Follow by Email

Sunday, 28 July 2013

அடிடா பொடியா !

ஹாட்லைன்: ஒவ்வொரு நாட்டுக்கும் எப்படி அதன் வரலாறு முக்கியமோ அதுபோல் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவன் கடந்து வந்தப்  பாதை முக்கியமானதாகும். தன் சொந்த அனுபவ அறிவுக்காக மட்டுமல்லாமல்  மற்றவர்களின் சந்தேகத்தை நீர்த்துப் போக வைக்கும் சஞ்சீவி ஆவணமாக அவனுடைய வரலாறு முக்கியமாக பாதுக்காக்கப்பட வேண்டிய ஒன்றாகவே  உள்ளது ! எனவே ஒன்றுமில்லாத விஷயத்திற்கு ஊரை கூட்டி தம்பட்டம் அடித்த இந்தப் பதிவுகளையும் ஒரு பதிவாக இங்கு பதிவிடுவதே சாலச் சிறந்ததாகும் !

அடிடா பொடியா ! டம்! டம்! டம்! 

ஷார்ட்லைன்: கீழே உள்ள  சிக்பில்லின் இந்த கதையிலிருந்தே 'அடிடா பொடியா' காப்பி அடிக்கப்பட்டது !

ஷாட்லைன்:  இந்தப் பதிவுகள் அனைத்தும் லயனின் நினைவுகளுக்கு வயது நாற்பது -  பதிவில் இருந்து எடுக்கப்பட்டது !

1.மர மண்டை19 November 2012 10:50:00 GMT+5:30

மீ த செவன்டி ஃபோர்த், பின்னிட்டீங்க தல! 

அடிடா பொடியா !  டம்! டம்! டம்!


தங்களின் தரத்திற்கும் ; தங்களின் நேர்மைக்கும் ஒப்பீடாக தமிழ் காமிக்ஸ் உலகில் இதுவரை யாரும் இருந்தததில்லை. இனி யாரும் வரப்போவதுமில்லை!

அடிடா பொடியா ! டம்! டம்! டம்!


சிங்கம் எப்பொழுதும் சிங்கிளாத்தான் வரும் ! அது எழுந்து நடந்து வரும்போதுதான் அதன் கம்பீரம் மத்தவங்களுக்கு தெரியும்!

அடிடா பொடியா ! டம்! டம்! டம்!


பெரிய அப்பா-டக்கராக இருப்பதைவிட ஒரு காமிக்ஸ் வாசக ரசிகனாக இருப்பது செம டக்கரான விஷயம்! 

அடிடா பொடியா ! டம்! டம்! டம்!2.Vijayan 20 November 2012 22:18:00 GMT+5:30 

மர மண்டை : 74th ஆக வந்தே இந்தப் போடு போடுகிறீர்களே....!!

நம் பயணத்தில் இன்னும் எக்கச்சக்கமான தூரம் பாக்கியுள்ளது... அதன் நீளத்திற்கும் நான் ஒரு வாசக-ரசிகனாகவே இருந்திட்டால் அது எனது blessings ஆக இருந்திடும் ! Touch wood...


3.மர மண்டை20 November 2012 11:34:00 GMT+5:30


ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்: 

