Follow by Email

Wednesday, 7 August 2013

தவறான முன் உதாரணம்..?

ஹாட்லைன்:  ஒரு பொது தளத்தில் அபிப்ராயமாய் ஒரு விஷயத்தைப் பகிர்வதற்கும், அதனையே கருத்தாய் உரக்கச் சொல்வதற்கும் உள்ள வித்தியாசம், என்றுமே நமக்கு ஒரு கேள்விக்குறி  தான்! என்ன நண்பர்களே ஒரு கேள்விக்குறியே பதிலாக அமைவதும் ஒரு ஆச்சரியக் குறிதான் அல்லவா? நீங்கள் அழுத்தமாக ; உண்மையை அப்பட்டமாக ; வார்த்தைகளால் ஆர்ப்பாட்டமாக ; தன்  நிலையில் இறுதியானதாக   ஒரு கருத்தை எழுதிவிட்டு கடைசியில், ஒரே ஒரு கேள்விக்குறியை மட்டும் போட்டுப் பாருங்கள், அந்தக் கேள்வியே அட்டைக் கத்தியாகி விடும். அதேநேரம், அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டால் அங்கு நாம் கலகம் செய்பவராகவும், கலவரம் ஏற்படுத்துபவராகவும் உண்டான தோற்றத்தை, விவரம் பத்தாத அப்பாவி வாசகர்களுக்கு ஏற்படுத்தி விடும். அடுத்தமுறை நீங்கள் லயனில் பதிவிடும் போது, நீங்கள் விரும்புவது முற்றுப்புள்ளியா அல்லது கேள்விக்குறியா? என்பதே, தற்போது உங்கள் முன்னால்  உள்ள மிகப் பெரிய கேள்விக்குறி :)

பொதுவாகவே, எனக்கு MGR, நம்பியார் போன்று ஊருக்கு பந்தா காட்ட நடத்தப்படும் வாள் சண்டைகள் போன்ற தர்க்கவாதங்கள்  பிடிப்பதில்லை. நமக்குத் தீர்க்கமாகத் தெரிந்தக் கருத்தை நாம் முன்வைப்பதில் தவறொன்றுமில்லை என்றே நினைக்கிறேன்.  நம் கருத்தின் வேகம் கூட கூட எதிர்க்கருத்துகளுக்கும் நாம் அவ்விதமே வாய்ப்பளிகிறோம்.  அதுவே ஆரோக்கியமான தர்க்க வாதமாக இருக்கக் கூடும். அதைவிட்டு விட்டு நானும் ரவுடி தான் என்று சிரிப்பு போலிஸ் கணக்காய் கருத்துகளையும் கமெண்டுகளையும் அடுக்கிக் கொண்டே போவதில், என்றுமே எனக்கு உடன்பாடில்லை !


ஷார்ட்லைன்: இதில் வரும் பின்னூட்டங்களை நீங்கள் ஆழ்ந்துப் படித்து பார்த்தால், நான் லயனில்  பதிவிட்டு வந்த காரணம் உங்களுக்கும் புரியும் என்றே நினைக்கிறேன். நானாக எதையும் வளவள என்று எழுதவில்லை. ஆனால், என்னை நோக்கி எறியப்பட்ட கற்களே என் படிக்கட்டுகளாக என்னை மேலேற்றியது என்றால் அது மிகையல்ல !


                   

        
1.Dr.Sundar,Salem.26 November 2012 22:13:00 GMT+5:30

டியர் மரமண்டை , வலைதள வாசகர்கள் டாப் 5 என்று வரிசைபடுத்தி ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டீர்களோ ? இது உங்களின் டாப் 5 ; இப்படி ஒவ்வொருவரும் வரிசைபடுதினால் தேவையில்லாத problem வராதா?, எப்படி முத்துவின் சமீப கதைகளை மட்டும் படித்துவிட்டு , முத்து டாப் 5 வரிசைபடுதினால் , சரியாக வராதோ , அதே போல் சமீப பதிவுகளை படித்துவிட்டு டாப் 5 வாசகர்கள் என்று வரிசைபடுதுவது முறையாகாது .நம் ப்ளாக் ல் உள்ள 60 க்கும் மேற்பட்ட பதிவுகளை படித்துபார்த்து விட்டு , அதற்கு பிறகும் உங்கள் முடிவில் தெளிவாக இருந்தால் , உங்களுக்கு ஒரு சபாஷ் !

