Follow by Email

Sunday, 13 April 2014

அதிரவைக்கும் ஓர் அலசல் ரிப்போர்ட் (1)


மிஸ்டர் மரமண்டை1 March 2014 21:04:00 GMT+5:30

அதிரவைக்கும் ஓர் அலசல் ரிப்போர்ட் !


* கமெண்ட்களின் எண்ணிக்கை பதிவு தோறும் 300/ஐ தாண்டினாலும், பங்களிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை 30/ஐ தாண்டாத மர்மம் என்ன ? அதிரவைக்கும் ஓர் அலசல் ரிப்போர்ட் விரைவில் - உங்கள் அபிமான லயன் முத்து வலைதளத்தில்...

* கருத்தில் வல்லினமும் ; எழுத்தில் மெல்லினமும் ; நய்யாண்டியில் இடையினமும் கலந்து எழுதிய பல வாசகர்கள், இந்த 300 லிலும் 30 லிலும் அடங்காத வனவாசம் எதனால் ? அதிரவைக்கும் ஓர் அலசல் ரிப்போர்ட் விரைவில் - உங்கள் அபிமான லயன் முத்து வலைதளத்தில்...

* கமெண்ட்களின் எண்ணிக்கை 300/ஐ எளிதாக தாண்டுவது இதனாலா ?

1. +1
2. வாழ்த்துகள்
3. ஒற்றை வார்த்தை knockout அல்லது மூக்கு அவுட்
4. போரடிக்கும் டைகர் vs டெக்ஸ்
5. fb ரக கமெண்ட்கள் 

அதிரவைக்கும் ஓர் அலசல் ரிப்போர்ட் விரைவில் - உங்கள் அபிமான லயன் முத்து வலைதளத்தில்...

Ramesh Kumar1 March 2014 21:10:00 GMT+5:30

@மிஸ்டர் மரமண்டை, ஏதே Plan-உடன் வந்து ஒரு Message சொல்வதுபோல் உள்ளது. Plan இல்லாமல் இயல்பாக மனதில் தோன்றியதை தெரிப்பது Straightforward - நேராகப் பயன்படும்.. எதுக்கு இந்த Indirect messages? யாரும் இங்கே Comment எண்ணிக்கையை பெரிதாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை - as long as feedbacks shared along.

Anyway, I will participate only in the witty comments only.
மிஸ்டர் மரமண்டை1 March 2014 21:38:00 GMT+5:30

Ramesh Kumar:

அவரவர் மனதில் படுவதை அவரவர் பாணியில் எழுதுகிறோமேயன்றி இதில் ப்ளான் செய்து பதிவிடுவதோ ; மறைமுகமாக சாடுவதோ - என்று ஏதுமில்லை. பொதுவாக கூற வேண்டுமானால் இரண்டு மாதகாலமாக தொடரும் டைகர் vs டெக்ஸ் கமெண்ட்கள் அர்த்தமற்றதாகவும் ; மிகவும் அயர்ச்சியை தருவதாகவும் உள்ளது என்பது என் கருத்து. அதை என் பாணியில் கூறியுள்ளேன் ; அவ்வளவுதான் !

பொதுவாகவே 30 நபர் ஒத்து போகும் ஒரு விஷயத்தில் ஒருவர் மாற்றுக்  கருத்து கொள்ளும் போது அவர் ப்ளான் செய்து பதிவிடுவதாக தோன்றுவதில் வியப்பேதுமில்லை ; அதற்காக அல்லது அவர்களுக்காக அவரும் அவற்றிற்காக ஒத்துப்போக நினைப்பதில் தனித்தன்மை என்று ஏதுமில்லை !

