Follow by Email

Sunday, 28 July 2013

அடிடா பொடியா !

ஹாட்லைன்: ஒவ்வொரு நாட்டுக்கும் எப்படி அதன் வரலாறு முக்கியமோ அதுபோல் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவன் கடந்து வந்தப்  பாதை முக்கியமானதாகும். தன் சொந்த அனுபவ அறிவுக்காக மட்டுமல்லாமல்  மற்றவர்களின் சந்தேகத்தை நீர்த்துப் போக வைக்கும் சஞ்சீவி ஆவணமாக அவனுடைய வரலாறு முக்கியமாக பாதுக்காக்கப்பட வேண்டிய ஒன்றாகவே  உள்ளது ! எனவே ஒன்றுமில்லாத விஷயத்திற்கு ஊரை கூட்டி தம்பட்டம் அடித்த இந்தப் பதிவுகளையும் ஒரு பதிவாக இங்கு பதிவிடுவதே சாலச் சிறந்ததாகும் !

அடிடா பொடியா ! டம்! டம்! டம்! 

ஷார்ட்லைன்: கீழே உள்ள  சிக்பில்லின் இந்த கதையிலிருந்தே 'அடிடா பொடியா' காப்பி அடிக்கப்பட்டது !

ஷாட்லைன்:  இந்தப் பதிவுகள் அனைத்தும் லயனின் நினைவுகளுக்கு வயது நாற்பது -  பதிவில் இருந்து எடுக்கப்பட்டது !

1.மர மண்டை19 November 2012 10:50:00 GMT+5:30

மீ த செவன்டி ஃபோர்த், பின்னிட்டீங்க தல! 

அடிடா பொடியா !  டம்! டம்! டம்!


தங்களின் தரத்திற்கும் ; தங்களின் நேர்மைக்கும் ஒப்பீடாக தமிழ் காமிக்ஸ் உலகில் இதுவரை யாரும் இருந்தததில்லை. இனி யாரும் வரப்போவதுமில்லை!

அடிடா பொடியா ! டம்! டம்! டம்!


சிங்கம் எப்பொழுதும் சிங்கிளாத்தான் வரும் ! அது எழுந்து நடந்து வரும்போதுதான் அதன் கம்பீரம் மத்தவங்களுக்கு தெரியும்!

அடிடா பொடியா ! டம்! டம்! டம்!


பெரிய அப்பா-டக்கராக இருப்பதைவிட ஒரு காமிக்ஸ் வாசக ரசிகனாக இருப்பது செம டக்கரான விஷயம்! 

அடிடா பொடியா ! டம்! டம்! டம்!2.Vijayan 20 November 2012 22:18:00 GMT+5:30 

மர மண்டை : 74th ஆக வந்தே இந்தப் போடு போடுகிறீர்களே....!!

நம் பயணத்தில் இன்னும் எக்கச்சக்கமான தூரம் பாக்கியுள்ளது... அதன் நீளத்திற்கும் நான் ஒரு வாசக-ரசிகனாகவே இருந்திட்டால் அது எனது blessings ஆக இருந்திடும் ! Touch wood...


3.மர மண்டை20 November 2012 11:34:00 GMT+5:30


ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்: 

லேட்டா வந்தாலும் ரொம்ப லேட்டாத்தான் வந்திருக்கிறேன். இதெற்கெல்லாம் பன்ச் டயலாக் தேடிக்கிட்டிருந்தா இன்னும் லேட்டாகும். எங்கே   என்னோட ரசனையை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிட்டா இது மறை கழண்ட கேஸுனு நெனைச்சிடுவாங்கனு உள்ளுக்குள்ள ஒரு பயம்தான் வேறொன்னுமில்லை. அதனாலதான் 2 நாளு பொறுமையாக மிகுந்த பதட்டத்துடனும், பரபரவென்ற மனநிலையிலும், அமைதியிழந்த நிலையிலும் நிம்மதியாக இருந்தேன் ! ஆனா, அதுக்குள்ளே தலைவர் வேற ஒரு பதிவப்  போட்டுட்டா இந்தப் பக்கம் யாரும் எட்டிக் கூட பார்க்க மாட்டார்கள் என்பதால்தான் திடமனதுடன் இதைப் பதிவிடுகிறேன். லேட்டா வந்தாலும் ஒரு அட்வான்டேஜ் இருக்கத்தான் செய்கிறது. end, page down, load more செய்யும்போது கடைசியில் இருக்கும் பதிவை ஒரு பத்து பேராவது ''படித்து பார்ப்பாங்க மன்னிக்கவும் பார்த்து படிப்பாங்க''. அந்த பத்து பேருக்கு இப்பவே என் நன்றியை தெறிவித்துக் கொள்கிறேன்! நன்றி நண்பா மிக்க நன்றி !

பி.கு : ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம் - இப்படியாவது ஆசிரியரின் கவனத்தை ஈர்க்க முடியுமா என்ற நப்பாசைத்தான் காரணம் :) யாருமே  படிக்கலனா எழுதறதே சிரமம் சார் :)


4.Vijayan20 November 2012 22:35:00 GMT+5:30 

மர மண்டை : கவலையே வேண்டாம்...வார இறுதி வரைக்கும் அடுத்த பதிவிட எண்ணமில்லை ! அது மட்டுமல்லாது, உங்கள் பதிவுகளை நாங்கள் அனைவருமே படிக்கத் தான் செய்கிறோம் ! So தொடர்ந்து எழுதுங்கள் ! 


5.மர மண்டை22 November 2012 15:13:00 GMT+5:30


part :10

ஒரு முக்கிய அறிவிப்பு!

part, part ஆக எழுதி பாடி பார்ட், பார்ட் ஆக கழண்டு போயிருந்தாலும் பலரின் நன்மைக்காக, வேறு வழியே இல்லாமல் மிகுந்த சிரமத்தில் எழுதும் பின்னூட்டம் இது. பற்பல காரணங்களால் part.4 கைவிடப்பட்டுள்ளது. அதே போல் விஷயமே இல்லாவிட்டாலும் உரக்கக் கத்தி ஊரைக் கூட்டிய இந்தப் பின்னூட்டத்தையும், அதாவது part.10 - யும் தயவு செய்து அன்பர்கள் படித்து அவர்களின் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் !

