Follow by Email

Friday, 12 December 2014

வானமே எங்கள் வீதி..!

நண்பர்களே,

வணக்கம். எப்பொழுதுமே எனக்குப் புத்தகம் கையில் கிடைத்த நாளே அனைத்து காமிக்ஸையும் படித்து விடுவேன். இதுவரை எந்தக் காமிக்ஸையும் இரண்டு நாட்களுக்கு மேல் படிக்காமல் ஒத்தி வைத்ததில்லை. முதல் வாசிப்பில் என்னவிதமான எண்ணங்கள் எனக்குத் தோன்றுகிறதோ அதையே என் கருத்தாக லயன் ப்ளாகிலும்,  இங்கு பதிவு போடுவதாக இருந்தாலும், அந்தச் சிந்தனைகளை மட்டுமே பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளேன் - படித்துப்   பல நாட்கள் கழிந்தப் பின்னும் ! எனவே என் பதிவுகள் அனைத்தும், என்னுடைய முதல் வாசிப்பின் சிந்தனைகளாக மட்டுமே இருக்கும். நீங்கள் என்னுடைய பதிவைப் படிக்கும் போது, அதில் மாறுபட்ட பார்வைகளோ  ; ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துகளோ இருக்கிறது என்று கருதும் பட்சத்தில், தாரளமாக நீங்கள் உங்களுடைய கருத்துகளை முன்வைக்கலாம் ; அல்லது மறுத்தும் பதிவிடலாம்.  நன்றி !

தற்போதெல்லாம் அடுத்த மாதம் ஏதாவது கிராபிக் நாவல் இருக்கிறதா என்ற தேடல் அதிகமாகி விட்டது ; கிராபிக் நாவல் இருக்கும் பட்சத்தில் அந்தப் புத்தகம் எப்பொழுது நம் கைகளில் கிடைக்கும் என்ற ஏக்கம் தொடங்கி விட்டது ; கதை பிடிக்குமா? பிடிக்காதா? என்ற சிந்தனை கொஞ்சம் கூட எழுவதில்லை ! பிடித்தாலும் சரி, பிடிக்கா விட்டாலும் சரி, ஆனால் அந்தக் கிராபிக் நாவல் நமக்குள் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் எப்படிப் பட்டதாக இருக்கக் கூடும் ? ; படித்தவுடன் பிடிக்குமா ? படிக்கப் படிக்கப் பிடிக்குமா ? ; தனிமையில் படிக்க வேண்டுமா ? இரவின் இருளும் சூழ வேண்டுமா ? ; அல்லது அதற்கு முன் ஒரு காமிக்ஸ் படித்தவுடன் கிடைக்கும் இலகுவான மனநிலை அவசியமா ? ; படிக்கும் மனநிலை வரும் வரை, ஆறுமாதமோ ஒரு வருடமோ படிப்பதை ஒத்திப் போட வேண்டியது  அவசியமா ? 

என்பது போன்ற சிந்தனைகள், மோடி சிறப்புரையாற்றிய நியூயார்க் கூட்டத்தில் எழுந்த ஆரவாரம் போல், ஒவ்வொரு முறையும் எண்ணங்கள் கரகோஷம் எழுப்புகின்றன !   இந்தச் சிந்தனைகளும், இயல்பாய் ஆர்ப்பரிக்கும் எண்ணங்களும், காமிக்ஸ் வாசகனாகிய எனக்குப் புதிய அனுபவம் தான் என்றாலும் அதிலும் ஒரு சுகம் இருக்கவே செய்கிறது ! அது போன்ற ஒரு எதிர்பார்ப்பில் படித்தக் கதை தான்  வானமே எங்கள் வீதி..! 


பார்வையில் பச்சிளம் பாலகர்களாகத் தோன்றும் மாக்ஸ், வெர்னர், ஹன்னா மூவருக்கும் அறிவுக்கு மீறிய விஷய ஞானம் ; வயதுக்கு மீறிய பேச்சுகள் ; சிறுவர்களுக்கே உரிய குறும்புத் தனம், கள்ளம் கபடமற்ற துடுக்குத் தனம் ; அவர்களுக்குள்ளும் இனம், மதம், பேதம் போன்ற பாகுபாடுகள் என்று, சலசலவென்று ஓடும் நதி போல் கதையின் ஆரம்பத்தில் நம் எண்ணங்களில் சிலச் சலனங்கள் ! அதுவும், அவர்களின் வசிப்பிடம் சைலஸி பிராந்தியத்தில் இருக்கும் சிறு மலைக் கிராமமான ஒபோல் என்பதும், கதையின் காலக்கட்டம் 1930 எனும் போது, நமக்கு ஏற்படும் தாழ்வு மனப்பான்மையை தவிர்த்து கொள்ள அனைவருக்கும் இயலுமா என்பது மிகப்பெரிய   கேள்விக்குறி தான் !

நாகரீகத்திலும், அறிவின் முதிர்ச்சியிலும், விஷய ஞானத்திலும்,  நாட்டு நடப்பிலும்  நாம் இன்றும் கூட எவ்வளவு பின்தங்கி உள்ளோம் என்பது மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது. கதையே என்றாலும் அதையே அளவுகோலாக்கிப் பார்க்கும் போது, கிட்டத்தட்ட 84 வருடங்கள் கழிந்தப் பின்னும் நம் வீட்டுச் சிறுவர்களின் திறன் மீது பச்சாதாபம் மட்டுமே ஏற்படுகிறது... இதில் எங்கு நம் தேசம் கோட்டை விடுகிறது ? கல்வியிலா? ; கற்பித்தலிலா? : ஜாதி மத துவேஷங்களிலா? ; கழக கட்சிகளின் சகாயத்தாலா? ; கட்டவுட் பாலபிஷேக விசிலடிச்சான் குஞ்சுகளின் ஞான சூன்யத்தாலா? ; சினிமா, டிவி போன்ற சமூக சீரக்கேடுகளாலா? - என்று  மனம் மட்டுமே இங்கு பதறித் துடிக்கிறது. இன்னும் எத்தனைக் காலத்திற்கு தான் இப்படி அடிமுட்டாள்களாகவே நம் மக்களில் பெரும்பான்மையானவர்கள், மாற்றமே இன்றி வாழப்போகிறார்கள் என்று தெரியவில்லை :(

