Follow by Email

Tuesday, 23 July 2013

Why this கொலவெறி !

நண்பர்களே, என் புதிய வலைப்பூவை வாழ்த்தி பதிவிட்ட உங்கள் அனைவருக்கும் நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். அதே நேரம் என் பதிவுகள் ஏற்கனவே லயன் ப்ளாகில் பதிவிடப்பட்ட  பின்னூட்டங்களாக இருப்பதால் உங்கள் அனைவருக்கும்  ஏமாற்றத்தை தரக்கூடியதாக இருப்பதையும்   உணர்கிறேன்.  இது போன்ற பதிவுகளுக்காக மட்டுமே புதிய ப்ளாக் தொடங்க வேண்டும் என்று நான் முடிவெடுத்தது தற்போது எனக்கும் சற்று ஏமாற்றமாகத் தான் இருக்கிறது !

ஆசிரியரின் லயன் ப்ளாக் போலவே இதுவும் தோற்றம் தர வேண்டும் ; இங்கு எதேச்சையாக படிக்கும் ஏதோ  ஒரு வாசகராவது ஆசிரியர் விஜயனின் ப்ளாகில் புதிய வாசகராகவும், கமெண்ட் போடுபவராகவும் மாறவேண்டும் என்பதலாயே Dedicated to LION-MUTHU COMICS..! Affiliated to SUNSHINE UNIVERSITY..! என்ற வரிகளை முதன்மையாக்கி உள்ளேன் ! அதனால் தான் என்னுடைய ப்ளாக் பெயரையும் அதன் அடியில் உள்ள விளக்கத்தையும் அவ்வாறு அமைத்துள்ளேன். ஏனெனில் பள்ளிக்கூடம் என்றாலே நல்லவைகளையே படிக்கிறோம் ; படித்ததையே மீண்டும் மனனம் செய்கிறோம் ; பழைய பாடத் திட்டத்தையே  இந்தாண்டும் புதியவர்கள் படிக்க வழி செய்கிறோம் ; அதுபோல தான் இந்த வலைதளமும் அமைய வேண்டும் என்பதால் தமிழ் காமிக்ஸ் பள்ளிக்கூடம் என்று பெயரமைத்தேன் ! 


வலையுலகத்தின்  ப்ளாகில் எழுதாத விஷயங்களே இல்லை ; எழுதாத ஜாம்பவான்களும் இல்லை. உதாரணமாக நம் தமிழ் காமிக்ஸ் பற்றி தற்போது வரை அழகழகாய் பதிவிடும் எத்தனை சிறந்த பதிவர்கள் உள்ளார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதைப் போலவே நானும் என் திறமையை இங்கு வெளிக்காட்டினால் சின்னஞ்சிறு வித்தியாசம் மட்டுமே வெளிப்படும். அதனால் என் வலைப்பூவின் பயன் என்னவாக இருக்க முடியும் அல்லது லயன் காமிக்ஸின் பலன் தான் என்னவாக இருக்க முடியும் ? 

என் கருத்துகளை லயன் ப்ளாகில் படித்து விட்டு ஒன்றுமே புரியவில்லை நான் குழப்பவாதி என்று லயனில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை முறைவைத்து கமெண்ட் போட்டார்கள். என் எழுத்துகள் அவர்களுக்கு புரியாதது என் குற்றமா அல்லது இப்படித்தான் இங்கு எழுதவேண்டும் என்பது தான் கருத்து சுதந்திரமா ?

லயனில் பதிந்த என் கமெண்ட்கள் அனைத்தும் காமிக்ஸ் சம்பந்தப்பட்டது ; அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என்று நினைத்து எழுதியது ; மனரீதியாக ஆசிரியரை துன்புறுத்தியவர்களை வெறும் எழுத்துக்களாலேயே தடுத்தது ; வலைப்பூவின் வாசகர் வட்டத்தை விரிவாக்கவும் அதன்மூலம் காமிக்ஸ் சந்தா அதிகரிக்கவும் உதவுவது ; என்ற மேன்மையான் நோக்கம் கொண்டுதானே  என் நேரத்தையும் சிந்தனையையும் செலவு செய்து எழுதி வந்தேன்? அது பொய்யாகிவிட நான் அனுமதித்து விட்டால் நான் இதுநாள் வரை லயனில் எழுதியதற்கு அர்த்தமுமில்லை ; என் எழுத்துகள் எனக்குண்டான தகுதியுமில்லை !

