Follow by Email

Sunday, 21 September 2014

காதலிக்கக் குதிரையில்லை !

நண்பர்களே,

வணக்கம். சில சமயம் பெரிய பின்புலம் இருக்கும் ; வரலாற்றுப் பின்னணிச் சார்ந்த  கதைக்களம் இருக்கும் ; நகைச்சுவையும், நையாண்டியும் கொட்டிக் கிடக்கும் ; ஒவ்வொரு கதையும், ஒரு உண்மைச்  சம்பவத்தைக் கூறுவதாக இருக்கும் ; பொழுது போக்கிற்கு ஏற்ற கார்ட்டூன் ரக ஓவியங்கள், தொடரின் பலமாக அமைந்து இருக்கும் !

ஆனால், அந்தத் தொடர் பலருக்கும் பிடிக்காமல் போகலாம், சில சமயம் வெற்றி அடையாமல் கூடப் போகலாம் ; இதற்குக் காரணம் - ரெண்டும் கெட்டான் கதை வரிசையாக இருக்கலாம் ; சிறுவர்களுக்கா அல்லது பெரியவர்களுக்கா என்ற குழப்பம் மேலோங்கி, குழப்பத்தை உண்டு பண்ணுவதாக அமையலாம் ; கேணங்கித்தனமான  வசனங்களும், கோணங்கித்தனமான செய்கைகளும், நம்  IQ லெவலுக்கு சவால் விடுவதாக இருக்கலாம் ; சிரிப்பிற்குப்  பதில், சில நேரம் நமக்கு கடுப்பை உண்டாக்கலாம் ; நகைச்சுவை என்ற பெயரில், அடிமட்ட முட்டாள் தனம் கதையெங்கும் நிரம்பியிருக்கலாம் ; நாம் சிரிப்பதற்குப் பதில், அரைக்கல்லை எடுத்து அவன் மண்டையை உடைக்கலாமா? என்று ஆத்திரம் வரும் அளவிற்கு காமெடி செய்திருக்கலாம்   ; இதுபோன்ற கதைகளில் வரும் 90 சதவீதம் நபர்கள், மடச்சாம்பிராணிகளாக இருக்கலாம் ; அதைப் படித்து நாமும் வாய்விட்டு சிரிக்க வேண்டுமானால், ஒன்று, நமக்கு IQ,  danger லெவலில் இருக்க வேண்டும் அல்லது மூளை என்ற வஸ்து அடிக்கடி மரத்துப் போயிருக்க வேண்டும் !

இது போன்றதொரு கதைத் தொடர் தான்,  ப்ளூகோட் பட்டாளம் ! ஒரே வகையான டெம்ப்ளேட் வகைக் கதைகள் ; கோபம் வரும் மாதிரியான காமெடிகள் ;  முட்டாள் தனமான செய்கைகள், அதற்கும் சில வியாக்கனங்கள் ; சொல்ல வருவதை தெளிவாக சொல்ல இயலாத குழப்ப நிலை ; நையாண்டி என்ற பெயரில், வடக்கத்திய ராணுவத்தை மட்டம் தட்டும் செயல் ; முத்தாய்ப்பாக கூறுவதென்றால், தெற்கத்தியப் புரட்சிப் படை ஆதரவாளர்களின் Troll தனம் என்றும் கூறலாம் !  இந்த ப்ளூகோட் பட்டாளத்தின் கதைத் தொடரின் அனாடமி இவ்வாறு இருந்தாலும், அந்தக் குள்ளப் பயலால்  மட்டுமே இந்தத் தொடர்களை  நம்மால் ஓரளவுக்கு ரசிக்கவோ ; ரிலாக்ஸாக படிக்கவோ இயலுகிறது ! 