இந்தக் கிராபிக் நாவல் படித்தவுடன் பிடிக்கும் வகையைச் சார்ந்தது. சட்சட்டென்று மாறுவது இறந்தகாலம், நிகழ்காலம் மட்டுமல்ல, நிறைய கதாப்பாத்திரங்களின் குணாதிசியங்களும் கூட தான் ! மாறுபட்ட மனிதர்கள்  ; விமானங்கள் ; யுத்தக் களரிகள் ; உயிர் ஆபத்தை சாதாரணமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவப்பட்ட மாந்தர்கள் - என அனைத்தும் ஹிட்லரின் இராஜ்ஜியம் எனும்  மையப்புள்ளியில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இங்கு கதையை விட, கதையில் வரும் கதாப்பதிரங்கள் நம்மை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொள்கின்றன. ஒரு விஷயத்தைப் படித்துக் கிரகித்து கொள்ளும் முன்பே, அடுத்த விஷயம் கண் முன் தோன்றுவதே  இதன் சிறப்பு !

கதை நெடுக மாக்ஸ் குர்ட்மேன் என்ற சிறுவனை மட்டுமே மையமாக வைத்து,  நெருடலின்றி சுவாரசியமாக நகரும் கதையில், இப்படியும் இருக்குமோ என்று கதையின் கடைசிப் பக்கத்தில்  ஒரு விஷயம் உறுத்தியது, லெப்டினென்ட் மாக்ஸ் குர்ட்மேனாக வருவது உண்மையில் 'வெர்னர் கோனிக்ஸ் பெர்க்' ஆகத் தான் இருக்க முடியும் என்பதே அது... கடைசிப் பக்கம் முடிந்தவுடன் பரபரவென்று முன்பக்கத்தைப் புரட்டிப் பார்த்தால், வெர்னரின் முகச்சாயல் அப்பட்டமாக மாக்ஸிடம் தெரிகிறது. தன்னுடைய ஆத்ம நண்பனுக்காக தன் வலது கையின் இரண்டு விரல்களைக் கூட   வெட்டிக் கொள்ளும் துணிவு கொண்டவன் தானே வெர்னர்? அப்படி இருக்கும் பட்சத்தில் அடுத்து வரும் ஆல்பம் மூன்றோடு முடிந்துப் போகும் தொடராக நிச்சயமாக இது  இருக்கப் போவதில்லை ! இந்தக் கருத்து  தவறாகவும் இருக்கலாம், ஆனால் தற்சமயத்திற்கு இதுபோன்ற யூகங்களும், காத்திருப்பும் நிச்சயம் சுவாரசியம் தரும் நிகழ்வாகவே அமைந்திருக்கிறது !

இயல்பாகவே, மாக்ஸ் நாஜிக்களின் மேல் காட்டும் வெறுப்பும், வெர்னரின் ஜெர்மானிய உணர்வுகளும், ஹன்னா/வின், தன்னிகரற்றப் பெண்ணாக சாதிக்க வேண்டும் என்ற பிறவிக் குணமும் அழகழகாக ஆங்காங்கே சித்தரிக்கப்பட்டுள்ளதே இந்தக் கதையின் உயிர் நாடியாக இருப்பதாக நான் கருதுகிறேன் !

முத்தாய்ப்பாக கூறுவதென்றால் ஹிட்லரின் இளைஞர் அணி பட்டாளத்தைக் கூறலாம்... சத்தியமாகக்  கூறுகிறேன், இளைஞர் என்ற சொற்பதத்தின் பொருள் இன்றுவரை நம் சமூகத்திற்கு தெரியாது. அதனால் தான் காசி இராமேஸ்வரம் போகும் 60+ வயதில் இளைஞர் அணி தலைவராக ஒருவர் காலத்தை ஓட்ட முடிகிறது ; 65 வயதில் 20 வயது பெண்ணுடன் ஒருவர் சினிமாவில் டூயட் பாட முடிகிறது ; 40+ வயதில் ஒருவர் கல்லூரி முதல் வருடப் படிப்பில் காதலிக்க முடிகிறது.  ஆனால் இக்கதையில், இளைஞர் அணி உறுப்பினர்கள் அனைவரும் துடிப்பு மிக்கச் சிறுவர்கள் ; உயிருக்கு அஞ்சாத மாவீரர்கள் ; பயம் என்றால் என்னவென்றே அறியாத இளஞ்சிங்கங்கள் !

இக்கதையில் வரும் இளைஞர் அணிபாலகர்களுக்குள்ளும் ; ஒவ்வொரு தன்னார்வ விமான பைலட் சிறுவர்களுக்குள்ளும் தெறிக்கும் உற்சாக உணர்வுகளும்,  யுத்த வெறிகளும், உயிருக்கு துணிந்த தியாகத்தையும் பார்க்கும் போது, ஒரு விஷயம் மட்டுமே திரும்பத் திரும்ப மனதில் நிழலாடுகிறது - இது உண்மையான வரலாறாக இருந்திருக்கும் பட்சத்தில், ஏன் அடால்ப் ஹிட்லரால் உலகம் முழுவதையும் வெற்றி கொள்ள முடியவில்லை ? சிறு குறிப்பு : காமிக்ஸ் சேகரிப்பாளர்கள் இந்தப் புத்தகத்தை எந்த வரிசையில் வைக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை, ஆனால் நான் கீழ்காணும் வரிசையில் புத்தக ஷெல்பில் வைத்துள்ளேன் ; இப்படி வைத்ததிலிருந்து அந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம் ஒரு இனம் தெரியாத ஆத்ம திருப்தி உண்டாகிறது, நீங்களும் முயற்சித்து தான் பாருங்களேன் நண்பர்களே..!

1.எமனின் திசை மேற்கு !
2.க்ரீன் மேனர் !
3.மனதில் மிருகம் வேண்டும் !
4.ஒரு சிப்பாயின் சுவடுகளில் !
5.தேவ ரகசியம் தேடலுக்கல்ல !
6.இரவே.. இருளே.. கொள்ளாதே !
7.வானமே எங்கள் வீதி !