எனவே நான் எடுத்துவைத்த கருத்துக்கள் ; பதிவிட்ட கமெண்ட்கள் எப்படிப்பட்டவை அல்லது எதற்கானவை என்று இங்கு பட்டியலிடும்போது மாற்றம் எதுவும் நிகழ்ந்துவிடப் போவதில்லை தான் ; ஆனால் மீண்டும் அதுபோன்ற சந்தர்ப்பங்கள் எழாமல் இருக்கும் அல்லது ஒத்த கருத்துடைய நண்பர்கள் யாரோ ஒருவருக்காவது அந்த பதிவு அவரின் எண்ணத்தை பிரதிப்பலிப்பதாக அமைந்தாலே  அது ராமபிரானுக்கு உதவிய சின்னஞ்சிறு அணில் போல் நம் லயன்  காமிக்ஸுக்கு செய்த உதவியாக வருங்காலத்தில் இருக்ககூடும் தானே நண்பர்களே ?!

எந்தவொரு தனித்தன்மை வாய்ந்த வலைப்பூவாக இருந்தாலும் ; சிறந்த கருத்துகளையும் சீரிய சிந்தனையையும் கொண்டு பதிவுகளை செதுக்கி செதுக்கிப்  பதிவிட்டாலும் காலம் செல்லச் செல்ல  பின்னூட்டங்கள் இல்லாமல் நாம் ஈ ஓட்ட வேண்டியது தான். நாம் வலைப்பூ ஆரம்பித்த புதிதில் நம்மை ஊக்கப்படுத்தவும் ; வாழ்த்தவும் ; ஆதரவளிக்கவும் திரளாக அணிசேரும் நண்பர்கள் பின் ஒவ்வொருவராக உற்சாகம் இழந்து விடுகின்றனர். அதற்கு காரணம் நண்பர்கள் அனைவரும் நம்மை விட அனைத்திலும் விஷய ஞானம் கொண்ட வல்லவர்களாக இருப்பதே ஆகும் ! எனவே நம் ப்ளாகில் எதை எழுதினாலும் அது நமக்கு ஆத்ம திருப்தி தருவதாக அமைத்துவிட்டால் நாம் ஈ ஓட்டும் காலத்தில் கூட, அதில் காணக் கிடைக்கும் ஆள் அரவமற்ற அமைதியக்கூட ரசிக்கலாம் ; அந்நிலையிலும் பேரானந்தத்தில் திளைக்கலாம் என்பதே என் சிந்தனை !

லாஸ்ட்லைன்:  நம் ப்ளாக் லைவ்வாக இருக்க வேண்டுமெனில் வெறும் லைக் மட்டுமே போதாது, அங்கே  காரசாரமான விவாதங்கள் நடந்து கொண்டே இருக்க வேண்டும் ! 

34 comments:


 1. உங்களிடம் கொலவெறி இல்லை.

  கொள்கை வெறி உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. ஹஜன் சுந்தர்: உங்கள் புரிதலுக்கு நன்றி நண்பரே !

   கணவன் மனைவியிடம் புரிதல் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை !
   நண்பர்களிடம் பரஸ்பரம் புரிதல் இல்லை என்றால் பொழுதுபோக்கு என்பதே இல்லை !

