Follow by Email

Wednesday, 30 July 2014

மின்னும் மரணம் ! Customized imprints!

நண்பர்களே, வணக்கம் !

1.மிஸ்டர் மரமண்டை9 July 2014 21:16:00 GMT+5:30

ஒரு காமிக்ஸ் மறுபதிப்பு வேண்டாம் என்று சொல்லும் வாசகர் ஒருவருக்கு உள்ள உரிமையைப் போல, அந்த மறுபதிப்பு வேண்டும் என்று சொல்லும் வாசகருக்கு இரண்டு மடங்கு உரிமை இருப்பதாக கருதுவதால், எனக்கு..

1.மின்னும் மரணம் !
2.இரத்தப் படலம் !
3.இரத்தக் கோட்டை !

ஆகிய மூன்று காமிக்ஸும் - உயர்ந்த தரத்தில் ; முழு வண்ணத்தில் ; ஒவ்வொரு கதையும் ஒரே பாகமாக ; கலெக்டர்ஸ் எடிஷனாக ; மறுபதிப்பில் வரவேண்டும் என்றே விரும்புகிறேன். மறுபதிப்பு என்பது Collector's Edition க்கான திட்டமிடலாக - விலையிலும் ; பதிப்பிலும் மாற்றத்தைப் பெறும் போது மட்டுமே... அதன் அருமையும் பெருமையும் அனைவருக்கும் தெரிய வருவது மட்டுமல்ல ; மிகவும் இலாபகரமான வெளியீடாகவும் அமையும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. பெயர் வேண்டும் எனும் போது பொருள் வருவதில்லை ; பொருள் வேண்டும் எனும் போது பெயர் வருவதில்லை ; இரண்டும் ஒரு சேர அமைய திட்டமிடும் போது, நம் புகழ் என்றுமே குறைவதில்லை. நன்றி விஜயன் சார் !

2.மிஸ்டர் மரமண்டை16 July 2014 20:35:00 GMT+5:30

மீண்டும் மீண்டும், காலம் அழித்துப் போன சிந்தனையை நாம் நடைமுறைக்கு கொண்டு வர நினைத்தால் நாமும் இறந்தகால சுவடுகளாவோம். LMS ; மின்னும் மரணத்தில் - தற்போது உள்ளது போன்ற தடங்கல்கள் நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் புஷ்பக விமானம் ஆகும். காமிக்ஸை பொறுத்தவரை - புதிய வாசகர்களால் வாங்க முடியாது என்ற ஒரே சித்தாந்தத்தில் நாம் நம் வியாபாரத்தை நஷ்டத்தில் நடத்தும் போது தான் அந்த தொழில் நலிவடைகிறது. அவர்களுக்கான ரெகுலர் சந்தா நடைமுறையில் இருக்கும் நிலையில் கூட - மற்றைய வியாபார விரிவாக்கத்தையும் ; ஸ்பெஷல் எடிஷன் ; கலெக்டர்ஸ் எடிஷன் ; லிமிடெட் எடிஷன் இவைகளை வரவிடாமல் ; வளரவிடாமல் பொதுவுடைமை கருத்து பேசுவதும் தான் - நாம் நம் வாழ்நாள் காலத்தை அர்த்தமின்றி இழந்து விடுவதற்கு சமமானதாகும். இது எப்படி இருக்கும் என்றால், இலக்கின்றி காற்றில் கல் எறிவது போன்றது. இதனால் யாருக்குமே எந்த பலனும் இருக்கப் போவதில்லை. அது அது நடக்க வேண்டிய காலத்தில் அது அது தானாகவே மனித முயற்சியின்றி நடந்தேறும் என்பதே அனுபவ உண்மை. 

இன்னும் வெளிப்படையாக கூறவேண்டுமானால் - நீங்கள் ஞாயிறு அன்று மீன்வாங்க ஒரு மீன்கடைக்குச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த ஊரில் இருப்பதோ ஒரே ஒரு மீன்கடை ; சுத்துப்பட்டி பதினெட்டு பட்டியிலும் மீன்கடையே இல்லை. ஆனால் எப்பொழுதும் அவரிடம் விற்பனைக்கு இருப்பதோ ரூபாய் 40 க்கு மத்தி மீன் மட்டுமே.. அப்போது நீங்கள் கேட்பீர்கள், ஏன் கடைக்காரரே வெறும் மத்தியை மட்டுமே நீங்கள் விற்றால் மற்ற மீன்களை யாராலும் சுவைக்க முடியாமலேயே போய் விடுமே? காலம் முழுதும் வெறும் மத்தி மீனை மட்டுமே உண்டு ஜீவனம் நடத்த தற்போதைய உலகமயமாக்கலின் காலத்தில் தான் சாத்தியமா? காமிக்ஸ் கடலில் - வஞ்சிரம் ; கடல் நண்டு ; எக்ஸ்போர்ட் இரால் ; ட்யுனா ; அட்லீஸ்ட் சங்கரா என்று எண்ணற்ற வகையில் மீன்களை நாங்கள் எங்கள் வாழ்நாளில் சுவைக்கவே முடியாதா? என்று வருத்தத்துடன் கேட்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்..

கடைக்காரர் : ஏம்பா உங்ககிட்ட காசு இருக்கு.. அதனால வஞ்சிரம் ; வவ்வாலு வேணும்னு கேக்கறிங்க... ஆனா 40 ரூபாய் மட்டுமே செலவு செய்ய விரும்பும் மக்களையும் நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். எனவே நீங்கள் காலம் முழுதும் மத்தியை மட்டுமே வாங்கிச் சாப்பிட வேண்டும்.. அதுமட்டுமல்ல மீன் சாப்பிடத் தெரியாத பழைய, புதிய வெஜிடேரியன் வாடிக்கையாளர்களையும் நெனைச்சுப் பாத்து சந்தோஷப்படுவீங்களா அதவுட்டுட்டு சும்மா எப்பப் பாரு வஞ்சிரம் ; வவ்வாலு ; 480 க்கு மட்டன் கறி ; 240 க்கு போன்லெஸ் சிக்கன் கறின்னு கேட்டுக்கிட்டு ?! என்ன நாஞ் சொல்றது?! 

இப்படி ஒரு கடைக்காரர் சொல்வது எப்படி அபத்தமானதாக இருக்க முடியுமோ அப்படித்தான், தற்காலத்தில் நிச்சயமே இல்லாத புதிய வாசகர்களுக்காக பழைய வாசகர்களை இழப்பதும் ; நம் வியாபாரத்தை விரிவாக்காமல் நலிவடைய வைப்பதும் ; மின்னும் மரணத்தை அவர்களால் வாங்க முடியாது  இவர்களால் வாங்க முடியாது என்று அங்கும் இங்கும் குரல் கொடுப்பதும் ஆகும். 

பி.கு: கடைக்காரர் (ஆசிரியர் விஜயன் அல்ல) = புரட்சி வாசகர்கள் ?! ; வாடிக்கையாளர்கள் (நீங்களல்ல) = தீவிர வாசகர்கள் :)))
3.மிஸ்டர் மரமண்டை16 July 2014 21:16:00 GMT+5:30

இப்படியும் கூட சில வாசகர்கள் கூறுவார்கள் :) - விஜயன் சார்... ஒரு சந்தாவிற்கு மேல் ஒருவருக்கு அனுமதிக்காதீர்கள் ; ஒரு புத்தகத்திற்கு மேல் ஒரு வாசகருக்கு விற்காதீர்கள் ; கடை விரித்து கடைவிரித்து - கொள்வாரில்லாமல் காலம் முழுவதும் உங்கள் திறமையையும் வாய்ப்பையும் வீணடித்து விடுங்கள் ; பருவத்தே பயிர் செய்யாமல் - கண்கெட்டப் பின்னே சூரிய நமஸ்காரம் செய்யுங்கள் ; கைத்தட்ட ரசிகர்களே இல்லாமல் - காலியாக இருக்கும் ஸ்டேடியத்தில் மட்டுமே கிரிக்கெட் விளையாடி மனச் சோர்வை அடையுங்கள் ; .Sixer, Boundary என்று அடித்து விளையாடாமல் 1.. 1 ரன் ஆக நிதானமாக எடுத்து 20-20 ஆட்டத்தில் தோற்று விடுங்கள் ; வியாபாரத்தில் தரத்தையும், தகுதியையும் வளர்த்து கொண்டப் பின்பும் அதற்கான சரியான விலையை நிர்ணயிக்காமல் - 40 வருடம் கடந்து விட்ட நிலையிலும் சிறு நிறுவனமாகவே மூன்றாம் தலைமுறையிலும் அடியெடுத்து வையுங்கள்..!

