Follow by Email

Tuesday, 22 April 2014

சிங்கத்தின் சிறு வயதில் !

மிஸ்டர் மரமண்டை18 March 2014 20:41:00 GMT+5:30

சிங்கத்தின் சிறு வயதில் [1] ஆசிரியர் பிறந்த தின ஸ்பெஷல் !

பரணி vs பரணி - நடுவுல கொஞ்சம் ஈ.விஜய் ;
தடம் எண் 36 - தாரமங்கலம் to பெங்களூரு via ஈரோடு !

விரைவில்...

Stalemate to Classmate but no Checkmate :)
மிஸ்டர் மரமண்டை19 March 2014 15:01:00 GMT+5:30

சிங்கத்தின் சிறு வயதில் [2]

நண்பர்களே, நேற்று விதைத்து இன்று துளிர்விட்டு நிற்கும் பிரச்சனை அல்ல இது. எட்டு மாதங்களுக்கு முன்பாகவே பரணி & பரணி நேருக்கு நேர் நிகழ்ச்சி ஒன்று - இங்கே செவ்வனே நடந்தேறியது. இடைவெளி விட்டு இடைவிடாமல் போராடி வரும் போராட்டக் குழு தலைவரும் ; தலைவர் தளர்வடையும் போதெல்லாம் அவருக்கு தோள் கொடுத்து தாங்கி நிற்கும் போராட்டக் குழு செயலாளரும் இங்கு ஆற்றி வந்த களப் பணிகள் கொஞ்சநஞ்சமல்ல !

வெள்ளந்தி எழுத்துக்கும் ; ஊமை குசும்புக்கும் ஒரே குத்தகைதாரரான தாரமங்கலம் திரு.பரணிதரனின் வாழ்வின் லட்சியமே 'சிங்கத்தின் சிறு வயதில்' தனி புத்தக பதிப்பு கோரிக்கை என்பது நமெக்கெல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனி போன்றதாகும். போலவே இலையில் பரிமாறப்பட்ட வாழைப்பூ வடைகளை தனது இடது கரத்தால் இலாவகமாக ஒதுக்கி, அந்த சிறு வெற்றிடத்திலும் சிவகாசி நண்டு வறுவலை கிஞ்சித்தும் இடமின்றி சாதுர்யமாக இலையில் நிரப்பி full meals கட்டு கட்டி வந்த போராட்டக் குழு செயலாளர் ஈரோடு விஜய்/ன் போராட்டம் இலை மறைவு  காய் மறைவாக  நடந்தேறியதையும் நாம் கணித்தே வந்துள்ளோம் !


மிஸ்டர் மரமண்டை19 March 2014 15:23:00 GMT+5:30

சிங்கத்தின் சிறு வயதில் [3]

எதிர் முனையில் எனக்கு தெரிந்து தன் உள்ளக்கிடங்கை தைரியமாக திறந்தவர் பெங்களூரு பரணி மட்டுமே. இந்த விஷயத்தில் வாசக நண்பர் திரு. பெங்களூரு பரணியின் பதிவுகள் அசாத்தியமானது ; அதற்கான காரணமும் நிச்சயம் உள் நோக்கமற்றது. தம் அபிமான ஆசிரியர் சம்பந்தப்பட்டுள்ள இந்த விஷயத்தில் எதிர்க்கருத்து அல்லது மாற்றுக்கருத்து தெரிவிப்பது என்பது - ஆசிரியரின் பதிலை ஒவ்வொரு பதிவிலும் எதிர்நோக்கும் ஒரு ரெகுலர் வாசகனுக்கு தர்மச்சங்கடத்தை தோற்றுவிக்கும் செயலாகும் !

அவரைத் தவிர இதுவரை இடையில் இருமுறை, நம்ம நாட்டாமை பெருங்களத்தூர் ரமேஷ் - நடுநிலையை ஆதரித்து வந்துள்ளார். அவரின் பதிவுகள் சீர் தூக்கிப் பார்க்கும் நீதி தராசாய் செயல்பட்டு தீர்ப்பு வழங்கியது. ஆனால் வழமைப் போலவே ஒருப்பக்கமும் தாழாமல் இருப்பக்கமும் சமமாக நின்று Stalemate போன்றதொரு நிலையை தோற்று வித்திருக்கிறது !

இவை மட்டுமே நாம் இதுகாறும் கடந்து வந்த வரலாறு ; இனி ... ... ...


மிஸ்டர் மரமண்டை19 March 2014 18:05:00 GMT+5:30

சிங்கத்தின் சிறு வயதில் [4]

கிட்டத்தட்ட ஒரு வாழ்க்கை வரலாறு போன்ற - வெற்றிப் புத்தகமான 'சிங்கத்தின் சிறு வயதில்' முதல் தொகுப்பு குறைந்தப்பட்சம் எவ்வாறு இருக்க வேண்டும் ?

