Follow by Email

Monday, 15 July 2013

வாழ்த்துகள் மெய்ப்படும் !

ஹாட்லைன்: நண்பர்களே லயன் பிளாகில் பதிந்த எந்த ஒரு பின்னூட்டமும் நான் பல நாள் சிந்தித்தோ, இப்படித்தான் இருக்க வேண்டும் என்று யோசித்தோ என்றுமே பதிவிட்டதில்லை.அந்தந்த நேரம் மனதில் தோன்றியதை அப்படியே பதிந்தவைகள் என்பதால் மகிழ்ச்சி, ஆனந்தம், வருத்தம், கோபம், நய்யாண்டி என அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கக்கூடும். ஆனால் எவரையும் காயப்படுத்தும் நோக்கிலோ உள்வஞ்சம் வைத்தோ பதிவிடப்படவில்லை என்பதே இங்கு சத்தியத்தின் வார்த்தைகளாக உணரப்படும் !

ஷார்ட்லைன்: வலைதளம் என்ற ஒன்றில் முதன் முதலில் அடியெடுத்து வைத்தது லயன் ப்ளாகில் என்பதாலும் ஆசிரியரின்  மேல் உள்ள மரியாதையாலும் என்னுடைய முதல் பதிவு ஆசிரியர் S.விஜயன் அவர்களுக்கு சமர்ப்பணம் !  

ஷாட்லைன்:  S.விஜயன் -  ஒரு பனி இரவின் உரத்த சிந்தனை !1.மர மண்டை 2 January 2013 05:20:00 GMT+5:30

OXFORD 2013

Sir, Wishing you and your family
a very happy and prosperous NBS !

LIFCO 2013

(கானக) காமிக்ஸ் அரசன் அவர்களுக்கு (லயன்)
முத்தான (muthu) புதுமலர் NBS வாழ்த்துகள் !

கோனார் தமிழ் உரை 2013

கானக அரசன் சிங்கத்தின் பெயரில் காமிக்ஸ் பட்டத்து இளவரசனாய் அவதானித்து,  இன்று தமிழ் காமிக்ஸ் உலகின் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்ளப் போகும் ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு, NBS மணிமகுட வாழ்த்துகள் ! விருப்பம் கொண்ட வாசகர்கள் அனைவரும் வருகைத்தர ஆண்டவன் அருள் புரிந்து, காமிக்ஸ் தமிழ் உலகம் தங்களை வாழ்த்த NBS பட்டாபிஷேகம் சீரும் சிறப்புமாக நடந்து, காமிக்ஸ் தமிழ் உலகின் சக்கரவர்த்தியாக அரியணை ஏற தங்களை மனதார வாழ்த்துகிறேன் !

வாழ்க லயன் காமிக்ஸ் ! வாழ்க முத்து காமிக்ஸ் !! வாழ்க காமிக்ஸ் க்ளாஸிக்ஸ் !!! வாழ்க வளமுடன் !2.Vijayan 2 January 2013 09:42:00 GMT+5:30 

மர மண்டை : கனிவான வாழ்த்துகளுக்கு நன்றிகள். ஆனால் "சக்கரவர்த்தி ; பட்டாபிஷேகம் ; அரியணை " என்பதெல்லாம் நமக்குப் பொருந்தா சொற்கள் ! இங்குள்ள ஒவ்வொருவரையும் போல் நானுமொரு காமிக்ஸ் காதலனே என்றதொரு அடையாளமே சந்தோஷமளிக்கும் சங்கதி !3.மர மண்டை 2 January 2013 09:53:00 GMT+5:30 

ஆசிரியர் விஜயன் :  இந்த பதவிகளை நீங்கள் விரும்பாவிட்டாலும், இறைவனால் ஏற்கனவே எழுதப்பட்டவை ! அது தங்களைத் தேடி தானே வரும் ! என் வாழ்த்துகள் மெய்ப்படும் ! சரியாக இன்னும் ஐந்து வருடத்தில் இது நிச்சயமாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் ! இதுவே இறைவனின் விருப்பம் !லாஸ்ட்லைன் : என் வாழ்த்துகள் மெய்ப்படும் !

71 comments:

 1. புதிய களத்தில் காமிக்ஸ் பணியாற்றிட வாழ்த்துக்கள், மிஸ்டர் மரமண்டை!

  ReplyDelete
  Replies
  1. காமிக்ஸ் வளரவேண்டும் என்ற முனைப்புடன் எழுதும் யாருக்கும் என் ஆதரவு உண்டு!
   உங்கள் கருத்துக்கள் பலருக்கும் புரியவேண்டுமெனில், எளிய மொழி நடையில் இருக்கட்டும்.

   Delete
  2. ஈரோடு விஜய்யுடன் me too....congrats my friend...

   Delete
  3. //காமிக்ஸ் வளரவேண்டும் என்ற முனைப்புடன் எழுதும் யாருக்கும் என் ஆதரவு உண்டு!
   உங்கள் கருத்துக்கள் பலருக்கும் புரியவேண்டுமெனில், எளிய மொழி நடையில் இருக்கட்டும். //

   நண்பர்கள் Erode VIJAY மற்றும் AHMEDBASHA TK உடன் நானும் ...

   வாழ்த்துக்கள் மிஸ்டர். மரமண்டை !!

