Follow by Email

Friday, 19 September 2014

நான்... எனது... 2015..!

நண்பர்களே,

வணக்கம். எப்படியும் எடிட்டர், லார்கோ 4 இதழ்கள், ஷெல்டன் 3 இதழ்கள், கமான்சே 6 கதைகள் என்று நிச்சயமாக வெளியிடப்போவதில்லை என்பதாலும், மீண்டும் 2016ல் இதே போன்றதொரு சிந்தனையில் பதிவிட வழிவகை அமையும் என்பதாலும், இந்தப் பதிவுகள் அனைத்தையும் தொகுப்பாக படிக்கவும், கோர்வையாக புரிந்து கொள்ளும் நோக்கிலும் - இவையனைத்தையும் தனிப் பதிவாக என் ப்ளாகில் பதிவேற்றம் செய்ய விரும்புகிறேன். அடடா.. இது என்ன காப்பி பேஸ்ட் போஸ்ட் என்று யாரும் நினைக்க வேண்டாம் நண்பர்களே :​-)
1.மிஸ்டர் மரமண்டை16 September 2014 19:07:00 GMT+5:30

கிட்டத்தட்ட 30 வருடங்கள் ; குற்றம் நடந்தது என்ன? நடப்பது என்ன? நடக்கப் போவது என்ன? என அனைத்தும், அனைவருக்கும் மனப்பாடம் ; பரவசமூட்டாத நகர்வலம் ; பசியாற முடியாத வறுத்த கறி ; தாகச் சாந்தி செய்ய இயலாத சலூன்கள் ; பயந்த ரவுடிகள் ; பதுங்கும் கோழைகள் என படித்துப் படித்து - ஆயாசமாகி விட்டது ! திகைக்க வைக்கும் ஆச்சரியங்களோ ; அகலவிடாத கதைக் கருவோ இன்னும் கூட இருக்கிறதா என்ற சந்தேகம் வலுத்து விட்டது !

வயதாகிய டெக்ஸ் ; கிழமாகிய கார்சன் ; கூட்டமாய் சுற்றி நின்று சுட்டாலும், தெறித்து தூர விழவைக்கும் கவசமாய் மஞ்சள் சட்டை என கதையின் பலவீனங்கள் கண்ணுக்கும், மனதுக்கும் புலப்பட ஆரம்பித்து விட்டன ! அன்று, எல்லையின்றி பாலைவனத்தில் பரந்து விரிந்த எண்ணங்கள், கவலையோடு கதையின் பலவீனத்தில் குவிந்து, குமிந்து நிற்கின்றன இன்று ! 
2.மிஸ்டர் மரமண்டை16 September 2014 19:45:00 GMT+5:30

கைவசம் கணக்கிலடங்காத தொடர்கள் ; இன்னும் படித்தறியா கதைக் களங்கள் - ஒரு வருட slotல் இடம் கிடைக்காமல், வரிசைக்கட்டி lotல் குவிந்து கிடக்கின்றன ! அடுத்தது என்ன என்று யூகிக்க முடியாத தொடரும் பாகங்கள் ; தொட்டு விடத் துடிக்கும் மனதோடு, எட்டி நின்று ஏங்க வைக்கும் புதிய வெற்றிக் கூட்டணிகள் ; நிகழ்கால கதைகள் ; ஹாலிவுட்டை மிஞ்சும் லார்கோ வின்ச், வேயின் ஷெல்டன் திரைக் கதைகள் ; திகைக்க வைக்கும் திரில்லர் - டைலன் டாக் கதைகள் ; இன்னும் கதையின் போக்கே புரியாத மேஜிக் விண்ட் wild westன் சாகஸ கதைகள் ; கற்பனைகளைப் பகுத்தறிய விடாத யதார்த்தங்கள் ; கமான்சேவின், காமிக்ஸ் பூஞ்சோலைகள் ; தோர்கல்/ன் மாய உலகங்கள் - என இன்னும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம், ஆனால் இவையனைத்தும் நாம் ரசிக்கும் காலத்திலேயே கிடைக்க வேண்டும் அல்லவா?

இன்னும் பத்து வருடம் கழித்தும் கூட, இவை நமக்குப் புதிய வெளியீடுகளாக கிடைக்கலாம் ; நிலையற்ற ரசனையில், இவையனைத்தும் கூட, நாளை போரடித்து விடலாம் ; பழையன கழிதலும், புதியன புகுதலும் காலத்தால் கருணையின்றி செவ்வனே நடப்பவை ! காலத்தே பயிர் செய்வதும், பருவத்தே அறுவடை செய்வதும் செழிப்பான விவசாயத்திற்கு உத்திரவாதம் அல்லவா? எனவே தான், 27 வருடம் 25 வருடமாக தொடர்ந்து வெளிவரும் தொடர்கள் ; நாயகர்கள் ; டெம்ப்ளேட் வகைக் கதைகள் ; மனப்பாடமாகி விட்ட கதா நாயகனின் வசனங்கள் - நமக்குப் போரடிக்கவோ ; சலிப்படையவோ ; ஆயாசமடையவோ - ஆயத்தமாகி விட்டன ! 3.மிஸ்டர் மரமண்டை16 September 2014 21:32:00 GMT+5:30

உண்மையைக் கூற வேண்டுமானால், கேப்டன் டைகரின் இரத்தத் தடம் கதை முதல் வெளிவந்த எந்தக் கதையும் சோபிக்கவில்லை என்பதே உண்மை. கேப்டன் டைகர் ரசிகனான எனக்கு, எடுத்தோம் ; படித்தோம் ; கவிழ்த்தோம் என்று படிக்கக் கூட முடியாமல், சுவாரசியம் குறைந்தே காணப்பட்டது. ஒன்று, ஒவ்வொரு கதையிலும் செவ்விந்தியர்களிடம் தூது போகிறார் ; கடைசியில் உயரதிகாரிக்கு அடிபணிந்து அவர்களை பலி கொடுக்கிறார். அல்லது கதையின் ஆரம்பத்தில் இவரின் உயரதிகாரி இவரை, முரடன், ராணுவ ஒழுங்கு அற்றவன், கீழ்படியாதவன் - என்று வசைபாடி விட்டு, கதையின் இறுதியில் டைகரை போல் வரவே வராது என்று பாராட்டுகிறார்கள். இதற்கு காரணம், கதையில் உள்ள வலுவற்ற தன்மையால், இவர்களே டைகருக்கு துதி பாட ஆரம்பித்து விட்டார்கள். என்னைப் பொறுத்தவரை, டைகரோ ; டெக்ஸ்சோ - கதையைப் படித்து விட்டு நாம் தான் அவர்களைப் பாராட்ட வேண்டுமே தவிர, கதையில் வரும் கதாபாத்திரங்களே - பக்கத்திற்கு ஒரு முறை வல்லவன் ; நல்லவன் ; அசகாயசூரன் என்று துதி பாடுவது ஏற்புடையதாக இல்லை !