வாழ்த்துகள் - பற்றி ஏற்கனவே சிலர் இங்கு அபிபிப்ராயம் தெரிவித்துள்ளனர். அதில் காசோ மற்றும் ஆதி தாமிரா அவர்களின் கருத்துகளை நான் பகிரங்கமாக ஆதரிக்கிறேன். மிக வேகமாக நம் வலைதளம் பிரபலம் அடைந்து வருகிறது ; புதிதாக பார்வையிட வரும் நண்பர்களுக்கு பழைய வாசகர்களான நாம் பதிவிடும் விஷயங்கள் எப்படிப்பட்டவையாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை தூண்டியதன் விளைவே என் முந்தைய பதிவு. மற்றபடி இதில் ப்ளான் செய்ய - இங்கு என்ன நாடாளுமன்ற தேர்தலா நடக்கிறது :D

//Anyway, I will participate only in the witty comments only// - தனிப்பட்ட முறையில் நீங்கள் என் பதிவை எடுத்து கொண்டதில் மிகவும் வருத்தமடைகிறேன் ; நீங்கள் உங்கள் பாணியில் பதிவிடுவதை மனதார வரவேற்கிறேன் ; பத்தோடு பதினொன்றாக என் கருத்தும் இங்கு பதிவாவதையே நான் மிகவும் விரும்புகிறேன். எனவே வாசகர்களின் பொது நலன் கருதி ''அதிரவைக்கும் ஓர் அலசல் ரிப்போர்ட்'' இக்கணமே கைவிடப்படுகிறது..!
senthilwest2000@ Karumandabam Senthil1 March 2014 23:11:00 GMT+5:30

மிஸ்டர் மரமண்டை! காரசாரமான அலசலை இங்கே வெளியிட மனமில்லையேன்றால் உங்கள் Blogல் வெளியிட்டு linkஐ இங்கு share செய்யலாமே!
மிஸ்டர் மரமண்டை2 March 2014 09:48:00 GMT+5:30

நன்றி மிஸ்டர் செந்தில். ஆனால் அதற்கு இது சரியான தருணமல்ல என்றே தோன்றுகிறது. பலமுறை சில விஷயங்களை பொதுவில் பகிர வேண்டும் என்று நினைத்தாலும் அது முடியாமலேயே போகிறது. உதாரணமாக நம் தளத்தில் தற்போது பதிவிடப்படும் கமெண்ட்கள் பெரும்பாலும் காற்றுக்குமிழி போன்றே இருப்பதாக தோன்றுகிறது. அதுவே சிலநேரம் நீர்க்குமிழி போன்றே எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இவைகள் நிரந்தரமானவையா அல்லது ரசிக்கத்தக்கவைகளா என்பதை பற்றி யாரும் கவலை கொள்வதில்லை.

முன்பு வாசக நண்பர் பாலசுப்ரமணியன் அவர்கள் நம் லயன் முத்து வலைதளத்தை பற்றி குறிப்பிடும்போது - விமர்சன மேடை, அரட்டை அரங்கமாக மாறிய பின்னர் திண்ணை பேச்சாக மாறிவிடுமோ என்ற (வீண்) பயத்திற்காக எழுதுகிறேன் என்று ஆசிரியருக்கு கடிதம் எழுதியிருந்தார். இது நிற்க ;

மாறாக இங்கு தொடர்ந்து நடைபெறும் டைகர் vs டெக்ஸ் விவாதங்கள் நம்மை ஒரு பக்கம் சாய்த்து விடுவதாகவே இருக்கிறது. இது மேலும் தொடர்ந்தால் டைகர் ரசிகர்கள் டெக்ஸ் வில்லர் படிக்கும் போது அவரின் பலவீனம் மட்டுமே கண்களுக்கு புலப்பட்டு அங்கே நம் காமிக்ஸ் [டெக்ஸ்] ரசனையை நிரந்தரமாக இழந்துவிடும் அபாயம் நிச்சயமாக இருக்கிறது. போலவே டெக்ஸ் ரசிகர்கள் டைகரை ரசிப்பதை விடுத்து அவரின் கதையை எப்படி மட்டம் தட்டலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். இன்று என் கருத்து நகைப்புக்குரிய விஷயமாக இருக்கலாம். ஆனால் நாளை நடப்பதை யாரறிவார் ? எதுவுமே அளவுக்கு மீறினால் அது நஞ்சாகத்தான் மாறும் என்பது விதி !