1.பூத வேட்டை அளவில் இருக்க வேண்டும் !
2.உயர்தர வெள்ளைத் தாள்களில் ஜொலிக்க வேண்டும் !
3.குறைந்தப்பட்சம் 120 பக்கங்களாவது இருத்தலே அழகு !
4.முன்னுரை ; பதிப்புரை இரண்டுமே இப்புத்தகத்தை அலங்கரிக்க வேண்டும் !
5.முதல் பாகமே என்றாலும் முற்றுப் பெற்றது போன்ற ஒரு தோற்றம் இருக்க வேண்டும் !
6.ஆசிரியர் விஜயனின் நிழற்படம் முன் அட்டையை முழுவதுமாக அலங்கரிக்க வேண்டும் !

ஆனால் இதுவரை வெளிவந்துள்ளதோ 35 பாகங்கள் மட்டுமே ; பூத வேட்டை அளவில் தோராயமாக 80 பக்கங்கள் வரலாம். அதன் தடிமனை புத்தகமாக கற்பனை செய்து பார்க்கக் கூட முடியவில்லை ; நோஞ்சானாக ஒரு user manual போன்றோ ; ஒரு catalogue போன்றோ ; ஒரு prospectus போன்றோ ஒரு புத்தகம் வெளிவந்தால் அதன் உள்ளே இருக்கும் தரமே கேள்விக்குரியதாக மாறி, மாற்றானின் கேலிக்குரியாதாகி விடும். ஆதியும் அந்தமும் இல்லாத ஒரு தொகுப்பாகவே இது காட்சியளிக்கக் கூடிய வாய்ப்பு அதிகம் !

சரி, தமிழ் காமிக்ஸ் தீவிர வாசகர்களாகிய நமக்கு மேற்கூறியுள்ள குறைந்தப்பட்ச அளவுகோல்கள் எல்லாம் அவசியமே இல்லை என்ற வாதமும் நம்மால் முழுமனதாக ஏற்றுக் கொள்ளக் கூடிய விஷயமே. ஆனால் ... ... ...
மிஸ்டர் மரமண்டை19 March 2014 18:52:00 GMT+5:30

சிங்கத்தின் சிறு வயதில் [5]

ஆசிரியர் இதுவரை எந்த உறுதியும் அளிக்காததன் காரணம் என்னவாக இருக்கக் கூடும் ?

1.வெற்றிப் பயணமே என்றாலும் இன்னும் ஒரு மைல்கல்லை எட்டவில்லை !
2.குறைந்தப்பட்சம் 2000/5000 புத்தகங்கள் பிரிண்ட் செய்ய வேண்டும் !
3.விலையா அல்லது இலவசமா என்பதை தீர்மானிக்க வேண்டும் !
4.இலவசம் என்றால் அரசியல்வாதிகளின் தேர்தல் அறிக்கை போன்று ஆகிவிடும் !
5.விலை நிர்ணயித்தால் வாங்குபவர்களைத் தேட வேண்டும் !
6.ஒரு சிலருக்காக மட்டுமே தொகுத்து வழங்கினால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் !
7.இன்னும் சில !

அப்படி என்றால் இதற்கு தீர்வு தான் என்ன ? அடுத்து வருகிறது ... ...


மிஸ்டர் மரமண்டை20 March 2014 09:40:00 GMT+5:30

சிங்கத்தின் சிறு வயதில் [6]

அன்புள்ள நண்பர் திரு.தாரமங்கலம் பரணிதரன் அவர்களுக்கு இந்த மரமண்டை வரையும் அன்பு மடல். நலம், நலமாய் வாழ வாழ்த்துகிறேன். தங்களை சில நாட்களாக இந்த வலைப்பக்கம் காணாதது கண்டு உள்ளமெங்கும் வருத்தம் சுமையாய் அழுத்த, அந்த பாரம் தந்த பரிதவிப்பில் இக்கடிதத்தை எழுதுகிறேன் நண்பா..

கண்ணீர் துளிகளுக்கு மட்டுமே சொந்தமானதல்ல நம் கண்கள் ; நம் கவலையையும், களங்கத்தையும் அவ்வப்போது கழுவிச் சுத்தப்படுத்தவே - அந்த கண்ணீர் துளிகளையும் உப்பு நீராக கடவுள் படைத்துள்ளான் என்பதை நீங்கள் அறிவீர்களா ? முன்பு ஒரு முறை இங்கு நீங்கள் போராட்டக் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்ததில் நான் சிறு உவகை அடைந்தேன் ; போராட்டத்தை கைவிட்டதில் பெறு மகிழ்ச்சி அடைந்தேன். ஏனெனில் தமிழ் காமிக்ஸ் வாசகர்களாகிய நாமெல்லாம் போராட பிறந்தவர்கள் அல்ல ; மேன்மேலும் சாதிக்கப் பிறந்தவர்கள். நாமெல்லாம் கைதட்ட பிறந்தவர்கள் அல்ல ; நம்மை பார்த்து கைதட்ட பிறந்தவர்கள். நாமெல்லாம் வழித்தேட வளர்ந்தவர்கள் அல்ல ; அந்த வழிக்கான கதவை திறக்கப் பிறந்தவர்கள். வலிகளுக்கும் வேதனைகளுக்கும் நம் வாழ்க்கையை குத்தகை விடப் பிறந்தவர்கள் அல்ல நாம் ; அவைகளை, நாம் கடந்து வந்த பாதையின் காலச் சுவடுகளாக விட்டுச் செல்ல பிறந்தவர்களே நாமெல்லாம் !

