Follow by Email

Wednesday, 24 December 2014

வல்லவர்கள் வீழ்வதில்லை..!

நண்பர்களே,

வணக்கம். நமக்குச் சில விஷயங்கள் பிடிக்கும் போது அதை வழக்கமாக ஏற்படுத்திக் கொள்கிறோம் ; வழக்கம் தொடர்ந்து நடைபெறும் பட்சத்தில் அதுவே பழக்கமாகிறது ; பழக்கம் அதிகமாக, அதிகமாக அது நம்மை பழக்கத்திற்கு அடிமைப் படுத்துகிறது. அந்நிலையில் நம் வாழ்கையின் சிறந்த காரணி அதுவென்றோ, அது இல்லாவிட்டால் வாழ்க்கையே சூன்யம் என்றோ அதன் வழி தொடர்ந்து கவலைப்படுகிறோம். சில காலங்களில், சில காரணிகளின் பிடிப்பின்றி தம் வாழ்வே இல்லை எனும் நிலையைக் கூட எடுத்து விடுகிறோம் ; மாற்றுக் கருத்துக்கு அங்கே இடமே இல்லாமல் மதிமயங்கி புத்தி பேதலிக்கிறோம். ஆனால், ஏதோ ஒரு காரணத்தினால் காலம் இடைவெளியை ஏற்படுத்தும் போது, அதுவரை உயிரை, அனுதினமும் மாய்த்து வந்த காரணி கேலிக்குரியதாகி விடும் ; நம்மை நினைத்து நாமே நகைக்கும் அளவிற்கு கேலிப்போருளாகி  விடும் ! அதற்கு நம்மிடையே சமீபத்திய மிகச் சிறிய உதாரணமாக திகழ்வது தான் நித்தமும் காமிக்ஸ் கமெண்டு போடுவது. காமிக்ஸ் கமெண்ட் போடாவிட்டால் தூக்கம் இல்லை ; காமிக்ஸ் கமெண்ட் படிக்காவிட்டால் நிம்மதி இல்லை என்ற நிலைமை - கொஞ்ச நாள் ஒதுங்கி இருந்தால், இவ்வகை எண்ணங்கள் இருந்த இடம் தெரியாமல் காற்றில் கரைந்த கற்பூரமாக மட்டுமே மணம் வீசி ஒரு ஓரமாக நின்று, பிறகு சென்றே விடுகிறது ! 

தான் செய்யும் வினையிலிருந்து யாருமே தப்புவதில்லை ; நற்செயலாக இருந்தாலும், தீச்செயலாக இருந்தாலும் அதன் பலன்கள் ஒவ்வொருவருக்கும் உடனக்குடன் நடந்தே வருகிறது. ஆனால் தான் செய்த செயலுக்கான பலன் தான் இதுவென்று பகுத்தறிய தெரியாத காரணத்தால் தான் ஒரு மனிதன், மீண்டும், மீண்டும் அதே தவறை தொடர்ந்து செய்கிறான். துவேஷம் கொண்டு இன்னொருவரை  தூஷிப்பதால்,  அதன் துர்ப்பலன் பத்து மடங்கு அதிகமாக தன்னையும், தன் சிறிய குடும்பத்தையும் தாக்குவதை அவன் உணரும் வேலையில், மீண்டும் ஒரு முறை அது போன்ற வக்கிரம் அவன் மனதில் வரவே வராது என்பது சத்தியம் ! அதுவரை தன் நிலைக்கெட்டு, தரம்தாழ்ந்து அடுத்தவரை சாடுவதில் சிற்றின்பம் கொள்கிறான் !