இவண்;

மரமண்டை 

X111.வெஸ்டர்ன் அவென்யூ,

கார்ட்டூன் பட்டி,

விஜய நகரம்,

காமிக்ஸ் நாடு, மாய உலகம்.600 007.6.மர மண்டை24 November 2012 06:38:00 GMT+5:30

புனித சாத்தான்: பெரிய மனசு பண்ணி என்னையும் தங்களின் நூற்றாண்டு விழாவுக்கு அழைத்தமைக்கு மிகவும் நன்றி! கட்டாயம் இன்னும் 61 வருடம் கழித்து அந்த விழாவுக்கு வருவேன். உங்களைச்  சந்திக்கும் அந்த இனிய நன் நாளை எண்ணி இந்த நொடி முதல் காத்திருக்க ஆரம்பித்து விட்டேன்! அதற்கு முன் தங்களுக்கும் ஒரு அழைப்பிதழ்  அனுப்பியுள்ளேன். வருகின்ற ஞாயிறு அன்று மிகப்பெரிய பாராட்டு விழா ஒன்று நடைப்பெற இருப்பதால் தாங்களும் தங்கள் அருமை நண்பர்களும் வந்திருந்து என்னையும் வெற்றிவாகை சூடிய அன்பர்களையும் கௌரவிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ! இந்த அழைப்பிதழயே எல்லோருக்கும் பொதுவானதாக கருதி அனைவரும் தவறாமல் வருகை தர விழைகிறேன் ! இது ஒரு தனி வகைப்பட்ட பாராட்டு விழா என்பதால் தங்களால் என்ன என்று யூகிக்க கூட முடியாது என்று சவால் விடுகிறேன் ! 7.saint satan 24 November 2012 07:32:00 GMT+5:30

நான் யூகித்துவிட்டேன் நண்பரே.அன்று தான் உங்களுக்கு அறுபதாம் கல்யாணம்.வாழ்த்த வயதில்லை.வணங்குகிறேன் தாத்தா அவர்களே.8.மர மண்டை24 November 2012 08:15:00 GMT+5:30

புனித சாத்தான்: நீங்கள் என்னை இப்படி என்னதான் பாராட்டி மரியாதை செய்தாலும், என்ன விழா என்று அறிய ஞாயிறு வரை காத்திருக்கத்தான் வேண்டும். பலர் படிக்கும் இந்த தளத்தில் என் எழுத்தை இவ்வளவு பாராட்டி உள்ளீர்களே உண்மையிலேயே நீங்கள் தைரியசாலிதான் ! ஆனால் என் எழுத்து இன்னும் தங்களின் எழுத்தை விட கத்துக்குட்டி தான் ; தங்களின் எழுத்தே முதிர்ச்சி அடைந்த ஒன்று :D


லாஸ்ட்லைன்: யாருமே படிக்காமல் இருப்பதை எழுதுவதில் பிரயோஜனமுமில்லை, அதற்காக  நாம் எழுதாமல் இருப்பதிலும் அர்த்தமுமில்லை ! அடிடா பொடியா ! டம்! டம்! டம்! 

Saturday, 27 July 2013

மறுபதிப்பு !

1.மர மண்டை10 November 2012 17:16:00 GMT+5:30

இதுவரை மறுபதிப்பு கேட்ட நண்பர்கள் அனைவருக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம் !

வறுமையில் வாட்டம் ; தொழிலில் போராட்டம் ; கடனில் தள்ளாட்டம் ; வாழ்வதே ஒரு கரகாட்டம் என வாழ்க்கையில் சற்று இளைப்பாறவே ஐந்தாவது எட்டை தொட்டு விடுகிறோம். அப்பொழுதும் வாழ்க்கை என்னும் வழக்காடு மன்றத்தில் நம் வாதம் வெற்றிப்  பெறுவதில்லை. வாதம் செய்து கொண்டே நம் வாழ்க்கைப் பயணம் முடிந்து விடுகிறது ! இந்தக் கால வெள்ளத்தில் முகம் தெரியாத நண்பர்களை நம்மிடம் கரைச்  சேர்ப்பது நம் ரசனை ஒன்று மட்டும் தான். இளைப்பாறுதலை இனிமையாக்க நண்பர்களின் எண்ணங்களும் குளிர்ச்சி தரும் நிழல்களே ! 

மறுபதிப்பு கேட்பவர்கள் எல்லாம் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் அல்ல. ஆனால் தங்களின் COMICS எவ்வளவு விலை என்றாலும் எத்தனை வெளியீடுகள் என்றாலும் சந்தோஷமாக வாங்கக்கூடிய நிச்சயமான பணக்காரர்கள் தான். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வரும் இரண்டாவது வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்பவர்கள் தான் சரித்திரம் படைப்பவர்கள். அவர்களே சாதனையாளர்கள். குறையற்று எதுவும் இவ்வுலகில் இல்லை ; நம் பார்வையை பொறுத்தே நம் சாதனை ; என் முனைப்பும், முயற்சியும் போதும் என்றால் அது என் தனிப்பட்ட விளைவு. ஆசிரியர் விஜயன் முடிவு செய்தால் அது எங்களில் பலருக்கு மிகப்பெரிய இழப்பு ! 1991 -ல் மன்மோகன்சிங் எடுத்த தைரியமான முடிவு தான் இன்று கீரை விற்கும் பாட்டி கையில் உள்ள மொபைல் ஃபோன் ! 

வாய்ப்பு இருக்கிறது என்றால் வாங்கும் வசதி தானாக உருவாகி விடும். அன்று மிகச் சாதரணமாக 100 ரூபாயை சமாளித்து விட்ட  தாங்கள் கூறிய அந்தச்  சிறுவன், அதற்கு அடுத்த வாரம் இதேபோல் ஏன் மீண்டும் அதுபோன்ற வாய்ப்பை பெறமுடியாது என்று நினைக்கிறீர்கள் ? இன்றைய சிறுவர்களில் வசதியற்றவர்கள் என்றால் வீதி விளையாட்டுகளிலும், TV கார்ட்டூன் சேனல்களிலும், பணக்காரர்கள் என்றால் Computer Games ; Facebook  ; English Comics  என்றும் இடைவெளி இல்லாமல் காலம் ஓடுகிறது. இதில் விலை குறைவாக விற்றால் மாற்றம் வரும் என எப்படி நினைக்க முடியும் ?

