Follow by Email

Sunday, 17 August 2014

சட்டம் அறிந்திரா சமவெளி ! (LMS)

நண்பர்களே, இது கேப்டன் விஜயகாந்த் நடித்திருக்க வேண்டிய சூப்பரான கதை ! அலட்டல் ; உருட்டல் ; மிரட்டல் ; அடி ; உதை ; குத்து ; புல்லட்டை மிஞ்சிய வேகம் ; புயல் காற்றில் கூட கலையாத கேசம் ; சலூனுக்குள் வயிறு முட்ட தாக சாந்தி - என அற்புதமான திரைக்கதை ! ஆனால், கேப்டன் விஜயகாந்த் முழு நேர அரசியலுக்கு வந்து விட்டதால், இந்தக் கதையை யாரோ 'போனேலி' கம்பெனிக்கு, நான்கு வருடம் முன்பே அனுப்பி வைத்து, கொஞ்சம் துட்டு பார்த்து விட்டார்கள் போலத் தெரிகிறது :)

இப்பொழுதும் கூட ஒன்றும் குறைந்துப்  போய் விடவில்லை. கதை கிடைக்காமல் கஷ்டப்படும் நம் இளையத் தளபதிக்கு இதை அனுப்பி வைத்தால் - நம் தமிழ்நாட்டிற்கு மரண மாஸ் படம் ஒன்று கிடைத்து விடும். முதல் நாள் வசூல் 14 கோடி ; பலநாள் வசூல் பல நூறு கோடி என்று, விசிலடிச்சான் குஞ்சுகளின் பணத்தை, மொத்தமாக அள்ளி விடலாம் என்பது என் கருத்து :)


கார்சன் : காரில் வந்து காலாற காலையில் வாக்கிங் போகும் - பார்க்கில் முகம் மட்டுமே பார்த்துப் பழகிய பெரியவர் போல் ஒரு தோற்றம். எதிரிகள் சூழ்ந்து துப்பாக்கி விளையாட்டு நடுத்தும் போதெல்லாம்,  அந்தப் பெரியவரை பார்த்து பரிதாபம் ஏற்படும்படியான பஞ்சுப் போன்ற தலைக் கேசமும், ஒடுங்கிய வதனமும் ! ஏதோ அவ்வப்போது வறுத்த கறியும், சுக்கா மட்டனும், வயிறு நிறைய பீரும் கிடைப்பதால் தான் - டெக்ஸ் வில்லருடன் குப்பை கொட்ட முடிகிறது என்பதான தோற்றம். ஹ்ம்ம்.. காலத்திற்கு தான் எவ்வளவு அசூர வேகம் ; கடைசியில் காலனுக்கு தானே மிஞ்சும் இந்தத் தேகம் !

டெக்ஸ் கிட் : விஜய் டிவி பெருமையுடன் வழங்கும் - கிச்சன் லிட்டில் சூப்பர் ஸ்டார்/ல் வரும் போட்டியாளர் போலவே - மஞ்சள் சட்டையில், சிவப்புத் துணியை தைத்துக் கொண்டு வந்துப் போகும், முழி பிதுங்கும் கேரக்டர் :) அதிலும் 107 ஆம் பக்கத்தில் டெக்ஸ் கிட்/ன் இயலாமை நன்றாகவே வெளிப்படுகிறது ! 

செவ்விந்திய டைகர் : வருடம் 36% வட்டி தரும் பைனான்ஸ் கம்பெனியின் - செக்யூரிட்டி போலவே விறைப்பாக வந்து விறைப்பாக, டெக்ஸ் வில்லர் கூடவே பயணிக்கிறார். அவ்வப்போது சூப்பராக சீன் போடுகிறார். அதுமட்டுமல்ல 51 ஆம் பக்கத்தில், தானும் ஒரு மாஸ் ஹீரோ தான் என்பதையும் நிரூபிக்கிறார் :)

இனி, கதை விமர்சனத்திற்கு போகலாம் நண்பர்களே.. 