பின் பக்கம் திருப்புக ;

மிஸ்டர் மரமண்டை20 March 2014 09:57:00 GMT+5:30

சிங்கத்தின் சிறு வயதில் [7]

அன்று கண்ணீரோடு விடைப்பெற்ற உங்களின் கோபம் நியாயமானது தான். ஆனால் ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதை மேலே உள்ள பதிவுகளின் மூலம் நீங்களும் தற்போது அறிந்திருப்பீர்கள். தண்ணீரையும் ஜல்லடையில் அள்ளிக்கொண்டு வரலாம் ; அது பனிக்கட்டியாக மாறும் வரை நமக்கு பொறுமை மட்டும் இருந்தால். நமக்கேன் அந்த பொறுமை இல்லாமல் போனது என்ற கேள்வி இங்கு நியாமில்லை தான். நாளை கிடைக்கும் பலாக்காயை விட இன்று கிடைக்கும் கலாக்காய் மட்டுமே நம் பசியை தீர்க்கும் என்பது நானும் அறிந்ததே !

பாம்பும் சாகக் கூடாது ; தடியும் உடையக்கூடாது என்ற வகையில் சாலமன் பாப்பையா போல் தீர்ப்புச் சொல்ல வரவில்லை நான். உங்களின் ஆசை நிச்சயம் நிறைவேறும் என்பதை மட்டும் இங்கு உறுதியாக கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அடுத்து வரும் என் பதிவில் அதற்கான விடையை எழுதுகிறேன் நண்பரே ... ...


மிஸ்டர் மரமண்டை1 April 2014 15:55:00 GMT+5:30

சிங்கத்தின் சிறு வயதில் (8)

நண்பர்களே என்னுடைய முந்தைய பதிவுகளான சிங்கத்தின் சிறு வயதில் 1-7 பதிவின் மூலம் பல விஷயங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். 'சிங்கத்தின் சிறு வயதில்' தொகுப்பை வெளியிடுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் என்னவென்று உங்களுக்கும் தெள்ளத் தெளிவாக தெரிந்திருக்கும்.

எனவே அடுத்து வரும் பதிவான சிங்கத்தின் சிறு வயதில் (9) மூலம் உங்கள் ஆசை நிறைவேறி, அதன் மூலம் இந்த போராட்டக் குழுவிற்கும் சமாதானம் ஏற்பட்டு ; போராட்டக் குழுவை கலைத்து விட்டு வேறு ஏதாவது சுவாரசியமான பதிவுகளை தொடர்ந்து வழங்கி வருமென்றால் அதுவே நம் அனைவரையும் களிப்படையச் செய்யும் நிகழ்வாக அமையும் :)மிஸ்டர் மரமண்டை1 April 2014 16:53:00 GMT+5:30

சிங்கத்தின் சிறு வயதில் (9)

போராட்டக் குழு தலைவர் - தாரமங்கலம் பரணிதரனின் பழைய அறிக்கைகளின் படி - சிங்கத்தின் சிறு வயதில் வெளிவந்துள்ள அத்தனை புத்தகங்களும் அவரிடம் இருந்தாலும், திரும்பத் திரும்ப படிக்க அவர் நினைக்கும் போது அது மிகவும் சிரமமாக இருக்கிறது என்பதாகும். ஒவ்வொரு முறையும் அத்தனை புத்தகங்களையும் வரிசையாக எடுத்து வைத்து படிப்பது என்பது தலைவருக்கு அயர்ச்சியை தருவதாக அமைந்துள்ளது என்பதே அவரின் கோரிக்கைக்கு முதற் காரணம். பரணிதரன் நினைத்த நேரத்தில் எடுத்து படிக்க சுலபமாக இருக்க வேண்டும் என்பதாலேயே அவர் அதை புத்தக வடிவமாக அல்லது தற்போதைய நிலைப்பாட்டின் படி தொகுப்பாக கேட்டு போராடி வருகிறார் என்பதே என் கணிப்பு !

ஆசிரியர் தொடர்ந்து மறுத்து வரும் நிலையில் - இதற்கு எளிதான இரு தீர்வுகள் உள்ளது ;

1.அத்தனை பக்கங்களையும் ; அத்தனை பாகங்களையும் - job typingல் கொடுத்து, நமக்கு தேவையான புத்தக அளவில் ப்ரிண்ட் எடுத்துக் கொண்டு அதை புத்தகமாக பைண்ட் செய்துக் கொள்ளுதல் ஒரு வழியாம் !

