Follow by Email

Wednesday, 10 June 2015

டெக்ஸ் வில்லருடன் ஒரு பிரத்யேகப் பேட்டி !


மகா கீர்த்தி வாய்ந்த டெக்ஸ் வில்லருடன் ஒரு பிரத்யேகப் பேட்டி ! 

டிவி பெண் தொகுப்பாளினி : காமிக்ஸ் டிவி நேயர்களுக்கு இனிய மதிய வணக்கம். நேயர்களே, லயன் காமிக்ஸ் 250 வது மெகா இதழ் வெளியீட்டு விழாவை முன்னிட்டு, உலக தொலைக்காட்சிகளிலேயே முதல் முறையாக, இத்தாலியின் சூப்பர் ஸ்டார் - டெக்ஸ் வில்லர் அவர்களுடன், நம் காமிக்ஸ் டிவி, தலைமை நிருபர் மிஸ்டர் மரமண்டை அவர்கள் நடத்தும் நேர்காணலை, நேரடி நிகழ்ச்சியாக ஒளிப்பரப்புவதில் இந்த தமிழகமே பெருமை அடைகிறது. இதோ.. டெக்ஸ் வில்லருடன் ஒரு பிரத்யேகப் பேட்டி ஆரம்பமாகிறது...

அரிஸோனாவிலிருந்து மிஸ்டர் மரமண்டை : வணக்கம் நேயர்களே, இதோ.. மகா கீர்த்தி வாய்ந்த டெக்ஸ் வில்லர் வசிக்கும் அரிஸோனா மாநிலத்திலுள்ள, நவஜோ கிராமத்தின் எல்லைக்குள் நுழைகிறோம்... இங்கே டெக்ஸ் வில்லர் - தன் அல்லக்கை கார்ஸன், கைத்தடி செவ்விந்திய டைகர் ஜாக் மற்றும் தன்னுடைய, புகழ் ; வீரம் ; தீரம் ; பராக்கிரமம் ; வின்செஸ்டர் ; ரேஞ்சர் பேட்ச் ; மஞ்சள் சட்டை ; நீலப் பேண்ட் ; வாய்ச் சவடால் - ஆகிய அனைத்திற்கும் ஒரே வாரிசான, கிட் வில்லர் புடைசூழ கம்பீரமாக அமர்ந்திருக்கிறார்...


மி. ம : குட் மார்னிங் ஸார் ! நாங்கள் தமிழ் நாட்டில் இருந்து வருகிறோம்...
டெக்ஸ் : என்ன..?! அங்கேயும் சட்டம் ஒழுங்கு, கெட்டுப் போய் விட்டதா ?! நான் வந்து நீதியை நிலை நாட்ட வேண்டுமா ?!

மி.ம : ஐயய்யோ..!! அப்படியெல்லாம் இல்லை தலைவரே... அதுக்கு ஏற்கனவே அங்க, அம்மா இருக்காங்க ; அவங்க கூட, அம்மாவோட தளபதி, மிஸ்டர் வணங்காமுடி ஓ பி எஸ் ஐயா இருக்காருங்க !!

டெக்ஸ் : ஓஹோ..! அப்ப சலூன்ல ஏதாவது பிரச்சனையா ?!

மி.ம : மன்னிக்க வேண்டும் மிஸ்டர் வில்லர், எங்கள் ஊர் சலூன்களில் எல்லாம், செரைக்க மட்டுமே செய்வார்கள்.. 
இங்கே உள்ளது போல், குடித்துவிட்டு கூத்தடிக்கவெல்லாம் மாட்டார்கள் !!

டெக்ஸ் : அப்படின்னா சரிதான்.. ஹாங்.. ஏதாவது விருது கொடுக்க வந்தீர்களா என்ன ?!

மி.ம : திரும்பவும் மன்னிக்க வேண்டும் மிஸ்டர் வில்லர்.. ஏற்கனவே, எங்கள் ஊர் வெள்ளந்தி வாசகர்களில் சிலர், நடிகர் ரஜினிகாந்தின் - சூப்பர் ஸ்டார் பட்டம் ; நடிகர் அஜீத்தின் 'தல' பட்டம் ; நடிகர் கமலின் உலக நாயகன் பட்டம் ; சிவகாசியின் 'பட்டா..சு', சரவெடி பட்டம் - அப்படி இப்படின்னு, கண்ணு மண்ணுத் தெரியாமல் உங்களுக்கு அள்ளித் தெளித்து விட்டார்கள்.. இன்னும் பவர் ஸ்டார் ; சோலார் ஸ்டார் ; பர்னிங் ஸ்டார் - பட்டம் மட்டுமே பாக்கி !!

டெக்ஸ் : அடேய்... மரமண்டை... சீக்கிரம் விஷயத்திற்கு வருகிறாயா ? இல்லை, என் முஷ்டியை உன் முகரையில் இறக்கட்டுமா ?


மி.ம : ஐயா.. வேண்டாங்கய்யா.. ஒரு டிவி பேட்டிக்காக வந்திருக்கோமய்யா.. இந்தப் பேட்டியின்  மூலம் உங்கள் புகழ், சென்னை ; சேலம் ; தாராமங்கலம் ; ஈரோடு ;  தமிழ் நாடு ; பெங்களூரு ;   சௌத் இண்டியா ; மெயின் இண்டியா ; இந்தியப் பெருங்கடல் ; இமய மலை ; இலங்கை ; பங்ளாதேஷ் ; பாகிஸ்தான் ; ஆஸ்திரேலியா  ; நியூசிலாந்து ; நமிபியா ; வளைகுடா ; வெஸ்ட் இண்டீஸ் ; சௌத் ஆப்ரிக்கா மற்றும் கிரிக்கெட் விளையாடும் அனைத்து தேசங்களின், நீர், நிலப் பரப்புகளிலும் பரவும் என்ற உத்திரவாதத்தை அளிக்கிறோம் மிஸ்டர் வில்லர் !!

