Follow by Email

Monday, 4 November 2013

விலையொன்றும் இல்லை !

வணக்கம் நண்பர்களே, நலம் நலமறிய ஆவல் ! உங்கள் அனைவருக்கும், நீங்கள் சந்தோஷமாக கொண்டாடிய இந்த வருட தீபாவளிக்கு மனமுவந்த வாழ்த்துகள் !

உங்கள் வீட்டில் உள்ள குட்டீஸ்கள், அதிகாலை எழுந்து கங்கா ஸ்நானம் செய்து, கலர் கலரான புத்தாடை உடுத்தி, விதவிதமான பலகாரங்களை சீரான இடைவெளியில் கொறித்துக் கொண்டு, வகைவகையான பட்டாசுகளை கொளுத்திப் போட்டு, அக்கம் பக்கம் உள்ள குட்டீஸ்களோடு    அட்டகாசமாக அதகளம் செய்திருப்பார்கள் !

உங்களில் பெரும்பாலானவர்கள், விடிகாலை   கங்கா ஸ்நானம் செய்தப்பின், நேராக மட்டன் கடைக்குச் சென்று, நெருக்கித் தள்ளிய க்யூவில் போராடி வெற்றிகரமாக, இரண்டு கிலோ முதல் மூன்று கிலோ வரை மட்டன் வாங்கி வந்து வீட்டில் கொடுத்து விட்டு,   தெருமுனைக்கு ஒரு ஹாய்யான நடைபயின்று, முதலில் தண்ணி அடிக்கலாமா அல்லது தம் அடிக்கலாமா என்று ஒரு சிகரெட்டை பிடித்துக் கொண்டே சீரிய சிந்தனை வயப்பட்டிருப்பீர்கள் :) ஆம் உண்மை தான் நண்பர்களே, அது ஒரு அழகிய பண்டிகை காலம் !   

அவரவர் தம் குடும்பத்தலைவி (உங்களுக்கும் அவர் தலைவி தான். நீங்கள் அனைவரும் தத்தம் மனைவியின் ஒவ்வொரு சொல்லுக்கும்  கட்டுப்பட்டு, அதன்படியே நடந்து, அவர்களை சந்தோஷப்படுத்தி, நாமும் வெளியில் சந்தோஷப்படுகிறோம் ! இதில் ஆண்களாகிய நாம் நமக்குள், கணவன்கள் பொறுமைசாலிகள் ; பக்குவமானவர்கள் ; பொறுப்பானவர்கள் ; என்ற இறுமாப்பு வேறு நமக்கு :)  நாங்கெல்லாம் அப்படி இல்லீங்க..ண்ணா என்று கூறுபவர்கள், எங்கே தைரியமிருந்தால் உங்கள் மனைவி உங்கள் வீட்டு குட்டீஸை கோபத்தில் அடிக்கும் போது   கொஞ்சம் தடுத்து தான் பாருங்களேன்.. அப்போ  தெரியும் சேதி) ;)

அவரவர் தம் குடும்பத்தலைவி, வீட்டில் உள்ள அனைவரும்  கங்கா ஸ்நானம் செய்தானப்பின் கடைசியாக அவரும் குளித்து, அரக்க பறக்க புத்தாடை உடுத்திக்கொண்டு, நல்லநேரத்தில் பகவானுக்கு படையல் போட்டு, குடும்பம் சுபிட்சமாக இருக்க கடவுளிடம் மனமுருக வேண்டி, அக்கம் பக்கம் வீட்டினருக்கு பலகாரங்களுடன் தன்  உண்மையான அன்பையும் கலந்து தட்டில் வைத்து கொடுத்துவிட்டு பரஸ்பரம் குசலம் விசாரித்து, அக்கடாவென டிவி முன்னால்  வந்து அமர்ந்திருப்பார். அமர்ந்தபின் அவருக்கு தீபாவளி மறந்து போயிருக்கும் ; தீபாவளியை கொண்டாடும் இந்த  உலகமும் மறந்து போயிருக்கும் ; ஆனால் அதற்கு பின்தான் உங்கள் எல்லோருக்கும் தீபாவளியே  களை கட்டியிருக்கும் :)