   Delete
 2. அருமை நண்பரின் அனைத்து முயற்சிகளுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் நண்பரே!!! வெற்றி நமதே!!!

  ReplyDelete
  Replies
  1. புத்தக ப்ரியன் : நண்பரே உங்களின் பெயரை இங்கு பார்த்தவுடன் எனக்கு அளவில்லாத சந்தோஷம். நான் உங்களுக்கு பலமுறை லயன் ப்ளாகில் நன்றி சொல்ல நினைப்பேன். நான் ஒவ்வொரு முறை லயனில் பதிவிடும் போதும் உங்களுக்கான அழுத்தமான நன்றியை சொல்லாமல் விட்டு விட்டோமே என்று மனம் பரிதவிக்கும். தங்களின் தெளிவான சிந்தனைக்கும்; தைரியத்திற்கும்; நேர்மைக்கும்; திடச்சித்தத்திற்கும் நான் இங்கு மரியாதை செய்ய கடமைப்பட்டுள்ளேன் நண்பரே! இது நிற்க;

   லயனில் [அழிக்கப்பட்ட] 'ஒரு பனி நாள் பதிவு' ன் அன்றைய பல பதிவுகளை கண்டு உண்மையாகவே நான் மனம் வருந்திதான் சென்று வருகிறேன் என்று பதிவிட்டு விடைப்பெற்றேன். ஆனால் தாங்கள் என் பதிவை தொடர்ந்து பதிந்த பாராதியாரின் பாடல் வரிகள் என்னை வெகுண்டெழச் செய்தது என்றால் அது மிகையல்ல. அந்த பாடல் கூறும் கருத்துக்கள் வெளிச்சமிடும் யதார்த்தம் மட்டுமே என்னை இன்று வரை லயன் ப்ளாகில் பதிவிடச் செய்து வருகிறது.

   உங்களின் ஆதரவு தொடர்ந்தால் நிச்சயமாக தகாமுக வுக்கு வெற்றி நமதே !!!

   Delete
 3. வாழ்த்துகள்.

  உங்களை பெயர் சொல்லி அழைக்க சற்றே தயக்கம், அதனாலேயே பெயர் சொல்லாமல் இந்த வாழ்த்து.

  பின்னணி வண்ணத்தை தவிர மற்ற அனைத்துமே எடிட்டரின் வலைரோஜா மாதிரியே இருப்பது கண்டு மகிழ்ச்சி.

  விரைவில் காமிக்ஸ் பற்றிய உங்கள் புரிதல் சார்ந்த பதிவுகளை காண ஆவல்

  ReplyDelete
  Replies
  1. King Viswa : தங்களின் இந்த வருகை இந்த தளத்தை பெருமைப் படுத்துவதாக அமைந்துள்ளது நண்பரே!

   ஒருமுறை லயனில் ஆசிரியரின் 'மாற்றம் மாத்திரமே மாறாததே' பதிவில் நான் உணர்ந்த அவரின் வருத்தத்தையும், ஆற்றமாட்டாமையையும், துன்பத்தையும் அவருக்கு தந்த விஷயம் என்னவாக இருக்கும் என்று நூல் பிடித்தார் போல் ஒவ்வொருவரின் ID வால் பிடித்து பயணம் செய்து வலையின் மூலை முடுக்கெல்லாம் தேடி அலைந்தேன். அப்பொழுது Tamil Comics: Lion/Muthu - fb க்ரூபில் ஆசிரியரையும் , லயனில் அவருக்கு ஆதரவாக பதிவிடும் வாசகர்களையும் பயங்கரமாக கலாயித்துக் கொண்டிருந்தார்கள். படித்தவுடன் சிரிப்பு வந்து விட்டது என்பது வேறு விஷயம். ஆனால் அதில் முதலில் பார்த்த வரிகள் டேய் லூசு டாடி; குடும்பமே லூசு குடும்பம்; மற்றும் டாக்டருக்கே ஊசி போட்டவங்க நாங்க; என ஒவ்வொருவரின் குடும்பத்தையும், பெயரையும், தொழிலையும் அசிங்கப்படுத்திக் கொண்டிருந்தார்கள். லயன் ப்ளாக் ஐ விட அங்கு பார்வையாளர்கள் பல மடங்கு அதிகம்;

   So, ஆசிரியருக்கு ஆதரவாக பதிவிட போகும் என்னை திட்ட அவர்களுக்கு வார்த்தைகள் கிடைக்கக் கூடாது, திட்டும் வார்த்தையே என் பெயராக அமைய வேண்டும் என்றும்; என் குடும்பம், என் தொழில், என் பெயரின் கௌரவம் எப்பொழுதும் காப்பாற்றப்பட வேண்டும் என்றும்; அன்றே முடிவு செய்தேன். அதுவே என் பெயர் காரணம்; அதுவே மிஸ்டர் மரமண்டை !

   தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே !

   Delete
  2. ஹ்ம், நான் சொன்னதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை.

   முதிர்ந்த, தெளிவான கருத்துக்களை கொண்ட உங்களை அந்த பெயர் சொல்லி அழைக்கவில்லை.

   ஏனென்றால் ......வேண்டாம் விடுங்கள். அற்ப ஜந்துக்களை பற்றி இங்கே என்ன பேச்சு?

