Follow by Email

Tuesday, 22 April 2014

சிங்கத்தின் சிறு வயதில் !

மிஸ்டர் மரமண்டை18 March 2014 20:41:00 GMT+5:30

சிங்கத்தின் சிறு வயதில் [1] ஆசிரியர் பிறந்த தின ஸ்பெஷல் !

பரணி vs பரணி - நடுவுல கொஞ்சம் ஈ.விஜய் ;
தடம் எண் 36 - தாரமங்கலம் to பெங்களூரு via ஈரோடு !

விரைவில்...

Stalemate to Classmate but no Checkmate :)
மிஸ்டர் மரமண்டை19 March 2014 15:01:00 GMT+5:30

சிங்கத்தின் சிறு வயதில் [2]

நண்பர்களே, நேற்று விதைத்து இன்று துளிர்விட்டு நிற்கும் பிரச்சனை அல்ல இது. எட்டு மாதங்களுக்கு முன்பாகவே பரணி & பரணி நேருக்கு நேர் நிகழ்ச்சி ஒன்று - இங்கே செவ்வனே நடந்தேறியது. இடைவெளி விட்டு இடைவிடாமல் போராடி வரும் போராட்டக் குழு தலைவரும் ; தலைவர் தளர்வடையும் போதெல்லாம் அவருக்கு தோள் கொடுத்து தாங்கி நிற்கும் போராட்டக் குழு செயலாளரும் இங்கு ஆற்றி வந்த களப் பணிகள் கொஞ்சநஞ்சமல்ல !

வெள்ளந்தி எழுத்துக்கும் ; ஊமை குசும்புக்கும் ஒரே குத்தகைதாரரான தாரமங்கலம் திரு.பரணிதரனின் வாழ்வின் லட்சியமே 'சிங்கத்தின் சிறு வயதில்' தனி புத்தக பதிப்பு கோரிக்கை என்பது நமெக்கெல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனி போன்றதாகும். போலவே இலையில் பரிமாறப்பட்ட வாழைப்பூ வடைகளை தனது இடது கரத்தால் இலாவகமாக ஒதுக்கி, அந்த சிறு வெற்றிடத்திலும் சிவகாசி நண்டு வறுவலை கிஞ்சித்தும் இடமின்றி சாதுர்யமாக இலையில் நிரப்பி full meals கட்டு கட்டி வந்த போராட்டக் குழு செயலாளர் ஈரோடு விஜய்/ன் போராட்டம் இலை மறைவு  காய் மறைவாக  நடந்தேறியதையும் நாம் கணித்தே வந்துள்ளோம் !


மிஸ்டர் மரமண்டை19 March 2014 15:23:00 GMT+5:30

சிங்கத்தின் சிறு வயதில் [3]

எதிர் முனையில் எனக்கு தெரிந்து தன் உள்ளக்கிடங்கை தைரியமாக திறந்தவர் பெங்களூரு பரணி மட்டுமே. இந்த விஷயத்தில் வாசக நண்பர் திரு. பெங்களூரு பரணியின் பதிவுகள் அசாத்தியமானது ; அதற்கான காரணமும் நிச்சயம் உள் நோக்கமற்றது. தம் அபிமான ஆசிரியர் சம்பந்தப்பட்டுள்ள இந்த விஷயத்தில் எதிர்க்கருத்து அல்லது மாற்றுக்கருத்து தெரிவிப்பது என்பது - ஆசிரியரின் பதிலை ஒவ்வொரு பதிவிலும் எதிர்நோக்கும் ஒரு ரெகுலர் வாசகனுக்கு தர்மச்சங்கடத்தை தோற்றுவிக்கும் செயலாகும் !

அவரைத் தவிர இதுவரை இடையில் இருமுறை, நம்ம நாட்டாமை பெருங்களத்தூர் ரமேஷ் - நடுநிலையை ஆதரித்து வந்துள்ளார். அவரின் பதிவுகள் சீர் தூக்கிப் பார்க்கும் நீதி தராசாய் செயல்பட்டு தீர்ப்பு வழங்கியது. ஆனால் வழமைப் போலவே ஒருப்பக்கமும் தாழாமல் இருப்பக்கமும் சமமாக நின்று Stalemate போன்றதொரு நிலையை தோற்று வித்திருக்கிறது !