இது எப்படி இருக்கிறது என்றால் - ஒரு மட்டன் கடைக்கோ ; காய்கறி கடைக்கோ சென்று கடைக்காரரிடம் - ஹலோ பாய்.. அனைவருக்கும் கால்கிலோவிற்கு (1/4) மேல் நீங்கள் விற்ககூடாது என்று பொதுவுடைமை பேசுவது போல் அபத்தமாக இருக்கிறது. இன்னும் கூட சொல்லிக் கொண்டே போகலாம் தான்.. ஆனால் முடிவு ஒன்றாகத்தானே இருக்க முடியும். எனவே 40 வருடம் கடந்தப் பின்பும் நம் நிறுவனத்தை சிறு நிறுவனமாக பாவிக்காமல் ; அனைவருக்கும் கிடைக்கும் வகையிலும் ; அனைத்து விலையிலும் ; அது 35, 60, 120, 500, 1000, 1500, 2000, 2500, 3000 என்று பிரிண்ட் ரன்னிற்கு ஏற்றபடி - லிமிடெட் எடிஷனாக வியாபாரம் செய்வதே இத்தொழிலை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதாக இருக்க முடியும் என்பது என் கருத்து.

இது வாசகர்களுக்கான ஒரு பொதுவான கருத்து மட்டுமே... இராதாகிருஷ்ணன் அண்ணாச்சி உடல் நலம் இல்லாத இந்த சோக தருணத்தில் ஆசிரியருக்கு என் கருத்தை இன்னும் வெளிப்படையாக கூற விரும்பவில்லை. எனவே பிறிதொரு சமயத்தில் என் கருத்தை ஆணித்தரமாக இங்கே சொல்கிறேன் நண்பர்களே..!


4.மிஸ்டர் மரமண்டை17 July 2014 08:45:00 GMT+5:30

saint satan ://விமான பயணத்தை விடுங்கள். சாதாரண கார் பயணம் கூட ஒரு சிலருக்கு சாத்தியமில்லை.அதனால் கார் தயாரிப்பை நிறுத்தி அனைவரையும் மாட்டு வண்டியில் பயணிக்க உத்தரவிடுவதுதான் நியாயமா...?//

ஹா.. ஹா சரியாக சொன்னீர்கள் சாத்தான் ஜி.. அதுமட்டுமல்ல.. இவர்களுக்குள் ஏற்படும் மன உளைச்சலின் பாதிப்பால் - போகும் வழியில் நிற்கும் புத்தம் புதிய கார்களில், கூர்மையான பொருளைக் கொண்டோ ; ஆணியைக் கொண்டோ கோடு போடுவதும் இவர்கள் தான் ;) உதாரணத்திற்கு நம் வலைப்பூவில் கூட நீங்கள் அவ்வப்போது பார்த்திருக்கலாம்.. ஆசிரியர் ஏமாற்றுகிறார் ; ஆப்பு அடிக்கிறார் ; மொட்டையடிக்கிறார் என்ற ரீதியிலான கமெண்ட்ஸ் ;)

இவர்களுக்கு பதிலளிப்பதை விட்டுவிட்டு, அடிஷனலாக இன்னும் இரண்டு LMS எப்படி வாங்கலாம் என்று தான் நாம் யோசிக்க வேண்டும். ஆனால் என்னசெய்வது.. பரணி மாதிரி அப்பாவித் தலைவர்கள் இதற்கு பலியாகி விடுகிறார்கள் :))


5.மிஸ்டர் மரமண்டை17 July 2014 09:33:00 GMT+5:30

//ஆசிரியரிடம் புத்தகம் தீர்ந்த பின் நாம் அதிக விலைக்கு விற்கலாம் என்று மொத்தமாக வாங்கி குவிப்பது தான் தவறு//

இது போன்றதொரு எண்ணம் மிகவும் குறுகிய மனநிலையின் வெளிப்பாடு ; அனைவரும் வாங்கிவிடும் பட்சத்தில் எப்படி இன்னொருவரால் அதிக விலைக்கு விற்க முடியும்..? அப்படியே 10 வருடம் கழித்து அவர் விற்பார் என்று நீங்கள் கருதினாலும் அதில் தவறு என்ன இருக்க முடியும்? 

நீங்கள் வாங்கிய வீட்டை சிலகாலம் கழித்து விற்க நினைத்தால் அதே விலைக்கு கொடுப்பீர்களா? அல்லது 20 வருடம் முன் வாங்கிய தங்க நகைகளை அன்றைய விலைக்கே விற்பீர்களா? அல்லது அதிக விலைக்கு விற்பனையாகும் என்பதால் சொந்த வீடு மற்றும் தங்க நகை வாங்காமலேயே காலம் தள்ளுவீர்களா? 

ஒன்றை புரிந்து கொள்ளாமலேயே பதிவிடுவது மிகவும் அபத்தமானது. அதிக விலைக்கு விற்கலாம் என்பதால் தான் அனைவரும் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பிரதிகள் வாங்குவார்கள் என்ற தங்களின் குறுகிய மனப்பான்மையை - இங்கு பதிவிட்டது மிகவும் கண்டனத்துக்குரியது. குற்ற உணர்ச்சியுடன் கூடிய கைநீட்டல் உங்களுக்கு வேண்டுமானால் ஆறுதலாக இருக்கலாம். ஆனால் பல வாசகர்களின் தன்மானத்தை தூண்டும் செயலாகவே இது அமையும் மிஸ்டர் பரணிதரன்..!?


6.மிஸ்டர் மரமண்டை18 July 2014 10:08:00 GMT+5:30

நீங்கள் கூறியபடியே விவாதத்தை இத்துடன் நிறுத்தி கொள்வோம் நண்பரே.. அதற்கு முன் உங்கள் வாதத்திற்கு வலு சேர்க்க என்னுடைய ஆதரவையும் தெரிவித்து விட்டால் எதிர்வரும் ஈரோடு புத்தகத் திருவிழாவில் மகிழ்ச்சியுடன் நண்பர்கள் அனைவரையும் நாம் எதிர்நோக்கலாம் அல்லவா ;)

சிலர் அதிக புத்தகத்தை வாங்கி சில வருடம் கழித்து அதை பத்து மடங்கு விலையில் விற்பதால், கடைக்கோடியில் இருக்கும் குப்பனக்கும், சுப்பனுக்கும் காமிக்ஸ் உரிமை மறுக்கப் படுகிறது ; பத்து வருடம் கழித்து இன்றைய காமிக்ஸ் பழைய விலையில் கிடைக்காமல் போய் விடும். அதனால் பலவருடம் கழித்தும் அதே விலையில் காமிக்ஸ் அவர்களுக்கு கிடைக்க வேண்டுமானால் - அதற்கு ஆசிரியர் விஜயன் அவர்கள் LMS போன்ற அனைத்து காமிக்ஸையும் குறைந்தது 10 வருடம் குடோனில் ஸ்டாக்காக வைத்திருக்க வேண்டுகிறோம் :P 

என்ன..சரி தானா தலைவரே..?


