Follow by Email

Wednesday, 13 November 2013

ரசனைகளின் பயணம்...!

நண்பர்களே, வணக்கம் !

1.Vijayan19 March 2013 22:17:00 GMT+5:30

@ நண்பர்களுக்கு :

நிறைய சமயங்களில் நான் நிலைநாட்டிட விழைவது ஒரே ஒரு விஷயத்தினையே ! காமிக்ஸ் எனும் அழகானதொரு பொழுதுபோக்கை ராக்கட் சயின்ஸ் ரேஞ்சிற்கு அலசி ஆராய்வதில் கிட்டிடப் போகும் சுவையோ ; பலனோ தான் என்னவாக இருந்திட இயலும் ?

லார்கோவின் சமீபத்திய இதழினில் ஸ்கார்பாவின் வீட்டினில் உள்ள பணிப்பெண் தலைகாட்டும் sequence-ல் மொழிபெயர்ப்பில் வேறுபாடு நேர்ந்துவிட்டதாகவும் ; அதனை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் நம் நண்பர் ஒருவர் எனக்கு இன்று மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். ஸ்கார்பா ஒரு பெண்பித்தர் என்பதை நிலைநாட்ட வந்த கட்டத்தை நான் தவறாக மொழிபெயர்த்து விட்டதாகவும் ; அவசரத்தில் எழுதும் என் பாணியே இதற்குக் காரணமென்றும் நண்பர் இலங்கை பிரச்னை ரேஞ்சிற்கு எழுதி இருந்தார்.

எனது பிழைகள் என்னவாக இருப்பினும், 26 எழுத்துக்கள் கொண்ட பரங்கிகளின் அந்த மொழியில் எனது பரிச்சயம் நிச்சயம் இன்னமும் மங்கிடவில்லை என்பது எனக்குத் தெரியும். கதைக்கு அவசியப்படா விஷயங்களையும் கூட வரிக்கு வரி ஈயடிச்சான் காப்பி அடிப்பது தான் ஒரு மொழிபெயர்ப்பாளனின் கடமை ; நாசுக்காக திசை மாற்றிடும் பாணி ஒரு குற்றம் ; தவறு என்று பார்க்கப்படுமெனில் - அந்தக் "கொலைப் பாதகத்தை" காலமெல்லாம் நான் செய்திடத் தான் போகிறேன் ! இது ஆணவமானதொரு வாக்கியமாய்ப் பார்த்திடப்படலும் சாத்தியம் என்ற போதிலும், நிஜத்தை சொல்லிட ஒரு நாளும் நான் தயங்கப் போவதில்லை.

நண்பர் ரபிக் ராஜா மொழிபெயர்ப்பு உரிமைகள் குறித்து கேள்வியினை எழுப்பியது அவரது உரிமையே ; விற்பனைக்கு வந்திடும் எந்தப் பொருளுக்கும் விமர்சனங்கள் எழுவது இயல்பென்ற அவரது சிந்தையிலும் எனக்கு பூரண உடன்பாடே ! ஆனால் நண்பர் ராகவன் குறிப்பிட்டிருப்பது போல் ஒரு தொழிலின் பின்னணிகளை இது போன்றதொரு திறந்த களத்தில் நான் பகிரங்கப்படுத்திடப் பிரியப்படாத காரணத்தினாலேயே பதிலளிக்கவில்லை. அப்படியிருக்க cinebook -ன் ஜெராக்ஸ் தானே நாம் என்று ஒற்றை வரியினில் ஒரு தீர்ப்பினை வெளியில் எழுதுவது - ஜூரி இல்லாததொரு விசாரணைக்கு ஒத்ததாகாதா ?

எனது பிழைகளுக்கு முதல் விமர்சகன் நானே ; அவை கொணரக்கூடிய பரிகாசங்களோ; விமர்சனங்களோ என்னை ஒரு போதும் சலனப்படுத்திடப் போவதில்லை . ஆனால் எனது தொழிலையும், ஒழுக்கத்தையும் பரிகசிக்கும் எழுத்துக்களுக்கு நிச்சயம் நான் ரசிகனல்லவே ! இதுவும் கூட இந்தப் புது யுகத்தின் விமர்சனப் பாணியினொரு அங்கமெனின் - நான் ஒரு தலைமுறைக்கு முந்தையப் புராதனமாய் இருந்திடுவதில் துளியும் வருத்தம் கொண்டிடப் போவதில்லை.