இவை மட்டுமே நாம் இதுகாறும் கடந்து வந்த வரலாறு ; இனி ... ... ...


மிஸ்டர் மரமண்டை19 March 2014 18:05:00 GMT+5:30

சிங்கத்தின் சிறு வயதில் [4]

கிட்டத்தட்ட ஒரு வாழ்க்கை வரலாறு போன்ற - வெற்றிப் புத்தகமான 'சிங்கத்தின் சிறு வயதில்' முதல் தொகுப்பு குறைந்தப்பட்சம் எவ்வாறு இருக்க வேண்டும் ?

1.பூத வேட்டை அளவில் இருக்க வேண்டும் !
2.உயர்தர வெள்ளைத் தாள்களில் ஜொலிக்க வேண்டும் !
3.குறைந்தப்பட்சம் 120 பக்கங்களாவது இருத்தலே அழகு !
4.முன்னுரை ; பதிப்புரை இரண்டுமே இப்புத்தகத்தை அலங்கரிக்க வேண்டும் !
5.முதல் பாகமே என்றாலும் முற்றுப் பெற்றது போன்ற ஒரு தோற்றம் இருக்க வேண்டும் !
6.ஆசிரியர் விஜயனின் நிழற்படம் முன் அட்டையை முழுவதுமாக அலங்கரிக்க வேண்டும் !

ஆனால் இதுவரை வெளிவந்துள்ளதோ 35 பாகங்கள் மட்டுமே ; பூத வேட்டை அளவில் தோராயமாக 80 பக்கங்கள் வரலாம். அதன் தடிமனை புத்தகமாக கற்பனை செய்து பார்க்கக் கூட முடியவில்லை ; நோஞ்சானாக ஒரு user manual போன்றோ ; ஒரு catalogue போன்றோ ; ஒரு prospectus போன்றோ ஒரு புத்தகம் வெளிவந்தால் அதன் உள்ளே இருக்கும் தரமே கேள்விக்குரியதாக மாறி, மாற்றானின் கேலிக்குரியாதாகி விடும். ஆதியும் அந்தமும் இல்லாத ஒரு தொகுப்பாகவே இது காட்சியளிக்கக் கூடிய வாய்ப்பு அதிகம் !

சரி, தமிழ் காமிக்ஸ் தீவிர வாசகர்களாகிய நமக்கு மேற்கூறியுள்ள குறைந்தப்பட்ச அளவுகோல்கள் எல்லாம் அவசியமே இல்லை என்ற வாதமும் நம்மால் முழுமனதாக ஏற்றுக் கொள்ளக் கூடிய விஷயமே. ஆனால் ... ... ...
மிஸ்டர் மரமண்டை19 March 2014 18:52:00 GMT+5:30

சிங்கத்தின் சிறு வயதில் [5]

ஆசிரியர் இதுவரை எந்த உறுதியும் அளிக்காததன் காரணம் என்னவாக இருக்கக் கூடும் ?

1.வெற்றிப் பயணமே என்றாலும் இன்னும் ஒரு மைல்கல்லை எட்டவில்லை !
2.குறைந்தப்பட்சம் 2000/5000 புத்தகங்கள் பிரிண்ட் செய்ய வேண்டும் !
3.விலையா அல்லது இலவசமா என்பதை தீர்மானிக்க வேண்டும் !
4.இலவசம் என்றால் அரசியல்வாதிகளின் தேர்தல் அறிக்கை போன்று ஆகிவிடும் !
5.விலை நிர்ணயித்தால் வாங்குபவர்களைத் தேட வேண்டும் !
6.ஒரு சிலருக்காக மட்டுமே தொகுத்து வழங்கினால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் !
7.இன்னும் சில !

அப்படி என்றால் இதற்கு தீர்வு தான் என்ன ? அடுத்து வருகிறது ... ...


