Follow by Email

Wednesday, 27 November 2013

காமிக்ஸ் யாதெனில் ?

நண்பர்களே, வணக்கம் ! இவர்கள் தனது பள்ளி இறுதி தேர்வுகளுக்குக்  கூட இப்படி படித்து இருக்க மாட்டார்கள் ; இவர்கள் தனது கல்லூரி செமஸ்டர் தேர்வுகளுக்குக் கூட இப்படி ஆராய்ச்சி செய்து இருக்க மாட்டார்கள். ஆனால் விஜயன் தயாரிப்பில் வெளிவரும் தமிழ் காமிக்ஸ் என்றால் மட்டும் இவர்கள் படிப்பில் புலியாக மாறிவிடுகிறார்கள் ; ரசனையில் அன்னமாக உருமாறுகிறார்கள் ; குற்றம் குறை கண்டுப்பிடிப்பதில் நக்கீரனாகிறார்கள் ! அதோ அந்த மூலையில் ஓர் ரகசியம் உறைந்து கிடக்கிறது ; இதோ இந்த பேனலின் குடிசை வீடு கொண்டாட்டடத்தை தருகிறது ; ஏன் இந்த மூலத்தில் இல்லாத வரிகள் ; மொழிபெயர்ப்பில் அனர்த்தமாக்கப்பட்ட அர்த்தங்கள் ; சிந்தனையை தடை செய்யும் வளமாக்கப்பட்ட வசனங்கள் என இவர்கள் இடும் கமெண்டுகளை படிக்கும் போது,    நமக்கு பள்ளிப் பருவத்தில் எளிதில் வராத கணிதம், வரலாறு, அறிவியல் என இன்றும் காமிக்ஸ் படிப்பதை புதிராகவே தோன்றச் செய்து விடுகிறது !

பொதுவாக கூறுவதென்றால், பலவகையான வெட்டி பொழுது போக்குகளில் ஒன்று தான் காமிக்ஸ் புத்தகம் படிப்பதும் ;  நமக்கு கிடைக்கும் வேலையற்ற ஏதோ ஒரு பொழுதை காமிக்ஸ் படிக்க ஒதுக்கி மனதை இலகுவாகவோ, உற்சாகமாகவோ மாற்றிக் கொள்ளும் பயன் மட்டுமே காமிக்ஸ் படிப்பதால் ஏற்படுகின்றதே தவிர, வேறு என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் இந்த ரசனையின் அடுத்த கட்டமாக என்னை போன்றவர்கள் இதை படித்து முடித்தப்பின் அழகாக சேகரித்து, நீண்ட நெடுங்காலம் பாதுகாக்க நினைக்கிறோம். இவ்வகை ரசனைகள், அரிய வகை ஸ்டாம்ப் கலெக்ஷன், காய்ன் கலெக்ஷன் போன்றவைகளாக பார்க்கப்படுகிறது. அதற்காத்தான் தற்போதைய தரத்தை நிரந்தரமாக்கவும், இன்னும் அதிகரிக்கவும் அவ்வப்போது பதிவிடுகிறோம் !   

இவ்விரண்டு காரணங்களைத் தவிர காமிக்ஸ் படிப்பதால் ; காமிக்ஸ் வாங்குவதால் வேறு என்ன பயன் இருக்கிறது என்று சத்தியமாக எனக்கு தெரியவில்லை. அப்புறம் ஏன் காமிக்ஸிற்காக   இத்தனை அக்கப்போர்? இதற்கான காரணம் என்னவாக இருக்கக் கூடும் என்று அலசி ஆராய்ந்து, அடித்து துவைத்து, தலைகீழாய் மாட்டி  காயப்போட்டு, நன்றாக காய்ந்தப்பின் இஸ்திரி போடும்போது பார்த்தால் ஒரு காரணம் மட்டும் தெளிவாக புரிகிறது, 

அது மற்ற வாசகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க நினைக்கும் ஆசை ! 
மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு தனித்தன்மையுடன் நிற்க வேண்டும் என்ற எண்ணம் !

உண்மைதான் இது தவறல்ல ! ஏனெனில் இது அனைவருக்கும் உள்ள குணம் தான் ! எனவே இதை தவறென்று கூற விரும்பவில்லை. ஆனால் வரி வரியாக ; பேனல்  பேனலாக ; பக்கம் பக்கமாக அகழ்வாராய்ச்சி செய்து பதிவிடுவது தான் கொஞ்சம் ஓவராக தெரிகிறது. பதிவிடுங்கள் ; இன்னும் நிறைய பதிவிடுங்கள் ; வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் கதை  பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை என்று  காரணங்களை   அடுக்கி பதிவிட்டால் இன்னும் சுவாரசியமாக இருக்கும் என்பது என் கருத்து :)

அதேநேரம் ஒரிஜினல் கதையை மாற்றி அமைக்கும் எந்த ஒரு மொழிபெயர்ப்பும் பெரும்பான்மையான வாசகர்களால் ஏற்றுக் கொள்ள இயலாது என்பதை  ஆசிரியரும் புரிந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல பின்பக்க அட்டைப்படத்தில் ஓவியரின் புகைப்படம் போடுகிறோம் ; கதாசிரியரின் புகைப்படம் போடுகிறோம் ; ஏனெனில் இது அவர்களின் கடின உழைப்பு ; அவர்களின் காமிக்ஸ் அர்ப்பணிப்பு என்பதால் படைப்பாளிகளை கௌரவிக்க நினைக்கிறோம் ! எனவே ஒரிஜினல் கதையில் நாம் ஏற்படுத்தும் மாற்றம் படைப்பாளிகளுக்கு நாம் இழைக்கும் அநீதியாகக் கூட கருத இடமுண்டு. உதாரணத்திற்கு,

துரத்தும் தலைவிதி - லார்கோ ஸ்பெஷலில் பக்கம் 19ல்...

ஒருவேளை, ஸ்கார்பா ஒரு பெண் பித்தர் என்று ஒரிஜினலில் காட்டப்பட்டு, அதை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து இருந்திருந்தால் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும்.  ஏனெனில் அக்கதையில் சைமன் ஒரு இடத்தில் கூறுவான், குழுமத்தில் உள்ள பிரஸிடெண்ட்களாகிய நீங்கள் மலை மலையாய் பணம் பண்ணுகிறீர்கள் ; உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மன்னரின் செல்வாக்கும், சக்தியும் சுலபமாய் கிட்டுகிறது என்று ! இப்படிப்பட்ட செல்வாக்கு கொண்ட பிரஸிடெண்ட்   ஸ்கார்பா, தன் குழுமத்தின் தலைவரான  லார்கோ வின்ச்/ற்கு துரோகம் இழைக்க காரணமாயிருந்தது, அவரின் பெண் சபலம் மட்டும்  தான் என்பது பக்கம் 73ல் விடையாக சொல்லப்படுகிறது. அப்படியெனில் கதாசிரியர் அதற்கான முடிச்சை பக்கம் 19ல் நமக்காக அவ்வாறு கோடிட்டு காட்ட நினைத்திருக்கலாம் அல்லவா ?

ஒரு சிப்பாயின் சுவடுகள் - க்ளைமேக்ஸ் பக்கம் 112ல்...

எனக்கென்னமோ எடிட்டர் விஜயன், முன்பு  தான் கொடுத்த வாக்கை காப்பற்றுவதற்காக மட்டுமே கதையின் முடிவை மாற்றி விட்டாரோ என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் முன்பு ஒருமுறை ஒசிசு அழுவாச்சி காவியம் அல்ல ; வித்தியாசமானதொரு கிராபிக் நாவல் ; இதுவரை படித்திராத கதைக்கரு என்பதால் யாரும் பயப்பட வேண்டாம் என்று வாழைப்பூ போராட்ட குழுவிற்கு உறுதி அளித்திருந்தார். அதை மெய்யாக்க  கதையை பொய்யாக்கி விட்டார் என்றே நினைக்கத் தோன்றுகிறது !

எல்லா கதைகளையும் நம் தமிழ்நாட்டு ரசனைக்கு ஏற்றபடி மாற்றுகிறேன் என்று - Pizza Cornerலிருந்து வெளிவரும் சைமன், தலப்பாக்கட்டு பிரியாணி சூப்பர் என்றோ ; KFCயில் இருந்து வெளிவரும் வேய்ன் ஷெல்டன், வாழைக்காய் பஜ்ஜியும் தேங்காய் சட்னியும் சும்மா நச் என்றோ ; McDonald'sலிருந்து வெளிவரும் லார்கோ வின்ச், பரோட்டாவும் சால்னாவும் சாப்பிட்டு நாக்கில் ஜலம் கொட்டிடுத்து என்றோ ;  Subway Restaurantsலிருந்து வெளிவரும் மாடஸ்டி பிளைசி, கல்தோசையும் கறிக்குழம்பும் செம கலக்கல் என்றோ கூறுவது போல் மொழிபெயர்த்தால் எப்படி இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன் ;)

Jean Van Hamme


1.மர மண்டை20 December 2012 09:47:00 GMT+5:30

ஆயிரம் உள் அர்த்தங்கள் எல்லாமே ஆனந்த ராகங்கள் !
ஏன் எதற்கு இங்கே? எல்லாமே காமிக்ஸ் ரசனை என்ற மந்திர சொல்லிற்காக !
 • விதைக்கப்பட்ட விதைகள் முளைக்கா விட்டால் புதைக்கப் பட்டவையாகின்றன !
 • வாங்கப்பட்ட புத்தகங்கள் வாசிக்கப்படா விட்டால் அறிவின் வறுமைக்கு வாழ்க்கைப்படுகின்றன !
 • படிக்கப்பட்ட புத்தகங்கள் பாதுகாக்கப்படா விட்டால் கிழிக்கப் பட்டவையாகின்றன !
 • உணரப்பட்ட ரசனைகள் உள்ளத்திலேயே உறங்கிவிட்டால்  யாவரும் எதிரிகளே !
பாலோடு நீர் கலந்திருந்தாலும் அன்னப்பறவைக்கு பாலை மட்டும் அருந்த தெரியுமாம் ! சலசலத்து சிதறி தெறிக்கும் தண்ணீரை சற்றும் சலனப்படாமல் வழித்துவிட தாமரை இலைக்கு அது இயற்கையாம் ! ஒழுக்கமும் அதன்பால் வரும் ஊக்கமும் எறும்புக்கு வாழ்க்கையாம் ! பூவும் அதனுள் உள்ள தேனும் எங்கிருக்கும் என்று தேனிக்கு புரியுமாம் ! என இன்னும் இதுபோல் இவையனைத்தையும், ஓரறிவு முதல் ஐந்தறிவு கொண்ட உயிர்களின் சிறப்பனைத்தையும் ஒருங்கிணைக்க சிந்தித்து, இறைவன் படைத்த கற்பகவிருட்சம் தான் மனிதன் ! இந்த இயற்கை ரகசியத்தை சிந்தித்து உணர்ந்து அதை உலகுக்கு எளிய முறையில் கற்றுக் கொடுக்க நினைத்த ஒரு சிந்தனையாளன் படைத்த சகாப்தம் தான் காமிக்ஸ் !

காமிக்ஸ் படித்தவன் இங்கே ரசனையாளராகின்றான் !
படித்தும் புரியாதவன் எங்கும் ரசவாதியாகின்றான் !

William Vance


2.மர மண்டை17 January 2013 19:25:00 GMT+5:30 

சிறுவயதில் நீங்கள் பார்த்து ரசித்த பாடல்களோ, சினிமா படங்களோ உங்களுக்கு எந்த அளவு ஞாபகம் இருக்கிறது? ஆயின்  நான் சிறுவயதில் காமிக்ஸ் படித்தேன் ;  அதன் ரசனையில் உணர்வை இழந்தேன் ; சிறு பாலகனாய் காமிக்ஸ் படித்த நான், குடும்பத் தலைவனான பின்பும் காமிக்ஸ் ரசனை வயப்பட்டு, அதனால் வசியப்பட்டு, அதன் வழி மீது விழி வைத்து நோக்கி, தொலைந்துவிட்ட என் இளமையை காமிக்ஸ் புத்தகத்தில் தேடித் தேடி மகிழ்கின்றேன் என்பதாய் ஏனந்த NOSTALGIA  பதிவு ? 

காரணம் ஒன்றே தான் ! காமிக்ஸ் தான் சிறுவர்களுக்கு அளவிடமுடியாதது ! அதனால் தான் சக்திமான் போன்று, பறக்க நினைத்து மாடியில் இருந்து குதித்து உயிரை இழந்த சிறுவனை போன்ற பல சான்றுகள் இன்றும் நம்மிடம் உள்ளன ! காமிக்ஸை  ரசித்து படிக்கும் சிறார்களுக்கு அங்கே காண்பவையும், அதனால் ஏற்படும் கற்பனையும் தான் அவர்களின் வாழ்க்கை வேதம். இதை மறுக்கவோ, மறுதலிக்கவோ சற்றும் முடியாது. அப்படி வீணே எதிர் கருத்துகளை வீசுவது விதண்டா வாதமாகவே ஏற்கபடும் !


Jean Giraud


3.மர மண்டை12 March 2013 20:56:00 GMT+5:30

வளவள என்று எழுதுவதே சங்கடம் தரும் பதிவுகள் ; ஆயாசம் தரும் பின்னூட்டங்கள் ; ஆயின் வளமாய் எழுதுவதில் ஏதும் தவறு இல்லை ; அது NBSன் DUST COVER போன்றது ; அது அவசியமற்றது போல் வெளிப் பார்வைக்கு தோன்றினாலும் காரணமின்றி தயாரிக்கப்படவில்லை ! தினம் தினம் நாம் அரிசி சாதம் சாப்பிடுகிறோம் ; வாரத்தில் பல நாட்கள் சாம்பார், ரசம், மோர் என உணவில் சேர்த்து கொள்கிறோம் ; ஆண்டுகள் பல சென்றாலும் இன்றுவரை நமக்கு சலித்ததில்லை ; வேண்டாம் என்று பல நாட்கள் நாம் பட்டினி கிடப்பதில்லை !