டெக்ஸ் : வாவ்..!! தட்'ஸ் க்ரேட்... ப்ளீஸ்.. டேக் யுவர் சீட் guys...

மி.ம : தாங்க்ஸ்.. முதல் கேள்வி.. தங்கள் ரசிகர்கள் அனைவருக்கும்,
விசிலடிச்சான் குஞ்சுகள் என்ற பட்டப் பெயர், நிலைத்து நின்று விட்டதே ?

டெக்ஸ் : ஓ... ஓக்லஹோமா !  விசிலடிக்கும் அளவிற்கு, என் ரசிக கண்மணிகளின் திறமை வளர்ந்து விட்டதா என்ன..?!

மி.ம : உங்களுக்கு ஆண் ரசிகர்கள் அதிகமா, இல்லை பெண் ரசிகைகளா ?
டெக்ஸ் : இதிலென்ன சந்தேகம், அவநம்பிக்கைப் பேர்வழியாக !?   எனக்குப் பெண் ரசிகைகள் தான் அதிகம் !

மி.ம : தாங்கள், கிட்டத்தட்ட 650 கதைகளில் வீரசாகசம் நிகழ்த்தி இருந்தாலும், மேல் அட்டையை மட்டும் கிழித்து விட்டால், எல்லா கதைகளும் ஒன்று போல் திகழ்வதாக, ஒரு பெண் ரசிகையே கூறி இருக்கிறாரே ?!

டெக்ஸ் : விரியன் பாம்பே... சாரி.. அதற்காகத் தான், மேல் அட்டைக் கிழியாமல் இருப்பதற்காக, ஒவ்வொரு புத்தகத்திற்கும், ப்ரௌன் ஷீட் அட்டைப் போட வேண்டும் என்று காலம் காலமாக கூறி வருகிறேன் !


மி.ம : துப்பாக்கிச் சண்டையின் போதோ ; கதையின் ஆரம்பத்திலோ நீங்கள், உங்கள் வின்செஸ்டர் மற்றும் ரிவால்வரில், தோட்டாவை நிரப்புவதே இல்லை என்ற பேச்சு பரவலாக அடிபடுகிறதே ?

டெக்ஸ் : இடியட்... தோட்டாவை நிரப்பும் கண நேரத்தில், எதிரி என் நெஞ்சுக்கு அல்லவா குறி வைத்து விடுவான் !?

மி.ம : ஒவ்வொரு கதையிலும் எதிரிகளை அடித்து, நொறுக்கி, துவைத்தெடுப்பது ஏன் ?

டெக்ஸ் : ஹா.. ஹா.. பழிவாங்கும் வெறியும், திமிரும், முரட்டுத்தனமும் என் நாடி ; நரம்பு ; ரத்தம் ; சதை ; புத்தி எல்லாவற்றிலும் ஊறிப் போய் இருப்பதே காரணம் என்பதை சொல்லவும் வேண்டுமோ ?!

மி.ம : மஞ்சள் சட்டையின் மர்மம் என்ன ?
டெக்ஸ் : அது மட்டும் தான், நீலக் கலர் ஜீன்ஸிற்கு மேட்சாக இருக்கிறது ! 


மி.ம : ஒவ்வொரு சாகசத்திலும், தவறாமல் குடிப்பதும்,
வயிறு முட்ட, வறுத்த கறியும் வேகவைத்த ஆப்பிளும் சாப்பிடுவது எதனால் ?

டெக்ஸ் : குட் கொஸ்டின்... நெக்ஸ்ட் கொஸ்டின் ப்ளீஸ்...

மி.ம : ப்ளீஸ்.. ஸார்... உங்கள் பரம ரசிகனான நானும், உங்களைப் போலவே மது, மாமிசப் பிரியனே...  

டெக்ஸ் : ஓகே.. தாகம் தணிக்கவே, அடிக்கடி  குடிக்கிறேன் !
நாவின் சுவை மாறாமலிருக்கவே, வறுத்த கறி  சாப்பிடுகிறேன் !
இன்னும் கொஞ்சம் தேவை என்ற எண்ணம் எழாமலிருக்கவே வேகவைத்த ஆப்பிளுடன் முடிக்கிறேன் !

மி.ம : டெக்வில்லாவை, ஏன் ராவாக குடிக்கிறீர்கள் ?
டெக்ஸ் : தண்ணீர் அல்லது சோடா கலந்து குடித்தால், அதிக ரவுண்டு குடிக்க வயிற்றில் இடமிருக்காது இல்லையா ?!


மி.ம : அடிக்கடி, கார்சனை, கேலி ; கிண்டல் ; நய்யாண்டி செய்து மட்டம் தட்டுவது பற்றி ?
டெக்ஸ் : என்னை விட அவன் தானே வயதில் பெரியவன் !? அதனால் தான் அவனை நக்கல், நய்யாண்டி செய்கிறேன் !

மி.ம : கார்ஸனுக்கு, ஏன் கல்யாணம் செய்து வைக்கவில்லை ?!
டெக்ஸ் : கார்ஸன்  என் மாமனா ? மச்சானா ? யாரைக்  கேட்கிறாய் ? கார்ஸன் என் உயிர் நண்பன் மட்டுமே...

மி.ம : இருந்தாலும்...

டெக்ஸ் : அந்த வீணாப் போன லீனாவை, அன்றே திருமணம் செய்து தொலைக்காமல், 
எனக்கு அவப்பெயர் வாங்கிக் கொடுப்பதிலேயே குறியாக இருக்கும், அவநம்பிக்கை கெழடு அவன் !   

மி.ம : தங்கள் மகன் கிட் வில்லருக்கு கூட கல்யாணம்...