லேட்டா வந்தாலும் ரொம்ப லேட்டாத்தான் வந்திருக்கிறேன். இதெற்கெல்லாம் பன்ச் டயலாக் தேடிக்கிட்டிருந்தா இன்னும் லேட்டாகும். எங்கே   என்னோட ரசனையை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிட்டா இது மறை கழண்ட கேஸுனு நெனைச்சிடுவாங்கனு உள்ளுக்குள்ள ஒரு பயம்தான் வேறொன்னுமில்லை. அதனாலதான் 2 நாளு பொறுமையாக மிகுந்த பதட்டத்துடனும், பரபரவென்ற மனநிலையிலும், அமைதியிழந்த நிலையிலும் நிம்மதியாக இருந்தேன் ! ஆனா, அதுக்குள்ளே தலைவர் வேற ஒரு பதிவப்  போட்டுட்டா இந்தப் பக்கம் யாரும் எட்டிக் கூட பார்க்க மாட்டார்கள் என்பதால்தான் திடமனதுடன் இதைப் பதிவிடுகிறேன். லேட்டா வந்தாலும் ஒரு அட்வான்டேஜ் இருக்கத்தான் செய்கிறது. end, page down, load more செய்யும்போது கடைசியில் இருக்கும் பதிவை ஒரு பத்து பேராவது ''படித்து பார்ப்பாங்க மன்னிக்கவும் பார்த்து படிப்பாங்க''. அந்த பத்து பேருக்கு இப்பவே என் நன்றியை தெறிவித்துக் கொள்கிறேன்! நன்றி நண்பா மிக்க நன்றி !

பி.கு : ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம் - இப்படியாவது ஆசிரியரின் கவனத்தை ஈர்க்க முடியுமா என்ற நப்பாசைத்தான் காரணம் :) யாருமே  படிக்கலனா எழுதறதே சிரமம் சார் :)


4.Vijayan20 November 2012 22:35:00 GMT+5:30 

மர மண்டை : கவலையே வேண்டாம்...வார இறுதி வரைக்கும் அடுத்த பதிவிட எண்ணமில்லை ! அது மட்டுமல்லாது, உங்கள் பதிவுகளை நாங்கள் அனைவருமே படிக்கத் தான் செய்கிறோம் ! So தொடர்ந்து எழுதுங்கள் ! 


5.மர மண்டை22 November 2012 15:13:00 GMT+5:30


part :10

ஒரு முக்கிய அறிவிப்பு!

part, part ஆக எழுதி பாடி பார்ட், பார்ட் ஆக கழண்டு போயிருந்தாலும் பலரின் நன்மைக்காக, வேறு வழியே இல்லாமல் மிகுந்த சிரமத்தில் எழுதும் பின்னூட்டம் இது. பற்பல காரணங்களால் part.4 கைவிடப்பட்டுள்ளது. அதே போல் விஷயமே இல்லாவிட்டாலும் உரக்கக் கத்தி ஊரைக் கூட்டிய இந்தப் பின்னூட்டத்தையும், அதாவது part.10 - யும் தயவு செய்து அன்பர்கள் படித்து அவர்களின் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் !

இவண்;

மரமண்டை 

X111.வெஸ்டர்ன் அவென்யூ,

கார்ட்டூன் பட்டி,

விஜய நகரம்,

காமிக்ஸ் நாடு, மாய உலகம்.600 007.6.மர மண்டை24 November 2012 06:38:00 GMT+5:30

புனித சாத்தான்: பெரிய மனசு பண்ணி என்னையும் தங்களின் நூற்றாண்டு விழாவுக்கு அழைத்தமைக்கு மிகவும் நன்றி! கட்டாயம் இன்னும் 61 வருடம் கழித்து அந்த விழாவுக்கு வருவேன். உங்களைச்  சந்திக்கும் அந்த இனிய நன் நாளை எண்ணி இந்த நொடி முதல் காத்திருக்க ஆரம்பித்து விட்டேன்! அதற்கு முன் தங்களுக்கும் ஒரு அழைப்பிதழ்  அனுப்பியுள்ளேன். வருகின்ற ஞாயிறு அன்று மிகப்பெரிய பாராட்டு விழா ஒன்று நடைப்பெற இருப்பதால் தாங்களும் தங்கள் அருமை நண்பர்களும் வந்திருந்து என்னையும் வெற்றிவாகை சூடிய அன்பர்களையும் கௌரவிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ! இந்த அழைப்பிதழயே எல்லோருக்கும் பொதுவானதாக கருதி அனைவரும் தவறாமல் வருகை தர விழைகிறேன் ! இது ஒரு தனி வகைப்பட்ட பாராட்டு விழா என்பதால் தங்களால் என்ன என்று யூகிக்க கூட முடியாது என்று சவால் விடுகிறேன் ! 7.saint satan 24 November 2012 07:32:00 GMT+5:30