உலகை வெற்றி காணும் ஒரு எடிட்டராகவோ ; மொழிபெயர்ப்பில் ஒரு சண்டியராகவோ என்னை நான் ஒரு நாளும் பார்த்திடுவதில்லை ; பார்க்கப்பட விழைவதுமில்லை ! நான் நேசிக்குமொரு கலையை, எனக்கிருக்கும் சக்திகளின் எல்லைக்குள் ஆராதிக்க முயன்றிடும் ஒரு சராசரி மனிதனே!

அந்த சக மனிதனுக்கான அனுசரணை எனக்கு நல்கப்பட்டாலே நிரம்ப பெருமிதப்படுவேன் ! Good night guys !

2.மர மண்டை19 March 2013 23:02:00 GMT+5:30

4.//*நிறைய சமயங்களில் நான் நிலைநாட்டிட விழைவது ஒரே ஒரு விஷயத்தினையே ! காமிக்ஸ் எனும் அழகானதொரு பொழுதுபோக்கை ராக்கட் சயின்ஸ் ரேஞ்சிற்கு அலசி ஆராய்வதில் கிட்டிடப் போகும் சுவையோ ; பலனோ தான் என்னவாக இருந்திட இயலும் ?* //

இது புரியாத வரை காமிக்ஸின் உன்னதமான சுவையை ; கற்பனைகளின் எல்லைகளை இவர்கள் கனவிலும் ரசிக்கவோ ; சுவைக்கவோ முடியாது ! கள்ளம் கபடமற்ற சந்தோஷத்தை காமிக்ஸ் மூலம் பெறுதல் என்பது என்றுமே கானல் நீர் தான் இவர்களுக்கு !

3.மர மண்டை20 March 2013 16:12:00 GMT+5:30

ரசனைகளின் பொது விவாதம் (1)

இந்த விவாதங்களில் இருந்து ஒதுங்கி இருக்கலாம் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் சில சீரிய சிந்தனைவாதிகளின் நடுநிலை கருத்துகள் எம்மில் பலரை திசை திருப்பிட சாத்தியமுள்ளதால், உள்ளே நுழைய அவசியம் ஏற்பட்டு விட்டது ! இந்தத் தலைப்பில் வரும் என்னுடைய பதிவுகள் அனைத்தும், ஆசிரியருக்கு ஆதரவாக பதிவிடும் நடுநிலையாளர்களுக்கு மட்டுமே. என் பதிவுகள் யாரையும் எங்கேயும் புண்படுத்தாது. அதே சமயம் யாருக்கும் புரியாமலும் இருக்காது !

இது மற்றவர்களின் சிந்தனைகளுக்கு சிறு தீப்பொறியாக அமைந்தால் அதுவே இந்தப் பதிவின் பிறவிப் பயனாகும். அங்ஙனம் அமையாவிட்டாலும் இந்தப் பதிவு ஒரு சிறந்த பிறவி பயனைக் கொண்டதாகும் !

4.மர மண்டை20 March 2013 16:53:00 GMT+5:30

ரசனைகளின் பொது விவாதம் (2)

ஆசிரியர் விஜயனை அல்லது லயன் முத்து காமிக்ஸை விமர்சிப்பவர்கள், மொழிபெயர்ப்பு அல்லது பிரிண்டிங் தரம் பற்றி CONSTRUCTIVE கமெண்ட் இடுபவர்கள், வாடிக்கையாளர் உரிமை அல்லது வாசகனின் உரிமை பற்றி ஓயாமல் கூப்பாடு போடுபவர்கள் - இங்கு அடிக்கடி சொல்லும் காரணங்கள் :

1. குடும்பத்தில் ஒருவர் !
2. வளர்ச்சியின் மேல் அதீத அக்கறை !
3. காசு கொடுத்து வாங்கும் வாடிக்கையாளன் ! 
4. இருபக்கமும் சீர்தூக்கி பார்க்கும் நடுநிலையாளன் ! 
5. ஆசிரியர் பணிவானவர் ; இங்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது ! 