டெக்ஸ் : நானா வேண்டாம் என்றேன் ?! எனக்கு ஜாதிப் பெருமை தான் முக்கியம்... 
எப்படி அந்தப் பண்ணை முதலாளி அவனை அரை ஜாதிப் பயல் என்று கூற முயலுவான்  ?! 


மி.ம : உங்கள் கதையில் வரும் அமானுஷ்யங்கள் உண்மையா ?!

டெக்ஸ் : அவை உண்மையா பொய்யா என்பது ஒரு புறம் இருக்கட்டும்..
அவைகள் கதையில் சேரும் போது, கதை விறுவிறுப்பாக நகர்கிறது அல்லவா ?!

மி.ம : உங்கள் லட்சியம் என்ன ?

டெக்ஸ் : என்றென்றும் தலைவனாகவே இருப்பது !
அதற்காகவே, இந்த நவஜோ கிராமத்தை விட்டு விலகாமல் இருக்கிறேன் !

மி.ம : கடைசியாக, கேப்டன் டைகரை பற்றி ?

டெக்ஸ் : பெட்டி நிறைய தங்கம் கிடைத்தும் பிழைக்கத் தெரியாதப் பயல்..
வெறுங்கையில் முழம் போடும் என்னைப் பார்த்தாவது, அவன் திருந்த வேண்டும் ! மி.ம : வணக்கம் நேயர்களே, இது வரை, மகா கீர்த்தி வாய்ந்த டெக்ஸ் வில்லர் அவர்களுடன் நடந்த நேர்காணலை நீங்கள் அனைவரும் கண்டு மகிழ்ந்திருப்பீர்கள்... நான், தமிழ் நாட்டில் இருந்து கிளம்பும் போதே, நம் டெக்ஸ் வில்லரின் அதி தீவிர இரசிகப் பட்டாளங்களின் பெயர்களையும், அவர்களின்  குணாதிசியங்களையும் விலாவாரியாக எழுதி, டெக்ஸ் வில்லருக்கு, ஈ மெயில்  செய்திருந்தேன்.   அதன் அடிப்படையில் அவருடன் ஒரு கலந்தாய்வு - ஒரு சிறிய விளம்பர இடைவெளிக்குப் பிறகு...

தாகம் தணிக்க !!

நாவின் சுவை மாறாமலிருக்க !!

வயிறு திம்மென்று இருக்க !!

டிவி பெண் தொகுப்பாளினி : வெல்கம் பேக் நேயர்களே.. தற்போது நமது மேன்மை தாங்கிய டெக்ஸ் வில்லர் அவர்கள், எதிர் வரும் லயன் 250 இதழ் வெளியீட்டை முன்னிட்டும், ஈரோடு புத்தகக் கண்காட்சியை முன்னிட்டும், தம்முடைய, தமிழ்நாடு டை ஹார்ட் பேன்ஸ்-க்கு மெஸ்ஸேஜ் கொடுக்கப் போகிறார்... 

மி.ம : குட் ஆப்டர்நூன் மிஸ்டர் வில்லர், என் கையில் உள்ள பெயர் பட்டியலை ஒவ்வொன்றாகப் படிக்கட்டுமா ?

டெக்ஸ் : நோ.. நோ.. கிவ் இட் டு மை சன் கிட் வில்லர் !

மி.ம : கிட்டு சார்..  இதோ..  டெக்ஸ் வில்லரின், தமிழக விசிறிகளின் பெயர் பட்டியல் !
கி.வி : டாடி.. மொத்தப் பெயரையும் படிக்கட்டுமா ?
டெக்ஸ் : இடியட் .. உனக்கு செயல் வேகம் போதாது கிட் ! ஒவ்வொரு பெயராக படிக்கவும்  !!கி.வி : டாடி.. முதல் பெயர்.. சலாம் பாபு ! 

டெக்ஸ் : முன்பக்க அட்டை ; பின்பக்க அட்டையைப் போட்டு அச்சடித்த, பிட்டு நோட்டீஸ் மூலம் நம் காமிக்ஸ் வாசகர் வட்டத்தை இவர் விரிவாக்க வேண்டும் ! கி.வி : டாடி.. இரண்டாவது நபர்.. ஆற்காடு நவாப் !

டெக்ஸ் :  புத்தகக் கண்காட்சி நடக்கும் 12 நாட்களும், தீமையை அழிக்கும் மஞ்சள் சட்டை சகிதம் வலம் வர வேண்டும் !கி.வி : டாடி.. மூன்றாவது ரசிகர்,  இளைஞரணி - செயலாளர் அஜய் !

டெக்ஸ் : ஈரோட்டு புத்தகக் கண்காட்சிக்கு வெகு அருகாமையில், ஒரு சலூனை வாடகைக்கு எடுத்து, கண்காட்சிக்கு வரும் நம் காமிக்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் -    டெக்வில்லா ; வறுத்த கறி ; வேகவைத்த ஆப்பிள் யாவும் தங்குத் தடையின்றி கிடைக்க ஆவன செய்யட்டும் !கி.வி : டாடி.. நாலாவதா.. மாணவரணி தலைவர் - தங்கதொர ! 

டெக்ஸ் : இவர், தம் தலைமைப் பதவிக்கு சற்றொப்ப, ஈரோடு நகர, பிரதான வீதியெங்கும், என் 60 அடி உயர பேனரை  வைத்து, எனதருமை ரசிக கண்மணிகளை வரவேற்க வேண்டும் !கி.வி : டாடி... மேட்டுக்குப்பம் ராதாரவி !

டெக்ஸ் : நோ ப்ராப்ளெம் மை சன்... சேந்தமங்கலம் கரகாட்ட கோஷ்டியில், தாராளமாக, தனி தவில் வாசிக்கட்டுமே !கி.வி : டாடி... மருத்துவர் ஐயா !    