[ இப்படி செய்ய நினைக்கும் போது, அதற்குண்டான செலவு அதிகரிக்கலாம். உதாரணமாக A4 sheetக்கு Rs.10/copy என்று வைத்துக் கொண்டால் செலவு கைமீறும் என்றால் - போராட்டக் குழு உறுப்பினர்கள் நபருக்கு 200 வீதம் போட்டு இதை நடைமுறை படுத்தலாம் என்பது என் கருத்து ]

2.அல்லது சிங்கத்தின் சிறு வயதில் தொகுப்பை யாராவது வலையேற்றம் செய்ய வேண்டும். ஒரு புதிய blogspot ஓபன் செய்து அதில் சிங்கத்தின் சிறு வயதில் -  அத்தனை பாகங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக பதிவிட வேண்டும். அதிலும் ஆசிரியர் வெளியிட்டுள்ளப் படி ; உள்ளது உள்ளபடி காற்புள்ளி, அரைப்புள்ளி, புள்ளி, etc., என அனைத்தும் இடம் மாறாமல் பதிவிட வேண்டும் !

[ இதன் மூலம் யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் சிங்கத்தின் சிறு வயதில் தொடரை ஒரே சீராக படித்து களிப்புற முடியும். தேவைப்படுவோர் அதை ப்ரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு புத்தக வடிவிலும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் இப்படி type செய்வது என்பது நமக்கு எளிதான காரியம் அல்ல ; கண்முழி இரண்டும் வெளியே வந்து விடும் :) அதனால் அடுத்தவருக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல் நானே அதை செய்வதாக முடிவு செய்துள்ளேன். சந்தோசம் தானே நண்பர்களே ?! ]

இதோ உங்களுக்கான சிங்கத்தின் சிறு வயதில் தொகுப்பு !
singathin.blogspot.in

சிங்கத்தின் சிறு வயதில் !


1.மிஸ்டர் மரமண்டை30 May 2014 at 20:00:00 GMT+5:30

to whomsoever it may concern (1)

நண்பர்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். நீண்ட விடுப்பும் ; உழைப்பற்ற நாட்களும் நம் சந்தோஷத்தை இரு மடங்கு கூலியாக கேட்கின்ற காலமிது. கண் இமை மூடி கண் இமை திறக்கும் காலத்தில், ஒரு நாள் என்பது அடக்கமாகி வருகின்ற உணர்வை நித்தம் பெறும் மாயலோகமாகி விட்டது நம் பூலோகம். இதில் மாதங்களும் ; வருடங்களும் கூட சில நாட்களாய் மறைகின்றன ; நேற்றையப் பொழுது என்பதே இல்லாமல் போய்விடுமோ என்று அச்சப்படும் வகையில் நம் பூமியின் சுழற்சி வேகம் நம் புலன்களுக்குள் அடங்க மறுக்கிறது !

இதில் நாம் அறிந்து செய்யும் தவறுகள் சில மட்டுமே என்றாலும் அறியாமல் செய்யும் பிழைகள் ஏராளம். செய்வது தவறு என்று நமக்கு புரியாத வரை நாம் அனைவருமே புத்தர்கள் தாம் - நம் மனதளவில். அது போன்றதொரு நிகழ்வை தான் இந்த மாதம் எனக்கு பாடமாக கற்பித்து நாளையோடு விடைப்பெறுகிறது. அது என்னவென்று அறிய, நீங்கள் காட்டும் ஆர்வத்தைப் போலவே நானும் அதை எழுதிட இங்கு சித்தமாக இருக்கிறேன்.

2.மிஸ்டர் மரமண்டை31 May 2014 at 10:37:00 GMT+5:30

to whomsoever it may concern (2)

நண்பர்களே, singathin.blogspot.in என்ற எனது சமீபத்திய வலைதளத்தில் - நமது ஆசிரியர் விஜயன் அவர்களின் படைப்பான ''சிங்கத்தின் சிறு வயதில்'' தொடரை பதிவிட்டு வந்தது உங்களில் சிலருக்காவது தெரிந்திருக்கலாம். ஆனால், ஒருவரின் எழுத்தையோ அல்லது அவரின் படைப்பையோ - அவரின் அனுமதியன்றி வலையேற்றம் செய்வதோ ; scanning செய்வதோ அல்லது scanlation செய்வதோ copyright சட்டப்படி தவறு என்று எனக்கு உணர்த்தப்பட்டதால், உடனடியாக 21 பாகங்கள் பூர்த்தியடைந்த நிலையில் அந்த வலைதளத்தை 15 நாட்களுக்கு முன்பாக டெலிட் செய்து விட்டேன் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன்.

மேலும், தவறான என் செயலுக்கு மிகவும் வருந்துகிறேன். நன்றி !