ஆனால் SHSS நமக்கு சலிப்புற்றது ஏன், எதனால் என்று எவராவது, என்றாவது ஆராய்ந்தோமா? இல்லையே, அது ஏன்? ஏனெனில் காமிக்ஸ் படிப்பது என்பது நமக்கு, கற்பனையாக விரிந்த காலம் மறைந்து, தற்போது ஒரு HOBBYயாக, ஒரு FASHION ஆக நினைத்து படிக்க ஆரம்பித்து விட்டோம் ! அதனால் காமிக்ஸ் உணர்வோடு கலந்த அந்த பொற்காலம் மறைந்து, இன்று மனதோடு உறவாடி, மாலையில் மறைந்து போகும் மதி மயக்கமாக உணர்கிறோம் !

Raoul Cauvin 


4.மிஸ்டர் மரமண்டை17 June 2013 15:54:00 GMT+5:30

அனைத்திந்திய டெக்ஸ் வில்லர் ரசிகர்மன்ற உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள் ! டெக்ஸ் வில்லரின் பூதவேட்டை 15 வருடங்களுக்கு முன்பே விளம்பரமாக வந்த கதை ;  டெக்ஸ் வில்லரின் நிலவொளியில் ஒரு நரபலி டெக்ஸ் வில்லரின் கதை வரிசை 600 ; அப்படியெனில் பூதவேட்டை கதையில்..
 • பக்கம் 63 ல் "நாம் சமிபமாய் பனி மூட்ட வேதாளங்களோடு மோதினோமே-அது ஞாபகம் இருக்கிறதல்லவா?
 • பக்கம் 65 ல் "அட போங்கப்பா! மனுஷனை ரோஸ்ட் போட்டுத் தின்னும் ஒரு கருங்காலிக் கூட்டத்திடமிருந்து தப்பி வந்து ஒரு மண்டலம் கூட ஆகவில்லை"
 • பக்கம் 231 ல் "நரமாமிசம் தின்னும் வேதாளங்கள்...பூதங்களாய் மாறும் மானிடர்கள்..இனி.. "
இவைகளை குறிக்கும் கதை என்ன கதை? அதன் பெயர் என்ன? சரியான விடையை விளக்கத்தோடு பதிலளிக்குமாறு பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன் !


கதைகள் ஒரிஜினலாய் வெளியானது வெவ்வேறு era -க்களில் ; ஆனால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் என்பதால் குறிப்பிட்ட அவ்வசனம் நமது சேர்க்கையே !

Gianlugi Bonelli 


5.மிஸ்டர் மரமண்டை18 June 2013 08:26:00 GMT+5:30

கனிவான பதிலுக்கு நன்றி சார் ! இப்படித்தான் இருக்கும் என்று யூகம் கொண்டிருந்தாலும் "வெறும் யூகம் மட்டுமே உண்மையாகி விடாது" என்பதால் தான் பழைய டெக்ஸ் ரசிகர்களுக்கு கேள்வியாக முன் வைத்தேன் !

தங்களின் இதுபோன்ற அருமையானதொரு வசனசேர்க்கையால், பூதவேட்டை கதையில் கதாப்பாத்திரங்களின் உண்மை தன்மையும் ஒரு வித அன்னியோன்யமும் ஒரு சேர மிளிர்கிறது. இதன் மூலம் மொழிபெயர்ப்பு என்பது உள்ளதை உள்ளபடி அர்த்தமாக்கி காட்டிடும் DICTIONARY அல்ல என்பதையும், நாம் படிக்கும் காலகட்டத்தில் கதையோடு ஒன்றி, அதனோடு பயணமாகி, கதையின் கற்பனையை நிஜமாக்கி, மனம் லயித்து ரசிக்கவைக்கும் கலைதான் மொழிபெயர்ப்பு என்பதையும் எங்களுக்கு 40 ஆண்டுகாலமாக உணரவைத்து வருகிறீர்கள் !


Aurelio Galleppini 


6.மிஸ்டர் மரமண்டை13 July 2013 14:47:00 GMT+5:30

காமிக்ஸும், உரைநடை பாடப்புத்தகமும் !

அகத்திற்கு அளவான அலங்காரச் சொற்களும், ஆங்காங்கே ஆணிவேரின் கிளைகளாக பிரிந்துச் செல்லும் உவமைகளும் காமிக்ஸ் படிக்கும் நம்முள் ரசனையையும் கற்பனைகளையும் விஸ்தரிக்கச் செய்வதாக அமைகின்றது ! காமிக்ஸ் கதைகளை சட்டென புரிந்து கொள்வதற்காக யாரும் படிப்பதில்லை ; அக்கதைகளில் நாமும் ஐக்கியமாகி, கதை நடந்த காலத்திற்கு பயணமாகி, கதையின் களத்தில் பிரயாணம் செய்து, நம் ரசிப்புத் தன்மையை விசாலமாக்குவதே காமிக்ஸின் வெற்றியாக இருக்கக்கூடும் ; அதுபோன்ற சொற்களும் உவமைகளும், அதற்கான வாசலை அகலத் திறந்து வைப்பதாக அமையக் கூடும் !

மாறாக, உள்ளதை உள்ளபடி சொல்லும் நேரடியான மொழிமாற்றமும், எழுத்து நடையும், நாம் ஒரு பாடப் புத்தகத்தை படிக்கும் உணர்வுகளையே தருவதாக அமையும் என்று நான் எண்ணுகிறேன். அது எப்படியிருக்குமெனில் பக்குவமாய் வடிக்கப்பட்ட சோற்றில், ஆச்சி சாம்பார் ஊற்றி, நல்ல உதயம் நெய் கலந்து, கைநிறைய எடுத்து, வாய்நிறைய சாப்பிடும் சுகத்தை வேண்டுமானால் தரலாம் ; ஆனால் நான்கே நான்கு கவளத்தில் வயிறு நிரம்பி விடும் ; கடைசியில் உள்ள சாதம் உண்ணவும் வாயும் வயிறும் மறுத்து விடும். ஆயின் கூட்டு, பொரியல், வறுவல், உப்பு, ஊறுகாய், அப்பளம், சாம்பார், வத்தக்கொழம்பு, ரசம், தயிர், மோர் என பசியாரும் போது அதில் கிடைக்கும் சுகம் அலாதியானது ; அதுவே ரசனையின் உச்சமானது !


7.மிஸ்டர் மரமண்டை13 July 2013 17:06:00 GMT+5:30

நாம் உஜாலா வெள்ளையில் வேஷ்டி கட்டி, மினிஸ்டர் வொயிட்டில் சட்டை போட்டு வெளியில் சென்றாலும், பாதையில் எங்காவது தென்படும் சில குழிகளில் உள்ள நீர் தெறித்து, சில சமயம் அனைத்தும் அழுக்காகி விடுகிறது. எனவே ஒரே ஒரு வாக்கியத்திற்காக இங்கு ஒரு மீள்பதிவு :-(

அகத்திற்கு அளவான அலங்காரச் சொற்களும், ஆங்காங்கே ஆணிவேரின் கிளைகளாக பிரிந்துச் செல்லும் உவமைகளும் காமிக்ஸ் படிக்கும் நம்முள் ரசனையையும் கற்பனைகளையும் விஸ்தரிக்கச் செய்வதாக அமைகின்றது ! காமிக்ஸ் கதைகளை சட்டென புரிந்து கொள்வதற்காக யாரும் படிப்பதில்லை ; அக்கதைகளில் நாமும் ஐக்கியமாகி, கதை நடந்த காலத்திற்கு பயணமாகி, கதையின் களத்தில் பிரயாணம் செய்து, நம் ரசிப்புத் தன்மையை விசாலமாக்குவதே காமிக்ஸின் வெற்றியாக இருக்கக்கூடும் ; அதுபோன்ற சொற்களும் உவமைகளும், அதற்கான வாசலை அகலத் திறந்து வைப்பதாக அமையக் கூடும் !

இதுபோன்ற மொழிபெயர்ப்பே நம் ஆசிரியரின் வெற்றி. இன்றுவரை நாம் அடிமைப்பட்டு கிடப்பதும் ; சலிக்காமல் மீண்டும் மீண்டும் காமிக்ஸ் படித்து அலசி ஆராய்ந்து மகிழ்வதும் அவரின் மொழிநடையால் மட்டுமே இன்றுவரை நமக்கு சாத்தியப்படுகிறது என்பதையே உள்ளர்த்தமாக கொள்க !


Morris 


8.மிஸ்டர் மரமண்டை8 August 2013 09:44:00 GMT+5:30

சில கதைகளின் தோல்விகள் ஏன்? ஓர் அலசல் - ஸ்டீல் பாடி ஷெர்லாக் ஹோம்ஸ் !

ஸ்டீல் பாடியார் ஓய்வு நாடி ஸ்காட்லாந்து கிளம்பி விட்டது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. எனக்கு இந்த தொடர் மிகவும் பிடித்திருந்தது. இப்படி நான் சொல்வதால் சிலர், ''இவர் என்ன பாஸா இல்லை லூஸா'' என்ற டயலாக்கை வாசகன் இடத்தில் வைத்து என்னை நக்கலாக பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் :)

நீங்கள் இங்கு கூறுவது போல மதியில்லா மந்திரியும் தொடர்ந்து filler page ஆக வருமானால், கதையோ அல்லது உற்சாக மிகுதியில் கதைக்களத்தை விட்டு விலகிய மொழிபெயர்ப்போ சுவாரசியத்தை தராமல் போய் விடுமானால், அதுவும் நம் ரசனையின் வரவேற்பை கண்டிப்பாக இழந்து விடும். அதனால் ஸ்டீல் பாடியாரின் தோல்வியின் தன்மைகளை அலசி ஆராய்வதே சிறந்த வழியாகும். ஏனெனில் ஸ்டீல் பாடி என்னைப் பொறுத்தவரை வித்தியாசமான நகைச்சுவை உணர்வை கொண்டுள்ளது. இக்கதைகளின் மூலம் சில அரிய விஷயங்களின் அறிவையும் விளையாட்டாய் பெற்றுவிட்டோம். ஃபில்லர் பேஜுக்கு இதைவிட வேறு அதிகம் தேவையில்லை அல்லவா ?

முதல் காரணம் - முன் பின் முரணான வெளியீடு..? தடகளத்தில் ஒரு அதகளம் கூலியில்லா கைக்கூலி ALL NEW ஸ்பெஷலில் வந்திருக்கலாம், கூலியில்லா கைக்கூலி மூலம் நிச்சயம் ஒரு வெற்றியை இரண்டு கதைகளும் ஈட்டியிருக்கும் !

இரண்டாவது காரணம் - தொடர்ந்து filler page ஆக வரும்போது எந்தக் கதை தொடரும் சலிப்பின் எல்லையை, அருகில் சென்று ஆராய ஆரம்பிக்கும் !

மூன்றாவது காரணம் - கதைக்களம் ; அதன் காலக் கட்டம் ஆகியவற்றை விலகி நிற்கும் மொழிபெயர்ப்பு..? உதாரணமாக ஜெல்லிபிஷ் மண்டையா... இதுபோன்ற தமிழ் சினிமாவின் ட்ரேட் மார்க் வசனங்கள்... இந்த வசனங்களில் நாம் ஊடுருவும் போது, திடிரென ஒரு கவுண்டமணியோ அல்லது கைப்புள்ள வடிவேலுவோ வந்து நம் கண்முன் நின்று விடுவார்கள். எனவே கதைக் களத்திற்கும் அதன் காலக் கட்டத்திற்கும் பொருத்தமான வசனங்கள் நாம் கதையோடு ஒன்றிட வழிவகுக்கும் !

காமிக்ஸ்  யாதெனில் முன்னட்டையில் நாம் போகும் ஊரின் பெயர் பார்த்து, அதன் சித்திரங்கள் எனும் வாசல் வழியே நுழைந்து, நிகழ்காலம் மறந்து போய்விட்ட கற்பனையில், கதானாயகனோடும் கதைக் களத்தோடும் நாமும் பயணித்து, அதன் காலக் கட்டத்தில் கொஞ்சநேரம் வாழ்ந்திருப்பதே அதன் வெற்றி என்பது என் கருத்து !
9.Vijayan9 August 2013 13:34:00 GMT+5:30

மிஸ்டர் மரமண்டை //ஒரு parody ; நையாண்டி ரகக் கதை எனும் போதே - 'எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள் ; இது ஜாலியான கலாய்ப்பு' என்று அதன் ஆசிரியரே சொல்லாமல் சொல்லி விடுகிறார் ! So - இந்தக் கதைக்கான களம் ; அதற்கான mood ; மொழிபெயர்ப்பு மரபுகள் என்றெல்லாம் தலையைப் பிய்த்துக் கொள்வது அவசியம் ஆகாது என்பது எனது கருத்து !

சிக் பில் ; லக்கி லூக் கதைகளைப் போலொரு natural background அமைத்த பின்னே, கதையினில் ; நிகழ்வுகளில் ; சம்பாஷணைகளில் காமெடி பின்னப்படும் போது மேற்சொன்ன அத்தனையும் நிச்சயம் தேவை !


Goscinny 10.மிஸ்டர் மரமண்டை5 August 2013 15:51:00 GMT+5:30

மேற்கே ஒரு சுட்டிப் புயல் !