   Delete
 2. //இங்கு எதேச்சையாக படிக்கும் ஏதோ ஒரு வாசகராவது ஆசிரியர் விஜயனின் ப்ளாகில் புதிய வாசகராகவும், கமெண்ட் போடுபவராகவும் மாறவேண்டும் என்பதலாயே Dedicated to LION-MUTHU COMICS..! Affiliated to SUNSHINE UNIVERSITY..! என்ற வரிகளை முதன்மையாக்கி உள்ளேன் !//

  அப்படியே நமது லயன்-முத்து வலைப்பூவில் முகவரியையும் (URL Link) இணைத்தீர்களானால் புதிதாக வரக்கூடியவர்கள் மிக சுலபமாக லயன்-முத்து வலைபூவிற்கு செல்ல முடியும்.

  ReplyDelete
  Replies
  1. நண்பர் ப்ளூவின் ஐடியாவை நானும் வழிமொழிந்து, லயன்-முத்து காமிக்ஸ் வலைத்தளம் இன்னும் நிறைய வாசகர்களைப் பெற்று மேன்மையடைய வேண்டுமென்ற உங்கள் நல்லெண்ணம் ஈடேற என் வாழ்த்துக்களும், ஆதரவும் உண்டென்று கூறி இப்பதிவிலிருந்து விடைபெறுகிறேன்!

   Delete
  2. நன்றி மிஸ்டர் திருப்பூர் புளுபெர்ரி and மிஸ்டர் Erode VIJAY ! தாங்கள் கூறியபடி முயற்சிக்கிறேன் !

   Delete
 3. // இப்படித்தான் இங்கு எழுதவேண்டும் என்பது தான் கருத்து சுதந்திரமா ?//

  நச்!!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி மிஸ்டர் சாக்ரடீஸ் !

   Delete
 4. //நம் ப்ளாக் லைவ்வாக இருக்க வேண்டுமெனில் வெறும் லைக் மட்டுமே போதாது; அங்கே காரசாரமான விவாதங்கள் நடந்துக் கொண்டே இருக்க வேண்டும் ! //


  பொதுவாக சொல்லப்பட்ட கருத்துதானே?

  அனைவருக்கும் பொருந்துவதில்லை,சில Exceptions உண்டு என்பது அடியேனின் எண்ணம்.

  ReplyDelete
  Replies
  1. King Viswa: இது பொத்தாம் பொதுவாக சொல்லப்பட்ட கருத்து தான்; எதற்கும் விதிவிலக்கு உண்டு என்பதால் நீங்கள் கூறுவதும் உண்மைதான் நண்பரே ! நான் முன்பே கூறியபடி எழுதும்போது எனக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதையே பதிவிடுகிறேன்; உள்நோக்கமும் மறைபொருளையும் உள்ளடக்கி பதிவிடுவதில்லை; அதனால் அதற்கு மாற்று கருத்துக்கள் நிச்சயம் இருக்கத்தான் செய்யும் !

   இருந்தாலும் ஒரு விஷயம், நீங்கள் மேற்கோள் காட்டியுள்ள என் கருத்து ஆசிரியர் விஜயன் அவர்களின் வலைப்பூவிற்கும் பொருந்தும். ஆனால் நீங்கள் கூறும் அந்த Exceptions எப்படியெனில் LIVE CRICKET BROADCAST ற்கும் REPEAT CRICKET BROADCAST ற்கும் உள்ள வித்தியாசம் போன்றதே என்பது என்னுடைய தாழ்மையான கருத்து !

   Delete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. /* மனரீதியாக ஆசிரியரை துன்புறுத்தியவர்களை வெறும் எழுத்துக்களாலேயே தடுத்தது */

   வெற்றி பெற்று விட்டீர்கள் !