கடைசியாக வந்த மார்ஷல் டைகர் கதையைப் பற்றிக் கூற வேண்டுமானால் - பசியோடு சாப்பிட உட்கார்ந்தவன், ஒரு வாய் கவளத்தோடு எழுந்து கைகழுவிய நிலைமையில் தான் இருக்கிறேன். இனி அடுத்த பாகம் வருவதற்குள், நமக்கு முதல் பாகம் மறந்து போயிருக்கும். இதே நிலைமை தான், அனைத்து தொடர் கதைகளுக்குமான நிலை. இதற்கு காரணம், ஏகப்பட்ட கதைத் தொடர்கள் நம் கைவசம் இருக்கும் நிலையிலும், வருடத்திற்கு 50 கதைகளுக்கு மேல் பதிவிட இயலாத வியாபார வட்டம் தான் என்பது, அனைவருக்கும் தெரிந்தே தான் இருக்கிறது. சரி, இதற்கு தீர்வு தான் என்ன? இதை அலசப்போவதே என்னுடைய இந்தப் பதிவு. மாறாக டெக்ஸ், டைகர், லக்கி லூக், சிக் பில் கதைகளை குறை சொலவதல்ல என்னுடைய நோக்கம் ! 4.மிஸ்டர் மரமண்டை17 September 2014 09:26:00 GMT+5:30

இந்த வலைதளம் பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. மிக கடுமையான பல வாதங்களை முன் வைத்திருக்கிறது. ஆனால் இது கொஞ்சம் விசித்திரமானது. வாய்தா மேல் வாய்தா வாங்கி தினம் தினம் பதிவிட்டாலும், வருகின்ற சனிக்கிழமை இரவு வரை நமக்கு நேரம் இருக்கிறது !

2015 அட்டவணை - ஏற்கனவே, எடிட்டரால் முழுமையாக இறுதி செய்யப்பட்டு விட்டது ; இதில் புதிதாக நான் கூறி 2015ல் மாற்றம் ஒன்றும் நடக்கப் போவதில்லை தான் ; ஆனால் குறைந்தபட்சம் 2016 அட்டவணைக்காவது, இந்த எண்ணங்கள் ஒரு சிறிதளவு சிந்தனையைத் தூண்டுவதாக அமையட்டும் என்ற எண்ணத்திலேயே இந்தத் தொடர் பதிவு பதிவிடப்படுகிறது ! 

இப்படி நாம் ஒவ்வொருவரும், நம் எண்ணங்களை வெளியில் கூறாமல் இருப்பதால் தான், பல அரிய காமிக்ஸ் பொக்கிஷ குவியல்கள் நமக்கு கிடைக்காமலேயே சென்று விடுகிறது. உதாரணமாக சாகஸ வீரர் ரோஜர்/ஐக் கூறலாம். இதுவரை பார்த்திராத சாகஸப் பயணங்கள் ; ஆர்ப்பரித்து ஓடும் ஆறுகள் ; சுழித்து உள்ளிழுக்கும் சுழல்கள் ; முதலைகள் ; ஆட்கொல்லி மீன்கள் ; சூறைக்காற்று ; பேய்மழை ; அடர் வனத்திற்குள் ஒரு அட்வெஞ்சர் ட்ரெக்கிங் ; வழியெங்கும் காத்து நிற்கும் கொடூர ஆபத்துகள் ; இயற்கை சீற்றங்கள் ; பழங்குடியின் பழிதீர்க்கும் கொடூரங்கள் ; ஆப்பிரிக்காவின் இயற்கை எழில் கொஞ்சும் வனங்கள் ; புதைபொருள் அகழ்வு ஆராய்ச்சிகள் கண்டெடுக்கும் வரலாற்று ஆவணங்கள் ; இது அத்தனையும் அழகான வர்ணங்களில் என இன்னும் கூட சொல்லிக் கொண்டே போகலாம் - காலத்தின் கால் சுவடுகள்ஐப் பற்றி..!

புதையல் பாதை ; யானைக் கல்லறை/க்குப் பிறகு, அருமையான உணர்வுகளைத் தந்த அற்புதமான வெளியீடாக காலத்தின் கால் சுவடுகள் இருந்தது. ஆனால் நடந்தது என்ன? பெரும்பான்மையான வாசகர்கள் கூறியது என்ன? என்று யோசித்தோமேயானால், எங்களுக்கு அரைத்த மாவையே அரைத்து, மீண்டும் அரைத்து, அதில் விருந்து படையுங்கள் என்பதாகவே இருக்கிறது ! இதில் சம்பந்தப்படும் வியாபார இலாப நஷ்ட கணக்குகளையும் ; விற்பனை எண்ணங்களையும் ; ரசிகர் மன்றங்களின் பிரச்சனைகளையும் பிறகு பார்க்கலாம். அதற்கு முன்... 
5.மிஸ்டர் மரமண்டை17 September 2014 15:13:00 GMT+5:30

கணம் கோர்ட்டார் அவர்களே, எதிர்தரப்பு வக்கீல் சதீஷ் குமார் அவர்கள் நன்றாக வாதிடுகிறார். நல்ல பல அரிய கருத்துகளை முன் வைக்கிறார். என்னைப் போல் அல்லாமல் அவர், சட்டப் படிப்பான B.A.B.L. படித்து இந்த வக்கீல் தொழிலுக்கு வந்திருப்பார் என்றே நினைக்கிறேன் ! 

அவர் நடத்தும் குறுக்கு விசாரணையில், நான் என்ன சொல்ல வருகிறேன் என்று எனக்கே மறந்து போய் விடும் போலிருக்கிறது. எனவே, நான் எதற்காக இந்தப் பொதுநல வழக்கை இங்கே கொண்டு வந்தேன் என்றும், எதற்காக வாதம் புரிகிறேன் என்பதையும் இங்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். இந்த வழக்கின் கருப்பொருளாக நான் கருதுவது - எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதே ஆகும். எதையும் வேண்டாம் என்று கூறப் போவதில்லை ; அதற்காக வருடத்திற்கு 150 வேண்டும் என்றும் கேட்கப்போவதில்லை ; அதை எப்படி சொல்லப் போகிறேன் என்றும் தெரியவில்லை ; ஏனெனில் இன்னும் எனக்கு எந்த சிந்தனையும் உதிக்கவில்லை !

ஐயோ.. கடவுளே.. இதுக்கு தான் யாரும் குறுக்க பேசாதீங்கன்னு சொன்னேன். கேட்டீங்களா? இப்ப பாருங்க நானே குழம்பி போயிட்டேன். இனி அடுத்த பதிவ போட்டா தான், நான் என்ன எழுதப் போறேன்னு எனக்கே தெரியும் :-))6.மிஸ்டர் மரமண்டை17 September 2014 16:09:00 GMT+5:30

அதற்கு முன், வரும் 2015 எப்படியிருந்தால் எனக்குப் பிடிக்கும் என்பதை இங்கு சொல்லி விடுகிறேன். அது நடைமுறைக்கு சாத்தியமில்லா விட்டாலும், 2016ல் சாத்தியமாக, சில யோசனைகளும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். முதலில் நம் இலக்கு என்னவென்று தெரிந்தால் தான், நம் பாதை எதுவென்று புரியும் என்ற நம்பிக்கையில் விருப்பத்தைக் கூறுகிறேன். பாதை மட்டும் தெரிந்து விட்டால், அதில் பயணிக்க வருத்தமோ ; செப்பனிட சிரமமோ இருக்காது என்ற தொலைநோக்கு பார்வையில் முதலில் நமக்கு (எனக்கு) எது வேண்டும் என்று பார்ப்போமே ! 

லார்கோ வின்ச் !

