Follow by Email

Friday, 19 June 2015

நான்... எனது... 2016..!

நண்பர்களே, 

வணக்கம். சென்ற வருடத்தின் நான்... எனது... 2015..! படிக்க இங்கே கிளிக்கவும் !
1.மிஸ்டர் மரமண்டை14 June 2015 at 20:06:00 GMT+5:30

வணக்கம் நண்பர்களே.. சென்ற வருடம் போலவே மிகவும் தாமதமான பதிவு ! காரணம் பெரிதாக எதுவுமே இல்லை தயக்கத்தை தவிர ! ஒரு வாசகனாய் எழுதுவதும் ; யோசனை கூறுவதும் மிகவும் எளிதான விஷயமாக இருந்தாலும் - பதிப்பகத்தாரின் கஷ்ட நஷ்டங்களோ ; வியாபார நிர்பந்தங்களோ நமக்குப் புரிவதில்லை. ஆனால், இதுபோன்ற நம் சிந்தனைகள் பல சமயம், பயணத்தின் வழிக்காட்டியாக இல்லா விட்டாலும் - சில சமயம் திசைக்காட்டும் கைகாட்டியாக, ஒரு ஓரத்தில் கைகட்டி நிற்கும் வாய்ப்பாவது கிடைக்கும் என்ற நப்பாசையால் மீண்டும் ஒரு முறை தொடர எண்ணுகிறேன் !

சென்னை போன்ற பெரு நகரங்களில், தற்போதெல்லாம் தோட்டத்துடன் கூடியப் புதிய வீடுகளைப் பார்ப்பதே அரிதாகி விட்டது. அப்படியே இருந்தாலும், நிச்சயமாக கிணறு என்று ஒன்று இருப்பது குதிரைக் கொம்பு தான். காலமும், வாழ்க்கை முறையும், தட்பவெப்ப நிலையும் , விலைவாசியும் வெகுவாக மாறிவிட்டதே இதற்கான காரணம். முன்பெல்லாம் 1/2 கிரவுண்ட் இடமாவது, மரங்கள் நடுவதற்கும், பூச்செடிகள் பயிருடுவதற்கும் ஒதுக்கி, அதில் நீர் வற்றாத ஒரு கிணறும் அமைந்து இருக்கும். சுற்றிலும் தென்னை மரங்களும், வகைக்கு ஒன்றாக அரச மரம், புங்கை மரம், வேப்பமரம் என்று போக, இலவம்பஞ்சு மரங்களும், மாமரங்களும், முருங்கை மரங்களும், அசோக மரங்களும் ; அவரை, பாவக்காய், கோவக்காய் கொடிகளும் ; பசலைக் கீரையும், இலந்தை செடிகளும் ; செம்பருத்தி, அரளி, ரோஜா பூச்செடிகள் என காலி இடம் முழுவதும் தோட்டமாக, சொர்க்கம் நிறைந்திருக்கும் !

அவற்றிற்கு, முறைவைத்து வாளியில் தண்ணீர் இறைத்து வரும் அவ்வீட்டு வாரிசுகளின் உடலும், உள்ளமும் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும். காலம் ஓடியதே தெரியாமல் திடிரென்று மரம், செடி, கொடி என்று எல்லா தாவரங்களும் வளர்ந்து நின்று பயன் தர ஆரம்பித்திருக்கும். இளநீராகட்டும் ; மா, பலா, காய்கறி, கீரையாகட்டும் ; மல்லி, செம்பருத்தி, ரோஜா, மருதாணி என எதுவாகட்டும் - நம் குடும்பத் தேவைக்கும் பல மடங்கு அதிகமாக, தினம் தினம் கைமேல் பலனாக கிடைத்து, நம்மைத் திணறடித்து விடும். 'கொடுக்குற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுவதுப் போல்' வரும் அபரிதமான வரவை, அனுபவத்தால் மட்டுமே உணர்வுப் பூர்வமாக புரிந்து கொள்ள முடியும் !2.மிஸ்டர் மரமண்டை14 June 2015 at 20:31:00 GMT+5:30

அதுபோலத் தான் நாம் செய்து வரும் தொழிலும், வியாபாரமும் ! தொடக்கத்தில் மிகவும் சிரமத்தையும், வருமான நெருக்கடிகளையும் தந்து, நமக்கு அனுபவத்தை அளவுக்கு மேல் அள்ளித் தெளித்து - திடிரென்று ஒருநாள், பணம் கொட்ட ஆரம்பிக்கும். அப்போது தான் நமக்கே தெரியும் - எத்தனை உயரத்தில் நாம் வந்து சேர்ந்திருக்கிறோம் என்று ! இந்நிலைக்கு தான் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்ற சொற்றொடர் வந்திருக்குமோ என்னவோ ?!

இதை ஏன் சொல்கிறேன் என்றால், எந்த ஒரு வியபாரமாகட்டும் ; தொழிலாகட்டும் நாம் தொடர்ச்சியாக செய்து வந்தால், திடிரென ஒரு நாள் நாம் அத்தொழிலில் அசைக்க முடியாத உயரத்தில் அமர்ந்திருப்போம். பெயர் ; புகழ் ; செலவம் என்று எதிர்பார்க்கும் அளவிற்கு மேலேயே வந்து குவிய ஆரம்பிக்கும் என்பது மிகவும் சாத்தியமான உண்மை ! அது போல், நம் ஆசிரியர் விஜயன் அவர்களுக்கும், காலம் கூடி வருவதை என்னால் உணர முடிகிறது. இன்றைய இக்கட்டான நிலை நாளை இருக்காது என்பதில் எனக்கு ஐயமே இல்லை என்று கூறி என் முன்னுரையை நிறைவு செய்கிறேன் !