இதுபோல இன்னும் பல வித்தியாசமான விஷயங்களை பதிவிட நினைத்தாலும் அதற்கு இது சரியான தருணமல்ல!
sundaramoorthy j2 March 2014 14:36:00 GMT+5:30

மிஸ்டர் மரமண்டை ....! என்னுடைய பதிவின் இடையே உங்களை வம்புக்கு இழுபதின் காரணம் உங்களின் பதிவுகள் எனக்கு பிடித்திருப்பது தான் . வெட்டித்தனம் இல்லாத நியாமான பதிவுகள் . உங்களின் அலசல் ரிப்போர்ட்டை கண்டிப்பாக பதிவிடவும்

மிஸ்டர் மரமண்டை2 March 2014 15:37:00 GMT+5:30

மிக்க நன்றி.. மிஸ்டர் சுந்தரமூர்த்தி !

அதிரவைக்கும் ஓர் அலசல் ரிப்போர்ட் - தற்போது தோன்றிய சிந்தனை அல்ல. முன்பு ஒரு முறை தொடரும் ஒரு யாத்திரை ! பதிவில் நம் எடிட்டர் விஜயன் அவர்கள் - //சமீபமாய் இங்கே நம் பதிவுகளில் நண்பர்களின் பங்களிப்பு வெறும் பார்வைகளோடு நின்று வருவது அப்பட்டமாய்த் தெரிகிறது. தினமும் சராசரியாய் 1500 பார்வைகள் என்றாலும் பின்னூட்டங்களின் எண்ணிக்கை கணிசமாய்க் குறைந்துள்ளதில் இரகசியம் ஏதுமில்லை தானே ?// - இவ்வாறு எழுதியிருந்தார்.

அன்று மேலோட்டமாக சிந்தித்தப்போது என் மனதில் நிழலாடிய எண்ணங்களே - நேற்றைய தினம் 'அதிரவைக்கும் ஓர் அலசல் ரிப்போர்ட்' - என்ற தலைப்பை திருடிச் சென்றது. அதை விரிவாக பதிவிட எத்தனித்தக்கும் போது உள்ளதை உள்ளபடி அல்லது நான் எண்ணியதை எண்ணியபடி பதிவிட வேண்டிய நிலை வருமானால் அது எனக்கு நன்மையை சேர்ப்பதாக அமையாது என்பது திண்ணம். இது நிற்க ;

மேலும், தற்போது தொடரும் 300+ கமெண்ட்கள் - பெரும்பான்மையான வலைதள வாசகர்களுக்கு சுவாரசியத்தை ஏற்படுத்தாத நிலை தொடருமானால் மீண்டும் நம் வலைதளம் ஒருவித தொய்வை நிச்சயமாக எட்டும் என்பது என் கணிப்பு. [அப்படி நடக்கா விட்டால் மிகவும் சந்தோஷமே] அதுபோக இங்கே பதிவிடும் வாசகர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதே நேரம் இங்கே பதிவிடாமல் தள்ளி நிற்கும் போது பழைய ஈர்ப்பு வருவதே இல்லை. இது போல் நிச்சயமாக இன்னும் பலருக்கும் இருக்கலாம் - இது போன்றதொரு நிலை இந்த வலைதள தொய்வுக்கு விரைவில் வழிவகுக்கலாம் என்பது என் கருத்து. இருந்தாலும் தற்சமயம் அதிரவைக்கும் ஓர் அலசல் ரிப்போர்ட்/ஐ எழுத ஆர்வமில்லை என்பதே உண்மையும் கூட. தங்களின் மாறாத அன்புக்கு இந்த பதிவே என் கைம்மாறாகட்டும் ..!

