Follow by Email

Thursday, 1 August 2013

வலைதளத்தில் ஒரு பாராட்டுவிழா !

ஹாட்லைன்: பொதுவாகவே  டெம்ப்ளேட் கமெண்டுகள் போடுவது என்றால் எனக்குப்  பிடிப்பதில்லை. அது எப்படி இருக்கிறது என்றால், ஒரு முதன்மை பேச்சாளரின் கூட்டத்தில் அவர் பேசி முடித்தவுடன் கூட்டமாக கைத்தட்டுவது போன்றதாகும். அந்த கைதட்டலில் அவர் அகமகிழ்ந்து தான் பேசியதே சிறந்தது என்றோ ; இதுபோலவே மீண்டும் ஒருமுறை நிகழவேண்டும் என்றோ எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகிறார் !

ஆனால் அதுவே ஒரு கலந்துரையாடலாக இருக்கும் போது, இவர் பேசியதில் இந்தக் கருத்துகள் உயர்ந்ததென மேற்கோள் காட்டலாம் ; இதில் எனக்கு உடன்பாடில்லை என்று இடித்துரைக்கலாம் ; இது இப்படி இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று எடுத்துக் காட்டலாம் ; இவைகளையும் உரையில் சேர்த்துக் கொண்டால் நீங்கள் மற்றவர்களுக்கு வழிக்காட்டியாக திகழ்வீர்கள் என்று ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டலாம் - அதுபோன்ற ஒன்றை தான் நான் லயன் ப்ளாகில் முதன் முறையாக,  'அடாது இருட்டடித்தாலும்.. விடாது பதிவோம்' பதிவில் முயற்சி செய்தேன் !

ஷார்ட்லைன்: ஆனால் உடனே சிலர், வாசகர்களை இரு குரூப்பாக   பிரிக்க நினைக்கிறார் என்று கூக்குரலிட ஆரம்பித்து விட்டார்கள். லயனில் தொடர்ந்து கமெண்ட் போடுவது தோராயமாக ஒரு முப்பது வாசகர்கள் என்று வைத்துக் கொண்டாலும் அதில் ஒரு பத்து பேரை தனியாகப்  பிரித்து நான்  என்ன நாட்டின் தலைமை பொறுப்பையா பிடித்துவிட முடியும்? அல்லது விஜயகுமார், சின்னகவுண்டர், சரத்குமார் வரிசையில் வேஷ்டி கட்டி, துண்டு போட்டு, நாட்டாமையாகவா கோலோச்ச முடியும் ?

இதில் வேறு சிலரின்,  யாரும் யாருக்கும் சளைத்தவர்களில்லை என்ற சவால் வேறு ! ஒரு மிகச் சாதரணமான நிகழ்வையே இவர்களால் ஜீரணிக்க முடியவில்லையே.. இவர்களால் எப்படி தத்தம் வாழ்க்கையில் எதிர்படும் இடர்பாடுகளை களைந்து எதிர்நீச்சல் போடமுடியும் என்ற வியப்பே அன்றைய நாளின் இறுதியில்  எனக்கு மனமெங்கும் நிறைந்தது !

ஷாட்லைன்: லயனின் சீனியர் வாசகர் என்ற ஸ்தானத்தில் இருந்த புனிதசாத்தான் அன்று, தொடர்ந்து  என் பதிவுகளுக்கு தோள் கொடுத்து நின்றது எனக்கு அவரின் மேல்  ஒரு மரியாதையை ஏற்படுத்தி தந்தது. அதன் பிறகு நமக்கேன் இந்த தேவையில்லாத வம்பு என்று ஒரேடியாக ஒதுங்கி விட்டது தனிக்கதை !

அன்றைய நாளின் மத்தியில் என்னை கேவலப்படுத்தி  போலி மரமண்டை மிகவும் கீழ்த்தரமான ஒரு பதிவை பதிவிட்டார். லயன் வலையுலக வரலாற்றில் இதுபோன்று என்றுமே நடக்காத விஷயமாக, அன்று போலி மரமண்டை ID உருவானது கண்டு, யார் யார் என்ன உணர்வுகளைக் கொண்டிருந்தார்களோ தெரியவில்லை.. ஆனால் உடனடியாக  யாரும்  அதற்கு எதிர்ப்போ கண்டனமோ தெரிவிக்கவில்லை. ஏனெனில் அவரவருக்கு அவர்களின் நற்பெயரின் மீது அளவில்லாத அக்கறை என்பதே நடைமுறை உண்மை :(

1.மர மண்டை25 November 2012 10:08:00 GMT+5:30 

வலைதளத்தில் ஒரு பாராட்டு விழா !

