Follow by Email

Thursday, 4 September 2014

தேவ இரகசியம் தேடலுக்கல்ல !

நண்பர்களே,

வணக்கம். மூன்று பாகமும் ஒரே புத்தகமாக - கலெக்டர்ஸ் ஸ்பெஷல் இதழாக வெளிவந்துள்ள சாதனைக்காகவும் ; அற்புதமான, அழகான ஓவியங்களை காமிக்ஸ் வடிவில் நமக்கு ரசிக்கத் தந்த, அகண்ட காமிக்ஸ் தேடலுக்கும் ; கைக்கு அடக்கமான குண்டு புக்கிற்கும் ; படிக்க படிக்க கதை சட்டென முடிந்து விடாமல் பக்கங்கள்  நகர்ந்து கொண்டே இருப்பதற்கும் ; மறுமுறை படிக்கத் தூண்டும் கதைக் களத்திற்கும் - முதலில் என் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் ! இந்த கிராபிக் நாவலை, ஒவ்வொரு பாகமாக வெளியிடத் தீர்மானித்து இருந்திருந்தால், அடுத்த பாகத்தை வெளியிடும் அளவிற்கு நம் காமிக்ஸ் வாசகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்குமா என்பது சந்தேகமே !

மழையோடு சேரும் மண்வாசம் நம்மை மெய்மறக்க செய்வதைப் போல் ; காற்றோடு கலக்கும் பூ வாசம் நம்மை பரவசமாகுவதைப் போல் ; சாயும் பொழுதோடு தேயும் நிலவொளி நம்மில் ஏகாந்தத்தை விதைப்பது போல் - அற்புதமான ஓவியங்கள் இயற்கையோடு கைகோர்க்கும் போது அங்கே காமிக்ஸ், பொக்கிஷமாகிறது ! அதுவே கதைக் களத்தோடு ஒன்றிவிடும் போது காமிக்ஸ் ராஜ்ஜியம் நமக்கு சொந்தமாகிறது !
தேவ இரகசியம் தேடலுக்கல்ல ! எனும் வசீகரமான தலைப்பைக் கொண்டு வெளிவந்திருக்கும் இம்மாத கிராபிக் நாவல் மூலம் இயேசு பிரானின் கல்லறை - நம் இந்திய காஷ்மீர் மாநிலத்தின்   ஸ்ரீநகரில் உள்ள ரோசா பால் (RozaBal) என்ற இடத்தில் இருப்பதாக நமக்கு தெரிய வருகிறது ; தெரிய வருகிறது என்று சொல்லும் போதே, அதற்கு முன் நமக்கு தெரிந்திருக்கவில்லை  என்று அர்த்தமாவதால், கதையைப் படிக்கும் பலருக்கும் கதையில் ஒன்ற முடியாமல் போகலாம். ஒரு காமிக்ஸ் கதைக் கரு நம்மை ஈர்க்கவில்லை என்றால் அங்கே நம் ஈடுபாடு குறைந்தே தான் போகிறது !

சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை அவர் அன்னை மரியாவும், தாமஸும் மீட்டெடுத்து,  திபெத் வழியாக ஸ்ரீநகரில் தஞ்சம் அடைந்ததாகவும்,  நீண்ட பயணத்தில் ஏற்பட்ட தள்ளாமை காரணமாக மரணமடையும் அன்னை மரியா அவர்களின்  நல்லடக்கம் பாகிஸ்தானிலுள்ள ராவல்பிண்டியின் (Rawalpindi) முர்ரீ என்ற சிற்றூரில் நடந்ததாகவும்,  Yuz Asaf என்ற பெயரில் இயேசு பிரான் திபெத்தில் சிலகாலம் தங்கியிருந்ததாகவும் இந்தக் கதை நமக்கு கூறுகிறது. அதன் சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, ஆவணங்கள் மூலம் புரபஸர் ஈகோன் பாயெர் அதை நிரூபிப்பதாகவும்  கதை நகர்கிறது !