41 comments:

 1. @ மிஸ்டர்.மரமண்டை

  முதல் உலக போரின் காலகட்டத்திலேயே மேற்கத்திய சிறுவர்களின் முதிர்ச்சியும், இரண்டாம் உலக போரின் போது இளைஞர்களின் வீர மனநிலை,தேசபற்று,தியாக உணர்வுகள் பற்றிய விவரங்களும், இன்றைக்கும் அதை தொடாத நம் பரிதாப நிலை பற்றிய விரிவுரை ஓகே...! பாராட்டுக்கள்...!!

  யுத்தபின்னணி பற்றிய தகவல்கள் கொஞ்சம் எதிபார்த்தேன்...நான் திரட்டிய பல முடிச்சிகளை அவிழ்க்கும் தகவல்களை,சுவையாக கூறலாமா,வேண்டாமா என யோசித்துகொண்டிருந்தேன்.உங்கள் பதிவு பார்த்தும்,உங்கள் உற்சாகம் என்னை தொற்றி கொண்டது, பட்டையை கிளப்பும் ஒரு பதிவுக்கு தயாராகிவிட்டேன்...! நன்றிகள்...!!

  ReplyDelete
  Replies
  1. //உங்கள் பதிவு பார்த்தும்,உங்கள் உற்சாகம் என்னை தொற்றி கொண்டது, பட்டையை கிளப்பும் ஒரு பதிவுக்கு தயாராகிவிட்டேன்///

   ஆகட்டும்! ஆகட்டும்!

   Delete
  2. mayavi. siva :

   நண்பரே, புத்தகத்தைப் படிக்கும் போது இன்னும் விரிவாக பதிவிட வேண்டும் என்றே மனதிற்குள் தோன்றியது. ஆனால் அதற்குள் 4 நாட்கள் பயண நிமித்தம் காணாமல் போய் விட்டதால் இந்தளவுக்கு மட்டுமே பதிவிட நேரம் ஒத்துழைத்தது. உதாரணமாக சிறுவர்கள் மூவரின் மலையேற்றமும், குகைக்குள் நடக்கும் கூத்தும் கும்மாளமும், ஹன்னாவின் நடை, உடை, நடன, முக பாவனைகளும், மாக்ஸ், வெர்னர் உரையாடல்களையும் பற்றி எழுத ஆசைப்பட்டேன்.. அதுபோல் இன்னும் சில பல விஷயங்கள் என, அனைத்தும் மொத்தமாக விடுபட்டே போய் விட்டன...

   ஆனால் நிச்சயமாக யுத்தப் பின்னணி பற்றிய தகவல்களைப் பற்றி எழுதி இருக்க மாட்டேன். எனவே தங்களின் ''பட்டையை கிளப்பும் ஒரு பதிவைப்'' படிக்க நானும் தயாராகி விட்டேன் நண்பரே.. விரைவில் பதிவிடுங்கள்.. நண்பர்கள் நாங்கள் காத்திருக்கிறோம் !

   Delete
 2. மனதுக்குள் மெல்லிய அதிர்வை ஏற்படுத்திடும் ஒரு நல்ல பதிவு!

  ReplyDelete
  Replies
  1. Erode VIJAY : தாங்கள் இங்கே அளிக்கும் தொடர் பங்களிப்பு, என் மனதிற்கு மிகவும் நிறைவாக இருக்கிறது.. பழைய காலம் போலவே நன்றிகள் விஜய் :-)

   Delete
 3. மிஸ்டர் மரமண்டை .,
  ஒற்றை வார்த்தையில் சொல்வதெனின்
  "அட்டகாசம் "
  இந்த கதையை படித்தபோது என் மனதில் தோன்றிய உஉணர்வுகள் அனைத்தையும் இங்கே உங்கள் எழுத்துக்களில் பார்க்கிறேன் நண்பரே.!
  மனதில் தோன்றினாலும் இவ்வளவு அற்புதமாக வார்த்தகளில் வடிக்கும் கலை எனக்கு கை வராது என்பதை வெட்கமில்லாமல் ஒத்துக் கொள்வதில் பெருமையே அடைகிறேன்.
  மிஸ்டர் மரமண்டை என்பவர் யாராக இருந்தாலும் என் மனதில் நிச்சயம் உன்னதமான ஓர் உயர்ந்த இடத்தில் எப்போதும் இருப்பார்.
  நன்றி நண்பரே.!
  வாழ்க வளர்க.!

  ReplyDelete
  Replies
  1. கிட் ஆர்ட்டின் KANNAN :

   //என் மனதில் தோன்றிய உணர்வுகள் அனைத்தையும் இங்கே உங்கள் எழுத்துக்களில் பார்க்கிறேன் நண்பரே//
   இந்த ஒற்றை வாக்கியம் மட்டுமே போதும் கண்ணன்.. எழுதியதின் பயன் முழுமை அடைந்து விட்டது !

   //மிஸ்டர் மரமண்டை என்பவர் யாராக இருந்தாலும் என் மனதில் நிச்சயம் உன்னதமான ஓர் உயர்ந்த இடத்தில் எப்போதும் இருப்பார்//

   இதை விட வேறு என்ன பேறு வேண்டும் என்று சிலர் கூறக் கேட்டிருக்கிறேன்.. யாரென்றும் தெரியாமல், உண்மை முகம் எதுவென்றும் புரியாமல், ஒருவரால் நட்பு பாராட்டப் படுமேயானால் அதைவிட எனக்கு, வேறு என்னப் பேறு வேண்டும் நண்பரே.. நிச்சயமாக, காமிக்ஸ் வாசகர்கள் எவருமே அறிந்திராத ஒரு புதிய முகம் நான் என்பதால், சிறிதும் குற்ற உணர்ச்சியற்று ஜீவிப்பதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன் மிஸ்டர் கண்ணன் ! இந்தத் தளத்தில் தங்களின் முதல் பதிவிற்கு மிகவும் நன்றிகள் ! உங்கள் வருகை என்றுமே மகிழ்ச்சி தருவதாக அமையும் கண்ணன் :-)

