Follow by Email

Monday, 9 September 2013

ஆசிரியருக்கு ஒரு திறந்தமடல் !

நாமோ அல்லது நம் தந்தையோ மிகப் பெரிய செலவ சீமானாக இருந்திருப்போம், ஆனால் இன்று அத்தனையும் இழந்து சோகத்தில் நாட்களை நகர்த்திக் கொண்டிருப்போம் ; நாம் நன்றாக கல்வி கற்று பன்மொழி விற்பன்னராக இருப்போம் ; பலவித திறமைகளை தன்னகத்தே உள்ளடக்கி பெரும் திறமைசாலியாக வாழ்ந்துக்  கொண்டிருப்போம், ஆனால் இன்று வரை அதற்கேற்ற தொழிலோ வேலையோ அமையாமல் அல்லாடிக் கொண்டிருப்போம் ; அடிப்படையில் நாம் அமைதியானவராகவும் ; பண்பாளராகவும் ; பொறுமைசாலியாகவும் ; அடுத்தவரை புரிந்து கொண்டு அதன்படி நடக்கும் பெருந்தன்மை மிக்கவராகவும் இருப்போம், ஆனால் அனுதினமும் இவைகளை சீர்குலைப்பதைப் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தேறிக் கொண்டே இருக்கும் ; எறும்பை போல ஏற்கனவே சிறுகச் சிறுக சேர்த்து வைத்த சேமிப்பை, ஏதோ ஒன்றில் முதலீடு செய்து மொத்தமாக இழந்திருப்போம் - இதுபோன்ற சூழ்நிலைகளில் நமக்கு ஏற்படும் தாங்கொணா ஆற்றமாட்டாமையால், கடவுளே எனக்கு மட்டும் ஏனிந்த சோதனை? நினைவறிந்து நான் ஒரு பாவமும் செய்யவில்லையே? அல்லும் பகலும் துன்பத்தில் உழன்று வாடி மடிவதற்காகவா என் வாழ்க்கை? இதுதான் என் தலைவிதியா? என்றேல்லாம் வேதனையுடன் கடவுளிடம் முறையிடுவோம், ஆனால் கடவுள் அதற்கு செவிசாய்ப்பதே  இல்லை ! ஏனெனில் ;

ஒரு பதின்ம வயதுச்  சிறுவனுக்கு பக்குவமாய் கூறும் அறிவுரையைப் போல் ஒரு தாயாய் ; ஒரு தந்தையாய் ; ஒரு தந்தையின் நண்பராய் ; ஒரு ஆசிரியராய் - சிலமுறை கடவுள் நமக்கு, இதை செய் இதை செய்யாதே என்று தெளிவுப்பட முன்னமே எடுத்துரைத்திருப்பார். ஆனால் நாம் தான் அதை காதில் வாங்கி இருக்கவே மாட்டோம் ! இங்கு சில வாசகர்களுக்கு - இதுவரை கூறிய அனைத்தும் ஏதோ புரிந்தது  போல்  இருக்கும் ; புரியாதது போலவும் இருக்கும். உடனே மிஸ்டர் மரமண்டையின் எழுத்துகள் எப்பொழுதும் குழப்பமானவைகள் தான் என்ற ஒரு வார்த்தைக்கு - தன்னுடைய புரிதலின்மைக்கு களங்கம் ஏற்படாமல் இருக்க ஊரைக்கூட்டி பாராட்டுவிழா நடத்தி விடுவார்களே என்ற பயத்தால், அனைவருக்கும் தெரிந்த ஒரு கதையை இங்கு உதாரணமாக கீழே தருகிறேன் ;ஒரு குக்கிராமத்தில் முருகன் என்ற ஆத்திகன் ஒருவன் வாழ்ந்து வந்தான். கடவுள் மீது ஆணித்தரமான நம்பிக்கை கொண்டவன். எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்ற திடச் சித்தம் கொண்டு வசதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தான். ஒருமுறை பெருமழை பெய்து கிராமத்தில் வெள்ளம் ஏற்படும் சூழல் உருவானது. எனவே, வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதால் அனைவரும் அருகில் உள்ள மலை உச்சிக்கு சென்று விடுமாறு தண்டோராக்காரன் அறிவித்தப்படி இருமுறை வலம் வந்தான். அவ்விதமே அனைவரும் தத்தம் உடமைகளை எடுத்துக் கொண்டு பாதுகாப்பாக சென்று விட்டனர். முருகன் மட்டும், அப்படி எதுவும் நிகழாது ; அப்படி அசம்பாவிதம் ஏற்பட்டாலும் கடவுள் என்னைக்  காப்பாற்றுவார் என்று வாளாவிருந்தான்.

