Follow by Email

Monday, 5 August 2013

யாரந்த வெற்றியாளர்கள் ?

ஹாட்லைன்:   நண்பர்களே, இந்தப்  பதிவுகளுக்கு முன்னோடியாக இருந்தது என் முந்தையப்  பதிவுகளான முத்து Top 5  வகையறாக்கள் தான். முத்து டாப் 5 கதைகள் ; நாயகர்கள் ; தலைப்புக்கள் ; அட்டைப்படங்கள் என்று    எழுதி முடித்தப் பின் எனக்கு, டாப் 5  மேனியா வந்து விட்டது என்றே நினைக்கிறேன் :) இல்லையென்றால்  இதுபோன்ற ஒரு சிந்தனை அன்று எனக்குத் தோன்றியிருக்குமா என்பதே சந்தேகம் தான் !

'மாற்றம் மாத்திரமே மாறாததே' - ஆசிரியரின்  பதிவில் பதிவிட்டிருந்த வாசகர்களில் இருந்தே முதல் ஐந்துப்  போட்டியாளர்களை தேர்ந்தெடுத்தேன். வேண்டுமானால் நீங்கள் மீண்டும் அந்தப் பதிவுகளில் உள்ள கமெண்டுகளைப்  படித்து விட்டு இதை உறுதி செய்துக் கொள்ளலாம்.  அந்த வாரத்தில் நான் மேலோட்டமாக படித்திருந்த வாசகர்களின் நாஸ்டாலஜியா பதிவுகளிலிருந்து, மீரான் மற்றும் பொடியனை தேர்வு  செய்தேன் !

ஆனால் இந்தப்  பதிவுகளை கண்ட அனைவரும், நான் என்னவோ நீண்டநாள் வாசகன் போலவும், தொடர்ந்து பதிவிட்டு வருபவன் என்பதாலேயே போலி idயில் வந்து கலகம் செய்வதாகவும், கலவரமே செய்து விட்டனர். நான் ஒன்று கேட்கிறேன்  நண்பர்களே, ஏன் உங்களால் என் எழுத்து நடையை வைத்து, நான் புதியவன் என்று  அடையாளம் காண முடியவில்லை? நீங்கள் என்ன அவ்வளவு அப்பாவியா வாசகர்களே ?!

ஷார்ட்லைன்: ஹ்ம்ம்.. என்ன எழுதுவது? எப்படியோ ஆரம்பித்தது எப்படி எப்படியோ போய் முடிந்து விட்டது! இனி அடுத்தப்  பதிவுகள், வேறு பாதையில் அதாவது நேஷனல் ஹைவேஸில் பயணித்து அதி வேகமெடுக்கும் !

ஷாட்லைன்:  ஒரு பானைச்  சோற்றுக்கு ஒரு சோறு பதம் !


1.மர மண்டை25 November 2012 11:40:00 GMT+5:30

1.Erode VIJAY : முதலாம் இடம் !


புதியவரா இல்லை பதிவரா ; சிறியவரா அல்லது பெரியவரா ; நல்லவரா கெட்டவரா ; சூதுவாது தெரியாதவரா அல்லது வில்லங்கம் பிடித்தவரா ; படித்தவரா இல்லை பட்டிக்காடா ; தன்மையானவரா வன்மையானவரா ; பரந்த மனப்பான்மை கொண்டவரா அல்லது குறுக்கு புத்தியா என்றெல்லாம் பார்க்காமல் எழுத்தை மட்டுமே பார்த்து அடுத்தவரை பாராட்டும் குணமே இவரை முன்மொழிந்தது ! கலக்கலாகவும் ; கலகலப்பாகவும் ; கலாய்க்கும் இவரின் இன்னொரு குணம் இவரை வழிமொழிந்தது ! ஒரு சிறந்த வாசகனாக, தீராத காமிக்ஸ் காதலனாக ஒவ்வொரு பதிவும் முன்னூறு பின்னூட்டத்தை தாண்ட பாடுபடும் அந்தக்  குணம் இவருக்கு இந்தச்  சிம்மாசனத்தை கொண்டு வந்து வைத்து விட்டது ! இதில் நான் எவருடைய சிபாரிசை ஏற்க முடியும் சொல்லுங்கள் ?
me the First !