இந்த வருடம், வந்ததும் தெரியாமல் செல்வதும் தெரியாமல் இறக்கைக் கட்டிக் கொண்டு, பார்த்துக் கொண்டிருக்கும் போதே பறந்துச் செல்கிறது. ஒவ்வொரு மாதமும், புத்தகம் கிடைத்த ஒரு வாரத்திற்குள்ளாகவே காமிக்ஸ் தாகம் அளவுக்கு மீறி எடுக்கிறது ; அடுத்த மாதம் எப்போது வரும் என்ற காத்திருப்பு யுகமாகக் கழிகிறது ! புத்தகம் இல்லாத இந்தப் பாலைவன நாட்களில், ஆசிரியர் விஜயன் அவர்களின் ஞாயிறுப் பதிவுகள் மட்டுமே பாலைவனச் சோலையாக நம்மை இளைப்பாற வைக்கிறது. இந்நிலையில் 2016ஐ எப்படி அமைத்தால் நன்றாக இருக்கும் என்ற சிந்தனையைக் கொஞ்சம் ஓடவிட்டுப் பார்ப்போமே :-)3.மிஸ்டர் மரமண்டை15 June 2015 at 10:10:00 GMT+5:30

முதலில், நம் அருகில் பூதாகரமாக நிற்கும் நாளையச் சவாலே முதன்மையானது. நம் கவனம் முழுவதையும் அதைப் பற்றிய சிந்தனையில் லயிக்க வைத்து, இடர்களைக் களைய முழுமூச்சாக இறங்க வேண்டும். லயன் ஆண்டுச் சந்தா எண்ணிக்கை குறைந்து விட்டது ; கடைகளில் நிலுவைத் தொகை அதிகரித்து விட்டது ; கொடவுனில் ஸ்டாக் மலைப் போல் குவிந்து வருகிறது ; ஒவ்வொரு மாத முதலீடுக்கும், ராயல்டி தொகைக்கும், இதர நேரடிச் செலவுகளுக்கும் கணக்கில் பற்று மட்டும் வைத்தால் போதுமானதாக இருக்குமா என்றால், அது பற்றாக்குறையாகவே நீடித்து நிலைத்திருக்கும். மழைக் காலத்தில், தூவானம் நின்றபின் தான் செல்ல வேண்டும் என்று காத்திருந்தால் அன்றையப் பொழுது மெதுமெதுவாக கரைந்தேப் போய் விடும் !

எனவே, நமக்கு முன் உள்ள 2016 மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருத வேண்டும். அது மட்டுமல்லாமல், சில வெற்றி தொடர்களை முடிவுக்கு கொண்டு வரவும் இக்காலத்தைப் பயன்படுத்திக் கொண்டால் - இரட்டை மாடு பூட்டிய மாட்டு வண்டியாக சொகுசுப் பயணம் மேற்கொள்ள முடியும். நகைப்புக்குரிய விஷயமல்ல, நம் பயணம், இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் ; ஆறுகள் ; வயல் வெளிகள் ; ஒற்றைப் பனைமரங்கள் ; குளம், ஏரி, கால்வாய்கள் ; பச்சைப் பசேல் என்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்திருக்கும் தோப்புகள் - என மனம் மகிழச் செய்யும் கிராமங்களின் வழியே தான் எனும் போது, இது போன்ற சொகுசுப் பயணங்கள் நம் வாழ்விலும், வசதியிலும் ஒரு நிறைவைத் தரும் ! ஆதலினால்,4.மிஸ்டர் மரமண்டை15 June 2015 at 10:38:00 GMT+5:30

லார்கோ வின்ச் !

டெக்ஸ் வில்லரை தவிர்த்து, எல்லா வெற்றி தொடரும் ஒரு நாள் முடிந்து தானே ஆக வேண்டும் ?! அது அடுத்த வருடமாக இருந்தால் என்ன.. இந்த வருடமாக இருந்தால் என்ன ? மனம் சார்ந்த தேவைகளையும், தேடுதல்களையும் எப்பொழுதுமே ஒத்தி வைக்க முடியாது, காலம் செல்லச் செல்ல நீர்த்து விடும். ஒரு தொடர் வெற்றி முகத்தில் கோலோச்சும் போதே, அவற்றை வெளியிட்டு நிறைவு செய்து விட வேண்டும். இது பலவிதமான தொழில் இடர்களைக் களைவதற்கும், வாசகர்களின் ஒருமித்த மனநிறைவுக்கும் வழிவகுக்கும். எனவே வரும் ஆண்டில், லார்கோ வின்ச்'சின் ஆல்பம் 15 & 16, 17 & 18 ஆகியவற்றை வழக்கம் போல் இரண்டிரண்டு ஆல்பமாக அட்டவணையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே, எடிட்டர் அவர்களும் இந்த முடிவை தான் எடுத்து இருப்பார் என்பதால் வரும் வருடத்தில் அனைவருக்கும் மனநிறைவான இரண்டு இதழ்கள் நிச்சயம் ! 

1.Largo Winch - 2 books - @ 120 !

வேய்ன் ஷெல்டன் !

லார்கோ வின்ச் போலவே இதுவும் ஒரு வெற்றி தொடர் என்பதால், இதனையும் இவ்வருடத்திலேயே நிறைவு செய்து, நாமும் அனைத்திலும் நிறைவாக உணரலாம். தற்போதைய வசதிகளின் படி, ஸ்டாக் தீர்ந்து விட்டால் - என் பெயர் லார்கோ, தங்கக் கல்லறை போன்று மீண்டும் பதிப்பித்து, வரும் வருடங்களில் கூட அனைத்துப் புதிய வாசகர்களுக்கும் கிடைக்கச் செய்யலாம். ஆதலினால், வேய்ன் ஷெல்டன் ஆல்பம் 9 & 10, 11 & 12 இரண்டையும் வரும் வருடத்தில் எதிர்பார்க்கிறோம். இதையும் எடிட்டர் அவர்கள் ஏற்கனவே அட்டவணையில் சேர்த்திருப்பார் என்பதால், வரும் வருடத்தில் அனைவருக்கும் மனநிறைவான மேலும் இரண்டு இதழ்கள் நிச்சயம் !