காதலிக்கக் குதிரையில்லை - கதைக்கும் தலைப்புக்கும் சம்பந்தமே இல்லை ! காதலிக்க எதுக்குச் சாமி குதிரை என்று, டின் டின்னாக அசடு வழிய வேண்டியிருக்கிறது. வழக்கம் போல இதிலும் IQ குறைந்த ஆசாமிகள் உயர் அதிகாரிகளாக வலம் வருகிறார்கள்.  யூனியன் படையின் உயரதிகாரிகள், கேணப்பயல்களாக   காணப்படும் அதே வேலையில், புரட்சிப் படையின் அதிகாரி அதிபுத்திசாலியாக காட்சியளிக்கிறார். நம் தமிழ்நாட்டில் உலவித்திரிந்து பரப்புரையாற்றும் புலி ஆதரவு பிரச்சாரர்கள் போல், தெற்கத்தியப் படைக்கும் ஒரு பெரிய ஆதரவு கூட்டமே இருக்கும் போல் தோன்றுகிறது ! 

அதே நேரம், நகைச்சுவை என்ற பெயரில் அரங்கேறும் ப்ராங்கோ பென்னியின் கூத்துகள்,  சிரிப்புக்குப் பதிலாக, அடப் போங்கடா... நீங்களும் உங்க காமெடிகளும் என்று சத்தமாகப் புலம்பத் தோன்றுகிறது. ஒரு முறை குதிரையிலிருந்து கீழே விழுந்தாலே முன்வரிசைப் பல்லுக்கு கேரண்டி இல்லை ; எழுந்து திடமாக நிற்க எலும்புக்கும், எனர்ஜிக்கும் உத்திரவாதம் இல்லை ; இதில் மேன்மை தாங்கிய    புளிச்.. தூ.. இரவெல்லாம் பறந்து பறந்து தூர போய் விழுகிறார்.   WWF ல் கூட இத்தனை மணி நேரம் சண்டை நடப்பதில்லை !

புரட்சிப் படையுடன் போரிடுவதற்கு ஒரு இதய நோயாளியான நோஞ்சான் குதிரை, மூன்று கழுதைகள், ஒரு ஒட்டகம் ஆகியவற்றை அனுப்பிவைக்கும் மத்திய தலைமை, எப்பேர்பட்ட கூமுட்டைகளாக  இருப்பார்கள்? அவற்றைப் படித்து, அவற்றை நம்பி, நாமும் சிரிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்... ரின் டின் கேன்ல் வரும் மேன்மைதாங்கிய மை கர்னல்   எவ்வளவோ புத்திசாலி  மக்கழே !கதையின் பலம் : காதலிக்கக் குதிரையில்லை - கதையில் வரும் பல நகைச்சுவை வசனங்கள் ரசிக்க வைக்கின்றன ; சில யுத்த யுக்திகள் மலைக்க வைக்கின்றன ! உதாரணமாக, தெற்கத்திய ஜெனரலின் ரகசியத் திட்டமும், சார்ஜெண்ட் ரூபியின் மதியூகமும், குள்ளப் பயல் ஸ்கூபியின் தடாலடியும் இந்தக் கதைக்கு அச்சாணியாக திகழ்கின்றன ! செவ்விந்தியர்களின் உடையும்,  உருவமும் நம்மை சிரிக்க வைக்கின்றன ; மதியும், மதியூகமும் நம்மை பாராட்ட வைக்கின்றன ! குள்ளனின் சேஷ்டைகள் நம்பும்படியாகவும், நகைச்சுவை மிகுந்ததாகவும் இருக்கின்றன !

இதுபோன்ற கதைகளை, தற்போது நடைமுறையில் உள்ளது போன்றே தனித் தனி பாகமாக வெளியிட்டு, வேறு ஜனரஞ்சகமான கதைத் தொடர்களை, சிறிய குண்டு புக் வடிவில் வெளியிடுவதே சாலச் சிறந்தது !

ப்ளூ கோட்ஸ் - ரெண்டும் கெட்டான் ! காதலிக்கக் குதிரையில்லை - பாம்புன்னு அடிக்கவும் முடியாது, பழுதுன்னு தாண்டவும் முடியாது !பரவாயில்லை படிக்கலாம், மோசமில்லை ரசிக்கலாம், மனமிருந்தால் கொஞ்சம் சிரிக்கலாம் !

19 comments:

 1. அண்ணா, (இப்படி அழைப்பது ஒரு ஸ்டைல்)

  பதிவு நன்று.