2.மர மண்டை25 November 2012 12:15:00 GMT+5:30 

2.லூசு-father of லூசு பையன் : இரண்டாம் இடம் !என்ன சொல்வது எப்படிச்  சொல்வது என்று தெரியாமல் தடுமாறுகிறேன்! மற்றவர்களை புரட்டிப் போட்டு தடுமாற வைக்கும் அந்த ஒரு தகுதியே இவரின் வெற்றி வாய்ப்பைக் கூட்டியிருக்குமோ என்ற சந்தேகம் உங்களைப்போலவே எனக்கும் கடைசி நேரத்தில் எழுந்தது. இவர் தனி மனுஷன் சார்! ஆனாலும் வீரமும், அநீதியை பார்த்து கொதித்து எழும் போராட்டக்குணமும் கொண்டு கடைசி வரை மாறாமல் போட்டியிட்டு இரண்டாம் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இவரின் போர்க்குணமும் ; தடம் மாறாத நாணயமும் ; இந்த வலைத்தளத்தின் மேன்மைக்கான நன்மையை கருதி பதிவில் காட்டும் தன்மையும் ; தான் ஒரு சிறந்த காமிக்ஸ் ரசிகன் என்பதில் கொண்ட பெருமையும் இவரை இன்று இங்கு உயர்ந்த இடத்தில் உட்கார வைத்து விட்டது! வாழ்த்துகள் நண்பரே!

உயர்ந்த இடத்தில் இருப்பவரை நோக்கி எறியப்படும் கற்கள் வலுவிழந்தப்பின் எறிந்த இடத்தை நோக்கியே விசையோடு குறிவைக்கும் என்பது யாருக்குத்தான் தெரியாது? இதில் இடைப்பட்ட காலம் தான் நம்மை சங்கடப்படுத்தும் பெரிய இடைவெளியாக ; ஆனால் அந்த இக்கட்டும் நம்மில் பலரை மாற்றிவிடும் போராளியாக..! நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே !
Born to Fight !


3.மர மண்டை25 November 2012 12:56:00 GMT+5:30

3.கோயம்பத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா : மூன்றாம் இடம் நான் முன்பே வாழ்த்துரையில் கூறிய முன்னுரையில் உள்ள ஆச்சர்யம், திரும்பவும் இங்கே எல்லோருக்கும் தலைக்காட்டும்! தவறு நடந்து விட்டது என்று வாதம் செய்பவர்கள் எங்கே, எனக்கு விளக்கம் கூறி தொடர்ந்து நான்கு அல்லது பதினொன்று பின்னூட்டம் இட்டு எல்லோரையும் படிக்க வைத்து பாருங்கள்? படிப்பதை விட எழுதுவது ரொம்ப கஷ்டம் சார்!  விஷயமே இல்லாமல் எழுதவும் முடியாது ; ரசனையே இல்லாமல் யோசிக்கவும் முடியாது என்று பெரியவர்கள் எழுதிவிட்டு போயுள்ளது எத்தனை பேருக்கு இங்கு தெரியும் சொல்லுங்கள்? இதில் என்ன விசேஷம் என்றால் எனக்கே முதல் வரி எழுதிய பின்புதான் அடுத்த வரியாக சட்டென்று தோன்றியது! தன் ரசனையை வெளிக்காட்டும் ஆர்வத்திலும் ; தன் ரசனையின்பால் கொண்ட பெருமிதமும் ; சாதுவாக தட்டிக்கேட்பதில் உள்ள வீரமும் இவரை மூன்றாம் இடத்திற்கு அமர்த்தி அழகு பார்த்துக் கொண்டிருக்கிறது! இதில் மற்றவர் யோசித்து எழுதி பதிவிட்டு, மீண்டும் நன்றாக வளப்படுத்தி பதிவிட என்ன இருக்கிறது? என்று நானும் உங்களைப்  போலவே தலையை பிய்த்துக் கொள்கிறேன் நண்பர்களே! அப்பப்பா... சற்று பெரிய பதிவு கொஞ்சம் சுற்றி வளைத்தது போலவும் ஆகிவிட்டது... அடுத்தப் பதிவில் மாற்றிக் கொள்கிறேன் நண்பர்களே:D கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே..! பலன் தானாக நீ தூங்கும் போது கூட உன் வாசல் கதவை தட்டும் !
தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் ! 


