Follow by Email

Thursday, 12 December 2013

Operation சூறாவளி !

ஒரு பயணத்தின் போது நீங்கள் இருவரும் அருகருகே அமர்ந்து பசுமை நினைவுகளை மீட்டெடுக்க - அழகாய் ஆரம்பிக்கும் உங்கள் வாக்கியத்திற்கு அவள் மலர் போன்ற இதழ்களால் லாவகமாய் எடுத்துக் கொடுக்க ; அவைகளை நீங்கள் வசமிழந்தவராய் வசியம் கொண்ட மலர் போல் தொடுக்க ; இதனிடையே  இருவரும் தன் வசமிழந்து போன மெல்லிய காதல் உணர்வுகளையும் மீட்டெடுத்து ; நேரம் போவதே தெரியாமல் பயணித்தால் நிச்சயமாக   நீங்கள் இருவரும் காதலர்கள் என்று சத்தியமே செய்வேன். ஏனெனில் இது போன்றதொரு உணர்வு கணவன்  மனைவியிடம் ஏற்படுவதில்லை ; அப்படியே  உங்களில் யாரவது ஒருவருக்கு வாய்த்திருந்தால், சொர்கத்தில் இடமில்லை என்று அதை  உங்களுக்கு பூலோகத்தில் அமைத்துக் கொடுக்க நினைத்த இறைவன்  உங்கள்  மனைவி மூலமாக ஏற்பாடு செய்துள்ளான் என்று பெருமை பட்டுக்கொள்ளுங்கள் !அது போன்றதொரு உணர்வு பரிமாற்றத்தை தான், கதாசிரியர் மிகவும் மெய்மறந்து கிட்டத்தட்ட ஒன்பது பக்கங்களுக்கு மேல்  விவரித்துள்ளார். இன்ஸ்பெக்டர் ஜிங்கோவும், மேட்டுக்குடி  சீமாட்டி அல்டீ யும் சேர்ந்து ஒரு காதல் கதையை விவரித்து  நம்மை டயபாலிக்கை  விட்டு வெகுதூரம் உள்ள பெக்லெய்ட் ற்கே கூட்டிச் சென்று விடுகிறார்கள் !

ஜிங்கோ ஸ்பெஷல் - குற்றம்  !
குற்றம் : குற்றம் என்றாலே அது தண்டிக்கப்பட வேண்டிய ஒரு செயல் ; தன் மனசாட்சியை அனுதினமும் குறுகுறுக்க வைக்கக் கூடிய அதர்மம் ; ஆனால் அந்த குற்றத்தை கூட ஒரு சாதனையாக செய்வதை ஒரு தொழிலாக கொண்டிருப்பது மட்டுமல்லாமல், தம் புத்திக்கூர்மையை நினைத்து பெருமிதம் கொள்ளும் மனோநிலை, மனித படைப்பின் இன்னொமொரு விசித்திரம் ! சத்தியமாக நான் ராஜாவை கூறவில்லை, அது கட்சி அரசியல் ; நான் கூறியது குற்றவியல் சக்கரவர்த்தியான இம்மாத டேஞ்சர் டயபாலிக் கை, இது காமிக்ஸ் அலசல் !    

எப்படி செய்தாலும் அது  குற்றம் தான் ; எங்கு செய்தாலும் குற்றம் குற்றம் தான். ஆனால் கொள்ளைக்காரனிடம் இருந்துதானே நான் கொள்ளையிடுகிறேன் என்ற திடமான எண்ணவோட்டத்திற்கு உலகமெங்கும் உள்ள  பாமர மக்களும், போலி பகுத்தறிவாதிகளும்  காலம் தொட்டே அடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர். பிரான்ஸின்  கையிலிருந்து அதர்மமாக தட்டிப்பறித்த 2006  உலககோப்பையை, தன்  வரலாற்றின் உன்னதமான நாளாக கொண்டாடிய இத்தாலி மக்களுக்கு டேஞ்சர் டயபாலிக் - கனவுகளின் காதலனாக இளம் பெண்களுக்கும் ; கற்பனைகளின் கணவனாக பேரிளம் பெண்களுக்கும் ; நினைத்ததை முடிப்பவனாக ஆண்களுக்கும் தோன்றி, தன் புகழை எட்டுத் திக்கும் பரப்பிவருவதில் பெரிய ஆச்சர்யம் ஏதுமில்லை  தான்.   வாழ்க குற்ற சக்ரவர்த்தி டேஞ்சர் டயபாலிக் !