நான் யூகித்துவிட்டேன் நண்பரே.அன்று தான் உங்களுக்கு அறுபதாம் கல்யாணம்.வாழ்த்த வயதில்லை.வணங்குகிறேன் தாத்தா அவர்களே.8.மர மண்டை24 November 2012 08:15:00 GMT+5:30

புனித சாத்தான்: நீங்கள் என்னை இப்படி என்னதான் பாராட்டி மரியாதை செய்தாலும், என்ன விழா என்று அறிய ஞாயிறு வரை காத்திருக்கத்தான் வேண்டும். பலர் படிக்கும் இந்த தளத்தில் என் எழுத்தை இவ்வளவு பாராட்டி உள்ளீர்களே உண்மையிலேயே நீங்கள் தைரியசாலிதான் ! ஆனால் என் எழுத்து இன்னும் தங்களின் எழுத்தை விட கத்துக்குட்டி தான் ; தங்களின் எழுத்தே முதிர்ச்சி அடைந்த ஒன்று :D


லாஸ்ட்லைன்: யாருமே படிக்காமல் இருப்பதை எழுதுவதில் பிரயோஜனமுமில்லை, அதற்காக  நாம் எழுதாமல் இருப்பதிலும் அர்த்தமுமில்லை ! அடிடா பொடியா ! டம்! டம்! டம்! 

5 comments:

 1. உங்களது பதிவுகளுக்கு உருவான ரசிகர்களில்

  முதல்வன்

  ReplyDelete
  Replies
  1. நம் எழுத்தின் ரசிகன் நமக்கு தலைவன் ஆனால் அந்த எழுத்துக்கோ அவனே இறைவன் !

   இது முகஸ்துதி அல்ல நண்பரே, உள்ளர்த்தங்கள் ஆயிரம் பொருந்திய வார்த்தைகள். இது எனக்கு மட்டுமல்ல மேடையேறும் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் என்றென்றும் பொருந்தக்கூடிய வார்த்தைகள் !

   Delete
 2. ''அல்லவே '' என்பது மிக சாதாரணமான ஒரு வார்த்தை ஆனால் அது பயன்படுத்த படும் வாக்கியங்களின் கட்டமைப்பையே மாற்ற கூடிய ஆற்றல் கொண்டது .

  ஒரு காரியத்தை முடிக்க வேண்டி நண்பனிடம் வேண்டுவதாக இருந்தால் அதற்க்கு பின்வரும் இரண்டு வார்த்தை பிரயோகங்களை கவனித்தால் ......

  ''உன்னால் முடியாதா...?''

  ''உன்னால் முடியாதது அல்லவே !''

  இதில் முதல் வாக்கியம் சந்தேகத்தோடும் ,கேள்வியோடும், சிறிதளவு நம்பிக்கையோடும் அமைந்திருப்பதாகவும் .,

  இரண்டாவது வாக்கியம் செய்ய தூண்டுவதாகவும் , முடிக்க வேண்டிய காரியத்தை மிக அற்பமாக உணர்த்துவதாகவும் உள்ளதை உணரலாம் .

  ''உன்னால் முடியும் ''
  ''உன்னால் முடியாதது அல்லவே'' என்றாலும் உன்னால் முடியும் என்பது நம்பிக்கையை தூண்டுவதாகவும் ,இரண்டாவது வாக்கியம் முன்சொன்ன அர்தத்தை தருவதையும் காணலாம் .

  ReplyDelete
  Replies
  1. அதாவது அந்த காரியத்திலிருக்கும் சிரமங்களை ''அல்லவே'' என்ற ஒரு வார்த்தை மறைதிடுவதை உணரலாம் .

   கடினமான விஷயங்களை எளிதாக்கி காட்டவே இந்த ''அல்லவே ''

   Delete
  2. Meeraan: மிக அருமையான விளக்கம். தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே !

   Delete