சிலுவையில் மரித்து விட்ட இயேசு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த இறைசக்தியையும் ; அற்புதத்தையும் மறுப்பதாக அமையும் இந்த கிராபிக் நாவல் - புரபஸர் ஈகோன் பாயெர் முன் Yuz Asaf  தோன்றி, அவரை மரணத்தின் பிடியிலிருந்து மீட்டெடுத்து காப்பாற்றுவதாகவும், பரிசுத்த ஆத்மாவாக புரபஸரை உருவகப்படுத்துவதும், ரோசா பால் கல்லறையின் வம்சாவளி பாதுகாவலனாக - ஜாடா பஷாரட் சலீம் இருப்பதாக காட்டுவதும் - அழகான முரண்பாடுகள் ! 

ஒருபக்கம் இறைவனை சாதாராணமான மனிதன் என்று சித்தரிப்பதும் ; மறுபக்கம் மனிதனை அற்புத ஆன்மபலம் பெற்றவராக காட்டுவதையும் பார்க்கும் போது - நம்மூர் பழமொழி ஒன்று ஞாபகம் வருவதை தடுக்க முடியவில்லை. பாம்பும் சாகக் கூடாது ; பாம்பை அடிக்கும் கம்பும் கையும் நோகக் கூடாது என்ற பழமொழியை இக்கதை பறைசாற்றுகிறது ! 

திபெத்தின் பனிமலைகளும் ; மடாலயங்களும் நம்மை வசீகரித்தாலும் கதை என்னவோ மிகவும் தொய்வாகவே நகர்கிறது. அடுத்தது என்ன? என்று மனமெங்கும் ஆர்ப்பரிக்கும் காமிக்ஸ் பரவசத்தையோ ; பக்கங்களை அவசர அவசரமாக புரட்டும் ஆர்வத்தையோ இந்த கிராபிக் நாவல் தன்னிடம் இழந்து நிற்பதால், பரவாயில்லை படிக்கலாம் என்ற ரகத்தை சேர்ந்ததாக இருக்கிறது !
சீன ஸ்பெஷல் ஏஜென்ட் ஜாங் ஜியின் இளமையும், அழகும், மிடுக்கும்  நம்மை வசீகரிக்க தவறவில்லை. பனி முகில் மறைத்த நிலவின் இரவின் இருளில் சம்பவிக்கும் மோகமும் தாபமும் அச்சூழலுக்குள் நம்மை இழுப்பது மட்டுமல்லாமல், நாயகன் கெவின் மெக் ப்ரைட்டை  வெறுக்க வைத்து, சீன இளங்குமரியின் மேல் நம்  எண்ணங்களை அலைப்பாய வைப்பதாக இருக்கிறது. காதலுக்கு கண் இல்லை என்பது மட்டுமல்ல, எல்லையும் இடைஞலாக இருக்கவே முடியாது என்பதை நம் மனம் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவதும் ஒரு வித பரவசமே !

காமிக்ஸ் எனும் இந்த கிராபிக் நாவலின் பரிமாணம், நம் காமிக்ஸ் ரசனையின் செரிமானத்தை பதம் பார்ப்பதாக, ஆண் பெண்  அந்நியோன்யக்  காட்சிகள், அழகான ஓவியங்களால் அழுத்தமாக நம்மை முகம் சுளிக்க வைப்பதாக சில இடங்களில் ஆக்கிரமிக்கிறது. மிகச் சரியாக  அந்தப் பக்கங்களின் வாசிப்பில் இருந்த போது, யதேச்சையாக அருகில் நகர்ந்த மனைவியால் பதற்றம் கொண்டு, சட்டென இரண்டு பக்கங்களை அனிச்சையாக  திருப்பி விட்டேன். எப்பொழுதும் டைனிங் டேபிளில் கேட்பாரற்று பல நாட்களாவது இருக்கும் காமிக்ஸ் இம்முறை  பரிணாம வளர்ச்சி பெற்று, படித்து முடித்தவுடன்  ஷெல்பில் அழகாக அடக்கமாகி விட்டதும் நம் காமிக்ஸ் ரசனையின் எல்லை விரிவாக்கமே !பாவ்லோ க்ரெல்லா !