மேற்கே ஒரு சுட்டிப் புயலைப் பொறுத்தவரை சூப்பர் என்ற வார்த்தையை தவிர வேறொன்றும் எழுத தோணவில்லை. அட்டகாசமான குட்டிப் பயல் லக்கி லூக் ; அதகளம் செய்யும் அலறும் பன்றிக்குட்டி ; தர்ப்பூசணி தபிதாவின் பாசமலர் முள்ளங்கி மண்டையன் ; பறக்கும் பன்றியாரின் நெருப்புத் தண்ணி வேட்கை ; காட்டெருமை கறியை காயப்போட்டு வறுத்தெடுத்த பெம்மிகன் ; குட்டி ஜாலி ஜம்பரின் கனிவான பார்வைகள் ; தெனாவட்டுப் பேர்வழி மாந்த்ரீகனின் உடான்ஸ் ; இலவு காத்த கிளியான லெப்டினெண்ட் க்ளோவர் - அடடா.. அடடா.. சொல்ல வார்த்தைகளே இல்லை ! அற்புதமான கதையும் அதற்கேற்ற அட்டகாசமான மொழிபெயர்ப்பும் நம்மை துள்ளாட்டம் போட வைக்கிறது !

ஆனால் ஒரே ஒரு நெருடல், பக்கம் 18 ல் உள்ள வசனம் (என்னோட பேஸ்புக் அக்கவுண்டிலே புதுசா யார்கிட்டேயிருந்து 'லைக்' வந்துச்சு தெரியுமா..) சுத்தமாக கதையோடும் நகைச்சுவையோடும் ஒட்டவில்லை. அது எப்படியெனில் திடிரென தர்ப்பூசணி தபிதா கதைக் களத்திலிருந்து நம்மை பிடித்து இழுத்து, ஆற்றுக்குள் வீசிடும் உணர்வை ஏற்படுத்துவதாகவே நான் உணர்ந்தேன் !

நீதி : விளையும் பயிர் முளையிலேயே தெரியும் !

Willy Lambil 11.மிஸ்டர் மரமண்டை5 August 2013 16:03:00 GMT+5:30

இவனொரு ஜெர்மன் பைலட் !

ஒரு முறைதான் படித்தேன். ஏனோ மனதில் ஒட்டவில்லை. அதற்கு காரணம் மஞ்சள் பேக்கிரவுன்டும் சிகப்பு அவுட்லைனும் கொண்ட ஓவியங்களாகவோ ; சுவாரசியமில்லாத கதையோ காரணமாக இருக்கலாம் !

மிஸ்டர் கார்பீல்ட் & மிஸ்டர் சண்டியர்

என்னால் ரசிக்க முடியவில்லை. இதற்கு, மியாவிக்கு கோயில் கட்டி கும்பிடலாம் :)


Wednesday, 13 November 2013

ரசனைகளின் பயணம்...!

நண்பர்களே, வணக்கம் !

1.Vijayan19 March 2013 22:17:00 GMT+5:30

@ நண்பர்களுக்கு :

நிறைய சமயங்களில் நான் நிலைநாட்டிட விழைவது ஒரே ஒரு விஷயத்தினையே ! காமிக்ஸ் எனும் அழகானதொரு பொழுதுபோக்கை ராக்கட் சயின்ஸ் ரேஞ்சிற்கு அலசி ஆராய்வதில் கிட்டிடப் போகும் சுவையோ ; பலனோ தான் என்னவாக இருந்திட இயலும் ?

லார்கோவின் சமீபத்திய இதழினில் ஸ்கார்பாவின் வீட்டினில் உள்ள பணிப்பெண் தலைகாட்டும் sequence-ல் மொழிபெயர்ப்பில் வேறுபாடு நேர்ந்துவிட்டதாகவும் ; அதனை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் நம் நண்பர் ஒருவர் எனக்கு இன்று மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். ஸ்கார்பா ஒரு பெண்பித்தர் என்பதை நிலைநாட்ட வந்த கட்டத்தை நான் தவறாக மொழிபெயர்த்து விட்டதாகவும் ; அவசரத்தில் எழுதும் என் பாணியே இதற்குக் காரணமென்றும் நண்பர் இலங்கை பிரச்னை ரேஞ்சிற்கு எழுதி இருந்தார்.

எனது பிழைகள் என்னவாக இருப்பினும், 26 எழுத்துக்கள் கொண்ட பரங்கிகளின் அந்த மொழியில் எனது பரிச்சயம் நிச்சயம் இன்னமும் மங்கிடவில்லை என்பது எனக்குத் தெரியும். கதைக்கு அவசியப்படா விஷயங்களையும் கூட வரிக்கு வரி ஈயடிச்சான் காப்பி அடிப்பது தான் ஒரு மொழிபெயர்ப்பாளனின் கடமை ; நாசுக்காக திசை மாற்றிடும் பாணி ஒரு குற்றம் ; தவறு என்று பார்க்கப்படுமெனில் - அந்தக் "கொலைப் பாதகத்தை" காலமெல்லாம் நான் செய்திடத் தான் போகிறேன் ! இது ஆணவமானதொரு வாக்கியமாய்ப் பார்த்திடப்படலும் சாத்தியம் என்ற போதிலும், நிஜத்தை சொல்லிட ஒரு நாளும் நான் தயங்கப் போவதில்லை.

நண்பர் ரபிக் ராஜா மொழிபெயர்ப்பு உரிமைகள் குறித்து கேள்வியினை எழுப்பியது அவரது உரிமையே ; விற்பனைக்கு வந்திடும் எந்தப் பொருளுக்கும் விமர்சனங்கள் எழுவது இயல்பென்ற அவரது சிந்தையிலும் எனக்கு பூரண உடன்பாடே ! ஆனால் நண்பர் ராகவன் குறிப்பிட்டிருப்பது போல் ஒரு தொழிலின் பின்னணிகளை இது போன்றதொரு திறந்த களத்தில் நான் பகிரங்கப்படுத்திடப் பிரியப்படாத காரணத்தினாலேயே பதிலளிக்கவில்லை. அப்படியிருக்க cinebook -ன் ஜெராக்ஸ் தானே நாம் என்று ஒற்றை வரியினில் ஒரு தீர்ப்பினை வெளியில் எழுதுவது - ஜூரி இல்லாததொரு விசாரணைக்கு ஒத்ததாகாதா ?

எனது பிழைகளுக்கு முதல் விமர்சகன் நானே ; அவை கொணரக்கூடிய பரிகாசங்களோ; விமர்சனங்களோ என்னை ஒரு போதும் சலனப்படுத்திடப் போவதில்லை . ஆனால் எனது தொழிலையும், ஒழுக்கத்தையும் பரிகசிக்கும் எழுத்துக்களுக்கு நிச்சயம் நான் ரசிகனல்லவே ! இதுவும் கூட இந்தப் புது யுகத்தின் விமர்சனப் பாணியினொரு அங்கமெனின் - நான் ஒரு தலைமுறைக்கு முந்தையப் புராதனமாய் இருந்திடுவதில் துளியும் வருத்தம் கொண்டிடப் போவதில்லை.

உலகை வெற்றி காணும் ஒரு எடிட்டராகவோ ; மொழிபெயர்ப்பில் ஒரு சண்டியராகவோ என்னை நான் ஒரு நாளும் பார்த்திடுவதில்லை ; பார்க்கப்பட விழைவதுமில்லை ! நான் நேசிக்குமொரு கலையை, எனக்கிருக்கும் சக்திகளின் எல்லைக்குள் ஆராதிக்க முயன்றிடும் ஒரு சராசரி மனிதனே!

அந்த சக மனிதனுக்கான அனுசரணை எனக்கு நல்கப்பட்டாலே நிரம்ப பெருமிதப்படுவேன் ! Good night guys !

2.மர மண்டை19 March 2013 23:02:00 GMT+5:30

4.//*நிறைய சமயங்களில் நான் நிலைநாட்டிட விழைவது ஒரே ஒரு விஷயத்தினையே ! காமிக்ஸ் எனும் அழகானதொரு பொழுதுபோக்கை ராக்கட் சயின்ஸ் ரேஞ்சிற்கு அலசி ஆராய்வதில் கிட்டிடப் போகும் சுவையோ ; பலனோ தான் என்னவாக இருந்திட இயலும் ?* //

இது புரியாத வரை காமிக்ஸின் உன்னதமான சுவையை ; கற்பனைகளின் எல்லைகளை இவர்கள் கனவிலும் ரசிக்கவோ ; சுவைக்கவோ முடியாது ! கள்ளம் கபடமற்ற சந்தோஷத்தை காமிக்ஸ் மூலம் பெறுதல் என்பது என்றுமே கானல் நீர் தான் இவர்களுக்கு !

3.மர மண்டை20 March 2013 16:12:00 GMT+5:30

ரசனைகளின் பொது விவாதம் (1)

இந்த விவாதங்களில் இருந்து ஒதுங்கி இருக்கலாம் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் சில சீரிய சிந்தனைவாதிகளின் நடுநிலை கருத்துகள் எம்மில் பலரை திசை திருப்பிட சாத்தியமுள்ளதால், உள்ளே நுழைய அவசியம் ஏற்பட்டு விட்டது ! இந்தத் தலைப்பில் வரும் என்னுடைய பதிவுகள் அனைத்தும், ஆசிரியருக்கு ஆதரவாக பதிவிடும் நடுநிலையாளர்களுக்கு மட்டுமே. என் பதிவுகள் யாரையும் எங்கேயும் புண்படுத்தாது. அதே சமயம் யாருக்கும் புரியாமலும் இருக்காது !

இது மற்றவர்களின் சிந்தனைகளுக்கு சிறு தீப்பொறியாக அமைந்தால் அதுவே இந்தப் பதிவின் பிறவிப் பயனாகும். அங்ஙனம் அமையாவிட்டாலும் இந்தப் பதிவு ஒரு சிறந்த பிறவி பயனைக் கொண்டதாகும் !

4.மர மண்டை20 March 2013 16:53:00 GMT+5:30

ரசனைகளின் பொது விவாதம் (2)

ஆசிரியர் விஜயனை அல்லது லயன் முத்து காமிக்ஸை விமர்சிப்பவர்கள், மொழிபெயர்ப்பு அல்லது பிரிண்டிங் தரம் பற்றி CONSTRUCTIVE கமெண்ட் இடுபவர்கள், வாடிக்கையாளர் உரிமை அல்லது வாசகனின் உரிமை பற்றி ஓயாமல் கூப்பாடு போடுபவர்கள் - இங்கு அடிக்கடி சொல்லும் காரணங்கள் :

1. குடும்பத்தில் ஒருவர் !
2. வளர்ச்சியின் மேல் அதீத அக்கறை !
3. காசு கொடுத்து வாங்கும் வாடிக்கையாளன் ! 
4. இருபக்கமும் சீர்தூக்கி பார்க்கும் நடுநிலையாளன் ! 
5. ஆசிரியர் பணிவானவர் ; இங்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது ! 

சிந்தனைவாதிகள் சிந்தித்தால் மட்டும் போதாது அது நடைமுறைக்கு ஒத்துவரும் தீர்வாகவும் அமையவேண்டும் ! இல்லாவிட்டால் ஓட்டை மண் பானை போன்று தம் செயல்களும் யோசனைகளும் பயனற்று போய்விடும். எனவே இவற்றைப் பற்றி தெளிவாக அதே சமயம் அனைவராலும் ஏற்கும்படியான இறுதி தீர்வாக கொஞ்சம் அலசுவோமா ?
5.மர மண்டை20 March 2013 18:56:00 GMT+5:30

ரசனைகளின் பொது விவாதம் (3) (1) குடும்பத்தில் ஒருவர் !

இந்த வலைதளத்தில் பதிவிடும் அனைவருமே ஆண்கள் ; சுய சம்பாத்தியம் கொண்டவர்கள் ; குடும்பத் தலைவர்கள் ; குடும்பத்தை கட்டிக்காக்கும் தலைவனான உங்களுக்கு குறை சொல்லும் உரிமை உங்கள் சொந்த குடும்பத்தில் எந்தளவு இருக்கிறது என்று நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள் பார்ப்போம் ?

சமையல் சரியில்லை ; உப்பு, புளி, காரம் குறைச்சல் அதிகம் என்று உங்கள் மனைவியிடம் உங்கள் குரலை உயர்த்திக் கூற முடியுமா? முடியாது ! தன் டீன் ஏஜ் பிள்ளைகளிடம் அவர்களின் ஒவ்வாமையை நேருக்கு நேர் கூறி அவர்களை குற்றவாளியாக்க முடியுமா? முடியாது ! தன் வீட்டில் மனைவியால் ஓரிடத்தில் அலங்கரிக்கப்பட்ட அலங்காரப் பொருளை உங்களுக்குப் பிடித்த இடத்தில் மாற்றி வைக்க முடியுமா? முடியாது ! இதுபோல் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரிடமும் சில பல விஷயங்கள் நம்மால் முடியுமா? முடியாது !

தன் குடும்பத்தில், நம் ரசனைக்கு மாறுபட்ட விஷயத்தையே மாற்ற முடியாத நாம், இங்கு மட்டும்  "விரல் மடக்கி" டைப்பிட்டு ஆசிரியரை புண்படுத்துகிறோம். கேட்டால் குடும்பத்தில் ஒருவர் என்கிறோம். இதில் வேறு ஒருவர் பதிலளித்தாலோ, தவறாக பேசிவிட்டாலோ மூக்கின் நுனியில் கோபம் துள்ளிக் கொண்டு அகோர தாண்டவமாடுகிறது !