ஆனால் ஒன்று, இதுபோன்ற நகரம் சம்பந்தமான கதைகள் மட்டுமே தொடர்ந்து வந்தால், டெக்ஸ் வில்லரின் கதைகளே என்றாலும் - சீக்கிரம் நம் இரசனையும் மாறி விடும் என்றுத் தோன்றுவதை, சட்டம் அறிந்திரா சமவெளியின் வண்ணச் சித்திரங்களே தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது ! ஏனெனில் புதுமை என்றாலே நமக்கு எப்பொழுதும் பரவசம் தான் ; புரிந்து விட்டால் எல்லாமே நமக்கு திவ்ய தேசம் தான் ! 

காடு, மலை, மேடு, புழுதி, மணல், வெயில், குளிர், அபாச்சோ, விஷ அம்பு, மண்டைத் தொலி, எருமை வேட்டைகள், போக்கிரிகள், துப்பாக்கி குண்டு, ஒண்டிக்கு ஒண்டி, சலூன்கள் - என மூச்சிரைக்க ஜீவன்கள், உயிர்த் தப்ப நடத்தியப் போராட்டமே, நம்மில் புதைந்துப் போயிருந்த சோகத்தை அகற்றும் மாயாஜாலமாக அமைந்தது. சிறிய கோட்டிற்கு அருகில் வரைந்த பெரிய கோடாக, அக்கதைகளில் காணப்படும் ஜீவமரணப் போராட்டம் - நம் பிரச்சனைகளின் வீரியத்தைக் குறைப்பதாக அமைந்தது !

பரந்து விரிந்த பாலைவனம் ; கண்ணுக்கு எட்டியத் தூரம் வரை மணற் புழுதி அல்லது மலை முகடு ; மரணக் கால்வாய்கள் ; கற்றாழைகள் ; பகலில் சுட்டெரிக்கும் வெயிலென்றால் இரவிலோ கடுங்குளிர் ; விரியன்கள் மறைந்து வாழும் பாறை முகடுகள் - என நம்மை வசீகரித்து கட்டி போட்ட டெக்ஸ் வில்லர் கதைகள் தான் ஏராளம் ! அது போன்ற கதைகள், நம் எண்ணங்களை எல்லையின்றி விரியச் செய்து ஒரு பரவச நிலையை அடையச் செய்தது என்றால் அது மிகையல்ல ! 

உங்கள் மனம் சோகத்தில் இருந்து விடுபட வேண்டும் என்றால், நீங்கள் ஆகாயத்தை வெறித்துப் பாருங்கள் - சோகத்தின் அழுத்தம் குறைய ஆரம்பிக்கும் ; உங்களுக்கு அது பிடித்து இருந்தால் கொஞ்சம் இரசித்துப் பாருங்கள் - உங்களின் சோகம் கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் கரைய ஆரம்பிக்கும் ; உங்கள் மனம் இலேசாக ஆரம்பித்தால், ஆகாயத்தை அழகாய் வர்ணித்துப் பாருங்கள் - நம் வாழ்க்கை வசந்தத்தின் வீடாக தெரியும் ; அப்படித் தெரிந்தால் அந்த நினைவுகள்,  உங்களை விட்டு அகலாமல் இருக்க அந்த நினைவுகளை திரும்பத் திரும்ப மனக்கண்ணில் கொண்டு கற்பனையில் கனவு காணுங்கள் - உங்கள் வாழ்க்கை கிடைப்பதற்கரிய பொக்கிஷமாகும் !

இப்படிச் செய்ய இயலாதவர்கள் அற்புதமான டெக்ஸ் வில்லர் கதை ஒன்றை எடுத்துப் படியுங்கள் - இரண்டுக்கும் வேறுபாடே இருக்காது ; இது தான் டெக்ஸ் வில்லர் வெற்றியின் மர்மம். அப்படி ஒரு கதையாக டெக்ஸ் வில்லரின் - சட்டம் அறிந்திரா சமவெளி ! - இருந்ததா என்றால், அதற்கான பதில் இல்லை என்பதே !