   Delete
 4. அட்டகாசு! ®

  // கிட்டத்தட்ட 84 வருடங்கள் கழிந்தப் பின்னும் நம் வீட்டுச் சிறுவர்களின் திறன் மீது பச்சாதாபம் மட்டுமே ஏற்படுகிறது... இதில் எங்கு நம் தேசம் கோட்டை விடுகிறது ? கல்வியிலா? ; கற்பித்தலிலா? : ஜாதி மத துவேஷங்களிலா? ; கழக கட்சிகளின் சகாயத்தாலா? ; கட்டவுட் பாலபிஷேக விசிலடிச்சான் குஞ்சுகளின் ஞான சூன்யத்தாலா? ; சினிமா, டிவி போன்ற சமூக சீரக்கேடுகளாலா? - என்று மனம் மட்டுமே இங்கு பதறித் துடிக்கிறது. இன்னும் எத்தனைக் காலத்திற்கு தான் இப்படி அடிமுட்டாள்களாகவே நம் மக்களில் பெரும்பான்மையானவர்கள், மாற்றமே இன்றி வாழப்போகிறார்கள் என்று தெரியவில்லை //

  கதையில் சிறிது Exaggerations இருக்கும் என்ற புரிதல் அவசியம் என்பது ஒரு விஷயம். ஆனாலும் தங்கள் கம்பேரிசன் நியாயமானதே என்றும் குறிப்பிடவேண்டும். என்னுடைய புரிதல் இந்த ரீதியில் உள்ளது (could be wrong though):

  சற்று கூர்ந்து கவனித்தால் (இந்தக் கதையிலும், நிஜத்திலும்) தொழில் ரீதியிலான ஈடுபாடு ("Specialisation") தரும் மெச்சூரிட்டிதான் ஒரு பலமாக செயல்படுகிறது. நமது நாட்டில் தொழிலுக்கு மரியாதை குறைவு (ரொம்ப குறைவாக முன்பு இருந்தது), அதனாலேயே சிறார்களின் செயல்திறனை இயல்பாக ஊக்குவிக்கும் பக்குவமும் முதிர்ச்சியும் குறைவு (ரொம்ப குறைவாக முன்பு இருந்தது, இப்போது பரவாயில்லை). தனது செயல்திறனில் உற்சாகம் ஏற்படாத சிறார்கள் தேர்ந்தெடுக்கும் பொழுதுபோக்குகள், ஆர்வங்கள் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் லெவலோடு திருப்தியாகிவிடும். அவர்களுடைய தவறல்ல, மொத்த சமூகத்தின் கல்வியறிவு + தொழிலறிவு மெதுவாக முன்னேறும்போது சரியாகும், ஆகலாம், ஆனாலும் ஆகலாம்.

  ReplyDelete
  Replies
  1. அப்பரம்... அந்தக்கதைப்படி ரான்ராடில் எல்லா சிறார்களும் தேர்ச்சிபெறவில்லை. எனவே முக்கிய கதாபாத்திரங்கள் more than average in many aspects including attitude obviously. Can find those extreme cases in every country. The only problem is how average people differ across countries! :)

   Delete
  2. // இக்கதையில் வரும் இளைஞர் அணிபாலகர்களுக்குள்ளும் ; ஒவ்வொரு தன்னார்வ விமான பைலட் சிறுவர்களுக்குள்ளும் தெறிக்கும் உற்சாக உணர்வுகளும், யுத்த வெறிகளும், உயிருக்கு துணிந்த தியாகத்தையும் பார்க்கும் போது, ஒரு விஷயம் மட்டுமே திரும்பத் திரும்ப மனதில் நிழலாடுகிறது - இது உண்மையான வரலாறாக இருந்திருக்கும் பட்சத்தில், ஏன் அடால்ப் ஹிட்லரால் உலகம் முழுவதையும் வெற்றிக் கொள்ள முடியவில்லை ? //

   அந்தக்கதையிலேயே ஜெர்மனி ராணுவத்தின் 'பில்டிங் ஸ்ட்ராங்கு... பேஸ்மெண்ட்டு வீக்கு..!' ரீதியிலான விஷயங்கள் சுட்டிக்காட்டப்படுகிறது. பொருந்தாத வயதில் உள்ள சிறார்களை டுபாக்கூர் ரக விமானங்களின் விமானி-பலிகடாவாக பயன்படுத்தும் சூழ்நிலை, போலியான ஊக்குவிப்பு, பிற்பாடு உள்ளுக்குள்ளே அதிருப்தி போன்ற விஷங்கள் இல்லாமலில்லை.

   Delete
  3. Ramesh Kumar : //அட்டகாசு! ®//

   ஹா.. ஹா.. ஹா..! LOL :D

   வாய்விட்டுச் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.. ரொம்பவே மெனக்கெட்டு ரிஜிஸ்டர் எல்லாம் செய்து இருக்கிறீர்கள்.. சபாஷ் மிஸ்டர் ரமேஷ்.. உண்மையாகவே அட்டகாசு ! (copy right Ramesh Kumar 2014)

   Delete
  4. //மொத்த சமூகத்தின் கல்வியறிவு + தொழிலறிவு மெதுவாக முன்னேறும் போது சரியாகும்//

   இது மட்டுமே காரணமாக இருக்க முடியாது ரமேஷ்.. இன்றும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பாலிடெக்னிக் தொழில் கல்வி தேர்ச்சிப் பெற்றே தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். கல்வியறிவை எடுத்துக் கொண்டாலும் கூட - ஐ ஐ டி., ஐ ஐ எம்., என்று நாம் உலகளவில் உச்சாணிக் கொம்பில் தான் நிற்கிறோம். ஆனால் அதே ஐ ஐ டி., மாணாக்கர்கள் தான் சமீபத்தில் முத்தப் போராட்டத்தை தெருவில் நடத்திப் புரட்சி செய்தார்கள். தெருவில் புணர்ச்சியில் ஈடுபடும் ஐந்தறிவு நாய்களைக் கூட அருவருப்பால் பார்க்காமல் தவிர்த்து, கடந்துப் போகும் சமூகம் தான் நம்முடையது. இதில் நாயை விடக் கேவலமான செயலை செய்தவர்கள், மெத்தப் படித்தவர்கள் என்ற தராதரம் கொண்டவர்கள் தானே ?! எனவே இங்கு //மொத்த சமூகத்தின் கல்வியறிவு + தொழிலறிவு// என்பது அர்த்தமற்றுப் போகிறது என்பது என் கருத்து. அப்படியெனில் தங்களின் கருத்து என்னவென்று நீங்கள் தான் கூற வேண்டும் :)