உங்களைப் போல் ஆசிரியரும் ஒரு மனிதன் தானே? வலிக்கும் இதயமும் ; சட்டென உடைந்து விடும் மனமும் கொண்டவர் தானே? ஒரு சொல் தாள முடியாத நீங்கள், பல நூறு வார்த்தைகளால் அவரை பந்தாடுவது கொடுமையிலும் கொடுமை ! (Ref : கடவுள் பாதி மிருகம் பாதி).  ''இந்த வலைதளத்தை பொறுத்த வரை'' நீங்கள் ஒரு சராசரி வாசகன் மட்டுமே, ஆனால் அவர் உங்களை வாசகனாக்கிய பிரம்மா ! படைத்தவன் தலையில் கைவைக்க இனி கனவிலும் நினைக்க வேண்டாம் ! இங்கு ஒரு மடங்கு காயப்படுத்தினால் நீங்கள் இரு மடங்கு காயப்பட்டு போவீர்கள் ; இதுவே இனி எழுதப்பட்ட விதியாகும் !

5.மர மண்டை20 March 2013 19:30:00 GMT+5:30

ரசனைகளின் பொது விவாதம் (4) (2) வளர்ச்சியின் மேல் அதீத அக்கறை !

தரம் தரம் என்று தராதரம் இல்லாமல் கத்தும் வாசகர்களே, வளர்ச்சியின் அடித்தளம் எதுவென்று தெரியுமா? நீங்கள் கூறும் கலர் ; பிரிண்டிங் ; பேப்பர் ஆகியவற்றின் தரம் எல்லாம், நீங்கள் இங்கு காட்டு கத்தலாய் கத்திதான் ஆசிரியருக்கு தெரியவேண்டும் என்பதல்ல ; ஐரோப்பா செல்லும் போது அங்கு வெளியிடப்படும் ஒரே ஒரு புத்தகத்தை வாங்கி வந்தால் மட்டுமே போதுமானது. ஆனால் அதை இங்கு நடைமுறைபடுத்த கொஞ்சம் குனிந்து பாருங்கள் ; 


 • பெரிய அளவு பிரிண்ட் ரன் வேண்டும் !
 • வாசகர் வட்டம் லட்சத்தில் வரவேண்டும் ! 
 • ஆங்கிலம் போல் நாமும் 400 கொடுத்து வாங்க வேண்டும் !
 • நேரடி சந்தாக்கள் பத்தாயிரத்தை தாண்டி இருக்க வேண்டும் ! 
 • ஆசிரியர் எடுக்கும் முடிவே இறுதியானதாக இருக்க வேண்டும் ! 
 • ஸ்டாக் வைக்க ; எதிர்கால உரிமம் பெற கோடிக்கணக்கில் முதலீடு வேண்டும் !
 • அந்த பல கோடி பணத்தை அவர் இந்த 40 வருடத்தில் லாபமாக பார்த்திருக்க வேண்டும் !

அய்யோ.. குய்யோ.. முய்யோ.. என்று தமிழ் காமிக்ஸ் வளர்ச்சிக்கு பாடுபடுபவர்கள், முதலில் இதற்கு வழி உண்டா என்று பாருங்கள்? நீங்கள் பதிவிடும் Constructive கமெண்டுகள் எல்லாம், ஒரு ஐரோப்பிய புத்தகத்தை வாங்கி கையில் வைத்துக் கொண்டாலே போதுமானது !

மொழிபெயர்ப்பை பொறுத்தவரை, எனக்கு பிடித்த வார்த்தைகள் உங்களுக்குப் பிடிப்பதில்லை ; உங்களுக்குப் பிடித்த வார்த்தைகள் எனக்கு பிடிப்பதில்லை ; நம் இருவருக்கும் பிடித்த வார்த்தைகள் இன்னொருவருக்கு பிடிப்பதில்லை ; எனவே நமக்கு பிடித்த பதிப்பகத்தையே நாம் நாடுகிறோம் !
6.மர மண்டை20 March 2013 19:46:00 GMT+5:30

ரசனைகளின் பொது விவாதம் (5) (3) காசு கொடுத்து வாங்கும் வாடிக்கையாளன் !

நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்களான சோப்பு, ஷாம்பு, டூத் பேஸ்ட், அரிசி, சமையல் எண்ணை, சட்டை, ஜீன்ஸ், குவாட்டர் என எல்லா பொருட்களும் நமக்கு பிடிக்காவிட்டால், நம் ஒருவனுக்காக அதை தயாரிக்கும் கம்பெனி தரத்தை மாற்றுவதில்லை ! நமக்கு பிடிக்காவிட்டால் நாம் அதன் பிராண்ட்/ஐ மாற்றி விடுகிறோம் ; அதுவும் பிடிக்கா விட்டால் வேறொரு BRAND ; இது தான் காசு கொடுத்து வாங்கும் வாடிக்கையாளனின் உரிமை ! தவறி, வாங்கிய பொருளில் ஏதும் குறையிருந்தால் நீங்கள் கொடுத்த பணம் ரூபாய் 120 திருப்பி கொடுக்கப்படும் ; நீங்கள் விவரமானவர் தானே ? 7.மர மண்டை20 March 2013  ரசனைகளின் பொது விவாதம் (6)   (4)    இருபக்கமும் சீர்தூக்கி பார்க்கும் நடுநிலையாளன் !  

இந்தப் பதிவு ஆசிரியரால் நீக்கப்பட்டு விட்டது :(
8.மர மண்டை20 March 2013 20:55:00 GMT+5:30

ரசனைகளின் பொது விவாதம் (7) (5) ஆசிரியர் பணிவானவர் ; இங்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது !

மிகவும் டயர்ட் ஆகிவிட்டதால் என்னுடைய பழைய மீள்பதிவுகளே இதற்கு பதிலாக அமைத்து விடுகிறேன். ஆனால் ஒரு விஷயம் ஜூனியர் எடிட்டர் இதுபோன்ற பிரச்சனைகள் இனியும் வேண்டாம் என்று நினைத்தால் இந்த தளமும் எதிர்காலத்தில் MODERATE செய்யப்படும் வாய்ப்பு இருக்கவே செய்யும். ஏனெனில் ஜூனியர் எடிட்டர் இளவட்டம் ; நாளைய தலைமுறை என்பதை மறக்க வேண்டாம் !

1.மர மண்டை2 March 2013 23:15:00 GMT+05:30 குனிய குனிய குட்டு தான் கிடைக்கும் ; இறங்க இறங்க உயரம் அதிகமாகும் ; நம் பாதை எதுவென்பது நமக்கு தெரியும் ; அதனால் எந்த சலசலப்புக்கும் நாம் பின்வாங்கமாட்டோம் ; எதில் குறைந்து விட்டோம் நாம்? எதில் சிறுமைப்பட்டோம் நாம்? சிறுதுளி என்பது சிலநேரங்களில் சிறுதுளி தான். உதாரணம் மருந்து, விஷம் என இவைகள் பெருவெள்ளமாக என்றுமே பெருக்கெடுப்பதில்லை. அதனால் அதை பற்றி நாம் இனி கவலைப்பட போவதில்லை !

2.மர மண்டை2 March 2013 22:47:00 GMT+05:30 தம் சுய முயற்சியால் உயர்ந்துவிட்ட அனைவருமே பணிவு கருதி நாணலாக மாறிவிட்டால், எங்களுக்கு நிழல் தரும் அசைக்க முடியாத ஆலமரத்தை, சற்றே இளைப்பாறும் பாலைவனச் சோலையை என் போன்றவர்கள் எங்கே என்று தேடுவது ?
9.மர மண்டை21 March 2013 10:05:00 GMT+5:30

ரசனையின் பயணம்... இங்கே முடிகிறது (1)

எனது அன்பான வாசக நண்பர்களே, மாற்றம் மாத்திரமே மாறாததே ! பதிவில் தொடங்கிய என் பயணம் இந்த ரசனைகளின் பயணம் ...! பதிவில் இன்றோடு 'தற்காலிகமாக' முடிவடைகிறது !  என்னை நேசித்தவர்களை விட வெறுத்தவர்களே இங்கு அதிகம். காரணம் அவர் அவர் மனசாட்சிக்கு மட்டுமே வெளிச்சம் !

நான் இதுவரை யாரையும் நேருக்கு நேர் புண்படுத்தியதில்லை ; சபையில் யாரையும் நேரடியாக குற்றம் சாட்டியதில்லை ; எவரையும் எதிரியாக பார்க்கவில்லை ; எவரையும் வெறுத்ததில்லை ; ஆனால் என் கருத்துகள், என் மொழிநடை பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கலாம் !

என்றாவது ஒருநாள் நான் இங்கு பதிவிட்ட அனைத்து பதிவுகளையும், என் வருங்கால புதிய வலைதளத்தில் காட்சிக்காக ; என் சாட்சிக்காக பதிவேற்றி வைத்திருப்பேன். ஏனெனில் என் கமெண்டுகள் அத்தனையும் இறந்த காலம் ; நிகழ் காலம் ; எதிர் காலம் என இந்த வலைதளத்தை பிரதிபலித்துக் கொண்டே இருக்கும் என்று நான் திடமாக நம்புகிறேன் ! 

10.மர மண்டை21 March 2013 10:25:00 GMT+5:30

ரசனையின் பயணம்... இங்கே முடிகிறது (2)

என்னைப் பொறுத்தவரை காமிக்ஸ் படிப்பது, நாம் PhD பட்டம் வாங்க வேண்டும் என்பதற்காக அல்ல ! அதே போல் ஒவ்வொரு தனிப்பட்ட வாசகரின் 'கருத்துகளுக்கும்', 'சுயமரியாதைக்கும்' இங்கு மதிப்பு கொடுக்க வேண்டும் ! அது விமர்சனமாகவோ ; குறைகூறும் பதிவுகளாகவோ ; CONSTRUCTIVE கமெண்டாகவோ ; ஆதரவாகவோ ; எதிர்ப்பாகவோ ; கும்மியாகவோ ; ஜால்ராகவோ எதுவாக இருந்தாலும் நமக்கு பிடிக்காத போது அது நிச்சயம் நமக்கு சம்பந்தமில்லாத ஒன்றாகவே கருதவேண்டும் ! அந்த வாசகருக்கு நேரடியாக பதில் கமெண்ட் அளித்து, அவரைப் புண்படுத்தாமல் இருப்பதே நலம். நமக்கு பிடித்திருந்தால் கவலையே இல்லை, அவருக்கு ஈடாக நாமும் அவர் பதிவில் போட்டி போடலாம் ! 

கடைசியாக ஒரு விடுபட்ட விமர்சனத்தை மட்டும் கீழே பதிவிடுகிறேன் !
11.மர மண்டை21 March 2013 10:48:00 GMT+5:30

ரசனையின் பயணம்... இங்கே முடிகிறது (2)

CENSOR என்ற பேச்சு வரும்போது பெண்ணின் முழு அல்லது முக்கால் நிர்வாணத்தை மறைப்பவர்கள், ஏன் வில்லி கார்வின், லார்கோ, சைமன் போன்றவர்களின் சட்டை போடாத உடம்பை மறைப்பது இல்லை என்று அதிமேதாவித்தனமாக கேட்கின்றனர் !? 

இதற்கு அதிக விளக்கம் கூட வேண்டாம், நாம் நம் வீட்டில், ஒரு வெயில் காலத்தில் எப்படி சட்டையில்லாமல் அலைந்து கொண்டு இருப்போம்?ஆனால் நம் வீட்டு பெண்கள் அந்நேரம் எப்படி உடை அணிந்து கொண்டிருப்பர் என்று நினைத்து பார்த்தாலே போதுமானது ! நம் ஊர் மளிகை கடை அண்ணாச்சிகளையும் அவர் தம் மனைவிமார்களின் உடை கலாச்சாரத்தை கடைகளில் பார்த்தாலே போதும், இனி இது போன்ற ஆண் பெண் சமஉரிமை ஆடை கலாச்சாரத்தை கேட்கமாட்டோம் ! 

சென்று வருகிறேன் நண்பர்களே ! 
போலிகளை கண்டு ஏமாறாதீர்கள் ! 

போலி மரமண்டை வந்தால் என் பழைய id எண்ணுடன் ஒப்பிட்டு பார்த்து உண்மையை அறிந்து 'கொல்லுமாறு' அன்புடன் வேண்டிக் கொள்கிறேன் :) :) : )
லாஸ்ட்லைன் : ரசனைகளின் பயணம் என்றும் முடிவதில்லை ; அது ஒரு தொடர்கதை ! 

Tuesday, 12 November 2013

தரம் !

நண்பர்களே,

வணக்கம். இந்தப் பதிவு  பதிவிடும்  இப்பொழுதில்  தமிழ் காமிக்ஸில் நான் விரும்பும் சிறந்த தரமாக கருதுவது கீழ்வரும் காரணிகளை மட்டுமே ! எனவே ஆசிரியர் அவர்கள் எக்காரணம் கொண்டும் தரத்தில் சமரசம் செய்து கொள்வதோ ; குறைவான  விலையை கருத்தில் கொண்டு மீண்டும் சாணி  பேப்பர் கலாச்சாரத்திற்கு திரும்புவதோ எவ்விதத்திலும், இதுநாள் வரை அவர் செய்து வரும் சாதனைக்கு பெருமை சேர்ப்பதாக அமையாது என்று திடமாக கூறுகிறேன் ! அவர் வெளியே சொல்லாத தன் உள்மன விருப்பத்தின்படி ஜூனியர் எடிட்டர் விக்ரம் அரவிந்த்  தமிழ் காமிக்ஸ் உலகின் முடிசூடிய மன்னனாக எதிர்காலத்தில் வலம் வரவேண்டும் என்றால் அதற்கு முதலில், எடிட்டர் தமிழ் காமிக்ஸ் உலகின் முடிசூடா மன்னனாக வலம் வர வேண்டும்... அதற்கான தரமான விதை இன்றிலிருந்தே விதைக்கப்பட வேண்டும் என்பதே என் விருப்பம் !

