல்கிறேன் என்றால், எந்த ஒரு வியபாரமாகட்டும் ; தொழிலாகட்டும் நாம் தொடர்ச்சியாக செய்து வந்தால், திடிரென ஒரு நாள் நாம் அத்தொழிலில் அசைக்க முடியாத உயரத்தில் அமர்ந்திருப்போம். பெயர் ; புகழ் ; செலவம் என்று எதிர்பார்க்கும் அளவிற்கு மேலேயே வந்து குவிய ஆரம்பிக்கும் என்பது மிகவும் சாத்தியமான உண்மை ! அது போல், நம் ஆசிரியர் விஜயன் அவர்களுக்கும், காலம் கூடி வருவதை என்னால் உணர முடிகிறது. இன்றைய இக்கட்டான நிலை நாளை இருக்காது என்பதில் எனக்கு ஐயமே இல்லை என்று கூறி என் முன்னுரையை நிறைவு செய்கிறேன் !

இந்த வருடம், வந்ததும் தெரியாமல் செல்வதும் தெரியாமல் இறக்கைக் கட்டிக் கொண்டு, பார்த்துக் கொண்டிருக்கும் போதே பறந்துச் செல்கிறது. ஒவ்வொரு மாதமும், புத்தகம் கிடைத்த ஒரு வாரத்திற்குள்ளாகவே காமிக்ஸ் தாகம் அளவுக்கு மீறி எடுக்கிறது ; அடுத்த மாதம் எப்போது வரும் என்ற காத்திருப்பு யுகமாகக் கழிகிறது ! புத்தகம் இல்லாத இந்தப் பாலைவன நாட்களில், ஆசிரியர் விஜயன் அவர்களின் ஞாயிறுப் பதிவுகள் மட்டுமே பாலைவனச் சோலையாக நம்மை இளைப்பாற வைக்கிறது. இந்நிலையில் 2016ஐ எப்படி அமைத்தால் நன்றாக இருக்கும் என்ற சிந்தனையைக் கொஞ்சம் ஓடவிட்டுப் பார்ப்போமே :-)3.மிஸ்டர் மரமண்டை15 June 2015 at 10:10:00 GMT+5:30

முதலில், நம் அருகில் பூதாகரமாக நிற்கும் நாளையச் சவாலே முதன்மையானது. நம் கவனம் முழுவதையும் அதைப் பற்றிய சிந்தனையில் லயிக்க வைத்து, இடர்களைக் களைய முழுமூச்சாக இறங்க வேண்டும். லயன் ஆண்டுச் சந்தா எண்ணிக்கை குறைந்து விட்டது ; கடைகளில் நிலுவைத் தொகை அதிகரித்து விட்டது ; கொடவுனில் ஸ்டாக் மலைப் போல் குவிந்து வருகிறது ; ஒவ்வொரு மாத முதலீடுக்கும், ராயல்டி தொகைக்கும், இதர நேரடிச் செலவுகளுக்கும் கணக்கில் பற்று மட்டும் வைத்தால் போதுமானதாக இருக்குமா என்றால், அது பற்றாக்குறையாகவே நீடித்து நிலைத்திருக்கும். மழைக் காலத்தில், தூவானம் நின்றபின் தான் செல்ல வேண்டும் என்று காத்திருந்தால் அன்றையப் பொழுது மெதுமெதுவாக கரைந்தேப் போய் விடும் !

எனவே, நமக்கு முன் உள்ள 2016 மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருத வேண்டும். அது மட்டுமல்லாமல், சில வெற்றி தொடர்களை முடிவுக்கு கொண்டு வரவும் இக்காலத்தைப் பயன்படுத்திக் கொண்டால் - இரட்டை மாடு பூட்டிய மாட்டு வண்டியாக சொகுசுப் பயணம் மேற்கொள்ள முடியும். நகைப்புக்குரிய விஷயமல்ல, நம் பயணம், இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் ; ஆறுகள் ; வயல் வெளிகள் ; ஒற்றைப் பனைமரங்கள் ; குளம், ஏரி, கால்வாய்கள் ; பச்சைப் பசேல் என்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்திருக்கும் தோப்புகள் - என மனம் மகிழச் செய்யும் கிராமங்களின் வழியே தான் எனும் போது, இது போன்ற சொகுசுப் பயணங்கள் நம் வாழ்விலும், வசதியிலும் ஒரு நிறைவைத் தரும் ! ஆதலினால்,4.மிஸ்டர் மரமண்டை15 June 2015 at 10:38:00 GMT+5:30

லார்கோ வின்ச் !

டெக்ஸ் வில்லரை தவிர்த்து, எல்லா வெற்றி தொடரும் ஒரு நாள் முடிந்து தானே ஆக வேண்டும் ?! அது அடுத்த வருடமாக இருந்தால் என்ன.. இந்த வருடமாக இருந்தால் என்ன ? மனம் சார்ந்த தேவைகளையும், தேடுதல்களையும் எப்பொழுதுமே ஒத்தி வைக்க முடியாது, காலம் செல்லச் செல்ல நீர்த்து விடும். ஒரு தொடர் வெற்றி முகத்தில் கோலோச்சும் போதே, அவற்றை வெளியிட்டு நிறைவு செய்து விட வேண்டும். இது பலவிதமான தொழில் இடர்களைக் களைவதற்கும், வாசகர்களின் ஒருமித்த மனநிறைவுக்கும் வழிவகுக்கும். எனவே வரும் ஆண்டில், லார்கோ வின்ச்'சின் ஆல்பம் 15 & 16, 17 & 18 ஆகியவற்றை வழக்கம் போல் இரண்டிரண்டு ஆல்பமாக அட்டவணையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே, எடிட்டர் அவர்களும் இந்த முடிவை தான் எடுத்து இருப்பார் என்பதால் வரும் வருடத்தில் அனைவருக்கும் மனநிறைவான இரண்டு இதழ்கள் நிச்சயம் ! 

1.Largo Winch - 2 books - @ 120 !

வேய்ன் ஷெல்டன் !

லார்கோ வின்ச் போலவே இதுவும் ஒரு வெற்றி தொடர் என்பதால், இதனையும் இவ்வருடத்திலேயே நிறைவு செய்து, நாமும் அனைத்திலும் நிறைவாக உணரலாம். தற்போதைய வசதிகளின் படி, ஸ்டாக் தீர்ந்து விட்டால் - என் பெயர் லார்கோ, தங்கக் கல்லறை போன்று மீண்டும் பதிப்பித்து, வரும் வருடங்களில் கூட அனைத்துப் புதிய வாசகர்களுக்கும் கிடைக்கச் செய்யலாம். ஆதலினால், வேய்ன் ஷெல்டன் ஆல்பம் 9 & 10, 11 & 12 இரண்டையும் வரும் வருடத்தில் எதிர்பார்க்கிறோம். இதையும் எடிட்டர் அவர்கள் ஏற்கனவே அட்டவணையில் சேர்த்திருப்பார் என்பதால், வரும் வருடத்தில் அனைவருக்கும் மனநிறைவான மேலும் இரண்டு இதழ்கள் நிச்சயம் !

2.Wayne Shelton - 2 books - @ 120 !


5.மிஸ்டர் மரமண்டை15 June 2015 at 11:04:00 GMT+5:30

இரத்தப் படலம் பாகம் 24 !

ஏற்கனவே, ஆசிரியர் அவர்களால் இறுதிச் செய்யப்பட்டிருக்கக் கூடிய கதை தான் எனும் போதும், XIII ன் Spin-off வரிசையில் இரண்டு இதழ்களையாவது சேர்த்துக் கொண்டால், ஒரு நல்ல வாசிப்பிற்கு உத்திரவாதம் அளித்தது போல் இருக்கும் அல்லவா ?! 

3.இரத்தப் படலம் - 60+ = 3 books 

வானமே எங்கள் வீதி !

சிறந்த ஓவியத்திற்காகவும் ; கதையில் காணப்படும் அழுத்தமான திடீர் திருப்பங்கள் காரணமாகவும் பரவலான ஆதரவைப் பெற்ற ஒரு மினி வெற்றி தொடர் இது. இக்கதையைப் படித்துள்ள வாசகர்கள் அனைவரையும் போலவே நானும், இந்தக் கதையின் முடிவு எப்படிப்பட்டதாக இருக்கும் என்று அறிந்து கொள்ள - இதன் இறுதி ஆல்பம் 3 ஐப் படிக்க காத்துக் கொண்டிருக்கிறேன். இதுவும் அட்டவணையில் நுழைந்திருக்கலாம் என்பதால், மீண்டும் ஒரு எதிர்பார்ப்பு நிறைந்த இதழ் 2016 ல் நம் அனைவருக்காகவும் காத்திருக்கலாம் !