இன்று நடக்கவிருக்கும் இந்த மிகப்பெரிய பாராட்டு விழாவிற்கு வருகை தந்திருக்கும் வாசக நண்பர்களை வருக.. வருக.. என இருகரம் கூப்பி வரவேற்று முதற்கண் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் ! இது ஒரு வலைதள வாசகர்களுக்கான பந்தயக்களம். முதல் ஐந்து  இடத்திற்கான வெற்றியாளர்கள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று முறைபடி அறிவிக்கப்படவிருக்கிறார்கள் ! அதே சமயம் அவர்களின் தேர்வுக்கான தகுதியையும் வலையுலகத்துக்கு தெரிவித்து பாராட்டு விழாவும் நடைப்பெற உள்ளதால் தயவுசெய்து யாரும் கலைந்துச்  செல்லவோ அல்லது கல்லெடுத்து எறியவோ வேண்டாம் என்று பயத்துடன் கேட்டுக்கொள்கிறேன் ! கண்டிப்பாக 5 வெற்றியாளர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தேர்வாணையம் கூறிவிட்டபடியால் என்னால் முதல்  ஐந்து போட்டியாளர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க முடிந்தது ! எனவே மற்றைய வாசக அன்பர்கள் என் மீது கோபமோ,  மனவருத்தமோ கொள்ள வேண்டாம் என்று மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ! அதையும் மீறி என்னை திட்டத்  தோன்றினால் ஒரு நிமிடம் இந்த அப்பாவியை நினைத்துப் பாருங்கள் ; முதல் ஐந்து இடத்தில் கடைசி இடத்தைக் கூட என்னால் பிடிக்க முடியவில்லை ; நானும் மனிதன் தானே ; எனக்கும் ஆசா பாசமும், கோப தாபமும் இருக்கத்தானே செய்யும்? நான் போய் யாரிடம் சண்டைப்போட முடியும் அல்லது கோபத்தைக்  காட்ட முடியும் நீங்களே சொல்லுங்கள் ? ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் மீண்டும் சரித்திரம் திரும்பும்.. அப்பொழுது நாமும் ஜெய்ப்போம் என்ற சிந்தனையைத்  தவிர என்ன சொல்ல?

Contd.part : 2 வெற்றியாளர்கள் !


2.மர மண்டை25 November 2012 11:15:00 GMT+5:30 

TOP 5 வலைதள வாசகர்கள் :

1.முதல் இடத்திற்கு எப்பொழுதும் சந்தேகம் இருப்பதே இல்லை ! எளிதாக தேர்ந்தெடுத்து விடலாம் ! காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் அந்தக் கோட்பாட்டின்படி நமக்கும் தேர்வு எளிதாக அமைந்து விட்டது ! சிறிதும் சிரமம் வைக்காமல் முதலிடத்தை இவர் பிடித்துள்ளார் !
Short and sweet !

2.அடுத்து இரண்டாம் இடம் ! ஒரு மாபெரும் போராளி என்ற தனித்தன்மையால் இவரும் எளிதாக வெற்றிப்  பெற்று விட்டார் ! எல்லோரும் நினைக்கலாம் இதில் என்ன வீரம் என்று ? ஆனால் களத்தில் நின்று சிக்ஸர் அடிப்பவருக்குத் தான் தெரியும் எதிராளி எவ்வளவு வலிமையாக பந்து வீசினான் என்று !
You will know what is fight when you fight with someone !