மிஸ்டர் மரமண்டை20 March 2014 09:40:00 GMT+5:30

சிங்கத்தின் சிறு வயதில் [6]

அன்புள்ள நண்பர் திரு.தாரமங்கலம் பரணிதரன் அவர்களுக்கு இந்த மரமண்டை வரையும் அன்பு மடல். நலம், நலமாய் வாழ வாழ்த்துகிறேன். தங்களை சில நாட்களாக இந்த வலைப்பக்கம் காணாதது கண்டு உள்ளமெங்கும் வருத்தம் சுமையாய் அழுத்த, அந்த பாரம் தந்த பரிதவிப்பில் இக்கடிதத்தை எழுதுகிறேன் நண்பா..

கண்ணீர் துளிகளுக்கு மட்டுமே சொந்தமானதல்ல நம் கண்கள் ; நம் கவலையையும், களங்கத்தையும் அவ்வப்போது கழுவிச் சுத்தப்படுத்தவே - அந்த கண்ணீர் துளிகளையும் உப்பு நீராக கடவுள் படைத்துள்ளான் என்பதை நீங்கள் அறிவீர்களா ? முன்பு ஒரு முறை இங்கு நீங்கள் போராட்டக் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்ததில் நான் சிறு உவகை அடைந்தேன் ; போராட்டத்தை கைவிட்டதில் பெறு மகிழ்ச்சி அடைந்தேன். ஏனெனில் தமிழ் காமிக்ஸ் வாசகர்களாகிய நாமெல்லாம் போராட பிறந்தவர்கள் அல்ல ; மேன்மேலும் சாதிக்கப் பிறந்தவர்கள். நாமெல்லாம் கைதட்ட பிறந்தவர்கள் அல்ல ; நம்மை பார்த்து கைதட்ட பிறந்தவர்கள். நாமெல்லாம் வழித்தேட வளர்ந்தவர்கள் அல்ல ; அந்த வழிக்கான கதவை திறக்கப் பிறந்தவர்கள். வலிகளுக்கும் வேதனைகளுக்கும் நம் வாழ்க்கையை குத்தகை விடப் பிறந்தவர்கள் அல்ல நாம் ; அவைகளை, நாம் கடந்து வந்த பாதையின் காலச் சுவடுகளாக விட்டுச் செல்ல பிறந்தவர்களே நாமெல்லாம் !

பின் பக்கம் திருப்புக ;

மிஸ்டர் மரமண்டை20 March 2014 09:57:00 GMT+5:30

சிங்கத்தின் சிறு வயதில் [7]

அன்று கண்ணீரோடு விடைப்பெற்ற உங்களின் கோபம் நியாயமானது தான். ஆனால் ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதை மேலே உள்ள பதிவுகளின் மூலம் நீங்களும் தற்போது அறிந்திருப்பீர்கள். தண்ணீரையும் ஜல்லடையில் அள்ளிக்கொண்டு வரலாம் ; அது பனிக்கட்டியாக மாறும் வரை நமக்கு பொறுமை மட்டும் இருந்தால். நமக்கேன் அந்த பொறுமை இல்லாமல் போனது என்ற கேள்வி இங்கு நியாமில்லை தான். நாளை கிடைக்கும் பலாக்காயை விட இன்று கிடைக்கும் கலாக்காய் மட்டுமே நம் பசியை தீர்க்கும் என்பது நானும் அறிந்ததே !

பாம்பும் சாகக் கூடாது ; தடியும் உடையக்கூடாது என்ற வகையில் சாலமன் பாப்பையா போல் தீர்ப்புச் சொல்ல வரவில்லை நான். உங்களின் ஆசை நிச்சயம் நிறைவேறும் என்பதை மட்டும் இங்கு உறுதியாக கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அடுத்து வரும் என் பதிவில் அதற்கான விடையை எழுதுகிறேன் நண்பரே ... ...


மிஸ்டர் மரமண்டை1 April 2014 15:55:00 GMT+5:30

சிங்கத்தின் சிறு வயதில் (8)

நண்பர்களே என்னுடைய முந்தைய பதிவுகளான சிங்கத்தின் சிறு வயதில் 1-7 பதிவின் மூலம் பல விஷயங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். 'சிங்கத்தின் சிறு வயதில்' தொகுப்பை வெளியிடுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் என்னவென்று உங்களுக்கும் தெள்ளத் தெளிவாக தெரிந்திருக்கும்.