7.மிஸ்டர் மரமண்டை17 July 2014 10:30:00 GMT+5:30

//அது போல ஒருவரே நிறைய புத்தகங்கள் வாங்குவதால் அந்த எண்ணிக்கையை மனதில் கொண்டு ஆசிரியர் அதிக பிரதிகளை அச்சிடும் வாய்ப்பு உண்டு ! இதன் மூலம் அந்த அளவு நண்பர்கள் வாங்கா விட்டால் தேங்கும் இதழ்களால் நட்டம் ஆசிரியருக்கு மட்டுமின்றி நமக்கும்தானே//

மிஸ்டர் ஸ்டீல் : இதை மேலும் தொடர்ந்து விவாதித்தால், விவாதம் தவறான பாதையில் பயணிக்க ஆரம்பித்து விடும் . எனவே இது நிற்க; அதிக பிரதிகள் கேட்டு யாருமே சந்தா கட்டவில்லை என்பதை LMS சந்தா - 310 என்ற எண்ணிக்கையே நமக்கு காட்டுகிறது. அதனால் ஆசிரியர் அதிக பிரதிகளை அச்சிடும் வாய்ப்பு என்பது எப்பொழுதுமே இருப்பதில்லை. ஆனால் குறைந்தப்பட்ச பிரிண்ட் ரன் என்பதை அச்சிட்டே ஆகவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதேநேரம் தீவிர காமிக்ஸ் வாசகர்கள் அனைவரும், ஆசிரியருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் ; தன்னால் இயன்ற பங்களிப்பை குறைவின்றி அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் மட்டுமே அதிகப் பிரதிகள் வாங்கப் போகிறார்கள். இதை குறை கூறுவது எப்படி இருக்கிறது என்றால் (நீங்கள் அல்ல), எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை அடுத்தவனுக்கு இரண்டு கண்ணும் குருடாக வேண்டும் என்று சாமியிடம் வரம் கேட்ட கதை தான் நினைவில் வருகிறது ;)

இதெற்கெல்லாம் ஒரே தீர்வு Customized imprints மட்டுமே. ஒரே புத்தகத்தை 5 அல்லது 7 பிரதிகள் வாங்குவதற்குப் பதிலாக இரண்டு புத்தகத்தை அதிக விலைக்கு வாங்கி விடுவோம். இப்பொழுதாவது அனைவருக்கும் தெளிவாக புரியும் என்று நினைக்கிறேன். Customized imprints ல் விலை மட்டுமே நிர்ணயம் - பேக்கிங் செலவு ; கூரியர் செலவு தனி - இது எப்படி இருக்கு..?!


8.மிஸ்டர் மரமண்டை17 July 2014 09:21:00 GMT+5:30

டியர் விஜயன் சார்,

மீண்டும், கடைகளுக்கு கடனில் விற்பனை என்ற வழிமுறையை நீங்கள் தேர்ந்தெடுத்தது எதிர்காலத்தில் உங்களுக்கு பணமுடக்கத்தையே ஏற்படுத்தும். அதாவது விற்காத பிரதிகளின் முதலீட்டை நீங்கள் இழக்க நேரிடும். இது எந்த விதத்திலும் நம் காமிக்ஸ் வளர்ச்சிக்கு உதவப் போவதில்லை. சில வாசகர்கள் இங்கு கல்லெறிந்தார்கள் என்ற ஒரே காரணத்தினால் நீங்கள் இந்த முடிவை எடுக்க நேர்ந்தது அதிர்ஷ்டவசமானது அல்ல..!

அதே நேரம் Landmark ; discovery book palace போன்ற கடன் வியாபாரங்கள் - நம்மை அதிகமாக பாதிக்காது என்பது என் கருத்து. ஆனால் பஸ்நிலைய கடைகளில் விற்பனைக்காக தொங்கவிடப்படும் புத்தகங்களின் ஆயுட்காலம் அதிகப்பட்சம் இரண்டு மாதங்களாக மட்டுமே இருக்கலாம். விற்பனையாகாத பிரதிகள் உங்களுக்கு திருப்பி அனுப்பப்படும் போது, அந்தப் புத்தகம் மீண்டும் விற்பனை செய்யும் தகுதியை இழந்திருக்கும் என்பது மிகவும் வருத்தமான வர்த்தக வழிமுறை. 

தேவை இருக்கும் இடத்தில் நிச்சயமாக தேடல் இருக்கும் ; தேடல் இருக்கும் இடத்தில் நிச்சயம் ஆர்வம் இருக்கும் ; ஆர்வம் இருந்தால் சந்தா கட்டாமலேயே கூட தங்களின் worldmart வலைதளத்தில் வேண்டியதை மட்டும் கூட மாதம் மாதம் வாங்கிக் கொள்ளலாம். அல்லது புத்தகத் திருவிழாக்கள் அவ்வப்போது வாசகர்களுக்கு கைகொடுக்கவே செய்யும். அல்லது கர்ணன் போன்ற தன்னார்வ வாசக ஏஜென்ட்களிடமிருந்து வாங்கிக் கொள்ள இயலும். ஆனால் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற வாசகர்களுக்கோ ; ஆர்வமே இல்லாத வாசகர்களுக்கோ நீங்கள் எடுக்கும் எந்த ஒரு அகண்ட முயற்சியும் தங்களுக்கு நஷ்டத்தையே ஏற்படுத்தும் என்பது என் கருத்து.

நீங்கள் மட்டும் Customized imprints மூலம் புத்தகத்தை வெளியிட்டுப் பாருங்கள்... அதை விட வேறு எந்தவித விளம்பரமும் நம் காமிக்ஸிற்கு தேவையே இருக்காது என்பது நிச்சயம். உதாரணமாக மின்னும் மரணம் 300 புத்தகங்கள் limited editionல் மட்டுமே வெளிவந்தால் அப்பொழுது நான் சொல்வதில் உள்ள உண்மை உள்ளங்கை நெல்லிக்கனியாக அனைவருக்கும் தெரிய வரும். 

(Customized imprints - மின்னும் மரணம் - 300 க்கான விலை - பேக்கிங் செலவு ; தபால் செலவு ; கூரியர் செலவு தனி - முன்பதிவு அதிகமானாலும் அதே விலை - ஆனால் முன்பதிவு செய்த அனைவருக்கும் புத்தகம் கிடைக்கும் - மறுபதிப்பில் உங்கள் ஸ்பெஷல் உழைப்பு இல்லை - முன்பணத்தில் முதலீடு - தீவிர காமிக்ஸ் வாடிக்கையாளர்களுக்கான உன்னத சேவை - பிரிண்ட் செய்தவுடன் உங்கள் குடோனும் காலி - அடுத்த Customized imprints - இரத்தப் படலம் - இரத்தக் கோட்டை - இரும்புக்கை மாயாவி - ஸ்பைடர் - தோர்கல் - டெக்ஸ் வில்லர் - மேலும் பல புதிய தொடர்கள் - etc., etc., என்று உங்கள் காமிக்ஸ் சேவையை தொடர்ந்து செய்து உங்களின் நிறுவனத்தையும் எங்களின் காமிக்ஸ் வாசிப்பையும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லுங்கள் விஜயன் சார்.. ப்ளீஸ்..!


9.மிஸ்டர் மரமண்டை17 July 2014 15:26:00 GMT+5:30

//உதாரணத்துக்கு 300 போதுமானதா, 800 போதுமானதா என்பதுகூட கதைக்கு கதை வேறுபடக்கூடும். It is upto Editor's estimation. May be worth a try for Minnum Maranam.// AAA மற்றும் +1


1.300க்கான விலையை நிர்ணயம் செய்து குறைந்தப்பட்சமான 1000 புக்ஸ் பிரிண்ட் செய்வது தவறில்லை !

