Follow by Email

Saturday, 27 July 2013

மறுபதிப்பு !

1.மர மண்டை10 November 2012 17:16:00 GMT+5:30

இதுவரை மறுபதிப்பு கேட்ட நண்பர்கள் அனைவருக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம் !

வறுமையில் வாட்டம் ; தொழிலில் போராட்டம் ; கடனில் தள்ளாட்டம் ; வாழ்வதே ஒரு கரகாட்டம் என வாழ்க்கையில் சற்று இளைப்பாறவே ஐந்தாவது எட்டை தொட்டு விடுகிறோம். அப்பொழுதும் வாழ்க்கை என்னும் வழக்காடு மன்றத்தில் நம் வாதம் வெற்றிப்  பெறுவதில்லை. வாதம் செய்து கொண்டே நம் வாழ்க்கைப் பயணம் முடிந்து விடுகிறது ! இந்தக் கால வெள்ளத்தில் முகம் தெரியாத நண்பர்களை நம்மிடம் கரைச்  சேர்ப்பது நம் ரசனை ஒன்று மட்டும் தான். இளைப்பாறுதலை இனிமையாக்க நண்பர்களின் எண்ணங்களும் குளிர்ச்சி தரும் நிழல்களே ! 

மறுபதிப்பு கேட்பவர்கள் எல்லாம் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் அல்ல. ஆனால் தங்களின் COMICS எவ்வளவு விலை என்றாலும் எத்தனை வெளியீடுகள் என்றாலும் சந்தோஷமாக வாங்கக்கூடிய நிச்சயமான பணக்காரர்கள் தான். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வரும் இரண்டாவது வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்பவர்கள் தான் சரித்திரம் படைப்பவர்கள். அவர்களே சாதனையாளர்கள். குறையற்று எதுவும் இவ்வுலகில் இல்லை ; நம் பார்வையை பொறுத்தே நம் சாதனை ; என் முனைப்பும், முயற்சியும் போதும் என்றால் அது என் தனிப்பட்ட விளைவு. ஆசிரியர் விஜயன் முடிவு செய்தால் அது எங்களில் பலருக்கு மிகப்பெரிய இழப்பு ! 1991 -ல் மன்மோகன்சிங் எடுத்த தைரியமான முடிவு தான் இன்று கீரை விற்கும் பாட்டி கையில் உள்ள மொபைல் ஃபோன் ! 

வாய்ப்பு இருக்கிறது என்றால் வாங்கும் வசதி தானாக உருவாகி விடும். அன்று மிகச் சாதரணமாக 100 ரூபாயை சமாளித்து விட்ட  தாங்கள் கூறிய அந்தச்  சிறுவன், அதற்கு அடுத்த வாரம் இதேபோல் ஏன் மீண்டும் அதுபோன்ற வாய்ப்பை பெறமுடியாது என்று நினைக்கிறீர்கள் ? இன்றைய சிறுவர்களில் வசதியற்றவர்கள் என்றால் வீதி விளையாட்டுகளிலும், TV கார்ட்டூன் சேனல்களிலும், பணக்காரர்கள் என்றால் Computer Games ; Facebook  ; English Comics  என்றும் இடைவெளி இல்லாமல் காலம் ஓடுகிறது. இதில் விலை குறைவாக விற்றால் மாற்றம் வரும் என எப்படி நினைக்க முடியும் ?

விதைக்கும் விதை முளைக்கவேண்டும் என்று வெளிச்சத்திற்காக, நிழல் தந்து பழம் தரும் மரத்தை வெட்டுவது என்ன நியாயம் ? நாங்களும் ஒரு காலத்தில் வெளிச்சமும் தண்ணீரும் இல்லாமல் போராடி வளைந்தே வளர்ந்தவர்கள் தாம். வாழ்க்கை என்னும் கட்டாய ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்களைத்து எப்படியோ வெற்றிக்கோட்டை தாண்டிவிட்டோம். இங்கு வெற்றியா தோல்வியா என்பது முக்கியமல்ல ; இனி அடுத்த தகுதிச்  சுற்றுக்கு தயாராக வேண்டும். இந்த இடைவெளி இளைப்பாறுதலில் அவரவர் ரசனை எதுவோ அதை நாடுகிறோம். இதில் தவறென்ன ? அல்லது குறையென்ன ? அடுத்தகட்ட இளைப்பாறுதலில் எங்களின் காமிக்ஸ் மட்டுமே இன்பத்தையும் ; அமைதியையும் ; உணர்ச்சி கலந்த உயிரோட்டத்தையும் கொடுத்து எங்கள் சுற்றத்தை நாங்கள் சிறிதும் குறை காணாமல் வாழ கற்றுக் கொடுக்கும் என்று நம்புகிறோம். இதில் வயதென்ன ? வசதியென்ன  ? எதுவுமில்லை எல்லாம் வாய்ப்பு மட்டும் தான். இன்று கேட்காமல் இன்னும் 10 வருடம் கழித்தா கேட்க முடியும் ? இன்றே இப்படி நாளை யாரறிவர் ?! 2.மர மண்டை10 November 2012 17:55:00 GMT+5:30