   ஒன்றே ஒன்று உங்களுக்கு சொல்ல ஆசை

   - நான் ஐந்தாம் வகுப்பு படித்த பொது ஐந்து ரூபாய் விலையில் 5000 பேர் படித்த லயன் காமிக்ஸ், நான் ஒரு நிறுவன இயக்குனராய் இருக்கும் போது 50 ரூபாய் விலையில் 500,000 பேர் படிக்க ஆசைப்பட்டது நான் செய்த தவறு :-)

   - இதனால் நான் படித்த சிறந்த காமிக்ஸ்கள்' அளவிற்கு நாம் வளர வேண்டும் என்று நினைத்தது நான் செய்த இரண்டாம் தவறு :-) :-) :-)

   - இதனால் - அச்சுத் தரம், காகிதத் தரம், மொழி பெயர்ப்புத் தரம், கதை selection இவை யாவிலும் அதீத கவனம் செலுத்த எடிட்டர் முனைய வேண்டும் - "சிறு டீம், சில பேர் தானே" போன்ற ஜல்லிகள் இல்லாமல் முனைந்திட வேண்டும் என்று நினைத்தது மூன்றாவது தவறு :-) :-) :-) :-)

   - இவற்றை 'அங்கே' வெளிப்படுத்தியது நான்காம் தவறு :-) :-) :-)

   - பலர் வாழ்த்தவும், புகழவும் இருக்கும் பொது இடித்துரைக்க ஒருவர் வேண்டும் என்று எண்ணியது ஐந்தாம் தவறு !

   - மொத்தத்தில் இரு வெளிநாட்டு விஜயந்களுக்கு இடையே, ஒரு வருட காலம், எனக்கு தெரிந்த சிறு யோசனைகளை - சில வேளைகளில் அன்பாகவும், சில வேளைகளில் சீற்றம் கொண்டும், பல சமயங்களில் ஹாஸ்யமாகவும் - BUT "எப்போதும் வெளிப்படையாகவும்" எழுதியது முற்றிலும் தவறு :-)

   So அங்கிருந்தும் ,, இங்கிருந்தும் .. இனி மெல்ல facebook-ல் இருந்தும் ...

   ... me the escape :-)

   'காமிக்ஸ் கோடீஸ்வரர்கள்' இருக்கும் ஊரினில் ஏழையின் குரல் சபை ஏறாது என்பது நமக்கு தெரிந்ததுதானே ! :-(

   Delete
  2. அன்பு நண்பர் Comic Lover :-

   இதை எல்லாம் நீங்கள் சொல்லியதால் உங்களை அங்கிருந்தும் ,, இங்கிருந்தும் .. இனி மெல்ல facebook-ல் இருந்தும் ... வெளியே தள்ளியது யார் ?

   Delete
  3. Comic Lover: எளிதாக உணர்ச்சிவசப்பட்டு விடுகிறீர்கள் மிஸ்டர் ராகவன் !

   ஒன்றை தெளிவாக நீங்கள் புரிந்துக்கொள்வது உங்கள் மனம் இலகுவாக வழிவகுக்கும். நான் மட்டுமல்ல லயன் ப்ளாகில் யாருமே உங்களை எதிரியாக பார்த்ததில்லை. உங்கள் கருத்துக்களை நான் மறுத்து இருக்கலாம்; ஆனால் எதிர்த்ததில்லை. ஆனால் நீங்களாகவே ஒரு பெரிய பள்ளம் தோண்டி அதில் குதித்துவிட்டு; இவர்கள் தான் என்னை தள்ளி விட்டு விட்டார்கள் என்று மற்றவர்கள் மீது குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் !

   இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள //மனரீதியாக ஆசிரியரை துன்புறுத்தியவர்களை வெறும் எழுத்துக்களாலேயே தடுத்தது// இந்த வரிகள் உங்களுக்கானது அல்ல. அதனால் இதில் வெற்றி தோல்வி நமக்குள் எங்கிருந்து வந்தது ? இந்த நிமிடம் வரை உங்களை அனைவரும் நண்பராகவே பார்ப்பது கடவுள் உங்களுக்கு கொடுத்த வரம் ராகவன்; அதை பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம் !

   மீண்டும் லயன் ப்ளாகில் பதிவிட்டு உங்கள் கருத்துக்களை நயமாக மேடையேற்றுங்கள் !