சிந்தனைவாதிகள் சிந்தித்தால் மட்டும் போதாது அது நடைமுறைக்கு ஒத்துவரும் தீர்வாகவும் அமையவேண்டும் ! இல்லாவிட்டால் ஓட்டை மண் பானை போன்று தம் செயல்களும் யோசனைகளும் பயனற்று போய்விடும். எனவே இவற்றைப் பற்றி தெளிவாக அதே சமயம் அனைவராலும் ஏற்கும்படியான இறுதி தீர்வாக கொஞ்சம் அலசுவோமா ?
5.மர மண்டை20 March 2013 18:56:00 GMT+5:30

ரசனைகளின் பொது விவாதம் (3) (1) குடும்பத்தில் ஒருவர் !

இந்த வலைதளத்தில் பதிவிடும் அனைவருமே ஆண்கள் ; சுய சம்பாத்தியம் கொண்டவர்கள் ; குடும்பத் தலைவர்கள் ; குடும்பத்தை கட்டிக்காக்கும் தலைவனான உங்களுக்கு குறை சொல்லும் உரிமை உங்கள் சொந்த குடும்பத்தில் எந்தளவு இருக்கிறது என்று நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள் பார்ப்போம் ?

சமையல் சரியில்லை ; உப்பு, புளி, காரம் குறைச்சல் அதிகம் என்று உங்கள் மனைவியிடம் உங்கள் குரலை உயர்த்திக் கூற முடியுமா? முடியாது ! தன் டீன் ஏஜ் பிள்ளைகளிடம் அவர்களின் ஒவ்வாமையை நேருக்கு நேர் கூறி அவர்களை குற்றவாளியாக்க முடியுமா? முடியாது ! தன் வீட்டில் மனைவியால் ஓரிடத்தில் அலங்கரிக்கப்பட்ட அலங்காரப் பொருளை உங்களுக்குப் பிடித்த இடத்தில் மாற்றி வைக்க முடியுமா? முடியாது ! இதுபோல் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரிடமும் சில பல விஷயங்கள் நம்மால் முடியுமா? முடியாது !

தன் குடும்பத்தில், நம் ரசனைக்கு மாறுபட்ட விஷயத்தையே மாற்ற முடியாத நாம், இங்கு மட்டும்  "விரல் மடக்கி" டைப்பிட்டு ஆசிரியரை புண்படுத்துகிறோம். கேட்டால் குடும்பத்தில் ஒருவர் என்கிறோம். இதில் வேறு ஒருவர் பதிலளித்தாலோ, தவறாக பேசிவிட்டாலோ மூக்கின் நுனியில் கோபம் துள்ளிக் கொண்டு அகோர தாண்டவமாடுகிறது !

உங்களைப் போல் ஆசிரியரும் ஒரு மனிதன் தானே? வலிக்கும் இதயமும் ; சட்டென உடைந்து விடும் மனமும் கொண்டவர் தானே? ஒரு சொல் தாள முடியாத நீங்கள், பல நூறு வார்த்தைகளால் அவரை பந்தாடுவது கொடுமையிலும் கொடுமை ! (Ref : கடவுள் பாதி மிருகம் பாதி).  ''இந்த வலைதளத்தை பொறுத்த வரை'' நீங்கள் ஒரு சராசரி வாசகன் மட்டுமே, ஆனால் அவர் உங்களை வாசகனாக்கிய பிரம்மா ! படைத்தவன் தலையில் கைவைக்க இனி கனவிலும் நினைக்க வேண்டாம் ! இங்கு ஒரு மடங்கு காயப்படுத்தினால் நீங்கள் இரு மடங்கு காயப்பட்டு போவீர்கள் ; இதுவே இனி எழுதப்பட்ட விதியாகும் !