கிராமத்தில் சிறுகச் சிறுக நீர்மட்டம் உயர்ந்து இடுப்பளவில் ஏறி நின்றது. அச்சமயம் ஊர்த்தலைவர் முருகனிடம் வந்து, உடைமைகள் போனால் போகட்டும், நீ உயிர் தப்ப என்னுடன் இப்பொழுதே வா என்று வற்புறுத்தினார். ஏற்கனவே எடுத்து விட்ட முடிவின் தயக்கத்தாலும், கடவுள் தன்னை காப்பாற்றுவார் என்ற அதீத நம்பிக்கையாலும் அவருடன் செல்ல மறுத்து தன் வீட்டு கூரையின் மேல் ஏறி அமர்ந்துக் கொண்டான். நீரின் அளவு சிறுகச் சிறுக உயர்ந்து   பத்தடியானது. அப்பொழுது வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்ற பரிசல் மூலம் வந்த பக்கத்து ஊர்க்காரன், முருகனை தன்னுடன் வந்துவிடுமாறு அவசரகதியில் அழைத்தான்.  ஆனால் அந்நிலையிலும் முருகன், கடவுள் தன்னைக் காப்பாற்றுவார் என்று ஒருவித பிரம்ம நிலையில்  கூறியவாறே மீண்டும் மறுத்து விட்டான்.

நேரம் ஆக ஆக பெருவெள்ளம் சூழ்ந்து, அந்தோ பரிதாபம், முருகன் கடவுளால் காப்பற்றப்படாமல் இறந்தே விட்டான். அவ்வாறு இறந்து மேலுலகம் சென்ற முருகன், கோபாவேசமாக கடவுள் முன் சென்று, கடவுளே உன்மேல் நான் எவ்வளவு பக்தி வைத்திருந்தேன், உன்மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன், கடைசிவரை என்னை காப்பாற்றாமல் கைவிட்டு விட்டாயே.. இது  நியாயமா? என்று ஆற்றமாட்டாமை தாளாமல் கண்கள் இரண்டும் கண்ணீர் சொரிய மண்ணுலகம் காணக் கிடைக்காத ஆத்திகனாய் முறையிட்டான். 


அதற்கு கடவுள், என் மனதிற்கினிய பக்தனே, நான் உன்னை காப்பாற்ற வேண்டி முதலில் தண்டோரா போடுபவன் உருவத்தில் வந்தேன் ; பின் ஊர்த்தலைவர் ரூபத்தில் வந்தேன் ; மனது கேட்காமல் மூன்றாவது முறையாக பரிசல்காரனாக வந்தேன். ஆனால் நீ தான் ஒவ்வொரு முறையும் என்னைப் புறக்கணித்து விட்டாய் என்று அமைதியாக கூறினார் -  இது போலத்தான் நாமும் நம் வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களை தொலைத்து விட்டு கடவுளே எனக்கு மட்டும் ஏனிந்த சோதனை என்று அகத்துள் கதறி புறத்தில் செய்வதறியாமல் கலங்கி நிற்கிறோம் !1.மர மண்டை1 February 2013 06:54:00 GMT+5:30

ஆசிரியருக்கு ஒரு திறந்த மடல் !

வசந்தகாலத்தில் பல வானம்பாடிகள் பழம் தரும் மரங்களில் வந்தமர்ந்து இளைப்பாறலாம் ; இனிமையான ராகங்களை இசைக்கலாம் ; இலைகளின் அசைவுகளுக்கு, இளவேனிற் தென்றலும் அதற்கேற்ப தாலாட்டலாம் ; அதுவே நமக்கு சொர்க்கமாக தெரியலாம். ஆனால் இளைப்பாறும் பறவைகளுக்கும், பழம் தரும் மரத்திற்கும் வசந்தகாலத்தை தவிர வேறு என்ன சம்பந்தம் இருக்க முடியும்..?