டெக்ஸ் வில்லரின் கதைகள் அனைத்துமே,  டெம்ப்ளேட் வகையச் சார்ந்தது தான் என்றாலும் இது ஒரு அக்மார்க் காப்பி பேஸ்ட் டெம்ப்ளேட் கதையாக தெரிவதே இப்படி ஒரு விமர்சனம் எழுத காரணம். icc world cup matchல் இந்தியா ஆஸ்திரேலியா semi final நடைபெறும் போது,  match fixing  நடந்து ஆஸ்திரேலியா தான் ஜெயிக்கும் என்று, ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்து விட்டால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? என்ன தான் இந்தியா  boundary, sixer என்று விளாசித்  தள்ளினாலும் - உங்களுக்கு எந்தளவு சுவாரசியம் இருக்கும்? அப்படி ஒரு கதையாக தான் சட்டம் அறிந்திரா சமவெளி ! இருக்கிறது.

ஒரு காமிக்ஸ்  கதையே என்றாலும், அதில் கொஞ்சமாவது மர்மம் இருக்க வேண்டும் ; எதிர்பாராத சில திருப்பங்கள் இருக்க வேண்டும் ; வில்லன்கள் கொஞ்சமாவது தாக்குப் பிடிக்க வேண்டும் ; சிறிதாவது பரபரப்பு இருக்க வேண்டும் ; ஆனால் இந்தக் கதையில் அப்படி  எதுவுமே இல்லை ! டெக்ஸ் வில்லர் மட்டுமே இருக்கிறார் ;  கேப்டன் விஜயகாந்த் போல் அடி, உதை, குத்து என்று பக்கத்திற்கு பக்கம் ஓவராக சீன் போடுகிறார் ; தன் முகம் ரொம்ப வயதானது போலுள்ளதைக்  கூட  கண்ணாடியில் பார்க்காமல், கார்சனை, பெருசு என்று நக்கலடிக்கிறார் ! கதையின் முதல் பக்கத்திலேயே வில்லன் யார் என்று சொல்லி விடுகிறார்கள், அவருக்குத் துணையாக ஷெரிப் இருப்பதையும் கூறுகிறார்கள், டெக்ஸ் வில்லரால் தான் ஜெயிக்க முடியும் என்பதையும் சத்தியம் செய்கிறார்கள், ஒவ்வொரு வில்லனைப் பற்றியும் 20 பக்கம் முன்பாகவே கூறி விடுகிறார்கள், எல்லா இரகசியங்களையும் தெரிந்து கொண்டு, இவர் அவர்களை நெருங்குவது கொஞ்சம் அல்ல அதிகமாகவே சுவாரசியத்தைக் குறைக்கிறது.

இருந்தாலும், ஊருக்குள் வர விடாமல் வில்லனின் அடியாட்கள் கும்பல்  வழியை மறிப்பதும், அவர்களை ஏமாற்றும் மாற்று யுக்தி கொண்டு ஊருக்குள் அதிரடியாக டெக்ஸ் வில்லர் நுழைவதும்   மட்டுமே,  இக்கதையை ஓரளவுக்கு  தூக்கிப் பிடிக்கிறது. ஆனால், அதைக் கெடுத்தது, இரண்டு இடத்தில் நடைபெறும் துப்பாக்கிச்  சண்டை தான். கெவின் கிராஸ்பையின் 12 நபர்கள் அடங்கிய கும்பல் தன்னிடம் இருக்கும்  வின்செஸ்டர் ரைஃபிள்கள் மூலம், தங்களிடம் இருந்து தப்பி ஓடும் டெக்ஸ் வில்லர் & coவில் ஒருவரைக் கூட,  சுட முடியாமல் கோட்டை விடுவதை கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை. அதே சமயம் ஓடும் வண்டியிலிருந்து ரிவர்ஸில் திரும்பி டெக்ஸ் குரூப் சுட்டு, ஐந்து நபர்கள் எமலோகம் போவது எல்லாம் ரொம்பவே அநியாயம். அதிலும் கார்சன் பிஸ்டல் மூலம் சுட்டு, கும்பலில் ஒருவனை பரலோகம் அனுப்புவது எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.   அதுமட்டுமல்ல 51 ஆம் பக்கத்தில் வரும் டுமில் டுமில்  காட்சி, நாம் சிறு வயதில் தீபாவளி அன்று நிகழ்த்திய திருடன் போலிஸ் விளையாட்டை ஞாபகப்படுத்தி பரவசப்படுத்தியது என்றே கூறலாம் :)


ஸப்போர்டில் உள்ள  வயதான குடிமக்கள் நால்வர், டெக்ஸ் வில்லர் & co க்கு உதவ வருவதும், அந்த உதவியை இவர்கள் ஏளனமாக மறுப்பதும், பிறகு அவர்களாலேயே  டெக்ஸ் வில்லர் & co உயிர் பிழைப்பதாக கதையை முடித்திருப்பதும் நல்ல யதார்த்தம் மட்டுமல்ல கொஞ்சம் முன்னேற்றமும் கூட.