4.மர மண்டை25 November 2012 13:21:00 GMT+5:30 

4.meeraan and podiyan : நான்காம் இடம் :
இந்த நண்பர்கள் இருவருமே ஒரே தகுதியின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.. தீராத காமிக்ஸ் காதல் !  இது ஒரு படத்தின் தலைப்பு போல் இருந்தாலும் இவர்கள் காமிக்ஸ் காவியத்தில் சேர்க்கப்படக்கூடிய கதாநாயகர்கள்! காமிக்ஸ் போராட்டத்தில் முன்னவர் தீவிரவாதியாகவும் பின்னவர் மிதவாதியாகவும் தமிழகத்திலும் இலங்கையிலும் வலம் வருகின்றனர். வழி எதுவென்பது முக்கியமல்ல, சுதந்திர வேட்கை தான் முதல் அவசியம்! அது இரண்டு பேருக்குமே அடுத்தவருக்கு தாக்கம் ஏற்படுத்தும் அளவுக்கு அதிகமாகவே உள்ளது. நேரம் இருந்தால் மீரானின் 21.5.12 தேதியிட்ட பதிவை படித்துப் பாருங்கள் நண்பர்களே, கண்களின் கண்ணீர் காணாமல் போய்விடும் ! நாலு பேருக்கு நல்லதுனா எல்லா காமிக்ஸும் படிக்கலாம் தப்பில்ல..!
You the best meeraan !


5.மர மண்டை25 November 2012 13:51:00 GMT+5:30 

5.ஹஜன் சுந்தர் and புத்தக பிரியன் : ஐந்தாம் இடம் 


ஐந்தாவது இடத்தை சரிசமமாக பகிர்ந்து கொண்ட இவர்கள் வெற்றி விழா கொண்டாட்டத்திற்கு கூட வரவில்லை என்பதை என்னவென்று சொல்வது? ஆனால் ஒன்று நண்பர்களே நீங்கள் எல்லோரும் போய்விட்டாலும் நான் மட்டும் தன்னந்தனியனாக அமர்ந்திருந்து நிச்சயம் அவர்களை கௌரவித்தப்பிறகே வீடு திரும்புவேன் என்பதை இங்கே உறுதியிட்டு கூறுகிறேன்! இவர்கள் இருவரும் நம் பல்கலைகழகத்தின் தூண் போன்றவர்கள்! வீரம் செறிந்த போர் வாள்கள்! ஆனால் தற்போது கமாண்டோ பயிற்சியில் இருக்கிறார்கள்! எதிர் காலத்தில் Black cats அதாவது தமிழில் கருப்பு பூனை படை (இப்பவெல்லாம் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யவே பயமாக இருக்கிறது) என்ற உயர்ந்த பாதுகாப்பு படையின் தலைவர்களாக அலங்கரிக்கக்  கூடியவர்கள் ! 

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் !