இதில் குறையே வைக்காமல், எடிட்டர் இரண்டு கதைகளை (two volumes - as original) ஒன்றிணைத்து, ஒரே ஆல்பமாக தருகிறார் ; அதுவும் கைக்கு அடக்கமான அழகிய குண்டு புக் உருவில் ! முதலில் அதற்காக எடிட்டருக்கு பாராட்டும், நன்றியையும் தெரிவிப்பது என் கடமையாக கருதுகிறேன். இப்படி இரண்டு கதைகளும் ஒரே புத்தகமாக வராவிட்டால், நாம் இந்தளவு வசியப்பட்டு இருப்போமா என்பதும் கேள்விக்குறியே ! 

தற்போது 4 கதைகளை, இரண்டு சிறிய குண்டு புத்தகமாக எடிட்டர் நமக்கு தருகிறார். இப்படி நாம் படிக்கும் பட்சத்தில் இந்தத் தொடர் முடிய இன்னும் ஒரு 6 வருடங்கள் நாம் காத்திருக்க வேண்டும். அதற்குள் இதுவும் பழைய தொடராக மாறிவிடும். பழக பழக பாலும் புளிப்பது போல், இறுதி வருடங்களில் அதிகளவு விமர்சனத்திற்கும், வியாபார தேக்கத்திற்கும் வழி வகை ஏற்படலாம். அதற்குப் பதிலாக, வருடத்திற்கு 8 கதைகள் கொண்டதாக 4 சிறிய குண்டு புத்தகங்களை வெளியிட வேண்டும் என்பதே என் ஆசை ! So,

1.Largo Winch - 4 books - @ 120 !7.மிஸ்டர் மரமண்டை17 September 2014 16:34:00 GMT+5:30

வேய்ன் ஷெல்டன் !

இதுவும் நமக்கு, குண்டு புத்தக வடிவிலேயே கிடைக்கிறது. இவர் தற்போது இரண்டாம் இடத்தில் கோலோச்சுகிறார். பரபரப்பிற்கும், கதையின் வேகத்திற்கும், விருவிருப்பிற்கும் பஞ்சமே இல்லை என்பதே இவரின் ஸ்பெஷாலிட்டி ! என்ன கருத்துக் கணிப்பு? யார் எடுத்த கருத்துக் கணிப்பு என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு, நம் சக்தியை விரயம் செய்யாமல் உண்மையை கொஞ்சம் ஒத்துக் கொள்வோமே !

இவர்களுக்கு முன், எம்ஜிஆர் - சிவாஜி ; ரஜினி - கமல் போன்று, டெக்ஸ் வில்லர் - கேப்டன் டைகர் என்ற இரண்டு குதிரை வாலாக்கள், பாலைவனத்தில் குப்பைக் கொட்டிக் கொண்டிருந்தது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம் தானே?! ஆனால் அந்தக் காலம் எல்லாம் மலையேறிப் போய் விட்டது. லார்கோ வின்ச் - வேய்ன் ஷெல்டன் என்பதே தற்போதைய trend. தற்போது இவரின் கதைகள் (two volumes - as original) ஒரு வருடத்திற்கு ஒன்று என்ற ரேஷன் முறையில் தான் கிடைக்கிறது. இதை வருடத்திற்கு 3 ஆக அனுமதிக்க வேண்டும் என்பதே என் ஆசை ! So, 

2.Wayne Shelton - 3 books - @ 120 !
8.மிஸ்டர் மரமண்டை17 September 2014 17:14:00 GMT+5:30

கமான்சே !

இந்தக் கதையைப் பற்றி எழுதச் சொன்னால், நாள் முழுக்க எழுதிக் கொண்டே இருக்கலாம். அப்படி ஒரு எனர்ஜி இந்தக் கதைத் தொடரில் கொட்டிக் கிடக்கிறது என்பதை, இதுவரை வண்ணத்தில் வந்த மூன்று பாகங்களும் நமக்கு பறைசாற்றுகின்றன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக நமக்கு 2 கதைகள் மட்டுமே 2015ல் 60 விலையில் கிடைக்க வாய்ப்புள்ளது !

இது மற்ற தொடர்களைப் போலல்லாமல், படித்தவரை ஒன்றுகொன்று மிகவும் தொடர்பு கொண்டிருக்கிறது. ஒரு கதையை விட்டு ஒரு கதையைப் படிக்கும் போது, முழுமையான அனுபவம் கிடைப்பதில்லை என்பதே இதுவரை வந்துள்ள வெளியீடுகளின் அனுபவப் பாடம். தனித்தனியாக கதை அமைப்பு இருப்பது போல் தோன்றினாலும், இவையனைத்தும் உண்மையான தொடர்கதைகள் தான். எனவே இக்கதைகளில் காணக் கிடைக்கும் எல்லையற்ற உற்சாக உணர்வுகளை கருத்தில் கொண்டு - 3 பாகங்களை ஒன்றாக ஒருங்கிணைத்து, ஒரே புத்தகமாக 150 விலையில் தரவேண்டும் என்பதே என் ஆசை ! So,

3.Comanche - 2 books @ 150 !
9.மிஸ்டர் மரமண்டை17 September 2014 17:31:00 GMT+5:30

தோர்கல் !

இந்தக் கதையை தொடராக மட்டுமே படிக்க வேண்டும். ஏனெனில் நமக்குப் புரியாத ஒரு கதைக் களத்தில், நம் மனம் ஒன்றுவதற்கு நிறைய நேரம் பிடிக்கும். மெல்ல மெல்ல அதில் கால் வைக்கும் நிலையில், சட்டென கதை முடிந்து விடுவதாக இருப்பது மிகவும் சோகமயமான நிகழ்வாக அமைகிறது. அடி எது? முடி எது? என்று தெரியாமல் ஒவ்வொரு பாகமாக படிப்பது, ரசனைக்கு நாம் செய்யும் சங்கடமாகவே அமையும் என்பது என் கருத்து. இந்தத் தொடரில் Spin-Off எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட 40 கதைகளுக்கு மேல் இருப்பதால், இதன் தொகுப்பும் அவசியமாகிறது. 

2015ல் 3 கதைகள் கொண்ட தொகுப்பாக ஒரு குண்டு புத்தகம் நிச்சயமாக வெளிவரும் என்றாலும், நமக்கு அது போதாது என்றே தோன்றுகிறது. எனவே, 3 கதைகள் கொண்ட தொகுப்பாக, 2 வெளியீடுகள் வர வேண்டும் என்பதே என் ஆசை ! So,

3.Thorgal - 2 books @ 150 !10.மிஸ்டர் மரமண்டை17 September 2014 18:10:00 GMT+5:30

இங்கு ஒரு விஷயத்தை சிந்திப்போம். டெக்ஸ் வில்லர் கதைகள் அனைத்தும், விற்பனைக்கு உத்திரவாதமானது என்பதை நாம் அனைவரும் எடிட்டர் வாயிலாக அறிந்திருக்கிறோம். விற்பனைக்கான காரணம் - டெக்ஸ் ; அதிகப் பக்கங்கள் ; சிறிய அளவு ; குறைந்த விலை ; 35 அல்லது 60 - என்பது போன்ற பல காரணங்கள் இருந்தாலும், ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, இத்தனை ப்ளஸ் பாயிண்டுகள் இருந்தும், ஒரு டெக்ஸ் வில்லர் கதை புத்தகம் முழுமையாக விற்றுத் தீர, குறைந்தபட்சம் ஒரு வருடம் அவசியமாகிறது ! 