3.அடுத்து காலம் காலமாக நாம் பின்பற்றி வரும் வழிமுறையின்படி இரண்டுக்கு பின் மூன்று ! இந்தத்தேர்வு பலருக்கு பல சிந்தனையை தூண்டக்கூடியதாக இருக்கும். என்னடா இந்த மரமண்டை தவறு செய்து விட்டதா என்ற சந்தேகம் வரக்கூடும். ஆனால் பல சமயம் வெற்றியாளர்கள் வெளியுலகத்திற்கு தெரிவதே இல்லை. சீனாவைப் போன்று நாம் தான் அவருக்கு வாய்ப்பு கொடுத்து வெற்றியாளராக்கி வலைதளத்தை வளம் வரச் செய்யவேண்டும்!
Marathon is not a 100 metre Race !

4.வழுமையாய் நான்காம் இடம் ! ஆனால் வழக்கத்திற்கு மாறாக இருவர் பகிர்ந்து கொள்கின்றனர் ! இவர்கள் இருவருமே காமிக்ஸ் மீது தீராத காதல் கொண்டவர்கள். இதில் முதலாமவர் தன்னுடைய ஒரே ஒரு நாஸ்டாலஜி பதிவின் தகுதியை அடிப்படையாகக் கொண்டு வெற்றிப் பெற்றுள்ளார் என்றால் நம்பமுடிகிறதா? ஆனால் அவர் வெற்றி அடைந்து விட்டதால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் !
Winners are finalized !

5.இறுதியாக ஐந்தாம் இடம் ! இதிலும் இருவர் வெற்றிக்  கோப்பையை பகிர்ந்து கொள்கின்றனர். இவர்களும் சாதனையாளர்களே.. ஆனால் சொந்த வேலை காரணமாகவோ அல்லது பெருந்தன்மை காரணமாகவோ பல போட்டிகளில் கலந்து கொள்ளாமல் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். அதனால் மட்டும் என்னை ஏமாற்ற முடியாது அல்லவா ? இவர்களுக்குள்ள தனித்திறமையின் அடிப்படையில் இவர்கள் இருவரும் சரிசமமாக வெற்றியை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
A photo finish !

வெற்றி பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளையும், வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் ! 

Contd.part : சாதனையாளர்களும் அவர்களின் சரித்திரமும்  !லாஸ்ட்லைன்: தான் என்ற எண்ணம், தன்னைச்  சுற்றியுள்ள அனைவரையுமே நோகடித்து  நொந்துப்  போகச் செய்கிறது !

19 comments:

 1. எனக்கு தெரிந்து இந்த பதிவில் இருந்து தன பொறாமை தீயால் வெந்த நபர்களின் கோபத்திற்கு ஆளானீர்கள்

  ReplyDelete
  Replies
  1. King Viswa: உண்மைதான் சார் !

   எனக்கு இந்த வலைத்தளத்தில் எழுதும் உற்சாகம் வடிந்து போவதற்குள், லயனில் பதிவிட்ட அத்தனை பின்னூட்டங்களையும் தொகுத்து இங்கே பதிவிட்டு விடும் வரத்தை இறைவன் எனக்கு அளித்து விட்டால் அதைவிட நான் பெறும் ஆத்ம திருப்தி வேறேதும் இந்த வலையுலகில் இருக்காது என்றே நினைக்கிறேன் !

   பெயரும் புகழும் நம் வாழ்க்கையில் நிலையான மகிழ்ச்சியை உண்டாக்குவதில்லை; ஆனால் வஞ்சகமும் சூதும் நம் வாழ்வில் என்றும் நீங்காத வடுக்களை ஏற்படுத்தி விடுகின்றன. தவறை தண்டிப்பது அல்ல என் நோக்கம்; ஆனால் அந்த தவறை ஒருவர் உணராதவரை, அவர் மீண்டும் மீண்டும் அதே தவறை மகிழ்வுடன் செய்கிறார் என்பதே என்னுள் இருக்கும் நீங்காத வருத்தம் :(

   Delete
 2. Intha samayathil naan cell moolamaagavay padivai padithu kondu irunthathal 150 comments matumay padika mudinthathu.adarku piagu erendu moodru padivugalil oray kalavaram.enaku mandaiyai pichuka thonuchu.

  ReplyDelete
  Replies
  1. Paranitharan K: இந்த வலைத்தளத்தின் பயனை முதன்முறையாக உங்கள் பதிவு தொடங்கி வைத்துள்ளதாக நினைத்து அகம் மகிழ்கின்றேன். எல்லோரும் கூறலாம், கடந்துவிட்ட காலம் கல்லறைக்குச் சொந்தமென; ஆனால் அது கலைத்து விட்டுச் சென்ற கனவுகளை யாரறிவார் ?