4.வானமே எங்கள் வீதி - 60+ = 1 book


6.மிஸ்டர் மரமண்டை15 June 2015 at 20:41:00 GMT+5:30

பௌன்சர் !

கதையின் சாரம் நல்லதோ.. கெட்டதோ வெளியிட்டு விட்டோம் ; மிகப் பெரிய வெற்றியோ.. மிதமான வெற்றியோ .. பதிப்பித்து விட்டோம் ; ஒரே வருடத்தில் ஒரு தொடரின் 88 சதவீதத்தைப் பூர்த்தி செய்த நாம், மீதமிருக்கும் இரண்டே ஆல்பமான 8 & 9 ஐயும், வரும் 2016ல் வெளியிட்டு - காமிக்ஸ் உலகின் மிகவும் பிரபலமான ; மிகப் பெரிய வெற்றி ஈட்டிய ஒரு தொடருக்கு, தமிழில் நாம் மட்டுமே உரிமையாளர்கள் என்ற லேண்ட்மார்க் உடன் வலம் வரவேண்டும். வழக்கம் போல், சில நெருடலான விஷயங்களை, கதையின் போக்கு மாறாமல் வசனத்தில் மாற்றி அமைத்து விட்டாலே, எடிட்டர் விஜயன் அவர்களுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது போலாகி விடும். எனவே,

5.பௌன்சர் - 120+ = 1 book7.மிஸ்டர் மரமண்டை15 June 2015 at 21:12:00 GMT+5:30

கேப்டன் டைகர் !

என் பெயர் டைகர் - இந்த வருடமே வெளிவந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். சமீப காலங்களில் டைகர் கதைகள் அதிக அளவில் விமர்சனத்தை சந்திப்பதால், இக்கதைகளை வெகு நாட்களுக்கு ஒத்தி வைக்க முடியாது என்பது நிதரிசனம். ஒரு சாரரருக்கு பிடிக்கவில்லை அல்லது ஓவர் டோஸ் என்ற காரணத்தினால் மட்டுமே ஒரு தொடரின் எஞ்சிய பாகங்கள் ஒத்தி வைக்கப்படும் போது, அந்த உரிமையைப் பெற்றுள்ள பதிப்பகம், ஏதோ ஒரு வகையில் நஷ்டம் அடைகிறது. அது மட்டுமல்லாமல், கேப்டன் டைகரின் ரசிகர்கள் அவரின் தொடர்கள் முழுமையடையாதா என்ற ஏக்கத்தில் காலம் தள்ளவும் நேரிடுகிறது. இவையிரண்டையும் சமன் படுத்த, காலம் தாழ்த்தி வெளியிடப்படும் ஒரு மிகப் பெரிய வெற்றி தொடரின் எஞ்சிய பாகங்கள் - சரியாக விற்பனை ஆகாமல், நஷ்டத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு அதிகம் இருப்பதால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் கேப்டன் டைகரின் அனைத்து கதைகளையும் வெளியிட்டு விடுவதே சிறந்ததாக இருக்கும் என்பது என் கருத்து. ஏற்கனவே Mr .BLUEBERRY - வரும் 2016 அட்டவணையில் சேர்த்திருப்பீர்கள் என்றே நம்புகிறோம் !

6.என் பெயர் டைகர் 1 2 3 4 5 - ஒரே புத்தகமாக 300+ = 1 book8.மிஸ்டர் மரமண்டை15 June 2015 at 21:41:00 GMT+5:30

மதியில்லா மந்திரி !

நிறைவு செய்யப்பட வேண்டிய தொடர்களின் இறுதிப் பட்டயலில், மதியில்லா மந்திரி வருவது பல வாசகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கலாம். இந்தக் கார்ட்டூன் வகை, குபீர் சிரிப்புக் கதைகள் என்றோ தொகுப்பாக வந்திருக்க வேண்டும் என்பது என் கருத்து. அது மட்டுமல்ல, மீண்டும் மீண்டும் அடிஷனல் பிரிண்டிங் போட வேண்டிய இந்தக் கதைத் தொடர் - இன்னும் முதல் பதிப்பிற்கே ஸ்லாட் கிடைக்காமல் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பதை, கொள்முதல் விரயமாகக் கூட கருதலாம். கோணங்கித் தனமான மந்திரியும், அதி மேதாவி ஜால்ரா பாயும் அடிக்கும் லூட்டிகள், நிச்சயம் சிறுவர்களுக்கானது ; கார்ட்டூன் ரசிகப் பெருமக்களுக்கானது. இருந்தும், தொகுப்பாக நமக்கு இன்று வரை கிடைக்கவில்லை. நம் வீட்டுச் சிறுவர்களுக்கு, காமிக்ஸ் பிடிப்பு ஏற்படுத்த புதிய தொடர் தான் வேண்டும் என்பது கட்டயாமில்லையே ?! SMURFS எல்லோரையும் கவர்ந்திழுக்குமா என்பதில் எனக்கு இன்னமும் சந்தேகம் இருக்கிறது. ஆனால், மதியில்லா மந்திரி யில் அந்த ரிஸ்க் இல்லை என்று தாராளமாக நம்பலாம். எனவே,

7.மதியில்லா மந்திரி - 120+ = 1 book9.மிஸ்டர் மரமண்டை16 June 2015 at 09:37:00 GMT+5:30

உங்கள் வாழ்க்கையில் எப்போதாவது , உங்கள் ஜோசியரோ ; நண்பரோ ; வேறு யாரோ - இதை நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு செய்யலாம் சார் என்று சொல்லியிருப்பார்கள். அது எப்படி கண்ணை மூடிக் கொண்டு செய்ய முடியும் என்று ஒருபோதும் நாம் குழம்பியதே இல்லை. ஏனெனில், அங்கு ஒரு சிறிய தவறும் நிகழ வாய்ப்பே இல்லை என்பதை தான் அவ்வளவு ஆணித்தரமாக கூறுகிறார்கள் என்று நாம் புரிந்து கொள்வோம் அல்லவா ? கண்ணை மூடிக் கொண்டு செய்யும் போதே தவறு நிகழ வாய்ப்பு இல்லாத ஒரு செயலை, நம் கண்கள் இரண்டையும் திறந்து வைத்துக் கொண்டு செய்தால், அதில் எவ்வளவு பயன் இருக்கும் ?! அப்படிப்பட்ட ஒரு விஷயம் தான் - மகா கீர்த்தி வாய்ந்த டெக்ஸ் வில்லரின் மறுபதிப்புகள் - 5 இதழ்கள் !

சந்தா C - கருப்பு வெள்ளை மறுபதிப்புகள் - 17 இதழ்கள் ! 

1.டெக்ஸ் வில்லர் - 5 இதழ்கள் ! 
2.இரும்புக்கை மாயாவி - 3 இதழ்கள் !
3.குற்றச் சக்ரவர்த்தி ஸ்பைடர் - 3 இதழ்கள் !
4.C.I.D லாரன்ஸ் & டேவிட் - 3 இதழ்கள் !
5.ஜானி நீரோ & ஸ்டெல்லா - 3 இதழ்கள் !10.மிஸ்டர் மரமண்டை16 June 2015 at 10:20:00 GMT+5:30

தீபாவளி மலர் ! 

ஸ்பெஷல் இல்லாவிட்டால் நம் காமிக்ஸ் வாசகர்களுக்கு, இரவு சாப்பாட்டிற்கு உப்புமா பரிமாறியது போலாகி விடும் என்பதால் தான், ஒவ்வொரு வருடமும் நமக்கு அந்த ஸ்பெஷல், இந்த ஸ்பெஷல் என்று கிடைத்து வருகிறது. அதே நேரம் தீபாவளி கொண்டாடவும் ஒரு ஸ்பெஷல் அவர்களுக்கு தேவைப்படுகிறது. 