சமீபத்தில் என்னை சிந்திக்க வைத்த ஒரு விஷயம் ரொம்பவே சுவாரசியமானது..
''டெக்ஸ்வில்லர் காமிக்ஸில் கதை இருந்தால் என்னால் ரசிக்க முடியவில்லை'', ஏனெனில்
//"உண்மையிலயே நான் இன்னும் வளர வில்லை"//  என்று     

தலைவர்    தாரை தப்பட்டை அவர்கள் கூறி இருக்கிறார். உடனே அதற்கு பதிலளித்து,

சாந்த சொரூபியான மதுரை அரவிந்தர்   அவர்கள் இவ்வாறு  கூறுகிறார் :-

//ஆமாம், நானும் இன்னும் வளரவே இல்லை..
கிராபிக் நாவல் எனக்கு நன்றாக புரிகிறது.
அது உண்மையா? அல்லது தவறான புரிதலா? என்று தெரியவில்லை.
இல்லை புரிந்த மாதிரி நடிக்கிறேனா என்பதும் தெரியவில்லை.//

என்ன கொடுமை கார்சன் இது..? இதையெல்லாம் டெக்ஸ் வில்லர், தன்னுடைய  குதிரையில் வந்தா துப்பறிய முடியும்..?! இன்னும் வளரவே வளராத சின்னப் பையன்களின் கூட்டத்திலேயா நாம் குப்பைக் கொட்டுகிறோம் என்று நினைக்கும் போது, காமிக்ஸ் வாசிப்பு என்பது சற்று நெருக்கத்தை இழப்பதாகத் தோன்றுகிறது. ஹ்ம்ம்.. காமிக்ஸ் என்பது நம் ஊரில், இன்னும் கூட சின்னப் பிள்ளைகள் சமாச்சாரம் தான் போலிருக்கிறது :( (இவையனைத்தும் ஜாலியான கருத்துகள் மட்டுமே)  


வல்லவர்கள் வீழ்வதில்லை..! கதை விமர்சனம் :)

அனுப்புநர் :-

Addiction வில்லர் க்ரூப்,
செத்தாண்டா சேகரு உள் அரங்கம் (AC),
தென்சென்னை.


பெறுநர் :-

டெக்ஸ் வில்லர் ரசிகர் மன்றம்,
மொபைல் கலாய்த்தல் பிரிவு, 
NH 47.

உடன்பிறப்பே,

நானும் ஒரு தீவிர டெக்ஸ் ரசிகன் தான் என்பது நீயும் அறியாததல்லவே ! ஒவ்வொரு கதையிலும் தவறாமல் காணக் கிடைக்கும் பாலை நிலமும், பாழுங் கணவாயும் ; கொத்திவிடும் விரியனும், சுட்டுவிடும் விரோதியும் - என்னை கதி கலங்க செய்பவை.. போலவே, தாக சாந்திக்கு ராவான விஸ்கியும், சைட் டிஷ்ஷிற்கு பக்குவமான வறுத்த கறியும், வேகவைத்த ஆப்பிளும், வேகமாய் இழுத்து விடும் ஸ்மோக்கிங்கும் என்னை மதி மயங்க செய்பவை என்பதில் உனக்கேதும் மாற்றுக் கருத்து இருக்கிறதா என்ன.., என் உடன்பிறப்பே ?!

வல்லவர்கள் வீழ்வதில்லை கதையை நானும் படித்தேன், அற்புதமான கதைக் களம் ; அருமையான கதை ; சுவாரசியமான நடை என உன்னைப் போலவே நானும் இரண்டு நாட்கள் புளகாங்கிதம் அடைந்தேன். நாலு இட்லி ஒரு வடைக்கு, திருடப்பட்ட கதையில் கல்லா கட்டிய லாடு லபக்குதாஸின் சுத்தி  படம் போலவே, தோராயமாக, நானூறு டாலருக்கு வாங்கிய கேப்டன் டைகரின், மின்னும் மரணம் கதையின் உட்டாலக்கடி கதையே இதுவென்று எதிர் அணியினர், பசப்பும் தம் வார்த்தைகளை, விஷம் தோய்த்த செவ்விந்திய அம்பாய் உன்னை நோக்கி எய்துவார்கள், தயவு செய்து உன் தலை கொடுத்து, என் ''தல''யை இழந்து விடாதே உடன்பிறப்பே..!