   தனக்கு வயிற்று வலி வராத வரை அது தரும் துன்பம் எவ்வகையென ஊருக்கு உபதேசம் செய்பவரால் உணர முடியாது. தனக்கு ஒற்றை தலைவலி வராத வரை அடுத்தவரின் தன்மானத்திற்கு உண்டான களங்கம், கைத்துடைத்து வீசியெறியும் டிஷ்யூ பேப்பராகத்தான் அற்பமாகத் தெரியும் !

   பயிர் முளைத்தாலும் முளைக்காவிட்டாலும் காலத்தே விதை விதைப்பது நம் கடமை அன்றோ ?!

   Delete
 3. போலி மரமண்டைக்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து பதிவு செய்திருந்தேன் .

  ReplyDelete
 4. இங்கு என்ன நடக்கின்றது என்றே தெரியவில்லை ?! அரசியல் களத்தை விட மோசமாக இருக்கின்றது .
  நான் இன்னொருவருக்கு சாமரம் வீ சவேண்டும் என்று நினைக்கும் அந்த புண்ணியவான் யார்?
  டியர் போலி மரமண்டை :- எனக்கு தீர்வு காண்பதற்கும் ,அடைவதற்கும் வாழ்க்கையின் பிரச்சனைகளும் அடைய வேண்டிய இலக்குகளும் நிறைய உள்ளன. இது நான் இளைப்பாறுவதற்கும் ,என்னை உற்சாக படுத்தி கொள்வதற்கும் வரும் இடம் ,இங்கு கல் எறிய வேண்டாமே !
  தனக்கு என்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொள்ள கூட இயலாத நிலையிருக்கும் பரிதாபத்துக்குரிய நண்பரே! நீங்கள் என்னை மரமண்டைக்கு சாமரம் வீச சொல்ல்கின்றீர்கள் . பரிதாபத்துக்குரிய நிலையிலிருக்கும் பரிதாபத்துக்குரிய நண்பரே நான் அவர் யாரென்றே அறியேன் . நீங்கள் என்னை நேரில் சந்தித்தால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்பதை உணர்ந்து கொள்ளவீர்கள் .  என்னுடைய அந்த பின்னூட்டம் இப்படிதான் இருந்தது என்று நினைக்கின்றேன் .

  ReplyDelete
 5. Meeraan: உண்மைதான் மீரான், உங்கள் பதிவுகளை மறக்க முடியாது !

  அதே போல் போலி மரமண்டைக்கு எதிராக பதிவிட்ட வரிசைப்படி விஸ்கி, சாத்தான், நீங்கள், கார்த்திக், லூ-foலூபை ஆகியவர்களையும் இங்கு நன்றியோடு நினைவு கூறுகிறேன். ஆனால் இவையனைத்தும் அன்றைய இரவு 9 மணிக்கு மேலும் அடுத்த நாளுமே பதிவிடப்பட்டவைகள். போலி மரமண்டை வந்தது 27/11 அன்று 5 மணிக்கு என்றே நினைக்கிறேன். இந்த பதிவில் நான் கூறவந்தது என்னவென்றால்;

  நடந்த விஷயங்களை பற்றி சிறிதும் கவலைப்படாமல் தன்பாட்டுக்கு தொடர்ந்து பல கமெண்டுகள் போட்டுக்கொண்டிருந்த ''ரெகுலர்'' வாசகர்களையே அவ்வாறு குறிப்பிட்டிருந்தேன். இங்கு பதிவுகளில் புலம்புவது அல்ல என் நோக்கம்; உண்மைகளை உள்ளது உள்ளபடி ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதே என் விருப்பம்; யதார்த்தம் என்னவென்று நமக்கு தெரிந்து விட்டால் ஏமாற்றம் அங்கு எழுவதில்லை !