எனவே அடுத்து வரும் பதிவான சிங்கத்தின் சிறு வயதில் (9) மூலம் உங்கள் ஆசை நிறைவேறி, அதன் மூலம் இந்த போராட்டக் குழுவிற்கும் சமாதானம் ஏற்பட்டு ; போராட்டக் குழுவை கலைத்து விட்டு வேறு ஏதாவது சுவாரசியமான பதிவுகளை தொடர்ந்து வழங்கி வருமென்றால் அதுவே நம் அனைவரையும் களிப்படையச் செய்யும் நிகழ்வாக அமையும் :)மிஸ்டர் மரமண்டை1 April 2014 16:53:00 GMT+5:30

சிங்கத்தின் சிறு வயதில் (9)

போராட்டக் குழு தலைவர் - தாரமங்கலம் பரணிதரனின் பழைய அறிக்கைகளின் படி - சிங்கத்தின் சிறு வயதில் வெளிவந்துள்ள அத்தனை புத்தகங்களும் அவரிடம் இருந்தாலும், திரும்பத் திரும்ப படிக்க அவர் நினைக்கும் போது அது மிகவும் சிரமமாக இருக்கிறது என்பதாகும். ஒவ்வொரு முறையும் அத்தனை புத்தகங்களையும் வரிசையாக எடுத்து வைத்து படிப்பது என்பது தலைவருக்கு அயர்ச்சியை தருவதாக அமைந்துள்ளது என்பதே அவரின் கோரிக்கைக்கு முதற் காரணம். பரணிதரன் நினைத்த நேரத்தில் எடுத்து படிக்க சுலபமாக இருக்க வேண்டும் என்பதாலேயே அவர் அதை புத்தக வடிவமாக அல்லது தற்போதைய நிலைப்பாட்டின் படி தொகுப்பாக கேட்டு போராடி வருகிறார் என்பதே என் கணிப்பு !

ஆசிரியர் தொடர்ந்து மறுத்து வரும் நிலையில் - இதற்கு எளிதான இரு தீர்வுகள் உள்ளது ;

1.அத்தனை பக்கங்களையும் ; அத்தனை பாகங்களையும் - job typingல் கொடுத்து, நமக்கு தேவையான புத்தக அளவில் ப்ரிண்ட் எடுத்துக் கொண்டு அதை புத்தகமாக பைண்ட் செய்துக் கொள்ளுதல் ஒரு வழியாம் !

[ இப்படி செய்ய நினைக்கும் போது, அதற்குண்டான செலவு அதிகரிக்கலாம். உதாரணமாக A4 sheetக்கு Rs.10/copy என்று வைத்துக் கொண்டால் செலவு கைமீறும் என்றால் - போராட்டக் குழு உறுப்பினர்கள் நபருக்கு 200 வீதம் போட்டு இதை நடைமுறை படுத்தலாம் என்பது என் கருத்து ]

2.அல்லது சிங்கத்தின் சிறு வயதில் தொகுப்பை யாராவது வலையேற்றம் செய்ய வேண்டும். ஒரு புதிய blogspot ஓபன் செய்து அதில் சிங்கத்தின் சிறு வயதில் -  அத்தனை பாகங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக பதிவிட வேண்டும். அதிலும் ஆசிரியர் வெளியிட்டுள்ளப் படி ; உள்ளது உள்ளபடி காற்புள்ளி, அரைப்புள்ளி, புள்ளி, etc., என அனைத்தும் இடம் மாறாமல் பதிவிட வேண்டும் !

[ இதன் மூலம் யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் சிங்கத்தின் சிறு வயதில் தொடரை ஒரே சீராக படித்து களிப்புற முடியும். தேவைப்படுவோர் அதை ப்ரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு புத்தக வடிவிலும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் இப்படி type செய்வது என்பது நமக்கு எளிதான காரியம் அல்ல ; கண்முழி இரண்டும் வெளியே வந்து விடும் :) அதனால் அடுத்தவருக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல் நானே அதை செய்வதாக முடிவு செய்துள்ளேன். சந்தோசம் தானே நண்பர்களே ?! ]

இதோ உங்களுக்கான சிங்கத்தின் சிறு வயதில் தொகுப்பு !
singathin.blogspot.in

சிங்கத்தின் சிறு வயதில் !