மிஸ்டர் மரமண்டை4 March 2014 08:20:00 GMT+5:30

Attention : கோட்டு சூட்டு நாட்டாமை & மைனர் காட்டுப்பூச்சி விஜய் ;

ஐயன்மீர்,

தங்களுக்கான கடிதம் நேற்றைய இரவு எழுதப்பட்டு - இரவே தபாலில் சேர்க்கப்பட்டு விட்டது. எதிர்வரும் வியாழன் அல்லது வெள்ளி அன்று புதிய பதிவில் அது தங்களை வந்தடையும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. எனவே தங்களின் காமிக்ஸ் - கமெண்ட் சேவையை எப்பொழுதும் போல் தடங்கலற்ற முறையில் தொடர்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

நன்றி.மிஸ்டர் மரமண்டை8 March 2014 10:30:00 GMT+5:30

அனுப்புநர் :

மரமண்டை,
கும்மிருட்டான் பட்டி.

பெறுநர் :

கோட்டு சூட்டு நாட்டாமை,
எட்டுபட்டி கட்ட பஞ்சாயத்து,
நிலாச்சோறு பாலாறு.

ஐயா,

மொதல்ல என்ன மன்னிச்சுட்டேன்னு ஒரு வார்த்த சொல்லுங்க எசமான்.. ஒரு வருசதுல ஆறுமாசம் கமெண்ட் போடாம - காணாம போற நா அப்படி பேசியிருக்கக் கூடாதுதான். ஆனா அப்ப எனக்கு தெரியலயே.... எஜமான்.. நான் செஞ்சதெல்லாம் தப்புதான்னு எனக்கு 'மைனர் காட்டுப்பூச்சி விஜய்' சொலீர்னு அன்னிக்கே சொல்லிப்புட்டாரு எசமான்...ஒரு நொடியில நாம தோத்து போயிடுவோம்னு 12.59 க்கு கமெண்ட பினிஷ் செய்ஞ்சு என்னோட அறிவுக்கண்ண தொறந்துட்டாரு எசமான்..

ஒரு மணிக்கு மணியடிச்சு மொக்க கமெண்ட படிக்க வைக்கிற என் மொபைல உங்ககிட்ட அடமானமா வச்சிடலாமுனு இருக்கிறேன் எசமான்.. ஒருவேள நீங்க என்ன மன்னிக்கறதா இருந்தா இனி என்னோட மொபைல் நோட்டிபிகேஷன் சர்வீஸ கேன்சல் செஞ்சுட்டு ரா 10 மணிக்கு மேல சைலண்ட் மோடுல மட்டும் போட்டுக்குறேன் நாட்டாமை... இனி நீங்களும் எட்டுபட்டி ஜமின் மைனர் காட்டுப்பூச்சி விஜய் யும் எத்தன கமெண்ட் வேணுமினாலும் போட்டுக்குங்க ; எத்தன மணிக்கு வேணுமினாலும் போட்டுக்குங்க ; இனி நா வாய தொறக்க மாட்டேன் சாமி...

அப்ப நா உத்தரவு வாங்கிக்கிறேன் நாட்டாம !

cc to :

மைனர் காட்டுப்பூச்சி விஜய்,
எட்டுபட்டி ஜமின்,
எகத்தாளப் பட்டி.

இன்றைய தத்துவம் : நமக்கும் நம் பதிவுக்கும் சேதாரமில்லாத ஒன்றே கமெண்ட் எனப்படும் :)Meeraan13 March 2014 02:57:00 GMT+5:30

அனுப்புனர் :-

டெக்ஸ் ரசிகன்.
மஞ்சள் வீரா பட்டி.

பெறுனர் :-

மரத்தடி வாத்தியார்.
மிரட்டல் பள்ளிகூடம்.
கீழ்படியாமை பட்டி.

ஐயா !

ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவ ரெய்தாப் பழி.

என்ற குரளின் விளக்கத்தை உங்கள் நடவடிக்கைகளில் இருந்து விளங்கி கொண்டேன். அதற்கு உங்களுக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பி.கு:-
இரவு 1 மணிக்கு மணியடிச்சா தூக்க கலக்கத்தில் தவறுதலாக உங்களுடைய பழைய மொக்க கமெண்டை படித்து விட்டு மற்றவர்களை குற்றம் சொல்ல வேண்டாமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி வாத்தியாரைய்யா !Erode VIJAY13 March 2014 08:35:00 GMT+5:30

அந்தக் குரலுக்கான விளக்கத்தை இங்கே விளக்கினால் நானும் கொஞ்சம் விளங்கிக்கொள்வேன் மீரான் அவர்களே...கைநாட்டு கத்துகுட்டி13 March 2014 08:40:00 GMT+5:30

Reading between the lines ?!