கரைந்துவிட்ட காலங்களாலும் ; கலைந்துப்  போன கனவுகளாலும் ; சில சமயம் கற்பனைகள் கூட கசப்பாகவே உருவாகும். தொலைந்து விட்ட நித்திரையில் பலசமயம் நம்மை கேட்காமல் வரும் கனவுகள் கூட வலியையும், வேதனையையும் தருவதாகவே அமையும். வெற்றிடமான வானத்தை மல்லாந்துப்  பார்த்து ரசிப்பதைப்போல வாழ்க்கையின் வழித்தடமான காமிக்ஸை  நோக்கி விழிவைத்து காத்துக்கிடப்பதும் சுகமானதே !

மறுபதிப்பு செய்யவேண்டும் என்றால் எப்படியும் செய்யலாம். ஆள் பலமும் ; விலையில் பிரிமியம் அதிகமாகவும் சேர்த்துக்கொண்டால் ஏன் இயலாது ? உதாரணமாக 1000 Copy  கட்டாயம் என்ற இடத்தில் 300 booking [printing அல்ல] கூட போதுமானது. இது வியாபார லாப நோக்கல்ல ; ஓர் விரிவாக்கச்  சிந்தனை. ஒரு பத்து பேருக்கு 2 வருட ஒப்பந்த வேலை தங்கள் மூலம் கிடைத்தது போலவும் இருக்கும், எங்களின் விருப்பமும் நிறைவேறும். தாங்களும் தமிழ் காமிக்ஸ் உலகின் முடிசூடிய மன்னனாக வரலாற்றில் இடம் பெறுவீர்கள் !

மறுபதிப்புகள் அனைத்தும் இன்றைய தரத்தில் வெளியிடுவதே சிறந்ததாக அமையும். இன்னும் 50 வருடத்திற்கும் மேலாக பாதுகாக்கப்  பட வேண்டிய புத்தகங்களின் தரம் அப்படித்தானே இருக்க வேண்டும் ? வருங்காலங்களில் தமிழ் வழிக் கல்வி எந்த அளவு இருக்கும் என்று கூற முடியாது. இன்றே பல சிறுவர்களுக்கு ஆறாம் வகுப்பு வரை தமிழ் படிக்கத்  தெரிவதில்லை. வருங்காலத்தில் எப்படியோ? தமிழ் காமிக்ஸ் வெளியீடுகளும் எந்த அளவு வெற்றி பெறும் என்பதும் சொல்ல முடியாது அல்லவா ? தயாரிக்க எளிதாகவும், விலை குறைவாகவும் கொடுக்க வேண்டும் என்பதற்காக NOKIA 2000 வருடத்திற்கான மாடலை மீண்டும் அப்படியே கொண்டு வருவதில்லை. வாழ்க்கையின் வெற்றிக்கு உயர்வாகவும் ; பெரிதாகவும் சிந்திப்பதும் ஒரு காரணிதானே !7 comments:

 1. முதல்வன்.

  மறு பதிப்புகளுக்கு ஒரு பெரிய +


  தொடரும் உங்கள் பதிவுகளுக்கு மற்றுமொரு +

  ReplyDelete
  Replies
  1. King Viswa: முதலவன் என்பவன் தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்கு என்றுமே தலைவன் தான் !

   உங்களின் ஆதரவு என்னுடைய வலைத்தளத்திற்கு கிடைத்த மிகப்பெரிய சோலார் எனர்ஜியாகும் !