அடடா..  பதிவின் தலைப்பை விட்டு விட்டு எங்கோ போய்விட்டோமே.. இப்படி கலகலப்பாக, உள்ளமெங்கும் சந்தோஷமாக நீங்கள் கொண்டாடிய இந்தத் தீபாவளியின் குறைந்தபட்ச செலவு ரூபாய் பத்தாயிரமாவது இருக்கும். தீபாவளி கடந்து சென்று இரண்டு நாட்களான பின்னே, அது இன்று வெறும் நினைவுகள் மட்டுமே. ஆனால் அதுவும் நிரந்தரமானது அல்ல ! 

இந்நிலையில், காமிக்ஸ்  வாசகர்களாகிய நமக்கு மாதந்தோறும் தீபாவளி போன்ற கொண்டாட்டத்தை தந்து கொண்டிருப்பது நம் லயன் முத்து காமிக்ஸ் என்றால் அது மிகையல்ல ! அப்படிப்பட்ட நிரந்தர சந்தோஷத்திற்கான சந்தா தொகை எவ்வளவு என்று பார்த்தால் வெறும் 2300 மட்டுமே ! காமிக்ஸ் வாசகர்களே ஒரே ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள், உங்களுக்காக உங்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய சந்தோஷத்திற்கும், மன அமைதிக்கும், பின்னோக்கி செல்லும் உங்களின் காலப்பயணத்திற்கும், இழந்த உங்களின் இளமையை ; பால்யக்காலத்தை மீட்டெடுக்கவும், மாதமாதம் 200 செலவு செய்ய மாட்டீர்களா? இன்றைய நிலையில் வருடத்திற்கு 2300 என்பது பெரிய தொகையா? அதையும் பிரித்து பிரித்து அனுப்பிடும் வசதி நமக்கு எவ்வளவு வசதி? இந்தச் சிறிய தொகையின் மூலம் கிடைக்கும் காமிக்ஸால், காமிக்ஸ் வாசகர்களாகிய நமக்கு கிடைக்கும் சந்தோஷத்திற்கு ஈடு இணையேது நண்பர்களே ??


தீபாவளி மலர் 


1.மர மண்டை10 November 2012 11:44:00 GMT+5:30 

(என் முதல் கமெண்ட்) 

//*இது வரை இந்த ஆண்டில் வெளி வந்த இதழ்களிலேயே - அசாத்திய விறுவிறுப்போடு E -Bay -யிலும் சரி ; நமது முகவர்களிடமும் சரி, விற்பனை கண்டுள்ள இதழ் நம் சூ.ஹீ.சூ.ஸ்பெஷல் தான் !! குறிப்பாக இந்த இதழின் E -Bay விற்பனையின் வேகம் இது வரை நாங்கள் கண்டிராததொரு சங்கதி !!*

//*கிட்டத்தட்ட பத்து நாட்களாய் இங்கே பக்கம் பக்கமாய் அரங்கேறிய விவாதங்கள் எதற்கு உதவியுள்ளதோ இல்லியோ ; "தங்கக் கல்லறை" இதழின் online விற்பனைக்கு அசாத்தியமாய் உதவியுள்ளது ! தினமும் குவியும் E -Bay ஆர்டர்களே அதற்கு சாட்சி! தங்கக் கல்லறை இப்போது history ;*//

இதுதான் எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. கடந்த இரு இதழ்களின் அமோக விற்பனையால், இதுவரை தாங்கள் மனதளவில் பட்ட கஷ்ட நஷ்டங்கள் காணாமல் போகட்டும் ; இந்த தீபாவளி உங்களுக்கும், உங்கள் டீமிற்கும் ''தலை தீபாவளியாக'' மாறட்டும் ; நான் இந்தத் தீபாவளியை சந்தோஷமாக கொண்டாட இந்த ஒரு காரணம் மட்டுமே போதுமானது ; மிக மிக சந்தோஷமாக உள்ளது. வாழ்த்துகள்..!2.மர மண்டை10 November 2012 21:29:00 GMT+5:30