1.மிஸ்டர் மரமண்டை30 May 2014 at 20:00:00 GMT+5:30

to whomsoever it may concern (1)

நண்பர்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். நீண்ட விடுப்பும் ; உழைப்பற்ற நாட்களும் நம் சந்தோஷத்தை இரு மடங்கு கூலியாக கேட்கின்ற காலமிது. கண் இமை மூடி கண் இமை திறக்கும் காலத்தில், ஒரு நாள் என்பது அடக்கமாகி வருகின்ற உணர்வை நித்தம் பெறும் மாயலோகமாகி விட்டது நம் பூலோகம். இதில் மாதங்களும் ; வருடங்களும் கூட சில நாட்களாய் மறைகின்றன ; நேற்றையப் பொழுது என்பதே இல்லாமல் போய்விடுமோ என்று அச்சப்படும் வகையில் நம் பூமியின் சுழற்சி வேகம் நம் புலன்களுக்குள் அடங்க மறுக்கிறது !

இதில் நாம் அறிந்து செய்யும் தவறுகள் சில மட்டுமே என்றாலும் அறியாமல் செய்யும் பிழைகள் ஏராளம். செய்வது தவறு என்று நமக்கு புரியாத வரை நாம் அனைவருமே புத்தர்கள் தாம் - நம் மனதளவில். அது போன்றதொரு நிகழ்வை தான் இந்த மாதம் எனக்கு பாடமாக கற்பித்து நாளையோடு விடைப்பெறுகிறது. அது என்னவென்று அறிய, நீங்கள் காட்டும் ஆர்வத்தைப் போலவே நானும் அதை எழுதிட இங்கு சித்தமாக இருக்கிறேன்.

2.மிஸ்டர் மரமண்டை31 May 2014 at 10:37:00 GMT+5:30

to whomsoever it may concern (2)

நண்பர்களே, singathin.blogspot.in என்ற எனது சமீபத்திய வலைதளத்தில் - நமது ஆசிரியர் விஜயன் அவர்களின் படைப்பான ''சிங்கத்தின் சிறு வயதில்'' தொடரை பதிவிட்டு வந்தது உங்களில் சிலருக்காவது தெரிந்திருக்கலாம். ஆனால், ஒருவரின் எழுத்தையோ அல்லது அவரின் படைப்பையோ - அவரின் அனுமதியன்றி வலையேற்றம் செய்வதோ ; scanning செய்வதோ அல்லது scanlation செய்வதோ copyright சட்டப்படி தவறு என்று எனக்கு உணர்த்தப்பட்டதால், உடனடியாக 21 பாகங்கள் பூர்த்தியடைந்த நிலையில் அந்த வலைதளத்தை 15 நாட்களுக்கு முன்பாக டெலிட் செய்து விட்டேன் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன்.

மேலும், தவறான என் செயலுக்கு மிகவும் வருந்துகிறேன். நன்றி !

அன்புடன்
மிஸ்டர் மரமண்டை

9 comments:

 1. Thanks for typing this series. A massive work indeed! :D

  Make sure Editor knows this so that it may be linked with Lion-Muthu Comics blog and website.

  ReplyDelete
 2. நண்பர் மரமண்டை அவர்களுக்கு .....

  இவ்வளவு வேகத்தை நான் எதிர் பார்க்கவே இல்லை ......மிக ...மிக ....மிக ....மிக ....நன்றி .....சார் ...

  " வெள்ளந்தி எழுத்துக்கும் ஊமை குசும்புக்கும் ஒரே குத்தகைதாரர் " #

  ஐயோ .....நான் இல்லை .... :)

  " சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பு எப்படி இருக்க வேண்டும் #

  உங்கள் பதில் காரணம் அனைத்தும் உண்மையிலும் உண்மை .நாங்கள் இப்போதைய நிலைமையை மட்டும் பார்த்துள்ளோம் .தாங்கள் ஆசிரியர் போலவே அனைத்தும் சீர் தூக்கி பார்துள்ளிர்கள்...இப்பொழுது உணர்கிறோம் .ஆனால் எத்துனை காலம் ஆனாலும் "சிங்கத்தின் சிறு வயதில்" தொகுப்பு புத்தகத்திற்கு எங்கள் போராட்ட குழு போராடி கொண்டே இருக்கும் அமைதியான வழியில் ...இனி .....