தோராயமாக 5000 x 35 அல்லது 60ல், சந்தாப் பிரதிகள் போக விற்று முடிக்க ஒரு வருடமும், அதற்கு எல்லா ஊரிலும் புத்தகத் திருவிழா ஸ்டால்களும் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு ஊரிலும் புதிய வாசகர் அறிமுகம் என்பது முதல் இரண்டு புத்தகக் கண்காட்சியிலேயே முடிந்து விடும். எனவே அதற்குப் பிறகு, புத்தகக் கண்காட்சிக்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்யப்படும் பணமும், கமிஷன் போக வரும் விற்று முதலும் கையை கடிக்காமல் இருக்க வேண்டும். அப்படியென்றால் டெக்ஸ் வில்லர் விற்பனை என்பது ஒரு மாயை என்பது நமக்குப் புரிந்து வரும் ! 

இருந்தாலும், டெக்ஸ் வில்லர் கதைகளை நாம் அப்படியே விட்டு விட வேண்டாம். அவை நமக்கு அவசியம் வேண்டும். ஏனெனில், குறைந்தபட்ச விலையை எதிர்பார்க்கும் கடைகளுக்கும் ; ஏஜெண்டுகளுக்கும் ; பொதுநல விரும்பிகளுக்கும் ; மாணவர்களுக்கும் ; புதிய அறிமுக வாசகர்களுக்கும் ; புத்தகக் கண்காட்சிகளுக்கும் ; ரசிகர்மன்ற தோழர்களுக்கும் - அவசியம் டெக்ஸ் வில்லர் வேண்டும். எல்லோரும் கூறுவது போல் மிகப்பெரிய வெற்றி நாயகனான டெக்ஸ் வில்லரை - ஏன், சந்தாவில் சேர்க்க வேண்டும் என்பதே என் கேள்வி ? 

டெக்ஸ் வில்லரை சந்தாவில் சேர்ப்பதற்கு பதிலாக, அவர் இடத்தை மேஜிக் விண்ட் மூலம் இட்டு நிரப்பலாம் என்பது என் கருத்து. கிட்டத்தட்ட 130 கதைகள் கொண்ட தொடராக இது இருப்பதால், நமக்கு வேண்டிய மட்டும் கதைகள் கிடைப்பது மட்டும் அல்லாமல், புதிய பாணியில் வெளிவரும் கதைத் தொடரை கொஞ்ச காலம் ரசிக்கலாம். அப்படி என்றால் டெக்ஸ் வில்லரை என்ன செய்வது? எப்படி வெளியிடுவது? என்ற கேள்விகள் எழும்...11.மிஸ்டர் மரமண்டை17 September 2014 18:31:00 GMT+5:30

டெக்ஸ் வில்லர் !

அப்படி என்றால் டெக்ஸ் வில்லரை என்ன செய்வது? எப்படி வெளியிடுவது? என்ற கேள்விகள் எழும்.. இதற்கு நாம், வருடத்தின் ஆரம்பத்திலேயே, இரண்டுக்கு மேற்பட்ட சந்தா முறைகளை அறிமுகப்படுத்துவதே இதற்கெல்லாம் ஒரே தீர்வாக அமையும் என்பது என் கருத்து. அது எவ்வகையில் இருக்கலாம் என்பதை பிறகு ஆலோசிக்கலாம் !

ஒவ்வொரு வருடமும், டெக்ஸ் வில்லர் அவர்களை தீபாவளி மலரில் ; முழு வண்ணத்தில் ; இரண்டு பெரிய அட்டகாசமான கதைகள் கொண்டு, 500 பக்கங்களுக்கு மேற்பட்டு, குண்டு புத்தகமாக தரிசிக்க வேண்டும் என்பதே என் ஆசை ! அது போக, 35 விலையிலும், 60 விலையிலும் புத்தகக் கண்காட்சிக்காக கருப்பு வெள்ளையில் டெக்ஸ் வில்லர், டேஞ்சர் டயபாலிக், மற்ற கருப்பு வெள்ளை கதைகள் என்று தனியாக ஒரு சந்தாவை அறிமுகப்படுத்தலாம். சந்தா அதிகம் சேராவிட்டாலும், புதிய வாசகர்களின் அறிமுகத்திற்காகவும், புத்தகக் கண்காட்சி விற்பனைகளுக்காகவும், அனைவரும் எளிதாக வாங்கவும், குறைந்த விலையில் காமிக்ஸ் அறிமுகத்திற்காகவும் - இந்தத் தனி வரிசை பேருதவியாக அமையும் என்பது என் கருத்து !
12.மிஸ்டர் மரமண்டை18 September 2014 08:34:00 GMT+5:30

Satishkumar S : //*அப்படியென்றால் டெக்ஸ் வில்லர் விற்பனை என்பது ஒரு மாயை என்பது நமக்கு புரிந்து வரும் ! //*//*your words inviting TEX fans for duel.. best avoid such controversial facts manufacturing and baseless allegations on TEX sale*//

நண்பரே, தங்களின் கூற்று உண்மைதான் என்றாலும், இது ஒரு எளிமையான கணக்கை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. ஈரோடு புத்தகத் திருவிழா - updates (fly.விஜய்) மற்றும் இந்த மாத வெளியீடுகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ள கையிருப்பு பிரதிகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. அதில் மற்ற எல்லா இதழ்களையும் போலவே, டெக்ஸ் வில்லரின் விலை குறைந்த வெளியீடுகளும் ஸ்டாக்கில் இருப்பதாக நமக்குத் தெரிகிறது !

1.சிகப்பாய் ஒரு சொப்பனம் - 50
2.நிலவொளியில் ஒரு நரபலி - 50
3.பூத வேட்டை - 50
4.நில் கவனி சுடு - 65
5.காவல் கழுகு - 35

எனவே, நான் கூறுவதில் உள்ள அடிப்படை கருத்து அனைவருக்கும் புரியும் என்றே நினைக்கிறேன். நன்றி !13.மிஸ்டர் மரமண்டை18 September 2014 08:55:00 GMT+5:30

சந்தா எண் 3 - கருப்பு வெள்ளை & டெக்ஸ் ஸ்பெஷல் !

1.தீபாவளி மலர் - டெக்ஸ் வில்லரின் இரண்டு கதைகள் ; முழு வண்ணத்தில் !
2.டெக்ஸ் வில்லர் - 1
3.டேஞ்சர் டயபாலிக் - 1
3.மர்ம மனிதன் மார்ட்டின் - 1
4.
5.
6.
7.
8.
9.
10.
11.
12.