அன்புடன்
மிஸ்டர் மரமண்டை

Sunday, 13 April 2014

அதிரவைக்கும் ஓர் அலசல் ரிப்போர்ட் (1)


மிஸ்டர் மரமண்டை1 March 2014 21:04:00 GMT+5:30

அதிரவைக்கும் ஓர் அலசல் ரிப்போர்ட் !


* கமெண்ட்களின் எண்ணிக்கை பதிவு தோறும் 300/ஐ தாண்டினாலும், பங்களிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை 30/ஐ தாண்டாத மர்மம் என்ன ? அதிரவைக்கும் ஓர் அலசல் ரிப்போர்ட் விரைவில் - உங்கள் அபிமான லயன் முத்து வலைதளத்தில்...

* கருத்தில் வல்லினமும் ; எழுத்தில் மெல்லினமும் ; நய்யாண்டியில் இடையினமும் கலந்து எழுதிய பல வாசகர்கள், இந்த 300 லிலும் 30 லிலும் அடங்காத வனவாசம் எதனால் ? அதிரவைக்கும் ஓர் அலசல் ரிப்போர்ட் விரைவில் - உங்கள் அபிமான லயன் முத்து வலைதளத்தில்...

* கமெண்ட்களின் எண்ணிக்கை 300/ஐ எளிதாக தாண்டுவது இதனாலா ?

1. +1
2. வாழ்த்துகள்
3. ஒற்றை வார்த்தை knockout அல்லது மூக்கு அவுட்
4. போரடிக்கும் டைகர் vs டெக்ஸ்
5. fb ரக கமெண்ட்கள் 

அதிரவைக்கும் ஓர் அலசல் ரிப்போர்ட் விரைவில் - உங்கள் அபிமான லயன் முத்து வலைதளத்தில்...

Ramesh Kumar1 March 2014 21:10:00 GMT+5:30

@மிஸ்டர் மரமண்டை, ஏதே Plan-உடன் வந்து ஒரு Message சொல்வதுபோல் உள்ளது. Plan இல்லாமல் இயல்பாக மனதில் தோன்றியதை தெரிப்பது Straightforward - நேராகப் பயன்படும்.. எதுக்கு இந்த Indirect messages? யாரும் இங்கே Comment எண்ணிக்கையை பெரிதாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை - as long as feedbacks shared along.

Anyway, I will participate only in the witty comments only.
மிஸ்டர் மரமண்டை1 March 2014 21:38:00 GMT+5:30

Ramesh Kumar:

அவரவர் மனதில் படுவதை அவரவர் பாணியில் எழுதுகிறோமேயன்றி இதில் ப்ளான் செய்து பதிவிடுவதோ ; மறைமுகமாக சாடுவதோ - என்று ஏதுமில்லை. பொதுவாக கூற வேண்டுமானால் இரண்டு மாதகாலமாக தொடரும் டைகர் vs டெக்ஸ் கமெண்ட்கள் அர்த்தமற்றதாகவும் ; மிகவும் அயர்ச்சியை தருவதாகவும் உள்ளது என்பது என் கருத்து. அதை என் பாணியில் கூறியுள்ளேன் ; அவ்வளவுதான் !

பொதுவாகவே 30 நபர் ஒத்து போகும் ஒரு விஷயத்தில் ஒருவர் மாற்றுக்  கருத்து கொள்ளும் போது அவர் ப்ளான் செய்து பதிவிடுவதாக தோன்றுவதில் வியப்பேதுமில்லை ; அதற்காக அல்லது அவர்களுக்காக அவரும் அவற்றிற்காக ஒத்துப்போக நினைப்பதில் தனித்தன்மை என்று ஏதுமில்லை !

வாழ்த்துகள் - பற்றி ஏற்கனவே சிலர் இங்கு அபிபிப்ராயம் தெரிவித்துள்ளனர். அதில் காசோ மற்றும் ஆதி தாமிரா அவர்களின் கருத்துகளை நான் பகிரங்கமாக ஆதரிக்கிறேன். மிக வேகமாக நம் வலைதளம் பிரபலம் அடைந்து வருகிறது ; புதிதாக பார்வையிட வரும் நண்பர்களுக்கு பழைய வாசகர்களான நாம் பதிவிடும் விஷயங்கள் எப்படிப்பட்டவையாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை தூண்டியதன் விளைவே என் முந்தைய பதிவு. மற்றபடி இதில் ப்ளான் செய்ய - இங்கு என்ன நாடாளுமன்ற தேர்தலா நடக்கிறது :D

//Anyway, I will participate only in the witty comments only// - தனிப்பட்ட முறையில் நீங்கள் என் பதிவை எடுத்து கொண்டதில் மிகவும் வருத்தமடைகிறேன் ; நீங்கள் உங்கள் பாணியில் பதிவிடுவதை மனதார வரவேற்கிறேன் ; பத்தோடு பதினொன்றாக என் கருத்தும் இங்கு பதிவாவதையே நான் மிகவும் விரும்புகிறேன். எனவே வாசகர்களின் பொது நலன் கருதி ''அதிரவைக்கும் ஓர் அலசல் ரிப்போர்ட்'' இக்கணமே கைவிடப்படுகிறது..!
senthilwest2000@ Karumandabam Senthil1 March 2014 23:11:00 GMT+5:30