   Delete
  4. @ காமிக் லவர்

   மிஸ்டர் மரமண்டை நான் நினைத்ததை இங்கு கிட்டத்தட்ட, ஆனால் என்னைவிட நன்றாகவே சொல்லியிருக்கிறார்! லயன் ப்ளாக்கில் உங்களை யாருமே எதிரியாகப் பார்க்கவில்லை என்பது ஆச்சரயமான உண்மை!!

   அதிக எதிர்பார்பே உங்களது ஏமாற்றத்திற்குக் காரணம்! தரமான பேப்பரிலும், முழு வண்ணத்திலும் நமது காமிக்ஸைக் கண்டிட நமக்கு 40 வருடங்கள் தேவைப்பட்டிருக்கும்போது, உங்களது அபரிமித எதிர்பார்ப்புகள் உடனே கவனிக்கப்பட வேண்டுமென்பதில் நீங்கள் காட்டிடும் வேகமும் அபரிமிதமானதுதானே?
   ஒலிம்பிக்கில் ஓடுபவரது வேகத்திற்கு நாமும் ஓரிரு நாளிலேயே ஓடவேண்டும் என்று எதிர்பார்ப்பது சற்றே அபத்தமில்லையா?

   வாருங்கள் நண்பரே, இங்கே யாரும் ஜெயிக்கவுமில்லை, தோற்கவுமில்லை! இங்கிருக்கும் ஒவ்வொருவருமே 'காமிக் லவர்'தான் எனும்போது உங்களுக்கு மட்டும் தோல்வி எங்கிருந்து வரும்?

   மாதத்தின் சில நாட்களில் கிடைத்திடும் இந்த காமிக்ஸ் குதூகலத்தை நாம் ஒன்றாக இணைந்து பெரும் கொண்டாட்டமாக்கிடலாமே? :)

   Delete
  5. சந்தோசபட, ரசிக்கத்தானே காமிக்ஸ் , அனைத்தையும் மறந்து விடுங்கள்....நாம் என்ன பங்காளிகளா பகமை பாராட்ட , அனைவரும் காமிக்ஸ் காதலர்களே ஆசிரியர் உட்பட (அவரே கூறியுள்ளார்) ....

   Delete
 6. இந்த பதிவு ஒரு முன்னுரை என்று நினைக்கின்றேன் .

  ReplyDelete
  Replies
  1. Meeraan: உண்மைதான் நண்பரே !

   இதை வரப்போகும் பதிவுகளுக்கான தெளிவுரையாகவும் எடுத்துக் கொள்ளலாம் !

   Delete
 7. Maramandai, erode vijai alagaga solli irukirer.welcome back raagavan sir.

  ReplyDelete
  Replies
  1. தாரை பரணீ !!!! உங்க blog பக்கம் நீங்களே எட்டிபார்ப்பதில்லையா?
   உங்களின் comics அனுபவங்களை வெள்ளந்தியான, நடையில் எழுதுங்க பரணி! அதில் எற்பட்ட கசப்பான அனுபவங்களை எழுதினால், என்னை போன்ற சிறிய COMICS ஸேகரிப்பாளருக்கு, ஒரு படிப்பிணையாக இருக்கும் அல்லவா!

   Delete
 8. உங்கள புரிஞ்சுக்கவே முடியல...

  Anyways! ஆல் தி பெஸ்ட்...

  ReplyDelete
  Replies
  1. புரியாது ஆனால் புரிந்தது போல இருக்கும்... பள்ளியில் கணக்கு படித்தது போல ....

   Delete
  2. நன்றி சூப்பர் விஜய் !

   நான் அனைவருக்கும் நண்பனாக இருக்க நினைப்பதால் பலருக்கும் பகைவனாகத் தெரிகிறேன் நண்பரே !