வருடத்திற்கு 12 வெளியீடுகள் ; தீபாவளி மலர் ; தீபாவளி மலரை தவிர அனைத்தும் கருப்பு வெள்ளை கதைகள் ; packing and forwarding charges are additional ! இது நன்றாக workout ஆகும் என்று நான் நினைக்கிறேன் !14.மிஸ்டர் மரமண்டை18 September 2014 15:27:00 GMT+5:30

தற்போது, அநேகமாக எல்லா நகரங்களிலும் நம் காமிக்ஸ் கிடைக்கிறது ; worldmart லும் கிடைக்கிறது ; landmark போன்ற ஷாப்பிங் மால் ஸ்டோர்களிலும் கிடைக்கிறது ; இலக்கியவாதிகள், புத்தக நண்பர்கள், பதிப்பக நண்பர்கள் நடமாடும் discovery book palace போன்ற exclusive book store களிலும் நம் காமிக்ஸ் தடையின்றி கிடைக்கிறது ; சிட்டி பஸ்டேண்ட் பெட்டிக் கடைகளிலும் கிடைக்கிறது ; சிறிய புத்தகக் கடைகளிலும் கிடைக்கிறது ; புத்தகத் திருவிழாக்களிலும் நம் ஸ்டால் அமைகிறது ; ஃபோன் செய்து, நெட்டில் பணபரிமாற்றம் செய்து, வேண்டியவற்றை மட்டும் வாங்கும் வசதியும் இருக்கிறது ; சில ஊர்களில் வாசக ஏஜெண்டுகள் மூலம், டோர் டெலிவரியிலும் கிடைக்கிறது ! 

ஷ்ஷப்ப்பா... ஒரு காமிக்ஸ் வாங்க, இத்தனை வசதிகள் இருந்தால், சந்தா எண்ணிக்கை எப்படி அதிகரிக்கும் என்பதே என் கேள்வி? இவை அனைத்தையும் மீறி சந்தா செலுத்தி, நான் காமிக்ஸ் சந்தாதாரர் என்று பெருமையுடன் சொல்லும் வாசகர்கள் தான், காமிக்ஸ் தீவிரவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் ; நம் காமிக்ஸ் நிறுவனத்திற்கு தூண் போன்றவர்கள் ! இவர்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர், படிக்க ஒன்று ; பாதுகாக்க ஒன்று, என்று இரட்டைச் சந்தா கட்டுபவர்கள் ; இவர்கள் எந்தக் காமிக்ஸ் வந்தாலும் கலெக்ஷனுக்காகவும், படித்து பரவசம் அடையவும் கண்டிப்பாக வாங்கியே தீருவார்கள் ; இவர்களின் காமிக்ஸ் பசி அடங்குவதே இல்லை !

இவர்களை மையப்படுத்தியே சந்தா எண் - 1 அமைய வேண்டும். அதாவது ரெகுலர் சந்தா !15.மிஸ்டர் மரமண்டை18 September 2014 16:18:00 GMT+5:30

சந்தா எண் 1 - ரெகுலர் சந்தா !

தற்போது நடைமுறையில் உள்ள, காமிக்ஸ் வாங்கும் வசதிகளால், பெரும்பான்மையான வாசகர்கள், ஒவ்வொரு மாதமும் தமக்குப் பிடித்த காமிக்ஸ் மட்டுமே வாங்கிக் கொள்கிறார்கள். அதுவும் cover priceல். எனவே இவர்களை மையப்படுத்தி, விலையிலோ ; கதைத் தேர்விலோ மாற்றத்தைக் கொண்டு வரும்போது, எங்களைப் போன்ற பெரும்பான்மையான சந்தா வாசகர்களுக்கு, அது பெரும் இழப்பாகவே அமைகிறது. அந்த இழப்பு என்பது, கதையில் இருக்கலாம் ; எங்கள் ரசனையில் இருக்கலாம் ; எண்ணிக்கையில் இருக்கலாம் ; அல்லது வருடக்கணக்கில் நீளும் தொடர் கதைகளால் இருக்கலாம் ; இப்படி எதில் வேண்டுமானாலும் எங்களின் இழப்பு இருக்கலாம் !

உதாரணமாக, மிகக் குறைந்த விலையை நிர்ணயிக்க வேண்டும் என்ற அக்கறையில், குறைந்தபட்ச அதிக எண்ணிகையிலான ப்ரிண்ட் ரன் இருக்க வேண்டும் என்பதால், கொடௌன் ஸ்டாக் (godown stock maintain) அதிகமாகிறது ; முதலீடு முடங்குகிறது ; எண்ணிக்கை குறைகிறது ; தொடர்கதைகள் அந்தரத்தில் தொங்குகிறது ; பதிப்பிடும் ஆர்வத்தில் சிரமத்தை நுழைக்கிறது !

எனவே இதில் சில மாற்றங்கள் செய்வது, நீண்டகால காமிக்ஸ் பயணத்திற்கு உதவும் பாலைவனச் சோலையாக அமையும் என்பது என் கருத்து. ஆரம்பத்தில் சிறிதளவும், போகப் போக தேவைக்கேற்ப முழுமையான அளவிலும் செய்யலாம். அவைகள் எப்படி இருக்கலாம் என்பதற்கு சில உதாரணங்களை ஆலோசனைக்காக முன் வைக்கிறேன்..16.மிஸ்டர் மரமண்டை18 September 2014 16:36:00 GMT+5:30

சந்தா எண் 1 - ரெகுலர் சந்தா !

*இதில், மொத்தம் 24 வெளியீடுகள் (கதைகள் அல்ல) கொண்டதாக மட்டுமே அமைக்கலாம் !

*ஆனால், தொடர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வெளிவர வேண்டும் ! (example : two volume, 3 volumes & 1) 

* cover priceஐ அதிகரித்து, subscription discount கொடுத்து - புத்தகத் திருவிழாக்கள், கடைகளில் வாங்கப்படும் விலைகளுடனான சமநிலையை எட்ட வேண்டும். எந்த வழிமுறையில் வாங்கினாலும் ஒரே விலை கொண்டதாக அமைய வேண்டும் ! 

*முதலீடு ஒரேடியாக முடங்குவதை தடுக்க, print runஐக் குறைக்கலாம் ; அதற்கான விலையை நிர்ணயிக்கலாம் !

*ஜனரஞ்சகமான தேர்வாக கதைகளை அமைக்கலாம் !

ஏனெனில், சந்தாதாரர்கள், எந்தக் காமிக்ஸ் வந்தாலும் வாங்குபவர்கள் ; அவர்களின் காமிக்ஸ் பசி அடங்குவதே இல்லை ! அதே நேரம் சந்தாதாரர்கள் அல்லாத, ஏனைய வாசகர்கள் தங்களுக்குப் பிடித்த புத்தகத்தை மட்டுமே கடைகளில் வாகுகிறார்கள் !17.மிஸ்டர் மரமண்டை18 September 2014 17:19:00 GMT+5:30

சந்தா எண் 1 - ரெகுலர் சந்தா - எனது ஆசை !