அன்புடையீர்,

மேலே காணப்படும் மொட்டைக் கடிதம் தனக்குரிய பதிலை பெரும் தகுதியை இங்கு இழந்து நிற்கிறது. இருந்தாலும் எங்கள் குருஜி யை களங்கப்படுத்துவதாக அமைந்து இருப்பதால் சிறு விளக்கம் ஒன்றை அளிக்க நாங்கள் கடமைப் பட்டுள்ளோம் ;

மொக்கை கமெண்ட் யாதெனில், கடந்த இரண்டு மாத காலமாக டைகர் vs டெக்ஸ் - விவாதம் என்ற பெயரில் விறுவிறுப்பாக தொடங்கி - அதன் அந்திம காலத்தில் - கருத்திழந்து, களையிழந்து, அதன் கவர்ச்சியிழந்து கடமைக்கு பதிவிடப்பட்ட பதிவுகளே ஆகும். அவை யாவும் சரக்கின்றி முறுக்கு வித்த கதையாம் :) எனவே இடையில் உள்ள வார்த்தையை மட்டும் எடுத்து அதற்கு அரிதாரம் பூசி நாடக மேடைக்கு அழைத்து வரவேண்டாமே !

இன்றைய கேள்வியும் அதற்கான பதிலும் :

ஈயடிச்சான் காப்பி என்பதற்கு ஒரு உதாரணம் தருக ;

நேற்று சைனா இன்று நைனா :)
கைநாட்டு கத்துகுட்டி13 March 2014 08:45:00 GMT+5:30

தந்திரத்தில் நரியை மிஞ்சுகிறது இந்த குறும்பு பூனை :)
கேள்வியும் பதிலும் : (Ramesh Kumar2 March 2014 18:47:00 GMT+5:30)

காக்கை (& பாட்டி) வடை சுட்ட கதை சம்பந்தமான ஒரு Comment-க்கு நான் பதிலளிக்கப்போய் - திடுதிப்பென்று மிஸ்டர் மரமண்டை ஒரு புது கருத்தை முன்வைத்தார். அவர் முன்வைத்த Points கவனத்தில் கொள்ளும்படி இருந்தாலும் அந்த Casual Joke Discussion-க்கு நடுவில் ஏன் அதை முன்வைத்தார் என்பது புரியவில்லை ?

பதில் : ஒரு கிராமத்தில் சிறு பிரச்சனை என்றால்  உடனே நாம் நாட்டாமை'யின்  முன்னிலையில் தானே பஞ்சாயத்து நடத்துவோம் :) அதுவுமல்லாமல் லயன் ப்ளாகை பொருத்தவரை - ஒரு விஷயத்தை விருப்பு வெறுப்பற்று  சமநிலையில் அணுகவும் ; தெளிவாக சிந்திக்கவும் தெரிந்தவரில் நீங்கள் முதன்மையானவர் என்பதால் தான் !

[அதிரவைக்கும் ஓர் அலசல் ரிப்போர்ட் (2) - எழுதும் எண்ணம்  தற்போது இல்லை]


லாஸ்ட்லைன் : நமக்கும் நம் பதிவுக்கும் சேதாரமில்லாத ஒன்றே கமெண்ட் எனப்படும் :)

14 comments:

 1. பாதி தூக்கத்தில் படித்ததாலோ என்னவோ, ஒண்ணும் புரியலை!!!!!

  ReplyDelete
  Replies
  1. அப்படியில்லை நண்பரே :) வழக்கம் போல் காப்பி, பேஸ்ட் பதிவுகள் தான் காரணம். பிறிதொரு சமயம் எழுதக்கூடிய பதிவுகளுக்கு இது ஒரு தொடக்கமாக அமைந்திருப்பதால் தான் இந்த பதிவு !