 • முழு வண்ண புத்தகம் - தற்போதைய பெரிய அளவு !
 • கருப்பு வெள்ளை புத்தகங்கள் - பூத வேட்டை அளவு ! 
 • வெளிநாட்டு ஆர்ட் பேப்பர் ; வெளிநாட்டு மை ; உள்பக்கமும் ஆர்ட் பேப்பர் ஒட்டிய அட்டைகள் !
 • அச்சுக் குறைபாடு உள்ள புத்தகங்களுக்கு மாற்றுப்  பிரதி அளிக்கப்பட வேண்டும் !
 • கூரியர் மூலம் சேதம் ஆகும் புத்தகங்களுக்கு மாற்றுப்   பிரதி அளிக்கப்பட வேண்டும் !
 • பின்னட்டைகள் மிகவும் அருமை. ஓவியர் ; கதாசிரியர் ; கதைச்சுருக்கம் - என உலகத்தரம் கண்களையும் மனதையும் ஒருசேர அள்ளுகிறது !
 • தற்சமயம் கைவசம் உள்ள பிரதிகள் விளம்பரத்தை, அட்டையிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் !
 • மொழிபெயர்ப்பில் நிகழ்கால சினிமா காமெடி வசனங்களை சேர்க்காமல் இருக்க வேண்டும். காலம் கடந்தப்பின்  சலிப்பு தட்டும் !
 • கருப்பு வெள்ளை புத்தகங்களுக்கு குறைந்த விலை நிர்ணயம் செய்வதற்காக மட்ட ரக பேப்பர்களை உபயோகிக்காமல் இருக்க வேண்டும் !1.மிஸ்டர் மரமண்டை9 June 2013 09:58:00 GMT+5:30

அளவின் வேறுபாடுகள் - நாலும் நாலுவகை !

REF : வாசகர் கடிதம் - குற்றத் திருவிழா (1)

எனக்குப் பிடித்த அளவு லக்கி ஸ்பெஷல்-1ன் தற்போதைய பெரிய அளவாகும். ஏனெனில், இதுவே நெடுங்காலமாக என் கற்பனையில் விரிந்து வந்ததாகும். இந்தப் பெரிய அளவையே நான் பெரிதும் விரும்புகிறேன். அழகான பெரிய பெரிய சித்திரங்கள் ; கண்களை வருத்தாத சற்றே மீடியமான எழுத்துகள் ; அழகிய தோற்றம் ; பார்க்கும் போதே பரவசப்படுத்தும் அழகு ; மொத்தத்தில் அழகோ அழகு பேரழகு !

ஒரே அளவு ! ஒரே விலை ! ஆர்ட் பேப்பர் ! அழுத்தமான வண்ணங்கள் ! என்றென்றும் அந்தரத்தில் தொங்கா கதைகள் ! தனி தனி ஆல்பங்கள் ! சீரான இடைவெளியில் தொடர் வெளியீடுகள் ! தற்போதைய தரத்தில் கீழிறங்காமல் மேல்நோக்கி பயணிக்கும் நிலை ! இவைகளையே நான் பெரிதும் விரும்புகிறேன் ; அதையே ஆதரிக்கிறேன் ; ஆராதிக்கிறேன் !

பெரிய அளவு 


2.மிஸ்டர் மரமண்டை9 June 2013 10:16:00 GMT+5:30

அளவின் வேறுபாடுகள் - நாலும் நாலுவகை !

REF : வாசகர் கடிதம் - குற்றத் திருவிழா (2)

ஒரு விஷயம் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது ! உலகத்தரமான, அழகான நம் காமிக்ஸ் புத்தககங்களை ஏன்.. சின்ன ஹேண்ட் பேகில் 'ஒளித்து' வைத்து எடுத்துச் செல்ல வேண்டும் என்று எனக்கு புரியவில்லை ! கூரியர் வீட்டிற்கு வந்தவுடன், படித்து முடித்து விடுகிறோம்.  அப்படியே ஊருக்கு செல்வதாக இருந்தாலும் கூட, நம் துணிமணிகளை சின்ன ஹேண்ட் பேகில் வைத்து பாக்கட் சைஸிலா எடுத்துக் கொண்டு பயணிக்கப் போகிறோம் ?

வேண்டாம் என்பதற்கு ஆயிரம் காரணங்கள் சுட்டிக்காட்டி, கடிதத்தில் எழுதலாம். ஆனால் வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். அது, நம்முடைய தமிழ் காமிக்ஸை உலகத்தரத்தில் படிக்க ஆசைப்படுகிறோம் என்பதாகும். அதையே இங்கு வலைதளத்தில் பதிவிடுகிறோம் ; அதற்கு வலு சேர்க்கிறோம் !

சிறிய அளவு 

3.மிஸ்டர் மரமண்டை9 June 2013 10:41:00 GMT+5:30

அளவின் வேறுபாடுகள் - நாலும் நாலுவகை !

REF : வாசகர் கடிதம் - குற்றத் திருவிழா (3)

சித்திரங்களை அளவில் சுருக்கி, வசனங்களை குறுக்கி, எழுத்துகளை அளவில் சிறியதாக்கி, அளவில் சிறுத்து, வாசகர்கள் வருந்தும்படி வெளிவரும் சிறிய அளவு தேவைதானா? என்று நண்பர்கள் யோசிக்க வேண்டும். இன்றைய தரம் அன்று எட்டா நிலையில் இருந்தது ; அன்று வேறு வழி இருக்கவில்லை ; அதனாலேயே விரும்பினோம் ; ஆதரித்தோம் ! அதற்காக மீண்டும் பின்னோக்கி செல்வது, இக்கால சினிமாக்களை பார்க்க மறுத்து, 'சாந்த சக்குபாய்' போன்ற கருப்பு வெள்ளைப் படங்களை ரசிக்க வருமாறு, வாசகர் கோரிக்கை வைப்பதாகவே தோன்றுகிறது !

கடைசியாக ஒரு விஷயம், இப்படி சிறிய அளவில் வரும் புத்தகங்களில் இருக்கும் எழுத்துகளை, கண்களை குறுக்கி குறுக்கிப் படித்து வந்தால் சீக்கிரமே அனைவரும் கண்ணாடி தான் போடவேண்டும் :) அதன் பிறகு தமிழ் காமிக்ஸ் படிப்பவர்களை எளிதாக கண்டுபிடித்து விடலாம் :)

சிறியதிலும் சிறிய அளவு 

4.மிஸ்டர் மரமண்டை9 June 2013 11:04:00 GMT+5:30

அளவின் வேறுபாடுகள் - நாலும் நாலுவகை !

REF : வாசகர் கடிதம் - குற்றத் திருவிழா (4)

வண்ண இதழ்களுக்கு 'லக்கி ஸ்பெஷல்' அளவும் ; கருப்பு வெள்ளை கதைகளுக்கு 'பூத வேட்டை' அளவிலும் நிர்ணயம் செய்து கொள்வது தரத்தை விரும்புவர்கள் வரவேற்க கூடிய ஒன்றாக அமையும் என்றே எண்ணுகிறேன் !

இன்றைய காலக்கட்டத்தில், விண்ணைத் தொட்டுவிட துடிக்கும் விலைவாசியில், தனக்காக ; தன் ரசனைக்காக ; தன் மன மலர்ச்சிக்காக மாதம் ரூபாய் 100 அல்லது 200 செலவு செய்வதை காஸ்ட்லி என்று கூறுபவர்கள் மிகவும் வியப்பான மனிதர்களே ! உதாரணத்திற்கு, எனக்காக மாதம் ரூபாய் 200 செலவு செய்ய யோசித்து, அதை ரொம்ப காஸ்ட்லியான விஷயம் என்று கூறி, கிடைப்பதற்கரிய தற்போதைய புத்தகத் தரத்தை குறைக்க கூறினால், என்னை பற்றி என் மனைவி மக்கள், சுற்றமும் நட்பும் என்ன நினைக்கும்? அல்லது எனக்குள் நான் வகுத்துக் கொண்ட கோட்பாடுகள் தான் என்னவாக இருக்க முடியும்? குடும்பத் தலைவனான நான், எனக்காக மாதம் ரூபாய் 200 செலவு செய்ய ஆரம்பித்தால் என் வீட்டில் சண்டையா வந்து விடும் ?

எனவே ஆசிரியர் அவர்கள் பெரும் மனது வைத்து, இனி வரும் வெளியீடுகளில் தற்போதைய பெரிய அளவிலும், உயர்ந்த தரத்திலும் மாற்றம் கொண்டு வர வேண்டாம் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன் !

மிகவும் சிறிய அளவு 

5.மிஸ்டர் மரமண்டை16 June 2013 17:01:00 GMT+5:30

சார், இன்னொரு விஷயம் தவறாக இருந்தால் மன்னிக்கவும், கடந்த சில மாதங்களாக தாங்கள் புத்தகம் அனுப்பும் தேதியை ஒரு வாரம் முன்பே கூறி விடுகிறீர்கள். அதன் பிறகு கொடுத்த வாக்கை காப்பாற்ற நீங்களும் உங்கள் டீமும் புயலென வேலை செய்து, சொன்ன தேதியில் கூரியர் செய்து விடுகிறீர்கள். மிகவும் சந்தோஷம் ! ஆனால் கடந்த காலங்களிலும் தற்போதும் தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டால் கொடுத்த வாக்கை காப்பாற்ற அனைத்து பிரிவினரும் படாத பாடுபடுகின்றனர் என்பதை தங்களின் கடந்த சில பதிவுகளின் மூலம் அனைவரும் அறிந்து கொண்டோம். இந்த முறை COMIC CON இருந்ததும் ஒரு காரணம். ஆனால்,

இது போன்று துரிதமாகவும், ஓவர்டைம் வேலைகளாலும் சில சமயம் புத்தகங்களில் சில சிறிய குறைகள் நேர்ந்து விடுகிறது. அனைத்திலும் இல்லாவிட்டாலும் குறிப்பாக பைண்டிங் வேலையில் நடந்து விடுகிறது. என்னிடம் உள்ள லக்கி ஸ்பெஷலில் வெளி அட்டையும் உள் அட்டையும் சரியாக ஒட்டாமல் பிரிந்து வருகிறது. அதுபோல் நிலவொளியில் ஒரு நரபலியின் அட்டை உள்பக்கத்தில் அதிகமாக ஒட்டப்பட்டு விட்டது. அந்தப் புத்தகத்தில் பல பக்கங்கள் கோணலாக கட்டிங் செய்யப்பட்டுள்ளது !

எனவே ஒரு வாரம் தாமதமானாலும் நாங்கள் காத்திருக்க தயாராக உள்ளோம். இதன் மூலம் தங்கள் அலுவலக நண்பர்களுக்கு சுமைகள் குறைவாகவும் ; எங்களுக்கு நிறைகளாகவும் ; தங்களுக்கும் மன அமைதியான சூழலும் ஏற்படும் அல்லவா ?6.Vijayan17 June 2013 12:31:00 GMT+5:30

மிஸ்டர் மரமண்டை : பைண்டிங்கில் கோளாறுகள் இருப்பின், உடனே நம் அலுவலகத்தோடு தொடர்பு கொண்டால், மாற்றுப் பிரதிகளைப் பெற்றிடலாம். அவை தொடராது இருக்கவும் கவனம் மேற்கொள்வோம் !
7.மிஸ்டர் மரமண்டை20 June 2013 14:32:00 GMT+5:30

அதே போல் +6 வரிசையில் (ரூ.50 வீதம்) வெளிவரும் இதழ்களின் அளவுகளை வில்லனுக்கொரு வேலி (ரூ.50) போன்று பெரிய அளவில் முழு வண்ணத்தில் தரவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். தயவு செய்து +6 வரிசையில் வெளிவந்த நிலவொளியில் ஒரு நரபலி அளவில் வண்ண இதழ்கள் வேண்டாமென்றும் மீண்டும், மீண்டும், மீண்டும் தங்களிடம் கோரிக்கை வைக்கிறேன் !8.மிஸ்டர் மரமண்டை28 June 2013 06:14:00 GMT+5:30

சமிப காலமாக, சிலவகை சிரமங்களால் என்னால் இங்கு குறிப்பிட்ட நேரத்திற்கோ அல்லது ஆசிரியர் பதிவு வந்தவுடனோ வர முடிவதில்லை. ஆனால் அதற்குள் இங்கு யாரவது குட்டையை குழப்பி விடுகிறார்கள். அதற்காக இந்த விடியலில் ஒரு அவசர பதிவு.

ALL NEW SPECIAL ஜூலை 8-ல் டெஸ்பாட்ச் செய்யப்படும் என்று கூறியுள்ளீர்கள் ; இந்த மாதம் முழுவதிற்கும் இந்த ஒரு புத்தகம் தான் என்பதாலும், புத்தகம் கையில் கிடைத்தவுடன் நம்மில் பெரும்பான்மையானவர் அன்று இரவிற்குள் படித்து முடித்து விடுவோம் என்பதாலும், இங்கு ஒரு விஷயத்தில் ஆசிரியர் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன் :

சார், குறிப்பிட்ட நாளுக்குள் அனுப்பிட வேண்டும் என்பதால் தாங்களும், தங்கள் அலுவலக பணியாளர்ளும் அதிகமாக சிரமப்பட வேண்டாம். ஏனெனில் கால அவகாசம் நமக்கு மன அமைதியையும் ; நேர்த்தியையும் ; வேலையில் உற்சாகத்தையும் கொடுக்க வல்லமை வாய்ந்தது என்பது தங்களும் அறிந்ததே. இரண்டு மூன்று நாட்கள் தாமதமாக எனக்கு புத்தகம் வந்தாலும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஏனெனில் புத்தகம் வந்தவுடனே நான் முழுவதுமாய் படித்து முடித்து விட்டு அடுத்த மாதத்திற்கு காத்திருப்பதையே ஒவ்வொரு மாதமும் வழக்கமாக கொண்டிருக்கிறேன். என்னுடைய இந்த பதிவின் கருத்துகள் மிகவும் யதார்த்தமானவை என்பது தங்களுக்கும் தெரிந்திருக்கும்..!9.மிஸ்டர் மரமண்டை15 August 2013 21:26:00 GMT+5:30

Dear Friends:

//ஆர்ட் பேப்பர்'ல் வரும் நம் புத்தகங்கள் இரவில் படிக்கும்போது விளக்கு வெளிச்சத்தைப் பிரதிபலிப்பதாகவும், அதனால் படிக்கும்போது சற்று எரிச்சலடைவதாகவும் 'மிகச் சில' புகார்கள் வந்தன//

நண்பர்களே எதில் தான் குறையில்லை ?