   Delete
  3. உங்கள் கருத்தை உள்ளது உள்ளபடி நான் உள்வாங்கி விட்டேன் நண்பரே. இருந்தாலும் உங்களின் பதிவை மையப்படுத்தி ஒரு உண்மையை ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டதாகவே நினைக்கிறேன் ! ஏனெனில் இதுபோல் ஒரு சந்தர்ப்பம் எனக்கு மீண்டும் வாய்க்குமா என்ற சந்தேகம் தானே அன்றி வேறொன்றுமில்லை !

   Delete
  4. அப்படி எனில் ஓக்கேதான்.

   Delete
  5. புரிதலுக்கு நன்றி மிஸ்டர் King Viswa !

   Delete
 4. வாழ்த்துகள், நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. udhay : நண்பரே, உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி !

   லயனில் உங்கள் பதிவை படித்த வரை நீங்கள் ஒரு ஜென்டில்மேன் !

   Delete
  2. இந்த பாராட்டுக்கு நான் உரியவன் அல்ல எனினும் மிக்க நன்றி!
   "ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு!" சரிதானே, நண்பரே!

   Delete
 5. பதிவுகள் சிறக்க வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
  Replies
  1. :). ராகவன் எங்கே போனீங்க ???லயன் ப்ளாக் பக்கமா ஆளையே பாக்க முடியல ??? வந்து நம்ம ஜோதியில ஐக்கியம் ஆகுங்க BOSS !

   Delete
  2. Comic Lover : வாருங்கள் வாசக நண்பரே ! தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. நீங்கள் 'காமிக் லவராக' ஆசிரியருக்கு மட்டுமல்ல எனக்குள்ளும் அப்படிப்பட்ட பிம்பத்தை தான் உருவாக்கி வைத்துள்ளீர்கள். என் பதிவுகள் பற்றி உங்களின் வெளிப்படையான கருத்துகள் இங்கு ஒரு நல்ல கலந்துரையாடலை எதிர்காலத்தில் ஏற்படுத்தக் கூடியதாக அமையும்.

   கோபம் மட்டும் வேண்டாமே.. ப்ளீஸ். fingers crossed :)

   Delete
  3. இது "அது" இல்லை.

   Delete
  4. அது இது எது நண்பரே ? வெளிப்படையாக சொல்லுங்கள். விஜய் TV programme போன்றதே இதுவும் !

   Delete
  5. அன்பர் மரமண்டை இது comics lover ராகவன் இல்லை என்பதாகவே எனக்கு தெரிகிறது அவராக இருந்தால் மகிழ்ச்சி, ஆனால் இது அவர் இல்லை

   Delete
  6. உத்தம புத்திரன் : அன்பை முதல் வார்த்தையாக கொண்டு பதிவிட்ட நீங்களும் அன்பானவராகவே இருப்பீர்கள். மிகவும் சந்தோஷம் நண்பரே ! இது ஒரிஜினல் comics lover என்றே என் உள்ளுணர்வு கூறுகிறது. அப்படி இல்லாத பட்சத்தில் எனக்கு இரண்டு பல்ப் நிச்சயம் :)

   தங்களின் பதிவை சார்ந்து இங்கு ஒரு விஷயத்தை பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். லயன் ப்ளாகில் நான் மிகவும் ரசித்தது, சமீபமாய் அங்கு பதிவிடப்பட்ட 'க்ளோனிங்' பதிவுகளே; dharman No ; Aristotil M ; தௌஃபீக் காஜா ; போன்ற கார்பன் காப்பி பதிவுகள்; ஆனால் அதையெல்லாம் தூக்கிச் சாப்பிடுவது போல் பதிவிடப்பட்ட ஒரு பதிவு ஒன்று உண்டென்றால் அது Luckyboy என்ற ஆராய்ச்சியாளரின் பதிவுகள் தான். கார்பன் காப்பி பதிவுகள் புன்முறுவலையும் அளவான நகைப்பையும் பல நாள் கொடுத்தது என்றால் இந்த க்ளோனிங் விஞ்ஞானி Luckyboy ன் பதிவுகள் வாய்விட்டே சிரிக்கச் செய்தது :)

   நாணயத்திற்கு இரண்டு பக்கம் என்பதாய் இந்த க்ளோனிங் ID கள் ஒரிஜினல் வாசகர்களை சற்றே காயப்படுத்தி இருந்தாலும் மறுபக்கத்தில் போலிகளில் சிறந்த சீனாவின் அக்குபஞ்சர் வழிமுறையை நமக்கு ஞாபகப்படுத்தியது என்றே கூறலாம் !

   Delete
  7. // சமீபமாய் அங்கு பதிவிடப்பட்ட 'க்ளோனிங்' பதிவுகளே; dharman No ; Aristotil M ; தௌஃபீக் காஜா ; போன்ற கார்பன் காப்பி பதிவுகள்;//

   தர்மன் No : http://comichaterbarghavan.blogspot.in/2013/07/blog-post.html

   தௌஃபீக் காஜா: http://komikology.blogspot.in/2013/06/blog-post_12.html

   FYI

   Delete
  8. இது அந்த போண்டா பார்கவன் இல்லை

   Delete
  9. King Viswa : மிஸ்டர் தல ! நீங்க உண்மையாகவே King தான் என்று நினைக்கிறேன். உங்களுக்கு வலையுலகத்தில் தெரியாத லிங்கே இந்த உலகத்தில் இல்லையென்று தெரிகிறது !

   ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது; அது Comic Hater மற்றும் தௌஃபீக் காஜா விடம் சீனாவே கைகட்டி வாய்பொத்தி, தொடர்ந்து நாலு நாள் பிச்சை எடுக்க வேண்டும்; இனி அவர்கள் MADE IN CHINA என்று போடவே வெட்கப்படுவார்கள் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது நண்பரே !

   Delete
 6. வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள் தோழரே! உங்க அனைத்து சிந்தனைகளையும் வலைப்பூவில் தூவி மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள்! என்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன் ஜானி (முகம் காட்டி மகிழ செய்ய ஆலோசியுங்கள் தோழா!)

  ReplyDelete
  Replies
  1. ஐ! மிக மிக மிக தெளிவாகப் புரிய வைத்து விட்டீர்கள் நண்பரே! தங்கள் மகனுக்கு என் ஆசிகள்! மிகுந்த மகிழ்ச்சி! இப்படியே தொடருங்கள்! வாழ்த்துக்கள் மீண்டும்!

   Delete
  2. ஐ என்ற ஒற்றை எழுத்தில் சிரிக்க வைத்து விட்டீர்கள். தங்களின் ஆசிக்கு மனம் நிறைந்த நன்றிகள் நண்பரே !

   Delete
 7. பிளாக்கர் உலகத்துக்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும் நண்பரே! உங்கள் திறமையான அழகு தமிழ் நடையில் எண்ணங்களை வண்ணமயமாக இங்கே அமர்களப்படுத்துங்கள். வாழ்த்துக்கள் !!

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே ! ஒரு பனி நாள் பதிவு ன் மறுநாள் பதியப்பட்ட உங்களின் பதிவுகள் இன்னும் என் நினைவை விட்டு அகலவே இல்லை. முகம் தெரியாத என்னிடம் நீங்கள் காட்டிய கரிசனமும், ஒரு நேர்மையான, திறமையான வழக்குரைஞராக நீங்கள் எடுத்து வைத்த வாதங்களும் அங்கே அளவிட முடியாதவை. தங்களுக்கு நன்றி சொல்ல இங்கே கடமைப் பட்டுள்ளேன் !

   மேலும் அழிக்கப்பட்ட பதிவுகளின் ஈமெயில் உங்களிடம் இருந்தால் எனக்கு அனுப்பிட இயலுமா என அறிய விரும்புகிறேன். ஏனெனில் அப்பொழுது நான் email subscription செய்திருக்கவில்லை. அதில் நான் என்னுடைய பதிவுகளை மட்டும் இங்கு சாட்சிக்கு காட்சியாக்க விரும்புகிறேன் !

   Delete
  2. டியர் மம, அந்த episode டை கடந்து வாங்க நண்பா!
   இங்கே யாரும் யாருக்கும் எதற்கும் (PLEASE UNDERLINE ) விளக்கம் தர வேண்டிய அவசியமும் இல்லை,தங்களுடைய innocenceசை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. பழைய குப்பைகளை முதுகில் கட்டிக்கொண்டு திரிவதால் நம்முடைய கால விரயத்தை தவிர நாம் அடையப்போகும் பயன் தான் என்ன?
   இங்கே நான் உங்களிடம் எதிர்பார்பதெல்லாம் உங்கள் அழகுத்தமிழ் நடையில் நமது காமிக்ஸ் மட்டுமல்லாமல், உங்களுக்கு பிடித்த தலைப்புகள் மற்றும் பொது நிகழ்வுகளை பற்றிய CONSTRUCTIVE பதிவுகளை மட்டுமே.
   மீண்டும் சிந்திப்போம் : ).

   Delete
  3. நண்பரே தங்களுக்கு பதிலளிக்க மிகவும் தாமதமாகி விட்டதற்கு முதலில் மன்னிப்பை கோருகிறேன். என் தாமதத்திற்கான காரணத்தை நீங்கள் அறிய நேர்ந்தால் என் மன்னிப்பை நிச்சயமாக ஏற்றுக் கொள்வீர்கள் என்றே நம்புகிறேன். உங்களைப் போல நானும் உங்கள் பெயரை ஷார்ட்டாக எழுத வேண்டும் என்று நினைத்து; முதலில்

   டியர் விசு : என்று எழுதினேன்; ஆனால் அது செம யூத் ஆன உங்களின் வயதை உயர்த்திக் காட்டுவது போல் உணர்ந்ததால் அதை கைவிட்டு விட்டேன். இரண்டாவதாக

   டியர் விஸ்கி : என்று எழுதினேன்; ஆனால் அது நாம் அன்றாடும் பருகும் விஸ்கியை ஞாபகப் படுத்தியதால் அதையும் சட்டென மறுத்து விட்டேன். மூன்றாவதாக

   டியர் சுஸ்கி : என்று எழுதினேன்; ஆனால் அது ஜப்பான் பைக்கை கண்முன் நிறுத்துவதால் அதையும் பட்டென நிறுத்தி விட்டேன். இதுவே என் தாமதத்திற்கான காரணம். நிற்க;

   என் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை திருப்பி வைத்து ஒரு போடு போட்டது போல் தங்களின் வாதத்தை நறுக்கென்று நாலு வரியில் கூறி விட்டீர்கள். உங்களின் கருத்து சிறந்த நடைமுறை யதார்த்தத்திற்கு ஏற்றதாகவும், நம் சீரிய சிந்தனைக்கு சில்லென்றும் இருப்பது உண்மைதான்; எனவே அதை நான் மறுக்க விரும்பவில்லை; இருந்தாலும் என் தரப்பு வாதத்தையும் கொஞ்சம் படித்து தான் பாருங்கள் நண்பா !