5.மர மண்டை20 March 2013 19:30:00 GMT+5:30

ரசனைகளின் பொது விவாதம் (4) (2) வளர்ச்சியின் மேல் அதீத அக்கறை !

தரம் தரம் என்று தராதரம் இல்லாமல் கத்தும் வாசகர்களே, வளர்ச்சியின் அடித்தளம் எதுவென்று தெரியுமா? நீங்கள் கூறும் கலர் ; பிரிண்டிங் ; பேப்பர் ஆகியவற்றின் தரம் எல்லாம், நீங்கள் இங்கு காட்டு கத்தலாய் கத்திதான் ஆசிரியருக்கு தெரியவேண்டும் என்பதல்ல ; ஐரோப்பா செல்லும் போது அங்கு வெளியிடப்படும் ஒரே ஒரு புத்தகத்தை வாங்கி வந்தால் மட்டுமே போதுமானது. ஆனால் அதை இங்கு நடைமுறைபடுத்த கொஞ்சம் குனிந்து பாருங்கள் ; 


 • பெரிய அளவு பிரிண்ட் ரன் வேண்டும் !
 • வாசகர் வட்டம் லட்சத்தில் வரவேண்டும் ! 
 • ஆங்கிலம் போல் நாமும் 400 கொடுத்து வாங்க வேண்டும் !
 • நேரடி சந்தாக்கள் பத்தாயிரத்தை தாண்டி இருக்க வேண்டும் ! 
 • ஆசிரியர் எடுக்கும் முடிவே இறுதியானதாக இருக்க வேண்டும் ! 
 • ஸ்டாக் வைக்க ; எதிர்கால உரிமம் பெற கோடிக்கணக்கில் முதலீடு வேண்டும் !
 • அந்த பல கோடி பணத்தை அவர் இந்த 40 வருடத்தில் லாபமாக பார்த்திருக்க வேண்டும் !

அய்யோ.. குய்யோ.. முய்யோ.. என்று தமிழ் காமிக்ஸ் வளர்ச்சிக்கு பாடுபடுபவர்கள், முதலில் இதற்கு வழி உண்டா என்று பாருங்கள்? நீங்கள் பதிவிடும் Constructive கமெண்டுகள் எல்லாம், ஒரு ஐரோப்பிய புத்தகத்தை வாங்கி கையில் வைத்துக் கொண்டாலே போதுமானது !

மொழிபெயர்ப்பை பொறுத்தவரை, எனக்கு பிடித்த வார்த்தைகள் உங்களுக்குப் பிடிப்பதில்லை ; உங்களுக்குப் பிடித்த வார்த்தைகள் எனக்கு பிடிப்பதில்லை ; நம் இருவருக்கும் பிடித்த வார்த்தைகள் இன்னொருவருக்கு பிடிப்பதில்லை ; எனவே நமக்கு பிடித்த பதிப்பகத்தையே நாம் நாடுகிறோம் !
6.மர மண்டை20 March 2013 19:46:00 GMT+5:30

ரசனைகளின் பொது விவாதம் (5) (3) காசு கொடுத்து வாங்கும் வாடிக்கையாளன் !

நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்களான சோப்பு, ஷாம்பு, டூத் பேஸ்ட், அரிசி, சமையல் எண்ணை, சட்டை, ஜீன்ஸ், குவாட்டர் என எல்லா பொருட்களும் நமக்கு பிடிக்காவிட்டால், நம் ஒருவனுக்காக அதை தயாரிக்கும் கம்பெனி தரத்தை மாற்றுவதில்லை ! நமக்கு பிடிக்காவிட்டால் நாம் அதன் பிராண்ட்/ஐ மாற்றி விடுகிறோம் ; அதுவும் பிடிக்கா விட்டால் வேறொரு BRAND ; இது தான் காசு கொடுத்து வாங்கும் வாடிக்கையாளனின் உரிமை ! தவறி, வாங்கிய பொருளில் ஏதும் குறையிருந்தால் நீங்கள் கொடுத்த பணம் ரூபாய் 120 திருப்பி கொடுக்கப்படும் ; நீங்கள் விவரமானவர் தானே ? 7.மர மண்டை20 March 2013  ரசனைகளின் பொது விவாதம் (6)   (4)    இருபக்கமும் சீர்தூக்கி பார்க்கும் நடுநிலையாளன் !  