விதைக்கும் விதை முளைக்கவேண்டும் என்று வெளிச்சத்திற்காக, நிழல் தந்து பழம் தரும் மரத்தை வெட்டுவது என்ன நியாயம் ? நாங்களும் ஒரு காலத்தில் வெளிச்சமும் தண்ணீரும் இல்லாமல் போராடி வளைந்தே வளர்ந்தவர்கள் தாம். வாழ்க்கை என்னும் கட்டாய ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்களைத்து எப்படியோ வெற்றிக்கோட்டை தாண்டிவிட்டோம். இங்கு வெற்றியா தோல்வியா என்பது முக்கியமல்ல ; இனி அடுத்த தகுதிச்  சுற்றுக்கு தயாராக வேண்டும். இந்த இடைவெளி இளைப்பாறுதலில் அவரவர் ரசனை எதுவோ அதை நாடுகிறோம். இதில் தவறென்ன ? அல்லது குறையென்ன ? அடுத்தகட்ட இளைப்பாறுதலில் எங்களின் காமிக்ஸ் மட்டுமே இன்பத்தையும் ; அமைதியையும் ; உணர்ச்சி கலந்த உயிரோட்டத்தையும் கொடுத்து எங்கள் சுற்றத்தை நாங்கள் சிறிதும் குறை காணாமல் வாழ கற்றுக் கொடுக்கும் என்று நம்புகிறோம். இதில் வயதென்ன ? வசதியென்ன  ? எதுவுமில்லை எல்லாம் வாய்ப்பு மட்டும் தான். இன்று கேட்காமல் இன்னும் 10 வருடம் கழித்தா கேட்க முடியும் ? இன்றே இப்படி நாளை யாரறிவர் ?! 2.மர மண்டை10 November 2012 17:55:00 GMT+5:30

கரைந்துவிட்ட காலங்களாலும் ; கலைந்துப்  போன கனவுகளாலும் ; சில சமயம் கற்பனைகள் கூட கசப்பாகவே உருவாகும். தொலைந்து விட்ட நித்திரையில் பலசமயம் நம்மை கேட்காமல் வரும் கனவுகள் கூட வலியையும், வேதனையையும் தருவதாகவே அமையும். வெற்றிடமான வானத்தை மல்லாந்துப்  பார்த்து ரசிப்பதைப்போல வாழ்க்கையின் வழித்தடமான காமிக்ஸை  நோக்கி விழிவைத்து காத்துக்கிடப்பதும் சுகமானதே !

மறுபதிப்பு செய்யவேண்டும் என்றால் எப்படியும் செய்யலாம். ஆள் பலமும் ; விலையில் பிரிமியம் அதிகமாகவும் சேர்த்துக்கொண்டால் ஏன் இயலாது ? உதாரணமாக 1000 Copy  கட்டாயம் என்ற இடத்தில் 300 booking [printing அல்ல] கூட போதுமானது. இது வியாபார லாப நோக்கல்ல ; ஓர் விரிவாக்கச்  சிந்தனை. ஒரு பத்து பேருக்கு 2 வருட ஒப்பந்த வேலை தங்கள் மூலம் கிடைத்தது போலவும் இருக்கும், எங்களின் விருப்பமும் நிறைவேறும். தாங்களும் தமிழ் காமிக்ஸ் உலகின் முடிசூடிய மன்னனாக வரலாற்றில் இடம் பெறுவீர்கள் !

மறுபதிப்புகள் அனைத்தும் இன்றைய தரத்தில் வெளியிடுவதே சிறந்ததாக அமையும். இன்னும் 50 வருடத்திற்கும் மேலாக பாதுகாக்கப்  பட வேண்டிய புத்தகங்களின் தரம் அப்படித்தானே இருக்க வேண்டும் ? வருங்காலங்களில் தமிழ் வழிக் கல்வி எந்த அளவு இருக்கும் என்று கூற முடியாது. இன்றே பல சிறுவர்களுக்கு ஆறாம் வகுப்பு வரை தமிழ் படிக்கத்  தெரிவதில்லை. வருங்காலத்தில் எப்படியோ? தமிழ் காமிக்ஸ் வெளியீடுகளும் எந்த அளவு வெற்றி பெறும் என்பதும் சொல்ல முடியாது அல்லவா ? தயாரிக்க எளிதாகவும், விலை குறைவாகவும் கொடுக்க வேண்டும் என்பதற்காக NOKIA 2000 வருடத்திற்கான மாடலை மீண்டும் அப்படியே கொண்டு வருவதில்லை. வாழ்க்கையின் வெற்றிக்கு உயர்வாகவும் ; பெரிதாகவும் சிந்திப்பதும் ஒரு காரணிதானே !Tuesday, 23 July 2013

Why this கொலவெறி !

நண்பர்களே, என் புதிய வலைப்பூவை வாழ்த்தி பதிவிட்ட உங்கள் அனைவருக்கும் நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். அதே நேரம் என் பதிவுகள் ஏற்கனவே லயன் ப்ளாகில் பதிவிடப்பட்ட  பின்னூட்டங்களாக இருப்பதால் உங்கள் அனைவருக்கும்  ஏமாற்றத்தை தரக்கூடியதாக இருப்பதையும்   உணர்கிறேன்.  இது போன்ற பதிவுகளுக்காக மட்டுமே புதிய ப்ளாக் தொடங்க வேண்டும் என்று நான் முடிவெடுத்தது தற்போது எனக்கும் சற்று ஏமாற்றமாகத் தான் இருக்கிறது !