  லூசு - father of லூசு பையன்29 November 2012 00:50:00 GMT+5:30: அதுவுமில்லாமல் தனக்கு ஏன் ஒரு பட்டமும் கொடுக்கப்படவில்லை என்ற கடுப்பிலே ஒரு அரைகுறை விஷமக் கொடுக்கு இந்த வேலையை செய்துள்ளதாக தகவல்.அதுவும் ஆசிரியர் இருக்கும் ஊரிலேயே இருந்துக் கொண்டு. இதை எப்படி கண்டுபிடித்தார்கள் என்றா கேட்கிறீர்கள்? தளத்தின் அடியில் என்றொரு கருவி செயல்பட்டுக்கொண்டு இருப்பதை பாருங்கள். அதனை கொண்டு யார் எங்கிருந்து வருகிறார்கள், அவர்களது கணினி முகவரி என்ன என்று ஜாதகமே அறியலாம். ஆகையால் அலுவலகத்தில் வேலை இல்லாமல் வெட்டியாக இருக்கும் நபர்களே, இந்த மாதிரி போலி ஐடி கண்டிப்பாக உங்களை காட்டிக் கொடுக்கும் - ஜாக்கிரதை

  வாசக நண்பர் லூ-foலூபை இங்கு குறிப்பிட்டுள்ள நண்பர் யாரென்று அனைவருக்கும் தெரியும் தானே ? ஆனால் அதைப்பற்றி யாருக்கும் எந்தவித அக்கறையும் இல்லை என்பதே யதார்த்தம். ஏனெனில் அதை பற்றி விவாதிப்பவர்களின் (எல்லோருக்கும் நல்லவன் என்ற) நற்பெயர் காணாமல் போய்விடும் அல்லவா?

  ReplyDelete
 6. ''ஏனெனில் அவரவருக்கு அவர்களின் நற்பெயரின் மீது அளவில்லாத அக்கறை என்பதே நடைமுறை உண்மை :(''

  நண்பரே அதே போன்ற அக்கறையில்தான் நீங்கள் உங்களின் அடையாளங்களை மறைத்து பதிவிட்டு வருகின்றீர்கள் என நினைக்கின்றேன் . அதாவது உங்களின் உண்மையான அடையாளத்தை யாரும் விமர்சிக்கவோ,கிண்டல் செய்து விடவோ கூடாது என்பதினாலேயே நீங்கள் மிஸ்டர் மர்மமாக மிஸ்டர் மரமண்டையை உருவாக்கி உள்ளீர்கள் என நினைக்கின்றேன் .

  ஏனெனில் நீங்கள் ஆரம்பத்தில் கூறியதை போன்று உங்களை திட்டுவதற்கு வார்த்தைகள் கிடைக்க கூடாது என்பதுனாலேயே மரமண்டை என்ற பெயரை தேர்வு செய்ததாக கூறினீர்கள் .

  உங்கள் மனதில் தோன்றும் கருத்தையோ , அல்லது மற்றவர்களின் கருத்துக்கு எதிர் வாதத்தையோ சொல்வதினால் என்ன நேர்ந்து விடும் ? கிராமத்து நடையில் சொல்வது என்றால் ''தலையா போய்விடும் ''.
  உங்கள் மனதை காயப்படுத்தீனார்கள் என்றால் அது ஒன்றும் ஒருவழி பாதை அல்லவே நண்பரே!

  உங்கள் மனதில் அச்சம் உள்ளது என்பது உங்கள் நடவடிக்கையில் தெளிவாகின்றது.

  உலகின் பொதுவான நடைமுறையில் தவறு செய்பவரே தன் அடையாளங்களை மறைக்க முயல்வார்.
  இந்த செயல் உங்களைப்பற்றி மற்றவர்களின் மனதில் எதிர் மறை எண்ணங்களையே உண்டு பண்ணும் ..... பண்ணியது .

  ஆரம்ப காலங்களின் உங்களின் மர்ம நடவடிக்கைகளால் நீங்கள் லயனின் ரகசியப்படையா அல்லது அந்நிய உளவாளியா ? என்ற குழப்பம் அனைவர்க்குமே ஏற்பட்டபோது ஆசிரியர்க்கு ஏற்பட்டதில் வியப்பேதும் இல்லையே ?

  காமிக்ஸ் காதலை வெளிப்படுத்த இவ்வளவு இரும்பு திரைகள் அவசியமா ? மிக சாதரணமாக செய்ய வேண்டியவைகளை நீங்கள் அசாதாரணமாக மாற்றி விட்டீர்கள் எனவே நினைக்கின்றேன் .


