Follow by Email

Friday, 9 August 2013

NOTICE BOARD..?

ஹாட்லைன்: நண்பர்களே, நான் சொல்லப் போவதைக்  கேட்டால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். நான் கூட கமெண்டுகளின்  எண்ணிக்கை அதிகரித்து Load more  சிரமம் ஏற்படுவதை என்றுமே விரும்பியதில்லை. ஆனால், அது எவ்விதமான கமெண்டுகள் மூலம் ஏற்படுகிறது என்பதில் தான் நான் வேறுபடுகிறேன் !

பொதுவாகவே டெம்ப்ளேட் கமெண்ட்கள் ; ஸ்மைலிகள் ; ROFL ; LOL போன்ற வெற்றுப் பதிவுகளை அறவே வெறுப்பவன் நான். பொதுவானதொரு வலைதளத்தில் எழுத நமக்கு விஷயம் இல்லாவிட்டால் கமெண்ட் போடாமல் சும்மா இருக்கலாம். ஆனால், இதுபோன்ற அர்த்தமற்ற பின்னூட்டங்கள்  போடுவது தேவையற்றது என்பதே என் கருத்து. அதேநேரம் ஆசிரியரின் பதிவைப் பற்றி அலசி ஆராய்ந்தப் பின்,  நம் உணர்வுகளோடு ஒட்டி உறவாடி வருகின்ற  நம் லயன் வலைதளம் தூங்கி வழியாமல் இருக்க, வாசகர்கள் தம் கற்பனாசக்தியின்  ஆக்கங்களை வரவேற்பதிலும் அவற்றை ரசிப்பதிலும் தவறொன்றுமில்லை. ஏனெனில் காமிக்ஸ் என்பதே கற்பனைகளின் எல்லையைத் தொட்டு விட துடிக்கும் ஒரு முயற்சியே தானே ?!

அதனால்,  ''Kaun  Banega காமிக்ஸ் கற்பனா சக்தி?'' போன்ற வாசகர்களுக்கான பந்தயக் களமே   நம் லயனின்  வலைதளமும் என்ற தற்கால வரைமுறை கூட சரியானதாக தோன்றலாம். அதற்காக, அர்த்தமற்ற காமிக்ஸ் சம்பந்தமில்லாத பின்னூட்டங்கள் அடுத்தவரின் ரசனைக்கு வைக்கப்படும் கண்ணிவெடி தான் என்பதில்,  பொடியன், வாசகர் வாய்ஸ், ராம்குமார் கோபாலகிருஷ்ணன், P.கார்த்திகேயன், கிருஷ்ணா வ வெ, பெரியார், மஞ்சள் சட்டை மாவீரன், ராஜா பாபு, ரமேஷ் குமார், கருமண்டபம் செந்தில்  ஆகிய வாசகர்களுடன் நானும் முழுவதுமாக உடன் படுகிறேன் !

ஷார்ட்லைன்: இந்தப்  பதிவுக்கான படம்  நம் fb காமிக்ஸ் குரூப்புக்கு சொந்தமானது.  அந்தப்  போஸ்ட்டிற்கான கமெண்ட் டிசம்பரில் சாணி, ஜனவரியில் அல்வா என்று தொடங்கும்... இதுவும் நம்மை நகைக்கச் செய்யும் நய்யாண்டித்தனமான ரசனைகள் தான். ஆனால், அது நாம் இளைப்பாறும் மரத்தின் ஆணிவேரை வெட்டி வீழ்த்துவதாக இருப்பதில் யாருக்கு என்ன லாபம் என்பதே தீவிர தமிழ் காமிக்ஸ்  வாசகர்களின், ஒரே கேள்வி ?

ஷாட்லைன்:  கனவுகள் ; கற்பனைகள் ; கருத்துகள் ; புதிய எண்ணங்களுக்கு அணை  போடக்  கூடாது. மனிதன் பறப்பதற்கு கண்ட கனவுதான் விமானமாக வடிவெடுத்தது. தொலைதூரத்தில் நடப்பதை அறியவேண்டும் என்ற எண்ணம்தான் தொலைக்காட்சியை கண்டுபிடித்தது. எனவே  வித்தியாசமாக சிந்தியுங்கள் அடுத்தவர்களை சிந்திக்க வையுங்கள் வாசகர்களே - ஹஜன் சுந்தர்
   டிசம்பரில் சாணி, ஜனவரியில் அல்வா !