6.மர மண்டை25 November 2012 14:04:00 GMT+5:30

நன்றியுரை:

இதுவரை இந்தத்  தளத்தை பொறுமையாக படித்த, இனி படிக்க போகும் வாசக நண்பர்கள் அனைவருக்கும், ஒரு தலைவனின் தலைமை பண்பை இங்கு செயலில் காட்டிய புனித சாத்தான் என்ற சோமசுந்தரம் அவர்களுக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக இந்த வலைதளத்தில் பதிவிட எனக்கு மானசீக அனுமதி அளித்த ஆசிரியர் விஜயன் அவர்களுக்கும், இப்படி ஒரு மேடை அமைய முகம் தெரியாமல் பின்னணியில் உழைக்கும் ஆசிரியர் அவர்களின் டீமிற்கும், எல்லாம் வல்ல இறைவனுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் !

சொல்லாத காதல் ஜெயிப்பதில்லை !
   

லாஸ்ட்லைன்: புகழ், பணம், பதவி, பட்டம் நம்மைத் தேடி வரவேண்டும், நாம் தேடி செல்லக் கூடாது. அதற்கு பிறரை சிபாரிசு செய்வதும் தவறு. ஒரு சாதாரண செயலை சீரியஸ் ஆக எடுத்து கொள்வதில் தான் பிரச்சனைகள் - ஹஜன் சுந்தர்

17 comments:

 1. அடப் போங்க சார்,

  ஒவ்வொரு தடவையும் உங்கள் பதிவில் நானே முதல் தடவு வந்து கமெண்ட் இடுவது வெறுப்பாக இருக்கிறது.

  இருந்தாலும், இந்த முறையும், நானே முதல்வன்.

  ReplyDelete
  Replies
  1. முதல்வன் என்பவன் முதல்வனாக வாழ்வதாலேயே எங்கும் தன்னை முதல்வனாக முன்னிறுத்திக் கொள்கிறான் !

   Delete
 2. எனக்கு தெரிந்து எடிட்டரின் தளத்தில் நீங்கள் இட்ட இந்த கமெண்ட்டில் இருந்துதான் உங்களுக்கு செவன் பாய்ன்ட் ஃபைவ் ஆரம்பித்தது என்று நினைக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. King Viswa: சரியான கணிப்பு; தீர்க்கமான சிந்தனைகள்; தெளிவான பார்வைகள் !

   இனி அடுத்தடுத்து வரப்போகும் என் பதிவுகள், என்னவிதமான பிரச்சனைகளை ஆரம்பித்து வைக்கும் என்று என்னாலேயே இப்பொழுது கணிக்க முடியவில்லை. ஆனால் அதை சம்பந்தப்பட்டவர்கள் படிக்காமல் போய் விடுவார்களோ என்ற அச்சம் தவிர வேறொன்றும் என்னை தற்போது ஆக்கிரமிப்பதாக தெரியவில்லை !

   Delete
 3. //இனி அடுத்தடுத்து வரப்போகும் என் பதிவுகள், என்னவிதமான பிரச்சனைகளை ஆரம்பித்து வைக்கும் என்று என்னாலேயே இப்பொழுது கணிக்க முடியவில்லை. ஆனால் அதை சம்பந்தப்பட்டவர்கள் படிக்காமல் போய் விடுவார்களோ என்ற அச்சம் தவிர வேறொன்றும் என்னை தற்போது ஆக்கிரமிப்பதாக தெரியவில்லை//

  interesting...............................

  உடனடியாக அந்த பதிவுகளை இடவும்.

  இது வேண்டுகோள் இல்லை,

  கட்டளை

  கட்டளை கட்டளை

  கட்டளை கட்டளை கட்டளை

  கட்டளை கட்டளை கட்டளை கட்டளை

  கட்டளை கட்டளை கட்டளை கட்டளை கட்டளை

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கட்டளை என் சித்தம். ஆனால் fb விளம்பரம் இல்லாத அந்த பதிவுகள் அதன் தன்மையை இழுந்து விடுவதாக அல்லவா அமைந்து விடும்; க்ரீன் மேனர் பிரபுக்கள் அதை படிக்க விட்டால் பயனேதும் இருக்காதே ?