சரி, கதைக்கு வருவோம்.. அமெரிக்க அரசாங்கத்தின் நீதி பரிபாலனம் தனக்கு ஒத்து வரவில்லை என்ற காரணத்தால் கையில் ஒத்தை டாலரோடு, மெக்ஸிகோ' வில் நாடோடியாக ஒதுங்கும் டெக்ஸ் வில்லர், தம்முடைய பாச்சாதாபத்தைச் சம்பாதிக்கப் படாத பாடு படுகிறார். தெரியாமல் தான் நான் கேட்கிறேன், அமெரிக்காவின் நீதி பரிபாலனமே இவருக்காக மாற்றி அமைக்க வேண்டும் என்று இவர் எதிர்பார்க்கும் அளவிற்கு இவர் என்ன.. அவ்வளவுப் பெரிய அப்பாடக்கரா..?!  ஒருக்கால் ஜனாதிபதி தேர்தலுக்குப் போட்டியிட்டாரா? அல்லது செனட்டராகத் தான் பதவி வகித்தாரா? உடன்பிறப்பே, இதையெல்லாம் நீ கவனிக்க மாட்டாயா..? உண்மைதான் உனக்கெங்கே நேரம் இருக்கப் போகிறது? ஒரு ப்ளேட் மட்டன் பிரியாணிக்கும், இரண்டு ப்ளேட் அவிச்ச முட்டைக்கும் அடங்கிப் போகும் ஆத்மா தானே நீ..? (தயவு செய்து மற்ற நண்பர்கள் அனைவரும் என்னை மன்னிக்கவும்) 

சரி, அது தான் போகட்டும் என்று பார்த்தால், கதையின் நாயகன் ஷான் ஓ டான்னெல் தான் என்று, காமிக்ஸ் வாசகர்கள் எங்கும் பரவலாகப் பேசிக் கொள்கிறார்களே? அதாவது உனக்குத் தெரியுமா? தேசப்பக்தியிலும், தோழமையிலும், வீரத்திலும், அர்ப்பணிப்பிலும், தியாகத்திலும், நட்பிலும் - ஷான் கதையெங்கும் ஓடும் இரத்தநாளங்களாய்  வியாபித்து, காமிக்ஸ் வாசகர்கள் மனமெங்கும் நிறைந்து விட்டதை நீ அறிந்தால், இது ஒரு டெக்ஸ் வில்லர் கதையென்றே கூற மாட்டாய் :P 

பத்து வருடத்துக்கு முந்தைய ஒரு பழைய கடிதத்தின் தேதியை திருத்தியும், உள்ளூர் போலீஸுக்கு பயந்து, போக்குக் காட்டியும் 10, 20 பக்கங்களைக் கபளீகரம் செய்யும் ஹீரோயிஸத்தையா   உன்  பாசத் தலைவனிடம் எதிர்பார்த்தாய்? ஐயகோ.. நகைப்புக்கு இடமளித்து விட்டாரே உன் Super star..? 

கதையின் ஒரு கட்டம் ரொம்பவே என்னைப் பாதித்தது உடன்பிறப்பே..  ''உன் மென்னியை முறிக்க நான் வெறிகொண்டு அலைந்த காலம் ஒன்று உண்டு! ரேஞ்சர்! அது மெய்ப்படாமல் போனது நான் செய்த புண்ணியம்'' என்று  - க்ரேடி கூறிய அடுத்த நொடியில் அவனைப் பலிக் கொடுத்து விட்டு வேடிக்கைப் பார்க்கும் உன் தானைத் தலைவனை எவ்வளவு திட்டினாலும் தகும் என்று நீயும் தானே நினைக்கிறாய்..? வெட்டிப் பேச்சு வேலைக்கு ஆகாது.. ஓவர் ஷோ ஒடம்புக்கு ஆகாது.. என்று, யாராவது டெக்ஸ் வில்லரிடம் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம் !

டைகர் கதைக் களத்தில் நுழைந்ததும் அல்லாமல், இரண்டு கதாநாயகர்கள் ரோலில், இரண்டாம் நாயகனாக நடித்ததும் அல்லாமல், கடைசி 73 பக்கங்கள் முழுவதும் டுமீல் ! டுமீல் ! டுமீல் ! டுமீல் ! டுமீல் ! டுமீல் ! டுமீல் ! டுமீல் ! டுமீல் ! டுமீல் ! டுமீல் ! டுமீல் ! என்று ஒரே தலைவலி ! துப்பாக்கிச் சத்தத்தில், இரண்டு நாட்கள் காது இரண்டும் சரியாக கேட்கவே இல்லை என்றால் நீயே பார்த்துக் கொள் என் உடன்பிறப்பே...