டெக்ஸ் : ஒரு பெரிய சாக்குப் பையை எடுத்துச் சென்று, இருப்பதில் எல்லாம் ஐந்து செட் புக்ஸ் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.. பிறகு, அடிக்கடி கிப்ட் கொடுக்க சௌகரியமாக இருக்கும் !


கி.வி : டாடி... பேய் பிசாசு நரபலியார் !

டெக்ஸ் : காலம் காலமாக, வாசகர்களுக்கு வெறுமனே பூச்சாண்டிக் காட்டாமல், இம்முறையாவது ஒரு இரத்த பலி கொடுத்து, புத்தகத் திருவிழாவை அட்டகாசமாக்க வேண்டும் !கி.வி : டாடி... எட்டாவது வாசகர் மயிலாடுதுறையார் !

டெக்ஸ் : தம் எல்லைக்கு உட்பட்டு வரும் கடிதங்களின் மேல் ஒட்டப்பட்டுள்ள தபால்தலை மீது, தபால் முத்திரை குத்தாமல், தபாலின் பின் பக்கத்தில் முத்திரை குத்த ஏற்பாடு செய்து, இந்த விழா நடைபெறும் 12 நாட்களும் விமரிசையாக கொண்டாட வேண்டும் ! நெக்ஸ்ட் ...


கி.வி : அவ்வளவு தான் டாடி... 

கார்ஸன் : அட.. இவிங்க மட்டும் தானா, நம்ப அடாவடி ரசிகப் பயலுக !?  இந்த இதுக்கே ப்ளாக் ல, இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்களே  ?! போங்கப்பா.. போய் .. குறைந்தப்பட்சம் ஒரு பத்து பேரையாவது சேர்த்து, டெக்ஸ் வில்லர் ரசிகர் மன்றத்திற்கான அங்கீகாரம் ரத்தாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் !


47 comments:

 1. டியர் பிரண்ட், வெகு நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவு மகிழ்ச்சியே.ஆனால், காமிக்ஸ் சக வாசக நண்பர்களை கலாய்த்திருப்பது தான் கொஞ்சம் நெருடலாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. Dr.Sundar,Salem. : ஒரே காமிக்ஸ் வாசகர் வட்டம் என்ற உரிமையினாலும் ; லயன் ப்ளாகில் எனக்குப் பதிலளிக்கும் நண்பர்கள் என்ற நெருக்கத்தினாலும் ; நண்பர்களின், சமீபத்திய பதிவுகளின் அடிப்படையிலும் - கொஞ்சமாக கலாய்த்து உள்ளேன். மனம் நோகும்படி இருக்கும் வரிகளை சுட்டிக் காட்டினால், அவற்றை நீக்கி விடுகிறேனே.. இது, நண்பர்கள், நம்முடைய வலைதளம் தான் எனும் போது, நெருடலுக்கு இடமேது நண்பரே ?!

   போலவே, டெக்ஸ் வில்லர் பேட்டியும் கலாய்த்தல் ரகப் பதிவு தானே :-))

   Delete
 2. Replies
  1. King Viswa : நண்பரே, லயன் ப்ளாகில் மட்டுமல்லாது, தங்களின் பின்னூட்டத்தைப் பார்த்தே பல மாதங்கள் ஆகி விட்டது. தங்களின் வருகை மகிழ்ச்சிக்குரிய ஒன்றாக இருக்கிறது. நன்றி ! இம்முறை, சென்னை புத்தகத் திருவிழாவிற்கு கூட, தாங்கள் வரவில்லை என்பதை அறிந்த போது, மனம் மிகவும் வேதனைக்கு உள்ளானது என்பதே முற்றிலும் உண்மை !! காரணம் என்னவென்று கேட்க விரும்பவில்லை.. ஆனால், காலம் தோறும் காமிக்ஸ் வட்டத்தில் இருந்து நீங்கள் விலகாமல் இருக்கவே விரும்புகிறேன் ! நன்றி !

   Delete
  2. //காரணம் என்னவென்று கேட்க விரும்பவில்லை.//

   ஏன்? கேளுங்களேன்?

   Delete
  3. டியர் விஸ்வா,

   நீண்ட நாட்களாக நானே கேட்க நினைத்திருந்த கேள்விதான் அது!

   "ஏன்???"

   Delete
  4. King Viswa : //ஏன்? கேளுங்களேன்?//

   நண்பரே, தாங்கள் ஏன் சென்னை புத்தக கண்காட்சியிற்கு செல்லவில்லை ?!
   நண்பரே, தாங்கள் ஏன் மின்னும் மரணம் வெளியீட்டு விழாவிற்குச் செல்லவில்லை ?!

   Delete
 3. நண்பரே,

  மிக நீண்ட இடைவெளிக்குபின் ஒரு பதிவு, but நான் ரசிக்கவில்லை. மின்னும் மரணம்,பென்சர் பற்றிய பதிவை எதிர்பார்கிறேன் .
  2016 காமிக்ஸ் எதிர்பார்ப்பு அட்டவணை பதிவு ஒன்று நன்மைபயக்கும் friend.

  ReplyDelete
  Replies
  1. Satishkumar S : //மிக நீண்ட இடைவெளிக்குபின் ஒரு பதிவு, but நான் ரசிக்கவில்லை//

   :(

   //2016 காமிக்ஸ் எதிர்பார்ப்பு அட்டவணை பதிவு ஒன்று நன்மைபயக்கும் friend//

   2016 அட்டவணையைப் பற்றி எழுதுவதற்காகத் தான் மீண்டும் லயன் ப்ளாகில் பதிவிடவே வந்தேன். ஆனால், தற்போது குழப்பமாக இருக்கிறது. ஆசிரியர் எந்த விதத்தில் எடுத்துக் கொள்வார் என்று தெரியாத காரணத்தாலும் ; வெளியிலிருந்து, எடிட்டர் விஜயனின் கஷ்ட நஷ்டம் தெரியாமல், தான் தோன்றித் தனமாக எதையாவது எழுதி, சங்கடத்தில் ஆழ்த்தி விடக்கூடாதே என்ற எச்சரிக்கை உணர்வினாலும் - எழுத தயக்கமாக இருக்கிறது நண்பரே !