வீட்டுக்கு வீடு கம்ப்யூட்டர் வருவதற்கு முன்பெல்லாம், எல்லோர் வீட்டிலும் உள்ள அனைத்து சிறுவர்களுக்கும், தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரம் முன்பாகவே ஒரு துப்பாக்கியும், ரோல் கேப் பாக்ஸ் செட்டும் தவறாமல் வாங்கிக் கொடுத்து விடுவார்கள். அதை வைத்துக் கொண்டு அவர்கள், திருடன் போலீஸ் விளையாட்டை விளையாடுவார்கள். கட்டைச் சுவர் இருந்தால் அதில் ஒளிந்து கொண்டும், வீட்டின் நான்கு புறச் சுவர்களின் சுற்றிலும் ஒரே ஓட்டமாக ஓடி, மறைந்து, இடம் மாற்றிக் கொண்டும் ; வீதியில் கொட்டியிருக்கக் கூடிய செங்கல், மணல் குவியல்களுக்கிடையே குறுங்காலிட்டு அமர்ந்து, நிமிர்ந்து, எக்கிப் பார்த்தும் ; ஒளிந்து, மறைந்து, திடிரென தலை நீட்டி - டுமீல், டுமீல், டுமீல் என்று ஒருவரை ஒருவர் சுட்டுத் தள்ளுவார்கள். அந்த பாதிப்பு இன்னும் கூட அப்படியே இருப்பதால் தான், ஒவ்வொரு தீபாவளிக்கும் தல தீபாவளி கேட்கிறார்கள் என்று நினைக்கிறேன் :)

தீபாவளி மலர் - டெக்ஸ் வில்லர் - 300+ = 1 book 
என் பெயர் டைகர் - டைகர் ஸ்பெஷல் -  300+ = 1 book 

தீபாவளி மலராக, டெக்ஸ் வில்லரின் கதைகளை முழு வண்ணத்தில் போட்டு விட்டால் ஒரே கல்லில், ஒரு கொத்து மாங்காய் அடித்தது போல் ஒரே கொண்டாட்டமாக இருக்கும். செலவோடு செலவாக, தீபாவளி கொண்டாட்டமாக இந்த இரண்டு இதழ்களையும் நம் வாசகர்கள் வெற்றி பெற வைத்து விடுவார்கள். 

தீபாவளி கிப்ட் பேக் என்று ஒரு ஆப்ஷனை இரண்டு மாதங்களுக்கு முன்பே கொடுத்து விட்டீர்கள் என்றால், இதுவரை நம்மிடம் சண்டைப் போடாத உறவினர்கள் ; அலுவலக நெருங்கிய நண்பர்கள் ; மேலதிகாரிகள் ; காமிக்ஸ் படிக்காத நெருங்கிய குடும்ப நண்பர்கள் - இவர்களில் யாருக்கேனும் ஆர்டர் செய்து, அவர்களின் உறவையும், நேசத்தையும் நம்மால் தக்க வைத்துக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். அதை அவர்கள் படித்து தான் தீரவேண்டும் என்ற கட்டாயமில்லை ; நம்முடைய பிணைப்பை உறுதிப்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமைத்துக் கொள்ளலாம் !11.மிஸ்டர் மரமண்டை16 June 2015 at 15:23:00 GMT+5:30

சந்தா A ரெகுலர் ஸ்பெஷலுடன் (24)
சந்தா B கிராபிக் நாவல்கள் (6)
சந்தா C கருப்பு வெள்ளை மறுபதிப்புகள் (17)
சந்தா D திகில் கதைகள் (12)

ஏற்கனவே முந்தையப் பதிவில் நான் குறிப்பிட்டுள்ள நாயகர்கள் போக, மீதம் தற்போது வெளியீட்டில் உள்ள கதை வரிசைகள் தோராயமாக ; 

1.கமான்சே
2.மேஜிக் விண்ட்
3.தோர்கல்
4.டைலன் டாக்
5.டேஞ்சர் டயபாலிக்
6.ஸ்மர்ப் 
7.ப்ளுகோட் பட்டாளம்
8.லக்கி லூக்
9.சுட்டி லக்கி 
10.சிக் பில்
11.ரின் டின் கேன்
12.C.I.D. ராபின்
13.மாடஸ்டி பிளைஸி
14.ரிப்போர்டர் ஜானி
15.ஜில் ஜோர்டன்
16.ஜூலியா
17.ஜெரோம் 
18.மர்ம மனிதன் மார்ட்டின்
19.சாகஸ வீரர் ரோஜர்
20.வண்ண மறுபதிப்புகள் 
21.ஸ்டீல் பாடி ஷெர்லாக்ஹோம் 

அப்ப்பா.. இத்தனை விதமான டைட்டில் வைத்துக் கொண்டே, ஏன் விஜயன் சார்.. நீங்கள் புதுப் புது தொடருக்காக இத்தனை சிரமங்கள் மேற்கொள்கிறீர்கள் ?! இவை எல்லாவற்றிலும் ஒரு கால்வாசியாவது முடியட்டுமே சார் :-)12.மிஸ்டர் மரமண்டை16 June 2015 at 15:40:00 GMT+5:30

டியர் விஜயன் சார்,

அடுத்த ஆண்டு 2016ல் சந்தா எண்ணிக்கை மிகவும் குறைந்து, கொடவுன் ஸ்டாக் அதிகமாகி விட்டால் - வருகின்ற 2017ல் 

சந்தா A 24 x 70 
சந்தா B 17 x 70

என்று மட்டுமே வரையறுத்துக் கொண்டால் நெருக்கடிகள் அதிகமாகாமல் தடுக்கப்பட்டு விடும் எ.எ.கருத்து !

இயலுமானால் 2017 ஜனவரியில் இரத்தப் படலம் - முழுவண்ணத் தொகுப்பு அல்லது மூன்று தொகுப்பாக அல்லது Box set ற்கான அட்வான்ஸ் புக்கிங் ஓபன் செய்து விடுங்கள் சார். Customized imprints முறையில், வெறும் 300 எண்ணிகையிலான பிரிண்ட் ரன் அடக்கத்தில் - விலையை நிர்ணயம் செய்யுங்கள் சார் ! இது கட்டாயமல்ல சார், இப்படி அறிவிக்கா விட்டாலும் எனக்கு மகிழ்ச்சி தான் என்பதில் தாங்கள் எந்தக் குறையும் வைக்கவில்லை :-) 13.மிஸ்டர் மரமண்டை16 June 2015 at 21:21:00 GMT+5:30

Satishkumar S ://புதிய தேடலின் பலன் தான் இந்த 21 list என்பது உங்களுக்கு தெரியாதது அல்ல நண்பரே//
இதில் 7 மட்டுமே உண்மையாக இருந்தாலும், 2016க்கு இதுவே போதும் என்பதே என் கருத்து !

//சந்தா C கருப்பு வெள்ளை மறுபதிப்புகள் (17)?, நண்பர்கள் கோபப்படவேண்டாம் எனக்கு இந்த சந்தாவில் வரும் புத்தகங்கள் எந்த அளவிற்கு உற்சாகத்தை தருகிறது என்று புலப்படவில்லை, ஆரம்பிக்கும்போது இருந்த உற்சாகம் இப்பொது இந்த சந்தவிற்கு இல்லை என்பது என் கருத்து//

இது எங்களுடைய 25 வருட கனவு ; இது எங்களுடைய 3 வருட தவம் நண்பரே ! 

ஆரம்பிக்கும் போது எங்களுக்கு இருந்த உற்சாகத்தை விட தற்போது பலமடங்கு அதிகமாக இருக்கிறது. காரணம் தற்போது வரும் உயர்ந்த தரம் ; மாறுபட்ட சுவாரசியமான வாசிப்பு. உதாராணம் இராட்சஸக் குள்ளன் !

14.மிஸ்டர் மரமண்டை15 June 2015 at 15:22:00 GMT+5:30

mayavi. siva : உங்கள் கேள்விக்கான விடை மிகவும் எளிதானது. இருந்தாலும், என்னுடைய 'நான்... நமது... 2016..!' பதிவின் இறுதியில் பதில் எழுதுகிறேன். அதற்கு முன், இடர்பாடுகளும், மனஸ்தாபங்களும் எங்கே தோன்றுகிறது என்பதைப் பற்றி ஒரு பார்வை !