  ReplyDelete
  Replies
  1. நண்பனாகவே இந்த பின்னூட்டத்தை பதிவு செய்துள்ளேன் .

   Delete
  2. உங்கள் கருதுக்களை நீங்கள் வெளிப்படுத்தினால் உங்கள் மனதை காயப்படுத்துவார்கள் என்றால் அது ஒன்றும் ஒருவழி பாதை அல்லவே நண்பரே!

   Delete
 7. Meeraan: மிக அருமையான வாதம்; அட்டகாசமான கருத்துக்கள்; ஆனால் மீண்டும் நீங்கள் மைய கருத்தை விட்டுவிட்டு வாதிடுகிறீர்கள். நாம் எழுதும் வார்த்தைகளில் நாம் விடுகின்ற இடைவெளி; அதன் மீதான தர்க்க வாதத்திற்கு மிகப்பெரிய வழி என்பதை நானும் அறியாதவனல்ல !

  எனக்கும் தர்க்க வாதம் புரிவது மிகவும் பிடித்தமான ஒன்றுதான்; ஆனால் அந்த தொடர் வாதங்கள் தன்னை பற்றி இருக்கும் போது அது குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே இறுதியில்அமைந்து விடுகின்றன; இருந்தாலும் தங்களுக்கான விளக்கங்களை தனித் தனியே பதிவது ஓரளவு குழப்பமின்றி அனைவரும் புரிந்துக்கொள்ள உதவும் என்பதால் அவ்விதமே செய்ய முயற்சிக்கிறேன் !

  Contd part.2

  ReplyDelete
 8. //காமிக்ஸ் காதலை வெளிப்படுத்த இவ்வளவு இரும்பு திரைகள் அவசியமா //

  முதலில் என்னுடையது ''புனைபெயர்'' என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். எனவே இங்கு முகமூடி; இரும்பு திரை; போலி id; அச்சம்; உள்நோக்கம் என்பதெல்லாம் அடிப்பட்டு போகின்றன. ஏனெனில் தொடக்கத்திலிருந்தே என் பெயர் இதுவே !

  புனைபெயர்கள் மூலம் எழுதுவது, நாம் விளம்பரத்தை விரும்பாமல் இருப்பதால் இருக்கலாம்; அந்த பெயரின் மேல் கொண்ட நேசிப்பு காரணமாக இருக்கலாம்; நம் எழுத்துக்களும் நாமும் எப்படி இருக்கப்போகிறோம் என்பதை பெயர் மூலம் உணர்த்துவதற்காக இருக்கலாம். எனவே மனதில் உள்ள அச்சம்; நம் தவறை மறைப்பதற்கு; நம் நற்பெயரின் மீது உள்ள அளவில்லாத அக்கறை என்ற வாதங்கள் இங்கு மீண்டும் அடிப்பட்டு போகின்றன !

  ஏனெனில் புனைபெயர்களுக்கு தீயநோக்கம் மட்டுமே காரணம் என்றால் நமக்கு தெரிந்த பாரதிதாசன் தொடங்கி இன்றுவரை புனைபெயரில் எழுதுபவர்கள் ரகசிய உளவாளியாகவோ, அந்நிய உளவாளியாகவோ, மனதில் சதித்திட்டம் கொண்டவராகவோத்தான் இருக்க வேண்டும். உடனே நீங்கள் கூறலாம் அவர்களின் முகவரியும் முகமும் அனைவரும் அறிந்த ஒன்றுதானே என்று; ஆனால் அவையெல்லாம் அவர்கள் எழுத ஆரம்பித்து பல ஆண்டுகள் கடந்தபின்தான் இருக்கும் !