   Delete
  2. // தான் தோன்றித் தனமாக எதையாவது எழுதி, சங்கடத்தில் ஆழ்த்தி விடக்கூடாதே என்ற எச்சரிக்கை உணர்வினாலும் - எழுத தயக்கமாக இருக்கிறது நண்பரே !//

   இங்கு அனைவரும் காமிக்ஸ் ரசிகர்களே விமர்சனங்களில் கடுமையான வார்த்தையை தவிர்த்தால் no tension, 2015 அட்டவணையில் நிறைய தொகுப்பு கதைகள் வர உங்களது பதிவு ஒரு காரணம் எனநான் நம்புகிறேன். தயக்கம் வேண்டம் நண்பரே, நிச்சயமாக நீங்கள் உங்களின் கருத்தை பதியவேண்டும் என்பது எனது கோரிக்கை.

   Delete
  3. Satishkumar S : //நிச்சயமாக நீங்கள் உங்களின் கருத்தை பதியவேண்டும் என்பது எனது கோரிக்கை//

   நிச்சயமாக, என் கருத்தை லயன் ப்ளாகில் பதிவிடுகிறேன் நண்பரே !

   Delete
 4. நகைச்சுவை உணர்வுக்கும் மி.ம'க்கும் காததூரமோ என்றெண்ணிய காலம் ஒன்று உண்டு! 'காணும் தூரமே' என்கிறது இப்பதிவு! ( கஷ்டப்பட்டு ரைமிங்கா யோசிச்சிருக்கேனாக்கும்) ;)

  மற்றபடி, கலாய்ப்பு எல்லையை டெக்ஸ் வில்லரையும் தாண்டி காமிக்ஸ் நண்பர்கள் வரை நீட்டித்திருப்பதுதான் கொஞ்சம் 'ஙே' என்கிறது!

  (((க்ளிங்))) "... ந்தாப்பா... தோ அந்த டேபிள்ல மண்டைல மரம் முளைச்சாப்ல ஒருத்தர் உட்கார்ந்திட்டிருக்காரே... அவருக்கு ஒரு வறுத்தகறி பார்சேல்..."

  ReplyDelete
  Replies
  1. Erode VIJAY :
   //மண்டைல மரம் முளைச்சாப்ல ஒருத்தர் உட்கார்ந்திட்டிருக்காரே... அவருக்கு ஒரு வறுத்தகறி பார்சேல்//

   :))
   ஹூஹும்... இப்படியெல்லாம் நீங்கள் தப்பித்துக் கொள்ள முடியாது விஜய் ! அங்கேயே உட்கார்ந்து திருப்தியாக சாப்பிட்டு விட்டு, உங்களுடன் கலந்துரையாடியப் பின்பு தான், புத்தகக் கண்காட்சிக்கே செல்வேன் :-)

   Delete
 5. டியர் விஜய்,போற போக்கை பாத்தா, மெய்யாலுமே,ஈரோட்டில சலூனை(கடையை)ஒப்பன் செஞ்சிருவீங்க போல:-)

  ReplyDelete
  Replies
  1. உங்க வாய் முகூர்த்தம் பலிச்சுட்டா உங்களுக்கு ஒரு பாட்டில் டெக்வில்லா பார்சேல்... ;)

   Delete
 6. நல்ல கற்பனை அரசியல் ஜோக் அட்டகாசம் .இருந்தாலும் அரசியல்&,,, வேண்டாமே.!ப்ளீஸ்.!அரசியல் புகுந்த இடமும், ஆமை புகுந்த வீடும் நன்றாக இருக்காது..நமது மகிழ்ச்சியை கெடுத்துவிடும்.!அப்புறம் இன்னும் காரம் தூக்கலாக இருந்தால்இன்னும் சூப்பராக இருக்கும்..(கண்ணில் நீர் வரவேண்டும்.!.!)

  ReplyDelete
  Replies
  1. Madipakkam Venkateswaran : நன்றி நண்பரே !

   //அப்புறம் இன்னும் காரம் தூக்கலாக இருந்தால் இன்னும் சூப்பராக இருக்கும்..(கண்ணில் நீர் வரவேண்டும்.!.!)//

   ஏற்கனவே, நண்பர்களின் கமெண்ட்ஸ் மூலம் எனக்கு கண்ணில் நீர் வந்து விட்டது :-) உங்கள் கமெண்டைப் படிக்கும் போது, வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தலைவர் - வடிவேல் அவர்களின் ஜோக் ஒன்று ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை நண்பரே ! அந்த ஜோக் - கீழே ;​-)

   அடேங்கப்பா.. அடி கொடுத்த கைப்புள்ளைக்கே ஒடம்புல இத்தன காயம்னா...
   அடி வாங்கனவன் உயிரோடு இருப்பானுன்னு நினைக்கிறாயா நீ ?!

   :D

   Delete
  2. உங்கள் அழத்தமான எழத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் நீங்கள் நீண்டகால வாசகர்போல் உணர்ந்தேன்.ஆகவே கேட்டேன்.!(எல்ல புத்தகத்தை படித்திருந்தால் மட்டுமே சாத்தியம்.இல்லா விட்டால் நம் நண்பர்கள் சுலபமாக மடக்கிவிடுவார்கள்.ஒரே ஸ்வீட்டாக இருந்தாலும் சீக்கிரம் தித்திப்பு ஏற்பட்டுவிடும்.என்பது உண்மைதானே.!!