மிஸ்டர் மரமண்டை! காரசாரமான அலசலை இங்கே வெளியிட மனமில்லையேன்றால் உங்கள் Blogல் வெளியிட்டு linkஐ இங்கு share செய்யலாமே!
மிஸ்டர் மரமண்டை2 March 2014 09:48:00 GMT+5:30

நன்றி மிஸ்டர் செந்தில். ஆனால் அதற்கு இது சரியான தருணமல்ல என்றே தோன்றுகிறது. பலமுறை சில விஷயங்களை பொதுவில் பகிர வேண்டும் என்று நினைத்தாலும் அது முடியாமலேயே போகிறது. உதாரணமாக நம் தளத்தில் தற்போது பதிவிடப்படும் கமெண்ட்கள் பெரும்பாலும் காற்றுக்குமிழி போன்றே இருப்பதாக தோன்றுகிறது. அதுவே சிலநேரம் நீர்க்குமிழி போன்றே எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இவைகள் நிரந்தரமானவையா அல்லது ரசிக்கத்தக்கவைகளா என்பதை பற்றி யாரும் கவலை கொள்வதில்லை.

முன்பு வாசக நண்பர் பாலசுப்ரமணியன் அவர்கள் நம் லயன் முத்து வலைதளத்தை பற்றி குறிப்பிடும்போது - விமர்சன மேடை, அரட்டை அரங்கமாக மாறிய பின்னர் திண்ணை பேச்சாக மாறிவிடுமோ என்ற (வீண்) பயத்திற்காக எழுதுகிறேன் என்று ஆசிரியருக்கு கடிதம் எழுதியிருந்தார். இது நிற்க ;

மாறாக இங்கு தொடர்ந்து நடைபெறும் டைகர் vs டெக்ஸ் விவாதங்கள் நம்மை ஒரு பக்கம் சாய்த்து விடுவதாகவே இருக்கிறது. இது மேலும் தொடர்ந்தால் டைகர் ரசிகர்கள் டெக்ஸ் வில்லர் படிக்கும் போது அவரின் பலவீனம் மட்டுமே கண்களுக்கு புலப்பட்டு அங்கே நம் காமிக்ஸ் [டெக்ஸ்] ரசனையை நிரந்தரமாக இழந்துவிடும் அபாயம் நிச்சயமாக இருக்கிறது. போலவே டெக்ஸ் ரசிகர்கள் டைகரை ரசிப்பதை விடுத்து அவரின் கதையை எப்படி மட்டம் தட்டலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். இன்று என் கருத்து நகைப்புக்குரிய விஷயமாக இருக்கலாம். ஆனால் நாளை நடப்பதை யாரறிவார் ? எதுவுமே அளவுக்கு மீறினால் அது நஞ்சாகத்தான் மாறும் என்பது விதி !

இதுபோல இன்னும் பல வித்தியாசமான விஷயங்களை பதிவிட நினைத்தாலும் அதற்கு இது சரியான தருணமல்ல!
sundaramoorthy j2 March 2014 14:36:00 GMT+5:30

மிஸ்டர் மரமண்டை ....! என்னுடைய பதிவின் இடையே உங்களை வம்புக்கு இழுபதின் காரணம் உங்களின் பதிவுகள் எனக்கு பிடித்திருப்பது தான் . வெட்டித்தனம் இல்லாத நியாமான பதிவுகள் . உங்களின் அலசல் ரிப்போர்ட்டை கண்டிப்பாக பதிவிடவும்

மிஸ்டர் மரமண்டை2 March 2014 15:37:00 GMT+5:30

மிக்க நன்றி.. மிஸ்டர் சுந்தரமூர்த்தி !

அதிரவைக்கும் ஓர் அலசல் ரிப்போர்ட் - தற்போது தோன்றிய சிந்தனை அல்ல. முன்பு ஒரு முறை தொடரும் ஒரு யாத்திரை ! பதிவில் நம் எடிட்டர் விஜயன் அவர்கள் - //சமீபமாய் இங்கே நம் பதிவுகளில் நண்பர்களின் பங்களிப்பு வெறும் பார்வைகளோடு நின்று வருவது அப்பட்டமாய்த் தெரிகிறது. தினமும் சராசரியாய் 1500 பார்வைகள் என்றாலும் பின்னூட்டங்களின் எண்ணிக்கை கணிசமாய்க் குறைந்துள்ளதில் இரகசியம் ஏதுமில்லை தானே ?// - இவ்வாறு எழுதியிருந்தார்.