சீரும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்ற, நம்மூர் ஆட்டோ வாசகத்தை கதாசிரியர் படித்திருப்பார் போலும். ஆசைநாயகி லோலோவின் கேரக்டரை அற்புதமாகவும், அழுத்தமாகவும் கதைக்குள் நுழைத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. அதே போல் லோலோவின் சகோதரன் பகோ சாவெஸ், கூலிப்படைத் தலைவன் கெவின் கிராஸ்பை, மாக் கார்மிக், பில் கார்மென், பால் மோரிஸன் என பல யதார்த்தமான  ; அழுத்தமான கேரக்டர்கள்.  இப்படி பல விஷயங்கள் பிளஸ் பாயிண்டாக இருந்தாலும்  ஏதோ ஒன்று  குறைவது போன்றே தெரிகிறது. அதற்கு காரணம் முன்பே கூறியது போன்று, இந்தக் கதை - நகரமும் நகரம் சார்ந்த கதை என்பதால் இருக்கலாம் ; துப்பாக்கிச் சண்டையில் ஒட்டு மொத்தமாக நையாண்டி செய்து, கோட்டை விட்டதால் இருக்கலாம் ; டெக்ஸ் வில்லரின் ஒன் மேன் ஷோ என்பதால் இருக்கலாம் ; அல்லது நில்..கவனி..சுடு.. கதையைப் போன்றே இதுவும் சிட்டி ஹண்ட் ஆக இருப்பதால் கூட இருக்கலாம் !

எது எப்படி இருந்தாலும், ஒரு சூப்பர் ஹீரோவின்  கதை நமக்கு போரடிக்க ஆரம்பித்தால் - நாம் அடுத்த கட்ட இரசனையை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டோம் என்பதே உண்மை ; ஒரு  மாஸ் ஹீரோவின் கதை நமக்கு போரடிக்க ஆரம்பித்தால் - நாம் வேறொரு ஹீரோவை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டோம் என்பதும் உண்மை !

18 comments:

 1. Replies
  1. நன்றி விஸ்வா bhai !

   Delete
  2. ஐயையோ,,

   ராஜ்ஜூ பாய்..... என்னை விட்டுடுங்க!

   Delete
  3. Sorry விஸ்வா bhai, நான் ராஜ்ஜூ பாய் இல்ல, அவர் தம்பி கிருஷ்ணா bhai :)

   Delete
  4. அப்ப்டியா?

   நான்கூட விஸ்வா பாய் கிடையாது.

   அவரது தம்பி மொக்கை பாய்!!!!!!!!!!!!!!!!!11

   Delete
 2. // செவ்விந்திய டைகர் : ... 51 ஆம் பக்கத்தில், தானும் ஒரு மாஸ் ஹீரோ தான் என்பதையும் நிரூபிக்கிறார் :) //

  Ha ha ha!

  ReplyDelete
 3. அருமையான விமர்சனம் Mr.​​​​​​​​​....! காமிக்ஸ் மட்டும் அலசிடும் பொழுது - you are in a zone !!

  ReplyDelete
  Replies
  1. Raghavan :

   Welcome Back Mr.ராகவன் ஜி ! ஆச்சரியப்பட வைத்து விட்டீர்கள். சந்தோஷமாக இருக்கிறது. நன்றி !

   Delete
  2. நன்றி ரமேஷ் !

   Delete
 4. good article man!

  //அல்லது நில்..கவனி..சுடு.. கதையைப் போன்றே இதுவும் சிட்டி ஹண்ட் ஆக இருப்பதால் கூட இருக்கலாம் !//

  but in terms of story quality its difference between COW and Goat (!)

  I feel LMS TEX is failed flat, but its may be because of our over expectation also not only because of bad story. its ok kind but since its not able to raise to occasion its failed flat i guess.