2.Customized Imprintsன் விலை நிர்ணயத்திற்கு சிக்கனம் தேவையில்லை. ஏனெனில் அது Limited edition !

3.இத்தனை முன்பதிவுகள் ; இத்தனை பிரிண்ட் ரன் என்று கூற நிறுவனத்திற்கு எந்தவொரு அவசியமுமில்லை!


10.மிஸ்டர் மரமண்டை17 July 2014 15:56:00 GMT+5:30

உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் ஒரே பதில்.. முழுவண்ண மறுபதிப்புகள் அனைத்தும் மினிமம் கேரண்டி எண்ணிக்கையான 300 க்கு உரிய விலையை மட்டுமே நிர்ணயம் செய்ய வேண்டும். அவ்வளவு தான். இதற்குப் பின் எந்த ஒரு விளக்கம் அளிக்கவும் நிறுவனம் ஆர்வத்தை காட்டாமல் இருந்தாலே போதுமானது :)11.மிஸ்டர் மரமண்டை17 July 2014 15:10:00 GMT+5:30

//அவருக்கு பிடித்தமான கதை Customized imprintsல் 2000rs வருகிறது என்று வைத்துகொள்வோம் அவர் regular சந்தாவை துறந்து Customized imprints முன்னுரிமை கொடுப்பார் இதனால் regular சந்தா இழக்கிறோம்! எடிட்டர் அவர்கள் முன்பு ஒரு பதிவில் குறிபிட்டது நினைவுக்கு வருகிறது பொன்முட்டையிடும் வாத்து பிரியாணிக்காக அறுக்கும் நிலைக்கு வந்திருக்கிறோம் !//

* வருடத்திற்கு 48 புதிய காமிக்ஸ் வரக்கூடிய சந்தாவை யாருமே துறக்கப் போவதில்லை :P 
*//பொன்முட்டையிடும் வாத்து பிரியாணிக்காக அறுக்கும் நிலைக்கு வந்திருக்கிறோம்// அபத்தத்தின் உச்சம் :P 
*வருடத்திற்கு 2 டெக்ஸ் கதைகள் என்று இன்னும் நாம் குறைந்தது 300 வருடம் காத்திருக்க வேண்டும் :P 
*நடைமுறையில் உள்ள தொடர்களைப் படித்து முடிக்க இன்னும் ஒரு 200 வருடம் காத்திருக்க வேண்டும் :P 
*//நானே பட்டினி கிடக்கிறேன். அதனால், நீயும் பட்டினி கிட// - உபயம் சாத்தான் ஜி :P 

கொஞ்சமாவது யோசிங்க மக்கழே..! :P


12.மிஸ்டர் மரமண்டை17 July 2014 15:50:00 GMT+5:30

//எதிர்கால ஆருடம் கூறுபவர் நிகழ்கால ஆருடமும் கூறினால் நம்பமுடியும். சூப்பர் 6 அடுத்த மாத வாக்கில் எத்தனை முன்பதிவுகளை பெறும்?//

சந்தா இனி குறையும் ; அடுத்த வருடம் இனியும் குறையும். காரணம், எல்லா ஊர்களிலும் எல்லா காமிக்ஸும் எளிதாக கிடைக்க ஆசிரியர் வழி செய்து விட்டார். கூரியர் சார்ஜ்/ம் கிடையாது ; மொத்தமாக பணம் புரட்ட வேண்டிய கட்டாயமும் இனி யாருக்கும் இருக்கப் போவதில்லை. நாம் 100 க்கு வாங்கும் புத்தகம் வெளியில் கடையில் இனி 60. நாம் 160க்கு வாங்கப் போகும் புத்தகம் இனி 120. எனவே சந்தா இனி மெல்ல மெல்ல குறையும் :P 

அதே நேரம் என்னைப் போன்ற ; ஈரோடு விஜய் போன்ற ; கோவை ஸ்டீல் போன்ற ; செல்வம் அபிராமி போன்ற எண்ணற்ற தீவிர காமிக்ஸ் வாசகர்கள் சந்தாவை தவறாமல் கட்டி விடுவோம். அதில் துண்டு விழும் பணத்திற்கு Customized imprints மட்டுமே ஆபாத்பாந்தவனாக திகழப் போகிறது..! 

இந்த ஆருடம் போதுமா..? இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா..?! :)


13.மிஸ்டர் மரமண்டை18 July 2014 18:27:00 GMT+5:30

கருமண்டபம் செந்தில் :

நிச்சயமாக சார்.. ஆனால் நீங்கள் கூறுவது நீண்ட கால வழிமுறை. தற்போதைக்கு எடிட்டருக்கு நஷ்டம் வராமல் இருப்பதற்கு நம்மால் என்ன ஒத்துழைப்பு கொடுக்க முடியுமோ அவ்வளவையும் தருவதே எதிர்காலத்தில் - காமிக்ஸ் அனைத்து தரப்பிற்கும் சென்றடைய நாம் செய்யக்கூடிய உதவியாகும். 

அதில் ஒன்று தான் Customized imprints வழிமுறை. இதை எதிர்க்கும் போது - ஒன்று நாம் மின்னும் மரணம் போன்ற முழு வண்ண மறுபதிப்பு காமிக்ஸை இழப்போம் அல்லது நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாதபடி பொருளாதார சிக்கலில் எடிட்டரை மாட்டிவிட வழிவகுப்போம். 

ஒரு பேச்சுக்கு மின்னும் மரணம் ரூபாய் 2000ல் Limited editions ஆக வருகிறது என்று வைத்துக்  கொள்வோம். நீங்கள் கூறியபடி அனைவராலும் வாங்க முடியாது தான்... ஆனால் ஒரே ஊரில் இருக்கும் தெரிந்த நண்பர்கள் நான்கைந்து பேர் சேர்ந்து ஒரு புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம் அல்லவா? அல்லது தனக்கே தனக்கு சொந்தமாக வேண்டும் என்று நினைத்தால் அதற்கான விலையை கொடுப்பதிலும் தவறிருப்பதாக தெரியவில்லை. 

நான் ஏற்கனவே கூறியபடி இந்த வழிமுறை வராவிட்டால் டெக்ஸ் கதையை தமிழில் படித்து முடிக்க மட்டும் நமக்கு குறைந்தது 300 வருடங்கள் தேவைப்படும். வருடத்திற்கு இரண்டு டெக்ஸ் கதைகள் என்று வெளியிட்டாலும் இன்னும் 300 வருடம் காத்திருக்க வேண்டும். அதனால் Customized imprints மட்டுமே எதிர்காலத்தில் கோலோச்சும். வேண்டியவர்கள் ; விருப்பமுள்ளவர்கள் மட்டுமே வாங்கிக் கொள்ளவும் முடியும். அதே சமயம் எடிட்டரும் ஒவ்வொன்றிலும் குறைந்தப்பட்ச எண்ணிக்கையான 5000 பிரதிகள் அச்சடித்து விற்பனை செய்ய முடியாமல் ஒவ்வொரு முறையும் நஷ்டத்தில் தள்ளாட மாட்டார் அல்லவா..?14.மிஸ்டர் மரமண்டை18 July 2014 20:41:00 GMT+5:30

செம்ம காமெடி :) கருமண்டபம் செந்தில் via Arivarasu :