ஹ்ம்ம்.. என்ன  சொல்லி என்ன பயன்? உனக்குப் புரியவா போகிறது? வறுத்த கறி சாப்பிடச் சொன்னால் வாண்டடாக வண்டியில் ஏறி வடதிசை நோக்கிப் பயணிக்கும் நீ, தென்திசையில் நடந்தேறிய இந்தக் கூத்துக்கு செவி சாய்க்கவா போகிறாய்? எல்லாவற்றையும் ஜீரணிக்கும் உன்னால் இதுபோன்ற கடுமையான விவாதங்களை ஜீரணிக்க முடியாது என்று எனக்கும் தெரியும். நான் உன்  நலனுக்காகத் தான் சொல்கிறேன், இனியும் அந்த டைகர் பயலைக் கனவிலும் கலாய்க்க நினைக்காதே... மின்னும் மரணம்  என்ற மகா காவியம் விரைவில் வரப்போகிறதாம் என் உடன்பிறப்பே.. என்ன செய்யப் போகிறாய்? ஒன்று செய்,  பேசாமல் நாலைந்து மாதம் எங்காவது சென்று மறைந்து கொள், முக்கியமாக 1200+ மெம்பர்ஸ் உள்ள Facebook க்ரூப் ல் பெரிய அப்பாடக்கர் போன்று கமெண்டு போடாதே ; WhatsApp க்ரூப் ல் எதையாவது படித்து விட்டு வெளியில் போய் நக்கல் செய்யாதே ! ஏதோ நீயும், நானும் டெக்ஸ் ரசிகன் என்ற தோழமையில் உரிமை கொண்டு இந்தக் கதை விமர்சனத்தை எழுதி விட்டேன். டெக்ஸ் வில்லர் என்றாலே இரணகளம் தான் என்பதில் இனியும் நீ மாற்றுக் கருத்து கொள்ளப் போகிறாயா என்ன ? :))

பின்குறிப்பு : நண்பர்களே,  இது ஒரு ஜாலியான கலாய்த்தல் பதிவு மட்டுமே.. தயவு செய்து யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாமே.. ப்ளீஸ்..! விமர்சனம் செய்ய வேண்டும் என்றால் இரண்டு நாட்களுக்குள் செய்து விடுங்கள்.. பதிலளிக்க தயாராக இருக்கிறேன்.. பிறகு வந்து, பூட்டிய வீட்டிற்கு முன் சத்தம் எழுப்பினால் பயன் இருக்காது நண்பர்களே ! நன்றி ! நன்றி !

15 comments:

 1. அடடே! ஆச்சர்யகுறி.

  மற்றபடி பதிவின் உள்ளடக்கம் + சாராம்சம் ரெண்டுமே புரியலை.

  ReplyDelete
  Replies
  1. // மற்றபடி பதிவின் உள்ளடக்கம் + சாராம்சம் ரெண்டுமே புரியலை. //

   காரணம் இது தங்களுக்கான கடிதமல்ல... மிஸ்டர் மரமண்டை இம்முறை கீழ்க்கண்ட அனுப்புநர் / பெறுநர் போட்டு எழுதியுள்ளார்...

   //
   அனுப்புநர் :-

   Addiction வில்லர் க்ரூப்,
   செத்தாண்டா சேகரு உள் அரங்கம் (AC),
   தென்சென்னை.


   பெறுநர் :-

   டெக்ஸ் வில்லர் ரசிகர் மன்றம்,
   மொபைல் கலாய்த்தல் பிரிவு,
   NH 47.