   தொடர்கிறது..

   Delete
  4. 1. //வரலாற்றை மறக்க எத்தனிப்போரை - அதனை மீண்டுமொருமுறை வாழ்ந்து அனுபவித்து நினைவு கூறச் செய்வது வாழ்க்கை நியதி// நான் அந்த வரலாற்றை திரும்பி பார்க்காத பட்சத்தில் மீண்டும் ஒருமுறை அதை வாழ்ந்து அனுபவிக்க வேண்டி வருமோ என்று திடமாக அஞ்சுகிறேன். எனவே அதை இங்கு தெளிவாக்கி விடவே விரும்புகிறேன். இதை சீரியசாகவே நான் எழுதுகிறேன் :(

   2. அழிக்கப்பட்ட அந்த பதிவுகளில் என் பதிவை மட்டுமே தேர்ந்தெடுத்து இங்கு ஒரு பதிவாக பதிவிட அதிகப்பட்சம் ஒரு நாள் மட்டுமே ஆகும். அந்த சிறு கால விரயம் தரும் பயன் இந்த மிஸ்டர் மரமண்டையின் வாழ்நாள் முழுவதும் துணை நிற்கும்.

   3. அதில் நான் பதிவிட்ட முக்கியமான எட்டு பதிவுகளை நான் மிகவும் விரும்பி எழுதியிருந்தேன்; அந்த பதிவுகளை நானே மீண்டும் படிக்க ஆசைப்படுகிறேன்; அதுபோல் அதை எழுதிய நோக்கமும் அழிந்து விட்டதை புதுப்பிக்க விரும்புகிறேன். ஆசிரியர் விஜயன் அவர்களின் வலைப்பூ வளர்ச்சிக்காகவே அவ்வாறு எழுதப்பட்டது என்பதை எவரும் அறியாமலேயே அல்லது படிக்காமலேயே போய்விட்டது. அந்த நோக்கம் இங்காவது தெளிவாக்கப்பட வேண்டாமா.. நீங்களே கூறுங்கள் !

   மேலும் வாசகர் Utha man அவர்களுக்கு நான் அளித்திருந்த பதிலும் லயன் வலைப்பூவிற்கு முக்கியமான ஒன்றாகவே கருதுகிறேன். நான் ஒரு பதிவை எழுதி அது காணாமல் போய் விட்டால் மீண்டும் என்னால் அதேபோல் சிந்தித்து எழுத முடியாது என்பதும் ஒரு காரணம். நான் இந்த பதிவின் ஹாட்லைனில் கூறியப்படி மனதில் தோன்றுவதை அப்படியே கீ போர்டில் அடிப்பதால் மீண்டும் மனதிலிருந்து க்ளோனிங் செய்ய முடிவதில்லை நண்பரே !

   Delete
 8. தெரிந்த முகம் என்பது உங்களுக்கு ஒரு வித சங்கடத்தினை அளிப்பதாக இருந்தாலும் பொது வாழ்வில் இவ்வளவு முகமூடிகள் அவசியம்தானா? நல்ல நண்பர்களை நிச்சயமாக நீங்கள் அடைவீர்கள்! கன்சிடர் பண்ணுங்க!

  ReplyDelete
  Replies
  1. John Simon C : நண்பர் விஸ்வாவுக்கு அளித்துள்ள பதிலிலேயே தங்களுக்கான விடையும் அமைந்து விட்டது நண்பரே ! இது முகமூடி அல்ல, என்னுடைய புனை பெயராகவும் நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம் தானே ? இப்பொழுதும் உங்களைப் போன்ற பல நண்பர்களின் ஆதரவு இருக்கும் போது எனக்கென்ன கவலை நண்பரே !

   நான் புதிய முகம்; எவருக்கும் என்னை தெரியாது; எனக்கும் எவரையும் தெரியாது !

   Delete
  2. true!!! hmm! take the blog hottest n coolest riding place ji! my advance wishes!!

   Delete
 9. Replies
  1. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : நண்பரே நீங்களும் கலந்துக் கொள்வதாக இருந்தால் ஸ்டார்ட் மியூசிக் என்ன இங்கு ஸ்டார்ட் குத்தாட்டமே நடத்தலாம் :)

   என்ன நீங்கள் ரெடியா ? ஒரு கை ஓசை வராது நண்பரே !

   Delete
 10. VALTHUGAL NANBARAY...

  Thodarungal thodarugirom...

  ReplyDelete
  Replies
  1. Paranitharan K : நன்றி பரணிதரன். லயன் ப்ளாகில் கலக்கி விட்டீர்கள். உங்களின் கடிதம் அனைவரையும் புரட்டிப் போட்டு விட்டது. இந்த வார சூப்பர் ஸ்டார் நீங்கள் தான் நண்பரே !