//இந்த உலகம் அனைவருக்குமானது. /அதுபோல நமது காமிக்ஸும் அனைவருக்குமானது/

இந்த உலகம் அனைவருக்குமானது என்ற வார்த்தை எந்தளவுக்கு உண்மையை நமக்கு கூறுகிறது? அப்படி அனைவருக்குமே இந்த உலகம் பொதுவானது என்றால் - ஏன் Israel – Gaza ; உக்ரைன் - ரஷ்யா ; சீனா - வியட்நாம் ; ஜப்பான் - வட கொரியா ; இராக் - isis ; இந்தியா - பாகிஸ்தான் ; வட கொரியா - தென் கொரியா ; சீனா - திபெத் ; சிரியா - இஸ்ரேல் ; ஈரான் - ஈராக் ; ஆப்கானிஸ்தான் - Al-Qaeda என்று எல்லா எல்லைப் பிரச்சனைகளுக்கும் சச்சரவு ; ஏன் சண்டை ; ஏன் யுத்தம் ; ஏன் இரத்தம் ; ஏன் கொடூர மரணம் - என்று இந்த உலகத்தை நெனைச்சேன்.. சிரிச்சேன்.. அம்புட்டுதேன் வாத்தியாரே ;)


15.மிஸ்டர் மரமண்டை18 July 2014 20:51:00 GMT+5:30

கருமண்டபம் செந்தில் via Arivarasu :

//அதுபோல நமது காமிக்ஸும் அனைவருக்குமானது. இதில் ஏற்ற தாழ்வு இருக்கக்கூடாது// அறிவரசு ! 
//கம்யூனிஸ்ட் தொண்டர் என்றால் பெருமை அடைய வேண்டிய விசயமே அன்றி// கருமண்டபம் செந்தில் !

நமது காமிஸ் அனைவருக்குமானது. இதில் ஏற்ற தாழ்வு இருக்கக் கூடாது. நல்லாத்தேன் தெரியுது.. 
ஆனா ஏஞ் சாமி.. எல்லாரும் சந்தா கட்ட மாட்றீங்க... இதில் ஏற்ற தாழ்வு வேண்டாம் தோழர்களே :)


16.மிஸ்டர் மரமண்டை19 July 2014 18:41:00 GMT+5:30

அனைவருக்கும் வணக்கம். ஒரே பதிவு ; மின்னும் மரணம் வேணுமா என்று ; 480 பின்னூட்டங்கள் ; கிட்டத்தட்ட 8000 பார்வைகள் ; தங்க தலைவனுக்கு நடந்த பாராட்டு விழாவில் இந்த அரங்கமே அதிர்ந்து விட்டது. இதில் மின்னும் மரணம் Customized imprints வேண்டாம் என்று பதிவு செய்தவர்கள் சுமாராக நான்கே நான்கு வாசகர்கள். மற்ற வாசகர்கள் அனைவரின் ஆதரவையும் பெருவாரியாகப் பெற்று மின்னும் மரணம் வெற்றியடைந்திருப்பதை நாம் இங்கு கண் குளிர பார்க்கிறோம். ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி !நன்றி ! நன்றி !

அதற்கு அச்சாரமாக கார்சனின் கடந்த காலம் - வண்ண மறுபதிப்புக்கு ஆதரவாக மொத்தம் 173 ஓட்டுகள் எதிராக வெறும் 9 ஓட்டுகள் மட்டுமே. ஆம் நாம் அனைவரும் தகுதியையும்  தரத்தையும் விரும்ப ஆரம்பித்து விட்டோம் !17.மிஸ்டர் மரமண்டை24 July 2014 09:47:00 GMT+5:30

காரணமின்றி காரியமில்லை ! 

எடிட்டர் விஜயன் அவர்களின் இந்தப்  பதிவு மிகவும் அர்த்தமானது ; ஆயிரம் சந்தாக்களை விட அதிகமான கருத்துகளை உள்ளடக்கியது ; வாசகர்களில் சிலருக்கு புரியாத காரணத்தால் பொன் வைக்கும் இடத்தில் பூ வைத்துச் சென்று விட்டனர். எனவே இந்த பதிவை முழுமையாக ஆதரிக்கிறேன் ; எடிட்டர் விஜயன் எடுக்கும் எந்த முடிவிற்கும் கட்டுப்படுகிறேன். நன்றி விஜயன் சார் !18.மிஸ்டர் மரமண்டை27 July 2014 08:46:00 GMT+5:30

//அது சென்னைப் புத்தக விழாவை ஒட்டியோ ; ஈரோட்டுத் திருவிழாவை ஒட்டியோ இருந்தால் தான் பாக்கி 500 பிரதிகளில் ஒரு பகுதியையாவது விற்றிட சாத்தியமாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்//

டியர் விஜயன் சார்,

முதலில், மின்னும் மரணம் Collectors Edition ஆக வெளியிட நீங்கள் சம்மதம் தெரிவித்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள் சார். இந்த முடிவை தற்போது நீங்கள் எடுக்காமல் இருந்திருந்தால் மின்னும் மரணம் வண்ணப் புத்தகம் எங்களுக்கு கனவாகவே இருந்திருக்கும் என்பதே இன்றைய நிதர்சனம். அதேநேரம் புத்தகத் திருவிழாவில் கொடுக்கப்படும் 10 % discount யும் கணக்கில் கொண்டு விலையை 1000 என்று நிர்ணயித்திருக்கலாம் என்பது என் கருத்து !19.மிஸ்டர் மரமண்டை27 July 2014 10:18:00 GMT+5:30

அனைத்திந்திய கேப்டன் ரசிகர் மன்றத்தினர்கோர் வேண்டுகோள் !

நண்பர்களே, கேப்டன் டைகர் ரசிகர்மன்ற கண்மணிகளே, அஞ்சாநெஞ்சன் ; அசகாயசூரன் ; மாதீரன் கேப்டன் டைகரின் போர்வாள்களே... ப்ளீஸ்.. யாருங்க அது.. இப்படி விசிலடிப்பது.. போதும் வீரர்களே போதும்.. உங்களின் கைத்தட்டலும் கரகோஷமுமே விண்ணை எட்டும் போது.. விசிலும் அடிக்கத் தான் வேணுமா friends..? விசிலடிக்க நாமென்ன டெக்ஸ் வில்லர் ரசிகர் மன்றத்தினர் போன்று விசிலடிச்சான் குஞ்சுகளா..?! நாமெல்லாம் ஜென்டில்மேன் கேப்டன் ரசிகர் மன்றத்தின் ஜென்டில்மேன் ரசிக சிகாமணிகள் அல்லவா..?

நண்பர்களே, பல வருடங்களாக நடந்து வந்த நம்முடைய சுதந்திரப் போராட்டம் ஒரு வழியாக இன்றைய தேதியில் முடிவுக்கு வந்து விட்டது. இனி சட்டம் ஒழுங்கு நம் கையில் மட்டுமல்ல அதை திறம்பட நிர்வகிக்க வேண்டியதும் தலைவர் ; செயலாளர் ; பொருளாளர் ; கொள்கைப் பரப்புச் செயலாளர் ; மற்றும் எண்ணற்ற உறுப்பினர்களான உங்கள் கையில் தான் என்பதை நினைவுப் படுத்தவே இந்த பொதுக்கூட்டம். இதோ நம் விடுதலை சாசனதிற்கான ஆவணமான மின்னும் மரணம் - வருகின்ற ஜனவரி 2015ல் நமக்கு அதிகாரப்பூர்வமாக கிடைத்து விடும். ஆனால்...20.மிஸ்டர் மரமண்டை27 July 2014 10:43:00 GMT+5:30

மின்னும் மரணம்-Collector's Edition (2)

ஆனால் அந்த நிலையை நாம் எளிதாக அடைய நமக்குள்ள பணியை நாம் இப்போதிருந்தே தொடங்க வேண்டும் என்பதே நமக்கு முன்னால் இருக்கும் மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்றே தோன்றுகிறது. எல்லாமே நல்லவர் நரேந்திர மோடி பார்த்து கொள்வார் என்று நாம் சும்மா இருந்தால் மின்னும் மரணம் ஈரோட்டு புத்தகத் திருவிழா 2015 வரை தாமதப்பட்டு விடும். 