   Delete
 7. நல்ல கற்பனை :)

  ReplyDelete
  Replies
  1. Paranitharan K : //நல்ல கற்பனை :)//

   நன்றி நண்பரே ! முதலில், உங்களை நினைத்து தான் நான் மிகவும் கலக்கமாக இருந்தேன்... ஆனால், நீங்களே இந்தளவு ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை.. இரட்டிப்பு மகிழ்ச்சி தலைவரே !

   Delete
 8. கற்பனையான ஹீரோக்கள் என்றாலும் ஒவ்வொருவரும் ஒரு ஹீரோ மீது அன்பும், மற்ற ஹீரோக்களை கலாய்ப்பதும் மனதிற்கு குதுகலம்மாக உள்ளது.கடந்த சில வருடங்கள் முன்வரை என்னை போலவே தீவிர வாசகர்கள் பலர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்ற விஷயமே தெரியாது.!பூமியில் மட்டும்தான் உயிரினங்கள் உள்ளது என்பதைபோல,காமிக்ஸ் என்றால் என்ன என்றே பெரும்பாலானோருக்கு தெரியாத சூழ்நிலையில் நமக்குள் வரும் சச்சரவுகள் கொஞ்சம் சங்கடத்தை கொடுத்தாலும்.காமிக்ஸ் பக்தியில் குறைகூற முடியாது.கண்ணப்ப நாயன்மாரின் பக்தியை போல் எண்ணிகொள்கிறேன்.!!

  ReplyDelete
  Replies
  1. Madipakkam Venkateswaran : //கற்பனையான ஹீரோக்கள் என்றாலும் ஒவ்வொருவரும் ஒரு ஹீரோ மீது அன்பும், மற்ற ஹீரோக்களை கலாய்ப்பதும் மனதிற்கு குதுகலம்மாக உள்ளது// நன்றி நண்பரே :-)

   //காமிக்ஸ் என்றால் என்ன என்றே பெரும்பாலானோருக்கு தெரியாத சூழ்நிலையில் நமக்குள் வரும் சச்சரவுகள் கொஞ்சம் சங்கடத்தை கொடுத்தாலும, காமிக்ஸ் பக்தியில் குறைகூற முடியாது.கண்ணப்ப நாயன்மாரின் பக்தியை போல் எண்ணிகொள்கிறேன் // உண்மை. உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன் !

   Delete
 9. பின்னிட்டேள் போங்கோ.!!! :-)

  ReplyDelete
  Replies
  1. KiD ஆர்டின் KannaN :

   நன்றி கண்ணன் ரவி ! எப்போதுமே கலகலப்பானவர் நீங்கள் :-)

   Delete
 10. நண்பரே.எனக்கும் கி.நாவலுக்கும் வெகுதூரம்.இ.இ.கொ.கதையை இன்னும் புரியாமல்" முன்னால் புரபஸரிடம்"ஸ்பெஷல் க்ளாஸ் போலாம் என்று எண்ணியுள்ளேன்.நீங்கள் குறிப்பிடும் நண்பர்கள் யார் என்று புரியாமல் கி.நா.மாதிரி மணடையை பிய்த்து கொண்டு உள்ளேன்.!

  ReplyDelete
  Replies
  1. Madipakkam Venkateswaran :

   //நீங்கள் குறிப்பிடும் நண்பர்கள் யார் என்று புரியாமல் கி.நா.மாதிரி மணடையை பிய்த்து கொண்டு உள்ளேன்//

   தற்போது தங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் :)))

   Delete
 11. நண்பரே .நானும் தப்ப வில்லை .??.எனினும் உங்கள் நீண்ட நாள் மவுனம் கலைத்து பதிவிட குறிப்பாக கலாய்த்து பதிவிட்டது மகிழ்ச்சி .

  ReplyDelete
 12. டெக்ஸ் குறித்த தனி பதிவு ஒரு சிறந்த பதிவாளர் ஆன உங்களால் வர வைத்ததே டெக்ஸின் கீர்த்தி தானே நண்பரே .

  ReplyDelete
 13. இதை பாராட்டி உங்களுக்கு மாயவரம் ஐய்யங்கார் ஸ்வீட் அரை கிலோ பார்சல் .மேலும் ஈரோட்டில் எங்கள் குழுவின் சிறப்பு நிகழ்ச்சி உங்களுக்கு .

  ReplyDelete
  Replies
  1. POSTAL PHOENIX : //உங்களுக்கு மாயவரம் ஐய்யங்கார் ஸ்வீட் அரை கிலோ பார்சல் .மேலும் ஈரோட்டில் எங்கள் குழுவின் சிறப்பு நிகழ்ச்சி உங்களுக்கு //

   நன்றி ராஜா சார் ! உங்களின் மாறா அன்புக்கு தலை வணங்குகிறேன் !

   Delete
 14. //.. முதல் கேள்வி.. தங்கள் ரசிகர்கள் அனைவருக்கும்,
  விசிலடிச்சான் குஞ்சுகள் என்ற பட்டப் பெயர், நிலைத்து நின்று விட்டதே ?/
  நீண்ட நாளாக இந்த சந்தேகம் மரமண்டை அவர்களே. நீங்க "ஜெய் " ரசிகர்தானே.???
  மாணவன் திரைப்படத்தில்., குட்டி பத்மினி குழுவினருடன் , கமல்ஹாசன் குழுவினரை பார்த்து "விசிலடிச்சான் குஞ்சுகளா " என்று பாடுவார்.
  அப்படி "வி.கு " என்று பாடல்பெற்ற கமல்ஹாசன் நிறையவே நடித்து இன்றும் உச்சத்திலேயே இருக்கிறார். (டெக்ஸ் ரசிக கண்மனிகளைப் போல) .