ஆசிரியரின் லயன் ப்ளாக் போலவே இதுவும் தோற்றம் தர வேண்டும் ; இங்கு எதேச்சையாக படிக்கும் ஏதோ  ஒரு வாசகராவது ஆசிரியர் விஜயனின் ப்ளாகில் புதிய வாசகராகவும், கமெண்ட் போடுபவராகவும் மாறவேண்டும் என்பதலாயே Dedicated to LION-MUTHU COMICS..! Affiliated to SUNSHINE UNIVERSITY..! என்ற வரிகளை முதன்மையாக்கி உள்ளேன் ! அதனால் தான் என்னுடைய ப்ளாக் பெயரையும் அதன் அடியில் உள்ள விளக்கத்தையும் அவ்வாறு அமைத்துள்ளேன். ஏனெனில் பள்ளிக்கூடம் என்றாலே நல்லவைகளையே படிக்கிறோம் ; படித்ததையே மீண்டும் மனனம் செய்கிறோம் ; பழைய பாடத் திட்டத்தையே  இந்தாண்டும் புதியவர்கள் படிக்க வழி செய்கிறோம் ; அதுபோல தான் இந்த வலைதளமும் அமைய வேண்டும் என்பதால் தமிழ் காமிக்ஸ் பள்ளிக்கூடம் என்று பெயரமைத்தேன் ! 


வலையுலகத்தின்  ப்ளாகில் எழுதாத விஷயங்களே இல்லை ; எழுதாத ஜாம்பவான்களும் இல்லை. உதாரணமாக நம் தமிழ் காமிக்ஸ் பற்றி தற்போது வரை அழகழகாய் பதிவிடும் எத்தனை சிறந்த பதிவர்கள் உள்ளார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதைப் போலவே நானும் என் திறமையை இங்கு வெளிக்காட்டினால் சின்னஞ்சிறு வித்தியாசம் மட்டுமே வெளிப்படும். அதனால் என் வலைப்பூவின் பயன் என்னவாக இருக்க முடியும் அல்லது லயன் காமிக்ஸின் பலன் தான் என்னவாக இருக்க முடியும் ? 

என் கருத்துகளை லயன் ப்ளாகில் படித்து விட்டு ஒன்றுமே புரியவில்லை நான் குழப்பவாதி என்று லயனில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை முறைவைத்து கமெண்ட் போட்டார்கள். என் எழுத்துகள் அவர்களுக்கு புரியாதது என் குற்றமா அல்லது இப்படித்தான் இங்கு எழுதவேண்டும் என்பது தான் கருத்து சுதந்திரமா ?

லயனில் பதிந்த என் கமெண்ட்கள் அனைத்தும் காமிக்ஸ் சம்பந்தப்பட்டது ; அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என்று நினைத்து எழுதியது ; மனரீதியாக ஆசிரியரை துன்புறுத்தியவர்களை வெறும் எழுத்துக்களாலேயே தடுத்தது ; வலைப்பூவின் வாசகர் வட்டத்தை விரிவாக்கவும் அதன்மூலம் காமிக்ஸ் சந்தா அதிகரிக்கவும் உதவுவது ; என்ற மேன்மையான் நோக்கம் கொண்டுதானே  என் நேரத்தையும் சிந்தனையையும் செலவு செய்து எழுதி வந்தேன்? அது பொய்யாகிவிட நான் அனுமதித்து விட்டால் நான் இதுநாள் வரை லயனில் எழுதியதற்கு அர்த்தமுமில்லை ; என் எழுத்துகள் எனக்குண்டான தகுதியுமில்லை !

எனவே நான் எடுத்துவைத்த கருத்துக்கள் ; பதிவிட்ட கமெண்ட்கள் எப்படிப்பட்டவை அல்லது எதற்கானவை என்று இங்கு பட்டியலிடும்போது மாற்றம் எதுவும் நிகழ்ந்துவிடப் போவதில்லை தான் ; ஆனால் மீண்டும் அதுபோன்ற சந்தர்ப்பங்கள் எழாமல் இருக்கும் அல்லது ஒத்த கருத்துடைய நண்பர்கள் யாரோ ஒருவருக்காவது அந்த பதிவு அவரின் எண்ணத்தை பிரதிப்பலிப்பதாக அமைந்தாலே  அது ராமபிரானுக்கு உதவிய சின்னஞ்சிறு அணில் போல் நம் லயன்  காமிக்ஸுக்கு செய்த உதவியாக வருங்காலத்தில் இருக்ககூடும் தானே நண்பர்களே ?!

எந்தவொரு தனித்தன்மை வாய்ந்த வலைப்பூவாக இருந்தாலும் ; சிறந்த கருத்துகளையும் சீரிய சிந்தனையையும் கொண்டு பதிவுகளை செதுக்கி செதுக்கிப்  பதிவிட்டாலும் காலம் செல்லச் செல்ல  பின்னூட்டங்கள் இல்லாமல் நாம் ஈ ஓட்ட வேண்டியது தான். நாம் வலைப்பூ ஆரம்பித்த புதிதில் நம்மை ஊக்கப்படுத்தவும் ; வாழ்த்தவும் ; ஆதரவளிக்கவும் திரளாக அணிசேரும் நண்பர்கள் பின் ஒவ்வொருவராக உற்சாகம் இழந்து விடுகின்றனர். அதற்கு காரணம் நண்பர்கள் அனைவரும் நம்மை விட அனைத்திலும் விஷய ஞானம் கொண்ட வல்லவர்களாக இருப்பதே ஆகும் ! எனவே நம் ப்ளாகில் எதை எழுதினாலும் அது நமக்கு ஆத்ம திருப்தி தருவதாக அமைத்துவிட்டால் நாம் ஈ ஓட்டும் காலத்தில் கூட, அதில் காணக் கிடைக்கும் ஆள் அரவமற்ற அமைதியக்கூட ரசிக்கலாம் ; அந்நிலையிலும் பேரானந்தத்தில் திளைக்கலாம் என்பதே என் சிந்தனை !

லாஸ்ட்லைன்:  நம் ப்ளாக் லைவ்வாக இருக்க வேண்டுமெனில் வெறும் லைக் மட்டுமே போதாது, அங்கே  காரசாரமான விவாதங்கள் நடந்து கொண்டே இருக்க வேண்டும் ! 

Monday, 22 July 2013

ALL NEW ஸ்பெஷல் !