ஓவியரின் அர்ப்பணிப்புக்காகவும், அற்புதமான சித்திரங்களிற்காகவும், நம் சிந்தனைகளை விரிவாக்க உதவிய கதைக் களத்திற்காகவும் இந்த கிராபிக் நாவலுக்கு வரவேற்பு அளிக்கலாமே தவிர - தலையில் வைத்து கொண்டாடும் அளவிற்கு எல்லாம் இது இல்லை என்பதே உண்மை !

12 comments:

 1. அடடே!

  (இதன் அர்த்தம்: நான் இன்னும் புத்தகமும் படிக்கவில்லை, அதன் காரணமாக ப்ளாக் போஸ்ட்டையும் படிக்கவில்லை!)

  ReplyDelete
  Replies
  1. // ஒருபக்கம் இறைவனை சாதாராணமான மனிதன் என்று சித்தரிப்பதும் ; மறுபக்கம் மனிதனை அற்புத ஆன்மபலம் பெற்றவராக காட்டுவதையும் பார்க்கும் போது - நம்மூர் பழமொழி ஒன்று ஞாபகம் வருவதை தடுக்க முடியவில்லை. பாம்பும் சாகக் கூடாது ; பாம்பை அடிக்கும் கம்பும் கையும் நோகக் கூடாது என்ற பழமொழியை இக்கதை பறைசாற்றுகிறது ! //

   ஆன்ம பலம், அதிசய சக்திகளை சேர்க்காவிட்டால் இந்தக்கதையின் கொஞ்சநஞ்ச அட்ராக்ஷனும் "பணால்" ஆகிவிட்டிருக்கும்!

   Delete
  2. Ramesh Kumar : //*ஆன்ம பலம், அதிசய சக்திகளை சேர்க்காவிட்டால் இந்தக்கதையின் கொஞ்சநஞ்ச அட்ராக்ஷனும் "பணால்" ஆகிவிட்டிருக்கும்*//

   உண்மை தான் ! ஆனால் இந்தக் கதையின் அடிநாதமே, ஒரு குறிப்பிட்ட மதத்தின் ஆன்ம பலம் ; அதிசய சக்திகளை மறுப்பதும், இறைவனை, ஒரு சாதாரண மனிதனாக மட்டுமே சித்திரிப்பதும் தான் அல்லவா ? அது மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட மதத்தை நோக்கி பெரும்பான்மையானவர்களை வழி நடத்த, நடத்தப்பட்ட காய் நகர்த்தலோ என்ற தோற்றத்தை நிச்சயமாக இது தருகிறது !

   இந்தக் காமிக்ஸ் படைப்பு வியாபார நோக்கத்தைக் கடந்து, ஒரு உள்நோக்கம் கொண்டதாகவும் அமைகிறது என்பது என் கருத்து !

   Delete
  3. // இந்தக் காமிக்ஸ் படைப்பு வியாபார நோக்கத்தைக் கடந்து, ஒரு உள்நோக்கம் கொண்டதாகவும் அமைகிறது என்பது என் கருத்து ! //

   கண்டிப்பாக. பெரும்பாலும் க்ராஃபிக் நாவல்கள் ஒரு குறிப்பிட்ட நாட்டின் / வர்க்கத்தின் / Idealogy'ன் ஒருபக்க சார்புநிலையுடனேயே தயாரிக்கப் படுகின்றன எனத்தோன்றுகிறது. உதாரணத்துக்கு பிரளயத்தின் பிள்ளைகள், ஒரு சிப்பாயின் சுவடுகளில் மற்றும் இறந்தகாலம் இறப்பதில்லை. இம்மூன்றுமே One sided point of view'ல் வரலாற்றை அல்லது அரசியலை சுட்டுபவையாக இருந்தன.

   Delete
  4. in my view:

   பிரளயத்தின் பிள்ளைகள்- is pure anti Nazi propaganda type story there is no question on that. and its moral is justified.