   Delete
 9. தொடர்பதிவுகளோடு கலக்குகிறீர்கள். இங்கே நீங்கள் எழுதியிருக்கும் நடைக்கும் அங்கே ஆசிரியரின் பதிவில் பின்னூட்டமிடும் எழுத்து நடைக்கும் நிறையவே வித்தியாசமுள்ளது. இங்கு நீங்கள் எழுதியிருப்பது அடிவரை மிகத் தெளிவாகத் தெரியும் நீச்சல் தடாகம் போலுள்ளது. இன்னும் எழுதுங்கள். காத்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. Podiyan :

   உங்களின் ஆதரவும் எழுதப்பட்ட வரிகளும் எம்மை பெருமிதம் கொள்ளச் செய்கிறது நண்பரே !

   Delete
 10. Replies
  1. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ): நன்றி நண்பரே !

   அழகான வெளிர் ஆரஞ்சு வண்ணத்தில் படம் ஒன்று இணைத்துள்ளேன்; அது எதற்காக என்று கேட்டிருக்கலாம்; இந்த படம் இந்த பதிவிற்கு பொருத்தமானதா என்று வினவியிருக்கலாம்; பதிவில் உள்ள அத்தனை விஷயங்களும் எப்படி இந்த படத்தில் அடக்கமாகி இருக்கிறது என்று அலசியிருக்கலாம்; படம் பெரியதாக இருப்பதால் கண்களுக்கு விருந்தாக அமைகிறது என்று கூறியிருக்கலாம்; அல்லது பெரிய படம் கண்களை வருத்துவதாக உள்ளது என்று குறை கண்டிருக்கலாம்;

   இப்படி எதுவுமே கூறாமல் வெறும் இரண்டே வார்த்தைகளில் பதிவிட்ட உங்களின் அவையடக்கம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது நண்பரே; இந்த நேர்மைக்காக உங்களுக்கு கே.அன்பழகன், ஓ.பன்னீர்செல்வம் வரிசையில் - தகாமுக - வின் இரண்டாம் கட்ட தலைவராக பதவி அளித்து இந்த சபையில் உங்களை கௌரவிக்கிறேன் நண்பரே !

   உங்க நேர்மை தகாமுக கட்சிக்கு மிகவும் பிடித்திருக்கிறது :)

   Delete
  2. முன்னமே நீங்கள் பதவி அளித்தபோது வேண்டாமென்று மறுத்தவன் நான்

   Delete
  3. பராவயில்லை நண்பரே, உங்களை போன்று இன்னொரு நபர் கட்சிக்கு கிடைக்காமலா போய்விடுவார் ?!

   Delete
 11. Mr. ப்ளாக் owner (மரமண்டை என்று இனி அழைக்க மாட்டேன்),

  /* இந்த நிமிடம் வரை உங்களை அனைவரும் நண்பராகவே பார்ப்பது கடவுள் உங்களுக்கு கொடுத்த வரம் ராகவன்; அதை பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம் ! */

  இதனை நான் உங்களிடமிருந்தும், ஸ்டீல் கிளா, மற்றும் ஈரோடு விஜய் ஆகிய நண்பர்களிடம் இருந்தும் ஏற்கிறேன் என்ற போதிலும் - ஒரு நிமிடம் இந்த லிங்கை பார்க்கவும்

  http://comichaterbarghavan.blogspot.in/

  நான் எடிட்டரிடம் இன்னும் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன் என்று தெரியாத ஒரு கும்பல் செய்த வேலை இது. நீங்கள் படிக்கும் போது இந்த ப்ளாக் மூடப்பட்டிருந்தால் என்னிடம் snapshots உண்டு. நண்பர்கள் ஈரோடு விஜய் உட்பட சிலரிடம் இந்த snapshots பிரதி இருக்கும் !

  இது செய்தது யார் என்று எனக்கு தெரியும் நண்பரே. டெலிகாம் / இன்டர்நெட் fieldல் இருப்பதால் கண்டு பிடித்து விட்டேன் !

  அவர் சேலம் திருவிழா கூட வரலாம் .. :-)

  ஆனால் மறுப்பு சொல்லப்போவதில்லை ... அவர் அவர்களுக்கு தெரிந்த அளவு அவர் அவர்கள் வாழ்கிறார்கள் :-)

  எனினும் நான் பங்கேற்க்காவிடினும் உங்கள் பதிவுகளைப் படித்திடுவேன்.