2.Wayne Shelton - 2 books - @ 120 !


5.மிஸ்டர் மரமண்டை15 June 2015 at 11:04:00 GMT+5:30

இரத்தப் படலம் பாகம் 24 !

ஏற்கனவே, ஆசிரியர் அவர்களால் இறுதிச் செய்யப்பட்டிருக்கக் கூடிய கதை தான் எனும் போதும், XIII ன் Spin-off வரிசையில் இரண்டு இதழ்களையாவது சேர்த்துக் கொண்டால், ஒரு நல்ல வாசிப்பிற்கு உத்திரவாதம் அளித்தது போல் இருக்கும் அல்லவா ?! 

3.இரத்தப் படலம் - 60+ = 3 books 

வானமே எங்கள் வீதி !

சிறந்த ஓவியத்திற்காகவும் ; கதையில் காணப்படும் அழுத்தமான திடீர் திருப்பங்கள் காரணமாகவும் பரவலான ஆதரவைப் பெற்ற ஒரு மினி வெற்றி தொடர் இது. இக்கதையைப் படித்துள்ள வாசகர்கள் அனைவரையும் போலவே நானும், இந்தக் கதையின் முடிவு எப்படிப்பட்டதாக இருக்கும் என்று அறிந்து கொள்ள - இதன் இறுதி ஆல்பம் 3 ஐப் படிக்க காத்துக் கொண்டிருக்கிறேன். இதுவும் அட்டவணையில் நுழைந்திருக்கலாம் என்பதால், மீண்டும் ஒரு எதிர்பார்ப்பு நிறைந்த இதழ் 2016 ல் நம் அனைவருக்காகவும் காத்திருக்கலாம் !

4.வானமே எங்கள் வீதி - 60+ = 1 book


6.மிஸ்டர் மரமண்டை15 June 2015 at 20:41:00 GMT+5:30

பௌன்சர் !

கதையின் சாரம் நல்லதோ.. கெட்டதோ வெளியிட்டு விட்டோம் ; மிகப் பெரிய வெற்றியோ.. மிதமான வெற்றியோ .. பதிப்பித்து விட்டோம் ; ஒரே வருடத்தில் ஒரு தொடரின் 88 சதவீதத்தைப் பூர்த்தி செய்த நாம், மீதமிருக்கும் இரண்டே ஆல்பமான 8 & 9 ஐயும், வரும் 2016ல் வெளியிட்டு - காமிக்ஸ் உலகின் மிகவும் பிரபலமான ; மிகப் பெரிய வெற்றி ஈட்டிய ஒரு தொடருக்கு, தமிழில் நாம் மட்டுமே உரிமையாளர்கள் என்ற லேண்ட்மார்க் உடன் வலம் வரவேண்டும். வழக்கம் போல், சில நெருடலான விஷயங்களை, கதையின் போக்கு மாறாமல் வசனத்தில் மாற்றி அமைத்து விட்டாலே, எடிட்டர் விஜயன் அவர்களுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது போலாகி விடும். எனவே,

5.பௌன்சர் - 120+ = 1 book7.மிஸ்டர் மரமண்டை15 June 2015 at 21:12:00 GMT+5:30

கேப்டன் டைகர் !

என் பெயர் டைகர் - இந்த வருடமே வெளிவந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். சமீப காலங்களில் டைகர் கதைகள் அதிக அளவில் விமர்சனத்தை சந்திப்பதால், இக்கதைகளை வெகு நாட்களுக்கு ஒத்தி வைக்க முடியாது என்பது நிதரிசனம். ஒரு சாரரருக்கு பிடிக்கவில்லை அல்லது ஓவர் டோஸ் என்ற காரணத்தினால் மட்டுமே ஒரு தொடரின் எஞ்சிய பாகங்கள் ஒத்தி வைக்கப்படும் போது, அந்த உரிமையைப் பெற்றுள்ள பதிப்பகம், ஏதோ ஒரு வகையில் நஷ்டம் அடைகிறது. அது மட்டுமல்லாமல், கேப்டன் டைகரின் ரசிகர்கள் அவரின் தொடர்கள் முழுமையடையாதா என்ற ஏக்கத்தில் காலம் தள்ளவும் நேரிடுகிறது. இவையிரண்டையும் சமன் படுத்த, காலம் தாழ்த்தி வெளியிடப்படும் ஒரு மிகப் பெரிய வெற்றி தொடரின் எஞ்சிய பாகங்கள் - சரியாக விற்பனை ஆகாமல், நஷ்டத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு அதிகம் இருப்பதால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் கேப்டன் டைகரின் அனைத்து கதைகளையும் வெளியிட்டு விடுவதே சிறந்ததாக இருக்கும் என்பது என் கருத்து. ஏற்கனவே Mr .BLUEBERRY - வரும் 2016 அட்டவணையில் சேர்த்திருப்பீர்கள் என்றே நம்புகிறோம் !

6.என் பெயர் டைகர் 1 2 3 4 5 - ஒரே புத்தகமாக 300+ = 1 book8.மிஸ்டர் மரமண்டை15 June 2015 at 21:41:00 GMT+5:30

மதியில்லா மந்திரி !