இந்தப் பதிவு ஆசிரியரால் நீக்கப்பட்டு விட்டது :(
8.மர மண்டை20 March 2013 20:55:00 GMT+5:30

ரசனைகளின் பொது விவாதம் (7) (5) ஆசிரியர் பணிவானவர் ; இங்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது !

மிகவும் டயர்ட் ஆகிவிட்டதால் என்னுடைய பழைய மீள்பதிவுகளே இதற்கு பதிலாக அமைத்து விடுகிறேன். ஆனால் ஒரு விஷயம் ஜூனியர் எடிட்டர் இதுபோன்ற பிரச்சனைகள் இனியும் வேண்டாம் என்று நினைத்தால் இந்த தளமும் எதிர்காலத்தில் MODERATE செய்யப்படும் வாய்ப்பு இருக்கவே செய்யும். ஏனெனில் ஜூனியர் எடிட்டர் இளவட்டம் ; நாளைய தலைமுறை என்பதை மறக்க வேண்டாம் !

1.மர மண்டை2 March 2013 23:15:00 GMT+05:30 குனிய குனிய குட்டு தான் கிடைக்கும் ; இறங்க இறங்க உயரம் அதிகமாகும் ; நம் பாதை எதுவென்பது நமக்கு தெரியும் ; அதனால் எந்த சலசலப்புக்கும் நாம் பின்வாங்கமாட்டோம் ; எதில் குறைந்து விட்டோம் நாம்? எதில் சிறுமைப்பட்டோம் நாம்? சிறுதுளி என்பது சிலநேரங்களில் சிறுதுளி தான். உதாரணம் மருந்து, விஷம் என இவைகள் பெருவெள்ளமாக என்றுமே பெருக்கெடுப்பதில்லை. அதனால் அதை பற்றி நாம் இனி கவலைப்பட போவதில்லை !

2.மர மண்டை2 March 2013 22:47:00 GMT+05:30 தம் சுய முயற்சியால் உயர்ந்துவிட்ட அனைவருமே பணிவு கருதி நாணலாக மாறிவிட்டால், எங்களுக்கு நிழல் தரும் அசைக்க முடியாத ஆலமரத்தை, சற்றே இளைப்பாறும் பாலைவனச் சோலையை என் போன்றவர்கள் எங்கே என்று தேடுவது ?
9.மர மண்டை21 March 2013 10:05:00 GMT+5:30

ரசனையின் பயணம்... இங்கே முடிகிறது (1)

எனது அன்பான வாசக நண்பர்களே, மாற்றம் மாத்திரமே மாறாததே ! பதிவில் தொடங்கிய என் பயணம் இந்த ரசனைகளின் பயணம் ...! பதிவில் இன்றோடு 'தற்காலிகமாக' முடிவடைகிறது !  என்னை நேசித்தவர்களை விட வெறுத்தவர்களே இங்கு அதிகம். காரணம் அவர் அவர் மனசாட்சிக்கு மட்டுமே வெளிச்சம் !

நான் இதுவரை யாரையும் நேருக்கு நேர் புண்படுத்தியதில்லை ; சபையில் யாரையும் நேரடியாக குற்றம் சாட்டியதில்லை ; எவரையும் எதிரியாக பார்க்கவில்லை ; எவரையும் வெறுத்ததில்லை ; ஆனால் என் கருத்துகள், என் மொழிநடை பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கலாம் !

என்றாவது ஒருநாள் நான் இங்கு பதிவிட்ட அனைத்து பதிவுகளையும், என் வருங்கால புதிய வலைதளத்தில் காட்சிக்காக ; என் சாட்சிக்காக பதிவேற்றி வைத்திருப்பேன். ஏனெனில் என் கமெண்டுகள் அத்தனையும் இறந்த காலம் ; நிகழ் காலம் ; எதிர் காலம் என இந்த வலைதளத்தை பிரதிபலித்துக் கொண்டே இருக்கும் என்று நான் திடமாக நம்புகிறேன் ! 