அனைவருக்கும் என் ''தீபாவளி நல்வாழ்த்துகள் ''

அசைவ பிரியர்களுக்கு மட்டும் : ஒரு கிலோ மட்டன் 440/- ஆனால் நாம் ஒரு கிலோ மட்டும் வாங்கப் போவதில்லை ; இன்னும் அதிகமாக 3,4,5 கிலோ என்று வாங்குவோம். ஏனென்றால் தீபாவளி வருடத்திற்கு ஒரு முறை மட்டும் தான் வருகிறது என்பதால்...!

சைவ பிரியர்களுக்கு : ஒரு கிலோ Pure ghee sweets - விலை தெரியவில்லை. [நான் சுத்த அசைவம்] ஆனால் நாம் ஒரு கிலோ மட்டும் வாங்கப் போவதில்லை ; இன்னும் அதிகமாக 3,4,5 கிலோ என்று வாங்குவோம். ஏனென்றால் தீபாவளி வருடத்திற்கு ஒரு முறை மட்டும் தான் வருகிறது என்பதால்...!

ஆனால் வருடத்திற்கு ஒரே ஒரு முறை வரும் Never Before ஸ்பெஷல் 400/- மட்டுமே ! என்ன செய்யலாம்? எப்படி செய்யலாம்? எதுவுமே செய்யா விட்டாலும் நம்மை குறை சொல்ல எவருமில்லை ; ஆனால் நாம் மட்டும் விலை அதிகம் என்று எப்படி குறை சொல்ல முடியும்..?3.மர மண்டை13 November 2012 13:34:00 GMT+5:30

ஆடம்பரம் அனாவசியம் ; ஆர்ப்பாட்டம் அநேக அபஸ்வரம் ; அவசியம் மட்டுமே ஆனந்த ஸ்வரம் - என்ற யதார்த்தம் எனக்கு தலைமேல் ஆகாயமாக சிறுவயதிலிருந்து தெள்ளத் தெளிவாக தெரிகின்ற ஒரே உண்மை !

அப்படி அனுபவப்பட்டு கொண்டாடிய இன்றைய தீபாவளிக்கு செலவு 13 ஆயிரம். இந்த காலை விடிந்ததும் தீபாவளி கொண்டாட்டம் ; இன்று மாலை முடிந்ததும் வழக்கமான தலைவலி திண்டாட்டம் ! இதுவரை இப்படி யோசித்ததில்லை ; ஆனால் Come Back ஸ்பெஷல் வாசித்ததிலிருந்து எப்படி எல்லாமோ காமிக்ஸ் யாசிக்கவைக்கிறது !

வாய்ப்பு மட்டும் இருந்திருந்தால், அந்த XIII இல்லையில்லை, இந்த XIII ஆயிரத்திற்கு உலகத் தரமான லயன் முத்து காமிக்ஸ் ரூபாய் 1OO விலையில் 130 புத்தகங்களை வாங்கி சரவெடியாக ; இல்லையில்லை, படித்து முடியாமல் வைத்து மீண்டும் படித்து, முடிப்பதற்குள் அடுத்த தீபாவளி வந்து... அட போங்க நண்பர்களே, உண்ட மயக்கத்தில் இனிமையான கனவுகள் ஆர்ப்பரிக்கின்றன...!4.மர மண்டை27 December 2012 09:49:00 GMT+5:30 

Vijay "Father of the Pride&quot :

தங்களின் பதிவை படித்தவுடன் உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது ! எப்படி சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது, தங்களின் காமிக்ஸ் ஆர்வத்திற்கு வானமே எல்லை ! காமிக்ஸ் கடைக்கு செல்ல ஒரு லிட்டர் பெட்ரோல் 80 ரூபாய் விற்கும் இன்றைய நாளில், வீட்டிற்கே வரும் கூரியர் கட்டணம் ரூபாய் 20 மிகப்பெரிய விவாதப் பொருளாக பார்க்கப்படுகிறது ! இன்றைய விலைவாசியில், கூரியர் கட்டணம் ரூபாய் 20 மிகப்பெரிய விஷயமாக கருதப்படுவது ஏன் என்று எனக்கு இன்னுமும் ஆச்சரியமாகவே தோன்றுகிறது !