நிறைவு செய்யப்பட வேண்டிய தொடர்களின் இறுதிப் பட்டயலில், மதியில்லா மந்திரி வருவது பல வாசகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கலாம். இந்தக் கார்ட்டூன் வகை, குபீர் சிரிப்புக் கதைகள் என்றோ தொகுப்பாக வந்திருக்க வேண்டும் என்பது என் கருத்து. அது மட்டுமல்ல, மீண்டும் மீண்டும் அடிஷனல் பிரிண்டிங் போட வேண்டிய இந்தக் கதைத் தொடர் - இன்னும் முதல் பதிப்பிற்கே ஸ்லாட் கிடைக்காமல் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பதை, கொள்முதல் விரயமாகக் கூட கருதலாம். கோணங்கித் தனமான மந்திரியும், அதி மேதாவி ஜால்ரா பாயும் அடிக்கும் லூட்டிகள், நிச்சயம் சிறுவர்களுக்கானது ; கார்ட்டூன் ரசிகப் பெருமக்களுக்கானது. இருந்தும், தொகுப்பாக நமக்கு இன்று வரை கிடைக்கவில்லை. நம் வீட்டுச் சிறுவர்களுக்கு, காமிக்ஸ் பிடிப்பு ஏற்படுத்த புதிய தொடர் தான் வேண்டும் என்பது கட்டயாமில்லையே ?! SMURFS எல்லோரையும் கவர்ந்திழுக்குமா என்பதில் எனக்கு இன்னமும் சந்தேகம் இருக்கிறது. ஆனால், மதியில்லா மந்திரி யில் அந்த ரிஸ்க் இல்லை என்று தாராளமாக நம்பலாம். எனவே,

7.மதியில்லா மந்திரி - 120+ = 1 book9.மிஸ்டர் மரமண்டை16 June 2015 at 09:37:00 GMT+5:30

உங்கள் வாழ்க்கையில் எப்போதாவது , உங்கள் ஜோசியரோ ; நண்பரோ ; வேறு யாரோ - இதை நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு செய்யலாம் சார் என்று சொல்லியிருப்பார்கள். அது எப்படி கண்ணை மூடிக் கொண்டு செய்ய முடியும் என்று ஒருபோதும் நாம் குழம்பியதே இல்லை. ஏனெனில், அங்கு ஒரு சிறிய தவறும் நிகழ வாய்ப்பே இல்லை என்பதை தான் அவ்வளவு ஆணித்தரமாக கூறுகிறார்கள் என்று நாம் புரிந்து கொள்வோம் அல்லவா ? கண்ணை மூடிக் கொண்டு செய்யும் போதே தவறு நிகழ வாய்ப்பு இல்லாத ஒரு செயலை, நம் கண்கள் இரண்டையும் திறந்து வைத்துக் கொண்டு செய்தால், அதில் எவ்வளவு பயன் இருக்கும் ?! அப்படிப்பட்ட ஒரு விஷயம் தான் - மகா கீர்த்தி வாய்ந்த டெக்ஸ் வில்லரின் மறுபதிப்புகள் - 5 இதழ்கள் !

சந்தா C - கருப்பு வெள்ளை மறுபதிப்புகள் - 17 இதழ்கள் ! 

1.டெக்ஸ் வில்லர் - 5 இதழ்கள் ! 
2.இரும்புக்கை மாயாவி - 3 இதழ்கள் !
3.குற்றச் சக்ரவர்த்தி ஸ்பைடர் - 3 இதழ்கள் !
4.C.I.D லாரன்ஸ் & டேவிட் - 3 இதழ்கள் !
5.ஜானி நீரோ & ஸ்டெல்லா - 3 இதழ்கள் !10.மிஸ்டர் மரமண்டை16 June 2015 at 10:20:00 GMT+5:30

தீபாவளி மலர் ! 

ஸ்பெஷல் இல்லாவிட்டால் நம் காமிக்ஸ் வாசகர்களுக்கு, இரவு சாப்பாட்டிற்கு உப்புமா பரிமாறியது போலாகி விடும் என்பதால் தான், ஒவ்வொரு வருடமும் நமக்கு அந்த ஸ்பெஷல், இந்த ஸ்பெஷல் என்று கிடைத்து வருகிறது. அதே நேரம் தீபாவளி கொண்டாடவும் ஒரு ஸ்பெஷல் அவர்களுக்கு தேவைப்படுகிறது. 

வீட்டுக்கு வீடு கம்ப்யூட்டர் வருவதற்கு முன்பெல்லாம், எல்லோர் வீட்டிலும் உள்ள அனைத்து சிறுவர்களுக்கும், தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரம் முன்பாகவே ஒரு துப்பாக்கியும், ரோல் கேப் பாக்ஸ் செட்டும் தவறாமல் வாங்கிக் கொடுத்து விடுவார்கள். அதை வைத்துக் கொண்டு அவர்கள், திருடன் போலீஸ் விளையாட்டை விளையாடுவார்கள். கட்டைச் சுவர் இருந்தால் அதில் ஒளிந்து கொண்டும், வீட்டின் நான்கு புறச் சுவர்களின் சுற்றிலும் ஒரே ஓட்டமாக ஓடி, மறைந்து, இடம் மாற்றிக் கொண்டும் ; வீதியில் கொட்டியிருக்கக் கூடிய செங்கல், மணல் குவியல்களுக்கிடையே குறுங்காலிட்டு அமர்ந்து, நிமிர்ந்து, எக்கிப் பார்த்தும் ; ஒளிந்து, மறைந்து, திடிரென தலை நீட்டி - டுமீல், டுமீல், டுமீல் என்று ஒருவரை ஒருவர் சுட்டுத் தள்ளுவார்கள். அந்த பாதிப்பு இன்னும் கூட அப்படியே இருப்பதால் தான், ஒவ்வொரு தீபாவளிக்கும் தல தீபாவளி கேட்கிறார்கள் என்று நினைக்கிறேன் :)

தீபாவளி மலர் - டெக்ஸ் வில்லர் - 300+ = 1 book 
என் பெயர் டைகர் - டைகர் ஸ்பெஷல் -  300+ = 1 book 

தீபாவளி மலராக, டெக்ஸ் வில்லரின் கதைகளை முழு வண்ணத்தில் போட்டு விட்டால் ஒரே கல்லில், ஒரு கொத்து மாங்காய் அடித்தது போல் ஒரே கொண்டாட்டமாக இருக்கும். செலவோடு செலவாக, தீபாவளி கொண்டாட்டமாக இந்த இரண்டு இதழ்களையும் நம் வாசகர்கள் வெற்றி பெற வைத்து விடுவார்கள். 