1. மர மண்டை29 November 2012 11:48:00 GMT+5:30 PART:5
பொருளறிந்து விளக்கம் கூறுதல் :

இ. இந்த வலைப்பூ ஒரு notice board மட்டுமே!

இங்கே பலர் பலமுறை முன்வைக்கும் ஒரு பதிவு, இந்த வலைப்பூ ஆசிரியர் அப்டேட் செய்யவும் அடுத்து வரும் காமிக்ஸ் பற்றிய விவரம் தெரிந்துக் கொள்ளவும் உதவும் Notice Board மட்டுமே என்பது. சரி.. ஆசிரியரின் பதிவு வந்தவுடன் அன்றைய தினமே தெரிந்துக்கொண்டோம். சரி.. அதற்குப்  பின்? நம் காமிக்ஸ் அனுபவத்தை, நாஸ்டாலஜி பதிவை பகிர்ந்து கொள்ளவே என்பது. சரி.. இந்த ஒரு வருடத்தில் அனைவரும் பகிர்ந்து விட்டு, பல சாதனையாளர்கள் வெளியில் சென்று விட்டனர். சரி.. அதற்குப்  பின்? நல்ல தலைப்பு ; நல்ல கதை ; காத்துக்கொண்டிருக்கிறோம் ; என் சந்தா வந்ததா ; என் தொலைப்பேசி அழைப்புக்கு ஏன் பதிலில்லை ; S.T courier ரொம்ப மோசம் ; போரடிக்குது தயாரிக்கா விட்டாலும் பரவாயில்லை பத்து நாள் முன்பாக தர முடியுமா? என்று template comment ஒரு 50 வரும்! அது மட்டும் போதுமா நண்பர்களே, இனி அடுத்த ஞாயிறு அன்று மீண்டும் ஒரு 49 template comment போட்டு விட்டு அதற்கு அடுத்த ஞாயிறு வரை என்ன செயலாம் ?

இங்கு நாம் என்ன அரசியலா பேசுகிறோம்? இல்லை தன்னை விட அடுத்தவர் தாழ்ந்தவர், ரசனையற்றவர் என்று காலை வாருகிறோமா? ஒருவர் சிறந்தவர் என்று கூறும் போது மற்ற எவரும் தாழ்ந்து விடுவதில்லை என்பதல்லவா நாணையத்தின் மறுப்பக்கம்? நீ தாழ்ந்தவர் என்று கூறினால் மட்டுமே, யாரும் யாருக்கும் சளைத்தவரில்லை என்ற உண்மையை பதிவிடுவோம் அல்லவா ?

காமிக்ஸ் வாசகர்களாகிய எங்களுக்கு இந்த வலைப்பூ ஒரு ஆடிட்டோரியம் போன்றது ! இங்கு ஒரு புனித சாத்தானை போன்று, ஒரு ஐஓஒள ( XYZ  ) போன்ற கலையுணர்வு கொண்டவர்கள் கிரியேட்டிவாக ஏதும் செய்யும் போது நாங்கள் ரசிக்கவே செய்வோம்! ஏனெனில் இது உங்களுக்கு Notice Board எங்களுக்கு Auditorium !

காமிக்ஸ் என்ற நிழலில் இளைப்பாறும் எங்களுக்கு இது அலுவலகத்தில் உள்ள Lunch hall போன்றது. இங்கு பலர் கலகலப்பாகவும் அடுத்தவரின் மூக்கு நுனியை தொட்டு விடாமல் கலாயக்கவும் செய்தால் நாங்கள் ரசிக்கவே செய்வோம்! ஏனெனில் இது உங்களுக்கு Notice Board எங்களுக்கு சற்றே இனிமையாக இளைப்பாறும் Lunch hall போன்றது !

விலைபோகாத கத்தரிக்காயை கூறுகட்டி வைத்து விட்டு, விவரப்பட்டியலை வெளியில் தொங்கவிட  இதுவொன்றும் பாலைவனம் அல்ல! இது பலதரப்பட்ட காமிக்ஸ் ரசனைகள் தென்றலென தாலாட்டும் பூங்காவனம்! அதனால்தான் இதற்கு வலைக்காய் என்று பெயர் வைத்திடாமல் வலைப்பூ என்று வைத்துள்ளார்கள்! ஏனெனில் இப்படிப்பட்ட வலைப்பூவுக்கு வருபவர்கள் தயவுசெய்து ரசனையோடு வாருங்கள் என்று சொல்லாமல் சொல்லி பெயரிட்டுள்ளார்கள் !