  அப்படியே நீங்கள் அந்த ப்ராங்கோ பென்னியின் பின்புல வரலாறையும் எழுதி இருக்கலாமே?

  ReplyDelete
  Replies
  1. தல, (இப்படி அழைப்பது ஒரு மரியாதை, தல)

   அந்த ப்ராங்கோ பென்னியின் பின்புல வரலாற்றை எழுதும் அளவுக்கு நான் வொர்த் இல்லை நண்பரே... நீங்கள் அதை ஒரு பின்னூட்டமாக இங்குப் பதிவிட்டால், இந்த தளம் மிகவும் பெருமையடையும். நேரமிருந்தால் முயற்சி செய்யலாமே தோழர் ?!

   Delete
  2. //ப்ராங்கோ பென்னியின் பின்புல வரலாற்றை எழுதும் அளவுக்கு நான் வொர்த் இல்லை //

   இனிமேல் யாராவது என்னிடம் “தன்னடக்கம்” என்பதற்க்கு உதாரணம் கேட்டால் மேலே குறிப்பிட்ட கமெண்ட்டை சொல்லிவிடுகிறேனே?

   Delete
  3. உண்மைக்கு இப்படி ஒரு பேரும் புகழும் கிடைக்கும் என்றால், நான் என் வாழ்நாளில், எப்பொழுதும் போல் உண்மையை தவிர வேறு எதையும் பேசப் போவதில்லை தோழர் !

   Delete
 2. I am not fan of bluecoat, noting to differ/agree since i didn't read the book.

  i read your "தேவ இரகசியம் தேடலுக்கல்ல ! " post and left some of my thoughts friend.

  ReplyDelete
 3. இந்த காமிக்ஸ் பள்ளிக்கூடத்திற்கு புரபசராக ஆதரவு தந்து கௌரவிக்க வருகை தந்திருக்கும் professors - Mr. S.Satishkumar மற்றும் mayavi sivakumar அவர்களை வருக வருக என வரவேற்பதில் இந்த தமிழ் காமிக்ஸ் பள்ளிக்கூடம் பெருமையடைகிறது !

  ReplyDelete
 4. //முத்தாய்ப்பாக கூறுவதென்றால், தெற்கத்தியப் புரட்சிப் படை ஆதரவாளர்களின் Troll தனம் என்றும் கூறலாம் ! //

  +1.


  ReplyDelete
  Replies
  1. Mahendran Paramasivam :

   நல்வரவு நண்பரே ! இந்த கருத்துக்கு, ஒரு +1 வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது !

   Delete
 5. வணக்கம் நண்பரே,
  நான் வலைத்தளத்திற்கு புதியவன்,தளத்தில் உள்ள காமிக்ஸ் உலகத்தின்
  ஒவ்வொரு நண்பர்களின் பதிவையும் அதற்கு வந்த பினூட்டத்தை
  நேரம்கிடைக்கும்போதெல்லாம் படித்துவருகிறேன்.
  எடிட்டர்-ப்ளாக்கில் நீங்கள் கொடுத்த லிங்க் மூலமாகத்தான் உங்களுக்கு
  ஒரு ப்ளாக் இருப்பது (தேடலில் என் net+நான் சுலோ)தெரிந்தது.
  காமிக்ஸ் உலகம் பற்றி(அதன் ரசிகர்களை பற்றிய) எண்ணஓட்டத்தையும்
  மனநிலையும் படம்பிடித்துக்காட்டும், ஆழமான விசயங்களின் அணிவகுப்பை
  உங்கள் தளத்தில் காணமுடிகிறது நண்பரே..!
  ஒவ்வொன்றாக படித்து பெறும் அனுபவத்தை அவ்வப்போது பகிர்ந்து
  கொள்கிறேன் !

  ReplyDelete
  Replies
  1. mayavi sivakumar : //*ஒவ்வொன்றாக படித்து பெறும் அனுபவத்தை அவ்வப்போது பகிர்ந்துகொள்கிறேன்*//

   தாமதமானாலும், தங்களுக்கு ஏற்படும் அனுபவத்தை நிச்சயம் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பரே !