  ReplyDelete
  Replies
  1. //*I feel LMS TEX is failed flat, but its may be because of our over expectation also not only because of bad story*//

   இதற்கு காரணமாக நான் கருதுவது ;

   1.நம் ரசனைச் சிறுகச் சிறுக மாறி வருகிறது !

   2.அதற்கு டெக்ஸ் vs டைகர் சண்டைகள் பெரிதும் உதவியிருக்கிறது !

   3.இதுவரை நமக்குத் தெரியாத கதையின் பலவீனங்கள், டெக்ஸ் வில்லர், கேப்டன் டைகர் ரசிகர் மன்றங்களின் உபயத்தால உள்ளங்கை நெல்லிக்கனியாக, கதையைப் படிக்கும் போதே, நம் மனத்திரையில் ஓட ஆரம்பிக்கிறது !

   4.மேலுக்கு மறுத்தாலும், தற்போதுள்ள புதிய trend க்கு நாம் மாறி விட்டோம் என்பதே உண்மை !

   5.இனி அவர்கள் இருவரின் கதைகளும், ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்ற நிலை தான் !

   Delete
  2. //1.நம் ரசனைச் சிறுகச் சிறுக மாறி வருகிறது !
   2.அதற்கு டெக்ஸ் vs டைகர் சண்டைகள் பெரிதும் உதவியிருக்கிறது !
   3.இதுவரை நமக்குத் தெரியாத கதையின் பலவீனங்கள், டெக்ஸ் வில்லர், கேப்டன் டைகர் ரசிகர் மன்றங்களின் உபயத்தால உள்ளங்கை நெல்லிக்கனியாக, கதையைப் படிக்கும் போதே, நம் மனத்திரையில் ஓட ஆரம்பிக்கிறது ! ///
   it is because we don't have review culture for comics books, if some one stands outside fans shoe and review it we might have understand it long back and its "boon and curse" in the same way.

   now we are reviewing in a way of discussion and doing deep analysis, its good we will move out of TEX/TIGER(even though i don't want to or i don't know if i can) mist and we may able to enjoy broader genre ( seeing the reviews of tryouts i could see already we are enjoying all new genre and expanding (not moving out) our readings).

   //4.மேலுக்கு மறுத்தாலும், தற்போதுள்ள புதிய trend க்கு நாம் மாறி விட்டோம் என்பதே உண்மை !//
   that's true and nature everything will undergo change.

   //5.இனி அவர்கள் இருவரின் கதைகளும், ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்ற நிலை தான் !//

   not needed to be. since these story genre are yet to reach 80%(considering non comics readers , only fantacy readers) of readers. if we get new readers circle or expand our readers circle there are still room there for our old hero's. because they all are still new genre for them i guess.

   Delete
  3. Satishkumar S : //*it is because we don't have review culture for comics books, if some one stands outside fans shoe and review it we might have understand it long back and its "boon and curse" in the same way. its good we will move out of TEX/TIGER mist and we may able to enjoy broader genre//

   இப்படி ஒரு நிலை தோன்றுமானால் நம் ரசனை எதிலுமே இலயிக்காமல் போய் விடும் அபாயமும் இருக்கிறது. இந்த வருடம் படிக்கும் கதைத் தொடர், அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலேயே சலிப்புத் தட்ட ஆரம்பித்து விடும். அடுத்த தேடலுக்கும், புதிய பாணி (genre) கதைக்களத்திற்கும் நம் ஆதரவு பெருகிவிடும். காமிக்ஸ் என்பது மற்றைய புத்தக வாசிப்பை போல் நமக்குத் தோன்ற ஆரம்பித்து விட்டால், அதன் ஒரிஜினல் ரசனையை நாம் இழந்து விடக்கூடும் !

   காமிக்ஸ் என்பது அறிவு வளர்ச்சிக்காக ; சிந்தனையின் விரிவாக்கத்திற்காக என்று உருவாக்கப்படுவதில்லை. அதைப் படித்து ; அதை ரசித்து ; அதில் இலயித்து ; அந்த உலகத்தில் நாமும் உலவும் போலான கற்பனையை சிறிது காலத்திற்காவது நாம் பெற்று, நம் மனதையும், எண்ணங்களையும் இலகுவாக மாற்றிக் கொள்ளவே தான் நாம் காமிக்ஸ் படிக்கிறோம் என்பது என் நம்பிக்கை !