தமிழ் காமிக்ஸ் வாசகர்களின் மிகவும் நெருங்கிய நண்பராக, நம் ஆசிரியர் விஜயன், கடந்த மூன்று வருடங்களாக இருந்து வருகிறார் ; மிகப் பெரிய பலம் இதுவென்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தீவிர காமிக்ஸ் வாசகர்கள், தற்போது அதிகப்பட்சமாக ஆயிரம் மட்டுமே என்ற எண்ணிக்கையை உதாரணமாக கொள்வோம். இதில் எங்கே பிரச்சனை ஏற்படுகிறது என்று பார்த்தோமேயானால்..

ஆசிரியர் விஜயன், தான் வெளியிடும் அனைத்து காமிக்ஸும் - இந்த ஆயிரம் பேரின் இரசனைக்கும், ஒரு வருடச் சந்தா தொகை, இந்த ஆயிரம் பேரின் மாத, வருட பட்ஜெட்டிற்கும் ஏற்றதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடுக்கப்படும் முடிவுகளே ஒரு தடைக்கல்லாக இருப்பதாக நான் கருதுகிறேன். இது போன்ற முடிவுகளும், திட்டங்களும் நடைமுறைச் சாத்தியம் இல்லாத ஒன்று ! 

உதாரணமாக ஒரு ஹோட்டலுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள், அனைத்துப் பண்டங்களையும் ஒரே வேளையில் ஆர்டர் செய்து, முழுவதுமாக சாப்பிட்டு விட முடியாது என்பது எந்தளவுக்கு உண்மையோ, அந்தளவுக்கு அங்கிருக்கும் அனைத்து உணவு வகைகளும் அவர்களுக்கு  கண்டிப்பாக பிடித்தமானதாக தான் இருக்கும் என்பதும். தோசையை விரும்பிச் சாப்பிடுபவருக்கு இட்லி பிடிக்காமல் போகலாம் ; பரோட்டா தான் வேண்டும் என்பவர் பூரியை நிராகரிக்கலாம் ; பொங்கல் ஆர்டர் செய்பவருக்கு, உப்புமா பிடிக்காத உணவாக இருக்கலாம் !   ஆனால், அந்த ஹோட்டல் முதலாளி, தம் ஹோட்டலக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும், தம் ஹோட்டலில் உள்ள அனைத்து வகைகளையும் ருசித்துச் சாப்பிட்டு விட்டு தான் போகவேண்டும் என்ற பரந்த மனப்பான்மையில் விலைப் பட்டியலையும், உணவு வகைகளையும் நிர்ணயிப்பதும் நடைமுறை சாத்தியமில்லாத செயலாகவே கருத வேண்டும். ஒருவர், ஒரு நாளைக்கு ரூபாய் 100 மட்டுமே தனக்காக செலவு செய்யும் பட்ஜெட்டில் இருக்கலாம் ; இன்னொருவரின் பட்ஜெட் ஒரு நாளைக்கு ரூபாய் 300 ஆக இருக்கலாம் ; இன்னொருவர், வாய்க்கு ருசியாக நான் சாப்பிட எனக்குப் பணம் ஒரு தடையில்லை என்று நினைப்பவர், 1000 கூட செலவழித்து அவரின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள நினைக்கலாம். ஒரு மிகச் சிறந்த ஹோட்டல் முதலாளி என்ன செய்வார் என்றால் - அனைத்து வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யவே நினைப்பார். அடுத்த டேபிளில் ஆயிரம் ரூபாய்க்கு பில் வந்தால், நூறு ரூபாய் பில் கொடுப்பவரின் மனம் நோகுமே என்று - யாரையும் கட்டாயப்படுத்த மாட்டார் அல்லவா ?! அனைத்து வாடிக்கையாளர்களையும் தன்னுடைய சிறந்த சேவையால் மகிழ்விக்கும் அதே நேரத்தில், தனக்குண்டான வருமானத்தையும் அதிகரித்து, ஹோட்டலை நாளுக்கு நாள் விஸ்தரிக்கவே செய்வார் !15.மிஸ்டர் மரமண்டை15 June 2015 at 15:43:00 GMT+5:30

ஒன்றுமே வேண்டாம், ஒரு சாதாரண மளிகை கடையில் கூட குளியல் சோப்பு அல்லது ஷாம்பு எத்தனை எத்தனை அளவுகளிலும், எத்தனை எத்தனை வகைகளிலும் கிடைக்கிறது என்பது நமெக்கெல்லாம் நன்றாக தெரியும். உதாரணமாக ஒரு ஷாம்பு - ரூபாய் 3 லிருந்து 300 வரையும் ; long, strong, soft, dry, normal, dandruff, anti split - என்ற பல்வேறு வகைகளிலும் கிடைக்கிறது. இத்தனைக்கும் அந்த ஷாம்பு ஒரே ப்ராண்டு தான் எனும் போது, நம்மால் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். 

அத்தியாவசியத் தேவையே என்றாலும் ; ஒத்த ரூபாயே என்றாலும் - ஒரு வாடிக்கையாளர், கடையில் தொங்கும் அத்தனை வகை ஷாம்புகளையும் வாங்குவதில்லை. தனக்கு எது தேவையோ ; எவ்வளவு தேவையோ அதை மட்டுமே வாங்கிக் கொண்டு நடையைக் கட்டுகிறார். 

இன்றைய 1000 வாசகர்கள், நாளை 5000 வாசகர்களாக அதிகரித்தாலும், அவர்களின் தேவைகளையும், இரசனைகளையும் இதே உதாரணத்தைக் கொண்டு தான் அளவிட வேண்டும். அவரவர் இரசனைக்கு ஏற்ப ; அவரவர் பட்ஜெட்டிற்கு ஏற்ப தன்னுடைய சந்தாவை தேர்ந்தெடுத்துக் கொண்டு, அடுத்த சந்தா க்ரூப்பில் உள்ள தமக்குப் பிடித்த புத்தகங்களை மட்டும், கடைகளிலோ ; ஆர்டர் செய்தோ ; வாசக ஏஜெண்ட் நண்பர்கள் மூலமோ வாங்கிக் கொள்வதே எல்லாவற்றிற்கும் சிறந்த தீர்வாக அமையும் !

சந்தா A,B,C,D என்று நான்கு வகையாகப் பிரித்து விட்டால், வாங்கும் சக்தி கொண்டவர்களும், எல்லா வகை  காமிக்ஸையும்  விரும்பிப் படிப்பவர்களும் - இந்த நான்கிற்கும் ஒரு சேர சந்தா செலுத்தி விடட்டும். மற்றைய வாசகர்கள் தங்களின் மாத, வருட பட்ஜெட்டிற்கு ஏற்ப, சந்தாவை தேர்ந்தெடுத்துக் கொள்வதே சந்தைப் பொருளாதாரம் ஆகும்.

பக்கத்து வீட்டில் தினமும் ஒரு லிட்டர் பால் மட்டுமே போதுமானதாக இருக்கிறது என்பதால், என் வீட்டிலும் ஒரு லிட்டர் பால் தான் தினமும் வாங்க வேண்டுமா என்ன?! என் குடும்பத்திற்கான தேவை 4 லிட்டராகக் கூட இருக்கலாம் ; எனக்கு ஆவின் பாலை விட ஆரோக்கியா பால் அதிகம் பிடித்து இருக்கலாம் அல்லது அதன் பச்சமண் போன்ற விளம்பரம் என்னை ஈர்த்து இருக்கலாம் ; நானும் அதன் வாடிக்கையாளராக மாறி இருக்கலாம் ; இதெல்லாம்  அவரவர் தேவை மற்றும் மனம் சார்ந்த விஷயங்கள். இங்கே ஒருவருக்கொருவர் கட்டுப்பாடு விதிக்க வாடிக்கையாளர்களாகிய நமக்கு என்ன உரிமை இருக்கிறது நண்பர்களே ?!


Wednesday, 10 June 2015

டெக்ஸ் வில்லருடன் ஒரு பிரத்யேகப் பேட்டி !


மகா கீர்த்தி வாய்ந்த டெக்ஸ் வில்லருடன் ஒரு பிரத்யேகப் பேட்டி ! 