குற்ற சக்ரவர்த்தி டேஞ்சர் டயபாலிக் !

தடம் எண் ஒன்று : கொள்ளைப் பொருளை வாங்கிக் குவிக்கும் ரூடி யையும் அதை விற்க வந்த  போரிஸ் யும், இன்னும் சிலரையும் கன்டெய்னரோடு  அலேக்காக கிரேன் மூலம் தூக்கி, கடலில் அப்படியே போட்டு அவர்களை மூழ்கடித்து சாகடிக்கிறார் டேஞ்சர் டயபாலிக். ஏனெனில் அவர்கள் கொள்ளைக்காரர்கள். அப்படி அவர்களை ஈவிரக்கமின்றி சாகடித்தப்பின் அவர்களிடம் இருந்த 10 மில்லியன் யூரோஸ் யும், ஒரு பெட்டி நிறைய நவரத்தின கற்களையும்  டயபாலிக் கொள்ளையடிக்கிறார்.    பிறகு அங்கிருந்து தன் காதலி ஈவா வுடன் கடலிற்குள் இருக்கும் தன் பதுங்குதளத்திற்கு சென்று  பணத்தை உலரவைக்கும் போது, நாணம் கொண்ட இளம் எழில் மங்கை கொண்ட மோகம் மோதும்  நிலையினளாய் அக்கற்களுக்கு முன்பே ஈவா நிற்கிறாள்.கதையின் மத்தியில் லஸ்டென்  செல்லும் டயபாலிக், கதையின் இறுதியில் ஒரு பை நிறைய விலைமதிப்பற்ற நவரத்தின ஆபரண பொக்கிஷங்களை கொள்ளையடித்துக் கொண்டு ஊர் திரும்புகிறார் !

தடம் எண் இரண்டு : பெக்லெய்ட்டின் புரட்சி இயக்கமான க்ரே க்ரோஸ் என்ற அமைப்பு, லஸ்டென் சென்ட்ரல் பேங்க் முன்னால்  நிற்கும் இரண்டே இரண்டு காவலாளிகளை கொன்று விட்டு அங்கிருந்த செழிப்பான லாக்கர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மில்லியன்கள் பெறுமானமுள்ள நவரத்தின பொக்கிஷங்களை கொள்ளையடிக்கிறது. அவ்வளவு பணத்தையும் செலவழித்து அவர்கள் திருட நினைத்தது வெறும் இரண்டே இரண்டு பித்தளை மோதிரங்களை மட்டும் தான் என்றால் நீங்கள் நம்பவா போகிறீர்கள் ?!

தடம் எண் மூன்று : பெக்லெய்ட்டில் உள்ள லஸ்டெனில் நடக்கும் மன்னர் குடும்ப திருமண வைபவத்திற்கு,  தன் காதலி அல்டி யுடன் இன்ஸ்பெக்டர் ஜிங்கோ செல்கிறார். திருமண வைபவம் நடந்துக் கொண்டிருக்கும் போதே ஜிங்கோ அவசரமாக வெளியே போகிறார் ; சரி உச்சா போகத்தான் இருக்கும்  என்று நினைக்கும் போது, கதவருகினில் வந்து மணப்பெண்ணின் ஒன்றுவிட்ட சகோதரியும் தன் காதலியுமான அல்டீ யையும் கூப்பிடுகிறார் ; அல்டீ மெல்ல எழுந்து இரண்டடி நடப்பதற்குள்  வெடிகுண்டு வெடித்து உயிருக்கு போராடும் நிலையை பார்க்க மனம் கஷ்டப்படுகிறது. தன் உயிர் ஊசலாடிய அந்த நேரத்திலும் அல்டீ யின் திருமணம் அவளின் விருப்ப படி நடக்கிறது !