   Delete
  2. நண்பர் மரமண்டை அவர்களுக்கு ..,
   தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி .பட் தமிழ் நாட்டில் இந்த வாரம் மட்டுமல்ல எந்த வாரமும் ,எந்த மாதமும் ,எந்த வருடமும் உள்ள சூப்பர் ஸ்டார் மூன்று பேர் மட்டுமே .
   ஒன்று ரஜினி காந்த்....


   இரண்டு டெக்ஸ் வில்லர் ...


   மூன்று s .விஜயன் ...

   Delete
 11. நண்பர்களே மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது உங்களின் நல்வரவுகள் ! இங்கு பதிவிடப்படும் உங்கள் ஒவ்வொருவரின் பதிவுக்கும் சுவாரசியமான ரகசியங்கள் அடங்கிய கருத்துகள் பதிலாக அமைய வேண்டும் என்பதே என் குறுகிய கால திட்டமாக இருப்பதால் நண்பர்கள் நீங்கள் அனைவரும் சற்று தாமதத்தை பொறுத்தருள வேண்டுகிறேன்.

  நண்பர்களே தங்களின் கருத்துகளால் இந்த வலைப்பூவை அலங்கரித்து ஆசிரியர் விஜயனின் கரங்களுக்கு வலு சேர்ப்போம்! அவரின் உன்னத முயற்சிகளுக்கு இன்று போல் என்றும் தோள் கொடுப்போம்!

  கலாய்க்கலாம் வாங்க :)

  இவண்;

  த கா மு க
  தமிழ் காமிக்ஸ் பள்ளிக்கூடம் !

  ReplyDelete
 12. Erode VIJAY : தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி !

  தற்போது இங்கு வரப்போவது எல்லாமே warm-up பதிவுகள் தான். என்னை பற்றி நண்பர்கள் தெளிவாக புரிந்துக் கொள்ளாத வரை நான் எதையும் தற்சமயம் புதியதாக எழுதப் போவதில்லை. நான் ஏற்கனவே லயன் ப்ளாகில் எழுதியதை இங்கு சுவாரசியமான தலைப்பில் தொகுத்து பதிவிடப் போகிறேன். இதன் மூலம் நான் லயன் ப்ளாகில் பதிவிட்ட நோக்கமும், அதை பாழ்படுத்திய எதிர் பதிவுகளும் இங்கு வருகை தரும் நண்பர்களுக்கு தெளிவாக புரியும். இங்கு நான் சுற்றி வளைக்க விரும்பவில்லை; அதனால் என் பதிவுகளை நண்பர்கள் பார்வையிடும் பட்சத்தில் பல உண்மைகள் வெளிப்படலாம்.

  அதற்கு தீர்ப்பு எழுதுபவர்கள் இங்கு வருகை தரும் உங்களைப் போன்ற நண்பர்களாகவே இருப்பார்கள் !

  ReplyDelete
  Replies
  1. In addition to what you had mentioned (i.e. providing explanation to your editor blog's comments), please try to write some new things (like comic book review, your view on tex willer/Tiger, etc..) also about Tamil comics.

   Congrats again on starting a new tamil comics blog

   Delete
  2. V Karthikeyan : நன்றி கார்த்திகேயன், உங்களின் கருத்து நடைமுறைக்கு ஏற்றதாகவும், யதார்த்தை தாங்கி நிற்பதாகவும் பிரதிப் பலிக்கிறது. என்னுடைய பழைய பதிவுகள் சிறு தொகுப்பாக இங்கு உருவெடுக்கும் போது சில விஷயங்களை அதாவது காமிக்ஸ் பற்றிய மாறுபட்ட கண்ணோட்டத்தை பார்வையாளர்களுக்கு உண்டாக்கும் என்றே நினைக்கிறேன்.

   இருந்தாலும் தங்களின் அன்புக்கு கட்டுப்பட்டு அடுத்த பதிவின் தலைப்பு All New Special என்றே அமைக்க விரும்புகிறேன். இந்த ரசனைக்கு மயங்காத நண்பர்கள் அவர்களின் கருத்துகளை இங்கே பதிவிட வசதியாக இருக்கும் என்ற ஒரு காரணமும் மறைபொருளாக இங்கே தொங்கி நிற்கிறது !

   தங்களின் வாழ்த்துக்கு நன்றி நண்பரே !

   Delete
 13. AHMEDBASHA TK : நண்பரே நானும் உங்களைப் போல உங்களில் ஒருவன் தான் ! என் மீது தலைமை கழகத்தில் சுமத்தப்பட்ட களங்கத்தை இங்கு என்னால் துடைத்தெடுக்கப் படுமானால் அது இறைவன் எனக்கு அளித்த வரமாகவே இருக்கும்; தொடர்ந்து உங்களின் கருத்துக்களை உங்களின் விருப்பு வெறுப்பு படியே இங்கு பதியுங்கள் நண்பரே !

  ReplyDelete
 14. திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் : நன்றி நண்பரே, நீங்கள் இங்கு வருகை தந்தமைக்கு மிகவும் சந்தோஷம். லயன் ப்ளாகில் பலருடைய பெயரின் [ ID ] தலையெழுத்தையே மாற்றி அமைத்தவர் நீங்கள் என்பது அங்கு உள்ள நீண்ட நாள் வாசகர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் :) ஆழ்ந்த ரசனையும், கூர்மையான யோசனையும், அமைதியான போக்கும் கொண்டவர் நீங்கள் !