அன்று மேலோட்டமாக சிந்தித்தப்போது என் மனதில் நிழலாடிய எண்ணங்களே - நேற்றைய தினம் 'அதிரவைக்கும் ஓர் அலசல் ரிப்போர்ட்' - என்ற தலைப்பை திருடிச் சென்றது. அதை விரிவாக பதிவிட எத்தனித்தக்கும் போது உள்ளதை உள்ளபடி அல்லது நான் எண்ணியதை எண்ணியபடி பதிவிட வேண்டிய நிலை வருமானால் அது எனக்கு நன்மையை சேர்ப்பதாக அமையாது என்பது திண்ணம். இது நிற்க ;

மேலும், தற்போது தொடரும் 300+ கமெண்ட்கள் - பெரும்பான்மையான வலைதள வாசகர்களுக்கு சுவாரசியத்தை ஏற்படுத்தாத நிலை தொடருமானால் மீண்டும் நம் வலைதளம் ஒருவித தொய்வை நிச்சயமாக எட்டும் என்பது என் கணிப்பு. [அப்படி நடக்கா விட்டால் மிகவும் சந்தோஷமே] அதுபோக இங்கே பதிவிடும் வாசகர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதே நேரம் இங்கே பதிவிடாமல் தள்ளி நிற்கும் போது பழைய ஈர்ப்பு வருவதே இல்லை. இது போல் நிச்சயமாக இன்னும் பலருக்கும் இருக்கலாம் - இது போன்றதொரு நிலை இந்த வலைதள தொய்வுக்கு விரைவில் வழிவகுக்கலாம் என்பது என் கருத்து. இருந்தாலும் தற்சமயம் அதிரவைக்கும் ஓர் அலசல் ரிப்போர்ட்/ஐ எழுத ஆர்வமில்லை என்பதே உண்மையும் கூட. தங்களின் மாறாத அன்புக்கு இந்த பதிவே என் கைம்மாறாகட்டும் ..!

மிஸ்டர் மரமண்டை4 March 2014 08:20:00 GMT+5:30

Attention : கோட்டு சூட்டு நாட்டாமை & மைனர் காட்டுப்பூச்சி விஜய் ;

ஐயன்மீர்,

தங்களுக்கான கடிதம் நேற்றைய இரவு எழுதப்பட்டு - இரவே தபாலில் சேர்க்கப்பட்டு விட்டது. எதிர்வரும் வியாழன் அல்லது வெள்ளி அன்று புதிய பதிவில் அது தங்களை வந்தடையும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. எனவே தங்களின் காமிக்ஸ் - கமெண்ட் சேவையை எப்பொழுதும் போல் தடங்கலற்ற முறையில் தொடர்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

நன்றி.மிஸ்டர் மரமண்டை8 March 2014 10:30:00 GMT+5:30

அனுப்புநர் :

மரமண்டை,
கும்மிருட்டான் பட்டி.

பெறுநர் :

கோட்டு சூட்டு நாட்டாமை,
எட்டுபட்டி கட்ட பஞ்சாயத்து,
நிலாச்சோறு பாலாறு.

ஐயா,

மொதல்ல என்ன மன்னிச்சுட்டேன்னு ஒரு வார்த்த சொல்லுங்க எசமான்.. ஒரு வருசதுல ஆறுமாசம் கமெண்ட் போடாம - காணாம போற நா அப்படி பேசியிருக்கக் கூடாதுதான். ஆனா அப்ப எனக்கு தெரியலயே.... எஜமான்.. நான் செஞ்சதெல்லாம் தப்புதான்னு எனக்கு 'மைனர் காட்டுப்பூச்சி விஜய்' சொலீர்னு அன்னிக்கே சொல்லிப்புட்டாரு எசமான்...ஒரு நொடியில நாம தோத்து போயிடுவோம்னு 12.59 க்கு கமெண்ட பினிஷ் செய்ஞ்சு என்னோட அறிவுக்கண்ண தொறந்துட்டாரு எசமான்..

ஒரு மணிக்கு மணியடிச்சு மொக்க கமெண்ட படிக்க வைக்கிற என் மொபைல உங்ககிட்ட அடமானமா வச்சிடலாமுனு இருக்கிறேன் எசமான்.. ஒருவேள நீங்க என்ன மன்னிக்கறதா இருந்தா இனி என்னோட மொபைல் நோட்டிபிகேஷன் சர்வீஸ கேன்சல் செஞ்சுட்டு ரா 10 மணிக்கு மேல சைலண்ட் மோடுல மட்டும் போட்டுக்குறேன் நாட்டாமை... இனி நீங்களும் எட்டுபட்டி ஜமின் மைனர் காட்டுப்பூச்சி விஜய் யும் எத்தன கமெண்ட் வேணுமினாலும் போட்டுக்குங்க ; எத்தன மணிக்கு வேணுமினாலும் போட்டுக்குங்க ; இனி நா வாய தொறக்க மாட்டேன் சாமி...