500 முன்பதிவுகள் என்பது சாதரணமானது அல்ல என்பதை எத்தனை வாசகர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதில் மிகுந்த ஐயமே எழுகிறது. இதில் என்னுடைய கருத்து என்னவென்றால் கேப்டன் டைகரின் Die-hard fans மற்றும் காமிக்ஸ் collectors என குறைந்தப்பட்சம் ஒரு 70 வாசகர்களாவது 5 பிரதிகள் முன்பதிவு செய்தால் மட்டுமே 500 என்ற இலக்கை இரண்டே மாதத்தில் நாம் எட்ட முடியும் என்பதாகும். அதாவது 350 என்ற எண்ணிக்கையை இவர்கள் சொந்தம் கொண்டாடினால் மீதம் உள்ள 150+ முன்பதிவுகள் ஒவ்வொன்றாக அரங்கேறி தம் இலக்கை எளிதாக அடைந்து விடும். இத்துடன் இந்தப்  பொதுக்கூட்டம் நிறைவுப் பெறுகிறது. நன்றி..!

மின்னும் மரணம் என்ற காமிக்ஸ் காவியத்தை நமக்களித்த சிங்கத் தலைவன் ; சித்திரக்கதை மன்னன் விஜயன் அவர்களுக்கு ஒரு பெரிய ''ஓ'' போடுவோம் நண்பர்களே.. நன்றி. யேய்..யே..ய்.. ஏய்... யாருப்பா அது? கூட்டத்திலிருந்து கல் எறிஞ்சது..? கழக போர்வாள்களே.. சீக்கிரம் பிடியுங்கள்.. அந்த டெக்ஸ் வில்லர் ரசிகர் மன்ற உறுப்பினரை.. ஹா.. ஹா.. மாட்டிக்கிட்டாரா.. ஹா.. ஹா.. 

ப்ளீஸ்.. அவரை முழசா அனுப்பி வைங்கப்பா... பாவம்.. நமக்கு ஒரு முன்பதிவு மிஸ்ஸாயிடும்.. ஹா.. ஹா.. :)21.மிஸ்டர் மரமண்டை27 July 2014 14:02:00 GMT+5:30

//டைகரின் இரத்த கோட்டை கூட குறைந்த விலையில் 5 பாகங்களாக வெளிவந்து ஏகப்பட்ட மாயாஜாலங்களை நிகழ்த்தியதாக ஞாபகம். நாராயண..,நாராயண,,,,,//

Kannan Ravi :

நன்றி மிஸ்டர் ரவிகண்ணன். ஒவ்வொரு அடியாக எடுத்து வைப்போமே :)

ஜனவரி 2015 --- மின்னும் மரணம் Collector's Edition !
ஆகஸ்டு 2015 - இரத்தப் படலம் Collector's Edition !
ஏப்ரல் 2015 ----- தோர்கல் Collectors' Edition !
ஜனவரி 2016 --- இரத்தக் கோட்டை Collector's Edition !

:D22.மிஸ்டர் மரமண்டை27 July 2014 12:23:00 GMT+5:30

காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் ஓர் அறிவிப்பு !

இதுவரை வெளிவராத மின்னும் மரணத்தின் இறுதிப் பாகம் 11 - அரிஸோனா லவ் - மின்னும் மரணம் Collector's Edition ஆக ஜனவரி 2015 ல் முழு தொகுப்பாக வண்ணத்தில் வெளிவந்து தங்கத்தைவிட அதிகமாக ஜொலி ஜொலிக்கப் போகிறது. 

எனவே மின்னும் மரணத்தின் இறுதிப் பாகத்தை படிக்கவும் ; முழு வண்ணத்தில் Collector's Edition பொக்கிஷத்தைப் பெற்றுக் கொள்ளவும் உடனே முந்துங்கள். இப்போது தவற விட்டால் பிறகு எப்போதுமே கிடைக்காது. அதன் பிறகு இரண்டு வருடம் கழித்து.. விஜயன் சார்.. மின்னும் மரணம் Collector's Edition புத்தகத்தை 5000 சொல்கிறார்கள் சிலர் 10000 சொல்கிறார்கள்.. எனவே மறுபதிப்பு செய்து அதே விலையில் கொடுங்கள் என்று யாரும் கோரிக்கை வைக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி !


23.மிஸ்டர் மரமண்டை28 July 2014 13:54:00 GMT+5:30

Kannan Ravi : 

//முந்தாநேத்து வந்த வண்டியின் Production ஐ நிறுத்தி விட்டார்களாமே.? ஏன் மரமண்டையாரே.? பழைய வண்டிகளுக்கு பெயிண்டு அடித்துத்தான் ஓட்ட வேண்டுமாமே.!அதிலும் வண்டியின் மூக்கு வேறு சற்று சிதிலமடைந்து இருக்கிறதாமே.!//

ஹா.. ஹா.. எங்கய்யா இருந்த இத்தன நாளா..?

அதனால் தான் சொல்கிறோம் மிஸ்டர் கண்ணன்.. ஏற்கனவே Production/ஐ நிறுத்தி விட்டதால் ஸ்டாக்கில் உள்ள அத்தனை டைகர் கதைகளையும் சீக்கிரமாக வெளியிட வேண்டும் என்று :) வருங்காலத்தில் out of model ஆகிவிட்டால் யாருமே வாங்க மாட்டார்கள். எனவே ஆசிரியர் கைவசம் உள்ள அனைத்து டைகர் கதைகளையும் Collector's Edition ஆக உடனே வெளியிட ஆதரவு தாரீர் :) இரத்தக் கோட்டை ; இளமையில் கொல் ; தோட்டா தலைநகரம் ஆகிய பழைய வண்டிகளுக்கு பெயிண்டு அடித்து மறுபதிப்பாக முழுவண்ணத்தில் Collectors Edition ஆக வெளிவர ஆதரவு தாரீர் :)


24.மிஸ்டர் மரமண்டை28 July 2014 14:18:00 GMT+5:30

P.Karthikeyan ://ஆயிரம்தான் காவியமானாலும் கல்லா கட்டனுமில்லையா//

கவலையே வேண்டாம் சார்.. 'மின்னும் மரணத்தில்' கட்டப்போகும் கல்லாவைப் பார்த்து டெக்ஸ் வில்லரே மூக்கில் விரலை வைக்கப் போகிறார். அப்புறம் இரத்தக் கோட்டை என்ன? இளமையில் கொல் என்ன? தோட்டா தலைநகரம் என்ன? இன்னும் ஏதாவது என்ன? பிறகு என்ன? டைகர் ரசிகர்களுக்கு ஒரே தீபாவளி தான் போங்கள் :D


25.மிஸ்டர் மரமண்டை29 July 2014 09:23:00 GMT+5:30

//We can do few things, book price can be like 1000 Rs//

V Karthikeyan : +1 (1)

மின்னும் மரணத்தின் விலையை ரூபாய் 1000 என்று நிர்ணயிக்க வேண்டும் ; முன்பதிவு செய்பவர்களுக்கு 10% discount என்றும் அறிவிக்க வேண்டும். இதன் மூலம் புத்தகம் ஒரே விலையில் அனைவருக்கும் சென்று அடையும் என்பதே இதன் மூலம் கிடைக்கும் பலன் ; இதையே அனைத்து ஸ்பெஷல் வெளியீடுகளுக்கும் apply செய்ய வேண்டும். இதனால் புத்தகக் கண்காட்சியில் வாங்குபவர்களுக்கு மட்டும் சலுகைகள் எனும் பாகுபாடு எதிர்காலத்தில் உடைத்தெறியப் படும் என்பது பரவலான கருத்து :)


26.மிஸ்டர் மரமண்டை29 July 2014 09:24:00 GMT+5:30

//Release the book earlier like 2 weeks before the release, so subscribers gets first. So that's a motivation to subscribe.//

V Karthikeyan : +1 (2)

Collector's Edition ; ஸ்பெஷல் வெளியீடுகளை ஒவ்வொரு புத்தகக் கண்காட்சிக்கு இருவாரம் முன்பாக சந்தாதாரர்கள் ; முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் அனுப்பி வைக்க வேண்டும். online விற்பனைகளுக்கும் ; கடைகளுக்கும் ; புத்தகக் கண்காட்சிகளுக்கும் இருவாரங்கள் கழித்தே இவ்வித வெளியீடுகளை விற்பனைக்கு கொண்டு வர வேண்டும். 