   Delete
 2. இப்போதுதான் மறுபடியும் படித்தேன்!!!!!!!!!!!!!!!1

  ReplyDelete
  Replies
  1. பதிவில் உள்ள கருத்துகள் உங்களுக்கு புரிந்ததா என்று நீங்கள் குறிப்பிடவேயில்லை :( ஆனால் ஒன்று மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும். யாருக்கு புரிந்தாலும் புரியாவிட்டாலும் எனக்கு என் பதிவுகள் நன்றாகவே புரிந்திருக்கிறது :)

   Delete
 3. //லாஸ்ட்லைன் : நமக்கும் நம் பதிவுக்கும் சேதாரமில்லாத ஒன்றே கமெண்ட் எனப்படும் :)//

  :)

  ReplyDelete
 4. King Viswa :

  ஆ.....!

  உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் சாரே ! இந்த தமிழ் காமிக்ஸ் பள்ளிக்கூடம் ஒரு திறமையான professor இல்லாமல் வெகு நாட்களாக வெறிச்சோடிக் கிடந்தது. ஆனால் இன்று உங்களின் வருகையால் இந்த பள்ளிக்கூடமே பெருமையடைகிறது ; அதுமட்டுமல்ல, வரும் கல்வியாண்டில் மிகச் சிறந்த இடத்தை எட்டிப் பிடிக்கும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமே இல்லை !

  situation song : ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது... :)

  ReplyDelete
 5. // நமக்கும் நம் பதிவுக்கும் சேதாரமில்லாத ஒன்றே கமெண்ட் எனப்படும் :) //

  வலைதளங்கள் / வலைப்பூக்களைப் பொருத்தவரையில் Viewer'களை பாதிக்காத / நோகச்செய்யாத கமெண்ட்ஸ் மட்டுமே யாருக்கும் சேதாரம் விளைவிக்காத கமெண்ட்ஸ் என்பது என் கருத்து. பங்கேற்பவர்களின் சேதாரத்தைவிட பார்வையாளர்களின் எண்ணிக்கை மிகவும் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம். (On each day / each comment)

  Discussion செய்யும் இருவருக்கு இடையிலுள்ள நையாண்டிகளும் / கொதிப்புகளும் பெரும்பாலும் மௌன வாசகர்களுக்கு பாதிப்பை உண்டுபண்ண வாய்ப்பில்லை. சிக்கல் எங்கேயென்றால் ஒரு குறிப்பிட்ட நபர் / நபர்களின் பொதுவான விருப்பங்களை எள்ளி நகையாடுவது மௌன வாசகர்களையும் நேரடியாகத் தாக்குவதுபோல அமையும். இந்த Awareness miss'ஆகும்போதுதான் - நீங்கள் சுட்டிக்காட்டிய திண்ணைப்பேச்சு வகை கமெண்ட்ஸ் தவிர்க்கவேண்டிய விஷயமாகிறது.

  கையில் 100% சுதந்திரம் கொடுக்கப்பட்டால் குறைந்தது 50% பொறுப்பும்/கடமையும் கொடுக்கப்படுகிறது என்று அர்த்தம் :D

  Anyway it was great to talk with you Mister Maramandai.

  : )

  ReplyDelete
  Replies
  1. Ramesh Kumar : How are you ?

   [ நமக்கும் நம் பதிவுக்கும் சேதாரமில்லாத ஒன்றே கமெண்ட் எனப்படும் ]

   இது 100 சதவீதம் எடிட்டர் விஜயன் அவர்களின் லயன் Blogக்கு மட்டுமே பொருந்தும் :)

   நடந்து முடிந்த பிரச்சனையின் முழு பரிமாணத்தையும் என்னால் உணரமுடிகிறது. ஒரு வாசகரின் (உங்களின்) உணர்வுகளை அனைவரும் துச்சமாக மதித்தது மிகவும் வருத்தமானது. எடிட்டர் ப்ளாக்/ல் உங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்பதே மிகவும் கசப்பான உண்மை :(

   * பிரச்சனைக்கான முதற் காரணம் !
   * காமெடி (!) என்று திசை திருப்பிய கமெண்ட்கள் !
   * ஆதியின்முதல் இரண்டு கமெண்ட் !
   * அப்பட்டமான நாடகத்தனம் !
   * ஸ்டீலின் மூடர் கூடம் கமெண்ட் !
   * கிறுக்கனின் நக்கல் !
   * மீண்டும் மீண்டும் உங்களை பதிவிடத் தூண்டிய பல வாசகரின் ஒரு பக்க சார்பு நிலை பதிவுகள் !