   //

   Delete
  2. King Viswa : //மற்றபடி பதிவின் உள்ளடக்கம் + சாராம்சம் ரெண்டுமே புரியலை//

   பெரிய விஷயம் என்று எதுவும் இல்லை நண்பரே, எல்லாமே அன்றாட நிகழ்வுகள் தான்.. கொஞ்சம் யோசித்தால் கூட போதுமானது :))

   Delete
 2. தலைவர் தாரை தப்பட்டை #

  நன்றி .......

  நான் வளர்ந்து விட்டேனோ ....இல்லையோ ....எனக்கு தெரிய வில்லை .....

  ஆனால் நீங்கள் வளரவே இல்லை சார் ....

  ReplyDelete
  Replies
  1. Paranitharan K :

   தவறாக புரிந்து கொண்டு விட்டீர்கள் நண்பரே.. தாரை தப்பட்டை என்பது, இயக்குனர் பாலா இயக்கும் புதியப் படம். தாராமங்கலம் என்பதற்கு தாரை என்றும் குறிப்பிடப் படுவதால் அவ்வாறு எழுதி உள்ளேன் :))

   Delete
 3. தனிப்பட்ட முறையில் ஒரு டெக்ஸ் வில்லர் கதை ரசிகனாக வல்லவர்கள் வீழ்வதில்லை கதைத்தேர்வு கடுப்பையும் கவலையையுமே தந்தது. King Special என்ற கனமான புத்தகம், வேறு ஏதாவது ரெகுலரான டெக்ஸ் வில்லர் பாணியில் வந்திருந்தால் Worth'ஆக இருந்திருக்கும் பூதவேட்டை ரகமாக இருந்திருந்தால்கூட நல்ல பொழுதுபோக்காக இருந்திருக்கும் - பழைய மற்றும் முக்கியமாக புதிய வாசகர்களுக்கு.

  வல்லவர்கள் வீழ்வதில்லையில் லாஜிக்கான கதைப்போக்கும் இல்லை, வலறாரும் (வரலாறு) சரியில்லை, பொழுதுபோக்கும் இல்லை. டெக்ஸ் ரசிகர்கள் பெரும்பாலும் இந்தக்கதையை குறை சொல்லாமலிருப்பதும் ஆச்சரியம். வாசிப்பவர் ஒவ்வொருவரின் தேவையும் ஒரேமாதிரி இருக்க அவசியமில்லை என்றாலும் Something ddd this time looking at the reader's responses.

  ReplyDelete
  Replies
  1. Ramesh Kumar : /வலறாரும் சரியில்லை//

   ஹா ஹா.. நெத்தியடி !

   வல்லவர்கள் வீழ்வதில்லை ! - கதை விமர்சனம் எழுத, இரண்டாம் முறை புத்தகத்தைப் படிக்க கையில் எடுத்தேன்.. உணமையக் கூற வேண்டுமானால், பத்து பக்கங்கள் கூட தாண்ட முடியவில்லை. சரி, வேறு வழியின்றி, ஞாபகத்தில் இருந்த விஷயத்தை மட்டுமே வைத்துக் கொண்டு இந்தப் பதிவை எழுத வேண்டியதாகி விட்டது ! பூத வேட்டை, நிலவொளியில் ஒரு நரபலி இரண்டும் நல்ல பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த கதைகள். எனக்குப் பிடித்திருந்தது. வெளியில் சொன்னால் சிரிப்பார்கள் என்பதால் மட்டுமே ரசித்ததை ஒளித்து வைக்க வேண்டியதாகி விட்டது ;)

   ஷான் ஓ டான்னெல் வரும் இடங்கள் மட்டுமே கொஞ்சம் சுவாரசியமாக இருக்கிறது. அதிலும் 'வில்லியம் கெல்லி' மற்றும் ஷான் ஓ டான்னெல் சந்தித்துக் கொள்ளும் முதல் சந்திப்பு - கிளாசிக் !

   Delete
 4. உங்கள் இந்த பதிவை (ரமேஷ் சார் )படித்தவுடன் மனதில் கொஞ்சம் மகிழ்ச்சி சார் .எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களுக்கு மத்தியில் நான் தான் தனியாக இருக்கிறேனோ என்ற நிலை இப்போது இல்லை .