புரட்சி இயக்கத்தால் கொலை செய்யப்பட்ட போலிஸ் கமிஷனர்  நிச்டர் இடத்தில், வந்தமரும் க்ரே குரோஸ் - தலைவன் விக்டர், ஃபைல் சூறாவளியை ஜிங்கோவிற்கு கிடைக்க  விடாமல்  சதி செய்ய, சூறாவளி ரகசியம் தெரிய வேண்டிய நபருக்கு தெரிந்து விடுகிறது. பிறகு  குடியிருந்த கோயில் - MGR ஸ்டைலில் ஜிங்கோ டபுள் ஆக்டிங் செய்து புரட்சி கும்பலை வேரருக்கிறார். இறுதியில் ஜிங்கோ, தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு என்று கேப்டன் ரமணா  விஜயகாந்த் ஸ்டைலில்  கூறிக்கொண்டே டயபாலிக்கை துப்பாகியால் சுடும் போது, ஜிங்கோ  மயங்கி தரையில் சரிந்தவுடன் கதையில் ஆக்ஷன் முடிவடைகிறது !

இந்தக் கதை  படிக்க படிக்கத்  தான் பிடிக்கும் என்ற ரகத்தில் சேருவதால், முதல் முறை படித்த போது  பிடிக்காமல் போனவர்கள் இரண்டாவது முறை படிக்கவும் ; மீண்டும் பிடிக்கவில்லை என்றால் மூன்றாவது முறை படித்து பார்க்கவும். அப்பொழுதும் பிடிக்கவில்லை என்றால் லார்கோ வின்ச் புக்கை  மீண்டும் ஒரு முறை எடுத்து  படித்து ரசித்து விட்டு இதை மறந்து விடவும் !

9 comments:

 1. என்னமோ தெரியவில்லை, டெக்ஸ்வில்லர் கதைகளைத் தவிர வேறெதையும் கருப்பு வெள்ளையில் படிக்கப் பிடிக்கவில்லை. சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷலை படிக்க ஆரம்பித்தபோது ஏற்பட்ட அதே உணர்வை இந்த டயபாலிக் கதையின் 20-ஆம் பக்கத்தைப் படிப்பதற்குள் ஏற்பட்டுவிட்டது. இத்தாலி வாசகர்களுக்கு டயபாலிக் கதைகளின் மேல் இருக்கும் attraction-ல் 1 சதவீதமாவது நமது ஊரில் புதிய வாசகர்களுக்கு ஏற்படுமா என்பது சந்தேகமே.

  டெக்ஸ்வில்லர் கதைகளில் தொடர்ந்து 3-4 பக்கங்களுக்கு வெறும் Dialogue இருந்தால்கூட சுவாரஸ்யமாகப் படிக்க இயலும்போது, டயபாலிக் கதையின் action பக்கங்கள்கூட சுவாரஸ்யமாகத்தோன்றவில்லை. ம்ம்ம்...