தீபாவளி கிப்ட் பேக் என்று ஒரு ஆப்ஷனை இரண்டு மாதங்களுக்கு முன்பே கொடுத்து விட்டீர்கள் என்றால், இதுவரை நம்மிடம் சண்டைப் போடாத உறவினர்கள் ; அலுவலக நெருங்கிய நண்பர்கள் ; மேலதிகாரிகள் ; காமிக்ஸ் படிக்காத நெருங்கிய குடும்ப நண்பர்கள் - இவர்களில் யாருக்கேனும் ஆர்டர் செய்து, அவர்களின் உறவையும், நேசத்தையும் நம்மால் தக்க வைத்துக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். அதை அவர்கள் படித்து தான் தீரவேண்டும் என்ற கட்டாயமில்லை ; நம்முடைய பிணைப்பை உறுதிப்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமைத்துக் கொள்ளலாம் !11.மிஸ்டர் மரமண்டை16 June 2015 at 15:23:00 GMT+5:30

சந்தா A ரெகுலர் ஸ்பெஷலுடன் (24)
சந்தா B கிராபிக் நாவல்கள் (6)
சந்தா C கருப்பு வெள்ளை மறுபதிப்புகள் (17)
சந்தா D திகில் கதைகள் (12)

ஏற்கனவே முந்தையப் பதிவில் நான் குறிப்பிட்டுள்ள நாயகர்கள் போக, மீதம் தற்போது வெளியீட்டில் உள்ள கதை வரிசைகள் தோராயமாக ; 

1.கமான்சே
2.மேஜிக் விண்ட்
3.தோர்கல்
4.டைலன் டாக்
5.டேஞ்சர் டயபாலிக்
6.ஸ்மர்ப் 
7.ப்ளுகோட் பட்டாளம்
8.லக்கி லூக்
9.சுட்டி லக்கி 
10.சிக் பில்
11.ரின் டின் கேன்
12.C.I.D. ராபின்
13.மாடஸ்டி பிளைஸி
14.ரிப்போர்டர் ஜானி
15.ஜில் ஜோர்டன்
16.ஜூலியா
17.ஜெரோம் 
18.மர்ம மனிதன் மார்ட்டின்
19.சாகஸ வீரர் ரோஜர்
20.வண்ண மறுபதிப்புகள் 
21.ஸ்டீல் பாடி ஷெர்லாக்ஹோம் 

அப்ப்பா.. இத்தனை விதமான டைட்டில் வைத்துக் கொண்டே, ஏன் விஜயன் சார்.. நீங்கள் புதுப் புது தொடருக்காக இத்தனை சிரமங்கள் மேற்கொள்கிறீர்கள் ?! இவை எல்லாவற்றிலும் ஒரு கால்வாசியாவது முடியட்டுமே சார் :-)12.மிஸ்டர் மரமண்டை16 June 2015 at 15:40:00 GMT+5:30

டியர் விஜயன் சார்,

அடுத்த ஆண்டு 2016ல் சந்தா எண்ணிக்கை மிகவும் குறைந்து, கொடவுன் ஸ்டாக் அதிகமாகி விட்டால் - வருகின்ற 2017ல் 

சந்தா A 24 x 70 
சந்தா B 17 x 70

என்று மட்டுமே வரையறுத்துக் கொண்டால் நெருக்கடிகள் அதிகமாகாமல் தடுக்கப்பட்டு விடும் எ.எ.கருத்து !

இயலுமானால் 2017 ஜனவரியில் இரத்தப் படலம் - முழுவண்ணத் தொகுப்பு அல்லது மூன்று தொகுப்பாக அல்லது Box set ற்கான அட்வான்ஸ் புக்கிங் ஓபன் செய்து விடுங்கள் சார். Customized imprints முறையில், வெறும் 300 எண்ணிகையிலான பிரிண்ட் ரன் அடக்கத்தில் - விலையை நிர்ணயம் செய்யுங்கள் சார் ! இது கட்டாயமல்ல சார், இப்படி அறிவிக்கா விட்டாலும் எனக்கு மகிழ்ச்சி தான் என்பதில் தாங்கள் எந்தக் குறையும் வைக்கவில்லை :-) 13.மிஸ்டர் மரமண்டை16 June 2015 at 21:21:00 GMT+5:30

Satishkumar S ://புதிய தேடலின் பலன் தான் இந்த 21 list என்பது உங்களுக்கு தெரியாதது அல்ல நண்பரே//
இதில் 7 மட்டுமே உண்மையாக இருந்தாலும், 2016க்கு இதுவே போதும் என்பதே என் கருத்து !

//சந்தா C கருப்பு வெள்ளை மறுபதிப்புகள் (17)?, நண்பர்கள் கோபப்படவேண்டாம் எனக்கு இந்த சந்தாவில் வரும் புத்தகங்கள் எந்த அளவிற்கு உற்சாகத்தை தருகிறது என்று புலப்படவில்லை, ஆரம்பிக்கும்போது இருந்த உற்சாகம் இப்பொது இந்த சந்தவிற்கு இல்லை என்பது என் கருத்து//

இது எங்களுடைய 25 வருட கனவு ; இது எங்களுடைய 3 வருட தவம் நண்பரே ! 