  மேலும் டெக்ஸ் கதையை மட்டுமே வாங்கி படிக்கும் சில நண்பர்கள் கூட இந்த கதை சுமார் ..பிடிக்க வில்லை என்று இன்று சொன்ன பொழுது கொஞ்சம் மகிழ்ச்சியும் கூட :)

  ReplyDelete
  Replies
  1. Paranitharan K : //எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களுக்கு மத்தியில் நான் //

   யாரைக் குறிப்பிட்டிருந்தாலும் உண்மை தான் நண்பரே, எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் பதிவிடுவது எப்படி சக வாசகர்களுக்கு சற்று எரிச்சலைக் கூட்டுகிறதோ, அது போல் தான் ஒவ்வொரு முறையும், சுய பச்சாதாபம் தொனிக்கும் வகையில் நம் கருத்துகளை பதிவிடுவதும் ஆகும்..

   க்ரீன் மேனர் - விமர்சனத்தில், தாங்கள் ஆசிரியருக்கு எழுதிய கிராபிக் மடல் ஒன்றின் மூலமே, தங்களைப் பற்றி காமிக்ஸ் வாசகர்கள் அனைவரும் (தங்களின் வெள்ளை மனம்) அறிந்து கொண்டோம். ஆனால் ஒவ்வொரு முறையும் ''நான் வளரவே இல்லை'' என்ற சொற்றொடர் இணைத்துப் பதிவிடும் போது, அது நிச்சயம் விமர்சனத்திற்கு உள்ளாகும் என்பதை சுட்டிக் காட்டவே, தங்களை மிதமாக கலாய்த்து அவ்வாறு பதிவிட்டு உள்ளேன். ஏனெனில் நாமெல்லாம் மிகவும் வளர்ந்து, மத்திம வயதில் தானே வாழ்க்கையை ஓட்டுகிறோம்..? இரசனைக்கும், உடல் வளர்ச்சிக்கும் அல்லது அறிவு வளர்ச்சிக்கும் சம்பந்தமே இல்லை. எந்த விஷயம் நமக்கு அதிகமாகப் பிடிக்கிறதோ அதுவே நமக்கு நல்ல பொழுதுபோக்காக அமைகிறது. இதில் அடுத்தவரை ஒப்பிட்டு, நம்மை நாமே ஏன் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்பதே என் கேள்வி..?

   Delete
  2. // இதில் அடுத்தவரை ஒப்பிட்டு, நம்மை நாமே ஏன் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்பதே என் கேள்வி..? //

   Yes, கதைகளைக் கம்பேர் செய்யலாம். ஆனால் வாசித்தவிதம் மற்றும் புரிந்துகொண்ட விதம் பற்றி பொதுவில் பேசும்போது தன்னைத் தாழ்த்திக்கொள்ள அவசியமேயில்லை.

   கிருஸ்துமஸ் தின ஜோக்:
   தன்னைத் தாழ்த்திக் கொள்பவன் உயர்த்தப்படுவான் - என்ற உள்நோக்கம் ஆழ்மனதில் கிடந்து நம்மை அப்படி ஆக்குகிறதோ?! இது போங்கு ஆட்டம்...

   சில நேரங்களில் தன்னைப்பற்றி பெருமை பேசுவதற்கும், தன்னை சிறுமைப்படுத்தி வெளிக்காட்டிக்கொள்வதற்கும் இடையில் வேறுபாடு இருப்பதாகவே தோன்றுவதில்லை. யாருமே சதாகாலமும் அப்பாவியாக இருந்துவிட வாய்ப்பில்லை. அப்பாவித்தனம் (Innocence) நம்மைவிட்டு தானாகப்பிரியும்போது நியாய உணர்வு (Being reasonable) அந்த இடத்தை நிரப்பிதான் ஆகவேண்டும்.