1.Largo Winch - 4 books (120)
2.Wayne Shelton - 3 books (120)
3.Comanche - 2 books (150)
4.Thorgal - 2 books (150)
5.The Bluecoats - 2 books (60)
6.XIII - 1 book (120)
7.Magic Wind - 2 books (65)
8.Lucky Luke - 2 books (60)
9.Chick Bill - 1 book (60)
10.Iznogoud - 1 book (120)
11.மார்ஷல் டைகர் - 1 book (120)
12.கிராபிக் நாவல் - 2 books (120)
13.புதிய அறிமுகம் - 1 book (120)

மொத்தம் 24 காமிக்ஸ் மட்டுமே ! இந்த விலை குறியீடு, புத்தகத்தின் அளவு நமக்குத் தெரிய வேண்டும் என்பதால் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த வருடத்தில் ஏறும், டாலர் விலையைப் பொருத்தும், பேப்பர் விலையைப் பொருத்தும், ப்ரிண்ட் ரன்/ஐப் பொருத்தும், விலையை நிரணயிக்கும் முழு உரிமையும் எடிட்டர் அவர்களுக்கே உள்ளது ! 18.மிஸ்டர் மரமண்டை18 September 2014 17:30:00 GMT+5:30

//why only 24 books in regular சந்தா, is there any logic?//

லாஜிக் எல்லாம் ஒன்றுமில்லை நண்பரே, 

சந்தா எண் - 1 = 24 BOOKS 
சந்தா எண் - 3 = 12 BOOKS 
சந்தா எண் - 2 = 06 BOOKS 

மொத்தம் 42 வெளியீடுகள் (மறைமுகமாக நிறைய கதைகள்) ! சந்தா தொகையும் குறைவு, கதைகளும் அதிகம் ! புதிய கதைகளும் கிடைக்கும், கருப்பு வெள்ளையும் கிடைக்கும் ! டெக்ஸ் வில்லரும் வரும், தீபாவளி மலரும் வரும் !

19.மிஸ்டர் மரமண்டை19 September 2014 08:33:00 GMT+5:30

சந்தா எண் 2 - Super Six !

1.டைலன் டாக் !
2.Editors' Choice !
3.ditto
4.ditto
5.ditto
6.ditto

ஒவ்வொரு சந்தாவிலும் ஒரு குருவி இருக்குமாறு, இந்தச் சந்தா முறைகள் அமைக்கப்பட்டுள்ளது. சந்தா எண் ஒன்றில் - லார்கோ வின்ச் ; இரண்டில் - டைலன் டாக் ; மூன்றில் - டெக்ஸ் வில்லர் ! எனவே சந்தாதாரர்கள் பலரின் கவனத்தையும் இது கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது !

Packing and courier charges are additional ! 20% discount on super subscriptions which includes all 3 in 1 package ! 

சரி, இதையல்லாம் நடைமுறைபடுத்த எடிட்டர், எந்தவித மனநிலையில் இருக்க வேண்டும் என்று பார்ப்போம்?!

contd.. final lap !
20.மிஸ்டர் மரமண்டை19 September 2014 09:35:00 GMT+5:30

ஒரு சாதனையாளனின் மனநிலையில் இருக்க வேண்டும் ; நாளை என்பது நிச்சயமில்லை என்று கருதியே செயல்பட வேண்டும் ; 100 meters ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கும் ஓட்டப்பந்தய வீரரின் மனநிலையை அடைய வேண்டும், ஒரு நொடியில் 10ல் ஒரு பங்குக் கூட நமக்குச் சொந்தமில்லை என்ற எண்ணவோட்டத்தில் இருப்பவரே 100 meters பந்தயத்தில் ஜெயிக்க முடியும் ! 

அடுத்த வருடமே, புதிய பதிப்பகம் ஒன்று வந்து விட்டால் என்ன செய்வது என்ற போட்டி மனப்பான்மையிலேயே செயல்பட வேண்டும் ; வேறு ஒரு ஜாம்பவான் பதிப்பகம், லார்கோ வின்ச் - பதிப்பக உரிமையில் பாதியை வாங்கி விட்டால் என்ன செய்வது? வேயின் ஷெல்டனில் - மீதியை வாங்கி விட்டால் என்ன செய்வது? என்ற பதைபதைப்புடனேயே ஒவ்வொரு வருடமும் திட்டமிடல் வேண்டும் !

விலை நிர்ணயம் என்பது, வெறும் பேப்பருக்கு ஆகும் செலவும், ப்ரிண்டிங்கிற்கு ஆகும் செலவும், royalty க்கு கொடுக்கும் பணமும் என்று நினைத்து, கூட்டி கழித்து, border marginல் cover price  fix செய்யாமல் - தன்னுடைய அனுபவத்திற்கும் ; நிறுவனத்தின் Goodwill ற்கும் ; மொழிபெயர்ப்பு தரத்திற்கும் ; கதை தேர்வுக்களுக்கும் ; விற்காமல் முடங்கிவிடும் பிரதிகளுக்கும் சேர்த்தே Rate fix செய்ய வேண்டும் !

காமிக்ஸை வியாபாரமாக கருத வேண்டாம், ஆனால், வாடிக்கையாளர் சேவை என்பது, வெறும் குறைந்த விலையில் மட்டுமே அமைவதில்லை ; தரத்திலும், அந்தத் தொழிலை நலிவடையாமல் காப்பாற்றுவதிலும், இலாபகரமான தொழிலாக மாற்றுவதிலும், ஒரு நிலையிலிருந்து அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் அளவிற்கும் - ஒரு தொழிலை நடத்த முயற்சி செய்யும் பொது, அது தானாகவே பலரையும் சென்றடையும் ; அல்லது வேறு பல பதிப்பகங்களும் இந்தத் தொழிலில் கால் பதிக்க ஆசைப்படும் நிலையை தோற்றுவிக்கும் !

காமிக்ஸ் படிக்கும் மனம் கொண்ட அனைவரும், தற்போது காமிக்ஸ் படிக்க ஆரம்பித்து விட்டார்கள் ; வாங்கும் சக்தி கொண்ட அனைவரும் தற்போது நம்மிடையே சந்தாதாரர்கள் ஆகி விட்டார்கள் ; இனி சந்தா அதிகரிக்கவோ, வாசகர் வட்டம் விரிவடையவோ வழியே இல்லை என்ற முடிவுக்கு வந்து, 2015ன் print run/ஐ நிர்ணயம் செய்ய வேண்டும். இன்றைய நிலையில் உள்ள வாசகர் வட்டத்தை கருத்தில் கொண்டே, அனைத்தையும் திட்டமிடல் வேண்டும் ; நாளை ஏற்படும் மாற்றத்தை நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தை கொண்டிருக்க வேண்டும் ; இன்று என்பது மட்டுமே நிச்சயம், என் உழைப்பு, என் அனுபவம், என் ரசனை, என் சேவை, என் பங்களிப்பு - என அனைத்தையும் இன்றே அளித்து விடுவதே என் பாக்கியம் என்பதுபோல், கர்ம யோகம் போன்றதொரு நிலையை எட்ட வேண்டும் ! 

அனைவருக்கும் அனைத்தையும் கொடுக்க இறைவனாலேயே முடியாத போது, சாதாரண மனிதர்களாகிய நம்மால், என்ன செய்து விட முடியும்? என்ற ஞான யோகம் கொண்டு, இறைவனால் நமக்கிடப்பட்ட கடமையை, அவன் துணை கொண்டு பழுதில்லாமல் நடத்திச் செல்ல வேண்டும். எனவே, நம்மால் முடிந்தளவு மேற்கூறிய மூன்று சந்தாக்களை அறிமுகப்படுத்த வேண்டும் ; premium, medium, General என்ற முறையில் திட்டமிடல் வேண்டும். எவரால் எது இயலுகிறதோ அதை அவர்கள் அடைந்தே விடுவார்கள் என்ற வகையில், நாம் மன சஞ்சலமற்று பணியாற்ற வேண்டும் ; உதாரணமாக mobile recharge போன்றோ, மொபைல் போன்களின், மாடலுக்கேற்ற விலையைப் போன்றோ - அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் !இது ஒரு காமிக்ஸ் வாசகனின் எண்ணவோட்டங்கள் மட்டுமே ; எடிட்டருக்கான யோசனையோ, அவருக்கான ஆலோசனையோ அல்ல என்பதை, நண்பர்கள் உணர்ந்து இதைப் படிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி !

17 comments:

 1. Replies
  1. நல்வரவு நண்பரே ! முழு பதிவுக்கும் +1 போட்ட அன்பர், நீங்கள் ஒருவராக தான் இருப்பீர்கள் :-))

   Delete
  2. with some disagreement(already we discussed abt that), but overall i liked it Man! the deep thought through that you have! amazing how much you think about comics in your day to day life deserves +1 !

   :)

   Delete
  3. //You're Really Great !//

   no friend I didnt reach tht level to deserve tht word.

   Delete
 2. Replies
  1. You have proved your seniority, sir ! these days we study only +2 :-)

   Delete
  2. கொஞ்சம் வித்தியாசமா ஒரு கமெண்ட் போட விடமாட்டீங்களே?

   Delete
 3. +1 for the complete post. I will write my reply in detail.

  Thanks

  ReplyDelete
  Replies
  1. //* I will write my reply in detail*//

   நிச்சயமாக எழுத வேண்டும் நண்பரே ! தங்களின் எண்ணங்களை அறிய காத்துக் கொண்டிருக்கிறேன் !

   Delete
  2. முதலில் உடனே பதில் அளிக்காததற்கு மன்னிக்கவும். தமிழ் பதிவு செய்ய கடினமான சூழ்நிலை மற்றும் உங்கள் BLOG லிங்க் இழந்து விட்டது. சுருக்கமாக Mr சோம்பேறி என்று அழைத்தாலும் ஏற்றுக் கொள்வேன் . (:
   நாளை அட்டவணை வெளிவரும் . கிட்டத்தட்ட உங்கள் அட்டவணைக்கு ஒத்து போகும் என்று நினைக்கிறேன். அதற்கு முன் இங்கேபதிவு செய்ய முனைகிறேன்.


   +1 போட்டது உங்களுடைய வழிமுறை (approach ). நீங்கள் தேர்வு செய்த ஒரு கதை (Bluecoat) எனக்கு ஏற்புடையது அல்ல என்றாலும் நீங்கள் மொழிந்துள்ள வழிமுறை கட்டாயம் வெற்றி தரக் கூடியது என்றே எண்ணுகிறேன். அந்தக் கதை வெளியிடப்பட்டால் வாங்குவேன் என்பது வேறு விஷயம்.

   அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது நடைமுறைப்படுத்த இயலாத கொள்கை. அதை செயல்படுத்த முனைந்தால் யாருக்கும் எதுவும் கிடைக்காது என்பதே நடைமுறை நிதர்சனம்.

   சந்தாவை அதிகப்படுத்த நீங்கள் கூறிய வழிமுறை கடைப் பிடிக்கப்பட வேண்டும் . ஒவ்வொரு பைசா லாபமும் எடிட்டர்க்கு போவதே நமக்கு நிறைய காமிக்ஸ் கிடைக்க வழி செய்யும். அதற்கு சந்தா கட்டுவதே ஒரே வழி. 5% அல்லது 10% தள்ளுபடிக்காக வேறு வழிமுறைகளை நாடாமல் சந்தா கட்ட முனைய வேண்டும் .

   மறுபதிப்பு பற்றி உங்கள் கருது என்ன? Spider, மாயாவி, மற்றும் Archie சிறுவர்களால் விரும்பப்படும் என்று நினைக்கிறேன்.

   எனக்கு அவ்வளவாக எழுத வராது. உங்களுக்கு எழுத நன்றாக வருகிறது. தெளிவாக சிந்திக்கவும் செய்கிறீர்கள். நீங்கள் எழுதுவதை நிறுத்தாமல் தொடர வேண்டும்.

   Delete
  3. Mahendran Paramasivam :

   நன்றிகள் நண்பரே ! ஏனோ தெரியவில்லை, தங்களின் பதிவை படித்தவுடன் மிகவும் இதமாக உணர்ந்தேன். A,B,C - என்ற மூன்று சந்தாக்களை ஆசிரியர் விஜயன் அறிமுகம் செய்ததில் மிகவும் திருப்தியாக இருக்கிறது. இது முடிவல்ல ஒரு தொடக்கம் மட்டுமே என்பதால் ஆட்டம் இனிதான் நமக்கு ஆரம்பம் :-)

   //*மறுபதிப்பு பற்றி உங்கள் கருது என்ன?*//

   தாங்கள் இந்தப் பதிவுக்கு Notify me கொடுத்திருக்கும் பட்சத்தில் என்னுடைய கருத்தை இங்கு பதிவிட மிகவும் ஆவலாகவே இருக்கிறேன் :-)

   Delete
 4. Mahendran Paramasivam : //*மறுபதிப்பு பற்றி உங்கள் கருத்து என்ன?*//

  மறுபதிப்பு கருத்துகள் - மறுபதிப்பு கமெண்டுகள் (1 of 3)

  இதுவரை மறுபதிப்பு கேட்ட நண்பர்கள் அனைவருக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம் !

  வறுமையில் வாட்டம் ; தொழிலில் போராட்டம் ; கடனில் தள்ளாட்டம் ; வாழ்வதே ஒரு கரகாட்டம் என வாழ்க்கையில் சற்று இளைப்பாறவே ஐந்தாவது எட்டை தொட்டு விடுகிறோம். அப்பொழுதும் வாழ்க்கை என்னும் வழக்காடு மன்றத்தில் நம் வாதம் வெற்றிப் பெறுவதில்லை. வாதம் செய்து கொண்டே நம் வாழ்க்கைப் பயணம் முடிந்து விடுகிறது ! இந்தக் கால வெள்ளத்தில் முகம் தெரியாத நண்பர்களை நம்மிடம் கரைச் சேர்ப்பது நம் ரசனை ஒன்று மட்டும் தான். இளைப்பாறுதலை இனிமையாக்க நண்பர்களின் எண்ணங்களும் குளிர்ச்சி தரும் நிழல்களே !

  மறுப்பதிப்பு கேட்பவர்கள் எல்லாம் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் அல்ல. ஆனால் தங்களின் COMICS எவ்வளவு விலை என்றாலும் எத்தனை வெளியீடுகள் என்றாலும் சந்தோஷமாக வாங்கக்கூடிய நிச்சயமான பணக்காரர்கள் தான். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வரும் இரண்டாவது வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்பவர்கள் தான் சரித்திரம் படைப்பவர்கள். அவர்களே சாதனையாளர்கள். குறையற்று எதுவும் இவ்வுலகில் இல்லை ; நம் பார்வையை பொறுத்தே நம் சாதனை ; என் முனைப்பும், முயற்சியும் போதும் என்றால் அது என் தனிப்பட்ட விளைவு. ஆசிரியர் விஜயன் முடிவு செய்தால் அது எங்களில் பலருக்கு மிகப்பெரிய இழப்பு ! 1991 -ல் மன்மோகன்சிங் எடுத்த தைரியமான முடிவு தான் இன்று கீரை விற்கும் பாட்டி கையில் உள்ள மொபைல் ஃபோன் !