பழைய பதிவுகளில் blade கார்த்திக் ன், நகைச்சுவை கலந்த ,யாரையும் புண்படுத்தாத, வரிகளை படித்து பாருங்கள் (இப்போது நகைச்சுவை சதவீதம் குறைந்து , கொஞ்சம் கிண்டலும் கேலியும் அதிகமாகிவிட்டது போல் எனக்கு தோன்றுகிறது , கார்த்திக் மீண்டும் பார்முக்கு வாங்க !,) அவரின் பழைய பதிவில் , போகிற போக்கில் விஜயன் வாரிசை மினி லயன் என்று எழுதி இருப்பார்! படித்தால் சிரிப்பை அடக்கமுடியாது !

பொடியன்னுக்கு 4 ம் இடம் கொடுத்து உள்ளீர்கள் ! என்னுடைய கணிப்பில் முதல் இடம் , ப்ளாக் ல் விசயத்தோடு எழுதும் வெகு சில ஆத்மாக்களில் அவரும் ஒருவர் . கனவுகளின் காதலனை மறந்து விட்டீர்கள் , மேலும் உங்க டாப் 5 ல் குறிப்பிட்ட சிலரை அடிக்கடி தேவை இல்லாமல் தாக்கும் , நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உள்ளீர்கள் , இது தேவை இல்லாமல் கசப்பை உண்டாக்கும் . இந்த விளையாட்டை யாரும் இனி தொடராமல் இருப்பதே நல்லது .டாப் 5 ல் உள்ள நண்பர்கள் மேல் எனக்கு வருத்தம் இல்லை, இனிமேலும் இது தொடரவேண்டாமே , ப்ளீஸ் ! நான் சொன்னதில் தவறுல்லதா நண்பர் சாத்தான் அவர்களே ?2.மர மண்டை27 November 2012 10:45:00 GMT+5:30

Dr அவர்களுக்கு தங்களின் நடுநிலையான கருத்துக்கு மிகவும் நன்றி! 


எல்லோரும் எல்லா வரலாற்றுப் பதிவுகளையும் படித்து விட்டு தான் முடிவு எடுக்க வேண்டும் என்றால் ஒரு இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலேயோ, வீர பாண்டிய கட்டபொம்மனையோ தான் தேர்ந்தெடுக்க முடியும்! ஆனால், இன்று நம்மோடு இருக்கும் நரேந்திர மோடி அல்லது Mr.விஜயகுமார் IPS -யோ பாராட்டிப் பாருங்கள், அவர்களால் இன்னும் அதிகமாக செய்ய முடியும் !

கடந்து போனதெல்லாம் சரித்திரம் ஆகி விடுகிறது ; காலம் கொண்டு போனதெல்லாம் காலனுக்கு சொந்தமாகி விடுகிறது ! இந்த தளத்தில் ஆவலோடு வருகின்ற நண்பர்கள் அனைவரும் இன்று நடக்கவிருக்கும் கார்த்திகை தீபத்தின் பக்தர்கள் போன்றவர்கள், இந்தக் கூட்டத்தில் யாராவது நடுவில் கல்லெறிந்தால், எங்கோ அல்லது யாருக்கோ கோபம் வரத்தான் செய்யும் ! சில சமயம் உரிமைகள் நீதித்துறைக்கும், சில மனித உரிமை அமைப்புகளுக்கும் உள்ளது போன்று வேறுபடுகின்றது ! எது நியாயம் என்பது பொது மக்களுக்கும் தெரிந்து தான் உள்ளது !