ஹாட்லைன்: நண்பர்களே, மரியாதைக்கு உரியவர்களே வணக்கம் ! ரசனை என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம் ; இதில் இது தான் உயர்வு இது தான் தாழ்வு என்று எதையுமே பட்டியலிட முடியாது என்பதே நிதர்சனம். நாம் உடுக்கும் உடைகள் ; நாம் விரும்பும் வர்ணங்கள் ; உண்ணும் உணவு வகைகள் என எல்லாமே மற்றவரிடம் இருந்து நாம் வேறுபடுகிறோம் ! 

நாம் நம் தனித் தன்மையை நிலைநிறுத்தும் தன்மையாலேயே ஆரறிவு படைத்த மனிதர்களாக சிந்திக்கிறோம் ; அவரவர் தகுதிக்கேற்ப சீரும் சிறப்பான வாழ்வுதனை அனுபவிக்கிறோம். ஒருவருக்கு ஒரு காமிக்ஸ் பிடிக்கிறது என்பதற்காக நாம் போலியான ஒப்புதல் வழங்க எந்த அவசியமும் கிடையாது என்பதே என் எண்ணம் ! 

ஏனெனில் நம் விருப்பு வெறுப்புகள் ; ரசனை சார்ந்த விஷயங்கள் ; மன அமைதி ; அது தரும் சந்தோஷம் என எல்லாமே நம் எண்ண அலைகளின் அளவுகோலின் படியே பயணிக்கிறது. ஒரு நல்ல ரசனை நமக்கு மனமகிழ்வை தருவதாக அமையும் போது அதை வலுக்கட்டாயமாக மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் எங்குமே எழுவதில்லை. ஏனெனில் நம்மால் முடிந்த வரை நம் மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ள பழகுவதே இவ்வுலக வாழ்க்கையின் பயனாகும். அறிவும் ரசனையும் வானவில்லின் இரு முனைகள் என்பதை தவிர வேறு உவமை எனக்கு இங்கு எதுவும் தோணவில்லை !     

ஷார்ட்லைன்: ரசனைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் !

ஷாட்லைன்:  ALL NEW ஸ்பெஷல் மீதான நம் வாசகர்களின் ரசனை   கிழக்கும் மேற்கும் போன்றதாகும். இத்திசைகள் என்றுமே இணைவதில்லை ! 


1. மிஸ்டர் மரமண்டை10 July 2013 21:20:00 GMT+5:30

பிரளயத்தின் பிள்ளைகள் - கதை விமர்சனம் :

*காமிக்ஸ் படிக்கும் போது மனம் இலகுவாகுகிறது ! 
*மனஅழுத்தம் வரும்போது காமிக்ஸ், இறகாய் மனதின் சிறகை விரிக்க வைக்கிறது !
*அன்றாட கவலைகள் ; தீராத கஷ்டங்கள் ஏற்படுத்தும் காயங்களுக்கு காமிக்ஸ் அருமருந்தாகிறது !
*பிரச்னைகளின் இடையில் வரும் ஒவ்வொரு விடியலும், காமிக்ஸால் பூஞ்சோலையாய் புலர்கிறது !

இதுபோல் இனி யாரும் கூறினால் அது உன்மைதானா என ஒரு கணம் யோசிக்க வைத்துவிடும் இந்த கிராபிக் நாவல். அதனால் காமிக்ஸுக்கும்  கிராபிக் நாவலுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் எப்பொழுதும் மனதிற் கொண்டால் இதுபோன்ற குழப்பங்கள் வராது என்பது நிச்சயம். நாற்பது ஆண்டுகால தமிழ் காமிக்ஸ் ரசனையின் சரித்திரத்தை தலைகீழாய் புரட்டி போட்டு விட்டது இந்தப்  'பிரளயத்தின் பிள்ளைகள்' என்றே கூறவேண்டும்..!? 2. மிஸ்டர் மரமண்டை10 July 2013 22:12:00 GMT+5:30

தாளாத சோகத்தில் ; எதிர்பாராத பெரும் இழப்பில் தொடங்கும் கதையின் வீரியம் நேரம் ஆக ஆக உச்சத்தில் கொண்டு சென்று நம்மை நிர்ச்சலனத்தில் நிறுத்தி விடுகிறது. கதையோடு பயணிக்கும் நம்முள் வலியையும் அது தரும் வேதனையையும் ஒருசேர ஊசியாய் உள்ளத்தில் தைத்து, ஏதோ ஒரு புது விடியல் வராதா ; எங்கோ ஒரு விடிவெள்ளி தென்படாதா என்று நம்மையும் துடிதுடிக்க வைக்கும் கதை இது !

கதையில் வரும் நிர்வாணங்கள், அந்த பாவப்பட்ட வாழ்க்கையின் வேதனையை கண்டு உள்ளே துயிலும் உயிரின் கருவறையை கூட அதிரச் செய்திடுமோ என அஞ்சி, இதயம் பிளந்து விட்டதோ எனும் துன்பயியல் பாடத்தை போதிப்பதாக அமைகிறது ! 

சோகத்தை இதயத் துடிப்பாய் கொண்டு, வேதனையை வழிப் பார்வையாய் விரித்து நடைபோடும் இந்த நாடோடிகளின் வாழ்க்கைப் பயணத்தில், காஸ்-சேம்பருக்கு அனுப்பப்பட்ட மாந்தர்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்களோ என ஒரு கணம் நினைக்கத் தோன்றி விட்டது. கத்தியின்றி ; இரத்தமின்றி ; அணுஅணுவாய் நொடிதோறும் துடிக்கும் நரகவேதனையின்றி ; ஓய்வின்றி உழைத்து ஓடாய் தேய்ந்து ; உணவின்றி உடலிளைத்து ; நிழலாடும் நினைவுகளும் சித்த பிரமையாய் ; தவறி வரும் கனவுகளும் கர்ண கொடூரமாய் ; வாழும் வாழ்க்கையை விட சட்டென சுவாசித்து ; பொட்டென உயிர்விடும் காஸ்-சேம்பர் அந்த பாவப்பட்ட மாந்தர்களுக்கு ஒரு சொர்க்க வாசல் என்றுதான் கூற தோன்றுகிறது ! 