  Contd part.3

  ReplyDelete
 9. //ஏனெனில் அவரவருக்கு அவர்களின் நற்பெயரின் மீது அளவில்லாத அக்கறை என்பதே நடைமுறை உண்மை; அதே போன்ற அக்கறையில்தான் நீங்கள் உங்களின் அடையாளங்களை மறைத்து பதிவிட்டு வருகின்றீர்கள்//

  இதற்கு ஒரு சிறு உதாரணத்தை மட்டும் கூறுகிறேன், விளக்கத்தை நீங்களே புரிந்துக்கொள்ளுங்கள். என் புனைபெயர் என்பது, ரோட்டில் நான் நடந்து செல்லும் போது என் மீது லாரி வந்து மோதிவிடாமல் இருக்க நினைக்கும் ஜாக்கிரதை உணர்வைப் போன்றது. ஆனால் நான் பதிவில் கூறியிருப்பது என்னவென்றால் நண்பர்கள் நால்வர் ஜாலியாக பேசிக்கொண்டு ரோட்டில் நடந்து சென்றுக்கொண்டிருக்கும் போது தாறுமாறாக வந்த தண்ணி லாரி ஒருவர் மீது மோதி அவர் ரத்தவெள்ளத்தில் துடித்துக்கொண்டிருக்கும் போது மிச்சம் உள்ள நண்பர்கள் நமக்கேன் வம்பு என்று ஒன்றுமே நடக்காதது போல் கடந்து செல்வதை போன்றதாகும் !

  Contd part.4

  ReplyDelete
 10. //ஆரம்ப காலங்களின் உங்களின் மர்ம நடவடிக்கைகளால் நீங்கள் லயனின் ரகசியப்படையா அல்லது அந்நிய உளவாளியா ? என்ற குழப்பம் அனைவர்க்குமே ஏற்பட்டபோது ஆசிரியர்க்கு ஏற்பட்டதில் வியப்பேதும் இல்லையே//

  அதாவது ஒரு நாலு பேர் ஒரு பொய்யை திரும்ப திரும்ப நாற்பது முறை கூறினால் அதுவே உண்மை என்று ஏற்றுக்கொள்ளும் மனத் தெளிவற்ற உலகம் இது மீரான் ! அதுமட்டுமல்ல பாதிக்கப்படுபவன் நல்லவன் என்று தெரிந்தாலும், நமக்கேன் வம்பு அவனின் எதிரிகள் நமக்கும் பாதிப்பை உண்டாக்கி விடுவார்கள் என்ற பயத்தினால் அவர்கள் சொல்வதே சரியென தலையாட்டும் சுயநலம் மிகுந்த உலகம் இது மீரான் !

  NEVER WASTE YOUR TIME WITH EXPLANATIONS; PEOPLE ONLY HEAR WHAT THEY WANT TO HEAR

  இறுதியாக, நாம் என்ன விரும்புகிறோமோ அதையே நாம் நம்புகிறோம்; எதை கேட்க ஆசைப்படுகிறோமோ அதையே கேட்க காலமெல்லாம் காத்திருக்கிறோம்; இவைகளை ஏற்றுக்கொள்ள கடினமாகக் இருந்தாலும் உளவியல் ரீதியான உண்மை இது தானே மீரான் ?

  Contd part.5

  ReplyDelete
 11. //உங்கள் கருதுக்களை நீங்கள் வெளிப்படுத்தினால் உங்கள் மனதை காயப்படுத்துவார்கள் என்றால் அது ஒன்றும் ஒருவழி பாதை அல்லவே நண்பரே//

  உதாரணமாக சமீபத்தில் '' இவர்களை பெற்றார்களா ? இல்லை செய்தார்களா ? '' என்று உங்களை மிக கேவலமாக காயப்படுத்திய கேள்விக்கு உங்களால் என்ன செய்ய முடிந்தது ? 700+ உறுப்பினர்களுக்கும் என்னைப் போன்ற வெளிப் பார்வையாளர்களுக்கும் அந்த கருத்து அதன் தாக்கத்தினால் உங்களை பற்றி ஏற்படுத்தி இருக்கக்கூடிய அபிப்பிராயம் எவ்விதமானது என்று என்றாவது யோசித்தது உண்டா மீரான் ? அந்த வர்ர்தைகளை நம்பியவர்களை இனி யார் நினைத்தாலும் மாற்றத்தான் முடியுமா அல்லது யாரெல்லாம் அப்படி நினைத்து இருப்பார்கள் என்று வலைப்போட்டு வலையுலகில் தேடத்தான் முடியுமா ?