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. Msakrates : வாழ்த்துகளுக்கும், உங்களின் வருகைக்கும் நன்றி நண்பரே !

   Delete
 16. hai friend , i wish u big sucess! உங்கள் தளம் வரலாறு படைக்க வாழ்த்துகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. Dr.Sundar,Salem : சில நண்பர்களை நாம் பார்க்காமலேயே அவர்கள் மீது அளவு கடந்த மரியாதை ஏற்பட்டுவிடும். அது போல் நானும் உங்களைப் பற்றி ஏதும் அறியாமலேயே உங்களின் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அது ஏனென்று இன்று வரை நான் அறியவில்லை. இது நிற்க;

   உங்களை போன்ற நண்பர்களின் ஆதரவு இன்றி என்னால் எதைத் தான் சாதிக்க முடியும் என்றே தெரியவில்லை. எனவே நீங்கள் தவறாமல் என் கருத்தை மறுத்தாவது இங்கு ஏதாவது பதிவிட வேண்டுகிறேன் நண்பரே !

   தங்களின் கனிவான வாழ்த்துக்கு என் நன்றி மட்டுமே இங்கு பதிலாகாது !

   Delete
 17. வாழ்த்துக்கள் நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. WillerFan@RajaG : நண்பரே உங்களைப் பற்றி நன்கு அறியா விட்டாலும் உங்களின் க்ரூப் பை பற்றி நன்கு அறிந்துள்ளேன். அருமையான அமைதியான பெருமைப் பட வைக்கும் கூட்டணி உங்களுடையது. உதாரணம் கூற வேண்டுமானால் முதல் வருடம் படிக்கும், முதல் ஐந்து ரேங்க் எடுக்கும் கல்லூரி மாணவர்களின் அழகான கூட்டணி என்றே கூறலாம்.

   தங்களின் வாழ்த்துக்கு நன்றி நண்பரே, தங்களின் நண்பர்களையும் கேட்டதாக கூறவும் !

   Delete
 18. டியர் மரமண்டை!!!
  புதிய வலைப்பூவிற்கு நல்வாழ்த்துக்கள்.இந்த இனிய தருணத்தில் தங்கள் உண்மையான பெயரை வெளியிடுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.உங்கள் மொழிநடைக்கு என்றும் நான் ரசிகன்.பட்டையை கிளப்புங்கள்.மீண்டும் நல்வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
  Replies
  1. saint satan : நண்பரே நீங்கள் பிசாசுகளின் தலைவன் என்பதாலேயே முன்பு லயன் பூவில் கட்டுக்கடங்காமல் பதிவிட்டு வந்தேன். ஆனால் நீங்கள் திடிரென இருட்டுக்கு பயந்து பிரேசில் நாட்டிலுள்ள யுகாட்டானில் 'மச்சினியோ மச்சானோ' வை சந்தித்து அவருடன் கூட்டணி அமைத்து விட்டீர்கள். அதற்கு பிறகு நான் எங்கே பட்டையை கிளப்ப முடிந்தது ?

   அதனால் இங்காவது அதாவது இந்த வலைப்பூவிலாவது தங்களின் சாத்தான் சக்தியை இந்த மரமண்டைக்கு அருள்பாளிப்பீர்கள் என்றே நம்புகிறேன் :) மற்றபடி உங்களின் வாழ்த்துகளுக்கும் ஆசிர்வாதத்திற்கும் ஒரு குடம் 'நல் நேர நஞ்சு' கட்டாயம் உங்களுக்கு காணிக்கையாக கொடுக்கப்படும் !

   Delete
 19. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. நண்பர் அரிஸ்டாட்டில் மன்னிக்கவும் சாக்ரடீஸ் ஏன் தன்னுடைய கமெண்ட்டை அழித்து விட்டார் என்று தெரியுமா?

   இங்கே கமெண்ட் செய்ததால் அவரை நாட்டாமை படத்தில் வரும் பசுபதியை போல ஊரை (facebook என்று படிக்கவும்) விட்டு ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்ற பயமா?

   (ஆறும் அவனுக்கு அன்னம்,தண்ணி தரக்கூடாது, ஆறும் அவன்கூட பேசக்கூடாது etc)

   Delete
  2. லூசு - father of லூசு பையன் : நண்பர் சாக்ரடீஸ் உண்மையில் ஒரு நல்ல மனிதரே; ஆனால் அவர் தன் பதிவுகள் வித்தியாசமானதாகவும், சற்றே காரசாரமாகவும் இருக்கவேண்டும் என்று நினைத்து பதிவிடுவதால் அந்த பதிவு தன் உணர்வை இழந்து விடுகிறது !

   உதாரணமாக காரைக்குடி கறிக்குழம்பு செய்ய நினைத்து அவர் தயாரித்தால் அதில் மஞ்சளும் உப்பும் ரொம்பவே தூக்கலாகி விடுகிறது. இதில் ரசிக்கத் தக்க தன்மை என்னவென்றால் அவர் ஒவ்வொரு முறையும் அந்த ஆட்டுக்கறி குழம்பை அதே சுவையுடன் தயாரிப்பது தான் ரொம்ப ரொம்ப விஷேசமான ஒன்றாக அமைந்திருக்கிறது !