லக்ஸரி கார் ஓட்டினால் பெட்ரோல் அதிகமாக செலவாகிறது, 
அதற்காக ஓட்டை கார் ஓட்டினால் ஓசோனில் ஓட்டையாகிறது !

தரம் அதிகம் எதிர்பார்த்தால் நம் பாக்கெட் ஓட்டையாகிறது,
அதற்காக நாம் தராதரம் எதிர்பார்க்கா விட்டால் நம் ரசனைக்கு வேட்டாகிறது !

ஒன்றிருந்தால் ஒன்றில்லை, அதற்காக ஒன்றிற்காக ஒன்றை இழப்பதில் அர்த்தமில்லை !

தயவு செய்து தரத்தில் நாம் பின்னோக்கி பயணிக்க வேண்டாமே ! வேண்டுமானால் கருப்பு வெள்ளையில் மறுபதிப்பாக ; பெரிய லாபமற்ற விலை அடக்கத்தில் ; புத்தகக் கண்காட்சிகளில் சிறுவர்களுக்கென தயாரிக்கப் படும் சிறிய புத்தகங்களுக்கு என் ஆதரவை தெரிவித்து கொள்கிறேன். ஆனால் அதற்காக எமது தற்போதைய தரத்தை இழந்து விடக்கூடும் எந்தவொரு எதிர்மறை கருத்தையும் பதிவிடும் முன்பு நம் நண்பர்கள், தயவு செய்து ஒரு நிமிடம் யோசிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன் !


10.Vijayan17 August 2013 17:03:00 GMT+5:30

கிருஷ்ணா வ வெ :// ஆர்ட் பேப்பர் சம்பந்தமாக எனக்கும் ஒரு சந்தேகம். நாம் ஏன் சினிபூக் புத்தகங்களில் வருவது போல சற்றே கெட்டியான மற்றும் பளீர் வெள்ளை நிற பக்கங்களை உபயோகிக்க கூடாது.//

ஆர்ட் பேப்பரின் வண்ண மிளிர்வு (gloss) இதர வகைக் காகிதங்களில் சாத்தியமில்லை ! நாமும் சினிபுக் பயன்படுத்தும் ரகத்திலான நார்மல் பேபரை உபயோகிக்கும் பட்சத்தில் - தற்சமயமுள்ள அச்சுத் தரத்தின் 70% தான் கிட்டும் !


11.Vijayan17 August 2013 17:28:00 GMT+5:30

Balasubramanian S : சின்னதாய் ஒரு சங்கதி !

கறுப்பு-வெள்ளை இதழ்களும் ; குறைந்த விலைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை என்ற காலம் மலை ஏறி சுமார் 6 மாதங்கள் ஆகி விட்டன ! இந்தாண்டின் பள்ளிப் பாடப் புத்தகங்கள் ; நோட்புக் சீசனின் போது தமிழக காகித உற்பத்தியாளர்கள் அனைவரும் செய்த விலையேற்றம் வரலாறு (பூகோளம் ; சயின்ஸ் ) பார்த்திராத ரகம் !

ஆகையால் black & white இதழ்களில் குண்டு புக்ஸ் ; b&w-ல் சிறுவர்களுக்கு சொற்ப விலை editions இத்யாதியெல்லாம் கனவுலகச் சாத்தியங்கள் மாத்திரமே ! மீண்டும் நியூஸ்பிரிண்ட் காகிதத்தை நாடிச் சென்றால் மட்டுமே மலிவு விலைகளைப் பற்றிய திட்டங்கள் நிஜமாகிட முடியும் ; ஆனால் திரும்பவும் அந்தப் புராதனக் காலங்களுக்கு சாலை அமைக்க நான் தயாரில்லை !


12.Vijayan17 August 2013 17:44:00 GMT+5:30

ஆதி தாமிரா : //மலிவு விலை பதிப்பு என்ற பெயரில் மீண்டும் சாணித்தாள், பி&ஒ என்று நிலை இறக்கம் கொள்வது சரியாகுமா தெரியவில்லை. அந்த பாணி, இக்காலத்தில் சரிவராது என்பதால்தானே, நாம் நவீனத்துக்கு மாறியிருக்கிறோம்.//

திரும்பவும் கற்காலத்தை நோக்கி நடை போடும் எண்ணம் சத்தியமாகக் கிடையாது !


13.Vijayan17 August 2013 17:59:00 GMT+5:30

Sathya : //maybe he will investigate and resolve the issue by changing to better art paper...//

இதில் துப்பறியும் ஸ்டீல்பாடியாருக்கு வேலைகள் நிச்சயமாய்க் கிடையாது நண்பரே ! ஆர்ட் பேப்பரின் தரம் கூடக் கூட அதன் மேலுள்ள glossy coating கூடுதலாகிக் கொண்டே செல்லும் ! அந்த gloss கூடக் கூட ஒளியை பிரதிபலிக்கும் தன்மையும் கூடிக் கொண்டே போகும். Glare அடிப்பது போல் தோன்றுவதன் காரணம் இது தான் ! இந்த சிக்கல் தவிர்க்கப்பட வேண்டுமெனில் காகிதத் தரத்தில் கீழ் நோக்கிச் செல்லல் அவசியம் !14.Vijayan17 August 2013 18:08:00 GMT+5:30

காமிக்ஸ் ரசிகன் (எ) புதுவை செந்தில் : ஆர்ட் பேப்பருக்கு டாடா காட்டி விட்டு normal paper -க்கு குதிப்பதில் எங்களுக்கு நிறைய சிரமங்கள் மிச்சம் ! (ஆர்ட் பேப்பரின் அச்சுப் பணிகள் கம்பி மேல் நடக்கும் சமாச்சாரம் ; நார்மல் பேப்பர் தலைவலிகளே இல்லா சங்கதி !)

ஆனால் ஆர்ட் பேப்பரில் பார்த்துப் பழகியான பின்னே - நார்மல் காகிதத்தில் வண்ண அச்சு நிச்சயமாய் 'ஞே' என்ற முழியோடு தான் நின்றிடும் ! நிச்சயமாய் அதில் திருப்தி கிட்டாது !

glare தேவலையா .."ஞே" தேவலையா ? என்ற கேள்விக்கு விடை வைத்திருக்கும் சாலமன் பாப்பையா எங்கு உள்ளாரோ ?

லாஸ்ட்லைன் : தரம் என்றும்  நிரந்தரம் ! 

Saturday, 9 November 2013

Landmark !

ஒரு காமிக்ஸில் என் குடியிருப்பு 
அதன் மொழிபெயர்ப்பு என் துணையிருப்பு !
காமிக்ஸ் ஓவியத்தில் என் உயிர்த்துடிப்பு 
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு !
முத்து காமிக்ஸின் இளைய மகன் 
லயன் காமிக்ஸின் பெரும் தலைவன் !
பாமர ஜாதியில் தனி மனிதன் 
நான் படைப்பதனாலே என் பெயர் இறைவன் !
காமிக்ஸ் வாசகர்களை ஆட்டி வைப்பேன் 
அவர் துவண்டு விட்டால் அதை எழுதி வைப்பேன் !
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை 
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை !
ஒரு காமிக்ஸில் என் குடியிருப்பு 
அதன் மொழிபெயர்ப்பு என் துணையிருப்பு !
காமிக்ஸ் ஓவியத்தில் என் உயிர்த்துடிப்பு 
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு !

இதன் ஒரிஜினல் பாடல் இரத்தத் திலகம் படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதி, பாடி, நடித்தது ! இருந்தாலும், தற்போதைய காலக்கட்டத்தில், இந்தப் பதிவை படிக்கும் அனைத்து வாசக பெருமக்களுக்கும், இதன் ஒரிஜினல் பாடலை கேட்டவுடன் நினைவுக்கு வருபவர் நம் எடிட்டர் விஜயனாக மட்டுமே இருக்க முடியும் !  

ஏனிப்படி எழுதுகிறேன் என்றால், முத்து காமிக்ஸ் - 40 வருட  பாரம்பரியம் ; லயன் காமிக்ஸ்-30 வருட வெற்றி கொண்டாட்டம் ; உயர்தர ஆர்ட் பேப்பர் ; வெளிநாட்டு மை ; வண்ண முழுபதிப்பு ; பெரிய அளவிலான புத்தகம் ; உடனடி சமகால வெளியீடுகள் (XIII)  ; க்ரீன் மேனர் ; கிராபிக் நாவல் ; ப்ளூ கோட்ஸ் ; லார்கோ வின்ச் ; வேய்ன் ஷெல்டன்  என்று ஏற்கனவே 2013ல் தொட்டு விட்ட உச்சங்கள் என, இவை எல்லாவற்றையும் பொன்னெழுத்துகளால் பதிவு செய்து கொள்ள நாளைய சரித்திரம் தயாராகவே உள்ளது !

தயாராக உள்ள சரித்திரம், இவைகளை  தன்னகத்தே பதிந்துக்கொள்ள  இன்னும் என்ன தயக்கம் என்று வரலாற்று வல்லுனர்களான நம் முத்து காமிக்ஸ் வாசகர்கள் கேள்வி கேட்க நினைப்பது,  உங்களுக்கு புரியா விட்டாலும் எனக்கு நன்றாகவே புரிகிறது. அதற்கான முக்கிய தடைகளாக சரித்திர பேராசிரியர்கள் கருதுவது, பின்வரும் மூன்றே மூன்று காரணங்களைத் தான் !
 • பணிவு பணிவு என்ற நினைப்பில் ஆசிரியர் விஜயன் நாணலென அடிக்கடி வளைந்து கொடுப்பது, சிலசமயம்  எங்கு வாசகர்களுக்கான பதில் அவசியமாகிறதோ அங்கு வரட்டுக்  கௌரவம் பார்த்து, ஆலமரமாய் அசைந்து கொடுக்காமல் நிற்பது !
 • பொதுவுடைமை பொதுவுடைமை என்று பேசி, அது தரும் காலத்துக்கு உதவாத சிந்தனையை நம்பி, திறமை வாய்ந்த சிறந்த வியாபாரியாக மாறாமல் இருக்க நினைப்பது ! (சுண்டைக்காய் கால் பணம் சுமைக்கூலி முக்கால் பணம்)
 • ஏதோ ஒரு சினிமாவில் வடிவேல் கூறுவது போல், என்ன இது சின்னப்பிள்ளைத் தனமால்ல இருக்கு என்பதைப் போல்  சில நேரம் எடிட்டர் விஜயனின் பதில்கள் அமைவது. அதற்கு ஒரு சிறு உதாரணம் :- 
பக்கத்து சீட்டில் இருந்தவரோ பருமனான லேடி !
நிச்சயம் அவருக்கு இல்லை தாடி..!
திரும்பிய போது இருந்ததோ குட்டிப் பாப்பா...!
ஆந்தை விழிகளைப் பார்த்துச் சிரித்ததே டாப்பா !

[ இதற்கு விஜய் நடித்த தலைவா படம் எவ்வளவோ மேல் ;) ]

மேற்கூறிய இந்த மூன்று மனபாங்கு எவ்விதத்தில் ஒரு சாதனையாளனுக்கு தடையாக இருக்குமென்பதை, வாசகர்களே உங்கள் கருத்துகளின் மூலம் அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன் !
1.மர மண்டை25 December 2012 10:25:00 GMT+5:30

வலைரோஜாவில் முதல் அடியை எடுத்து வைத்து வெற்றி கோட்டை தாண்டிவிட்டீர்கள் ; வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறோம் ! அடுத்த வருடத்தை இது போல் வெற்றியோடு துவங்கும் நீங்கள், எங்களையும் உடன் அழைத்து செல்வீர்கள் என்று சந்தோஷமாக நம்பிக் கொண்டிருக்கிறோம். கனவுகள் கலைக்கப்படாவிட்டால் இங்கே கற்பனைகள் கூட நிஜமாகும் !2.மர மண்டை25 December 2012 14:21:00 GMT+5:30

இளைப்பாறியது இங்கு சில நாட்களே என்றாலும், என்றுமே இனிய நினைவிது ; காமிக்ஸ் எனும் தமிழ் சரித்திரத்தில் அழியாத புகழிது ! மழை விழுகின்ற இடம் பொறுத்தே ஆறு இனிப்பாகிறது ; கடல் உப்பாகிறது ; குட்டை சேறாகிறது ; கங்கை கலசமாகிறது ! ஆறு நெளிந்து செல்கிறது என்று நடுநிலை கொண்டால் கடல் நீர் எல்லாம் குடிநீராகி விடுமா என்ன? எனவே நமக்கு நாம் தான் சாட்சி ; அதுவே அனைவரின் மனசாட்சி ! வெற்றிகள் தொடரட்டும் ; காமிக்ஸ் வேட்கை கொண்ட உள்ளங்கள் என்றுமே இங்கு துணை இருக்கட்டும் ! இன்று இமயத்தை தொட்டுவிட்டோம் ; இனி எவரெஸ்ட்/யும் எட்டிப் பிடிப்போம் !3.மர மண்டை25 December 2012 17:07:00 GMT+5:30 

பாலோடு கலந்த நீர் பாலாகிறது ; கடலோடு கலந்த நீர் கடலாகிறது ! உழவுக்கு இறைத்த நீர் விழலுக்கும் பாய்கிறது ; தலை உயர்த்தி விண் நோக்குவதால் பதர்கள் பக்குவம் அடைந்து விடுவதில்லை ; தலை குனிந்து நிலம் பார்ப்பதால் முற்றிய கதிர்கள் பயனற்றுப் போவதில்லை ! நாங்கள் இங்கே பாலோடு கலந்த நீரானோம் ; அதனாலேயே அது போல் சுவை கொண்டோம் ; எனினும் இயற்கையில் நாங்கள் இங்கு நீர் தானே? காமிக்ஸ் தாகம் தணிக்க வந்த வானம்பாடிகள் நாங்கள் ; எங்களுக்கு பருகத்தெரியும் ; பாடத்தெரியும் ; இசைக்கத்தெரியும் ; ஆனால் இயற்றத் தெரிந்தாலும் மொழிபெயர்ப்பை தங்கள் மூவர் அணி மட்டுமே செய்யவேண்டும் ! இதுவே சிறந்தது ! இதுவே உயர்ந்தது ! இதுவே வரும் காலத்தில் குழப்பமற்றது ! இதுவே தம் உயர் நிலை என்றும் இறங்கா நிலை கொண்டது !