  அதற்கு விளக்கம் தெரிவித்து நீங்கள் லயனில் பதிவிட்ட விளக்கம் எனக்கு தெரிந்து நான்கைந்து நபர்களைத் தவிர வேறு யாருக்குமே அந்த குரூப்பில் தெரிந்திருக்காது. அதுவும் நீங்கள் லயனில் பதிவிட்ட அந்த இரண்டு பதிவுகள் பலருக்கு எரிச்சலையும், ஒன்றுமே விளங்காத குழப்பமான நிலையையுமே தோற்றுவித்தது என்பதை நீங்கள் உணர்ந்துள்ளீர்களா மீரான் ?

  ஏதோ உங்களுக்காவது ஆசிரியரின் ஆறுதலான வார்த்தைகள் அடங்கிய இரண்டு வரிகள் கிடைத்தது; ஆனால் அந்த அதிர்ஷ்டம் ஒவ்வொரு முறையும் வேறு யாருக்கு கிடைக்கிறது சொல்லுங்கள் ? இந்த பதிவுகளை சத்தியமாக உங்களை காயப்படுத்துவதற்காக எழுதியவைகள் அல்ல. யதார்த்தம் என்னவென்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இத்தனை விளக்கங்களும் அதற்காக நான் செலவிட்ட நேரமும் என் சிந்தனைகளும் !

  இதில் இந்த கடைசி பதிவு உங்களை காயப்படுத்துவதாக இருந்தால் கூறுங்கள், DELETE செய்து விடுகிறேன் !

  ReplyDelete
 12. ''அதற்கு விளக்கம் தெரிவித்து நீங்கள் லயனில் பதிவிட்ட விளக்கம் எனக்கு தெரிந்து நான்கைந்து நபர்களைத் தவிர வேறு யாருக்குமே அந்த குரூப்பில் தெரிந்திருக்காது. அதுவும் நீங்கள் லயனில் பதிவிட்ட அந்த இரண்டு பதிவுகள் பலருக்கு எரிச்சலையும், ஒன்றுமே விளங்காத குழப்பமான நிலையையுமே தோற்றுவித்தது என்பதை நீங்கள் உணர்ந்துள்ளீர்களா மீரான் ?''

  அந்த பதிவின் ஆரம்பமே பேஸ் புக்கில் கொந்தளிக்கும் நண்பர்களே என்றுதான் ஆரம்பதிருந்தேன் . எனவே சம்பந்த பட்டவர்களுக்கு என்னுடைய செய்தி சென்றடைந்தால் போதுமானதே . அது நிறைவேரினத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என நம்புகின்றேன் .

  நிச்சயமாக நான் உங்களிடம் வீண் வாதம் புரியவில்லை .நீங்கள் எனக்கு அளித்திருக்கும் பதிலில் சில கேள்விகள் தோன்றுவதால் அதை நான் உங்களிடம் கேட்காமல் இருப்பது சரி என்கிறீர்களா ?

  ReplyDelete
  Replies
  1. //நீங்கள் எனக்கு அளித்திருக்கும் பதிலில் சில கேள்விகள்
   தோன்றுவதால் அதை நான் உங்களிடம் கேட்காமல் இருப்பது சரி என்கிறீர்களா//


   நீங்கள் கேட்டது சரியானது தான் மீரான். அதேசமயம்
   அதற்கு நான் அளித்துள்ள பதில்களும் மிகச் சரியானவை நண்பரே !

   Delete
 13. ok. உங்கள் மனநிலை புரிகின்றது .ஏதாவது வருந்தும் படி எழுதி இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் .

  ReplyDelete
  Replies
  1. நன்றி மீரான். உங்கள் மீது வருத்தமெல்லாம் இன்றல்ல, என்றுமே கிடையாது. நண்பர்களுக்கிடையே மன்னிப்பெல்லாம் பெரிய வார்த்தைகள். நீங்கள் இதுபோன்ற வினா எழுப்புவதால் எனக்கு ஒருவிதத்தில் நன்மையையே செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் இருவழி கலந்துரையாடலுக்கும் தெளிவான விளக்கத்திற்கும் பாதை அமைத்து தருவதாகவே உங்களின் கேள்விகள் அமைவதாக நான் எண்ணுவதால், உங்களுக்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும் !

   Delete