இரும்புக்கை எத்தன் வண்ண மறுபதிப்பு, அதன் இறுதிப்பாகம் இரண்டின் வண்ண முதல் பதிப்பு அறிவிப்பை படித்தவுடன் என்னுள் எழுந்த படப்படப்பு அடங்க சில மணி நேரம் ஆனது ! ஆனால் ஒன்று  தங்களின் காமிக்ஸ் ஆர்வத்திற்கு முன் என் காமிக்ஸ் ஆர்வம் எல்லாம் சிறிய விஷயமே !5.மர மண்டை18 January 2013 08:17:00 GMT+5:30 

Msakrates : 

நாம் மாதம் 100 ரூபாய் என்று இந்த ஜனவரி மாதம்  முதல் சேர்த்து, தனியாக வைத்தால்,

லயன் வயது முப்பது 
புத்தகங்கள் பத்து
கதைகள் இருபது 

என்ற ஸ்பெஷலை Full set ; Single pack ஆக வாங்கிவிடலாம் !
6.மர மண்டை11 March 2013 14:27:00 GMT+5:30 

பக்கங்களும் பகுத்தறியா பாய்ச்சல்களும் !

1.ASTERIX - சராசரி பக்கங்கள் 50. விலை Rs.425 !
2.TINTIN - சராசரி பக்கங்கள் 60-70. விலை Rs.430 !

கிட்டதட்ட 90 சதவிகிதம் மேற்கூறிய புத்தகங்களின் தரத்தில் உள்ள, 110 சதவிகிதம் வெரைட்டி கொண்ட நம் தற்போதைய முழு வண்ண காமிக்ஸ் புத்தகங்களின் விலை Rs.100. மட்டுமே ! ஆனால் அதற்கும் கூட சிங்கத்தின் சிறுவலையில் ; ஹாட்லைன் ; விளம்பரங்கள்  ஆகியவற்றுக்கு 8 பக்கங்கள் வீண் என்று ஓயாத குரல்கள் !

உண்மையை சொல்வதென்றால் 'துரத்தும் தலைவிதி' ஒவ்வொரு பக்கத்தை திருப்பும் போதும் இது நூறு ரூபாய்க்கு மிக அதிகம் என்றே என் மனசாட்சி ஓயாமல் ஓரத்தில் நின்று,  உண்மைக்கு ஆதரவாக குரல் கொடுத்தது !

சிறந்த வியாபாரியால் மட்டுமே தம் வாடிக்கையாளர்களின் அனைத்து தேவைகளையும், ஆசைகளையும் பூர்த்தி செய்ய முடியும்...!
7.மர மண்டை11 March 2013 19:54:00 GMT+5:30

//*சிறந்த வியாபாரியால் மட்டுமே தம் வாடிக்கையாளர்களின் அனைத்து தேவைகளையும், ஆசைகளையும் பூர்த்தி செய்ய முடியும்...!*//

குழப்பத்தை தவிர்க்க இங்கு ஒரு சிறு விளக்கம். லாபம் அற்று அல்லது சிறு லாபம் கொண்டு செய்யும் தொழிலை பெரிய அளவில் விரிவாக்க முடியாது. தம் வாடிக்கையாளர்களின் தேவைகளையும், அவர்களின் எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்ய முடியாது ; அதிகமான கையிருப்புக்களையும் (Stock) கொண்டிருக்க முடியாது ! எனவே தொழில் என்று வந்து விட்டப்பின் 'அதற்கேற்ற' லாபம் அவசியமானது ! உதாரணமாக,

1.நாளுக்கு நாள் விலையேறும் பேப்பர் - இன்றைய விலையில் இரண்டு வருட கையிருப்பு நம்மிடம் இருந்தால் எப்படி இருக்கும்?