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் ; உங்களின் கருத்து பெரும்பானமையான வாசகர்களின் கருத்தாக கூட அமைந்து விடும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இதுபோன்ற கதைகள், ஜெமினி கணேசன் காலத்தில் வெளிவந்த சினிமா படங்களான - வஞ்சிக்கோட்டை வாலிபன், உத்தம புத்திரன் போன்ற ரசனைகளை வெளிக்காட்டுவதாகவே அமைந்துள்ளது போன்றே தோன்றுகிறது. ஒருவேளை தீவிர மசாலா சினிமா ரசிகர்களுக்கு வேண்டுமானால் இவரின் கதைகள் பிடித்து அவர்கள் அதை படித்து டயபாலிக் ரசிகர் மன்றத்தை மிகச் சிறிய அளவில் உருவாக்க வாய்ப்பிருக்கிறது :)

   Delete
  2. ஒருவேளை Van Hamme போன்ற உயர்தர கதாசிரியர்களின் பாணி அறிமுகமாகிவிட்டதனால் மற்ற பாணி கதை மற்றும் Panel வடிவமைப்புகள் ஆர்வத்தைத் தருவதாக இல்லையோ?! ;)

   Delete
  3. அப்படியிருக்காது என்றே நினைக்கிறேன் ; இது ஒரு தனி ரசனை ; கருப்பு வெள்ளை சினிமா பாணி ; இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் இளைய தளபதி (?!) விஜய் நடித்த சுறா போன்ற கதை களம். லாஜிக் பார்க்காத தீவிர சினிமா ரசிகர்களுக்கு நிச்சயமாக இக்கதை பிடிக்கும். அதுமட்டுமல்ல, இங்கு நம் கற்பனை திறனுக்கு வேலையே இல்லை என்பது ரொம்பவும் பலவீனமான காமிக்ஸ் ரசனை !

   Delete
 2. ஹா ஹா! உண்மைதான். குறைந்தபட்சம், இத்தாலியில் இதற்கென ஒரு fan base இருப்பதை கணக்கில் கொள்ளவேண்டியிருக்கிறது.

  மசாலாக் கதைகளும் OK தான், Logic கூட அவ்வளவு முக்கியமில்லை. ஆனால் Action sequence-களைக்கூட Flashback முறையில் விவரிப்பது சுவாரஸ்யமான சம்பவங்களை நீர்த்துவிட செய்கிறது.

  ReplyDelete
 3. மன்னிக்க வேண்டும் கவனக்குறைவால் புதிய பதிவுகளை பார்க்கவில்லை. உங்கள் வெப்சைட்டை ஓபன் செய்த உடன் புதிய பதிவுகள் வருமாறு ஏற்பாடு செய்ய கேட்டுக் கொள்கிறேன்.

  இத்தாலி என்றாலே மாபியா தேசம் என்பதால் டயபாலிக்கிற்கு ரசிகர்கள் அதிகம் இருப்பதில் ஆச்சரியமில்லை.

  ReplyDelete
  Replies
  1. //இத்தாலி என்றாலே மாபியா தேசம் என்பதால் டயபாலிக்கிற்கு ரசிகர்கள் அதிகம் இருப்பதில் ஆச்சரியமில்லை//

   உண்மைதான் ; நம்மில் பெரும்பான்மையானவர்கள் - அப்துல்கலாம், நரேந்திர மோடி போல் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம் ; இத்தாலியர்கள் டேஞ்சர் டயபாலிக் போல் ஆகவேண்டும் என்று உள்ளுக்குள் கனவு காண்கிறார்கள் போலிருக்கிறது :)

   நீங்கள் அனைத்து காமிக்ஸ் பதிவர்களின் பதிவுகளையும் உடனுக்குடன் படிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு எளிய வழி இருக்கிறது ; நண்பர் கிங் விஸ்வா அவர்களின் வலைதளத்திற்கு சென்றால் அங்கு இருக்கும் லிங்க் மூலமாக அணித்து பதிவுகளையும் உடனுக்குடன் படித்து விடலாம். நான் கூட சில மாதங்களாக அப்படித்தான் செய்கிறேன். தினமும் ஒரு முறை விசிட் செய்தால் போதுமானது ; வேறெங்கும் செல்ல தேவையில்லை. அவரின் வலைத்தளம் :

   தமிழ் காமிக்ஸ் உலகம் - http://tamilcomicsulagam.blogspot.in/

   Delete