எது நண்பர்களே, காமிக்ஸ் வளர்ச்சி ? சந்தி விடுப்பட்டுள்ளது என்று சந்திச் சிரிக்க வைப்பதா ? அல்லது,  உடனே குணமாக்கி வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று ஓவர் டோஸ் கொடுப்பதா ? இங்கு நாம் எல்லோரும் நண்பர்களே... காமிக்ஸ் மீது தீராத ஆசையோ, வெறியோ கொண்ட வாசகர்கள். நாம் ஒன்றும் குமுதம், ஆனந்த விகடன் புத்தகத்திற்கு திரை விமர்சனம் எழுதி, 100/36, 100/39.5 என்று போடுவதற்கு படிப்பதில்ல. பிறகு ஏன் அதில் தவறு, இதில் தவறு என்று அல்லாடுகிறோம் ? தவறை சுட்டிக் காட்டுங்கள் அது குற்றமில்லை, அடுத்த இதழில் நிச்சயம் மாற்றம் இருக்கும். கடும் தண்டனைக் கொடுக்க, தவறு ஒரு கொடும் குற்றமாக கருதப்படுவதில்லை. நமக்கே இவ்வளவு அக்கறை இருக்கிறது என்றால்,  தயாரிப்பவருக்கு எவ்வளவு அக்கறை இருக்கும் என்று ஏன் யாரும் நினைப்பதில்லை? இப்படியே போனால் நீ அழிந்து விடுவாய், உன்னால் நாங்களும் அழிந்து விடுவோம் என்கின்ற ரேஞ்ச் எதுவரை பயணிக்கும் என்று தெரியவில்லை! 

சினிமா எடுப்பது எல்லோரும் பார்ப்பதற்காகவும், house full ஆக ஓடவேண்டும் என்பதற்காக தான். அதற்காக, விஜய் படத்திற்கு அஜித் ரசிகர்கள் சென்று படம் முடியும் வரை இதை அப்படி செய்திருக்கலாம், அதை இப்படி செய்திருக்கலாம் என்று யோசனை கூறிக் கொண்டிருந்தால் எப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை அங்கு உருவாகும்?  


3.மர மண்டை27 November 2012 11:01:00 GMT+5:30 PART .2 

பாதையில் சர்க்கரையைக் கொட்டி அதன்மேல் நடந்து சென்றால் மட்டும் மனமும், வாயும் இனித்து விடுவதில்லை ! நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பில்ல, அதுவும் அந்த நாலு பேரு அநியாயமாக பாதிக்கப்பட்டிருந்தா, நேர்மையான வழிமுறை எதுவுமே தவறான முன்னுதாரணமாக அமையாது. நடுநிலை என்பது உண்மையை பயமின்றி வெளிச்சம் போட்டுக் கட்டுவதே அன்றி இதுவும் சரி, அதுவும் சரி என்பதல்ல ! இது ஆடுகளம், எப்படி வேண்டுமானாலும் அடித்து ஆடுங்கள்... no rules and regulations. ஆனால், யாராவது pitch-யை சேதப்படுத்தினால் என் போன்ற பார்வையாளருக்கு கூட அது தவறான ஆட்டமாகத் தான் தெரியும்.

எல்லா விடியலும் இரவுக்கு பின்தான் !     


4.மர மண்டை27 November 2012 15:14:00 GMT+5:30

மாயாவி: லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா தான் வந்திருக்கிங்க. இதில் எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை. இது ஆசிரியர் அறிவித்த Top 5 அல்ல, அவரின் தேர்வும் அல்ல. இது ஒரு சுவாரசியத்திற்காகவும், வித்தியாசமான ரசனைக்காகவும், இடையே என் கருத்தை பதியவும் எழுதப்பட்டுள்ளது. உங்கள் தகுதி எனக்குத் தெரிந்த உண்மை. நண்பர்களின் தகுதியை சொல்ல, எங்கே சென்று வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. அதேபோல் அந்தப் பதிவை சீரியஸாக படிக்கும் மற்றைய நண்பர்கள் இங்கே ''என் மனதிற்கு இனிய நண்பர்கள் ஐவரும், அன்னாரின் அழகிய செயல்பாடுகளும்'' என்று எழுதினால், என்னைப் போன்ற புதியவர்கள் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும். மேலும் பின்னூட்டங்கள் அதிகமாகி பொழுதும் சுவாரசிமாக கழியும் !