   Delete
 6. இந்தக்கதையை இன்னும் படிக்கவில்லை. சூப்பர் ஹீரோ ஸ்பெஷலுக்கு அடுத்ததாக படிக்க திகட்டும் ரகத்தில் ப்ளூகோட்ஸ் சேர்ந்துவிட்டது (எனக்கு).

  வரலாறும் அரசியலும் தெரியாதோருக்கு அதில் ஆர்வமூட்டும் வகையில் கதையோட்டம் அமைவது ஒரு ரகம். அதை ஏற்கெனவே தெரிந்து ஒரு பக்க ஆதரவு மனநிலையோடு இருப்பவர்களை Target ஆக வைத்து (நம்பி) படைக்கப்படுவது சற்று கீழான ரகம் - no matter it is a war comics, novel or movie. ப்ளூகோட்ஸ் அந்தரகத்தில் உள்ளதோ எனத்தோன்றுகிறது. இதனாலேயே கமெடி என்கிற விஷயம் எடுபடாமலும்போகிறது.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் கூறுவதைக் கூட ஒருவகையில் ஏற்றுக் கொள்ளலாம் ரமேஷ், ஆனால், புரட்சிப் படையுடன் போரிடுவதற்கு ஒரு இதய நோயாளியான நோஞ்சான் குதிரை, மூன்று கழுதைகள், ஒரு ஒட்டகம் ஆகியவற்றை யூனியன் படையின் மத்திய தலைமை அனுப்பிவைப்பதாக சித்தரித்துள்ளதை தான் என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை :-)

   Delete
  2. Yes, கதையில் எந்தெந்த பகுதிகள் லாஜிக்கை மீறி காமெடிக்காக புனையப்பட்டவை, எந்தெந்த பகுதிகள் அபத்தமான (நிஜ) நிகழ்வுகளை பிரதிபலிப்பவை என்பது புரிபடாதபோது அந்தக் கதைத்தொடர் Region wise நமக்கான ரகமல்ல என நகர்ந்துபோக வேண்டியிருக்கிறது. ஆகாயத்தில் அட்டகாசம் படிக்கும்போதே இது உறுத்தத்தான் செய்தது.

   Delete
 7. Friend no posts from you now a days ?!

  ReplyDelete
 8. Dr hearty friend , wish u happy diwali to u & ur family...

  ReplyDelete
  Replies
  1. Dr.Sundar,Salem.: //*Dr hearty friend , wish u happy diwali to u & ur family...*//

   நன்றிகள் டாக்டர் :-)

   மிகவும் தாமதமாகி விட்டதால், உங்களுக்கு என்னுடைய advance இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் :-))

   Delete
 9. hey Seriously what happen man... no posts no reply ..? are you alright friend?

  ReplyDelete
  Replies
  1. Satishkumar S : //*hey Seriously what happen man... no posts no reply ..? are you alright friend?*//

   ஆர்வமான அக்கறைகளுக்கும் ; அன்பான தோழமைக்கும் மிக்க நன்றிகள் நண்பரே.. நான் மிகவும் நலமாகவே இருக்கிறேன் !

   சென்ற அக்டோபர் மாதம் - iStartSurf browser hijackerம், அதன் கூடவே வந்த சில kidnapper வைரஸ்களும் என்னுடைய கம்ப்யூட்டர்/ஐ சர்வ நாசம் செய்து விட்டன. கம்ப்யூட்டர் இன்றி நிறைய நேரம் மிச்சமானதால் - சரி இதுவும் கூட நன்றாக இருக்கிறதே என்று சரி செய்யாமல் இன்றுவரை அப்படியே விட்டு வைத்திருக்கிறேன். அதனால் தான் தங்களுடைய முந்தைய கமெண்டிற்கும், நண்பர்கள் சிலரது பதிவுகளுக்கும், ஈமெயில்களுக்கும் பதில் அளிக்க முடியவில்லை. தாமதத்திற்கும், பதிலின்மைக்கும் என் வருத்தத்தை இங்கு பதிவு செய்கிறேன் நண்பர்களே !

   Delete
  2. :) good to hear tht you are good!,

   lets hit with new post, waiting for your next post!

   Delete