2.XIII வண்ண பதிப்புகள் இந்த வருடம் தயாரித்தால் Rs.100 - இரண்டுவருடம் கழித்து தயாரித்தால் Rs.200 அல்லது Rs.300 எது சிறந்தது?

3. குறைந்த லாபம் ; நிறைந்த தரம் - என்ற வியாபாரம் 'வால்மார்ட்'ஐத் தவிர, உலகில் வேறு எவருக்கும் இதுவரை மிகப் பெரிய வெற்றியை கொடுத்ததில்லை !

எனவே ஆசிரியர் அவர்கள் சிறந்த வியாபாரியாக மாறவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் ; அதற்காக இங்கே வேண்டுகோள் ஒன்றையும் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்..!லாஸ்ட்லைன் : இது ஒரு தமிழ் காமிக்ஸ் பொற்காலம்  !

4 comments:

 1. welcome back.

  why don't you write a review?

  ReplyDelete
  Replies
  1. நண்பரே, கூடிய விரைவில் அப்படித்தான் எழுத போகிறேன் ; அதற்கு முன் லயன் ப்ளாகில் நான் பதிவிட்ட பழைய பின்னூட்டங்களை இங்கு முழுமையாக ஒருங்கிணைத்து பதிவிட்டு விட்டால், இந்த வலைதளத்தின் நோக்கம் முழுமை அடைந்து விடும் ; இன்னும் மிகச் சில பதிவுகளே மீதம் உள்ளது ; அதன் பிறகு லயன் ப்ளாகில் மீண்டும் தொடர்ந்து பதிவிட ஆவல் !

   Delete
  2. // நோக்கம் முழுமை அடைந்து விடும் //

   நல்லவேளை, உங்களுக்கு எல்லாவற்றையும் கோயில் கல்வெட்டுக்களில் செதுக்கும் நோக்கம் உதயமாகவில்லை... :D

   // அதன் பிறகு லயன் ப்ளாகில் மீண்டும் தொடர்ந்து பதிவிட ஆவல் ! //

   மனதில் தோன்றும் அன்றாட எண்ணங்களைப் பகிர தனி நாளும், ஒத்திப்போடுதலும் தேவையில்லையே! சாதாரண Daily விஷயங்கள் சாதாரணமாகவே இருக்கட்டுமே பாஸ்.. எதற்கு இவ்வளவு Pre Plan-களும் ஏற்பாடுகளும்?! Of course, if you have no time at present, that's fine but having a big plan for every little thing is odd! :)

   Delete
  3. //உங்களுக்கு எல்லாவற்றையும் கோயில் கல்வெட்டுக்களில் செதுக்கும் நோக்கம் உதயமாகவில்லை//

   ஆ ! முன்பே இந்த யோசனை எனக்கு தோன்றாமல் போய்விட்டதே :D


   //Of course, if you have no time at present, that's fine//

   உண்மைதான் நண்பரே ! இன்னும் இந்த மாத இதழ்களை படிக்கவே எனக்கு நேரம் கிடைக்கவில்லை. மனதில் தோன்றும் அன்றாட எண்ணங்களைப் பகிர தனி நாளும், ஒத்திப்போடுதலும் தேவையில்லை என்பதை உங்களைப் போலவே நானும் நன்றாக அறிந்துள்ளேன் ; ஆனால் Sleeper cell வாசகர்கள் எந்த நேரத்தில் Encounter செய்வார்கள் என்பது தெரியாத நிலையில் ; இந்த வலைத்தளத்தின் நோக்கம் முழுமை அடையும் வரை நான் தாமதிப்பதே, என்னுடைய மதிப்பு மிக்க நேரத்திற்கு தற்போது நான் கொடுக்க கூடிய மரியாதையாகும் :)

   மேலும் விவரங்களுக்கு, பழைய லயன் பின்னூட்டங்களின் இறுதி பதிவாக வரவிருக்கும் தகாமுக (தமிழ் காமிக்ஸ் முன்னேற்ற கழகம்) பதிவை படிக்க தவறாதீர்கள் :)

   Delete