டிவி பெண் தொகுப்பாளினி : காமிக்ஸ் டிவி நேயர்களுக்கு இனிய மதிய வணக்கம். நேயர்களே, லயன் காமிக்ஸ் 250 வது மெகா இதழ் வெளியீட்டு விழாவை முன்னிட்டு, உலக தொலைக்காட்சிகளிலேயே முதல் முறையாக, இத்தாலியின் சூப்பர் ஸ்டார் - டெக்ஸ் வில்லர் அவர்களுடன், நம் காமிக்ஸ் டிவி, தலைமை நிருபர் மிஸ்டர் மரமண்டை அவர்கள் நடத்தும் நேர்காணலை, நேரடி நிகழ்ச்சியாக ஒளிப்பரப்புவதில் இந்த தமிழகமே பெருமை அடைகிறது. இதோ.. டெக்ஸ் வில்லருடன் ஒரு பிரத்யேகப் பேட்டி ஆரம்பமாகிறது...

அரிஸோனாவிலிருந்து மிஸ்டர் மரமண்டை : வணக்கம் நேயர்களே, இதோ.. மகா கீர்த்தி வாய்ந்த டெக்ஸ் வில்லர் வசிக்கும் அரிஸோனா மாநிலத்திலுள்ள, நவஜோ கிராமத்தின் எல்லைக்குள் நுழைகிறோம்... இங்கே டெக்ஸ் வில்லர் - தன் அல்லக்கை கார்ஸன், கைத்தடி செவ்விந்திய டைகர் ஜாக் மற்றும் தன்னுடைய, புகழ் ; வீரம் ; தீரம் ; பராக்கிரமம் ; வின்செஸ்டர் ; ரேஞ்சர் பேட்ச் ; மஞ்சள் சட்டை ; நீலப் பேண்ட் ; வாய்ச் சவடால் - ஆகிய அனைத்திற்கும் ஒரே வாரிசான, கிட் வில்லர் புடைசூழ கம்பீரமாக அமர்ந்திருக்கிறார்...


மி. ம : குட் மார்னிங் ஸார் ! நாங்கள் தமிழ் நாட்டில் இருந்து வருகிறோம்...
டெக்ஸ் : என்ன..?! அங்கேயும் சட்டம் ஒழுங்கு, கெட்டுப் போய் விட்டதா ?! நான் வந்து நீதியை நிலை நாட்ட வேண்டுமா ?!

மி.ம : ஐயய்யோ..!! அப்படியெல்லாம் இல்லை தலைவரே... அதுக்கு ஏற்கனவே அங்க, அம்மா இருக்காங்க ; அவங்க கூட, அம்மாவோட தளபதி, மிஸ்டர் வணங்காமுடி ஓ பி எஸ் ஐயா இருக்காருங்க !!

டெக்ஸ் : ஓஹோ..! அப்ப சலூன்ல ஏதாவது பிரச்சனையா ?!

மி.ம : மன்னிக்க வேண்டும் மிஸ்டர் வில்லர், எங்கள் ஊர் சலூன்களில் எல்லாம், செரைக்க மட்டுமே செய்வார்கள்.. 
இங்கே உள்ளது போல், குடித்துவிட்டு கூத்தடிக்கவெல்லாம் மாட்டார்கள் !!

டெக்ஸ் : அப்படின்னா சரிதான்.. ஹாங்.. ஏதாவது விருது கொடுக்க வந்தீர்களா என்ன ?!

மி.ம : திரும்பவும் மன்னிக்க வேண்டும் மிஸ்டர் வில்லர்.. ஏற்கனவே, எங்கள் ஊர் வெள்ளந்தி வாசகர்களில் சிலர், நடிகர் ரஜினிகாந்தின் - சூப்பர் ஸ்டார் பட்டம் ; நடிகர் அஜீத்தின் 'தல' பட்டம் ; நடிகர் கமலின் உலக நாயகன் பட்டம் ; சிவகாசியின் 'பட்டா..சு', சரவெடி பட்டம் - அப்படி இப்படின்னு, கண்ணு மண்ணுத் தெரியாமல் உங்களுக்கு அள்ளித் தெளித்து விட்டார்கள்.. இன்னும் பவர் ஸ்டார் ; சோலார் ஸ்டார் ; பர்னிங் ஸ்டார் - பட்டம் மட்டுமே பாக்கி !!

டெக்ஸ் : அடேய்... மரமண்டை... சீக்கிரம் விஷயத்திற்கு வருகிறாயா ? இல்லை, என் முஷ்டியை உன் முகரையில் இறக்கட்டுமா ?


மி.ம : ஐயா.. வேண்டாங்கய்யா.. ஒரு டிவி பேட்டிக்காக வந்திருக்கோமய்யா.. இந்தப் பேட்டியின்  மூலம் உங்கள் புகழ், சென்னை ; சேலம் ; தாராமங்கலம் ; ஈரோடு ;  தமிழ் நாடு ; பெங்களூரு ;   சௌத் இண்டியா ; மெயின் இண்டியா ; இந்தியப் பெருங்கடல் ; இமய மலை ; இலங்கை ; பங்ளாதேஷ் ; பாகிஸ்தான் ; ஆஸ்திரேலியா  ; நியூசிலாந்து ; நமிபியா ; வளைகுடா ; வெஸ்ட் இண்டீஸ் ; சௌத் ஆப்ரிக்கா மற்றும் கிரிக்கெட் விளையாடும் அனைத்து தேசங்களின், நீர், நிலப் பரப்புகளிலும் பரவும் என்ற உத்திரவாதத்தை அளிக்கிறோம் மிஸ்டர் வில்லர் !!

டெக்ஸ் : வாவ்..!! தட்'ஸ் க்ரேட்... ப்ளீஸ்.. டேக் யுவர் சீட் guys...

மி.ம : தாங்க்ஸ்.. முதல் கேள்வி.. தங்கள் ரசிகர்கள் அனைவருக்கும்,
விசிலடிச்சான் குஞ்சுகள் என்ற பட்டப் பெயர், நிலைத்து நின்று விட்டதே ?

டெக்ஸ் : ஓ... ஓக்லஹோமா !  விசிலடிக்கும் அளவிற்கு, என் ரசிக கண்மணிகளின் திறமை வளர்ந்து விட்டதா என்ன..?!

மி.ம : உங்களுக்கு ஆண் ரசிகர்கள் அதிகமா, இல்லை பெண் ரசிகைகளா ?
டெக்ஸ் : இதிலென்ன சந்தேகம், அவநம்பிக்கைப் பேர்வழியாக !?   எனக்குப் பெண் ரசிகைகள் தான் அதிகம் !

மி.ம : தாங்கள், கிட்டத்தட்ட 650 கதைகளில் வீரசாகசம் நிகழ்த்தி இருந்தாலும், மேல் அட்டையை மட்டும் கிழித்து விட்டால், எல்லா கதைகளும் ஒன்று போல் திகழ்வதாக, ஒரு பெண் ரசிகையே கூறி இருக்கிறாரே ?!

டெக்ஸ் : விரியன் பாம்பே... சாரி.. அதற்காகத் தான், மேல் அட்டைக் கிழியாமல் இருப்பதற்காக, ஒவ்வொரு புத்தகத்திற்கும், ப்ரௌன் ஷீட் அட்டைப் போட வேண்டும் என்று காலம் காலமாக கூறி வருகிறேன் !


மி.ம : துப்பாக்கிச் சண்டையின் போதோ ; கதையின் ஆரம்பத்திலோ நீங்கள், உங்கள் வின்செஸ்டர் மற்றும் ரிவால்வரில், தோட்டாவை நிரப்புவதே இல்லை என்ற பேச்சு பரவலாக அடிபடுகிறதே ?

டெக்ஸ் : இடியட்... தோட்டாவை நிரப்பும் கண நேரத்தில், எதிரி என் நெஞ்சுக்கு அல்லவா குறி வைத்து விடுவான் !?

மி.ம : ஒவ்வொரு கதையிலும் எதிரிகளை அடித்து, நொறுக்கி, துவைத்தெடுப்பது ஏன் ?

டெக்ஸ் : ஹா.. ஹா.. பழிவாங்கும் வெறியும், திமிரும், முரட்டுத்தனமும் என் நாடி ; நரம்பு ; ரத்தம் ; சதை ; புத்தி எல்லாவற்றிலும் ஊறிப் போய் இருப்பதே காரணம் என்பதை சொல்லவும் வேண்டுமோ ?!

மி.ம : மஞ்சள் சட்டையின் மர்மம் என்ன ?
டெக்ஸ் : அது மட்டும் தான், நீலக் கலர் ஜீன்ஸிற்கு மேட்சாக இருக்கிறது ! 