இது ஒரு கடுமையான முடிவாக இருந்தாலும் ; விற்பனை சிறிதளவு பாதிக்கும் என்று மனதளவில் நினைத்தாலும் இந்த முடிவை கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டும். இதன்மூலம் உயிர் நாடியான சந்தாதாரர்களின் முக்கியத்துவம் காக்கப்பட்டு ; ஸ்பெஷல் வெளியீடுகளுக்கான சந்தா எண்ணிக்கையும், முன்பதிவும் அதிகரிக்கும் என்பது பரவலான கருத்து :) 


27.மிஸ்டர் மரமண்டை29 July 2014 09:25:00 GMT+5:30

//Release the book earlier like 2 weeks before the release, so subscribers gets first. So that's a motivation to subscribe.//

V Karthikeyan : +1 (3)

இங்கு ஒரு விஷயத்தை அழுத்தமாக கூற விரும்புகிறேன். முன்பதிவு செய்பவர்களுக்கும் ; சந்தாதாரகளுக்கும் முன்னுரிமையும், முக்கியத்துவமும் நாம் கொடுத்தே ஆக வேண்டும். தற்போதுள்ள நடைமுறை எதற்காக என்பதை என்னால் கணிக்க முடிந்தாலும் அதை முடிவுக்கு கொண்டு வரும் காலம் வந்து விட்டதாக கருதியே 2015ல் செயல்பட வேண்டும். உதாரணமாக..

1.கூரியர் சார்ஜ், புத்தகத்தின் விலையோடு சேர்க்கப்பட வேண்டும். உதாரணமாக காமிக்ஸ் விலை 150? 80? 
2.Rs.35 விலையிலான வெளியீடுகளை சந்தாவில் சேர்க்காமல் வியாபார விரிவாக்கத்திற்காக மட்டும் வெளியிடலாம்.

இதன் மூலம் சந்தாரார்கள் ; கடைகளில் வாங்குபவர்கள் என அனைவருக்கும் ஒரே விலையில் காமிக்ஸ் கிடைக்கும். புத்தகம் வெளிவந்து பலநாட்கள் கழித்து புத்தகக் கண்காட்சியில் வாங்குபவர்களுக்கு 10% சலுகை விலையிலும் ; சந்தா செலுத்தாமல் online மூலம் வாங்குபவர்களுக்கும் (with discount) ; மொத்தமாக பணம் செலுத்த இயலாமல் கடைகளில் வாங்கும் வாசகர்களுக்கும் ஒரே விலையில் காமிக்ஸ் கிடைக்கும். இதன்மூலம் கடைகளுக்கு கொடுக்கப்படும் விற்பனை கமிஷன்  உபரி இலாபமாக கணக்கில் வரும். 

இது ஒரு கடுமையான முடிவாக இருந்தாலும் வருங்காலத்தில் அமுல்படுத்தியே தீர வேண்டும் எ.எ.கருத்து :)27.மிஸ்டர் மரமண்டை29 July 2014 09:41:00 GMT+5:30

//Ideas to increase subscription / reservation of special issues//

V Karthikeyan : +1 (4)

2015 ல் சந்தா எண்ணிக்கை மிகவும் குறைந்துப் போகும் என்ற கணிப்பை கணக்கில் கொண்டு அதற்கான சில முன்னேற்பாடுகளை இப்போதே திட்டமிட வேண்டும். ஏன் சந்தா குறையும் என்பதற்கான காரணம் மிகவும் எளிதானது. அனைத்து கடைகளிலும் ; அனைத்து ஊர்களிலும் கூரியர் சார்ஜ் இல்லாமல் காமிக்ஸ் கிடைக்கும் எனும்போது மொத்தமாக பணம் செலுத்த யாராயிருந்தாலும் சற்று யோசிக்கவே செய்வர். 

இரண்டாவதாக, காமிக்ஸ் எந்தவித குறையும் இல்லாமல் அதாவது முனை மடங்கி ; வேஸ்டேஜ் பிரிண்ட் பக்கங்கள் இல்லாமல் பார்த்துப் பார்த்து பரிசோதித்து வாங்கிக் கொள்ளலாம் என்ற எச்சரிக்கை மனப்பான்மையும் மிகப் பெரிய காரணமாக 2015ல் அமையும். 

அமெரிக்கா ; பிரான்ஸ் ; ஸ்ரீலங்கா ; பெங்களூரூ ; காமிக்ஸ் தீவிர வாசகர்கள் - என்று மட்டும் இன்று இல்லாவிட்டால் சந்தாவே இல்லாத காமிக்ஸ் புத்தக விற்பனை வழிமுறையாக மாறிவிடுமோ என்ற மாற்றுக் கருத்தையும் கணக்கில் கொண்டு 2015 ற்கான நடைமுறையை திட்டமிட வேண்டும் என்பதே ஒரு காமிக்ஸ் வாசகனான என்னுடைய விருப்பம். நன்றி விஜயன் சார் !28.மிஸ்டர் மரமண்டை30 July 2014 08:49:00 GMT+5:30

மின்னும் மரணம் ! முத்து collector's ஸ்பெஷல்! 

டியர் விஜயன் சார்,

மின்னும் மரணம் ! முத்து collector's ஸ்பெஷல்! இப்படித்தான் title வரும் என்று நினைத்திருந்தேன்.. இப்படித்தான் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் சார். உதாரணத்திற்கு தங்களின் முந்தைய வெளியீடான இரத்தப் படலம் புத்தக title ஐக் கூறலாம் ;

இரத்தப் படலம்! 
லயன் collector's ஸ்பெஷல்!

The Compllete Collection !
இரத்தப் படலம் 1-18 The Complete Saga !

ஒருவேளை இரத்தப் படலத்திற்கு The Blood Sport ஸ்பெஷல்! என்று பெயர் வைத்திருந்தால் எப்படி அந்த காமிக்ஸ் காவியம் தன்னுடைய ஒரிஜினல் தன்மையை இழந்திருக்குமோ அப்படித்தான் - வேறு ஒரு பெயர் வைத்தால் மின்னும் மரணமும் தன் ஒரிஜினல் தன்மையை இழந்து விடும் சார் !29.மிஸ்டர் மரமண்டை30 July 2014 09:28:00 GMT+5:30

மின்னும் மரணம் ! முத்து collector's ஸ்பெஷல்! [2]

//ஆனால் 1000 பேரை மாத்திரமே எட்டக் கூடியதொரு முயற்சிக்குள்.. 
ராப்பகலாய் நாங்கள் உழைப்பது எவ்வித சுவாரஸ்யத்தையும் நல்கப் போவதில்லை//

உண்மைதான் விஜயன் சார்.. உங்களின் தற்போதைய முடிவை ஏற்றுக் கொள்கிறேன். அதே நேரம் மின்னும் மரணம் ஸ்பெஷலை 1000 வாசகர்களாவது வாங்குவார்களா என்ற சந்தேகம் அழுத்தமாக இருக்கும் நிலையில் அல்லவா நம் வாசகர்கள் வட்டம் இருக்கிறது? விலை குறைவாக இருந்தால் மட்டுமே காமிக்ஸ் அனைவருக்கும் போய் சேரும் என்ற அனைவரின் எண்ணப்படியே/கருத்துபடியே பார்த்தாலும் - இன்று உங்கள் குடோனில் ஒரு புத்தகம் கூட மிஞ்சியிருக்கக் கூடாதே சார்.. ஏனெனில் அவை அனைத்தும் 40,50,60,100,120 விலைகளில் தானே இருக்கிறது?