  ஆனால்., மிக்கி மவுஸ் குட்டிகளா என கமல்ஹாசன் அவர்களால் பாடல்பெற்ற குட்டி பத்மினி பெரிதாக சோபிக்கவில்லையே (டைகர் ரசிக மன்றத்தின் போர்வாட்களைப்போல என்று எடுத்துக் கொள்ளலாமா.??)

  பின் குறிப்பு :- நான் லயன் ப்ளாக்கிற்கு வந்த புதிதில் இருந்த மிஸ்டர் மரமண்டையும் , இப்போது இருக்கும் மிஸ்டர் மரமண்டையும் ஒருவரேதானா??? ஏன்னா ஒரு டிஸ்டன்ஸ் தெரியுற மாதிரி ஒரு ஃபீலிங்.… :-) :-) :-)

  ReplyDelete
  Replies
  1. KiD ஆர்டின் KannaN :

   //நீண்ட நாளாக இந்த சந்தேகம் மரமண்டை அவர்களே. நீங்க "ஜெய் " ரசிகர்தானே.//

   மன்னிக்க வேண்டும் ரவிக் கண்ணன் ! நான் அந்நாளைய ஜெய் ரசிகனோ அல்லது இந்நாளைய ஜெய் ரசிகனோ அல்ல ! ஆனால், அஜீத், விஜய் - படங்களின் முதல் நாள் நீங்கள் திரையரங்கம் சென்றால், உங்களால் படம் பார்க்கவே முடியாது. டைட்டில் கார்டு முதல் The end வரை, ஒரே விசில் சத்தம் காதைப் பிளக்கும். படம் நன்றாக இருக்கிறதா ? கதை இருக்கிறதா ? பாடல் காட்சியமைப்பு இனிமையாக இருக்கிறதா ? சண்டைக் காட்சி குறைந்தப்பட்சம் - சண்டை மாதிரியாவது இருக்கிறதா ? என்றெல்லாம் கவலைப்படாமல், தொடர்ந்து விசிலடித்துக் கொண்டே இருப்பார்கள்... யாராவது மொக்கை என்று கூறி விட்டால், உடனே தர்ம அடி தான் விழும்.. இப்போது, கொஞ்சம் கூட்டிக் கழித்துப் பாருங்களேன்... டெக்ஸ் ரசிகர்களுடன் அப்படியே ஒத்துப் போவதாக தோன்றும் :D (ஸ்மைலியை கவனிக்கவும்)

   //அப்படி "வி.கு " என்று பாடல்பெற்ற கமல்ஹாசன் நிறையவே நடித்து இன்றும் உச்சத்திலேயே இருக்கிறார்//
   பிறகு ஏன் ப்ரதர்... நாட்டை விட்டே, வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஸ்டேட்மென்ட் விட்டார்?

   //மிக்கி மவுஸ் குட்டிகளா என கமல்ஹாசன் அவர்களால் பாடல்பெற்ற//
   ஆ.. கமல்ஹாசன் என்ன... 63 நாயன்மார்களில் ஒருவரா ?!

   //நான் லயன் ப்ளாக்கிற்கு வந்த புதிதில் இருந்த மிஸ்டர் மரமண்டையும் , இப்போது இருக்கும் மிஸ்டர் மரமண்டையும் ஒருவரேதானா??? ஏன்னா ஒரு டிஸ்டன்ஸ் தெரியுற மாதிரி ஒரு ஃபீலிங்//

   இருவரும் ஒருவர் தான் என்பதில், தங்களுக்கு எழுந்திருக்கும் சந்தேகம் எதன் அடிப்படையில் என்று கூறினால், இங்கு விளக்கம் சொல்ல கடமைப்பட்டுள்ளேன் நண்பரே !

   Delete
  2. மன்னிக்கவும் மரமண்டை அவர்களே.! நான் விஜய்.,அஜித் படமெல்லாம் பார்ப்பதேயில்லை. (சொல்லப் போனால் நான் அன்றைய ஜெய் படங்களுக்கே ரசிகன்) . அப்புறம் எனக்கு விசில் அடிக்கவே தெரியாது என்பதும் கூடுதல் தகவல்.

   //இருவரும் ஒருவர் தான் என்பதில், தங்களுக்கு எழுந்திருக்கும் சந்தேகம் எதன் அடிப்படையில் என்று கூறினால், இங்கு விளக்கம் சொல்ல கடமைப்பட்டுள்ளேன் நண்பரே !//

   நீங்கள் எழுதியிருக்கும் கடைசி வார்த்தை "நண்பரே " என்பதுதான் நண்பரே.!!!

   நான் ப்ளாக் வந்த புதிதில் என்னை வழி நடத்திய இரண்டாவது நபர் (நண்பர்) நீங்கள். முதல் நண்பர் யாரென்று சொல்லத் தேவையில்லை. அவர்தான் என் குருநாயர் இசைக்குயில் இத்தாலியார்.
   முன்னர் உரிமையுடன் என்னுடைய பெயரை குறிப்பிட்டு., என்னுடைய கமெண்ட்டுகளுக்கு ஜாலியாக பதில் விவாதம் செய்வீர்கள். இப்போதோ புதிய நபருக்கு பதிலளிப்பது போல் உங்கள் பதிலூட்டங்கள் தோன்றியது. (அது என்னுடைய தவறான கணிப்பாகவும் இருக்கலாம்) .
   நான் கேட்டது தவறாக இருந்தால் தயைகூர்ந்து மறந்துவிடுங்கள் நண்பரே.! :-)

   Delete
  3. KiD ஆர்டின் KannaN :

   ஓகே.. டீல் மிஸ்டர் கண்ணன் :-)

   ரவிக் கண்ணன் என்ற பெயரில், கண்ணன் என்பது ரொம்பவே வசிகரமானப் பெயர் என்பதால், இனி கண்ணன் என்றே தாங்கள் அழைக்கப்படுவீர்களாக ! மௌனம், நமக்குப் புரிதலை மட்டும் தருவதில்லை - மாறாக இடைவெளியையும் அதிகப்படுத்துகிறது ; இடைவெளி, நமக்குச் சுதந்திரத்தை மட்டுமே தருவதில்லை - மாறாக தயக்கத்தையும் சேர்ந்தே விதைக்கிறது !