   Delete
 4. மிஸ்டர் மரமண்டை,

  First time looking your blog after getting dizzy about your giga paragraph comments on lion comics blog. You have lot of potential in writing - especially meaningful as well as stylish and creative - but looks like all your energy is wasted in talks about small circle of localized blog, members and its cultures etc. Better spend your potential on writing stories man!

  Definitely your efforts deserve to be implemented on exposed / creative mediums! A friendly suggestion - Don't limit yourself with blogs and comments! :)

  ReplyDelete
  Replies
  1. Ramesh Kumar:

   உங்களின் இந்த வருகை மிகவும் மகிழ்வுக்குரிய விஷயமாக வருகையேட்டில் பதிவிடப்பட்டுள்ளது. மிக்க நன்றி நண்பரே. இந்த ப்ளாக் ஆரம்பித்து இன்னும் ஒரு மாதம் கூட முடியவில்லை; இதன் லட்சியத்தில் நான் பாதி கிணறு மட்டுமே தாண்டியுள்ளேன்; இந்த லட்சணத்தில் மேல்நோக்கி பார்ப்பது அதல பாதாளத்திற்கான சுலப வழியாகிவிடும் என்றே நினைக்கிறேன் !

   //First time looking your blog after getting dizzy about your giga paragraph comments on lion comics blog// இதில் இழையோடும் மெல்லிய நகைச்சுவை உணர்வுகள் எனக்கு பிடித்தமான ஒன்று; படிக்கும் போது என்னையறியாமல் புன்னகைத்து விடுவேன். நீங்கள் தமிழில் எழுதியிருந்தால் இன்னும் அலங்காரத்தோடு எழுதியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதே போன்று உங்கள் பதிவில் அமைக்கப்பட்டுள்ள வரிகளின் ஒழுங்கு நான் மிகவும் நேசிக்கும் ஒழக்கமாகும்; அருமையான கட்டமைப்பு. உங்கள் பதிவால், அதன் கட்டமைப்பால், கருத்துக்களால், உயர்ந்த நகைச்சுவையால் என் உள்ளம் இலகுவாக காரணமாகி விட்டீர்கள் நண்பரே !

   Delete
  2. // இதன் லட்சியத்தில் நான் பாதி கிணறு மட்டுமே தாண்டியுள்ளேன்; இந்த லட்சணத்தில் மேல்நோக்கி பார்ப்பது அதல பாதாளத்திற்கான சுலப வழியாகிவிடும் என்றே நினைக்கிறேன் !//

   ஒரு hobby-ஆக செய்யப்படும் எந்த புது முயற்ச்சியும் கவலைதரும் சூழ்நிலைக்கு கொண்டு செல்லாது. யாருடைய feedback குறித்தும் கவலைப்படாத பொழுதுதான் practice possible ஆகும் (ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது). உண்மையை சொல்வதானால் அறிமும் ஆகாத 1,00,000 பேருக்கு எழுதுவதைவிட நன்கு அறிமுகமான 10-15 பேருக்காக எழுதுவது tough-ஆன விஷயம்.

   தங்களை creation பக்கமாக focus பண்ண சொன்னதன் காரணம் வளர்ச்சிக்காகவோ பிறரின் உபயோகத்துக்காகவோ மட்டும் அல்ல - just for your satisfaction! One day or another day you will need that! ;)

   Delete
  3. மிகவும் அருமையான கருத்துக்கள். பாராட்டப்பட வேண்டிய மனப்பக்குவம் !

   இதன் லட்சியம் என்று குறிப்பிட்டுள்ளதே, இங்கு எனக்கு கிடைக்கும் ஆத்ம திருப்தியைத் தான். இது தங்களுக்கு புதிரான ஒன்றாக கூடத் தோன்றலாம்; எனவே தொடர்ந்து வரப்போகும் க்ரீன் மேனர்-1 க்ரீன் மேனர்-2 க்ரீன் மேனர்-3 ஆகிய பதிவுகளை தாங்கள் படித்து பார்க்கும் பட்சத்தில் இந்த பள்ளிக்கூடத்தின் பாரம்பரியம் தங்களுக்கும் புலனாகும் என்று நினைக்கிறேன் !