  தங்களை சில நாட்கள் இந்த வலை பக்கம் காணாது கண்டு #

  தங்கள் அனைத்து பதிவும் கண்டு கொண்டு தான் இருக்கிறேன் நண்பரே .....ஆனால் பல சமயம் செல் வழியாக பார்பதால் பதில் இடும் சமயம் கடினமாக உள்ளது ...

  ஆமாம்..நண்பரே ...நான் இட்ட பதிவை நானே இரண்டு பதிவுகளில் மறந்து விடுவேன் .நீங்கள் எப்படி எங்கள் பதில் கருத்தை நினைவில் கொள்கிறீர்..கிரேட் ...

  மீண்டும் நன்றி ....உங்கள் உழைப்பிற்கும் ....

  ReplyDelete
 3. மிக நல்ல முயற்சி! text fileகளாகவும் பாதுகாத்து வந்தால், என்றாவது ஒரு நாள் 'சி.சி.வ' புத்தகமாக வெளிவர எடிட்டர் விஜயன் அவர்கள் முடிவெடுக்கும்போது மிகவும் உபயோகப்படும்!

  ReplyDelete
 4. You are doing a great job Sir, as vijay said it will be nice to have it in Text format (I've converted it into text format on my mobile ..its now a great reading companion for me... its really nice to see guys who do something really good for others rather than wasting it on pitty arguments...as I've said already keep up the good work...

  ReplyDelete
 5. திருவாளர் மரமண்டை அவர்களே,
  சிங்கத்தின் சிறு வயதில் என்ற தொகுப்பு , ஒரு எழுத்தாளருடைய கற்பனையில் உதித்த இன்னமும் ஒரு புதினம் அல்ல. வாழ்வில் பல கஷ்டங்களை ,தடைகளை கடந்து, ரத்தம் வியர்வை சிந்தி கடினப்பட்டு, நமது ஆசிரியர் சிறுக சிறுக சேர்த்த உயரோட்டமுள்ள ஒரு அனுபவ தொகுப்பு. இதற்கான நிபந்தனைகளற்ற முழு உரிமையும்,.இந்த தொகுப்பை எப்படி உபயோகப்படுத்துவது என முடிவெடுக்கும் உரிமை, ஆசிரியர் திரு.விஜயன் அவர்களிடம் மட்டுமே உள்ளது . இந்த தொகுப்பில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு மதிப்பு மரியாதை உள்ளது. இந்த தொகுப்பின் சொந்தக்காரரே இன்னமும் தனது ஆக்கத்தை commercialize செய்யாதபோது அவரின் அனுமதி பெறாமல் இப்படி திருடி வெளியிட்டது நேர்மையான செயல் ஆகாது.

  இப்படி இணையத்தளத்தில் வெளியிட்டால் நாளை புத்தகமாக வரும் பொது அதை எத்தனை பேர் வாங்குவார்கள்?? அப்போது ஏற்படும் இழப்பை உங்களால் ஈடுகட்ட முடியுமா??

  தனது புத்தகத்தில், தமது மொழிபெயர்ப்புக்கும், இது போன்ற தொடர்களுக்கும் வெளிப்படையாக எங்கும் தமது நிறுவனத்துக்கே காப்புரிமை என கோராவிட்டால் அவை public domain ஆக்கங்கள் ஆகாது. வெளிப்படையாக ஒரு படைப்பாளி தனது ஆக்கங்களுக்கு அனைவரும் இலவசமாக அனுபவிக்கும் நிபந்தனைகளற்ற உரிமையை வழங்காதவரை அவரே அதன் ஏகபோக உரிமையாளர்.

  மற்றவர்களின் உரிமையை நாமும் கொஞ்சம் மதிக்க கற்றுக்கொள்வோமே ! உடனடியாக ஆசிரியரின் கருத்தை கேட்டுப்பெறவும் அதுவரை அந்த தளத்தை முடக்கவும் நடவடிக்கை எடுக்கவும்.