   கட்டுப்படுத்த முடியாத, காட்டாறு போன்ற கட்டிளங் காளைகளும், இளைஞர்கள் எனும் இளஞ்சிங்கங்களும், தங்களின் அபிமான நடிகர்களின் கட்டஅவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து புளகாங்கிதம் அடைகிறார்கள் என்பதில் - நிச்சயம் ஏதாவது பிறவிக் கோளாறு தான் இருக்க வேண்டும். எங்கே, எப்படி தவறு நிகழ்கிறது என்று தெரியாத வரை, புல்லுருவிகளும் கூட தங்களை ஆலம் விழுதுகளாய் கருதிக் கொள்ளும் என்பதில் சிறிதும் ஐயமில்லை நண்பரே :(

   Delete
  5. //அப்பரம்... அந்தக் கதைப்படி ரான்ராடில் எல்லா சிறார்களும் தேர்ச்சிபெறவில்லை//

   உண்மைதான் ரமேஷ்.. ஆனால் நம்மவர்கள், உதாரணத்திற்கு ரான் - ராட் என்றால் என்னவென்பதே தெரியாமல், பிறந்து, ஜனித்து, பின் மரித்தே விடுகிறார்கள் என்பதே என் ஆதங்கம் ! யாரோ ஒரு அறிவு ஜீவி கூறியதைப் போல், ''தெரியாமல் இருப்பது தவறே இல்லை, ஆனால் தெரிந்து கொள்ளக் கூட முயற்சிக்காமல் இருப்பதே மாபெரும் குற்றம்'' என்பதே என் ஆதங்கம் ! நீங்கள் கூறியது போல் பந்தயத்தில் கலந்து கொண்ட அனைத்து சிறுவர்களும் தேர்ச்சிப் பெறவில்லை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, ஆனால் இங்கு, பந்தயம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருப்பதில் தான் வாழ்வின் சூட்சமம் அடங்கி இருக்கிறதா என்ன ?!

   Delete
  6. //பொருந்தாத வயதில் உள்ள சிறார்களை டுபாக்கூர் ரக விமானங்களின் விமானி-பலிகடாவாக பயன்படுத்தும் சூழ்நிலை, போலியான ஊக்குவிப்பு, பிற்பாடு உள்ளுக்குள்ளே அதிருப்தி போன்ற விஷங்கள் இல்லாமலில்லை//

   உண்மை தான்.. ஆனால் அந்தச் சிறிய வயதிலயே அவர்களுக்குள்ளே கொழுந்து விட்டு எரியும் யுத்த எரிமலையை தூண்டி விட்ட ஹிட்லர், உணமையாகவே அசாதாரணமான மானிட பிறவி என்பதில் தங்களுக்கு ஏதும் ஐயம் இருக்கிறதா ரமேஷ் :))

   Delete
  7. //இதில் நாயை விடக் கேவலமான செயலை செய்தவர்கள், மெத்தப் படித்தவர்கள் என்ற தராதரம் கொண்டவர்கள் தானே ?! எனவே இங்கு //மொத்த சமூகத்தின் கல்வியறிவு + தொழிலறிவு// என்பது அர்த்தமற்றுப் போகிறது என்பது என் கருத்து. அப்படியெனில் தங்களின் கருத்து என்னவென்று நீங்கள் தான் கூற வேண்டும் :) //

   வளர்ந்த (எனக்கருதப்படும்) நாடுகளிலும் இந்த இம்சைகள் உண்டு. நான் குறிப்பிட வந்தது என்னவென்றால் தனக்கு ஆத்மார்த்தமாகப் பிடித்த தொழில் இதுதான் என்பதை 20 வயதுக்குள்ளாக கண்டுகொள்ளும் அமைப்பு, கல்விக்கான கட்டணத்தை தானாகவே சம்பாதிப்பது, வேண்டிய உணவை தானே தயாரித்துக்கொள்வது போன்ற திறன் சார்ந்த விஷயங்களில் நாம் இன்னும் உறுப்படியான உயரத்தை தொடவில்லை. (அதையாவது வளர்த்துக் கொண்டபின் முத்தப்போராட்டம் பண்ணினால் பண்ணிக்கொண்டு போகட்டும்... ha ha)


   // உண்மை தான்.. ஆனால் அந்தச் சிறிய வயதிலயே அவர்களுக்குள்ளே கொழுந்து விட்டு எரியும் யுத்த எரிமலையை தூண்டி விட்ட ஹிட்லர், உணமையாகவே அசாதாரணமான மானிட பிறவி என்பதில் தங்களுக்கு ஏதும் ஐயம் இருக்கிறதா ரமேஷ் :)) //

   ஹிட்லரும் நீங்கள் குறிப்பிட்ட கீழ்க்கண்ட வகையறா ஆசாமிதான். தூண்டி விட்டார் உண்மை! தனது தோல்வி பற்றிய இயல்பான சாத்தியங்களை ஏற்க இயலாத மனோபாவம்தான் ஹிட்லர் மாதிரி ஆசாமிகளின் அசாதாரணமான குணமாகக் கருதமுடியும்.