  ReplyDelete
  Replies
  1. Comic Lover: பெயரால் கௌரவப்படுத்தியமைக்கு மிக்க நன்றி மிஸ்டர் ராகவன் !

   உங்களை காயப்படுத்திய அனைத்தையும் உடனே மறந்து விடுங்கள் என்று உபதேசம் செய்ய விரும்பவில்லை. ஏனெனில் நம் மனதின் காயங்கள் நித்தம் உணர்த்தும் வலிகளை நம்மால் மட்டுமே முழுமையாக உணரமுடியும் !

   இருந்தாலும் ஒரு விஷயம், காலம் ஆற்றாத மனதின் காயங்களோ, வடுக்களோ இவ்வுலகில் இல்லை. உங்களுக்கான அந்த வசந்த காலம் எதிர்வரும் ஈரோடு புத்தகத் திருவிழா முடிவதற்குள் உங்களை அரவணைக்க வாழ்த்துகிறேன் !

   ஆயின் ஒன்று மட்டும் நிச்சயம் நண்பரே, நாம் ஒவ்வொருவரும் எந்த விதத்திலும் மற்றவர்களிடம் இருந்து தாழ்ந்து போய் விடவில்லை; நம் மனது அனுமதித்தால் தான் மற்றவர்களால் நம் மனதை காயப்படுத்தவோ அல்லது வருத்தப்பட வைக்கவோ முடியும். பிறகு ஏன் நாம் அந்த சந்தர்ப்பத்தை மற்றவர்களுக்கு வழங்க வேண்டும் ?

   Delete
 12. அடப்பாவிகளா ஒரு ப்ளாக்லையே இவ்ளோ பொலிடிக்ஸ் பண்றாங்களே இவங்க கூட ஆபீஸ்ல வேல பார்த்தா அவ்ளோதான்..

  @ராகவன்: fake id ல வர இவங்க எல்லாம் யாருன்னு கண்டுபிடிக்க சாத்தியமா?

  மரமண்டை புனை பெயரில் பதிவிட்டாலும் அவர் double role செய்யவில்லை.. ஆனாலும் யார் என்ன தெரிந்து கொள்ள ஆவல்..

  ReplyDelete
  Replies
  1. உண்மையைச் சொல்லுங்கள் சூப்பர் விஜய், அவைகளை படித்தவுடன் சிரித்து விட்டீர்கள் தானே ?

   Delete
 13. நண்பர்களே என்னுடைய புதிய பதிவு: மறுஜென்மம் உண்மையா ?

  இது போன்ற புதிய பதிவுகளின் அறிவிப்புகள் இதுவே இறுதியானதாக இருக்கலாம். ஏனெனில் இதுபோல் விளம்பரம் செய்ய எனக்கே சற்று சங்கோஜமாக இருக்கிறது. மேலும் இனிவரும் பதிவுகள் அனைத்தும் என்னுடைய பழைய பின்னூட்டங்களையே தாங்கி வெளிவரும் என்பதால் உங்களின் ஏமாற்றத்தை சந்திக்க என் மனதில் திடம் இல்லை. எனவே வாரம் இரண்டு பதிவுகள் என ஒவ்வொரு தலைப்பின் கீழ் தொகுத்து பதிவிட்டுக் கொண்டே செல்ல போகிறேன். இதில் ஏதாவது பதிவுகள் உங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துமானால் தங்களின் கருத்துக்களை பின்னூட்டங்களாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். அப்படி பதிவிடும் பட்சத்தில் எனக்கு மாறுபட்ட கண்ணோட்டத்தை வழங்கிய காமிக்ஸ் நண்பர்களாக நீங்கள் என்றென்றும் இந்த ப்ளாகில் போற்றப்படுவீர்கள் !

  ReplyDelete