   ஒரு சிப்பாயின் சுவடுகளில் - we can say this comics exposes the power game payed by governments and some of key political payers/government rep's. it also exposes the cold blood nature,and brute force of hit man culture. this book kind of communist/ rebellion inclined story. its moral is justified too.

   இறந்தகாலம் இறப்பதில்லை- it also exposes the cold blood nature,and brute force of hit man culture. and soft corners of one such hit man. considering this book starts from freedom and merging of new Germany, its shows contrary internal power house games. raising a question "did every one really got freedom?, or they just handing over their freedom to some other brutes , who can wear the mask of democrats" yes this book is kind of fill in the blank type leaves too many for us to fill. and its moral also justified(considering hit mans heart won by love not by money).

   தேவ இரகசியம் தேடலுக்கல்ல - story have its own loop holes, considering its type of "da vinci code" it did try to show oneness of god.(professor experiencing god' ness, not only in one religion but in all possible way's). and this comics also touching the hit-man culture, but overall mesmerizing art takes all credit.

   //இந்தக் காமிக்ஸ் படைப்பு வியாபார நோக்கத்தைக் கடந்து, ஒரு உள்நோக்கம் கொண்டதாகவும் அமைகிறது என்பது என் கருத்து !//

   yup this kind of stories always have controversial corner, and that's unavoidable since theme of this novel(oops) comics is religious thriller!


   //ஓவியரின் அர்ப்பணிப்புக்காகவும், அற்புதமான சித்திரங்களிற்காகவும், நம் சிந்தனைகளை விரிவாக்க உதவிய கதைக் களத்திற்காகவும் இந்த கிராபிக் நாவலுக்கு வரவேற்பு//

   i agree friend, this book is one of mile stone in terms of introducing world class art and comics genre! and this is extraordinary step towards Tamil comics future.

   :)

   Delete
  5. Satishkumar S :

   எடிட்டர் அல்லாத blogல் இவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டு பதிவிடுவது என்பது மிகவும் அபூர்வமாக நடக்கும் விஷயம். தங்களின் நீண்ட பதிவுக்கும், பதிவிட தாங்கள் எடுத்துக் கொண்ட நேரத்திற்கும், உழைப்பிற்கும் முதலில் என் நன்றிகள் ! தங்களின் ஞாபகசக்தி திறன் நிச்சயமாக வியக்க வைக்கிறது நண்பரே !

   இறந்தகாலம் இறப்பதில்லை - considering hit mans heart won by love not by money = 100 marks !

   தேவ இரகசியம் தேடலுக்கல்ல - but overall mesmerizing art takes all credit = 100 marks !
   this book is one of mile stone in terms of introducing world class art and comics genre = 100 marks !
   and this is extraordinary step towards Tamil comics future = 100 marks !

   :)

   Delete
 2. படித்துவிட்டேன். கெவின் மெக் ப்ரைட் கதாபாத்திரமும் சித்திரங்களும் அருமை!

  Finishing பரவாயில்லை, சினிமாவை பார்த்துவிட்டு வெளியே வரும்போது... Sorry புக்கை மூடிவைக்கும்போது உற்சாகமாக இருந்தது.

  பார்ஸா, உயிரா? ;)

  ReplyDelete
  Replies
  1. Ramesh Kumar : //பர்ஸா, உயிரா?//

   ஹா ஹா ! நீங்கள் மிகவும் ரசித்துப் படித்துள்ளது தெரிகிறது. மூன்று பாகங்களும் ஒரே புக்காக வெளிவந்துள்ள காரணத்தினால் மட்டுமே இதுபோன்று, ஒரு அருமையான, ஸ்லோவான, ஆங்கில அட்வெஞ்சர் சினிமாவை பார்த்து விட்டு வெளிவரும் உற்சாக உணர்வை நமக்குத் தருகிறது !

   Delete
  2. Yes, சில பாகங்களை சேர்த்து வாசிப்பது பெரிய வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது.

   Delete
  3. //Yes, சில பாகங்களை சேர்த்து வாசிப்பது பெரிய வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது.//
   +1

   Delete