   Delete
 5. நண்பர்களே ....நான் தங்களை போல. எல்லாம் காமிக்ஸ் படிக்கும் போதும் சரி ...கடிதம் எழுதும் போதும் சரி...கமெண்ட்ஸ் போடும் போதும் சரி ...சிந்திப்பது இல்லை.மனதில் பட்டதை எழுதி விடுவேன் அவ்வளவு தான் .அதில் என்னை தாழ்த்தி உள்ளதா அல்லது அடுத்தவர்களை உயர்த்தி உள்ளதா என்றெல்லாம் நான் கவலை படுவதில்லை .இனியும் பட மாட்டேன் .என்னை பொறுத்த வரை எங்கே எழுதினாலும் ...எப்படி எழுதினாலும் ...ஒன்றை மட்டுமே நினைவில் கொள்வேன் .என் எழுத்து அடுத்தவர் மனதை காய படுத்தகூடாது என்பது மட்டுமே அது .அது காமெடியாக இருந்தாலும் சரி ...சீரியஸ் ஆக இருந்தாலும் சரி .....

  ReplyDelete
  Replies
  1. @Paranitharan K // ஒன்றை மட்டுமே நினைவில் கொள்வேன் .என் எழுத்து அடுத்தவர் மனதை காய படுத்தகூடாது என்பது மட்டுமே அது .அது காமெடியாக இருந்தாலும் சரி ...சீரியஸ் ஆக இருந்தாலும் சரி ..... //

   தங்களிடம் இந்த நல்ல குணம் இருப்பது நீண்டநாட்களாக நானும் கவனித்த விஷயம். இந்தத்தகவலையும் என்னுடைய மேலே உள்ள கமெண்ட்டில் இணைக்கவே நினைத்தேன் - ஒரு புரிந்துகொள்ளுதலுக்காக. ஆனால் அதிலும் சில எதிர்மரை விளைவுகள் உங்களுக்கே உள்ளது என்பதால் தவிர்த்துவிட்டேன்.

   ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள், பொதுவில் 100+ பேர் வாசிக்கும் தளங்களில் 2nd Personஐ தாக்காத இலகுவான வார்த்தைகள் அத்தியாவசியம்தான் - அதைக் கடைபிடிக்கிறீர்கள் ஓகே.. ஆனால் கதை பற்றிய விமர்சனம் செய்யும்போது ஒரு வாசகரான தன்னைத்தானே தாழ்த்திக்கொள்வது, உங்களைப்போன்ற சம ஆர்வமுடைய, வாசிக்கும் ரசனையில் உள்ள எல்லோரையும் ஒட்டுமொத்தமாக கீழே இறக்குகிறது. Suicide செய்பவர்களை தண்டிக்கமுடியாது, நக்கலடித்தால்தான் சரிப்படும் என நினைத்தோ என்னவோ, நமது 'தக்கணூண்டு' காமிக்ஸ் கலாச்சாரம் நக்கலால் நிரம்பி உள்ளது.

   பழைய உதாரணம் சொல்வதென்றால் க்ராஃபிக் நாவல் பற்றி விமர்சிப்பவர்கள் (ஆசிரியர் விஜயன் உட்பட) பலரும் பரணிதரன் என்ற வாசகருடைய தனிப்பட்ட ரசனையை உதாரணமாக வைத்தே கருத்துகளைப் பகிர்ந்தார்கள். இன்றைக்கு உங்களுக்குப் பிடித்த டெக்ஸ்வில்லர் கதை அப்நார்மலாக வரும்போது கதையை குறை சொல்ல மனமில்லாமல் உங்களின் வளர்ச்சி குறைவு எனக்கூறி தாழ்த்திக்கொள்கிறீர்கள் (பொது தளத்தில்). மகாபெரிய முரண்பாடு என சொல்வதைவிட சுற்றியிருப்பவர்களை கண்டுகொள்வதில்லை என்றுதான் குறிப்பிடத்தோன்றகிறது.

   மிஸ்டர் மரமண்டையின் வார்த்தைகள் கஷ்டப்படுத்தியிருக்கலாம் ஆனால் நீங்கள் கதைபற்றிய அவருடைய கருத்தை தலைகீழாகப் புரிந்துகொண்டிருப்பதும் உண்மை.

   Delete
 6. டியர் பிரண்ட், பல மாமங்கமாகவே, உங்களை காணோமே, அவ்வளவு, பிஸியா?,

  ReplyDelete