4.மர மண்டை3 January 2013 10:07:00 GMT+5:30

ஒரு உரத்த சிந்தனை !

இது நம்மால் உருவாக்கப்பட்ட Brand ! இது நம் மொழிபெயர்ப்பால் 40 வருட காலமாய் முத்திரை பதித்து வருவது ! இன்று ஆலமரமாய் விழுதுகளும் பலம் கொள்ள ஆரம்பித்து விட்டது !

வென்றவர் பின் தங்கியவர்களிடம் வெற்றியை பகிர்ந்து கொண்டால்
Lightning Bolt (எ) Usain Boltஐ யாரென்று இன்று யாருக்குமே தெரிந்திருக்காது !

Landmark, Higginbotham's போன்ற High-profile bookstoreல் Display சூடு பிடித்து விட்டால், விற்பனை எண்ணிலடங்காது ; பிரிண்டிங் கணக்கிலடங்காது ! நாம் வெல்வது நிச்சயம் என்று, நம் விதியால் நிர்ணயிக்கப்பட்டு விட்டால் வால்மார்ட் கூட நம்மிடம் வாங்க முன்பணமாய் முழுப்பணமும் செலுத்திவிட்டு பொறுமையாக காத்திருக்கும் !
5.மர மண்டை16 January 2013 17:42:00 GMT+5:30

அடுத்த ஸ்பெஷல் வெளியீடு !

NBSன் மிகப்பெரிய வெற்றியை நான் சொல்லித்தான் ஆசிரியர் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை ! ஆனால் ஒரே ஒரு விஷயம் மட்டும் ஆசிரியரின் பார்வைக்கு, இந்த வலைதளத்தில் பதிவிடும் மற்றும் பார்வை மட்டும் இடும் நம் மிகச்சிறிய அளவிலான வலைதள வாசகர்கள் மட்டுமே வாங்கிய NBS வெளியீடு நிச்சயம் 700-1000த்தை தொட்டிருக்கும் என்பது என் கணிப்பு ! அப்படி என்றால் வரும் காலமெல்லாம் நம் வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகவே கருதவேண்டும் அல்லவா? இதுபோல் 400+ பக்கங்கள் கொண்ட 'லயன் வயது முப்பது' ஸ்பெஷல் வெளியிடுவதற்கு பதிலாக..

ஒரு Full set collection முழு வண்ணத்தில் வெளியிடலாம் ; அதாவது,

1. XIII இரத்தப்படலம் - இரண்டிரண்டு கதைகளாக 10 புத்தகங்கள் ! அல்லது
2. டைகர் 10 புத்தகங்கள் 115 பக்கங்களில் ! அல்லது
3. லார்கோ வின்ச் இரண்டிரண்டு கதைகளாக 10 புத்தகங்கள் ! அல்லது
4. வேய்ன் ஷெல்டன் இரண்டிரண்டு கதைகளாக 10 புத்தகங்கள் ! அல்லது
5. 5+5+5 = லார்கோ + வேய்ன் + டைகர் ! அல்லது
6. கிராபிக் நாவல் இரண்டிரண்டு கதைகளாக 10 புத்தகங்கள் ! அல்லது
7. இதுபோல் சில..

ஏனெனில்..?6.மர மண்டை16 January 2013 17:55:00 GMT+5:30

லயன் வயது முப்பது ஸ்பெஷல் !

400+ பக்க புத்தகமாக வெளியிடும்போது..

1. பிடித்து படிக்கும் போது கை வலிக்கிறது !
2. தொடர்கள் பின்தங்கி விடுகின்றன !
3. படிக்கும் பொழுது கிழியாமல் இருக்க கவனம் சிதறுகிறது !
4. Full set 10 புத்தகங்கள் அழகாக இருக்கும் !
5. படிக்க ; பாதுகாக்க ; தொடர்கதைகளை தவிர்த்திட எளிமையானது !
6. தங்களுக்கு ஒவ்வொன்றாக தயாரித்து மொத்தமாக வெளியிட ஏதுவானது !
7. ஏதாவது ஒரு புதுமை வேண்டும் தானே ?!

நன்றி ! வணக்கம் !7.கைநாட்டு கத்துகுட்டி8 February 2013 03:32:00 GMT+5:30

//*கொஞ்சமாய் இதழ்களை வாங்கிடும் நம் விற்பனையாளர்கள் கூட இப்போதெல்லாம் ரொம்பவே hi -tech ஆகி விட்டார்கள் ! வண்ண இதழ்கள் - ரூ.100 என்ற பார்முலா செட் ஆகி விட்டது ; தயவு செய்து மாற்றாதீர்கள் ! என்பது அவர்களது feedback*//

என்னுடைய ஆசையும் அதுவே ! 
தயவு செய்து மாற்றி விடாதீர்கள் !


கைநாட்டு கத்துகுட்டி : அருப்புக்கோட்டை போன்ற மித அளவு நகர ஏஜென்ட் NBS -ல் 40 பிரதிகள் வாங்கிட்டார் என்பதே highlight !8.கைநாட்டு கத்துகுட்டி8 February 2013 10:43:00 GMT+5:30

NBS விலை 400 என்பதால் ஏஜென்ட்கள் குறைவான எண்ணிக்கையில் வாங்கியிருக்கலாம். அதுவே விலை 100 ஆகவும், முழு வண்ண இதழாகவும் இருக்கும் பட்சத்தில் அதிக எண்ணிக்கை நிச்சயமாக எதிர்பார்க்க கூடியதே ! 2013 அதுபோன்ற ஒரு சந்தோஷ அனுபவத்தை தங்களுக்கு நிச்சயமாக தந்திடும் ; Advance வாழ்த்துகள் ஸார் !9.மிஸ்டர் மரமண்டை9 June 2013 20:50:00 GMT+5:30 

ஆசிரியர் விஜயன் அவர்கள் :

பெங்களூரு, சென்னை ஆகிய இரண்டு பெருநகரங்களையும் இனி தவிர்த்து விட்டு, தமிழ்நாட்டின் ஏனைய ஊர்களில் நடைப்பெறக்கூடிய புத்தகக் கண்காட்சியில் நாம் எவருடனாவது ஸ்டால்/ஐப்  பகிர்ந்து கொண்டோ அல்லது அவர்களுக்கு ஏஜென்ட் கமிஷன் கொடுத்தோ, நம் புத்தககங்களையும், நம் பேனர்களையும் ஒரு பக்கமாக வைத்தால்,  நமக்கு மிகப்பெரிய விளம்பரமாக அமையும் அல்லவா ?

சுத்துபட்டி பதினெட்டு பட்டியிலும் விஷயம் தெரியா விட்டாலும், அந்நகரத்திலும்  அதைச் சுற்றியுள்ள சிறு ஊர்களில் இருக்கும் நம் பழைய வாசகர்களுக்கு நம் காமிக்ஸின் இரண்டாவது இன்னிங்க்ஸ் பற்றிய ஞானமும் ; புதிய வெளியீடுகளைப்  பற்றிய விவரமும் ; வாய்வழி பிரச்சாரமாகவாவது தெரியவரும் வாய்ப்பு இருக்கும் என்றே நினைக்கிறேன் !

அப்புறம் என்ன சார், காசு...பணம்...துட்டு...money..money, காசு...பணம்...துட்டு...money..money :)
10.மிஸ்டர் மரமண்டை24 June 2013 14:37:00 GMT+5:30

பதில்கள் முடிவதில்லை !

1.வரவு எட்டணா செலவு பத்தணா என்பதைப்  போல் வரவுக்கு மிஞ்சிய செலவினத்தை விளம்பரங்கள் நமக்கு ஏற்படுத்தும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த விளம்பரங்கள் மூலம் வரும் காலத்தில் வெகுவிரைவாக நம் சந்தா எண்ணம் 2000 எண்ணிக்கையை தாண்டி விடும் என்பதால் விளம்பரங்களை முழு மனதாக வரவேற்கிறேன்..!

2.சிறுவர்களுக்கான சிறப்பு இதழ் சாத்தியமில்லை என்ற தங்களின் உறுதியான முடிவை வரவேற்கிறேன். ஏனெனில் நாம் தற்போது நிற்பது 108 வது படியில் ! மீண்டும் இதுபோன்ற புது முயற்சி என்பது மேலிருந்து கீழிறங்கி மறுபடியும் முதல் படியிலிருந்து மேலே ஏறுவதை போன்றது..!

5.landmark உடன் நாம் முதலில் செய்துக் கொண்ட ஒப்பந்தம் கூட காரணமாக இருக்கலாம் அல்லவா..? எனவே அடுத்த முறை PAYMENT SETTLEMENT அதிகபட்சம்  60 நாட்களுக்குள் முடிந்து விடவேண்டும் எனவும், இல்லையெனில் தற்காலிகமாக SUPPLY நிறுத்திக் கொள்வது போன்ற ஒப்பந்த சரத்துகள் மிக நன்மை பயப்பதாக அமையும் அல்லவா..?

6.நமக்கு காலம் கனிந்து வரும்போது நாம் வளைத்தால் வலிய இரும்பும் நமக்கு வளைந்து கொடுக்கும் தானே..?


லாஸ்ட்லைன் : எடிட்டர் விஜயன் அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகில் சரித்திரம் படைக்க வேண்டும் என்பதே என் தீராத ஆசை ! 

Monday, 4 November 2013

விலையொன்றும் இல்லை !

வணக்கம் நண்பர்களே, நலம் நலமறிய ஆவல் ! உங்கள் அனைவருக்கும், நீங்கள் சந்தோஷமாக கொண்டாடிய இந்த வருட தீபாவளிக்கு மனமுவந்த வாழ்த்துகள் !

உங்கள் வீட்டில் உள்ள குட்டீஸ்கள், அதிகாலை எழுந்து கங்கா ஸ்நானம் செய்து, கலர் கலரான புத்தாடை உடுத்தி, விதவிதமான பலகாரங்களை சீரான இடைவெளியில் கொறித்துக் கொண்டு, வகைவகையான பட்டாசுகளை கொளுத்திப் போட்டு, அக்கம் பக்கம் உள்ள குட்டீஸ்களோடு    அட்டகாசமாக அதகளம் செய்திருப்பார்கள் !

உங்களில் பெரும்பாலானவர்கள், விடிகாலை   கங்கா ஸ்நானம் செய்தப்பின், நேராக மட்டன் கடைக்குச் சென்று, நெருக்கித் தள்ளிய க்யூவில் போராடி வெற்றிகரமாக, இரண்டு கிலோ முதல் மூன்று கிலோ வரை மட்டன் வாங்கி வந்து வீட்டில் கொடுத்து விட்டு,   தெருமுனைக்கு ஒரு ஹாய்யான நடைபயின்று, முதலில் தண்ணி அடிக்கலாமா அல்லது தம் அடிக்கலாமா என்று ஒரு சிகரெட்டை பிடித்துக் கொண்டே சீரிய சிந்தனை வயப்பட்டிருப்பீர்கள் :) ஆம் உண்மை தான் நண்பர்களே, அது ஒரு அழகிய பண்டிகை காலம் !   