அப்ப நா உத்தரவு வாங்கிக்கிறேன் நாட்டாம !

cc to :

மைனர் காட்டுப்பூச்சி விஜய்,
எட்டுபட்டி ஜமின்,
எகத்தாளப் பட்டி.

இன்றைய தத்துவம் : நமக்கும் நம் பதிவுக்கும் சேதாரமில்லாத ஒன்றே கமெண்ட் எனப்படும் :)Meeraan13 March 2014 02:57:00 GMT+5:30

அனுப்புனர் :-

டெக்ஸ் ரசிகன்.
மஞ்சள் வீரா பட்டி.

பெறுனர் :-

மரத்தடி வாத்தியார்.
மிரட்டல் பள்ளிகூடம்.
கீழ்படியாமை பட்டி.

ஐயா !

ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவ ரெய்தாப் பழி.

என்ற குரளின் விளக்கத்தை உங்கள் நடவடிக்கைகளில் இருந்து விளங்கி கொண்டேன். அதற்கு உங்களுக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பி.கு:-
இரவு 1 மணிக்கு மணியடிச்சா தூக்க கலக்கத்தில் தவறுதலாக உங்களுடைய பழைய மொக்க கமெண்டை படித்து விட்டு மற்றவர்களை குற்றம் சொல்ல வேண்டாமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி வாத்தியாரைய்யா !Erode VIJAY13 March 2014 08:35:00 GMT+5:30

அந்தக் குரலுக்கான விளக்கத்தை இங்கே விளக்கினால் நானும் கொஞ்சம் விளங்கிக்கொள்வேன் மீரான் அவர்களே...கைநாட்டு கத்துகுட்டி13 March 2014 08:40:00 GMT+5:30

Reading between the lines ?!

அன்புடையீர்,

மேலே காணப்படும் மொட்டைக் கடிதம் தனக்குரிய பதிலை பெரும் தகுதியை இங்கு இழந்து நிற்கிறது. இருந்தாலும் எங்கள் குருஜி யை களங்கப்படுத்துவதாக அமைந்து இருப்பதால் சிறு விளக்கம் ஒன்றை அளிக்க நாங்கள் கடமைப் பட்டுள்ளோம் ;

மொக்கை கமெண்ட் யாதெனில், கடந்த இரண்டு மாத காலமாக டைகர் vs டெக்ஸ் - விவாதம் என்ற பெயரில் விறுவிறுப்பாக தொடங்கி - அதன் அந்திம காலத்தில் - கருத்திழந்து, களையிழந்து, அதன் கவர்ச்சியிழந்து கடமைக்கு பதிவிடப்பட்ட பதிவுகளே ஆகும். அவை யாவும் சரக்கின்றி முறுக்கு வித்த கதையாம் :) எனவே இடையில் உள்ள வார்த்தையை மட்டும் எடுத்து அதற்கு அரிதாரம் பூசி நாடக மேடைக்கு அழைத்து வரவேண்டாமே !

இன்றைய கேள்வியும் அதற்கான பதிலும் :

ஈயடிச்சான் காப்பி என்பதற்கு ஒரு உதாரணம் தருக ;

நேற்று சைனா இன்று நைனா :)
கைநாட்டு கத்துகுட்டி13 March 2014 08:45:00 GMT+5:30

தந்திரத்தில் நரியை மிஞ்சுகிறது இந்த குறும்பு பூனை :)
கேள்வியும் பதிலும் : (Ramesh Kumar2 March 2014 18:47:00 GMT+5:30)

காக்கை (& பாட்டி) வடை சுட்ட கதை சம்பந்தமான ஒரு Comment-க்கு நான் பதிலளிக்கப்போய் - திடுதிப்பென்று மிஸ்டர் மரமண்டை ஒரு புது கருத்தை முன்வைத்தார். அவர் முன்வைத்த Points கவனத்தில் கொள்ளும்படி இருந்தாலும் அந்த Casual Joke Discussion-க்கு நடுவில் ஏன் அதை முன்வைத்தார் என்பது புரியவில்லை ?

பதில் : ஒரு கிராமத்தில் சிறு பிரச்சனை என்றால்  உடனே நாம் நாட்டாமை'யின்  முன்னிலையில் தானே பஞ்சாயத்து நடத்துவோம் :) அதுவுமல்லாமல் லயன் ப்ளாகை பொருத்தவரை - ஒரு விஷயத்தை விருப்பு வெறுப்பற்று  சமநிலையில் அணுகவும் ; தெளிவாக சிந்திக்கவும் தெரிந்தவரில் நீங்கள் முதன்மையானவர் என்பதால் தான் !

[அதிரவைக்கும் ஓர் அலசல் ரிப்போர்ட் (2) - எழுதும் எண்ணம்  தற்போது இல்லை]


லாஸ்ட்லைன் : நமக்கும் நம் பதிவுக்கும் சேதாரமில்லாத ஒன்றே கமெண்ட் எனப்படும் :)