   என உங்களின் நரம்புகளில் உஷ்ணத்தை ஏற்றி ; உங்கள் உணர்ச்சிகளை சாகடித்த கொடுமைகளுக்கு அங்கே நியாயம் கிடைக்கவில்லை ; நிச்சயமாக கிடைக்கவேயில்லை. இந்த தொடர் நிகழ்வின் ஆரம்பப் புள்ளியும், அதன் மையக்கருத்தும், ஒரு matured வாசகரின் உணர்ச்சிகளும் - எடிட்டர் ப்ளாகில் ஒருவருக்கு கூடவா புரியவில்லை ?!

   நான் நீதிபதியாக இருந்திருந்தால் நீங்கள் நிரபராதி என்று தீர்ப்பளித்திருப்பேன் !

   Delete
  2. யார்பக்கம் நியாயம் என யோசிக்குமளவுக்கு கடினமான தளமல்ல - காமிக்ஸ் Blog'கள். ஒரு நாசூக்கான காமிக்ஸ் Discussion தீவிர சினிமா ரசிகர்களின் விவாதம்போல மாறும்போது இந்த சூழ்நிலைகள் சாத்தியம்தான். புரிந்து நகர்ந்துவிடுவது எனக்கு அவசியம்.

   @மிஸ்டர் மரமண்டை, இந்த Topic'ஐ இத்தோடு நிறுத்திக்கொள்வோம் என்பது என் அன்பான வேண்டுகோள் ;)

   Delete
  3. //இந்த Topic'ஐ இத்தோடு நிறுத்திக்கொள்வோம் என்பது என் அன்பான வேண்டுகோள்//

   நிச்சயமாக ; என் விருப்பமும் அதுவே ! ஏனெனில் என் மன பாரம் முழுவதும் மேலே உள்ள என் முதல் கமெண்டில் இறக்கி வைத்து விட்டபடியால் மனம் இலேசாகி விட்டது :)

   Delete
 6. நண்பர் மரமண்டை ....அவர்களுக்கு ....

  தாங்கள் மிகவும் சிரம பட்டு "" சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பை ஆசிரியர் பதிவில் வெளி இட்டு இருந்தீர்கள் .அதனை உங்கள் பதிவில் ஒரு பதிவாக இட்டால் அனைவருக்கும் வசதியாக இருக்குமே ...காரணம் ஆசிரியரின் 150 பதிவில் 300 க்கு மேல் உள்ள வாசகரின் பதிவில் அதை துலாவி எடுத்து படிப்பது அனைவருக்கும் சாத்தியம் ஆகாது .எனவே அடுத்த பதிவாக அதை இட்டால் அனைவருக்கும் நலம் .உங்கள் சிரமம் வீண் போக கூடாது .

  காத்திருக்கிறேன் ...

  ReplyDelete
  Replies
  1. Paranitharan K : நண்பரே, இதுபோன்ற ஆத்மார்த்தமான பின்னூட்டங்களைப் பார்த்து வெகு காலம் ஆகிவிட்டது. தங்களின் விருப்பப் படி அடுத்த பதிவை இன்று மாலைக்குள் பதிவிடுகிறேன். நன்றி !

   Delete
 7. ஆ.....!
  to be honest I am all new for Lion blog(max 4 to 5 months), but I am long time book reviewer in other portals (no details required here), i am approaching our Editor's blog with open mind, but there is such political game going i feel after reading your post of this. I dont know what to say, still turning old pages of our blog .....

  ReplyDelete
  Replies
  1. //*i am approaching our Editor's blog with open mind*//

   +1

   Delete