மி.ம : ஒவ்வொரு சாகசத்திலும், தவறாமல் குடிப்பதும்,
வயிறு முட்ட, வறுத்த கறியும் வேகவைத்த ஆப்பிளும் சாப்பிடுவது எதனால் ?

டெக்ஸ் : குட் கொஸ்டின்... நெக்ஸ்ட் கொஸ்டின் ப்ளீஸ்...

மி.ம : ப்ளீஸ்.. ஸார்... உங்கள் பரம ரசிகனான நானும், உங்களைப் போலவே மது, மாமிசப் பிரியனே...  

டெக்ஸ் : ஓகே.. தாகம் தணிக்கவே, அடிக்கடி  குடிக்கிறேன் !
நாவின் சுவை மாறாமலிருக்கவே, வறுத்த கறி  சாப்பிடுகிறேன் !
இன்னும் கொஞ்சம் தேவை என்ற எண்ணம் எழாமலிருக்கவே வேகவைத்த ஆப்பிளுடன் முடிக்கிறேன் !

மி.ம : டெக்வில்லாவை, ஏன் ராவாக குடிக்கிறீர்கள் ?
டெக்ஸ் : தண்ணீர் அல்லது சோடா கலந்து குடித்தால், அதிக ரவுண்டு குடிக்க வயிற்றில் இடமிருக்காது இல்லையா ?!


மி.ம : அடிக்கடி, கார்சனை, கேலி ; கிண்டல் ; நய்யாண்டி செய்து மட்டம் தட்டுவது பற்றி ?
டெக்ஸ் : என்னை விட அவன் தானே வயதில் பெரியவன் !? அதனால் தான் அவனை நக்கல், நய்யாண்டி செய்கிறேன் !

மி.ம : கார்ஸனுக்கு, ஏன் கல்யாணம் செய்து வைக்கவில்லை ?!
டெக்ஸ் : கார்ஸன்  என் மாமனா ? மச்சானா ? யாரைக்  கேட்கிறாய் ? கார்ஸன் என் உயிர் நண்பன் மட்டுமே...

மி.ம : இருந்தாலும்...

டெக்ஸ் : அந்த வீணாப் போன லீனாவை, அன்றே திருமணம் செய்து தொலைக்காமல், 
எனக்கு அவப்பெயர் வாங்கிக் கொடுப்பதிலேயே குறியாக இருக்கும், அவநம்பிக்கை கெழடு அவன் !   

மி.ம : தங்கள் மகன் கிட் வில்லருக்கு கூட கல்யாணம்...

டெக்ஸ் : நானா வேண்டாம் என்றேன் ?! எனக்கு ஜாதிப் பெருமை தான் முக்கியம்... 
எப்படி அந்தப் பண்ணை முதலாளி அவனை அரை ஜாதிப் பயல் என்று கூற முயலுவான்  ?! 


மி.ம : உங்கள் கதையில் வரும் அமானுஷ்யங்கள் உண்மையா ?!

டெக்ஸ் : அவை உண்மையா பொய்யா என்பது ஒரு புறம் இருக்கட்டும்..
அவைகள் கதையில் சேரும் போது, கதை விறுவிறுப்பாக நகர்கிறது அல்லவா ?!

மி.ம : உங்கள் லட்சியம் என்ன ?

டெக்ஸ் : என்றென்றும் தலைவனாகவே இருப்பது !
அதற்காகவே, இந்த நவஜோ கிராமத்தை விட்டு விலகாமல் இருக்கிறேன் !

மி.ம : கடைசியாக, கேப்டன் டைகரை பற்றி ?

டெக்ஸ் : பெட்டி நிறைய தங்கம் கிடைத்தும் பிழைக்கத் தெரியாதப் பயல்..
வெறுங்கையில் முழம் போடும் என்னைப் பார்த்தாவது, அவன் திருந்த வேண்டும் ! மி.ம : வணக்கம் நேயர்களே, இது வரை, மகா கீர்த்தி வாய்ந்த டெக்ஸ் வில்லர் அவர்களுடன் நடந்த நேர்காணலை நீங்கள் அனைவரும் கண்டு மகிழ்ந்திருப்பீர்கள்... நான், தமிழ் நாட்டில் இருந்து கிளம்பும் போதே, நம் டெக்ஸ் வில்லரின் அதி தீவிர இரசிகப் பட்டாளங்களின் பெயர்களையும், அவர்களின்  குணாதிசியங்களையும் விலாவாரியாக எழுதி, டெக்ஸ் வில்லருக்கு, ஈ மெயில்  செய்திருந்தேன்.   அதன் அடிப்படையில் அவருடன் ஒரு கலந்தாய்வு - ஒரு சிறிய விளம்பர இடைவெளிக்குப் பிறகு...

தாகம் தணிக்க !!

நாவின் சுவை மாறாமலிருக்க !!

வயிறு திம்மென்று இருக்க !!

டிவி பெண் தொகுப்பாளினி : வெல்கம் பேக் நேயர்களே.. தற்போது நமது மேன்மை தாங்கிய டெக்ஸ் வில்லர் அவர்கள், எதிர் வரும் லயன் 250 இதழ் வெளியீட்டை முன்னிட்டும், ஈரோடு புத்தகக் கண்காட்சியை முன்னிட்டும், தம்முடைய, தமிழ்நாடு டை ஹார்ட் பேன்ஸ்-க்கு மெஸ்ஸேஜ் கொடுக்கப் போகிறார்... 

மி.ம : குட் ஆப்டர்நூன் மிஸ்டர் வில்லர், என் கையில் உள்ள பெயர் பட்டியலை ஒவ்வொன்றாகப் படிக்கட்டுமா ?

டெக்ஸ் : நோ.. நோ.. கிவ் இட் டு மை சன் கிட் வில்லர் !

மி.ம : கிட்டு சார்..  இதோ..  டெக்ஸ் வில்லரின், தமிழக விசிறிகளின் பெயர் பட்டியல் !
கி.வி : டாடி.. மொத்தப் பெயரையும் படிக்கட்டுமா ?
டெக்ஸ் : இடியட் .. உனக்கு செயல் வேகம் போதாது கிட் ! ஒவ்வொரு பெயராக படிக்கவும்  !!கி.வி : டாடி.. முதல் பெயர்.. சலாம் பாபு ! 

டெக்ஸ் : முன்பக்க அட்டை ; பின்பக்க அட்டையைப் போட்டு அச்சடித்த, பிட்டு நோட்டீஸ் மூலம் நம் காமிக்ஸ் வாசகர் வட்டத்தை இவர் விரிவாக்க வேண்டும் ! கி.வி : டாடி.. இரண்டாவது நபர்.. ஆற்காடு நவாப் !

டெக்ஸ் :  புத்தகக் கண்காட்சி நடக்கும் 12 நாட்களும், தீமையை அழிக்கும் மஞ்சள் சட்டை சகிதம் வலம் வர வேண்டும் !கி.வி : டாடி.. மூன்றாவது ரசிகர்,  இளைஞரணி - செயலாளர் அஜய் !

டெக்ஸ் : ஈரோட்டு புத்தகக் கண்காட்சிக்கு வெகு அருகாமையில், ஒரு சலூனை வாடகைக்கு எடுத்து, கண்காட்சிக்கு வரும் நம் காமிக்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் -    டெக்வில்லா ; வறுத்த கறி ; வேகவைத்த ஆப்பிள் யாவும் தங்குத் தடையின்றி கிடைக்க ஆவன செய்யட்டும் !கி.வி : டாடி.. நாலாவதா.. மாணவரணி தலைவர் - தங்கதொர ! 

டெக்ஸ் : இவர், தம் தலைமைப் பதவிக்கு சற்றொப்ப, ஈரோடு நகர, பிரதான வீதியெங்கும், என் 60 அடி உயர பேனரை  வைத்து, எனதருமை ரசிக கண்மணிகளை வரவேற்க வேண்டும் !கி.வி : டாடி... மேட்டுக்குப்பம் ராதாரவி !

டெக்ஸ் : நோ ப்ராப்ளெம் மை சன்... சேந்தமங்கலம் கரகாட்ட கோஷ்டியில், தாராளமாக, தனி தவில் வாசிக்கட்டுமே !கி.வி : டாடி... மருத்துவர் ஐயா !    