போலவே, தற்போது 2+ சந்தா ; 2+ பிரதிகள் வாங்கும் வாசகர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் ஒரு 2000+ வாசகர்கள் தானே இருப்பார்கள்? 1000 வாசகர்களுக்கும் 2000 வாசகர்களுக்கும் பெரிதாக வித்தியாசம் ஏதும் இல்லையே சார்.. 2000+ வாசகர்களுக்கு ராப்பகலாக உங்கள் டீம் உழைப்பது சரி என்று ஏற்றுக் கொள்ளும் தருணத்தில் - 1000 வாசகர்களுக்கு நீங்கள் ஃப்ரீயாக இருக்கும் போதோ அல்லது பகலில் உழைப்பதோ கூட தவறாகாதே சார் :)

2000 நபர்கள் வாங்கக்கூடிய நிலையில் நீங்கள் 1000 பிரதிகள் அச்சடித்தால் தான் தவறு ; அது ஏற்றத் தாழ்வுக்கு வழிவகுக்கும். விருப்பமே இல்லாதவருக்கும் ; காமிக்ஸ் வாசகரே அல்லாதவருக்கும் நம் உழைப்பு போய் சேரவில்லையே என்று ஆதங்கப்படுவதில் என்ன சமாதானம் இருக்க முடியும் சார்? காமிக்ஸிற்கு நீங்கள் முதல் வாசகன் என்றாலும் - தற்போது காமிக்ஸ் உங்களுக்கு தொழில் அல்லவா? செய்யும் தொழிலே தெய்வம் எனும்போது அதற்கான அத்தனை முயற்சிகளையும் நாம் சுணக்கமின்றி செய்யத் தானே வேண்டும்? நம் முன் தோன்றும் அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்தி அதன் மூலம் வரும் தொழில் விருத்தி மூலம் தானே நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்ய முடியும்? 
30.மிஸ்டர் மரமண்டை30 July 2014 10:17:00 GMT+5:30

மின்னும் மரணம் ! முத்து collector's ஸ்பெஷல்! [3]

தொழிலையும் சேவையையும் ஒருங்கிணைத்து ஒரே பாதையில் செலுத்த நினைப்பது இரண்டு குதிரைகளில் சவாரி செய்வது போன்றது அல்லவா.. உதாரணத்திற்கு உலக நம்பர் ஒன் கோடீஸ்வரராக இருந்த பில் கேட்ஸ் அவர்களை கூறாலாம். 3+ இலட்சம் கோடி அவர் கைவசம் இருந்த போது தான், அவர் Bill & Melinda Gates Foundation என்ற ஸ்தாபனத்தை ஆரம்பித்து சேவை செய்து வருகிறார். அவர் இதை 2000ல் ஆரம்பித்து இருந்தாலும் அதற்கு பிறகும் கூட அவரின் microsoft software எதுவும் குறைந்த விலைக்கு அவரால் விற்பனை செய்யப்படவில்லை. ஏனெனில் தொழில் வேறு சேவை வேறு என்ற நிலைபாடுதான் காரணமாக இருக்க முடியும்?

உதாரணமாக, நான் சிறுவயதிலிருந்து இன்றுவரை குமுதம் ; ஆனந்த விகடன் ; குங்குமம் ; கல்கி ; கல்கண்டு ; நக்கீரன் ; புதிய தலைமுறை ; நாணயம் ; டைம் பாஸ் ; etc., etc., etc., என எந்த ஒரு வெகுஜன பத்திரிக்கைகளையும் படித்ததே இல்லை ; படிக்க விரும்பியதும் இல்லை ; படிக்க விரும்பபோவதும் இல்லை. ஒரு தயாள சிந்தனை கொண்ட ஒருவர் எனக்காக இந்த வெகுஜன பத்திரிக்கைகள் அனைத்துக்கும் சந்தா கட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். முதல் மாதத்தில் அவைகள் படிக்கப்படாமலேயே பழைய பேப்பர் கடைக்குச் செல்லும் ; இரண்டாம் மாதம் அவைகள் எனக்கு குப்பையாகத் தெரியும் ; மூன்றாம் மாதம் எனக்கு அவைகள் தொந்தரவாக தெரியும் அல்லவா? அது போலதான் காமிக்ஸ் வாசனையே விரும்பாத நபர்களும் ; காமிக்ஸ் வாசகராகவே இல்லாத மக்களும்... 

என் சொந்தபந்ததில் என் மகனைத் தவிர வேறு எந்த புதிய தலைமுறை சிறுவர்களும் காமிக்ஸை விரும்பியதே கிடையாது. சும்மா கொடுத்தால் கூட அதை தூக்கி எறியும் அளவிற்கு காமிக்ஸ் வாசம் அல்லாதவர்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் facebook ; whats app ; சினிமா ; டிவி ; ஷாப்பிங் மால் ; friends ; chatting ; kfc ; pizza இவைமட்டுமே. இதற்கே அவர்களுக்கு 24 மணிநேரம் போதவில்லை.. இவர்களை எப்படி உங்களால் காமிக்ஸ் வாசகர்களாக மாற்ற முடியும் என்று தெரியவில்லை. வேண்டுமானால் இவர்களுக்கு அடுத்து வரும் தலைமுறையை வேண்டுமானால் மாற்றலாம்.. அதாவது தற்போது பிறந்து வளரும் குழந்தைகளை :) 

எனவே நான் கூறுவது என்னவென்றால் - யார் காமிக்ஸ் வாசகராக இருக்கிறார்களோ அவர்கள் தான் உங்கள் காமிக்ஸை வாங்குவார்கள் ; யார் காமிக்ஸ் வாசகராக இருக்கிறார்களோ அவர்களின் வாரிசுகள் தான் உங்கள் காமிக்ஸை வாசிப்பார்கள். தற்போது உங்கள் காமிக்ஸ் வாசகர்களின் வயது 35+ 50+ இன்னும் சில காலத்தில் காமிக்ஸ் வாசிப்பும் போரடித்து காசி ராமேஸ்வரம் என்று புண்ணிய யாத்திரைக்கு சென்று விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை... எனவே அதுஅது அந்தந்த வயதில் தான் கிடைக்க வேண்டும். அப்பொழுதான் அது உபயோகப்படும். இன்று நாங்கள் உங்களின் ரெகுலர் வாடிக்கையாளர்கள்... ஏனெனில் நாங்கள் காமிக்ஸை அளவுக்கதிகமாக விரும்புகிறோம்... நாளையே எங்கள் விருப்பம் வேறு திசையில் மாறலாம்.. அல்லது தற்போதைய விருப்பத்தில் சலிப்பு ஏற்படலாம்... 

அதனால் இன்று எது நிச்சயமோ அதை செய்வதே இறைவன் நமக்கிட்ட வழி ; நாளை என்பதை எவராலும் செதுக்க முடியாது ; எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கும்! அதனால் நம் கடமையை அதாவது நம் தொழிலை திறம்படவும், வாய்ப்புகளை வீணாக்காமலும் செய்பவர் எவரோ அவரே வல்லவர் ; நல்லவர் ; சேவை செய்வதற்கான பொருளை சேர்க்க கூடியவர் என்பது அறிஞர்களின் கருத்து. நன்றி விஜயன் சார்.

என்றென்றும் அன்புடன்..