புனித சாத்தான் அவர்கள் 13.11.12 தேதியிட்ட பதிவில், என்னை மனித வெடிகுண்டாக,  மற்றைய 9 மனித வெடிகுண்டோடு தீபாவளிக்கு அனுப்புவதாக கூறினார... அதற்கு நீங்களும் நானும் சண்டைக்கா சென்றோம்? நான் ஒரு தீவிரவாதி அல்ல என்று எத்தனை பேர் அவரிடம் வாதம் புரிந்தோம் அல்லது என்னையும் ஏன் மனித வெடிகுண்டு லிஸ்டில் சேர்க்கவில்லை என்று யாராவது வருத்தப்பட்டார்களா? அதைப் பார்த்து சிலராவது கைகொட்டிச் சிரித்து இருப்பார்கள் அல்லவா? joke is a joke அவ்வளவுதான்! அதைபோல் இங்கேயும் வாழ்த்தி விட்டு போகலாமே !?

சிரிப்பு தான் இன்றைய பஞ்சம் ! பிறக்கும் போது எதை கொண்டு வந்தோம் அதை இழப்பதற்கு ?!      


5.மர மண்டை27 November 2012 17:25:00 GMT+5:30

நண்பர்களே,  இது என்ன பித்தலாட்டமாக இருக்கிறது :( இப்படியும் இந்த வலைதளத்தில் ஆள்மாறாட்டம் செய்கிறார்களே :( இதற்கு விஷயம் தெரிந்தவர்கள் யாராவது ஒரு வழி சொல்லுங்களேன் ! மிக அவசரம் இல்லை என்றால் என் பெயரில் இந்த தளத்தை அசிங்கப்படுத்தி விடுவார்கள் :(

இப்படிக்கு
மர மண்டை -ஒரிஜினல்   


6.மர மண்டை27 November 2012 17:45:00 GMT+5:30

ஆசிரியர் விஜயன்: //ஐந்து அமைச்சர்களுக்குமான துறைகள்://

இந்தத் தலைப்பை தாங்கி வந்துள்ள பின்னூட்டத்தை, தயவுசெய்து டெலிட் செய்துவிடவும். கள்ளநோட்டு போன்று அடுத்தவரின் பெயரில் வந்து களங்கம் ஏற்படுத்தும் இவர்களா காமிக்ஸ் வாசகர்கள்:( நிச்சயம் ஏதோ வழிபோக்கராகவோ அல்லது இதுவரை தன் உண்மையான முகத்தை மறைத்துக் கொண்டு இங்கே வலம் வந்தவராகவோ தான் இருப்பார். நான் ஏதாவது வித்தியாசமான எங்கும் கிடைக்காத profile உடன் மீண்டும் வருகிறேன்:(

இவண்;
மர மண்டை-ஒரிஜினல்   


7.மர மண்டை27 November 2012 20:17:00 GMT+5:30

Duplicate மர மண்டை: இது போன்று அடுத்தவரின் எழுத்து நடையை காப்பி அடித்து அவரை போலவே எழுத ஒரு சிலரால் மட்டுமே முடியும். எனக்கு நீங்கள் யாராக இருக்க கூடும் என்று இப்பொழுது புரிகிறது. ஆனால், உங்கள் எழுத்துத் திறமையை, கற்பனை வளத்தை இப்படி வீணாக்க எப்படி மனம் வருகிறது என்று தெரியவில்லை. எழுதும் இடத்தைப் பொறுத்தே நம் எழுத்துகள் வலிமை பெறுகின்றன. என்ன எழுதினோம் என்பதைப் பொறுத்தே நாம் பெருமை அடைகிறோம். எழுத்தில் வளமையையும், கற்பனை திறனும், புத்தி சாதுர்யத்தையும் கடவுளிடம் கைவரப்பெற்ற தாங்கள் இப்படி வீணே அசிங்கப்படலமா ?

வினை விதைத்தவன் வினை அறுப்பான்! எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்க வேண்டுமோ அதுவும் நன்றாகவே நடக்கும்! வாழ்த்துகள் நண்பரே !

லாஸ்ட்லைன்: அவனின்றி ஓர் அணுவும் அசைவதில்லை. அந்த இறைவனின்றி  எவரும் இப்பூவுலகில் உயர்ந்து நிற்பதில்லை ! 

3 comments:

 1. நண்பரே,

  இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. King Viswa: தவறாக பதிவு செய்து விட்டீர்களா ? நிச்சயமாக நேற்று எனக்கு பிறந்தநாள் இல்லை நண்பரே!

   Delete