   // ''தெரியாமல் இருப்பது தவறே இல்லை, ஆனால் தெரிந்து கொள்ளக் கூட முயற்சிக்காமல் இருப்பதே மாபெரும் குற்றம்'' //

   Delete
  8. Ramesh Kumar : //தனது தோல்வி பற்றிய இயல்பான சாத்தியங்களை ஏற்க இயலாத மனோபாவம்தான் ஹிட்லர் மாதிரி ஆசாமிகளின் அசாதாரணமான குணமாகக் கருதமுடியும்//

   ஹிட்லர் கொடுங்கோலன் என்பதால் நீங்கள் சொல்வது சரியானது போல் தோன்றினாலும், அதன் பின்னணியில் நிறைய திடச் சித்தங்களின் சித்தாந்தங்களைப் பட்டியலிடலாம். ஹிட்லரின் தற்கொலையின் மூலம், அவனின் தைரியமும், தீர்க்கத் தரிசனமும் தான் தெரிகிறது. தோல்வி நிச்சயிக்கப்பட்ட ஒரு நிலையில், சர்வாதிகாரியின் இறுதி முடிவு அதுவாகத் தான் இருக்க வேண்டும் - இல்லாவிட்டால், இரண்டு வருடம் பதுங்குக் குழியில் உயிர் வாழ்ந்து, நொடி தோறும் மனம் புழங்கி, உணவின்றி, நீரின்றி, நித்திரையின்றி முடிவில் பிச்சைக்காரத் தோற்றத்துடன் எதிரிகளிடம் சிக்குண்டு, தூக்கில் தொங்கிய சதாம் உசேன் கதி தான், ஹிட்லருக்கும் ஏற்பட்டிருக்கும். தற்கொலை கோழைத் தனம் என்று பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அதற்கு தான் மிகுந்த துணிச்சல் வேண்டும் என்பது என் கருத்து !

   Delete
  9. @மிஸ்டர் மரமண்டை,

   கொடுங்கோலன், திடசித்தம், வீரம் என்ற பார்வைக்கு நான் வரவில்லை - அது ஹிட்லருக்கு உண்டு / இல்லை என நான் சொல்லவரவில்லை (we never know). மாறாக போர் என்பதை தனது மக்களின் நலத்துக்கான ஒரு Strategy'ஆக செய்யாமல் தன்னுடைய அல்ப நம்பிக்கைகள் மற்றும் பின்வாங்கும் பக்குவமில்லாத Gambler Strategy நடத்திய வழியில் சென்றதாகவே என்னால் பார்க்கமுடிகிறது (based on my own readings).

   Delete
  10. //மாறாக போர் என்பதை தனது மக்களின் நலத்துக்கான ஒரு Strategy'ஆக செய்யாமல் தன்னுடைய அல்ப நம்பிக்கைகள் மற்றும் பின்வாங்கும் பக்குவமில்லாத Gambler Strategy நடத்திய வழியில் சென்றதாகவே என்னால் பார்க்க முடிகிறது//

   உண்மைதான் ரமேஷ்.. போர் என்பதே தன் அதிகாரத்தை நிலைநாட்டவும், நாட்டின் எல்லைகளை விஸ்தாரமாக்கி, தன்னை சக்ரவர்த்தியாக பிரகடனம் செய்யவும் தானே நடத்தப் படுகிறது. அதில் பின் வாங்கும் போது தன் இயலாமையை தானே ஒப்புக் கொண்டு, தோல்வி முகம் கொள்வதாக அல்லவா அர்த்தம் ஆகி விடும். மக்களின் நலத்துக்காக தான் போர் செய்தோம் என்று யாருமே கூறுவதில்லை ! மாவீரன் அலெக்ஸாண்டர் கூட இதற்கு விதி விலக்கல்ல !

   Delete
 5. வானமே எங்கள
  பதிவுக்கு நன்றி. தொடர்ச்சியாக பதிவிட கொஞ்சம் முயற்சி செய்யுங்கள் நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. Dr.Sundar,Salem. :

   தங்களின் பேராதரவு தரும் உற்சாகத்தில், நிச்சயம் முயற்சிக்கிறேன் நண்பரே !

   Delete
 6. தமிழ்க் கலைஞ ரின் தனித்தளத்திற்கு வருகை தருவதில் பேருவகை யும் ,பெருமிதமும் கொள்கின்றேன் ..
  நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கடிந்துரைத்த நக்கீரப்பெருமான் நற்றமிழ் உங்கள் தமிழ்..
  அசையாத தன்னம்பிக்கை,ஆழ்ந்த சிந்தனை..எத்தனை பேர் எதிர்த்தாலும் கொண்ட கொள்கையில் மாறாத
  உறுதி ,பதில் சொல்வதிலும் ஒரு கண்ணியம் நகைச்சவை ததும்பும் கருத்துக்கள்.. வாழ்க வாழ்க

  ReplyDelete
  Replies
  1. VETTUKILI VEERAIYAN :

   தங்களின் புகழுரை அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் தகுதி எனக்கில்லை என்றாலும், தங்களை என் நண்பராக தந்தக் கடவுளுக்கு தான் நான் என் நன்றிகளை சொல்ல வேண்டும். இப்படியும் கூட ஒருவரால், இக்காலத்தில் இன்னொருவரை மனதாரப் பாராட்ட முடியுமா என்று வியக்க வைத்து விட்டீர்கள் நண்பரே..!

   இந்தத் தளத்தில் தங்களின் முதல் பதிவிற்கும், நல்வருகைக்கும் மிக்க நன்றி.. வாழ்க வளமுடன்..!

   Delete
 7. +1(for entire post)

  :) good to see your post friend !

  //ஏன் அடால்ப் ஹிட்லரால் உலகம் முழுவதையும் வெற்றிக் கொள்ள முடியவில்லை ? //

  Germans would have won the war thumping they had capacity(technically and in-terms of resources ) its small mistakes crumbled them( we know god lives in small things ;) )

  //முத்தாய்ப்பாக கூறுவதென்றால் ஹிட்லரின் இளைஞர் அணி பட்டாளத்தைக் கூறலாம்... சத்தியமாகக் கூறுகிறேன், இளைஞர் என்ற சொற்பதத்தின் பொருள் இன்றுவரை நம் சமூகத்திற்கு தெரியாது. அதனால் தான் காசி இராமேஸ்வரம் போகும் 60+ வயதில் இளைஞர் அணி தலைவராக ஒருவர் காலத்தை ஓட்ட முடிகிறது ; 65 வயதில் 20 வயது பெண்ணுடன் ஒருவர் சினிமாவில் டூயட் பாட முடிகிறது ; 40+ வயதில் ஒருவர் கல்லூரி முதல் வருடப் படிப்பில் காதலிக்க முடிகிறது. //

  :D

  ;)


  ReplyDelete
  Replies
  1. Satishkumar S : //its small mistakes crumbled them( we know god lives in small things ;)//

   அந்தச் சின்னச் சின்னத் தவறுகள் என்னவென்று அறிந்து கொள்ளும் ஆவலால் தான் நண்பரே .. .. .. :))

   Delete
  2. //அந்தச் சின்னச் சின்னத் தவறுகள் என்னவென்று அறிந்து கொள்ளும் ஆவலால் தான் நண்பரே .. .. .. :))//

   when WAR was warming up German was bombarding Briton, remember Germans were high in technology and equipped with quality resources. in early stage of war(so called German's war on Europe) they were all-way's upper hand.