   நீண்ட நாள், பதிவிடாமல், மௌனமாக இருந்தக் காரணத்தினால் ஏற்பட்ட இடைவெளி, தயக்கத்தையும், உரிமையில் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ள காரணத்தினால் - இதுபோன்ற தடுமாற்றங்கள் சற்றும் சிந்தனையின்றி, ஒதுக்கித் தள்ளக் கூடியவையே அன்றி , விவாதத்திற்குரியப் பொருளாக கருத வேண்டாமே கண்ணன் :-)

   போலவே, தாங்களும் என்னிடம், நட்பு என்ற உரிமையுடன் கலாய்த்துப் பதிவிடுவீர்கள் என்ற எதிர்பார்ப்பில்...

   Delete
  4. //தாங்களும் என்னிடம், நட்பு என்ற உரிமையுடன் கலாய்த்துப் பதிவிடுவீர்கள் என்ற எதிர்பார்ப்பில்...//

   டெபனட்லீ டெபனட்லீ .!!!

   Delete
 15. இன்று ஏதாவது ஜாலி பதிவை எதிர்பார்க்கலாமா??

  ReplyDelete
  Replies
  1. //இன்று ஏதாவது ஜாலி பதிவை எதிர்பார்க்கலாமா??//

   லயன் ப்ளாகில், நிறையப் பின்னூட்டம் பதிவிட வேலை வந்து விட்டது நண்பரே !

   Delete
 16. ஆமாம்,மேலே உள்ள படத்தில் (ஒரு செவ்விந்திய பெண்ணை பின் புறம் அணைத்தபடி )உள்ளவர் டெக்ஸ் வில்லரா?.யூ டூ புருட்டஸ்?நம்ப முடியவில்லை.!டி.ஆர்.மாதிரி பொண்ணையே தொடமாட்டார் என்றல்லவா இவ்வளவு காலமும் நினைத்திருந்தேன்.!!

  ReplyDelete
  Replies
  1. டெக்ஸ் எந்தப் பெண்ணையுமே தொடக்கூடாதுன்னா... கிட் வில்லர் வானத்திலிருந்து வந்தா குதிச்சிருப்பான்? நல்லா கேட்கறாங்கப்பா டீடெய்லு!

   ஆனா, வெள்ளந்தித்தனத்துல நம்ம தலீவரையும் மிஞ்சிட்டீங்க MV அவர்களே! :)

   Delete
  2. Madipakkam Venkateswaran :

   //மேலே உள்ள படத்தில் (ஒரு செவ்விந்திய பெண்ணை பின் புறம் அணைத்தபடி) உள்ளவர் டெக்ஸ் வில்லரா?//

   ஆமாம் வக்கீல் சார்.. டெக்ஸ் வில்லர் ஒரு ஏகப் பத்தினி விரதன் என்பதும் உண்மையே ! அணைத்தப்படி அருகில் இருக்கும் செவ்விந்திய பெண்மணியே டெக்ஸ் வில்லரின் மனைவி லிலித் ! இணைப்பிரியாது இணைந்து வாழ்ந்தக் காலம் கொஞ்சமே தான் என்றாலும், அது அவர்களுக்கு ஓர் வசந்த காலம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருந்ததில்லை !

   நீங்கள் கிண்டலுக்குச் சொல்லியிருந்தாலும், டி.ஆர்.உதாரணம் கொஞ்சம் ஓவர் தான் :)

   Erode VIJAY :

   ;-)

   Delete
  3. பின்னே என்னங்க... அவரு பொண்டாட்டிய அவரு அணைச்சிக்கிறதுல இவருக்கு என்ன பிரச்சினைன்னு கேட்கிறேன்... அதுவும்'பின்புறமிருந்து ஏன் அணைச்சிக்கிட்டிருக்கார்?'னு கேட்டா நாம என்னத்த சொல்ல? அவருக்கு வசதின்னா சைடு புறத்திலேர்ந்துகூட அணைச்சிக்குவார்... அதையெல்லாம் இவரு ஏன் கேட்கிறாரு? :))

   @ டாக்டர் சுந்தர்

   நன்றி நண்பரே! :)

   Delete
 17. டியர் விஜய், ரொம்ப நாளைக்கு பிறகு, உங்க டிரேட் மார்க் ஹாஸ்யம்.லயன் பிளாக்கில்,யாரோ, அன்றாடங்காச்சின்னு சொன்னதுக்கு, நீங்க சொன்ன, நா எப்பவாவது காச்சி,ன்னு சொன்ன பதில், வயிற்றை பதம் பார்த்தது,சிரித்ததில்.அதற்குபிறகு இன்று:-):-):-)

  ReplyDelete
 18. டெக்ஸை நன்றாக கலாய்த்திருந்தாலும்
  ஈரோடு விஜய் போன்றவர்கள் சிறிதும் கோபித்துக்கொள்ளாத அளவுக்கு சிரிப்பு மேலோங்கியுள்ளது
  ஜூப்பர்

  ReplyDelete
  Replies
  1. COMICSPRIYAN@SALEM.AMARNATH : நண்பரே, தங்களின் வருகை சந்தோஷத்திற்கு இடமளிக்கிறது. இத்தளத்தில் தாங்கள் பதிவிடும் முதல் பின்னூட்டத்திற்கு நன்றியும் கூட !

   Delete