   Delete
  4. Satishkumar S : //*since these story genre are yet to reach 80% (considering non comics readers , only fantacy readers) of readers. if we get new readers circle or expand our readers circle there are still room there for our old hero's. because they all are still new genre for them i guess*//

   அருமையான கருத்து ; விசாலமான பார்வை ! உண்மை தான் நண்பரே, இதுவரை காமிக்ஸ் படித்தறியாத புதிய வாசகர்களுக்கும், இதுவரை லயன் முத்து காமிக்ஸின் புதிய அறிமுகம் கிடைக்காத, எழுபது எண்பதுகளின் பால்யக் கால வாசகர்களுக்கும் இன்றும் கூட இவர்களின் கதைகள் சொல்ல முடியாத அளவு உற்சாகத்தை அளிப்பதாக இருக்கக் கூடும். ஆனால், அதற்கு நாம் செய்யக் கூடியதும் ஒன்று இருக்கிறது, விமர்சனம் என்ற பெயரிலும், டெக்ஸ் vs டைகர் ரசிகர் மன்றங்களின் wwf சண்டைகளிலும் அவர்களின் பலவீனத்தையோ ; கதைகளில் இருக்கும் லாஜிக் ஓட்டைகளையோ வெளிச்சம் போட்டு காட்டாமல் இருக்க வேண்டும் !

   இல்லையென்றால் 'லிங்குசாமி, சூரியா, சமந்தா கூட்டணியின் - அஞ்சான் சினிமா படம் போன்று பல வாசகர்கள் கதையைப் படிக்காமலேயே, இவர்களின் கதைகள் புறக்கணிக்கப்படும் அபாயமும் நிச்சயம் இருக்கிறது !

   Delete
  5. //நம் மனதையும், எண்ணங்களையும் இலகுவாக மாற்றிக் கொள்ளவே தான் நாம் காமிக்ஸ் படிக்கிறோம் என்பது என் நம்பிக்கை !//
   me too believe the same, but i come across some world hits comics , which are not the one as we expect(I gave some examples below), and the thing that shocked me is reception for such comics among Indian comics readers. in flipkart and amazon.co.in its hot selling. and in review portals its all 4* reviews. I feel young generation new India is adapting to world culture and they are enjoying new genre, but I accept with big YES as of now for Lion brand's readers circle, comics is for "மனதையும், எண்ணங்களையும் இலகுவாக மாற்றிக் கொள்ளவே". but as we(Lion brand and readers) go on we also may(have to) adapt(If we need to expand our readers circle). as we left Steel claw , Archi, we may(have to) leave some more(most of !) supper heroes .

   Ex:
   http://en.wikipedia.org/wiki/Habibi_%28graphic_novel%29
   http://en.wikipedia.org/wiki/Logicomix

   //விமர்சனம் என்ற பெயரிலும், டெக்ஸ் vs டைகர் ரசிகர் மன்றங்களின் wwf சண்டைகளிலும் அவர்களின் பலவீனத்தையோ ; கதைகளில் இருக்கும் லாஜிக் ஓட்டைகளையோ வெளிச்சம் போட்டு காட்டாமல் இருக்க வேண்டும் !//

   as i said reviews can be boon or curse.

   boon:
   for some people to open their eyes if they haven't noticed such points(good parts), it will make them revisit the book and read with much more deeper thoughts and enjoyment. (most of contemporary comics are having such deep meaningful story lines and art quality ).

   curse:
   yes its true review readers won’t be die hard fan's. their mind will see their heroes in reviewers eye's not as fan(who will see only good points and enjoy and celebrate gimmick stunts of hero’s).

   i feel if the book is too good there are too deep meaning, those books need to be reviewed. if there are too big holes better to move on silently for Tamil Comics sake(its difficult to control if someone celebrate some stupid comics as best one). I wish i get more good comics so that i can review more :-)

   i feel in case if we have to express our thoughts for bad comics best way is to send a mail review to Edit sir( I don't know whether it will work).

   Delete