   Britannica literally finding tube holes to hide from Germans. but unfortunately(! for Germans fortunately for entire Europe, rest of world for peace) Germans decide to turned towards Russia. where Russia paid heavy price to stopped Germans(bloody, yup after 2 million soviet army casualty, 40,000 Soviet civilian casualty, 400,000 Germans, 200,000 Romanians, 130,000 Italians, and 120,000 Hungarians given their lives as part of bloody battle, but so called German's Russia march stopped successfully by Russia) from crossing Stalingrad.

   small thing: winter season played key roll in German defeat they were not prepared for harsh Russian winter, German soldiers out of resources and amenity (tired too ) because they are straight from European battle.

   Stalingrad: a small town, its like THE POINT were entire war's fate decided, by referring the strength session in wikipedia, any one can understand the importance of this five and half month battle.

   there are so many reason's but its small decision from German to turn towards Russia decided fate of world. its just my personal view.
   there are many movies, books and poems marks the event.


   References :

   http://en.wikipedia.org/wiki/Battle_of_Stalingrad
   http://www.forbes.com/sites/quora/2012/09/04/what-were-the-biggest-strategic-mistakes-the-germans-made-during-world-war-ii/
   http://bevinalexander.com/books/hitler-world-war-ii.htm
   http://io9.com/the-8-worst-mistakes-made-by-the-axis-during-world-war-1514922468

   Delete
  3. pardon for my spell check friends not in right mind to type, just blabbered the points!

   Delete
  4. Satishkumar S : நன்றி மிஸ்டர் சதீஷ் !

   என்றோ ஒரு முறை கோயில் ஒலிப்பெருக்கியில் கேட்டப் பிரசங்கம் ஞாபகத்தில் வருகிறது.. நான் சிங்கம், சுண்டெலியை அடித்துச் சாப்பிட்டால் என் பசி அடங்காது, யானையை அடித்துச் சாப்பிட்டால் தான் என் பசி அடங்கும் என்று கூறிய ஹிட்லர், இங்கிலாந்தை விடுத்து, ரஷ்யா மீது போர் தொடுத்ததே அவன் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்ததாம். ஒருவேளை, அவன் இங்கிலாந்து மீது போரிட்டு அதை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்திருந்தால், அதன் காலனி நாடுகள் அனைத்துமே ஜெர்மனியின் கீழ் வந்திருக்கும். அதன் பிறகு உலகை வெற்றிக் கொளவதில் அவன் தோல்வியை சந்தித்திருக்க வாய்ப்பே இல்லாமல் போயிருந்திருக்குமாம் !

   இங்கே விதி அவன் மதியை ஆட்கொண்டதால், தோல்வி நிர்ணயிக்கப் பட்ட ஒன்றாக மாறிவிட்டது !

   Delete
 8. //ஏன் அடால்ப் ஹிட்லரால் உலகம் முழுவதையும் வெற்றிக் கொள்ள முடியவில்லை ? //

  அதிர்ச்சியூட்டும் தகவல்கள் .....

  1.ஹிட்லர் தனது சிறு வயது முதல் பாதுகாத்து வந்த "அதிர்ஷ்டம் தரும் தலைவாரும் சீப்பை " அப்போதைய பிரிட்டிஷ் உளவாளி 001/2 திருடிவிட்டதுதான் battle of Britain -ல் ஹிட்லர் தோற்றதன் காரணம் ...

  2.எவ்வளவு சொல்லியும் ருஷ்யா -வுக்கு அனுப்பிய டாங்குகள் ,போர் விமானங்கள் ஆகியவற்றில் மந்திரித்த திருஷ்டி எலுமிச்சை பழங்களை ஹிட்லர் கட்ட மறுத்தது ..

  3.உடன் இருந்த ஈவா ப்ரானுக்கு "செவ்வாய் தோஷம் "இருந்தது .

  4.சிறு வயதில் சர்ச் -க்கும் நேர்ந்து கொண்ட "மீசை நேர்த்தி கடன் " பற்றி நினையாமல் முழுமீசையை எடுக்காது பாதி மீசை வைத்து திரிந்தது ...

  5.great dictator படத்தை திருட்டு 35mm -ல் பார்த்த ரஷ்ய வீரர்கள் ,பிரிட்டிஷ் வீர்ர்களுக்கு அவர் மேல் இருந்த பயம் படத்தை பார்த்து சிரித்தமையால் போய்விட்டது ...

  ஆதாரம் ....

  poisollumvoikkupojanam@greatlies.com

  ReplyDelete
  Replies
  1. Great dictator., ஹிட்லர் ரொம்ப ரசிச்சி திரும்ப திரும்ப பார்த்த படம்.,என்று சாப்ளின் Biographyயில் படித்த ஞாபகம்.
   @Selvam. Abirami,
   சீரிஸ்ஸா ஒரு டிஸ்கஸன் போயிண்டிருக்கறச்சே, இப்படியா இடையில நுழைஞ்சு கலாய்ப்பேள்.!
   நேக்கு பத்திண்டு வர்ரது கேட்டேளா.!
   பெருமாளே.! படிக்கறச்சே கண்ணே கூசிடுத்து போங்கோ.! :):):-)

   Delete
  2. // ஈவா ப்ரானுக்கு "செவ்வாய் தோஷம்" //

   லிப் ஸ்டிக் ஓவராகப் போட்டால் அப்படிதான் ஆகும்...