வலியும் அது தரும் வேதனையும் உணரும் போதல்லவா உயிர் பிரியும் வேதனையை தரும் ; அதை நமக்கு உணரவைக்க முயற்சித்த இந்த பிரளயத்தின் பிள்ளைகள் - தரும் சோகமும் என்றும் மாறாத வடுக்களே. கதையின் இறுதியில் நாடோடிகள் மூவர் சுகிக்கும் சுதந்திரமும் சுகமாய் இனிக்கவில்லை. உயிரைத் துறந்த உடலாய் ; உணர்வுகளற்ற நடைப்பிணமாய் வாழும் வாழ்க்கை அதுவென்பதை தவிர வேறென்ன..?3. மிஸ்டர் மரமண்டை11 July 2013 14:58:00 GMT+5:30

தோட்டா தேசம் - கதை விமர்சனம் :

கதையின் பெயர் தான் தோட்டா தேசம் ; ஆனால் அங்கே பயணித்து வருபவர்களுக்கு ஒரு இனம் புரியா உல்லாச உணர்வுகள் நிச்சயம் ; சொல்லிக் கொள்ளும்படி பெரியதாய் அதிரடியோ ; ஆக்ஷனோ எதுவுமே இல்லாவிட்டாலும் புத்துணர்ச்சி அல்லது அதுபோன்றதொரு பரவசநிலையை தர வல்லதாக அமைந்துள்ளது தோட்டா தேசம்..! 

முதற் காரணம் : கதையெங்கும் வியாபித்திற்கும் வெளிர் நீலவண்ணம் நம் பளீர் கண்களுக்கு இதமான குளிர் கைவண்ணத்தை காட்டுகிறது. பார்க்க பார்க்க பரவசமாக அல்லது நம்முள் பதுங்கி ஆழ்துயிலும் இன்பமயமான உணர்வுகளை ; சங்கீதம் இசைத்து தட்டி எழுப்பும் மொபைல் ரிமைன்டராக சித்திர வர்ணங்கள் நம்மை வழியெங்கும் ஆட்கொள்கின்றன.

இரண்டாவது காரணம் : வேலைத்தேடி நிராதரவாக வரும் "ரெட் டஸ்ட்" ன் முதலாளி "கமான்சே" என்ற இளநங்கை. வெளியில் எவர் மறைத்தாலும் அதனூடே கடக்கும் போது சில்லென்ற ஒரு சிலிர்ப்பும் அந்நேரம் இதமாய் வருடும் இளம் தென்றலின் சுகத்தையும் அனுபவிப்பீர்கள் என்பது உறுதி. இளமைக்காக அல்ல அந்த உணர்வு ; அங்கே புதிதாய் உருவெடுக்கும் அந்த உறவின் பிணைப்பிற்காகவே வரும் இந்த புத்துணர்வு. நம் ஒவ்வொருவர் உள்ளும் கொஞ்சமாய் "ரெட் டஸ்ட்" ஒரு ஓரமாக ஒளிந்து கொண்டுதான் இருக்கும் அல்லவா :-) 

மூன்றாவது காரணம் : இரண்டு சோப்ளாங்கி கௌ-பாய்கள் க்ளெம் மற்றும் டோபை தத்தம் வெகுளித்தனத்தாலும், மறு கேள்வியின்றி கீழ்படியும் குணத்தாலும் நம்மை சுற்றிலும் ஒரு சுகந்த வாசத்தை பரவச் செய்கிறார்கள். 

மேற்கூறிய மூன்று உணர்வுகளையும் ஒருசேர அனுபவிக்கும் பரவசத்தை, நீங்கள் தோட்டா தேசத்தில் பயணம் செய்யும் போது உணர்ந்தால் நம்மிடம் உள்ள காமிக்ஸ் ரசனை உண்மையிலேயே நமக்கு கிடைத்த புதையல் தான் :-)4. மிஸ்டர் மரமண்டை11 July 2013 20:12:00 GMT+5:30

நதியில் ஒரு நாடகம் - கதை விமர்சனம் :

எதிரியின் கையில் உள்ள துப்பாக்கியை விட நண்பனின் கையில் உள்ள மொக்க கத்தி ரொம்ப ரொம்ப டேஞ்சரானது. என்ன வாசகர்களே ஒன்னும் புரியவில்லையா? கீழ்வரும் கதை விமர்சனத்தை கொஞ்சம் படித்து தான் பாருங்களேன் :)

ஆழ்ந்த அறிவாற்றலும் ; தீர்க்கமான சிந்தனையும் ; கூர்மதியும் கொண்ட தோழன் என தொடங்கும் கதாசிரியரின் வரிகளுக்கு சொந்தக்காரரான ஷெர்லாக் ஹோம்ஸ் - ஸ்டீல் பாடியைத் தானா, இது வரை நாம் வேஸ்ட் பாடி ; வொர்ஸ்ட் பாடி என்று நக்கலும் நய்யாண்டியும் செய்து வந்தோம் என்று ஒரு கணம் அதிர்ந்து தான் போகிறோம் :-(

சிரிப்புக்கான இடமும் அதற்கான படமும் : 210 - அடங்கொக்கா மக்கா..! 

இந்த இடத்தில் நீங்கள் ஒரு தடவ சிரிச்சா அது நூறு தடவ சிரிச்சா மாதிரி..!

எனக்கென்னவோ இம்முறை நம் நாயகன் கண்டுப்பிடித்த உண்மையிலேயே நடந்த உண்மையை சிலாக்கோ ( எ ) டுபாக்கோ பிரபு தான், தன் டார்லிங் க்கு பயந்து மறைத்து கடைசியில் பீலா விட்டு விட்டார் என்று தோன்றுகிறது. எனவே அவர் ஒரு டுபாக்கூர் பிரபு என்பது உண்மையாகி விட்டது. அதற்கு தோதாக முன்பு ஒரு முறை செம மப்பில் ராணியாரை 'பப்ளிமாஸ்' என்று விமரிசித்த டாக்டர் வாட்சன் ஹிஹி ; ஹாஹா ; ஹோஹோ என்று சிரித்து, கடைசியில் நம் ஷெர்லாக் ஹோம்ஸை காமடி பீஸ் ஆக்கி விட்டார். இங்கு நீங்கள் மீண்டும் ஒரு முறை மேலே உள்ள வரியை படித்து பாருங்கள் :)

5. மிஸ்டர் மரமண்டை11 July 2013 21:58:00 GMT+5:30

கூலியில்லா கைக்கூலி - கதை விமர்சனம் :

ஸ்டீல்பாடி ஷெர்லாக் ஹோம்ஸ் இம்முறை ஹுயுமன்பாடி ஷெர்லாக் ஹோம்ஸ் ஐயும் மிஞ்சி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். என்னவொரு வேகம், அதற்கேற்ற யூகம், குற்றத்தை நிரூபிக்க துடிக்கும் உத்வேகம்... அடடா, உண்மையாகவே அவர் ஒரு ஸ்டீல் பாடி தான் சார். 