10.மர மண்டை21 March 2013 10:25:00 GMT+5:30

ரசனையின் பயணம்... இங்கே முடிகிறது (2)

என்னைப் பொறுத்தவரை காமிக்ஸ் படிப்பது, நாம் PhD பட்டம் வாங்க வேண்டும் என்பதற்காக அல்ல ! அதே போல் ஒவ்வொரு தனிப்பட்ட வாசகரின் 'கருத்துகளுக்கும்', 'சுயமரியாதைக்கும்' இங்கு மதிப்பு கொடுக்க வேண்டும் ! அது விமர்சனமாகவோ ; குறைகூறும் பதிவுகளாகவோ ; CONSTRUCTIVE கமெண்டாகவோ ; ஆதரவாகவோ ; எதிர்ப்பாகவோ ; கும்மியாகவோ ; ஜால்ராகவோ எதுவாக இருந்தாலும் நமக்கு பிடிக்காத போது அது நிச்சயம் நமக்கு சம்பந்தமில்லாத ஒன்றாகவே கருதவேண்டும் ! அந்த வாசகருக்கு நேரடியாக பதில் கமெண்ட் அளித்து, அவரைப் புண்படுத்தாமல் இருப்பதே நலம். நமக்கு பிடித்திருந்தால் கவலையே இல்லை, அவருக்கு ஈடாக நாமும் அவர் பதிவில் போட்டி போடலாம் ! 

கடைசியாக ஒரு விடுபட்ட விமர்சனத்தை மட்டும் கீழே பதிவிடுகிறேன் !
11.மர மண்டை21 March 2013 10:48:00 GMT+5:30

ரசனையின் பயணம்... இங்கே முடிகிறது (2)

CENSOR என்ற பேச்சு வரும்போது பெண்ணின் முழு அல்லது முக்கால் நிர்வாணத்தை மறைப்பவர்கள், ஏன் வில்லி கார்வின், லார்கோ, சைமன் போன்றவர்களின் சட்டை போடாத உடம்பை மறைப்பது இல்லை என்று அதிமேதாவித்தனமாக கேட்கின்றனர் !? 

இதற்கு அதிக விளக்கம் கூட வேண்டாம், நாம் நம் வீட்டில், ஒரு வெயில் காலத்தில் எப்படி சட்டையில்லாமல் அலைந்து கொண்டு இருப்போம்?ஆனால் நம் வீட்டு பெண்கள் அந்நேரம் எப்படி உடை அணிந்து கொண்டிருப்பர் என்று நினைத்து பார்த்தாலே போதுமானது ! நம் ஊர் மளிகை கடை அண்ணாச்சிகளையும் அவர் தம் மனைவிமார்களின் உடை கலாச்சாரத்தை கடைகளில் பார்த்தாலே போதும், இனி இது போன்ற ஆண் பெண் சமஉரிமை ஆடை கலாச்சாரத்தை கேட்கமாட்டோம் ! 

சென்று வருகிறேன் நண்பர்களே ! 
போலிகளை கண்டு ஏமாறாதீர்கள் ! 

போலி மரமண்டை வந்தால் என் பழைய id எண்ணுடன் ஒப்பிட்டு பார்த்து உண்மையை அறிந்து 'கொல்லுமாறு' அன்புடன் வேண்டிக் கொள்கிறேன் :) :) : )
லாஸ்ட்லைன் : ரசனைகளின் பயணம் என்றும் முடிவதில்லை ; அது ஒரு தொடர்கதை ! 