டெக்ஸ் : ஒரு பெரிய சாக்குப் பையை எடுத்துச் சென்று, இருப்பதில் எல்லாம் ஐந்து செட் புக்ஸ் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.. பிறகு, அடிக்கடி கிப்ட் கொடுக்க சௌகரியமாக இருக்கும் !


கி.வி : டாடி... பேய் பிசாசு நரபலியார் !

டெக்ஸ் : காலம் காலமாக, வாசகர்களுக்கு வெறுமனே பூச்சாண்டிக் காட்டாமல், இம்முறையாவது ஒரு இரத்த பலி கொடுத்து, புத்தகத் திருவிழாவை அட்டகாசமாக்க வேண்டும் !கி.வி : டாடி... எட்டாவது வாசகர் மயிலாடுதுறையார் !

டெக்ஸ் : தம் எல்லைக்கு உட்பட்டு வரும் கடிதங்களின் மேல் ஒட்டப்பட்டுள்ள தபால்தலை மீது, தபால் முத்திரை குத்தாமல், தபாலின் பின் பக்கத்தில் முத்திரை குத்த ஏற்பாடு செய்து, இந்த விழா நடைபெறும் 12 நாட்களும் விமரிசையாக கொண்டாட வேண்டும் ! நெக்ஸ்ட் ...


கி.வி : அவ்வளவு தான் டாடி... 

கார்ஸன் : அட.. இவிங்க மட்டும் தானா, நம்ப அடாவடி ரசிகப் பயலுக !?  இந்த இதுக்கே ப்ளாக் ல, இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்களே  ?! போங்கப்பா.. போய் .. குறைந்தப்பட்சம் ஒரு பத்து பேரையாவது சேர்த்து, டெக்ஸ் வில்லர் ரசிகர் மன்றத்திற்கான அங்கீகாரம் ரத்தாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் !


Wednesday, 24 December 2014

வல்லவர்கள் வீழ்வதில்லை..!

நண்பர்களே,

வணக்கம். நமக்குச் சில விஷயங்கள் பிடிக்கும் போது அதை வழக்கமாக ஏற்படுத்திக் கொள்கிறோம் ; வழக்கம் தொடர்ந்து நடைபெறும் பட்சத்தில் அதுவே பழக்கமாகிறது ; பழக்கம் அதிகமாக, அதிகமாக அது நம்மை பழக்கத்திற்கு அடிமைப் படுத்துகிறது. அந்நிலையில் நம் வாழ்கையின் சிறந்த காரணி அதுவென்றோ, அது இல்லாவிட்டால் வாழ்க்கையே சூன்யம் என்றோ அதன் வழி தொடர்ந்து கவலைப்படுகிறோம். சில காலங்களில், சில காரணிகளின் பிடிப்பின்றி தம் வாழ்வே இல்லை எனும் நிலையைக் கூட எடுத்து விடுகிறோம் ; மாற்றுக் கருத்துக்கு அங்கே இடமே இல்லாமல் மதிமயங்கி புத்தி பேதலிக்கிறோம். ஆனால், ஏதோ ஒரு காரணத்தினால் காலம் இடைவெளியை ஏற்படுத்தும் போது, அதுவரை உயிரை, அனுதினமும் மாய்த்து வந்த காரணி கேலிக்குரியதாகி விடும் ; நம்மை நினைத்து நாமே நகைக்கும் அளவிற்கு கேலிப்போருளாகி  விடும் ! அதற்கு நம்மிடையே சமீபத்திய மிகச் சிறிய உதாரணமாக திகழ்வது தான் நித்தமும் காமிக்ஸ் கமெண்டு போடுவது. காமிக்ஸ் கமெண்ட் போடாவிட்டால் தூக்கம் இல்லை ; காமிக்ஸ் கமெண்ட் படிக்காவிட்டால் நிம்மதி இல்லை என்ற நிலைமை - கொஞ்ச நாள் ஒதுங்கி இருந்தால், இவ்வகை எண்ணங்கள் இருந்த இடம் தெரியாமல் காற்றில் கரைந்த கற்பூரமாக மட்டுமே மணம் வீசி ஒரு ஓரமாக நின்று, பிறகு சென்றே விடுகிறது ! 

தான் செய்யும் வினையிலிருந்து யாருமே தப்புவதில்லை ; நற்செயலாக இருந்தாலும், தீச்செயலாக இருந்தாலும் அதன் பலன்கள் ஒவ்வொருவருக்கும் உடனக்குடன் நடந்தே வருகிறது. ஆனால் தான் செய்த செயலுக்கான பலன் தான் இதுவென்று பகுத்தறிய தெரியாத காரணத்தால் தான் ஒரு மனிதன், மீண்டும், மீண்டும் அதே தவறை தொடர்ந்து செய்கிறான். துவேஷம் கொண்டு இன்னொருவரை  தூஷிப்பதால்,  அதன் துர்ப்பலன் பத்து மடங்கு அதிகமாக தன்னையும், தன் சிறிய குடும்பத்தையும் தாக்குவதை அவன் உணரும் வேலையில், மீண்டும் ஒரு முறை அது போன்ற வக்கிரம் அவன் மனதில் வரவே வராது என்பது சத்தியம் ! அதுவரை தன் நிலைக்கெட்டு, தரம்தாழ்ந்து அடுத்தவரை சாடுவதில் சிற்றின்பம் கொள்கிறான் !

சமீபத்தில் என்னை சிந்திக்க வைத்த ஒரு விஷயம் ரொம்பவே சுவாரசியமானது..
''டெக்ஸ்வில்லர் காமிக்ஸில் கதை இருந்தால் என்னால் ரசிக்க முடியவில்லை'', ஏனெனில்
//"உண்மையிலயே நான் இன்னும் வளர வில்லை"//  என்று     

தலைவர்    தாரை தப்பட்டை அவர்கள் கூறி இருக்கிறார். உடனே அதற்கு பதிலளித்து,

சாந்த சொரூபியான மதுரை அரவிந்தர்   அவர்கள் இவ்வாறு  கூறுகிறார் :-

//ஆமாம், நானும் இன்னும் வளரவே இல்லை..
கிராபிக் நாவல் எனக்கு நன்றாக புரிகிறது.
அது உண்மையா? அல்லது தவறான புரிதலா? என்று தெரியவில்லை.
இல்லை புரிந்த மாதிரி நடிக்கிறேனா என்பதும் தெரியவில்லை.//

என்ன கொடுமை கார்சன் இது..? இதையெல்லாம் டெக்ஸ் வில்லர், தன்னுடைய  குதிரையில் வந்தா துப்பறிய முடியும்..?! இன்னும் வளரவே வளராத சின்னப் பையன்களின் கூட்டத்திலேயா நாம் குப்பைக் கொட்டுகிறோம் என்று நினைக்கும் போது, காமிக்ஸ் வாசிப்பு என்பது சற்று நெருக்கத்தை இழப்பதாகத் தோன்றுகிறது. ஹ்ம்ம்.. காமிக்ஸ் என்பது நம் ஊரில், இன்னும் கூட சின்னப் பிள்ளைகள் சமாச்சாரம் தான் போலிருக்கிறது :( (இவையனைத்தும் ஜாலியான கருத்துகள் மட்டுமே)  


வல்லவர்கள் வீழ்வதில்லை..! கதை விமர்சனம் :)

அனுப்புநர் :-

Addiction வில்லர் க்ரூப்,
செத்தாண்டா சேகரு உள் அரங்கம் (AC),
தென்சென்னை.


பெறுநர் :-

டெக்ஸ் வில்லர் ரசிகர் மன்றம்,
மொபைல் கலாய்த்தல் பிரிவு, 
NH 47.

உடன்பிறப்பே,

நானும் ஒரு தீவிர டெக்ஸ் ரசிகன் தான் என்பது நீயும் அறியாததல்லவே ! ஒவ்வொரு கதையிலும் தவறாமல் காணக் கிடைக்கும் பாலை நிலமும், பாழுங் கணவாயும் ; கொத்திவிடும் விரியனும், சுட்டுவிடும் விரோதியும் - என்னை கதி கலங்க செய்பவை.. போலவே, தாக சாந்திக்கு ராவான விஸ்கியும், சைட் டிஷ்ஷிற்கு பக்குவமான வறுத்த கறியும், வேகவைத்த ஆப்பிளும், வேகமாய் இழுத்து விடும் ஸ்மோக்கிங்கும் என்னை மதி மயங்க செய்பவை என்பதில் உனக்கேதும் மாற்றுக் கருத்து இருக்கிறதா என்ன.., என் உடன்பிறப்பே ?!