ஆரம்பிக்கும் போது எங்களுக்கு இருந்த உற்சாகத்தை விட தற்போது பலமடங்கு அதிகமாக இருக்கிறது. காரணம் தற்போது வரும் உயர்ந்த தரம் ; மாறுபட்ட சுவாரசியமான வாசிப்பு. உதாராணம் இராட்சஸக் குள்ளன் !

14.மிஸ்டர் மரமண்டை15 June 2015 at 15:22:00 GMT+5:30

mayavi. siva : உங்கள் கேள்விக்கான விடை மிகவும் எளிதானது. இருந்தாலும், என்னுடைய 'நான்... நமது... 2016..!' பதிவின் இறுதியில் பதில் எழுதுகிறேன். அதற்கு முன், இடர்பாடுகளும், மனஸ்தாபங்களும் எங்கே தோன்றுகிறது என்பதைப் பற்றி ஒரு பார்வை !

தமிழ் காமிக்ஸ் வாசகர்களின் மிகவும் நெருங்கிய நண்பராக, நம் ஆசிரியர் விஜயன், கடந்த மூன்று வருடங்களாக இருந்து வருகிறார் ; மிகப் பெரிய பலம் இதுவென்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தீவிர காமிக்ஸ் வாசகர்கள், தற்போது அதிகப்பட்சமாக ஆயிரம் மட்டுமே என்ற எண்ணிக்கையை உதாரணமாக கொள்வோம். இதில் எங்கே பிரச்சனை ஏற்படுகிறது என்று பார்த்தோமேயானால்..

ஆசிரியர் விஜயன், தான் வெளியிடும் அனைத்து காமிக்ஸும் - இந்த ஆயிரம் பேரின் இரசனைக்கும், ஒரு வருடச் சந்தா தொகை, இந்த ஆயிரம் பேரின் மாத, வருட பட்ஜெட்டிற்கும் ஏற்றதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடுக்கப்படும் முடிவுகளே ஒரு தடைக்கல்லாக இருப்பதாக நான் கருதுகிறேன். இது போன்ற முடிவுகளும், திட்டங்களும் நடைமுறைச் சாத்தியம் இல்லாத ஒன்று ! 

உதாரணமாக ஒரு ஹோட்டலுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள், அனைத்துப் பண்டங்களையும் ஒரே வேளையில் ஆர்டர் செய்து, முழுவதுமாக சாப்பிட்டு விட முடியாது என்பது எந்தளவுக்கு உண்மையோ, அந்தளவுக்கு அங்கிருக்கும் அனைத்து உணவு வகைகளும் அவர்களுக்கு  கண்டிப்பாக பிடித்தமானதாக தான் இருக்கும் என்பதும். தோசையை விரும்பிச் சாப்பிடுபவருக்கு இட்லி பிடிக்காமல் போகலாம் ; பரோட்டா தான் வேண்டும் என்பவர் பூரியை நிராகரிக்கலாம் ; பொங்கல் ஆர்டர் செய்பவருக்கு, உப்புமா பிடிக்காத உணவாக இருக்கலாம் !   ஆனால், அந்த ஹோட்டல் முதலாளி, தம் ஹோட்டலக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும், தம் ஹோட்டலில் உள்ள அனைத்து வகைகளையும் ருசித்துச் சாப்பிட்டு விட்டு தான் போகவேண்டும் என்ற பரந்த மனப்பான்மையில் விலைப் பட்டியலையும், உணவு வகைகளையும் நிர்ணயிப்பதும் நடைமுறை சாத்தியமில்லாத செயலாகவே கருத வேண்டும். ஒருவர், ஒரு நாளைக்கு ரூபாய் 100 மட்டுமே தனக்காக செலவு செய்யும் பட்ஜெட்டில் இருக்கலாம் ; இன்னொருவரின் பட்ஜெட் ஒரு நாளைக்கு ரூபாய் 300 ஆக இருக்கலாம் ; இன்னொருவர், வாய்க்கு ருசியாக நான் சாப்பிட எனக்குப் பணம் ஒரு தடையில்லை என்று நினைப்பவர், 1000 கூட செலவழித்து அவரின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள நினைக்கலாம். ஒரு மிகச் சிறந்த ஹோட்டல் முதலாளி என்ன செய்வார் என்றால் - அனைத்து வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யவே நினைப்பார். அடுத்த டேபிளில் ஆயிரம் ரூபாய்க்கு பில் வந்தால், நூறு ரூபாய் பில் கொடுப்பவரின் மனம் நோகுமே என்று - யாரையும் கட்டாயப்படுத்த மாட்டார் அல்லவா ?! அனைத்து வாடிக்கையாளர்களையும் தன்னுடைய சிறந்த சேவையால் மகிழ்விக்கும் அதே நேரத்தில், தனக்குண்டான வருமானத்தையும் அதிகரித்து, ஹோட்டலை நாளுக்கு நாள் விஸ்தரிக்கவே செய்வார் !15.மிஸ்டர் மரமண்டை15 June 2015 at 15:43:00 GMT+5:30

ஒன்றுமே வேண்டாம், ஒரு சாதாரண மளிகை கடையில் கூட குளியல் சோப்பு அல்லது ஷாம்பு எத்தனை எத்தனை அளவுகளிலும், எத்தனை எத்தனை வகைகளிலும் கிடைக்கிறது என்பது நமெக்கெல்லாம் நன்றாக தெரியும். உதாரணமாக ஒரு ஷாம்பு - ரூபாய் 3 லிருந்து 300 வரையும் ; long, strong, soft, dry, normal, dandruff, anti split - என்ற பல்வேறு வகைகளிலும் கிடைக்கிறது. இத்தனைக்கும் அந்த ஷாம்பு ஒரே ப்ராண்டு தான் எனும் போது, நம்மால் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். 