நய்யாண்டிக்காகவே உருவாக்கப்பட்ட இந்த நாயகன், தன்னை உருவாக்கிய கதாசிரியரின் கற்பனையையும் ; கைகளையும் மீறி இக்கதையில் தன் சாதனையை ; டெர்மினேட்டரை போல் நமக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார். ஸ்டீல்பாடி வேஸ்ட்பாடி என்று கூரியவர்களுக்கு, ஹாய் எவெரிபடி.. பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஃஆப் மை பாடி என்று நிரூபித்து விட்டார். வாய் விட்டு சிரிக்கவும் இங்கு சில இடங்கள் உண்டு என்பதால் டாக்டர் வாட்சனும் இக்கதையில் திடீர் பிரபல்யத்தை தேடிக்கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்..!

ஆதலினால் ஸ்டீல்பாடியும் தொடர்ந்து அதகளம் செய்வாராக :-)
6. மிஸ்டர் மரமண்டை11 July 2013 22:33:00 GMT+5:30

க்ரீன் மேனர் - கதைகள் விமர்சனம் :

க்ரீன் மேனர் கதைகளின் ஆழத்தையும், நீளத்தையும், அகலத்தையும் ஏற்கனவே நண்பர்கள் அலசி ஆராய்ந்து, துவைத்து காயப்போட்டு விட்டதால், அதன் மூலம் நாம் உணர்ந்துக் கொள்ளவேண்டிய நீதி போதனைகளை மட்டுமே இங்கு சொல்வது அவையடக்கத்திற்கு ஒரு சான்றாக அமையுமன்றோ..?!

1.கொலை செய்வீர் கனவான்களே..!
செந்தமிழும் நா பழக்கம்  சித்திரமும் கைப்பழக்கம் !

2.அவலத்தில் குதூகலம் !
பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் !

3.(ஒரு பின்குறிப்பு)
கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் !

4.சிறு கொலையும் கைப் பழக்கம் 
தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் (ஜான் ஸ்மித்) !

5.இரசித்துக் கொல்ல வேண்டும் !
களவும் கற்று மற !

6.நிஷ்டூர தண்டனை!
ஆதலினால் காதல் செய்யாதீர் !
7. மிஸ்டர் மரமண்டை13 July 2013 12:55:00 GMT+5:30

ஆசிரியர் விஜயன் : தங்களின் பதில் சார்ந்து என் கருத்தையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். கதையின் களம்: 1880. இடம்: க்ரீன் மேனர் க்ளப் !வார்தைகளில் நாகரீகத்தையும் ; வழக்கில் இல்லாத உயர்ந்த சொற்களையும் தங்களுடைய கௌரவமாக கொண்ட மிகப்பெரிய செல்வச் சீமான்கள் புழங்கும் க்ரீன் மேனர் க்ளப் ! இப்பொழுதும் சிலர் பேச்சு வழக்கில் இல்லாத உயர்ந்த ஆங்கில சொற்களை கலந்து பேசுவதையும், எழுதுவதையும் நாம் பார்க்கலாம். ஏனெனில் அது அவர்களின் தகுதியை உயர்த்து காட்டுவதாக அமைகிறது என்று நினைக்கின்றனர். அதுபோன்றதொரு க்ளப் ல் நடக்கும் கதைகளுக்கு இதுபோன்ற வார்த்தை பிரயோகம் உண்மையில் நம்மையும் அந்த காலக்கட்டத்தை கற்பனை செய்யவும், கதை களத்தை மனத்திரையில் காட்சியாக கொண்டுவரவும், கதையில் ஒன்றிட செய்யவும் உதவுகிறது. உதாரணத்திற்கு..1.யெளவனமான யுவதி: பதினாறு வயது நிறைந்த இளமை தெறிக்கும் பருவமங்கை !  இதில் இரண்டாவது அனைவருக்கும் புரியும். ஆனால் அவர்களின் கற்பனை கதையை தொலைத்து விட்டு அந்த மயக்கும் பேரழிகியை தேடி அலையும்.

2.நல் நேர நஞ்சு: எளிதில் புரியாத இச்சொல்லே என்னவென்று அறிந்துக்கொள்ளும் துடிப்பை நம்முள் விதைத்து நம்மை பிரெஞ்சுப் புரட்சியை கற்பனை செய்ய வைக்கிறது.

3.நிஷ்டூரம்: கொடுமை, கொடூரம் -  க்ரீன் மேனர் படித்த அனைவருக்கும் இச்சொல் இனம் புரியாத உணர்வையும், ஒரு புதிய சொல்லையும் தந்துள்ளது. திகில் கதைகளில் புரியாத புரிந்த சொற்கள் நம்முள் அதற்கேற்ற எண்ண அதிர்வை ஏற்படுத்துகிறது.

4.வெற்றார்ப்பரிப்பு: தேவையில்லாத ஆர்ப்பாட்டம் - முதலாவது பண்டைய க்ளப் வார்த்தையாகவும் பின்னது வீதியில் நடக்கும் விஷயத்தை கூறுவதாகவும் அமைந்து விட வழிவகுக்கும். 

இதுபோல் விளக்கங்களுக்கும் வாதங்களுக்கும் விடிவென்பதே இருப்பது இல்லை. எனவே கதைகளுக்கேற்றதொரு மொழியாக்கம் மட்டுமே அக்கதைகளில் நம்மை ஒன்றிடச் செய்வதாக அமைகின்றன. தொடர்கிறது..