நாம் வரம் வாங்கிப் பிறந்திருக்கலாம் ; அதனால் நம் இல்லமே கோயிலாக இருந்திருக்கலாம் ; பால்யத்தில் பலவாறு ஆசைப்பட்டிருக்கலாம் ; ஏதோ ஒன்றில் ஒருவாறு ஈர்க்கப்பட்டிருக்கலாம் ; சூழ்நிலை பாற்பட்டு அதில் ஊக்கமும் ஆக்கமும் கொண்டு வளர்ந்திருக்கலாம் ; வாழ்வின் மத்தியில், ஏதோ ஒன்றில் ஜெயித்தே விடுகிறோம். ஆனால் நாம் கண்ட கனவு அதுவல்லவே.. இதுவல்ல அங்கே உண்மை செய்தி, எதலினும் சிறந்ததாய் இறைவனால் நமக்கு அளிக்கப்பட்ட வரமன்றோ..?!

அல்லல்பட்டு அவதிப்பட்டு ஒடி ஆடி கலைத்து சாதிப்பதா வாழ்க்கை..? வரும்காலம் தன்னில் மேலதிக சாதனை ஒன்றால் மறைக்கப்பட்டு விடுமே நம் சாதனையும்.. அப்பொழுது அங்கு நாம் அதுவரை இழந்ததும், இனி இழக்கப் போவதும் கடந்துவிட்டால் இப்பிறவியில் கிடைக்காத மன அமைதி ஒன்று மட்டும் தானே..? நம் சாதனையை பாராட்டி சரித்திரத்தில் ஒருவரி பதியப்பட்டால், அதுவும் நம் வாழ்க்கை காலத்தில் வாய்க்கப்பட்டால் அதுவல்லவோ  நம் பிறவிப்பயன்..?!

இன்னும் எழுதிட சிந்தனைகள் நிறையவே இருப்பினும் இங்கே இடைமறித்து, நான் சொல்லவருவதை மிகத் தெளிவாக சொல்வதே பயன்தருவதாக அமையும் என கருதுகிறேன் ! எனவே ஆசிரியர் விஜயன் அவர்களே, தங்களின் நீண்ட நாள் விருப்பமான, சிறுவயது முதற்கொண்ட ஆசையான சிறுவர்களுக்கான புதிய காமிக்ஸ் வெளியீடுகளை தங்கள் மனதிலிருந்தும், மனதில் நிழலாடும் எண்ணத்திலிருந்தும் கைவிடுமாறு உறுதியாக விண்ணப்பிக்கிறேன் !

நம்மில் பகிர்ந்து கொள்பவை அளவிலும் ஆக்கத்திலும் குறைந்து விடும் என்பது எழுதப்பட்ட இயற்கை நியதி ! எனவே இறைசக்தியையும், வெற்றிக்கான இந்த வசந்தகாலத்தையும் முழுவதுமாய் லயன் ; முத்து காமிக்ஸ் ; காமிக்ஸ் க்ளாசிக்ஸ் ஆகியவற்றில் மட்டுமே ஆக்க சக்தியாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் ! தயவுசெய்து இது மூன்றைத்  தவிர வேறு புதிய முயற்சிகளுக்கு வேறு எப்பொழுதுமே அவசியம் இல்லை என்பதை மனப்பூர்வமாக நம்பிவிடுங்கள் !

இவைதரும் வெற்றிகளால் ; வெற்றிகள் தரும் சாதனைகளால் ; சாதனைகள் தரும் மன அமைதியால் ஒரு சரித்திரம் படைப்போம் ! காமிக்ஸ் தமிழ் உலகம் தங்களின் படைப்புகளால் வரும்காலங்களிலும் இனிமையாக இளைப்பாரட்டும் ! இந்த என் கருத்துக்கு ஏதோ ஒருவிதத்தில் நிச்சயமாக சம்பந்தம் இருப்பதாக தோன்றுவதால் மறுப்பதிப்பாக கீழே உள்ள இரு பதிவுகளை மீண்டும் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றேன் !