அத்தியாவசியத் தேவையே என்றாலும் ; ஒத்த ரூபாயே என்றாலும் - ஒரு வாடிக்கையாளர், கடையில் தொங்கும் அத்தனை வகை ஷாம்புகளையும் வாங்குவதில்லை. தனக்கு எது தேவையோ ; எவ்வளவு தேவையோ அதை மட்டுமே வாங்கிக் கொண்டு நடையைக் கட்டுகிறார். 

இன்றைய 1000 வாசகர்கள், நாளை 5000 வாசகர்களாக அதிகரித்தாலும், அவர்களின் தேவைகளையும், இரசனைகளையும் இதே உதாரணத்தைக் கொண்டு தான் அளவிட வேண்டும். அவரவர் இரசனைக்கு ஏற்ப ; அவரவர் பட்ஜெட்டிற்கு ஏற்ப தன்னுடைய சந்தாவை தேர்ந்தெடுத்துக் கொண்டு, அடுத்த சந்தா க்ரூப்பில் உள்ள தமக்குப் பிடித்த புத்தகங்களை மட்டும், கடைகளிலோ ; ஆர்டர் செய்தோ ; வாசக ஏஜெண்ட் நண்பர்கள் மூலமோ வாங்கிக் கொள்வதே எல்லாவற்றிற்கும் சிறந்த தீர்வாக அமையும் !

சந்தா A,B,C,D என்று நான்கு வகையாகப் பிரித்து விட்டால், வாங்கும் சக்தி கொண்டவர்களும், எல்லா வகை  காமிக்ஸையும்  விரும்பிப் படிப்பவர்களும் - இந்த நான்கிற்கும் ஒரு சேர சந்தா செலுத்தி விடட்டும். மற்றைய வாசகர்கள் தங்களின் மாத, வருட பட்ஜெட்டிற்கு ஏற்ப, சந்தாவை தேர்ந்தெடுத்துக் கொள்வதே சந்தைப் பொருளாதாரம் ஆகும்.

பக்கத்து வீட்டில் தினமும் ஒரு லிட்டர் பால் மட்டுமே போதுமானதாக இருக்கிறது என்பதால், என் வீட்டிலும் ஒரு லிட்டர் பால் தான் தினமும் வாங்க வேண்டுமா என்ன?! என் குடும்பத்திற்கான தேவை 4 லிட்டராகக் கூட இருக்கலாம் ; எனக்கு ஆவின் பாலை விட ஆரோக்கியா பால் அதிகம் பிடித்து இருக்கலாம் அல்லது அதன் பச்சமண் போன்ற விளம்பரம் என்னை ஈர்த்து இருக்கலாம் ; நானும் அதன் வாடிக்கையாளராக மாறி இருக்கலாம் ; இதெல்லாம்  அவரவர் தேவை மற்றும் மனம் சார்ந்த விஷயங்கள். இங்கே ஒருவருக்கொருவர் கட்டுப்பாடு விதிக்க வாடிக்கையாளர்களாகிய நமக்கு என்ன உரிமை இருக்கிறது நண்பர்களே ?!


13 comments:

 1. Replies
  1. King Viswa : சந்தோஷ வரவு நண்பரே !

   //அடடே// இதற்குண்டான சரியான விளக்கம் மட்டும், எனக்கு இதுநாள் வரை கிடைத்ததே இல்லை :-)

   Delete
  2. இதை ”டீ-கோட்” செய்வது மிகவும் சுலபம் சாரே.

   1. நான் இந்தப் பதிவை படித்து விட்டேன் என்று அர்த்தம்.

   2. பதிவு ஒரு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் பொருள் கொள்ளலாம்.

   3. இந்தக் கொடூரமான சூழலில், இன்னமும் இப்படி பொறுமையாக, அமைதியாக பதிவு எழுத உங்களால் முடிகிறதே? என்றும் கொள்ளலாம்.

   ஆகா, இந்த மூன்று ஆஃப்ஷனில் எதையாவது ஒன்றை நீங்கள் உங்கள் பதிவிற்கு ஏற்ப “டிக்” அடித்துக் கொள்ளுங்கள். ஓகேவா?

   :)

   Delete
  3. //ஓகேவா?//

   yes :) நன்றி மிஸ்டர் விஸ்வா !

   Delete
 2. ஆதரிக்கிறேன் மிஸ்டர் ம.ம.நான் புதிய வாசகன் என்பதால் ரத்தக்கோட்டை பாக்ஸ்செட்(ஐந்து பாகங்கள்) இதனுடன் இணைத்துக்கொள்ளலாம்தானே..

  ReplyDelete
  Replies
  1. Thirumavalavan p :

   ஒரு சிறந்த வியாபாரியால் மட்டுமே அனைவரின் தேவையையும் பூர்த்திச் செய்ய முடியும் ; வியாபாரியாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் போது, அதுவரை அண்ணன் தம்பியாக பழகி வந்த நண்பர்கள் ஒரு சிலரை இழக்க நேரிடுமோ என்ற சஞ்சலமும் மனதிற்குள் எழும் ; இதிலிருந்து மீளும் நாள் எதுவோ, அதுவே சாதனைக்கான திருநாள் !!

   மின்னும் மரணம் நமக்குக் கிடைத்தது போல், இரத்தப் படலமும் கிடைத்து விட்டால் - இரத்தக் கோட்டை முழு வண்ணத்திலான மறுபதிப்பு நமக்குக் கிடைப்பதில் தடையேதும் இல்லை நண்பரே !