எனவே, நாங்கள் அழகழகான பதிவுகளை படித்து எங்களால் முடிந்தளவு பங்கெடுத்து ஒவ்வொரு பதிவும் முன்னூறு-ஐ தாண்டப் பாடுபடுவோம்! ஏனெனில் இது உங்களுக்கு வலைக்காய்  எங்களுக்கு  வலைப்பூ !     


2.Erode VIJAY29 November 2012 20:37:00 GMT+5:30

அடுத்ததாக நண்பர் மரமண்டை அறிவிக்கவிருக்கும் விருது டைட்டில்களுக்காக, இதோ என்னால் முடிந்த உதவி :

*Top-5 நடுநிசி நாயகர்கள் (எப்போதும் நடுஇரவுக்குப் பின் பின்னூட்டமிடுபவர்கள்)

*Top-5 copy-paste நண்பர்கள் ( 15 வரிகளை copy-paste செய்துவிட்டு கடைசியாக 'உண்மைதான்!' என்று ஒற்றை வார்த்தையில் முடிப்பவர்கள்)

*Top-5 Technical error நண்பர்கள் ( 'நான் ஒருமுறை publish பட்டனை அழுத்தினால் 3 பின்னூட்டங்கள் பதிவாகிவிடுகிறதே' , '200 பின்னூட்டங்களுக்கு மேல் என் கம்யூட்டரில் எதுவும் தெரிவதில்லையே', 'friends, I dont know how to type in tamil')

*Top-5 எழுத்துப் பிழை நாயகர்கள் ( 'சமீப கலமாக நம் கமிக்ஸ் பூத்தகங்களில் நிரைய எழுத்துப் பீழைகள் இருப்பது எணக்கு வருத்தமாலிக்கிறது')

*Top-5 குழப்பவாதிகள் ( இவர்களது பின்னூட்டங்களை 3 நாள் லீவு போட்டு படித்தாலும் துளிகூடப் புரியாது)

*Top-5 guest appearance நண்பர்கள் ( 'நண்பர்களே, வேளைப்பளு காரணமாக இரண்டு வாரங்களாய் இங்கே தலைகாட்டிட முடியவில்லை')

*Top-5 பரிதாபப் பேர்வழிகள் ( சிறுவயது முதலே நிறைவேறாத ஆசைகளால் மனநலம் பாதிக்கப் பட்டு, நம்மில் ஒருவராகக் கலந்திருந்து, பொறாமை ஏற்படும்போது போலி அடையாளத்தில் ஒரே ஒரு பின்னூட்டமிட்டு ஏகக் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டு, மறைந்திருந்து ரசிக்கும் அப்பாவி மனநோயாளிகள்)


3.மர மண்டை30 November 2012 10:14:00 GMT+5:30

a short commercial brake !

விளம்பர இடைவேளை ! (title மொழிபெயர்ப்பு மரமண்டை)

இது ஒரு விருது வழங்கும் விழா அல்ல !
பட்டம் பதவி பாராட்டு விழா அல்ல !
இது ஒரு கருத்துத் திணிப்பு அல்ல !
கல்லெறிவதும் களங்கப்படுத்துவதும் அல்ல !
யார் மனதையும் புண்படுத்துவது அல்ல !
புனைந்தும் புரியாமலும் குழப்புவது அல்ல !
தற்பெருமையும் தற்புகழ்ச்சியும் அல்ல !
வில்லங்கம் இல்லை விவகாரம் இல்லை !
பொதுவான கருத்து அல்ல ஆனால்,
பொதுவாக யோசிக்க வேண்டிய காமிக்ஸ் பதிவு !

விரைவில் வருகிறது...

கீழ்கண்ட மூன்று சந்தர்ப்பத்தில் ஏதோ ஒரு வாய்ப்பில்...

அ.ஆசிரியர் பதிவுக்கு இரண்டாம் நாள்...
ஆ.100 அல்லது 150 கமெண்ட் கடந்தபின்...
இ.பின்னூட்டங்கள் சற்றே தொய்வை எட்டும்போது...

வாழ்ந்துப்  பாருங்கள் வாழ்க்கை ஒரு ரசனையான கரகாட்டம் !
வாசித்துப்  பாருங்கள் வசந்தம் நம்மையும் கொஞ்சம் தாலாட்டும் !

எல்லா வைரங்களும் மண்ணுக்குள் இருந்து தான் எடுக்கப்படுகின்றன !லாஸ்ட்லைன்: சிரிக்க தெரிந்தவன் மனிதனாகிறான் ; சிந்திக்க தெரிந்தவன் தலைவனாகிறான் !

No comments:

Post a comment