வல்லவர்கள் வீழ்வதில்லை கதையை நானும் படித்தேன், அற்புதமான கதைக் களம் ; அருமையான கதை ; சுவாரசியமான நடை என உன்னைப் போலவே நானும் இரண்டு நாட்கள் புளகாங்கிதம் அடைந்தேன். நாலு இட்லி ஒரு வடைக்கு, திருடப்பட்ட கதையில் கல்லா கட்டிய லாடு லபக்குதாஸின் சுத்தி  படம் போலவே, தோராயமாக, நானூறு டாலருக்கு வாங்கிய கேப்டன் டைகரின், மின்னும் மரணம் கதையின் உட்டாலக்கடி கதையே இதுவென்று எதிர் அணியினர், பசப்பும் தம் வார்த்தைகளை, விஷம் தோய்த்த செவ்விந்திய அம்பாய் உன்னை நோக்கி எய்துவார்கள், தயவு செய்து உன் தலை கொடுத்து, என் ''தல''யை இழந்து விடாதே உடன்பிறப்பே..!

சரி, கதைக்கு வருவோம்.. அமெரிக்க அரசாங்கத்தின் நீதி பரிபாலனம் தனக்கு ஒத்து வரவில்லை என்ற காரணத்தால் கையில் ஒத்தை டாலரோடு, மெக்ஸிகோ' வில் நாடோடியாக ஒதுங்கும் டெக்ஸ் வில்லர், தம்முடைய பாச்சாதாபத்தைச் சம்பாதிக்கப் படாத பாடு படுகிறார். தெரியாமல் தான் நான் கேட்கிறேன், அமெரிக்காவின் நீதி பரிபாலனமே இவருக்காக மாற்றி அமைக்க வேண்டும் என்று இவர் எதிர்பார்க்கும் அளவிற்கு இவர் என்ன.. அவ்வளவுப் பெரிய அப்பாடக்கரா..?!  ஒருக்கால் ஜனாதிபதி தேர்தலுக்குப் போட்டியிட்டாரா? அல்லது செனட்டராகத் தான் பதவி வகித்தாரா? உடன்பிறப்பே, இதையெல்லாம் நீ கவனிக்க மாட்டாயா..? உண்மைதான் உனக்கெங்கே நேரம் இருக்கப் போகிறது? ஒரு ப்ளேட் மட்டன் பிரியாணிக்கும், இரண்டு ப்ளேட் அவிச்ச முட்டைக்கும் அடங்கிப் போகும் ஆத்மா தானே நீ..? (தயவு செய்து மற்ற நண்பர்கள் அனைவரும் என்னை மன்னிக்கவும்) 

சரி, அது தான் போகட்டும் என்று பார்த்தால், கதையின் நாயகன் ஷான் ஓ டான்னெல் தான் என்று, காமிக்ஸ் வாசகர்கள் எங்கும் பரவலாகப் பேசிக் கொள்கிறார்களே? அதாவது உனக்குத் தெரியுமா? தேசப்பக்தியிலும், தோழமையிலும், வீரத்திலும், அர்ப்பணிப்பிலும், தியாகத்திலும், நட்பிலும் - ஷான் கதையெங்கும் ஓடும் இரத்தநாளங்களாய்  வியாபித்து, காமிக்ஸ் வாசகர்கள் மனமெங்கும் நிறைந்து விட்டதை நீ அறிந்தால், இது ஒரு டெக்ஸ் வில்லர் கதையென்றே கூற மாட்டாய் :P 

பத்து வருடத்துக்கு முந்தைய ஒரு பழைய கடிதத்தின் தேதியை திருத்தியும், உள்ளூர் போலீஸுக்கு பயந்து, போக்குக் காட்டியும் 10, 20 பக்கங்களைக் கபளீகரம் செய்யும் ஹீரோயிஸத்தையா   உன்  பாசத் தலைவனிடம் எதிர்பார்த்தாய்? ஐயகோ.. நகைப்புக்கு இடமளித்து விட்டாரே உன் Super star..? 

கதையின் ஒரு கட்டம் ரொம்பவே என்னைப் பாதித்தது உடன்பிறப்பே..  ''உன் மென்னியை முறிக்க நான் வெறிகொண்டு அலைந்த காலம் ஒன்று உண்டு! ரேஞ்சர்! அது மெய்ப்படாமல் போனது நான் செய்த புண்ணியம்'' என்று  - க்ரேடி கூறிய அடுத்த நொடியில் அவனைப் பலிக் கொடுத்து விட்டு வேடிக்கைப் பார்க்கும் உன் தானைத் தலைவனை எவ்வளவு திட்டினாலும் தகும் என்று நீயும் தானே நினைக்கிறாய்..? வெட்டிப் பேச்சு வேலைக்கு ஆகாது.. ஓவர் ஷோ ஒடம்புக்கு ஆகாது.. என்று, யாராவது டெக்ஸ் வில்லரிடம் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம் !

டைகர் கதைக் களத்தில் நுழைந்ததும் அல்லாமல், இரண்டு கதாநாயகர்கள் ரோலில், இரண்டாம் நாயகனாக நடித்ததும் அல்லாமல், கடைசி 73 பக்கங்கள் முழுவதும் டுமீல் ! டுமீல் ! டுமீல் ! டுமீல் ! டுமீல் ! டுமீல் ! டுமீல் ! டுமீல் ! டுமீல் ! டுமீல் ! டுமீல் ! டுமீல் ! என்று ஒரே தலைவலி ! துப்பாக்கிச் சத்தத்தில், இரண்டு நாட்கள் காது இரண்டும் சரியாக கேட்கவே இல்லை என்றால் நீயே பார்த்துக் கொள் என் உடன்பிறப்பே...

ஹ்ம்ம்.. என்ன  சொல்லி என்ன பயன்? உனக்குப் புரியவா போகிறது? வறுத்த கறி சாப்பிடச் சொன்னால் வாண்டடாக வண்டியில் ஏறி வடதிசை நோக்கிப் பயணிக்கும் நீ, தென்திசையில் நடந்தேறிய இந்தக் கூத்துக்கு செவி சாய்க்கவா போகிறாய்? எல்லாவற்றையும் ஜீரணிக்கும் உன்னால் இதுபோன்ற கடுமையான விவாதங்களை ஜீரணிக்க முடியாது என்று எனக்கும் தெரியும். நான் உன்  நலனுக்காகத் தான் சொல்கிறேன், இனியும் அந்த டைகர் பயலைக் கனவிலும் கலாய்க்க நினைக்காதே... மின்னும் மரணம்  என்ற மகா காவியம் விரைவில் வரப்போகிறதாம் என் உடன்பிறப்பே.. என்ன செய்யப் போகிறாய்? ஒன்று செய்,  பேசாமல் நாலைந்து மாதம் எங்காவது சென்று மறைந்து கொள், முக்கியமாக 1200+ மெம்பர்ஸ் உள்ள Facebook க்ரூப் ல் பெரிய அப்பாடக்கர் போன்று கமெண்டு போடாதே ; WhatsApp க்ரூப் ல் எதையாவது படித்து விட்டு வெளியில் போய் நக்கல் செய்யாதே ! ஏதோ நீயும், நானும் டெக்ஸ் ரசிகன் என்ற தோழமையில் உரிமை கொண்டு இந்தக் கதை விமர்சனத்தை எழுதி விட்டேன். டெக்ஸ் வில்லர் என்றாலே இரணகளம் தான் என்பதில் இனியும் நீ மாற்றுக் கருத்து கொள்ளப் போகிறாயா என்ன ? :))

பின்குறிப்பு : நண்பர்களே,  இது ஒரு ஜாலியான கலாய்த்தல் பதிவு மட்டுமே.. தயவு செய்து யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாமே.. ப்ளீஸ்..! விமர்சனம் செய்ய வேண்டும் என்றால் இரண்டு நாட்களுக்குள் செய்து விடுங்கள்.. பதிலளிக்க தயாராக இருக்கிறேன்.. பிறகு வந்து, பூட்டிய வீட்டிற்கு முன் சத்தம் எழுப்பினால் பயன் இருக்காது நண்பர்களே ! நன்றி ! நன்றி !