  உங்களுடைய இந்த இமாலய உழைப்புக்கும், காமிக்ஸ் மீது நீங்கள் கொண்டுள்ள ஈடுபாட்டுக்கும் வாழ்த்துசொல்ல தற்போது என்னால் இயலவில்லை.

  ReplyDelete
 6. // இப்படி இணையத்தளத்தில் வெளியிட்டால் நாளை புத்தகமாக வரும் பொது அதை எத்தனை பேர் வாங்குவார்கள்?? அப்போது ஏற்படும் இழப்பை உங்களால் ஈடுகட்ட முடியுமா?? //

  That's little bit harsh ;) In case we believe this is not posted here without Editor's permission, we should just send an email to editor about this link. That will work just faster.

  // உங்களுடைய இந்த இமாலய உழைப்புக்கும், காமிக்ஸ் மீது நீங்கள் கொண்டுள்ள ஈடுபாட்டுக்கும் வாழ்த்துசொல்ல தற்போது என்னால் இயலவில்லை. //

  I know Mister Maramandai is always subjected to conspiracies etc but lets be generous enough to appreciate the enthusiasm and make sure not hurted more than deserved .

  ReplyDelete
 7. மிஸ்டர் மரமண்டை இன்றுதான் உங்கள் கடைசி 2 பதிவையும் படித்தேன். நீங்கள் வெளியிட்ட சிங்கத்தின் சிறுவயது தொகுப்பை டைப் செய்து வெளியிட்டு இருந்ததை லயன் பிளாக்கில் படித்தேன். பேஸ்... பேஸ்... காமிக்ஸ் வாசகர்களுக்கு சந்தோசத்தை அளிக்க கூடிய ஒரு அருமையான செயலை செய்துள்ளீர்கள். சிசிவ குறித்த உங்களுடைய கருத்துகளை முழுவதுமாக சிறிதும் தயக்கமின்றி ஆதரிக்கிறேன்.
  தினசரி, வார பத்திரிகைகளில் ஒரு வழக்கம் உள்ளது. வேறு ஒரு இதழ்களில் வரும் தகவல்களை எடுத்து பயன்படுத்தும்போது இறுதியில் நன்றி தினத்தந்தி என்றோ, தினமலர் என்றோ எந்த பத்திரிகையில் இருந்து எடுத்து பயன்படுத்தினார்களோ அதை குறிப்பிட்டுவிடுவார்கள். அதே முறையை தாங்களும் சிசிவ அடுத்த தொகுப்பை டைப் செய்து வெளியிடும்போது கடைபிடிக்கலாமே. சில தேவையில்லாத விமர்சனங்களை தவிர்க்க வசதியாக இருக்கும்.

  ReplyDelete
 8. to whomsoever it may concern (2)

  நண்பர்களே, singathin.blogspot.in என்ற எனது சமீபத்திய வலைதளத்தில் - நமது ஆசிரியர் விஜயன் அவர்களின் படைப்பான ''சிங்கத்தின் சிறு வயதில்'' தொடரை பதிவிட்டு வந்தது உங்களில் சிலருக்காவது தெரிந்திருக்கலாம். ஆனால் ஒருவரின் எழுத்தையோ அல்லது அவரின் படைப்பையோ - அவரின் அனுமதியன்றி வலையேற்றம் செய்வதோ ; scanning செய்வதோ அல்லது scanlation செய்வதோ copyright சட்டப்படி தவறு என்று எனக்கு உணர்த்தப்பட்டதால், உடனடியாக 21 பாகங்கள் பூர்த்தியடைந்த நிலையில் அந்த வலைதளத்தை 15 நாட்களுக்கு முன்பாக டெலிட் செய்து விட்டேன் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன்.

  மேலும், தவறான என் செயலுக்கு மிகவும் வருந்துகிறேன். நன்றி !

  அன்புடன்
  மிஸ்டர் மரமண்டை

  ReplyDelete
 9. Ramesh Kumar
  Paranitharan K
  Erode VIJAY
  AKK
  விஸ்கி-சுஸ்கி
  Mugunthan kumar

  நண்பர்களே, தங்களின் ஆதரவுக்கும் ; பதிவிற்கும் மிகவும் கடமைப் பட்டுள்ளேன். மிக்க நன்றி !

  ReplyDelete