  வாய்ப்பு இருக்கிறது என்றால் வாங்கும் வசதி தானாக உருவாகி விடும். அன்று மிகச் சாதரணமாக 100 ரூபாயை சமாளித்து விட்ட தாங்கள் கூறிய அந்தச் சிறுவன், அதற்கு அடுத்த வாரம் இதேபோல் ஏன் மீண்டும் அதுபோன்ற வாய்ப்பை பெறமுடியாது என்று நினைக்கிறீர்கள் ? இன்றைய சிறுவர்களில் வசதியற்றவர்கள் என்றால் வீதி விளையாட்டுகளிலும், TV கார்ட்டூன் சேனல்களிலும், பணக்காரர்கள் என்றால் Computer Games ; Facebook ; English Comics என்றும் இடைவெளி இல்லாமல் காலம் ஓடுகிறது. இதில் விலை குறைவாக விற்றால் மாற்றம் வரும் என எப்படி நினைக்க முடியும் ?

  விதைக்கும் விதை முளைக்கவேண்டும் என்று வெளிச்சத்திற்காக, நிழல் தந்து பழம் தரும் மரத்தை வெட்டுவது என்ன நியாயம் ? நாங்களும் ஒரு காலத்தில் வெளிச்சமும் தண்ணீரும் இல்லாமல் போராடி வளைந்தே வளர்ந்தவர்கள் தாம். வாழ்க்கை என்னும் கட்டாய ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்களைத்து எப்படியோ வெற்றிக் கோட்டை தாண்டிவிட்டோம். இங்கு வெற்றியா தோல்வியா என்பது முக்கியமல்ல ; இனி அடுத்த தகுதிச் சுற்றுக்கு தயாராக வேண்டும். இந்த இடைவெளி இளைப்பாறுதலில் அவரவர் ரசனை எதுவோ அதை நாடுகிறோம். இதில் தவறென்ன ? அல்லது குறையென்ன ? அடுத்தகட்ட இளைப்பாறுதலில் எங்களின் காமிக்ஸ் மட்டுமே இன்பத்தையும் ; அமைதியையும் ; உணர்ச்சி கலந்த உயிரோட்டத்தையும் கொடுத்து எங்கள் சுற்றத்தை நாங்கள் சிறிதும் குறை காணாமல் வாழ கற்றுக் கொடுக்கும் என்று நம்புகிறோம். இதில் வயதென்ன ? வசதியென்ன ? எதுவுமில்லை எல்லாம் வாய்ப்பு மட்டும் தான். இன்று கேட்காமல் இன்னும் 10 வருடம் கழித்தா கேட்க முடியும் ? இன்றே இப்படி நாளை யாரறிவர் ?!

  [மர மண்டை10 November 2012 17:16:00 GMT+5:30]

  ReplyDelete
 5. Mahendran Paramasivam : //*மறுபதிப்பு பற்றி உங்கள் கருத்து என்ன?*//

  மறுபதிப்பு கருத்துகள் - மறுபதிப்பு கமெண்டுகள் (1 of 3)

  கரைந்துவிட்ட காலங்களாலும் ; கலைந்துப் போன கனவுகளாலும் ; சில சமயம் கற்பனைகள் கூட கசப்பாகவே உருவாகும். தொலைந்து விட்ட நித்திரையில் பலசமயம் நம்மை கேட்காமல் வரும் கனவுகள் கூட வலியையும், வேதனையையும் தருவதாகவே அமையும். வெற்றிடமான வானத்தை மல்லாந்துப் பார்த்து ரசிப்பதைப் போல வாழ்க்கையின் வழித்தடமான காமிக்ஸை நோக்கி விழிவைத்து காத்துக்கிடப்பதும் சுகமானதே !

  மறுபதிப்பு செய்ய வேண்டும் என்றால் எப்படியும் செய்யலாம். ஆள் பலமும் ; விலையில் பிரிமியம் அதிகமாகவும் சேர்த்துக் கொண்டால் ஏன் இயலாது ? உதாரணமாக 1000 Copy கட்டாயம் என்ற இடத்தில் 300 booking [printing அல்ல] கூட போதுமானது. இது வியாபார லாப நோக்கல்ல ; ஓர் விரிவாக்கச் சிந்தனை. ஒரு பத்து பேருக்கு 2 வருட ஒப்பந்த வேலை தங்கள் மூலம் கிடைத்தது போலவும் இருக்கும், எங்களின் விருப்பமும் நிறைவேறும். தாங்களும் தமிழ் காமிக்ஸ் உலகின் முடிசூடிய மன்னனாக வரலாற்றில் இடம் பெறுவீர்கள் !

  மறுபதிப்புகள் அனைத்தும் இன்றைய தரத்தில் வெளியிடுவதே சிறந்ததாக அமையும். இன்னும் 50 வருடத்திற்கும் மேலாக பாதுகாக்கப் பட வேண்டிய புத்தகங்களின் தரம் அப்படித்தானே இருக்க வேண்டும் ? வருங்காலங்களில் தமிழ் வழிக் கல்வி எந்த அளவு இருக்கும் என்று கூற முடியாது. இன்றே பல சிறுவர்களுக்கு ஆறாம் வகுப்பு வரை தமிழ் படிக்கத் தெரிவதில்லை. வருங்காலத்தில் எப்படியோ? தமிழ் காமிக்ஸ் வெளியீடுகளும் எந்த அளவு வெற்றி பெறும் என்பதும் சொல்ல முடியாது அல்லவா ? தயாரிக்க எளிதாகவும், விலை குறைவாகவும் கொடுக்க வேண்டும் என்பதற்காக NOKIA 2000 வருடத்திற்கான மாடலை மீண்டும் அப்படியே கொண்டு வருவதில்லை. வாழ்க்கையின் வெற்றிக்கு உயர்வாகவும் ; பெரிதாகவும் சிந்திப்பதும் ஒரு காரணிதானே !

  [மர மண்டை10 November 2012 17:55:00 GMT+5:30]

  ReplyDelete
 6. Mahendran Paramasivam : //*மறுபதிப்பு பற்றி உங்கள் கருத்து என்ன?*//

  மறுபதிப்பு கருத்துகள் - மறுபதிப்பு கமெண்டுகள் (3 of 3)

  ஒப்பந்தவேலை என்று நான் குறிப்பிட்டுள்ளது மொழிபெயர்ப்பை அல்ல, Digital formatலிருந்து நம் book size formatற்கு மாற்றுவது ; பலூனில் நம் மொழிப்பெயர்ப்பை type செய்து மீண்டும் Digital formatற்கு கொண்டு வருவது போன்றவை ஆகும். அந்த DVDகளை நாம் பிரிண்டிங் செய்யும் வரை பாதுகாப்பாக வைத்திருக்கலாம். வேண்டும் பொழுது தாமதம் இன்றி வெளியிட ஏதுவாகவும், நமக்கு வேலைகள் மிகவும் குறைந்து விட்டதான ஒரு அமைதியான மனநிலையையும் கொடுத்து, நம்மை ஆனந்தத்தில் என்றுமே ஆராதிக்கும் !

  [மர மண்டை1 February 2013 06:59:00 GMT+5:30 ]

  இங்கேயும் மறுபதிப்பு சம்பந்தமாக ஒரு பதிவு - BN USA !!

  ReplyDelete