7 comments:

 1. Prove the following:
  "இரசனை is inversely proportional to விமர்சனம்".

  Answer:
  1. இரசிப்பது Routine ஆன பிறகு உதயமாவது ஆராய்ச்சி செய்யும் பழக்கம்.
  2. ஆராய்ச்சி Routine ஆன பிறகு தவிற்கக் கடினமானது விமர்சனம் (internet யுகத்தில்).
  3. விமர்சனம் Routine ஆன பிறகு மனம் ஆராய்வது படைப்பை மட்டுமல்ல - விமர்சனத்தின் இரசிகர்களையும்.
  4. விமர்சனத்தையும் இரசிக்கிறார்கள் என்கிற உண்மை மனதில் தங்கும் நாளில், இரசனை தடம்புரள்கிறது.
  5. இப்போது அடுத்தது என்ன நிகழும் என்பது ஒவ்வொருவரின் தனித்தன்மையையும் குணாதிசயங்களையும் அவரவர்களுக்கே கண்ணாடிபோல் காட்டுகிறது.
  6. கண்ணாடியில் தன்னைத்தானே பார்த்துக்கொள்பவர்கள் விமர்சனத்தை ஒரு Routine ஆக்குவதில்லை - அது ஒரு விபத்தாக நிகழவேண்டிய விஷயம் என்ற புரிதலால்!

  Reviewer Remarks: The steps 1 to 4 are sufficient to prove the theorem. You get 10/10 marks. The steps 5 and 6 are unnecessary and looks like your own opinion.

  :D

  ReplyDelete
  Replies
  1. Mr. Ramesh Kumar, PhD.


   Wow, Super !

   சிறந்த அறிவுபூர்வமான வலைத்தள கமெண்ட் ;
   2013 வருடத்தின் சிறந்த கமெண்ட்டிற்கான விருது ற்கு உங்கள் பெயரை பரிந்துரைக்கிறேன் Mr.Professor

   Delete
  2. இது Phd level research அல்ல, 11ஆம் வகுப்புப் பாடத்திட்டம்! குறைகள் கண்ணில் படும்போது ஆழ்மனதில் ஒரு மெல்லிய சந்தோஷமும் - மூளையில் Dopamine-ம் உற்பத்தியானால் நாம் குறைகண்டு விமர்சிப்பதில் addict ஆகிறோம் - இந்த விதத்தில் ஆராய்ச்சி செல்லும்போதுதான் அது Phd level-க்கு தகுதியாகும். நம்முடையது அரைகுறை ஆராய்ச்சி for fun! :D

   அதுசரி... நீங்க எப்ப பழய பின்னூட்டங்களிலிருந்து மீண்டு இதை ஒரு தனித்துவமான காமிக்ஸ் blog-ஆக மாற்றுவீர்கள்? இல்லாவிட்டால் நான் அடுத்த Comment-ல், விமர்சனங்களின் இரசிகர்களை விமர்சிக்கும் விமர்சனரின் இரசனை பற்றி விமர்சிக்க நேரிடலாம்! :D

   Delete
  3. //அதுசரி... நீங்க எப்ப பழய பின்னூட்டங்களிலிருந்து மீண்டு இதை ஒரு தனித்துவமான காமிக்ஸ் blog-ஆக மாற்றுவீர்கள்? இல்லாவிட்டால் நான் அடுத்த Comment-ல், விமர்சனங்களின் இரசிகர்களை விமர்சிக்கும் விமர்சனரின் இரசனை பற்றி விமர்சிக்க நேரிடலாம்//


   பதிவு எண் 51 ற்கு பிறகு ; இன்னும் மூன்றே மூன்று பதிவுகள் மட்டுமே மீதம் உள்ளது !


   நான் இதுவரை விமர்சனங்களின் ரசிகர்களை விமர்சித்ததாக நினைவில்லை ; கடும் கருத்துகள் கொண்டு ஆணித்தரமாக விமர்சித்தவர்களை மட்டுமே இதுவரை நான் விமர்சித்து வந்துள்ளேன் ; இருந்தாலும், உங்களின் ஆராய்ச்சி முடிவை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ; எனவே

   ''விமர்சனங்களின் இரசிகர்களை விமர்சிக்கும் விமர்சனரின் இரசனை பற்றி'' இந்த பதிவிலேயே பதிவிடவும் :)

   Delete
  4. ச்ச... இந்த Idea workout ஆகலை, அடுத்த தடவை நல்லா படிச்சிட்டு வந்து ஒப்பிக்கிறேன்! :D

   Delete