   Delete
 3. நன்றி Mr. MM. நான் வார இறுதியில் இங்கு என் கருத்துகளை பதிவிட முயற்சி செய்யப் போகிறேன்.

  ReplyDelete
 4. +1

  சீசன் பதிவுக்கு மட்டும் அல்ல உங்களின் தொடர் பதிவுகளை எதிர்பார்கிறேன் நண்பரே, உங்களின் காமிக்ஸ் நீங்கள், உங்களது 2016 காமிக்ஸ் தாகம் பூர்த்தி ஆனாலும் மீண்டும் தாகத்துடன் நீங்கள் தொடர வேண்டும் அதற்கு வாழ்த்துகள் ....!

  ReplyDelete
  Replies
  1. Satishkumar S : தங்களின் மாறாத அன்புக்கு நன்றிகள் சதீஷ் !

   Delete
 5. Replies
  1. Sridhar : நல்வரவு நண்பரே !!

   Delete
 6. நான்... எனது...2016…!
  தாமதத்திற்கு மன்னிக்கவும். அப்படியே உங்கள் தலைப்பையே லவட்டியதற்கும் . புகழ்ச்சியாய் எடுத்துக் கொள்ளவும்.
  கடந்த வருடம் நமது லயன், மின்னும் மரணம் மற்றும் முத்து காமிக்ஸ்களின் பட்ஜெட் Rs.5000/. இதுவே 2016லும் பட்ஜெட்டாக இருக்கும் என்று இருக்கிறேன். இந்த பட்ஜெட் தொகையை லயன் காமிக்ஸ் மற்றும் முத்து காமிக்ஸ்(Rs.2785), திகில் காமிக்ஸ்(Rs.720), கி. நா. (Rs.760) மற்றும் மறுபதிப்புகள் (Rs.900) என்று பிரித்துள்ளேன்.
  லயன் காமிக்ஸ் மற்றும் முத்து காமிக்ஸ்(Rs.2800):
  1. டெக்ஸ் – 1500 பக்கங்கள். 700 பக்கங்கள் வண்ணத்தில். ஒரே புத்தகமாக – புத்தக விழா அல்லது தீபாவளி சிறப்பிதழாக வருவதே சிறப்பு. மீதம் கருப்பு வெள்ளை கதைகளாக வர வாய்ப்புள்ளது. Rs. 750
  2. டைகர் – எனக்கு என் பெயர் டைகர் இப்பொழுது வருவதில் உடன்பாடில்லை. இது 5 பாகங்களாக வந்த ஒரு தனிக்கதை. இதில் டைகரின் சாகசம் மிகவும் குறைவு. என்னைப் பொறுத்தவரை இது டைகர் கதையே இல்லை. குசேலன் படம் போல் தான் இதுவும். முதலில் டைகர் இளமைக் கால கதைகளை முடிக்க வேண்டும். அதனால் என்னுடைய விருப்பம் 5 young bluberry கதைகளை கொண்ட ஒரு ஸ்பெஷல். Rs. 300
  3. லார்கோ - 15, 16, 17, மற்றும் 18 கதைகளை இரண்டு புத்தகங்களாக. Rs. 240
  4. ஷெல்டன் – 9, 10, 11, மற்றும் 12 கதைகளை இரண்டு புத்தகங்களாக. Rs. 240.
  5. மாடஸ்டி கதைகள் மூன்று. கருப்பு வண்ணத்தில். சித்திர தரம் பெரும்பாலும் சுமாராகவே இருக்கும் கதைகளே அதிகம். இருந்தாலும் பரபரப்புக்கும் சுறு சுறுப்புக்கும் உத்தரவாதம் உள்ள கதைகளுக்கு என்னுடைய வோட்டு. - Rs. 1௦0.
  6. கொமான்சே – இரண்டிரண்டு இதழ்களாக நான்கு கதைகள். Rs. 240.
  7. 12 கார்ட்டூன் கதைகள். சிக் பில், ஸ்மர்ப், லக்கி, என்று காமெடி கதைகளின் அணிவகுப்பு. Rs.720.
  8. ரிப்போர்டர் ஜானி – 2 கதைகள். Rs.120.
  9. மர்ம மனிதன் மார்ட்டின் - 2 கதைகள். Rs.75.
  கிராபிக்ஸ் நாவல்:
  1. ரத்தப் படலம் – இறுதிப் பகுதி மற்றும் மூன்று ஸ்பின் ஆப் கதைகள். சினிபுக் கதைகள் என்னிடம் இருப்பதால் மீதமுள்ள கதைகளையே சுயநலமாய் பட்டியலிடத் தோன்றுவதால் ஸ்பின் ஆப் கதைகளில் குறிப்பாக எதையும் கேட்க விரும்பவில்லை. --- Rs. 240.
  2. தோர்கல்- அடுத்த நான்கு கதைகள். --- Rs. 240.
  3. பௌன்செர் - அடுத்த இரண்டு கதைகள். Rs.120.
  4. வானம் எங்கள் வீதி – இறுதிப் பகுதி (?) - Rs.60.
  கி. நா.வுக்கு பெரிய அளவு ஆதரவு இல்லாததால், குறைந்த அளவு சந்தா வரும் என்று நினைக்கிறேன். இம்மாதிரி கதைகளுக்கு ஆசிரியர் கஸ்டம் பிரிண்ட் வழியில் சற்று விலை கூடுதலாக வைக்க எனது ஆதரவு உண்டு.
  மறுபதிப்புகள்:
  1. வழக்கம் போல 12 மறுபதிப்புகள் + ரத்தக்கோட்டை.
  திகில் காமிக்ஸ்:
  ஓட்டைவாய் உலக நாதன் வாய் திறந்தால் தான் ஏதாவது யூகிக்க முடியும்.  .

  ReplyDelete