   இருந்தாலும் இந்த //நாட்டாமை - பசுபதி// மேட்டர் அதாவது //ஆறும் அவனுக்கு அன்னம்,தண்ணி தரக்கூடாது, ஆறும் அவன்கூட பேசக்கூடாது etc// பற்றிய உண்மையை கண்டறிய, லயன் ப்ளாகின் சீனியர் கமெண்டர் ஒருவரின் தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்று அமைக்கப்படும் என்று இங்கு உறுதி அளிக்கிறேன் நண்பரே !

   Delete
 20. நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. Meeraan : நன்றி மீரான், நீங்கள் நல்லவர் மிகவும் அன்பானவர் என்பதை தவிர வேறொன்றும் எனக்கு சொல்லத் தெரியவில்லை ! நேரம் இருக்கும் போதெல்லாம் உங்களின் கருத்தை இங்கு பதிவிட வேண்டுகிறேன் !

   Delete
 21. Replies
  1. மஞ்சள் சட்டை மாவீரன் : வாருங்கள் நண்பரே உங்களை வரவேற்க இந்த தமிழ் காமிக்ஸ் பள்ளிக்கூடம் காத்துக் கொண்டிருக்கிறது !

   Delete
 22. Replies
  1. லூசு - father of லூசு பையன் : தங்களின் வருகை எனக்கு மிகவும் சந்தோஷம் அளிக்கிறது நண்பரே ! தங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தங்களின் கருத்துகளால் இந்த தளத்தை அலங்கரிக்க வேண்டுகிறேன் !

   Delete
 23. என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. லூசு - father of லூசு பையன் : தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி ! முன்பொரு முறை லயன் ப்ளாகில் என்ன எழுதுவது என்று யோசித்தபொழுது TOP 5 புனை பெயர்களுக்கான போட்டியும் அதற்கான விருதும் அதற்கேற்ற பணமுடிப்பும் வழங்கலாம் என்று முடிவே செய்து விட்டேன். ஆனால் அடுத்த நாள் என் அருகில் யாருமே இல்லாமல் அனைவருமே மறைந்து போன சூழல் உருவாகி விட்டது !

   அதற்கு பின், தனி மரம் தோப்பாகாது ஆனால் பொறாமை எனும் தீ யிக்கு விறகாகி விடுமே என்ற தொலைநோக்கு பார்வையினால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. அப்படி ஒரு போட்டி லயனில் நடைப்பெற்றிருந்தால் சந்தேகத்துக்கு இடமின்றி முதல் பரிசை தட்டிச் சென்றவர் நீங்களாகத் தான் இருந்திருப்பீர்கள். இதுபோன்று ஒரு அறிவுப்பூர்வமான, நய்யாண்டித்தனமான, சிந்தனைக்கு ஆழமான ஒரு புனைபெயர் லயன் ப்ளாகில் காணக் கிடைத்தது என்றால் அது நய்யாண்டி ரசனை போன ஜென்மத்தில் செய்த புண்ணியமாகத்தான் இருந்திருக்க வேண்டும் !

   Delete
 24. நண்பர்களே புதிய பதிவு ALL NEW ஸ்பெஷல் சற்று முன் பதிவிட்டுள்ளேன் ! தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது உங்களின் வெளிப்படையான ரசனையை இங்கு பதிவிட்டால் ALL NEW ஸ்பெஷல் புத்தகத்தின் விமர்சனமும், அதைப்பற்றிய உங்களின் பார்வையும், என் பதிவும் முழுமை அடையும் என்று நினைக்கிறேன் !

  ReplyDelete
 25. புதிய வலைப்பூவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே! தொடர்ந்தும் பதிவிடுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. Podiyan : தமிழ் காமிக்ஸ் காதலர்களாக இருக்கும் நாம், அவரவர் பதிவிடும் கருத்தில் மட்டுமே வேறுபடுகிறோம்; ஆனால் நம் உள்ளத்தில் காமிக்ஸ் வாசகர்கள் அனைவரிடமும் நண்பர்களாகவே வாழ்கிறோம் என்பதை இன்றைய உங்களின் இந்த பின்னூட்டம், உலகுக்கு உண்மையை உரக்கச் சொல்வதாக அமைந்து விட்டது !

   தங்களின் வாழ்த்து மிகவும் சந்தோஷத்தை தருவதாக அமைகிறது. நன்றி நண்பரே !

   Delete

 26. தாமதமான வாழ்த்துக்கள்.

  உங்கள் கருத்துக்கள் தாக்கத்தை ஏற்படுத்தியதை யாரும் மறுக்கமுடியாத உண்மை.

  இனிதே எல்லாம் நடக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. ஹஜன் சுந்தர் : மனம் இனிக்கச் செய்யும் தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே !

   சமிபத்தில் கூட உங்களின் பழைய லயன் வலைப்பூ கமெண்ட் ஒன்றை மேற்கோள் காட்டி லயன் ப்ளாகில் பதிவிட்டு இருந்தேன். அவ்வளவு ஆழமான கருத்துகள் உங்களுடையது என்றால் அது மிகையல்ல !

   Delete