   நம் வாழ்க்கையின் சின்னஞ்சிறு இடர்பாடுகளை கடந்துவர ஏதாவது GIFT இருந்தால் எனக்கு தரவும் :)

   Delete
  2. King Viswa:

   //நம் வாழ்க்கையின் சின்னஞ்சிறு இடர்பாடுகளை கடந்துவர ஏதாவது GIFT இருந்தால் எனக்கு தரவும்//

   //Labels: gift to mister mara mandai //

   சிரிச்சு ரொம்ப நாளாச்சு , ஏதாவது காமிக்ஸ் க்ளோனிங் லிங்க் இருந்தா தாங்க சார் !

   Delete
 2. Mr.ப்ளாக் ஓனர்,

  நீங்கள் இப்படி தனியாக முதலிலேயே பதிவிட்டு வெறும் link மட்டும் அந்த ப்ளாகில் கொடுத்திருந்தால் ...

  ... உங்களுக்கு முன்னாடி மாற்று பெயர்களில் பதிவிட்டு கலகம் ஏற்படுத்திய பெயர் சொல்ல தைரியம் இல்லாத கோழைத்தனமான அடிவருடி மற்றும் அதிக விலை காமிக்ஸ் விற்பனை முட்டாள்களிடம் இருந்து கண்டிப்பாய் உங்களின் எண்ணங்களால் நீங்கள் தனித்து அறியப்ப் பட்டிருப்பீர்கள்.

  Anyways, better late than never ...! இப்போது சேர்த்து படிக்கும் பொது - நீண்டிருந்தாலும் - உங்கள் பதிவுகளில் பொருள் இருக்கிறது. Do continue ...!!

  ReplyDelete
  Replies
  1. Comic Lover: நண்பரே, முன்பே கூறியபடி நான் என்றுமே திட்டமிட்டோ, சிலநாள் சிந்தித்தோ லயனில் பதிவிடவில்லை. ஆசிரியரின் ஒவ்வொரு பதிவிற்கேற்ப நான் பதிவிட்டதால் என்னை எனக்கே அடையாளம் தெரியாமல் போய்விட்டது என்பதே உண்மை !

   ஆனால் லயனில் அனைவருக்கும் நண்பராகத் திகழும் நம் ஈரோடு விஜய் எனக்கு பதிலிட்ட வரிகளே என் வலையுலக பயணத்தின் மிகச் சிறந்த கைக்காட்டியாக எனக்கு வழிக்காட்டியது என்பதை இங்கு பகிரங்கமாக சொல்வதே சாலச் சிறந்ததாக இருக்கும் என்று நினைக்கிறேன்;

   // Erode VIJAY29 November 2012 14:02:00 GMT+5:30 மரமண்டை:
   இந்த ஆள்மாறாட்ட பிரச்சினைகூட உங்கள் எழுத்துக்களை வெகுவாக வெளிச்சமிட்டுக் காட்டிட வந்த நல்லதொரு வாய்ப்பாகவே கருதுகிறேன். அடையாளமில்லாதவர்கள் செய்திடும் குளறுபடிகள்கூட இந்த வலைப்பூ உயிரோட்டமுள்ளதாக அமைய ஏதோ ஒரு வகையில் உதவிடுவதாகவே எனக்கும் நினைக்கத் தோன்றுகிறது.

   பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தாமல் தொடர்ந்து உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள். பிரச்சினைகள்தான் உங்களைப் பேச வைக்குமென்றால், அந்த பிரச்சினைகளை வரவேற்கிறேன் :) //

   பி.கு: மிஸ்டர் ராகவன் இந்த உங்களின் உற்சாகம் எங்களை பரவசப்படுத்துகிறது. இதே ஸ்பிரிட்டில் லயனிலும் பதிவிடுங்கள். ஏனெனில் நீண்டுவிடும் இடைவெளி நம்முள் சோர்வையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தி விடும் !

   Delete
  2. Well said, comicslover! pls comeback to our lion blog...

   Congratulations Mr.Blog Owner!

   Delete
 3. இந்த ஆரம்பப் பதிவுகளே என் கவனத்தை ஈர்த்தது தொடருங்கள்!

  ReplyDelete