   ஆழமான கருத்துக்களை தெளிவான பார்வையில் அழகாக பதிவிடுகிறீர்கள் !

   Delete
 5. பார்வையாளனாக

  ReplyDelete
  Replies
  1. அடக்கம் பார்வையாளனாகவே இருப்பதால் அகங்காரம் போட்டியாளனாக எகத்தாளம் போடுகிறது - உலக நடப்பு

   Delete
 6. விருதெல்லாம் எதுக்கு மிஸ்டர் மரமண்டை? ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு வந்து ஒரு கப் காப்பி வாங்கிக் கொடுங்க போதும்! :)

  ReplyDelete
  Replies
  1. இது உண்மையான கமெண்ட் டாகத் தெரியவில்லை :)

   உங்கள் ஃபோட்டோவைப் பார்த்து அதற்கு நீங்கள் டப்பிங் பேசிவிட்டு போயிருப்பதாகவே தெரிகிறது :)

   உண்மைதானே விஜய் ? உங்களின் தற்போதைய அழகான ஃபோட்டோ விரைவில் இங்கு அப்டேட் செய்யப்படும். எனவே புத்தக கண்காட்சியில் நீங்கள் நிற்கபோகும் ஒவ்வொரு ஸ்டில் க்கும் அதிக கவனம் செலுத்துங்கள். லயனில் நீங்கள் பதிவிடும் நேரடி வர்ணனைகள் மிகவும் அருமையாக உள்ளது. அழகான உங்கள் தொகுப்பிற்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய்க்கு பதில் ஒரு குலோப்ஜாமுனை ஒவ்வொருமுறையும் வைத்துவிட்டு செல்வது உங்கள் பதிவின் சுவையை சில மடங்கு கூட்டுவதாகவே உள்ளது :)

   Delete
 7. Adutha paagathirku kaathirukiren singam 2 pola..:-)

  ReplyDelete
 8. Adutha paagathirku kaathirukiren nanbaray.,

  ReplyDelete
  Replies
  1. Paranitharan K: நன்றி பரணிதரன் ! என் பதிவுகளின் தாமதத்திற்கு எனக்கு கிடைக்கும் நேரம் ஒரு காரணம் என்றாலும் அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது ..!

   உடனே உங்களுக்கு பாட்ஷா ரஜினி ஞாபகம் வந்திருக்குமே ? வெரி ஸாரி ப்ரதர் :)

   அந்த இன்னொரு காரணம், முதலில் அடுத்த பதிவுக்கான தலைப்பை நான் யோசிக்க வேண்டும்; பிறகு அதற்கான ஹாட்லைனை யோசிக்க வேண்டும்; அதன் பிறகு ஹாட்லைனின் அல்லக்கைகளான ஷார்ட்லைன், ஷாட்லைன் ஐ யோசிக்க வேண்டும்; இதற்கு பிறகும் பதிவுக்கு பொருத்தமான சித்திரத்தை தேடவேண்டும்; நெட்டில் கிடைப்பவை தம்மாத்துண்டு அளவே என்பதால் இது ஒரு ஒரு சிரமமான காரியமே !

   வெள்ளாவியில் வெளுக்காத வெள்ளந்தி மொழி நடைக்கு சொந்தக்காரரான உங்களுக்கு நான் சொல்லவருவது என்னவென்று புரிந்திருக்கும்; இருந்தாலும் உங்களுக்காக ஒரே ஒரு லாஸ்ட்லைன் மிஸ்டர் பரணிதரன்..

   மிக விரைவில் வெளிவருகிறது ஒரு துரோகத்தின் கதை !

   Delete