8. மிஸ்டர் மரமண்டை13 July 2013 13:19:00 GMT+5:30

மாறாக வேறுவழியில் மொழிநடையை கையாளும் போது எண்ணச் சிதறல்களுக்கே வழிவகுக்கின்றன. க்ரீன் மேனரில் எழுத்தாக்கம் இவ்வகையில் இருப்பது தங்கள் மொழிபெயர்ப்பின் வெற்றி தானே தவிர வேறு எண்ணங்களுக்கு இடம் இல்லை என்றே தோன்றுகிறது.

தொன்மைவாய்ந்த மிகப்பெரிய ஆலமரம் ஒன்று இருந்ததாம்; அங்கு ஆயிரக்கணக்கில் இளைப்பார வந்து செல்வர். அப்படி வருபவர்கள் எல்லாம், இப்படி பயன் தரும் ஆலமரத்தை என்னால் முழுவதுமாக தரிசிக்க முடியவில்லை என கூறி, ஒவ்வொரு விழுதாய் வெட்டிச் சென்றால் இறுதியில் மொட்டை மரமே மிஞ்சி நிற்கும். அதுபோன்றதொரு தொன்மையான ஆலமரம்தான் நம் செம்மொழி செந்தமிழ்.

கொலை செய்வீர் கனவான்களே கதைகளில் உள்ள ஒரு சில வார்த்தைகள் அனைவருக்கும் புரியாது என்பது தானே அன்றி அதுவொன்றும் இலக்கியத் தமிழ் அல்ல. ''கனவான்களே'' என்றால் இளம்பெண்களின் ''கணவன்களே'' என்று கூட சிலர் புரிந்துக் கொள்ளலாம். நாம் புரிந்து கொள்வதற்கு கதையின் களமும் அவசியமான ஒன்றாகவே நான் கருதுகிறேன்..!


லாஸ்ட்லைன்: ரசனைகள் பலவிதம் ! உங்களின் ரசனைகள் எவ்விதம் ? 

Monday, 15 July 2013

வாழ்த்துகள் மெய்ப்படும் !

ஹாட்லைன்: நண்பர்களே லயன் பிளாகில் பதிந்த எந்த ஒரு பின்னூட்டமும் நான் பல நாள் சிந்தித்தோ, இப்படித்தான் இருக்க வேண்டும் என்று யோசித்தோ என்றுமே பதிவிட்டதில்லை.அந்தந்த நேரம் மனதில் தோன்றியதை அப்படியே பதிந்தவைகள் என்பதால் மகிழ்ச்சி, ஆனந்தம், வருத்தம், கோபம், நய்யாண்டி என அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கக்கூடும். ஆனால் எவரையும் காயப்படுத்தும் நோக்கிலோ உள்வஞ்சம் வைத்தோ பதிவிடப்படவில்லை என்பதே இங்கு சத்தியத்தின் வார்த்தைகளாக உணரப்படும் !

ஷார்ட்லைன்: வலைதளம் என்ற ஒன்றில் முதன் முதலில் அடியெடுத்து வைத்தது லயன் ப்ளாகில் என்பதாலும் ஆசிரியரின்  மேல் உள்ள மரியாதையாலும் என்னுடைய முதல் பதிவு ஆசிரியர் S.விஜயன் அவர்களுக்கு சமர்ப்பணம் !  

ஷாட்லைன்:  S.விஜயன் -  ஒரு பனி இரவின் உரத்த சிந்தனை !1.மர மண்டை 2 January 2013 05:20:00 GMT+5:30

OXFORD 2013

Sir, Wishing you and your family
a very happy and prosperous NBS !

LIFCO 2013

(கானக) காமிக்ஸ் அரசன் அவர்களுக்கு (லயன்)
முத்தான (muthu) புதுமலர் NBS வாழ்த்துகள் !

கோனார் தமிழ் உரை 2013

கானக அரசன் சிங்கத்தின் பெயரில் காமிக்ஸ் பட்டத்து இளவரசனாய் அவதானித்து,  இன்று தமிழ் காமிக்ஸ் உலகின் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்ளப் போகும் ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு, NBS மணிமகுட வாழ்த்துகள் ! விருப்பம் கொண்ட வாசகர்கள் அனைவரும் வருகைத்தர ஆண்டவன் அருள் புரிந்து, காமிக்ஸ் தமிழ் உலகம் தங்களை வாழ்த்த NBS பட்டாபிஷேகம் சீரும் சிறப்புமாக நடந்து, காமிக்ஸ் தமிழ் உலகின் சக்கரவர்த்தியாக அரியணை ஏற தங்களை மனதார வாழ்த்துகிறேன் !

வாழ்க லயன் காமிக்ஸ் ! வாழ்க முத்து காமிக்ஸ் !! வாழ்க காமிக்ஸ் க்ளாஸிக்ஸ் !!! வாழ்க வளமுடன் !2.Vijayan 2 January 2013 09:42:00 GMT+5:30 

மர மண்டை : கனிவான வாழ்த்துகளுக்கு நன்றிகள். ஆனால் "சக்கரவர்த்தி ; பட்டாபிஷேகம் ; அரியணை " என்பதெல்லாம் நமக்குப் பொருந்தா சொற்கள் ! இங்குள்ள ஒவ்வொருவரையும் போல் நானுமொரு காமிக்ஸ் காதலனே என்றதொரு அடையாளமே சந்தோஷமளிக்கும் சங்கதி !3.மர மண்டை 2 January 2013 09:53:00 GMT+5:30 

ஆசிரியர் விஜயன் :  இந்த பதவிகளை நீங்கள் விரும்பாவிட்டாலும், இறைவனால் ஏற்கனவே எழுதப்பட்டவை ! அது தங்களைத் தேடி தானே வரும் ! என் வாழ்த்துகள் மெய்ப்படும் ! சரியாக இன்னும் ஐந்து வருடத்தில் இது நிச்சயமாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் ! இதுவே இறைவனின் விருப்பம் !லாஸ்ட்லைன் : என் வாழ்த்துகள் மெய்ப்படும் !