   Delete
  3. selvam abirami : //ஆதாரம்.. poisollumvoikkupojanam@greatlies.com//

   பொய் சொல்லும் வாய்க்கு போஜனம் கிடைத்ததா என்று தேடிப்பார்க்க, Google செய்தால், Your search poisollumvoikkupojanam@greatlies.com - did not match any documents என்று வருகிறது நண்பரே :( ஆதாரம் சேதாரம் ஆகிவிட்டதோ என்ற சஞ்சலத்தில் 'கல்யாண் - பிரபு'வைக் கேட்டால் அவர் ''என்னக் கொடுமை சரவணன்..?!'' என்று கூறி கொண்டே மூர்ச்சையாகி விட்டார் :(

   காமிக்ஸ் வாசகனாகிய எனக்குத் தெரிந்த வரை, ஹிட்லர் கொலை வெறியோடு நாசவேலையில் ஈடுபட சாதாரண பிரஜைகளை தன் போக்கில் தூண்டி விடுவதில் சுலபமாக வெற்றி கண்டான். இத்தனையும் அவனுக்கு சாத்தியமானதற்குக் காரணம் - எக்ஸ்காலிபர் ! அதன் மகிமை புரிந்த எவரும் நிற்க முடியாத மாபெரும் சக்தியை உருவாக்க முடியும் !

   ஆதாரம்.. பேழையில் ஒரு வாள் !

   Delete
  4. கிட் ஆர்ட்டின் KANNAN :

   நீங்க கண்டுக்காதீங்க சார்.. அவா எப்போமே அப்படிதான்... தயவு செய்து நீங்க அம்பியா மட்டுமே இருங்கோ.. ப்ளீஸ்..!

   Delete
  5. Ramesh Kumar : //லிப் ஸ்டிக் ஓவராகப் போட்டால் அப்படிதான் ஆகும்...//

   லிப் ஸ்டிக் - சிகப்பில் மட்டுமே வருவதில்லையே ரமேஷ்.. டேபிள் மேட் போன்று, பல வண்ணங்களில் அல்லவா வருகிறது ?!

   Delete
  6. // லிப் ஸ்டிக் - சிகப்பில் மட்டுமே வருவதில்லையே ரமேஷ்.. டேபிள் மேட் போன்று, பல வண்ணங்களில் அல்லவா வருகிறது ?! //

   ம்..கரெக்ட்தான். அப்போ..பொதுவா எல்லாத்துக்கும் பொருந்தர மாதிரி "வாய்தோஷம்"னே பேர் வச்சிருந்திருக்கலாம்! முன்னோர்கள் தப்பு! :P

   Delete
  7. Ramesh Kumar : //அப்போ..பொதுவா எல்லாத்துக்கும் பொருந்தர மாதிரி "வாய்தோஷம்"னே பேர் வச்சிருந்திருக்கலாம்! முன்னோர்கள் தப்பு! :P//

   இது போன்ற குழப்பங்கள் எதிர்காலத்தில் வரலாம் என்று தான் நம் முன்னோர்கள், அதற்கு இன்னொரு பெயரையும் வைத்திருக்கிறார்கள்.. மாங்கல்ய தோஷம் ! :D

   Delete
  8. // அதற்கு இன்னொரு பெயரையும் வைத்திருக்கிறார்கள்.. மாங்கல்ய தோஷம் ! :D //

   ஹா ஹா, ஆமாம்! இதுதான் சரி. முதல்லேருந்து வருவோம்:

   உடன் இருந்த ஈவா ப்ரானுக்கு "மாங்கல்ய தோஷம்" இருந்தது.

   Delete
  9. //ஹா ஹா, ஆமாம்! இதுதான் சரி. முதல்லேருந்து வருவோம். உடன் இருந்த ஈவா ப்ரானுக்கு "மாங்கல்ய தோஷம்" இருந்தது//

   ஹா.. இந்த விளையாட்டுக்கு நான் வல்ல்ல... ஓவர் டு செல்வம் அபிராமி, the historian ;))

   Delete
 9. //ஹிட்லரின் தற்கொலையின் மூலம், அவனின் தைரியமும், தீர்க்கத் தரிசனமும் தான் தெரிகிறது//

  அப்படி உறுதியாக சொல்லி விட முடியாது ...Mr .M ...ஹிட்லர் ,ஈவா ப்ரான் இருவரும் battle of Berlin இறுதி நாட்களில் இறந்தது உண்மைதானா என்பது பற்றி சில சந்தேகங்கள் உண்டு ..
  அதுபற்றிய ஒரு நாவல்தான் இர்விங் வாலஸ் எழுதிய" the seventh secret " .எனது கல்லூரி நாட்களின் ஆரம்பத்தில் படித்த இந்த நாவல் அப்போது ஆர்வத்தை தூண்டுவதாகவே இருந்தது .

  இதன் plot summary -யை லேசாக எட்டி பாருங்களேன் ...
  கீழே அதன் லிங்க் .....

  ReplyDelete
  Replies
  1. http://en.m.wikipedia.org/wiki/The_Seventh_Secret

   ஹிட்லர் ,ஈவா ப்ரான் உடல்கள் எரிக்க பட்டுவிட்டபடியால் (ஹிட்லர் ஆணைப்படி )பல யூகங்களை அது ஏற்படுத்தி விட்டது ....

   Delete
  2. //இருவரும் battle of Berlin இறுதி நாட்களில் இறந்தது உண்மைதானா என்பது பற்றி சில சந்தேகங்கள் உண்டு//

   இதெல்லாம் சுவாரசியத்திற்காக எழுதப்படும் விஷயங்கள், சில சமயம் வணிக ரீதியாகவும், சில சமயம் அரசியல் காரணங்களுக்காகவும் எழுதப்பட்டு, விவாதத்திற்கு உரியப் பொருளாக காலம் தோறும் மாறிவிடுகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் - பிரபாகன் மரித்து விடவில்லை, அவன் இன்னமும் உயிரோடு தான் இருக்கிறான் - வைகோ ! பழைய உதாரணம் - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் !

   Delete
  3. நீங்கள் சொல்வதிலும் நிறைய உண்மை இருக்கிறது .....!!!!!

   Delete