2.மர மண்டை1 February 2013 06:59:00 GMT+5:30 கமெண்ட் 4 of 4

ஒப்பந்தவேலை என்று நான் குறிப்பிட்டுள்ளது மொழிபெயர்ப்பை அல்ல, Digital formatலிருந்து நம் book size formatற்கு மாற்றுவது ; பலூனில் நம் மொழிபெயர்ப்பை type செய்து மீண்டும் Digital formatற்கு கொண்டு வருவது போன்றவை ஆகும். அந்த DVDகளை நாம் பிரிண்டிங் செய்யும் வரை பாதுகாப்பாக வைத்திருக்கலாம். வேண்டும் பொழுது தாமதம் இன்றி வெளியிட ஏதுவாகவும், நமக்கு வேலைகள் மிகவும் குறைந்து விட்டதான ஒரு அமைதியான மனநிலையையும் கொடுத்து, நம்மை ஆனந்தத்தில் என்றுமே ஆராதிக்கும் !3.Vijayan1 February 2013 10:02:00 GMT+5:30

மர மண்டை : நாலே வரிகளில் அழகாய் சொல்லப்படும் கருத்து சுவாரஸ்யத்தைத் தர வல்லதெனும் போது - சில நாற்பது வரிகளில் ஆயாசத்தைக் கொணர்வது உங்களின் எழுத்து நடைக்கு நீங்கள் செய்திடும் சங்கடம் என்பது எனது அபிப்ராயம். தவிரவும் 'சூசகமாய் சில விஷயங்கள் தெரிவிக்கிறேன் ' என்று எவருக்கும் புரிந்திடா பாணியில் எழுதிடுவதற்கு, இதொன்றும் ராணுவ ரகசியப் பரிமாற்றத் தளம் அல்லவே ?! ((இந்த முறை கொஞ்சமேனும் புரிந்ததென்பது சற்றே ஆறுதல் !))

செல்போன்கள் மூலமும் ; மித வேக இன்டர்நெட் தொடர்போடும் இப்பக்கத்தை காண முயற்சிக்கும் நண்பர்களுக்கு உங்களின் தொடரும் நீள் பதிவுகள் எவ்வித உதவிகளும் செய்திடுவதில்லை என்பது நிச்சயம்.
டியர் விஜயன், நீங்கள் சிறுவர்களுக்கான எந்தவொரு இதழையும் புதிதாக தொடங்க வேண்டாம்.. இப்படி செய்தால் நீங்கள் தோற்று விடுவீர்கள்.. புதிதாக பெரிய பதிப்பகம் ஒன்று  நாளையே காமிக்ஸ் பக்கம் வந்தால் நீங்கள் கண்காணாமல் போய்  விடுவீர்கள்.. அதனால் இப்பொழுதே, லயன் முத்து சன்ஷைன்/ல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கதைகளையும் விரைவாக வெளியிட்டு வெற்றி வாகைச்  சூடிவந்தால்,  காமிக்ஸ் வரலாற்றில்  உங்களை அடித்துக் கொள்ள எந்தக் காலத்திலும்  யாராலும் முடியாது. நன்றி. 

எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று இப்படி எழுத முடியுமா..? அப்படி எழுதினால் அதைப் படிக்கும் ஆசிரியருக்கு, தன் சுயமரியாதையை தூண்டி விட்டதாக இருக்காதா..? எழுதிய நான் பெரிய அப்பா-டக்கராகவும் தலைகனம் பிடித்தவனாகவும் மற்றவருக்கு தோன்றி விடாதா..?

சாதிக்க துடிக்கும் ஒரு இளைஞனக்கு , நீ இப்படியெல்லாம் வாழ்ந்தாய் ; நீ இப்படி பல திறமைகளை கொண்டு சௌகரியமாக இருக்கிறாய் ; இதற்கேற்றாற்போல் உள்ள ஒரு சிறந்த வழியை நீ தேர்ந்தெடுத்துக் கொள்வதே சிறந்த செயலாகும் என்று பக்குவமாய் புரியவைப்பது குழப்பத்திற்கு வழிவகுக்கும் செயல் என்றால் அதை சொல்லாமல் இருப்பதே சாலச் சிறந்தது..!


லாஸ்ட்லைன்: நம் பெரும்பான்மையான துன்பங்களுக்குக் காரணம் புரிதலின்மையே  அன்றி வேறல்ல !