அவரவர் தம் குடும்பத்தலைவி (உங்களுக்கும் அவர் தலைவி தான். நீங்கள் அனைவரும் தத்தம் மனைவியின் ஒவ்வொரு சொல்லுக்கும்  கட்டுப்பட்டு, அதன்படியே நடந்து, அவர்களை சந்தோஷப்படுத்தி, நாமும் வெளியில் சந்தோஷப்படுகிறோம் ! இதில் ஆண்களாகிய நாம் நமக்குள், கணவன்கள் பொறுமைசாலிகள் ; பக்குவமானவர்கள் ; பொறுப்பானவர்கள் ; என்ற இறுமாப்பு வேறு நமக்கு :)  நாங்கெல்லாம் அப்படி இல்லீங்க..ண்ணா என்று கூறுபவர்கள், எங்கே தைரியமிருந்தால் உங்கள் மனைவி உங்கள் வீட்டு குட்டீஸை கோபத்தில் அடிக்கும் போது   கொஞ்சம் தடுத்து தான் பாருங்களேன்.. அப்போ  தெரியும் சேதி) ;)

அவரவர் தம் குடும்பத்தலைவி, வீட்டில் உள்ள அனைவரும்  கங்கா ஸ்நானம் செய்தானப்பின் கடைசியாக அவரும் குளித்து, அரக்க பறக்க புத்தாடை உடுத்திக்கொண்டு, நல்லநேரத்தில் பகவானுக்கு படையல் போட்டு, குடும்பம் சுபிட்சமாக இருக்க கடவுளிடம் மனமுருக வேண்டி, அக்கம் பக்கம் வீட்டினருக்கு பலகாரங்களுடன் தன்  உண்மையான அன்பையும் கலந்து தட்டில் வைத்து கொடுத்துவிட்டு பரஸ்பரம் குசலம் விசாரித்து, அக்கடாவென டிவி முன்னால்  வந்து அமர்ந்திருப்பார். அமர்ந்தபின் அவருக்கு தீபாவளி மறந்து போயிருக்கும் ; தீபாவளியை கொண்டாடும் இந்த  உலகமும் மறந்து போயிருக்கும் ; ஆனால் அதற்கு பின்தான் உங்கள் எல்லோருக்கும் தீபாவளியே  களை கட்டியிருக்கும் :)

அடடா..  பதிவின் தலைப்பை விட்டு விட்டு எங்கோ போய்விட்டோமே.. இப்படி கலகலப்பாக, உள்ளமெங்கும் சந்தோஷமாக நீங்கள் கொண்டாடிய இந்தத் தீபாவளியின் குறைந்தபட்ச செலவு ரூபாய் பத்தாயிரமாவது இருக்கும். தீபாவளி கடந்து சென்று இரண்டு நாட்களான பின்னே, அது இன்று வெறும் நினைவுகள் மட்டுமே. ஆனால் அதுவும் நிரந்தரமானது அல்ல ! 

இந்நிலையில், காமிக்ஸ்  வாசகர்களாகிய நமக்கு மாதந்தோறும் தீபாவளி போன்ற கொண்டாட்டத்தை தந்து கொண்டிருப்பது நம் லயன் முத்து காமிக்ஸ் என்றால் அது மிகையல்ல ! அப்படிப்பட்ட நிரந்தர சந்தோஷத்திற்கான சந்தா தொகை எவ்வளவு என்று பார்த்தால் வெறும் 2300 மட்டுமே ! காமிக்ஸ் வாசகர்களே ஒரே ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள், உங்களுக்காக உங்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய சந்தோஷத்திற்கும், மன அமைதிக்கும், பின்னோக்கி செல்லும் உங்களின் காலப்பயணத்திற்கும், இழந்த உங்களின் இளமையை ; பால்யக்காலத்தை மீட்டெடுக்கவும், மாதமாதம் 200 செலவு செய்ய மாட்டீர்களா? இன்றைய நிலையில் வருடத்திற்கு 2300 என்பது பெரிய தொகையா? அதையும் பிரித்து பிரித்து அனுப்பிடும் வசதி நமக்கு எவ்வளவு வசதி? இந்தச் சிறிய தொகையின் மூலம் கிடைக்கும் காமிக்ஸால், காமிக்ஸ் வாசகர்களாகிய நமக்கு கிடைக்கும் சந்தோஷத்திற்கு ஈடு இணையேது நண்பர்களே ??


தீபாவளி மலர் 


1.மர மண்டை10 November 2012 11:44:00 GMT+5:30 

(என் முதல் கமெண்ட்) 

//*இது வரை இந்த ஆண்டில் வெளி வந்த இதழ்களிலேயே - அசாத்திய விறுவிறுப்போடு E -Bay -யிலும் சரி ; நமது முகவர்களிடமும் சரி, விற்பனை கண்டுள்ள இதழ் நம் சூ.ஹீ.சூ.ஸ்பெஷல் தான் !! குறிப்பாக இந்த இதழின் E -Bay விற்பனையின் வேகம் இது வரை நாங்கள் கண்டிராததொரு சங்கதி !!*

//*கிட்டத்தட்ட பத்து நாட்களாய் இங்கே பக்கம் பக்கமாய் அரங்கேறிய விவாதங்கள் எதற்கு உதவியுள்ளதோ இல்லியோ ; "தங்கக் கல்லறை" இதழின் online விற்பனைக்கு அசாத்தியமாய் உதவியுள்ளது ! தினமும் குவியும் E -Bay ஆர்டர்களே அதற்கு சாட்சி! தங்கக் கல்லறை இப்போது history ;*//

இதுதான் எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. கடந்த இரு இதழ்களின் அமோக விற்பனையால், இதுவரை தாங்கள் மனதளவில் பட்ட கஷ்ட நஷ்டங்கள் காணாமல் போகட்டும் ; இந்த தீபாவளி உங்களுக்கும், உங்கள் டீமிற்கும் ''தலை தீபாவளியாக'' மாறட்டும் ; நான் இந்தத் தீபாவளியை சந்தோஷமாக கொண்டாட இந்த ஒரு காரணம் மட்டுமே போதுமானது ; மிக மிக சந்தோஷமாக உள்ளது. வாழ்த்துகள்..!2.மர மண்டை10 November 2012 21:29:00 GMT+5:30

அனைவருக்கும் என் ''தீபாவளி நல்வாழ்த்துகள் ''

அசைவ பிரியர்களுக்கு மட்டும் : ஒரு கிலோ மட்டன் 440/- ஆனால் நாம் ஒரு கிலோ மட்டும் வாங்கப் போவதில்லை ; இன்னும் அதிகமாக 3,4,5 கிலோ என்று வாங்குவோம். ஏனென்றால் தீபாவளி வருடத்திற்கு ஒரு முறை மட்டும் தான் வருகிறது என்பதால்...!

சைவ பிரியர்களுக்கு : ஒரு கிலோ Pure ghee sweets - விலை தெரியவில்லை. [நான் சுத்த அசைவம்] ஆனால் நாம் ஒரு கிலோ மட்டும் வாங்கப் போவதில்லை ; இன்னும் அதிகமாக 3,4,5 கிலோ என்று வாங்குவோம். ஏனென்றால் தீபாவளி வருடத்திற்கு ஒரு முறை மட்டும் தான் வருகிறது என்பதால்...!

ஆனால் வருடத்திற்கு ஒரே ஒரு முறை வரும் Never Before ஸ்பெஷல் 400/- மட்டுமே ! என்ன செய்யலாம்? எப்படி செய்யலாம்? எதுவுமே செய்யா விட்டாலும் நம்மை குறை சொல்ல எவருமில்லை ; ஆனால் நாம் மட்டும் விலை அதிகம் என்று எப்படி குறை சொல்ல முடியும்..?3.மர மண்டை13 November 2012 13:34:00 GMT+5:30

ஆடம்பரம் அனாவசியம் ; ஆர்ப்பாட்டம் அநேக அபஸ்வரம் ; அவசியம் மட்டுமே ஆனந்த ஸ்வரம் - என்ற யதார்த்தம் எனக்கு தலைமேல் ஆகாயமாக சிறுவயதிலிருந்து தெள்ளத் தெளிவாக தெரிகின்ற ஒரே உண்மை !

அப்படி அனுபவப்பட்டு கொண்டாடிய இன்றைய தீபாவளிக்கு செலவு 13 ஆயிரம். இந்த காலை விடிந்ததும் தீபாவளி கொண்டாட்டம் ; இன்று மாலை முடிந்ததும் வழக்கமான தலைவலி திண்டாட்டம் ! இதுவரை இப்படி யோசித்ததில்லை ; ஆனால் Come Back ஸ்பெஷல் வாசித்ததிலிருந்து எப்படி எல்லாமோ காமிக்ஸ் யாசிக்கவைக்கிறது !

வாய்ப்பு மட்டும் இருந்திருந்தால், அந்த XIII இல்லையில்லை, இந்த XIII ஆயிரத்திற்கு உலகத் தரமான லயன் முத்து காமிக்ஸ் ரூபாய் 1OO விலையில் 130 புத்தகங்களை வாங்கி சரவெடியாக ; இல்லையில்லை, படித்து முடியாமல் வைத்து மீண்டும் படித்து, முடிப்பதற்குள் அடுத்த தீபாவளி வந்து... அட போங்க நண்பர்களே, உண்ட மயக்கத்தில் இனிமையான கனவுகள் ஆர்ப்பரிக்கின்றன...!4.மர மண்டை27 December 2012 09:49:00 GMT+5:30 

Vijay "Father of the Pride&quot :

தங்களின் பதிவை படித்தவுடன் உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது ! எப்படி சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது, தங்களின் காமிக்ஸ் ஆர்வத்திற்கு வானமே எல்லை ! காமிக்ஸ் கடைக்கு செல்ல ஒரு லிட்டர் பெட்ரோல் 80 ரூபாய் விற்கும் இன்றைய நாளில், வீட்டிற்கே வரும் கூரியர் கட்டணம் ரூபாய் 20 மிகப்பெரிய விவாதப் பொருளாக பார்க்கப்படுகிறது ! இன்றைய விலைவாசியில், கூரியர் கட்டணம் ரூபாய் 20 மிகப்பெரிய விஷயமாக கருதப்படுவது ஏன் என்று எனக்கு இன்னுமும் ஆச்சரியமாகவே தோன்றுகிறது !

இரும்புக்கை எத்தன் வண்ண மறுபதிப்பு, அதன் இறுதிப்பாகம் இரண்டின் வண்ண முதல் பதிப்பு அறிவிப்பை படித்தவுடன் என்னுள் எழுந்த படப்படப்பு அடங்க சில மணி நேரம் ஆனது ! ஆனால் ஒன்று  தங்களின் காமிக்ஸ் ஆர்வத்திற்கு முன் என் காமிக்ஸ் ஆர்வம் எல்லாம் சிறிய விஷயமே !5.மர மண்டை18 January 2013 08:17:00 GMT+5:30 

Msakrates : 

நாம் மாதம் 100 ரூபாய் என்று இந்த ஜனவரி மாதம்  முதல் சேர்த்து, தனியாக வைத்தால்,

லயன் வயது முப்பது 
புத்தகங்கள் பத்து
கதைகள் இருபது 

என்ற ஸ்பெஷலை Full set ; Single pack ஆக வாங்கிவிடலாம் !
6.மர மண்டை11 March 2013 14:27:00 GMT+5:30 

பக்கங்களும் பகுத்தறியா பாய்ச்சல்களும் !

1.ASTERIX - சராசரி பக்கங்கள் 50. விலை Rs.425 !
2.TINTIN - சராசரி பக்கங்கள் 60-70. விலை Rs.430 !

கிட்டதட்ட 90 சதவிகிதம் மேற்கூறிய புத்தகங்களின் தரத்தில் உள்ள, 110 சதவிகிதம் வெரைட்டி கொண்ட நம் தற்போதைய முழு வண்ண காமிக்ஸ் புத்தகங்களின் விலை Rs.100. மட்டுமே ! ஆனால் அதற்கும் கூட சிங்கத்தின் சிறுவலையில் ; ஹாட்லைன் ; விளம்பரங்கள்  ஆகியவற்றுக்கு 8 பக்கங்கள் வீண் என்று ஓயாத குரல்கள் !

உண்மையை சொல்வதென்றால் 'துரத்தும் தலைவிதி' ஒவ்வொரு பக்கத்தை திருப்பும் போதும் இது நூறு ரூபாய்க்கு மிக அதிகம் என்றே என் மனசாட்சி ஓயாமல் ஓரத்தில் நின்று,  உண்மைக்கு ஆதரவாக குரல் கொடுத்தது !

சிறந்த வியாபாரியால் மட்டுமே தம் வாடிக்கையாளர்களின் அனைத்து தேவைகளையும், ஆசைகளையும் பூர்த்தி செய்ய முடியும்...!
7.மர மண்டை11 March 2013 19:54:00 GMT+5:30

//*சிறந்த வியாபாரியால் மட்டுமே தம் வாடிக்கையாளர்களின் அனைத்து தேவைகளையும், ஆசைகளையும் பூர்த்தி செய்ய முடியும்...!*//

குழப்பத்தை தவிர்க்க இங்கு ஒரு சிறு விளக்கம். லாபம் அற்று அல்லது சிறு லாபம் கொண்டு செய்யும் தொழிலை பெரிய அளவில் விரிவாக்க முடியாது. தம் வாடிக்கையாளர்களின் தேவைகளையும், அவர்களின் எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்ய முடியாது ; அதிகமான கையிருப்புக்களையும் (Stock) கொண்டிருக்க முடியாது ! எனவே தொழில் என்று வந்து விட்டப்பின் 'அதற்கேற்ற' லாபம் அவசியமானது ! உதாரணமாக,

1.நாளுக்கு நாள் விலையேறும் பேப்பர் - இன்றைய விலையில் இரண்டு வருட கையிருப்பு நம்மிடம் இருந்தால் எப்படி இருக்கும்?

2.XIII வண்ண பதிப்புகள் இந்த வருடம் தயாரித்தால் Rs.100 - இரண்டுவருடம் கழித்து தயாரித்தால் Rs.200 அல்லது Rs.300 எது சிறந்தது?

3. குறைந்த லாபம் ; நிறைந்த தரம் - என்ற வியாபாரம் 'வால்மார்ட்'ஐத் தவிர, உலகில் வேறு எவருக்கும் இதுவரை மிகப் பெரிய வெற்றியை கொடுத்ததில்லை !

எனவே ஆசிரியர் அவர்கள் சிறந்த வியாபாரியாக மாறவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் ; அதற்காக இங்கே வேண்டுகோள் ஒன்றையும் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்..!லாஸ்ட்லைன் : இது ஒரு தமிழ் காமிக்ஸ் பொற்காலம்  !